புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரயிலில் கிடைத்த பாடம்! Poll_c10ரயிலில் கிடைத்த பாடம்! Poll_m10ரயிலில் கிடைத்த பாடம்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ரயிலில் கிடைத்த பாடம்! Poll_c10ரயிலில் கிடைத்த பாடம்! Poll_m10ரயிலில் கிடைத்த பாடம்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ரயிலில் கிடைத்த பாடம்! Poll_c10ரயிலில் கிடைத்த பாடம்! Poll_m10ரயிலில் கிடைத்த பாடம்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ரயிலில் கிடைத்த பாடம்! Poll_c10ரயிலில் கிடைத்த பாடம்! Poll_m10ரயிலில் கிடைத்த பாடம்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயிலில் கிடைத்த பாடம்!

Page 1 of 2 1, 2  Next

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue 30 Jun 2015 - 11:27

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன். மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு, தென் மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் , பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும் , குஜராத்தில் உள்ள சில மெட்டலர்ஜி நிறுவனங்களுக்கும் சிவப்பு பாஸ்பரஸ் விற்பனையை கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். நல்ல சம்பளம், அதை விட ராஜ மரியாதை, கேட்ட உதவிகள் கேட்பதற்கு முன் வழங்கும் நிறுவனம் , பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து கொள்ளுமளவிற்கு பெயர் சம்பாதித்துக்கொண்ட, லாபத்தில் கொழிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அடையாள அட்டை என ஒரு பெருமிதத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

வழக்கமாக இதே ரயிலில் வருவதால் வேலை செய்யும் பேன்ட்ரி ஆர்டர்லிகளுடன் ஒரு சிநேகிதம் இருக்கத்தான் செய்தது .தேவையான இடத்தில் தேவையானவற்றை அவர்கள் தருவதும், புகை பிடிக்க பேன்ட்ரி கார் செல்வதும் எனக்கு பழக்கமாகிபோனது

அப்படி புகைப்பிடிக்க சென்ற போதுதான் அவரை பார்த்தேன். ஆனந்தம் நல்லெண்ணெய் விளம்பரம் போட்ட கை வைக்காத பனியன் ,கிருதா வழியாக வழியும் எண்ணை, கால்சட்டை தெரியுமளவிற்கு தூக்கிகட்டிய லுங்கி , சரியாக சவரம் செய்யாத உலர்ந்த கன்னம், நட்புடன் பார்க்கும் விழிகள். இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே என்று தோணியது , வேறு எங்கே , மளிகைக்கடையில் மடித்து கொடுக்கும் மக்கள் இதே போல் தானே இருக்கிறார்கள் . சரி , இவருக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி அருகே என்ன வேலை , இந்த கோலத்தில் இருக்கும் இந்த ஆள் கண்டிப்பாக ஏ சி டிக்கெட் வாங்க வாய்ப்பே இல்லை , ஆனால் நெடு நேரமாக இங்கு தான் இருக்கிறார் என்ற போது ஒரு சிறிய சந்தேகம் எட்டி பார்த்தது . இருந்தாலும் வெளியே வேடிக்கை பார்ப்பது போல் கதவருகே நின்றுகொண்டே சிகரெட் ஒன்றை பற்ற வைத்தேன் , இன்னும் அந்த ஓட்ட வைத்த புன்னகை அவரிடமிருந்தது .

ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை நெருங்கியபோது அவரிடம் ஒரு சின்ன பதட்டத்தை காண முடிந்தது , அப்போதுதான் கவனித்தேன் அவர் அருகில் இருக்கும் ஒரு சாக்கு மூட்டையை , எனக்கு இப்போது தெளிவாக புரிந்தது , குப்பை பொறுக்கும் ஆள் தான் அவர் . உடன் ஒரு சின்ன கோபமும் வந்தது , இப்படி இவர்களை ஏ சி பெட்டிகளில் அனுமதித்தால் , ஏதேனும் களவு போய் விட வாய்ப்புகள் அதிகமாயிற்றே , வரட்டும் அந்த டி டி ஆர் என்ற நினைத்துக்கொண்டே மீண்டும் அவரை நோட்டமிட ஆரம்பித்தேன் . இது எனக்கு தேவையில்லாத வேலை தான் என்றாலும், அவர் முகத்தில் தெரிந்த அந்த அம்மாஞ்சி களையும், கண்களில் இருந்த சிநேக பார்வையும் எண்ணை அவரிடம் பேச சொல்லி தூண்டியது.

“என்னங்க ! ஈரோட்டுல இறங்குறீங்களா?”

“இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் வர்றேன், இங்க இறங்கி சில்ர வேலைகளே முடிச்சிறனும்!”

“ஒ ,அப்ப பாம்பே வர்றீங்களா !”

“ஆமா சார் ! நீங்க பம்பாய் தான் போறீகளா !” பாமரத்தனமாக கேட்டார்

“ஆமாங்க !” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது ரயில், நிலையத்தை அடைந்தது

உடன் அவர் இறங்கி கொண்டார் , சாக்கு மூட்டையை தோளில் போட்டுகொண்டு ஒரு கையால் இன்னொரு முனையை பிடித்துக்கொண்டார் . அது அவர் தோளில் தொய்வாகவும் குப்பைகளை போடுவதற்கு ஏதுவாக திறந்த நிலையிலும் இருந்தது. சட சட வென பொறுக்க ஆரம்பித்தார்., ரயில் நின்ற பத்து நிமிடங்களில் அவர் ஓட்டமும் நடையுமாக மொத்த பிளாட்பாரத்தையும் அலசிவிட்டு மறுபடியும் நான் இருந்த பெட்டிக்கே வந்து நின்றுகொண்டார். வண்டி கிளம்பியது.

இம்முறை நான் கேட்டுவிடுவது என்று தீர்மானித்து கொண்டேன் .

இம்மாதிரி கேள்விகளை ஆரம்பிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்கிறது

“நீங்க ஏன் ஏ.சி.ல ஏறுறீங்க, ஜெனரல் கம்பார்ட்மெண்டுல வரலாமில்ல ”

“இல்ல சார் , அங்க இருந்த நமக்கு தேவையான ஐட்டம் கிடைக்காது, அதனால தான் இங்க இருக்கேன். ஆனா டிக்கெட் வச்சிருக்கேன். எனக்கு சீட் சிலிப்பர் கிளாஸ்ல இருக்கு” என்று கொஞ்சம் படபடப்புடன் பேசினார்

“சாரு பாங்க்ல வேல செய்திகளோ ” கேள்வி கேட்டார் சற்று எதிர்பார்ப்புடன்,

“இல்ல ,ஏன் கேக்குறீங்க ” என்றேன்

“ஒரு சின்ன விஷயம் கேக்கணும், இந்த டாக்ஸ் எப்பிடி கட்டுறதுன்னு கேக்கலாம்னு தான் கேட்டேன் ”

சிரிப்பு வந்தது எனக்கு. “டாக்ஸ் கட்டுறதுக்கு ஆடிட்டர பாக்கணும் , பேங்க்ல வேலை செய்றவங்களுக்கும் டாக்ஸ்க்கும் சம்பந்தமில்ல” என்ன ஒரு அப்பாவியாக இருக்கிறார் , இது தான் இந்திய மக்களின் நிலைமை என்ற அளவிற்கு என் சிந்தனை சென்று கொண்டிருந்த போது தான் என் ஆறாம் அறிவு டக் என விழித்து அந்த சந்தேகத்தை இடி போல் இறக்கியது

“குப்பை பொறுக்கும் ஒருவன் எதற்காக டாக்ஸ் கட்டவேண்டும் என்கிறான்” என்ற எண்ணம் தான் முன்னதாக நான் ஏய்த ஏளனத்தில் கொஞ்சம் வருத்தமாகி அவர் நகர்ந்து கொண்டிருந்த வேளையில் நான் அழைத்தேன்.

“அண்ணே, ஒரு நிமிஷம்” என் வாய் தானா அவரை அண்ணா என்றது. எல்லாம் காசு பண்ணும் இல்லை இல்லை டாக்ஸ் பண்ணும் வேலை .

திரும்ப அருகில் வந்தவரிடம் “யாருக்கு டாக்ஸ் கட்டனும்” என்றேன்

“எனக்குதான் சார் , அதில்லாம நான் பேங்க் பத்தி கேட்டது டாக்ஸ் கொறைக்க என்ன முதலீடு செய்யலாம்னு கேக்கதான் சார் ” என்று சொல்லும்போதே என் தலை சுற்ற ஆரம்பித்தது , ரயில் இரைச்சலின் நடுவேயும் என் உள் மணம் என்னை அசிங்கமாக திட்டியது தெளிவாக கேட்டது .இந்த நேரத்தில் நான் என்ன பேசினாலும் உளறுவது போலத்தான் இருக்கும் ,எனவே சற்று நேரம் மௌனம் சாதித்தேன்

“அண்ணே , டாக்ஸ் கட்டுற அளவுக்கு என்ன தொழில் பண்றீங்க ” அவர் செய்யும் வேலையை இப்போதுதான் பார்த்தேன் , என்றாலும் குப்பை பொறுக்குற நீங்க ஏன் டாக்ஸ் கட்டுறீங்க என்று கேட்பது என் உள் மன பொறாமையையும் வஞ்சத்தையும் காட்டிவிடும் என்று அப்படி ஒரு கேள்வியை கேட்டேன் .

அண்ணன், ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் ஏழு தொழிலாளிகள் உண்டு, அவர்களுக்கு இவர் டிக்கெட் எடுத்து, சாப்பிட பணம் கொடுத்து விடுவார், வேலை என்னவென்றால் கன்னியா குமரியில் இருந்து ரயிலில் ஏறி , முதல் வகுப்பு பெட்டியருகே நின்று கொள்ள வேண்டும் , வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி அலுமினியம் பாயில் தாளை மட்டும் பொறுக்க வேண்டும் , முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது, ஆனால் மற்ற வகுப்பு பயணிகள் சாப்பிட்டு விட்டு எறிந்து விடுவார்கள் , எனவே தான் முதல் வகுப்பு முன் நின்றே பயணம் செய்கிறார்கள் . இவர்களின் இலக்கு ஒரு ரயில் போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் திரட்டுவது ,அதாவது நான்கு நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய் நாலாயிரம், எட்டு பேரின் சம்பாத்தியம் முப்பத்தி ரெண்டாயிரம், மாத சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ,செலவு நாப்பதாயிரம் , வருமானம் இரண்டு லட்சம் , வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் .இது கன்யாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும் , இன்னும் இது போல் மூன்று வழித்தடங்கள் உள்ளன .

மலைத்து நின்றேன். கார்பொரேட் நிறுவனத்தில் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான் ஏ சி பெட்டியில் சென்று கொண்டு எகத்தாளமிட்டு கொண்டிருக்கிறேன். ஆனால் சின்ன ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து , கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல் உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார். அன்று நான் இருந்த ஏ சி பெட்டி கொதிக்கும் நெருப்பை கொட்டுவது போல் இருந்தது. எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம், அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

“சார் ! எனக்கு தெரிஞ்ச நண்பரோட போன் நம்பர் இது ,இவரு முதலீடு செய்றத பத்தி உங்களுக்கு உதவி செய்வாரு சார் ” என்று கூறி விடைபெற்றேன். இம்முறை என்னையும் அறியாமல் அவரை சார் என்று அழைத்தேன்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 30 Jun 2015 - 12:46

உருவு கண்டு எள்ளாதே ! என்ற பழமொழியை விளக்கும் உண்மையான சம்பவம் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 30 Jun 2015 - 20:01

இது நிஜ அனுபவமா?...கேட்ட கதை யா ராஜ்?..........எதானாலும் ரொம்ப அருமை................எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்? ................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed 1 Jul 2015 - 3:34

krishnaamma wrote:இது நிஜ அனுபவமா?...கேட்ட கதை யா ராஜ்?..........எதானாலும் ரொம்ப அருமை................எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்? ................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1148754
அம்மா நானும் இதை whatsup -ல் படித்தேன் இது ஒருவருக்கு ஏற்பட்ட உண்மை சம்பவம் என்று அவர் குறிபிட்டுருந்தார் ....

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 1 Jul 2015 - 21:09

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:இது நிஜ அனுபவமா?...கேட்ட கதை  யா ராஜ்?..........எதானாலும் ரொம்ப அருமை................எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்? ................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1148754
அம்மா நானும் இதை whatsup -ல் படித்தேன் இது ஒருவருக்கு ஏற்பட்ட உண்மை சம்பவம் என்று அவர் குறிபிட்டுருந்தார் ....
மேற்கோள் செய்த பதிவு: 1148830

ஒ... சரி சரி... விவரத்துக்கு நன்றி  வேல் முருகன்.... ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu 2 Jul 2015 - 8:01

மிக நல்ல பதிவு . நல்ல eye opener . அவருக்கு என் salute ..
இந்தியாவில் தொழில் அதிபர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் ...
உள்ளம் பூரிகின்றது .. எத்தனையோ கோடி ஊழல் செய்பவர்கள் இருக்கும் நம் நாட்டில் இப்படி தானும் பிழைத்த அடுத்தவர்களுக்கும் பிழைப்பு கொடுக்கும் அய்யாவை என்ன என்று பாராட்டுவது ..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு
நல்ல பதிவுக்கு நன்றி rajaalways ரயிலில் கிடைத்த பாடம்! 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 3 Jul 2015 - 22:23

பதிவிட்ட rajaalways அவர்களுக்கும் ,
வாட்சப்பில்  படித்த வேல்முருகன் ,
மற்றும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் !

பொதுவாக FB /வாட்சப்பில் /மற்ற ஊடகங்களில் வருவதை அப்பிடியே நம்பிவிடுகிறோம் .
அந்த செய்தியின்   நம்பகத்தன்மையை பற்றி கவலை படுவதில்லை . sensational news படிக்கிறோம்/
பகிர்கிறோம்/ மறக்கிறோம் .

அப்பிடிதான் 2014 வருடம் புதன்கிழமை அன்று பிறக்கிறது . அது லீப் வருடம் . அறுபது வருடங்களுக்கு முன் நல்லது நடந்தது . அதே போல் இந்த வருடம் (2014) செழுமையாக இருக்கும்
என்று ஒருவர் எழுதி இருந்தார் . ஒரு தினசரி செய்தியாம் .அதற்கும் நன்றி சொல்லி , பின்னூட்டங்கள் .
2014 லீப் வருடமே இல்லை . பின் மற்ற செய்திகளின் நம்பகத்தன்மை எவ்வளவு சரியாக இருக்கும் .

அது போகட்டும் , நம் விஷயத்திற்கு வருவோம் ,

," முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது,"  இதுதான் புரியவில்லை . போகட்டும் பரவாயில்லை , இது அவ்வளவு முக்கியமில்லை .

இவர்கள் சேகரிக்கும் அலுமினியம் ,4 நாள் பிரயாணத்திற்கு 100 கிலோ அலுமினியம் கண்டைனர்கள் .அதாவது ஒரு அலுமினியம் டப்பா எவ்வளவு வெய்ட் இருக்கும் 5 கிராம்
அப்பிடி என்றால்  1 கிலோ விற்கு 200 டப்பா   அப்போ 100 கிலோவிற்கு 20000 டப்பா க்கள்
இதை சேகரித்து விற்றால்  என்ன கிடைக்கும் ?
ஏதோ 4000 ரூபாயாம் 8 பேராம் மாத வருமானம் 2,40,000 மாம் செலவு 40000 மாம் .
ஒரு மாத லாபம் 2 லக்ஷமாம் .
சரி அந்த மொதலாளி ஏன் தொழிலாளியாக வேலை செய்யவேண்டும்

கணக்கு சரியாக வந்தாலும் (arithmatic is ok ) நம்பும்படியாக இல்லவே இல்லை .
sensational news போடுவதில் சிலருக்கு ஆர்வம் அதிகம் .

உரத்த சிந்தனையே தவிர , யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை .

ரமணியன்

பிகு : திரு வேல்முருகன் வாட்சப்பில் வந்த தகவல் என்பதால் ,இது Rajaalways அவர்களின் தனிப்பட்ட அனுபவமாக இருக்காது என நினைக்கிறேன். இந்த பதிவிற்கு முன்பாகவே அவருக்கு "source of information --மூல ஆசிரியர் பெயர்களை பதிவிடவேண்டும் /அவர்களுக்கு நன்றி கூறுதல் அவசியம் என்றும் தனிமடல் ஒன்று அனுப்பி இருந்தேன் )
ர...ன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 3 Jul 2015 - 23:06

ப்ளாஷ் டிவி லைவ் காம்-ல் 13-11-2014 ல்
வந்த செய்தி இது...
-
அவர்களும் இணையத்தில் கண்ட பளார் பதிவு-
என்றுதான் போட்டுள்ளார்கள்...!!
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 3 Jul 2015 - 23:41

நன்றி a ram

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat 4 Jul 2015 - 2:57

T.N.Balasubramanian wrote:பதிவிட்ட rajaalways அவர்களுக்கும் ,
வாட்சப்பில்  படித்த வேல்முருகன் ,
மற்றும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் !

பொதுவாக FB /வாட்சப்பில் /மற்ற ஊடகங்களில் வருவதை அப்பிடியே நம்பிவிடுகிறோம் .
அந்த செய்தியின்   நம்பகத்தன்மையை பற்றி கவலை படுவதில்லை . sensational news படிக்கிறோம்/
பகிர்கிறோம்/ மறக்கிறோம் .

அப்பிடிதான் 2014 வருடம் புதன்கிழமை அன்று பிறக்கிறது . அது லீப் வருடம் . அறுபது வருடங்களுக்கு முன் நல்லது நடந்தது . அதே போல் இந்த வருடம் (2014) செழுமையாக இருக்கும்
என்று ஒருவர் எழுதி இருந்தார் . ஒரு தினசரி செய்தியாம் .அதற்கும் நன்றி சொல்லி , பின்னூட்டங்கள் .
2014 லீப் வருடமே இல்லை . பின் மற்ற செய்திகளின் நம்பகத்தன்மை எவ்வளவு சரியாக இருக்கும் .

அது போகட்டும் , நம் விஷயத்திற்கு வருவோம் ,

," முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது,"  இதுதான் புரியவில்லை . போகட்டும் பரவாயில்லை , இது அவ்வளவு முக்கியமில்லை .

இவர்கள் சேகரிக்கும் அலுமினியம் ,4 நாள் பிரயாணத்திற்கு 100 கிலோ அலுமினியம் கண்டைனர்கள் .அதாவது ஒரு அலுமினியம் டப்பா எவ்வளவு வெய்ட் இருக்கும் 5 கிராம்
அப்பிடி என்றால்  1 கிலோ விற்கு 200 டப்பா   அப்போ 100 கிலோவிற்கு 20000 டப்பா க்கள்
இதை சேகரித்து விற்றால்  என்ன கிடைக்கும் ?
ஏதோ 4000 ரூபாயாம் 8 பேராம் மாத வருமானம் 2,40,000 மாம் செலவு 40000 மாம் .
ஒரு மாத லாபம் 2 லக்ஷமாம் .
சரி அந்த மொதலாளி ஏன் தொழிலாளியாக வேலை செய்யவேண்டும்

கணக்கு சரியாக வந்தாலும் (arithmatic is ok ) நம்பும்படியாக இல்லவே இல்லை .
sensational news போடுவதில் சிலருக்கு ஆர்வம் அதிகம் .

உரத்த சிந்தனையே தவிர , யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை .

ரமணியன்

பிகு : திரு வேல்முருகன் வாட்சப்பில் வந்த தகவல் என்பதால் ,இது Rajaalways அவர்களின் தனிப்பட்ட அனுபவமாக இருக்காது என நினைக்கிறேன். இந்த பதிவிற்கு முன்பாகவே அவருக்கு "source of information --மூல ஆசிரியர் பெயர்களை பதிவிடவேண்டும் /அவர்களுக்கு நன்றி கூறுதல் அவசியம் என்றும் தனிமடல் ஒன்று அனுப்பி இருந்தேன் )
ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1149392

ரயிலில் கிடைத்த பாடம்! 5xPQSAg9QtWfw9TTg3UQ+sethan_595_logo_white_fb

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக