புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
68 Posts - 53%
heezulia
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
15 Posts - 3%
prajai
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
9 Posts - 2%
jairam
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_m10மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 21, 2015 9:02 am

மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி !
பகத்சிங் என்ற சொல்லைக் கேட்கும் செவிகளும், பகத்சிங் என்ற படத்தைப் பார்க்கும் விழிகளும் வீரம் கொள்ளும் என்பது உண்மை. வீரத்தின் குறியீடாக வாழ்ந்தவன் பகத்சிங். உடலால் வாழ்ந்த காலம் 23 ஆண்டுகள் தான். ஆனால் புகழால் பகத்சிங் வாழ்ந்தான், வாழ்கிறான், வாழ்வான். முக்காலமும், எக்காலமும் வாழ்பவன் பகத்சிங்.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். பகத்சிங் சிறுவனாக இருந்த போதே விவசாயத்தை பார்த்து விட்டு, நான் துப்பாக்கி பயிரிடுகிறேன், அது விளைந்து வந்தால் வெள்ளையனை சுட்டு, விடுதலை பெற வெண்டும் என்றான். பகத்சிங் தந்தை மற்றும் இரண்டு சித்தப்பாக்கள் சிறையில் வாடிய போது, இரண்டு சித்திகள் கண்ணீரை துடைத்து விட்டு, நான் பெரியவனாக வளர்ந்ததும் விடுதலைக்கு போராடுவேன் என்று சொன்னவன் பகத்சிங். விடுதலை வேட்கை குழந்தையாக இருந்தபோதே வந்தது. சிலர் உடல், பொருள், ஆவி தருவதாகச் சொல்வார்கள். ஆனால் தரமாட்டார்கள். ஆனால் பகத்சிங் நாட்டு விடுதலைக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து மக்கள் மனங்களில் வாழ்பவன்.
பொதுவாக சீக்கியர்கள், தங்கள் பிள்ளைகளை எப்போதும் மதக்கல்வி கற்பிக்கும் கால்ஸா பள்ளிகளில் தான் சேர்ப்பது வழக்கம். ஆனால் இந்தப்பள்ளிகள் வெள்ளையருக்கு ஆதரவாக இருப்பதால் தேசப்பற்றும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட பகத்சிங் தந்தை கிஷான்சிங், தயானந்தா பள்ளியில் சேர்த்து விட்டார். அந்தப் பள்ளி தான் பகத்சிங்கிற்கு விடுதலை வேட்கையை விதைத்தது, உரமிட்டது.
சைமன் கமிஷனை எதிர்த்து ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலத்தில் காவலர்கள் தடியடி நடத்தினர். லாலா லஜபதிராய் உயிர் இழந்தார். அதற்கு பழிக்குப்பழி வாங்கிட தடியடி நடத்திய காவல் அதிகாரியான சாண்டர்சை சுட்டுக் கொன்றான் பகத்சிங். நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசி இன்குலாப் ஜிந்தாபாத் என்று வீரமுழக்கமிட்டவன் பகத்சிங். பேச்சில் மட்டுமல்ல செயலிலும் வீரம் மிக்கவன்.
இன்றைய இளைஞர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய மிகச்சிறந்த ஆளுமையாளர் பகத்சிங். 'தோன்றின் புகழோடு தோன்றுக' என்ற திருக்குறளுக்கு இலக்கணமாகத் தோன்றியவன் பகத்சிங். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனங்களில் நின்றவர் யார்? என்ற கேள்விக்கு விடையாக மக்கள் மனங்களில் நின்றவன் மாவீரன் பகத்சிங். விடுதலையை விரும்பியவன் பகத்சிங். விளையாட்டுத் திடலையே உற்றுநோக்கிய பகத்சிங்கிடம், அவனது அண்ணன் வந்து, இங்கே என்ன பார்க்கிறாய்? என்று கேட்டவுடன், பகத்சிங் அண்ணா, இந்தவிளையாட்டுத் திடல் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறது, இந்தத் திடலைப் போலத் தான் நானும் இருக்க விரும்புகிறேன். சூரிய ஒளி, மழை, காற்று, பறவைகள், விளையாடும் குழந்தைகள் என எல்லாவற்றையும் இந்தத் திடல் அனுமதிக்கிறது என்று சொன்னான்.
பகத்சிங் இயற்கையைப் போலவே சுதந்திரமாக இருக்க விரும்பியவன். மகாகவி பாரதியைப் போல இயற்கையை ரசித்தவன். அவற்றின் சுதந்திரத்தை உணர்ந்தவன். அவனுக்கு நம் நாடு வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக் கிடப்பதை எண்ணி எண்ணி வருந்தினான். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று முடிவுகள் வகுத்தான். ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு துடித்தான். 12 வயது நிரம்பிய சிறுவன் தனக்குள்ளே அழுதான்.
லாகூரிலிருந்து அமிர்தசரஸ் 20 மைல் தொலைவில் இருந்தது. வீட்டில் யாரிடமும் சொல்லாமல் அமிர்தசரஸ் புறப்பட்டான். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்தில் ரத்தக்கறை படிந்த மண்ணை எடுத்து வந்தான். சீசாவில் அடைத்து வைத்து தினமும் பார்க்கும்படி கண் முன் வைத்தான். ஜாலியன் வாலாபாக்-கில் கொல்லப்பட்டவர்களின் இரத்தம் சிந்திய மண் இது தான். எனது நாட்டின் அப்பாவி மக்களின் ரத்தம் இந்த மண்ணில் உள்ளது. இதை நான் எப்போதும் நினைவாக வைத்து இருப்பேன். இது எனது கடமையை எனக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.
ரத்தம் கலந்த மண்ணை கண் முன்னே வைத்துக் கொண்டு, அந்த மண்ணைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெள்ளையரை பழி தீர்க்க வேண்டும். நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று தனக்குள் விடுதலை வேள்வியை வளர்த்தவன். பகத்சிங்கிற்கு கடவுள் நம்பிக்கை இல்லை. பகுத்தறிவாளன். நான் ஏன்? நாத்திகன் என்று ஒரு புத்தகமும் எழுதி உள்ளான். கடவுள் பக்தி, ஒரு வித போதை என்று சொல்லி பகுத்தறிவு வழி நடந்தான். பகத்சிங் கல்லூரியில் பயின்றவன். புரட்சியாளர்களின் தலைவனாக இருந்து திட்டம் தீட்டியவன், நிறைவேற்றியவன், தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவன், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தவன், வார, தினசரி இதழ்களுக்கு எழுதிய எழுத்தாளன். மாட்டுப்பண்ணை நடத்தியவன் என பல்வேறு அனுபவங்கள் குறுகிய காலத்தில் பெற்றவன். பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் போல குறுகிய காலத்தில் பட்டறிவு பல பெற்றவன்.
பகத்சிங் சிறுவனாக இருந்த போதே இங்கிலாந்தில் இருந்து வந்த துணிகளை குவித்து தீயிட்டு கொளுத்தி இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட வீரன். அச்சம் என்பது மடமையடா! என்பதற்கு இலக்கணமாக அஞ்சாமையுடன், துணிவுடன் வாழ்ந்தவன் பகத்சிங்.
இந்த நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தான். நண்பர்களுடன் சேர்ந்து புரட்சிகரமான திட்டங்கள் தீட்டி வருவது கண்டு, குடும்பத்தினர், பகத்சிங்கிற்கு திருமணம் முடித்து வைக்க எண்ணி, பெண் வீட்டாரை வரவழைத்தனர். ஆனால் பகத்சிங், தனக்கு திருமணம் வேண்டவே வேண்டாம். என்று மறுத்து விட்டான்.
நான் திருமணமே செய்யப் போவது இல்லை. நாட்டுக்காக உயிரை தியாகம் செய்வது தான் என் லட்சியம். திருமணம் செய்து ஒரு பெண்ணின் வாழ்வை சிதைக்க விரும்பவில்லை. திருமணம் சுயநலம் வளர்க்கும் என்பதை உணர்ந்து மறுத்தான். வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களுடன் சேர்ந்து புரட்சிக்கு வழிவகுத்து வந்தான்.
பகத்சிங் குடும்பத்தினர் தேடி அலைந்தனர். கடைசியாக இருக்குமிடம் அறிந்து வந்து, பகத்சிங்கை வளர்த்த பாட்டி உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். நீ வந்தால், உன்னைப் பார்த்தால் நலம் பெறுவார்கள். உனக்கு திருமண ஏற்பாடு எதுவும் செய்ய மாட்டோம் என்று உறுதி தந்தவுடன் பகத்சிங் இல்லம் செல்கிறான். அங்கே உண்மையிலேயே பாட்டி உடல்நலம் குன்றி படுத்து இருக்கிறார். பகத்சிங்கை பார்த்தவுடன் பாட்டி மகிழ்ச்சி அடைகிறார்கள். பகத்சிங்கும், பாட்டியிடம் இருந்து பணிவிடை செய்கிறான். பாட்டி நலம் அடைந்து எழுந்து விடுகிறார்கள். பகத்சிங் வீரத்தில் மட்டுமல்ல, பாசத்திலும் முத்திரை பதித்து உள்ளான். பகத்சிங், பாட்டி மீது அளவற்ற பாசம் கொண்டவன். கான்பூர் கங்கை நதி வெள்ளத்தால் சூழப்பட்டது என்பதை அறிந்தவுடன், விடுதலை போராட்டத்தை ஒத்தி வைத்து விட்டு, உடனடியாக கான்பூர் சென்று வெள்ள நிவாரணப் பணியினை மேற்கொள்கிறான். மனிதாபிமானத்திலும் பகத்சிங் தனி முத்திரை பதித்து உள்ளான்.
பகத்சிங்கை காவலர்கள் விரட்டி வந்த போது வழக்கறிஞர் ஒருவரின் வீட்டிற்குள் செல்கிறான். அவர் பகத்சிங்கிற்கு அடைக்கலம் தருகிறார். காவலர்கள், வீடு தேடி வந்து கேட்கும் போது இங்கு இல்லை என்று பொய் சொல்லி அனுப்பி விடுகிறார். அகாலி குழுக்கள் 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் பங்கா கிராமத்தை அடைந்தன. அந்த குழுவை பகத்சிங் நண்பர்களுடன் வரவேற்று முதன்முறையாக பேசினான்.
நாட்டின் விடுதலைக்காகவும், சமதர்மத்திற்காகவும் மக்கள் போராட வேண்டும் என்று அவன் அழைப்பு விடுத்தான். எல்லோரும் ஆரவாரம் செய்து அவனை ஊக்கப்படுத்தினார்கள்.
பகத்சிங் தனது கையில் இருந்த செய்தித்தாள் சுருளை விரித்து உள்ளே இருந்து கொண்டு வெடிகுண்டுகளை கைகளில் எடுத்தான். நாடாளுமன்ற அரங்கில் மனிதர்கள் இல்லாத இடமாக காலியாக இருந்த இடம் பார்த்து வீசினான். தன்னிடம் இருந்த துண்டு அறிக்கைகளை வீசினான். மனித உயிர் சேதம் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வீசினான்.
வெடிகுண்டு வீசிய வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பகத்சிங் நாங்கள் வெடிகுண்டு வீசி எந்த உயிர்ச்சேதமும் ஏற்படுத்தவில்லை என்பதையும் நீதிபதிக்கு நினைவூட்டினான். வெள்ளையரால் பகத்சிங் கைது செய்யப்பட்டான். இதனைக் கேள்விப்பட்ட அவன் தந்தை சிறையிலிருந்து மீட்டு விடலாம் என்று முயன்றார். அந்தக் காலத்தில் 50 ஆயிரம் ரூபாய் என்பது இன்றைய மதிப்பில் 50 இலட்சம் ஆகும். கிஷான்சிங் மிகவும் சிரமப்பட்டு கடன் பெற்று ,சொத்துக்களை அடகு வைத்து ஜாமீன் தொகையை கட்டி பகத்சிங் விடுதலையானான். விடுதலையானதும் கொஞ்ச நாட்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாமல் பால்பண்ணை நடத்தி வந்தான் பகத்சிங்.விடுதலை வேட்கை திரும்பவும் பகத்சிங்கை தொற்றிக் கொண்டது. பழிக்குப்பழி வாங்கிட தடியடி நடத்திய காவல் அதிகாரியான சாண்டர்சை சுட்டுக் கொன்றான் .
பகத்சிங்கும் தத்தும் காவலரிடம் எந்தவிதமான வாக்குமூலத்தையும் அளிக்க மறுத்தனர். நாங்கள் நீதிமன்றத்தில் மட்டுமே பேசுவோம் என்று அவர்கள் உறுதியாக தெரிவித்து விட்டனர். வழக்கு நடந்தது. பகத்சிங் தந்த வாக்குமூலம் இந்தியா மட்டுமல்ல, இங்கிலாந்திலும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த வாழ்க்கை முறையையும், நிர்வாக அமைப்பையும் மாற்றுவதற்கு நாங்கள் உறுதி எடுத்தோம். அதற்காகத்தான் எங்களுடைய இளம் வாழ்க்கையை தியாகம் செய்ய முடிவு செய்தோம். எங்களுடைய தியாகத்தை பெரிய விஷயமாக நாங்கள் கருதவில்லை. மிகப்பெரிய புரட்சிக்காக நாங்கள் பொறுமையாக காத்திருப்போம். இன்குலாப் ஜிந்தாபாத் என்றான் பகத்சிங்.
சிறையில் பகத்சிங் உண்ணாவிரதம் இருக்கின்றான். அவன் வைத்த கோரிக்கைகள் என்ன தெரியுமா? புத்தக நேசராக, பத்திரிகை வாசிப்பாளராக இருந்தவன் பகத்சிங். அரசியல் கைதிகளான தங்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும். புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் பெறுவதற்கான சுதந்திரம் வேண்டும். தினமும் ஏதேனும் ஒரு நாளிதழ் வழங்க வேண்டும். ஆனாலும் கோரிக்கைகளை ஏற்க மறுத்தனர். பகத்சிங் எடை குறைந்து கொண்டே வந்தது. கோரிக்கை நிறைவேறவில்லை. பகத்சிங்கின் நெருங்கிய நண்பரான யதீந்திரநாத்தாஸ் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த புரட்சியாளருக்கு வலுக்கட்டாயமான உணவை ஊட்டும் முயற்சி நடந்தது. ஆனால் புரட்சியாளர்கள், திணிக்கப்பட்ட உணவை வெளியில் துப்பினர். இந்த செய்தி நாட்டுமக்களை ஆத்திரப்படுத்தியது.
வழக்கு விசாரணை, நீதிமன்றம், பகத்சிங் மீது எட்டுமுறை கடுமையான தடியடி நடத்தப்பட்டது. காவலர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் பற்றி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் தொடங்கியது. பகத்சிங் தாக்கப்பட்ட செய்தி காட்டுத்தீயாக பரவியது.
பகத்சிங், சுகதேவ், இராஜகுரு ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பைக் கேட்டவுடன் மக்கள் ஆத்திரம் அடைந்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர். பகத்சிங்கின் தந்தை கிஷான்சிங் இந்திய வைஸ்ராய்க்கு கருணை மனு ஒன்றை அனுப்பினார். இதனை அறிந்த பகத்சிங், தந்தைக்கு கடுமையான கடிதம் ஒன்றை எழுதினான். பாசத்தை மறந்து சினம் கொள்கிறான்.
நான் உங்கள் மகன் என்ற வகையில் பெற்றோருக்குரிய உணர்வுகளையும், விருப்பங்களையும் முழுமையாக மதிக்கிறேன். அதேநேரம் என்னிடம் ஆலோசிக்காமல் என்னுடைய அனுமதி இல்லாமல் இப்படியொரு கருணை மனுவை அனுப்புவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று உறுதியாக நம்புகிறேன். அப்பா, ஒன்றை மட்டும் நான் தெளிவாக சொல்கிறேன், வேறு யாரேனும் இப்படியொரு செயலை செய்திருந்தால் அவர்களை துரோகி என்றே அழைத்து இருப்பேன். ஆனால் உங்கள் விஷயத்தில் என்னால் அப்படி சொல்ல முடியவில்லை. இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதை இனிவரும் உலகம் நம்ப மறுக்கும். என்று காந்தியடிகளைச் சொன்னார்கள் .அது மாவீரன் பகத்சிங்கிற்கும் பொருந்தும் . தந்தைக்கு, பகத்சிங் எழுதிய கடிதம் ஒன்றே மிகச்சிறந்த இலக்கியமாகும். பாசத்தின் காரணமாக மகனுக்கு உயிர்ப்பிச்சை வேண்டி தந்தை, கருணை மனு விண்ணப்பித்ததை அறிந்து, கொதித்து, கோபம் கொண்டு, பாசம் மிக்க தந்தையை சாடி, மடல் எழுதுகிறான் பகத்சிங். இப்படி ஒரு இளைஞனை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. தனது உயிரை துச்சமாக நினைத்து நாட்டிற்காக வழங்கிய வீரன் பகத்சிங்.
தூக்குக் கயிற்றை சந்திக்கும் முன் சொன்ன வீர வசனங்கள். எங்கள் வாழ்வு முடியவில்லை, முடியாது, விரைவில், வெகுவிரைவில் கடைசிப்போர் வெடிக்கப் போகிறது. அந்த இறுதிப் புரட்சியே, தீர்மானிக்கும் சக்தியாக விளங்கவும் போகிறது. ஏகாதிபத்தியம், முதலாளித்துவ நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டு வருகின்றன. அதற்கான ஆரம்பப் போராட்டத்தில் நாங்களும் ஈடுபட்டோம் என்கிற பெருமிதம் ஒன்றே எங்களுக்குப் போதுமானது, புறப்படுங்கள் போகலாம்! இராஜகுரு, சுகதேவ், முழங்குங்கள் நமது புரட்சிகர மந்திரத்தை. படிக்க படிக்க படித்தவர்களுக்கு வீரம் பிறக்கும் வீர வசனம். இந்தியாவிற்கு விடுதலை கிடைக்க தேசப்பிதா காந்தியடிகள் ஒரு காரணம் என்றால் பகத்சிங் ,நேதாஜி போன்ற மாவீரர்களும் ஒரு காரணம். தனது உயிரையே நாட்டிற்காக தியாகம் செய்து வீரத்தை, மனதிட்பத்தை, மதிநுட்பத்தை, வெள்ளையருக்கு உணர்த்திய வீரவேங்கை பகத்சிங். உலகம் முழுவதும் தேடினாலும் பகத்சிங் போன்ற ஒருவரை காண முடியாது. தனது தூக்கு தண்டனைக்கு கருணை மனு விண்ணப்பித்த அப்பாவையே கடுமையாக சாடிய அரிய வீரன் பகத்சிங்.
பகத்சிங், சுகதேவ், இராஜகுரு மூவரும் தூக்கிலிடப்பட்ட போது மக்களிடையே பற்றிய தீ தான் நமக்கு விடுதலை எனும் ஒளி பிறக்க காரணமானது. பகத்சிங் இன்றும் மட்டுமல்ல என்றும் நினைக்கப்பட வேண்டிய மாவீரன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 21, 2015 11:13 am

மாவீரன் பகத்சிங்
நன்றி நன்றி அன்பு மலர்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 21, 2015 3:54 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக