புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10 
40 Posts - 63%
heezulia
நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10 
2 Posts - 3%
viyasan
நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10 
232 Posts - 42%
heezulia
நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10 
21 Posts - 4%
prajai
நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம குலதெய்வம்

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Jun 23, 2015 10:24 am

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்கு தெரிந்த உங்கள் குலதெய்வம் களின் வரலாற்றை பதிவு செய்யலாம்

குலதெய்வங்களைப் பற்றி அறிய முற்பட்ட போது கிடைத்த பழையனூர் நீலியின் கதை. இந்தக் கதையுடன் வெள்ளாலர்களைப் பற்றிய தகவலும் வருகிறது என்பது கவணிக்கத் தக்கது. நீலியை இசக்கி என சில இனத்தவர் வழிபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் செய்தி.

நம்ம குலதெய்வம் - Page 7 ZY2OAceRhVkPZGSxlVjg+659px-isakki

காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.

நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.

ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று கதறினாள் .

இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!” என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ”அப்பா…” என்றழைத்து முத்தமிட்டது . இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ”சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்” என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ”உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் எழுபது பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு சென்றனர்.

வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக எழுபது வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 29, 2015 4:08 pm

Rajaalways wrote:தயவு செய்து எங்களுக்கும் கொஞ்சம் சொல்ல முடியுமா

மறக்க முடியா நிகழ்ச்சி --2.
===========================================================================
மண்டிகருப்பு எனும் கருப்பசாமி -அனுபவம் 2.​
​இரவு 10மணி இருக்கும் .
வாசக்கதவு தட்டும் சத்தம் .
மூதாட்டி ஒருவர் 55/58 வயது இருக்கும் .
சிம்னி விளக்கை பெரிது பண்ணி , வாசல் பக்கம் வந்து  யாரு என்று கேட்டார் .
அம்மா , கீழூர் கிராமத்து ஊர் காவல்காரன் அம்மா !
உங்க மவ அந்த ஊர்லே  இருக்காங்களா ?
அந்த மூதாட்டியின் மகள் அந்த ஊரில் தான் இருக்கிறார் . மேலும் அவர் நிறைமாச கர்ப்பிணி .இன்னும் ஒரு வாரத்தில் பிரசவம் ஆகும் என்று மருத்துவச்சி சொல்லி இருந்தார் .
ஆமாப்பா ,என்று கதவை திறந்தார் .
முண்டாசு கட்டிக் கொண்டு ,கட்டு மஸ்த்தான உடல் .படர்ந்த மீசையுடன் ஒரு உருவம் . கையில் பெரிய தடி வைத்து இருந்தார்.
அம்மா , மவளுக்கு , வலி எடுத்திடுச்சு , மருத்துவச்சி ஊர்லே இல்லே . அய்யாவும் ஊர்லே இல்லே
அதன் என்கிட்டே சொல்லி அனுப்பிச்சு .சீக்கரம் கிளம்புங்கம்மா .உங்களுக்கு பிரசவம் பாத்து பழக்கம்மாமே . மூதாட்டி , ஏதோ ஓரிரு பிரசவத்தின் போது ,கூட இருந்து உதவியதுடன் சரி .வேறெதுவும் தெரியாது . பெத்த மகள் சொல்லி அனுப்பி இருக்காள் . உதவிக்கு யாரும் இல்லை . கிளம்பி விட்டாள் ,கையில் கிடைத்த துணிகளை எடுத்துக் கொண்டு . கூடவே மண்டி கருப்பு விபுதி பொட்டலம் கையில் .கருப்பு சாமி வேண்டிக் கொண்டு , கதவை பூட்டி விட்டு , கிராமத்து காவல்காரனுடன் போக ஆரம்பித்தாள் . ரெண்டு பேருக்கும் 5 அடி வித்தியாசம் .
கண்மாயை சுற்றிக்கொண்டு போகணும் .எப்பிடியும் 60/70 நிமிடம் ஆகும் .
காவல்காரன் , அம்மா ,என்கூட வாங்க ,மதகு வழியா போயிடலாம் 15 நிமிடத்துலே போயிடலாம் .
ஏம்ப்பா, தண்ணி அதிகமாக போயிட்டு இருக்குமே ,போக முடியாதே என்றாள் .
இல்லேமா , அதிக தண்ணி எல்லாம் வழிஞ்சிடுச்சு , நான் அப்பிடி வந்தேன் ,நீங்க வாங்க
சீக்ரம் போகணும் என்றார் .
மதகு பக்கம் அவர் சொன்ன மாதிரி தண்ணி வழியாமல்  இருக்க ,காவல்காரன் எதுக்கும் இந்த
கம்பின் ஒரு முனை பிடிச்சுக்கோங்க ,வழுக்கினாலும் வழுக்கும் என்று நீட்ட , மூதாட்டியும் அதை பிடித்து , மறு முனை வந்தார் .
இருவரும் மகள் வீட்டை  அடைய ,மகளோ வலி பொறுக்க  முடியாமல் கதறிக் கொண்டு இருந்தார் .
மூதாட்டி உடனே செயலில் இறங்கினார். அதற்குள் காவல்காரரும் அக்கம் பக்கத்து வீட்டில் இருந்து
பெண்களை உதவிக்கு கூட்டிவந்து உதவினார் . அம்மா எல்லாம் நல்லபடியா நடக்கும் ,எனக்கு வேலை இருக்கு என்று கூறி ,காவலாளியும் கிளம்பினார் .
அரைமணி நேரத்தில் குழந்தை சுகமாக பிறக்க , தாயும் அசதியால் கண்மூடினார் .
மறுநாள் காலை பொழுது விடியுமுன் மருமகனும் வந்து சேர்ந்தார் .
மூதாட்டி , என்னப்பா ,நிறைமாச கர்ப்பிணியை இப்பிடி விட்டுட்டு போகலாமா ? என்று கேட்க ,
இல்லேமா நன்னா இருந்தா  , மருத்துவச்சி வேறு நிச்சயமாக ஒரு வாரம் ஆகும் என்று சொன்னதால்
பணம் தரேன்னு சொன்ன ஆளை பக்க போனேன் .இவ்வளவு சீக்கிரம் பிரசவம் ஆகும்னு தெரியாது .
நீங்க எப்பிடி சரியான நேரத்துக்கு வந்தீங்க என்று கேட்டார் .
இதன் நடுவே குழந்தை அழுகை சத்தம் ,மகளின் அழைப்பு , உள்ளே போனார் மூதாட்டி .
சிறிது செய்யவேண்டிய உதவிகளை செய்கையில் ,நீ எப்பிடி அம்மா சரியான சமயத்துக்கு வந்தே ?
என்று மகள்  கேட்டாள். ஏம்மா நீதானே உங்க ஊர் காவல்காரன் கிட்டே சொல்லி அனுப்பிச்சே .அவன் கூட 1/2 மணிலே வந்தேன்   .
என்னம்மா சொல்லறே , நான் யாரு கிட்டேயும் சொல்லையம்மா . திடீருன்னு உடம்பு ஒரு மாதிரி ஆயிடுச்சு இவரும் இல்லே ,என்னே பண்ணுவேன் கருப்பு சாமி ,நீதான் காப்பாத்தணும் சொன்னது தான் தெரியும்மா . வேறு ஒன்னும் தெரியாது . அதுவும் 1/2 மணியில் நீ வந்ததுதான் ஆச்சர்யம் என்றாள் . கண்மாய் வழியாக வந்தோம் என்றதும்  எப்பிடி,அம்மா  ,ஏரிலே அவ்வளவு தண்ணி இருக்கே என்றாள் .
மருமகனும் மறுநாள் கிளம்பி வருவதாக இருந்தாராம் . ஊருக்கு போ போ என்று யாரோ சொல்கின்ற மாதிரி இருந்துச்சு . ரோடுபக்கம் வந்த ரெட்டை மாட்டுவண்டி ,சந்தைக்கு போக சரக்குடன் வந்து கொண்டு இருந்துச்சு ..அதுலே ஏறி வந்தேன் என்றார் . அவரும் கண்மாயில் அதிகம் தண்ணீர் போய்கொண்டு இருப்பதை பார்த்ததாக சொன்னார் .
அந்த ஊரில் இன்னும் காவல்காரனாக யாரையும் நியமிக்கவில்லையாம் . கருப்புசாமி இருக்கச்சே ,காவலாளி எல்லாம் வேண்டாம் என்று பஞ்சாயத்து கூறிவிட்டதாம் .
கண்மாயை கடக்க காவலாளி ,கம்பை கொடுத்த போது , அந்த கம்பு எழுப்பிய ஜல்ஜல்ஜலக் சத்தம் நினைவுக்கு வந்தது
அப்பிடி என்றால் , மகளின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அன்று காவலாளியாக வந்து ,தன்னைக் கூட்டி வந்ததும்,மருமகனிற்கு ஊருக்கு வர சொன்னதும் மண்டி கருப்பு என்னும் கருப்பசாமியாகத்தான் இருக்கும் என்றார் அந்த மூதாட்டி .

=======================================================================================
நன்றி கொள்ளுப்பாட்டி ,

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Mon Jun 29, 2015 4:48 pm

நன்றி ஐயா, ஆனால் எனக்கு கருப்பு சாமி பற்றிய வரலாறு கூற முடியுமா. பிறந்தது அம்மா அப்பா பற்றி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 29, 2015 7:15 pm

Rajaalways wrote:எனக்கு கருப்பு சாமி பற்றிய வரலாறு கூற முடியுமா. பிறந்தது அம்மா அப்பா பற்றி.

தெரியாதே . இப்பவும் அவர் வெட்ட வெளியில் குதிரை மீது ஆரோகணித்து இருக்கார் .
கூரை வேய்வதற்கு முயற்சித்தார்கள். பலன் இல்லை .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 02, 2015 12:25 pm

rajaalways wrote:நன்றி ஐயா, ஆனால் எனக்கு கருப்பு சாமி பற்றிய வரலாறு கூற முடியுமா. பிறந்தது அம்மா அப்பா பற்றி.

மேற்கோள் செய்த பதிவு: 1148524

   நீங்களே தெரிந்து கொள்ளலாம்  ஆனால்   கொஞ்சம்  கொஞ்சம் செலவாகும்.   திருச்சி  அருகே துரையூரில்  ஓங்கார குடில்   அகத்தியர் சுத்த சன்மார்க்க சங்கம் உள்ளது   ஆறுமுக அரங்க மகா தேசிக  சுவாமிகள் கருப்புசாமியை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.  அதன்  விலை 2500 இருக்கலாம். என்றோ  தின தந்தியில்  படித்த நினைவு.

நம்ம குலதெய்வம் - Page 7 Thank-you015
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 02, 2015 8:50 pm

ayyamperumal wrote:துரையூரில் ஓங்கார குடில் அகத்தியர் சுத்த சன்மார்க்க சங்கம் உள்ளது ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள்

மிக்க நன்றி , ஐயம் பெருமாள் . நலமா ? நீண்ட நாட்களாக காணவில்லையே !
அருமையான தகவல் .
அடுத்த முறை போகும் போது , துறையுருக்கும் போகவேண்டியதுதான் .
எப்பிடியும் குணசீலம் போய் வரும்போது , இங்கேயும் நுழையவேண்டியதுதான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Jul 30, 2015 11:24 pm

குலதெய்வ வழிபாடு என்பது குருபாராம்பரியம் போன்றதே . ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறக்கும் ஒரு ஆத்மா – மனிதனுக்கு அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனை கண்காணித்து பாதுகாப்பதில் அந்த குடும்பத்தின் காவல் தெய்வம் போல ஒரு ஆவி மண்டல சக்தி பொறுப்பெடுத்துக்கொள்கிறது . குடும்ப ஆண்டவர் என்பதாகவும் இந்த ஆவி மண்டலசக்தி அறியப்படும் .

குரான் 13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்  (மலக்குகள் என்றால் தேவதூதர்கள் அல்லது ஆவிமண்டல சக்திகள் என்பது பொருள் )

கடவுள்தான் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார் என்றாலும் ; அவரது பரலோக ராஜ்ஜியத்தின் பூமிக்கான அதிகாரிகளாக இந்த குலதெய்வங்களை எடுத்துக்கொள்ளலாம்

மேலும் அறிய லிங்கை சொடுக்கவும்

குலதெய்வ வழிபாடு!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 31, 2015 10:07 am

நல்லதோர் விளக்கம் கிருபா அவர்களே

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Fri Jul 31, 2015 10:16 am

ஆகா மெய் சிலிர்க்கிறது நல்ல பதிவு .................... ஆனால் நம்பிடத்தான் அறிவியல் மனம் மறுக்கிறது

கவியரசன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2015 11:54 am

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:குலதெய்வ வழிபாடு என்பது குருபாராம்பரியம் போன்றதே . ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறக்கும் ஒரு ஆத்மா – மனிதனுக்கு அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனை கண்காணித்து பாதுகாப்பதில் அந்த குடும்பத்தின் காவல் தெய்வம் போல ஒரு ஆவி மண்டல சக்தி பொறுப்பெடுத்துக்கொள்கிறது . குடும்ப ஆண்டவர் என்பதாகவும் இந்த ஆவி மண்டலசக்தி அறியப்படும் .

குரான் 13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்  (மலக்குகள் என்றால் தேவதூதர்கள் அல்லது ஆவிமண்டல சக்திகள் என்பது பொருள் )

கடவுள்தான் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார் என்றாலும் ; அவரது பரலோக ராஜ்ஜியத்தின் பூமிக்கான அதிகாரிகளாக இந்த குலதெய்வங்களை எடுத்துக்கொள்ளலாம்

மேலும் அறிய லிங்கை சொடுக்கவும்

குலதெய்வ வழிபாடு!
மேற்கோள் செய்த பதிவு: 1154233

கிருபானந்தன், உங்கள் பதிவில் இருந்த லிங்க் ஐ எடுத்துவிட்டேன் .................உங்கள் ப்ளாக் ஆக இருக்கும் பக்ஷத்தில் நீங்கள் உங்கள் கைஎழுத்துப்பகுதி இல் போடுங்கள் புன்னகை.......நம் தளத்தின் விதி முறைகள் லிங்குகளை அனுமதிப்பது இல்லை  புன்னகை

அன்புடன் ,
கிருஷ்ணாம்மா  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 31, 2015 1:51 pm

krishnaamma wrote:
கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:குலதெய்வ வழிபாடு என்பது குருபாராம்பரியம் போன்றதே . ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறக்கும் ஒரு ஆத்மா – மனிதனுக்கு அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனை கண்காணித்து பாதுகாப்பதில் அந்த குடும்பத்தின் காவல் தெய்வம் போல ஒரு ஆவி மண்டல சக்தி பொறுப்பெடுத்துக்கொள்கிறது . குடும்ப ஆண்டவர் என்பதாகவும் இந்த ஆவி மண்டலசக்தி அறியப்படும் .

குரான் 13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்  (மலக்குகள் என்றால் தேவதூதர்கள் அல்லது ஆவிமண்டல சக்திகள் என்பது பொருள் )

கடவுள்தான் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார் என்றாலும் ; அவரது பரலோக ராஜ்ஜியத்தின் பூமிக்கான அதிகாரிகளாக இந்த குலதெய்வங்களை எடுத்துக்கொள்ளலாம்

மேலும் அறிய லிங்கை சொடுக்கவும்

குலதெய்வ வழிபாடு!
மேற்கோள் செய்த பதிவு: 1154233

கிருபானந்தன், உங்கள் பதிவில் இருந்த லிங்க் ஐ எடுத்துவிட்டேன் .................உங்கள் ப்ளாக் ஆக இருக்கும் பக்ஷத்தில் நீங்கள் உங்கள் கைஎழுத்துப்பகுதி இல் போடுங்கள் புன்னகை.......நம் தளத்தின் விதி முறைகள் லிங்குகளை அனுமதிப்பது இல்லை  புன்னகை

அன்புடன் ,
கிருஷ்ணாம்மா  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154312

நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக