புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
2 Posts - 2%
prajai
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
420 Posts - 48%
heezulia
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
28 Posts - 3%
prajai
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வயலோடு உறவாடி… Poll_c10வயலோடு உறவாடி… Poll_m10வயலோடு உறவாடி… Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயலோடு உறவாடி…


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 24, 2015 12:26 am



முற்றமெங்கும் விரிந்திருந்த சுண்ணாம்புக் கோலங்கள், காவி பூசப்பட்ட மண்கட்டி அடுப்புகள், அக்னி வளர்க்க குவிக்கப்பட்டிருந்த பனையோலைகள், பொட்டும் மஞ்சள் குலையுமாக மினுங்கிய வெண்கலப் பானைகள், சூரியனை வரவேற்க ஏற்றி வைத்த ஐந்துமுகக் குத்து விளக்கு, பக்கத்தில் நெல்குவித்த நிறை நாழி, படைத்திருந்த காய் கனிகள், பனங்கிழங்கு கரும்புக் கட்டுகள்…..

பார்த்துப் பார்த்து எடுத்தது எல்லாம் ஸ்லைட் ஷோவில் ஒவ்வொன்றாக விரிந்தன.

”நுணுக்கமாய் கவனிச்சு எடுத்திருக்கீங்க. ம்ம். நல்லாத்தானிருக்கு. ஆனா வளச்சு வளச்சு இப்படி சட்டிப் பானை, அடுப்பு கரும்புன்னு எடுத்தீங்களே.. பட்டிக்காட்டான் யானையப் பாத்த மாதிரின்னு யாரும் நினைச்சுடக் கூடாதேன்னு இருந்துச்சு” வில்லங்கமாகச் சிரித்தாள் சுமதி.

சுந்தரேசன் உற்சாகமாக விவரிக்க ஆரம்பித்தான்..

”நாமதான் எதையும் செய்யறதில்லை. உனக்கும் எல்லாம் புது அனுபவம். மொத தடவையா நீ பொங்கலுக்கு ஊருக்கு வந்திருக்கேன்னு சித்தியும் விளக்கேத்துறதில இருந்து எல்லாத்தையும் உன்னையே பண்ண வச்சாங்க. செஞ்சதை நீயும், பார்த்ததை நம்ம பொண்ணுங்களும் நினைவில் வச்சுக்கணுமேன்னுதான் எடுத்தேன் தெரிஞ்சுக்கோ. இங்க பாரு நம்ம இளவரசிங்கள..”

மகள்கள் இருவரும் பாவாடை சட்டையில் தேவதைகளாய்த் தெரிந்தார்கள்.

பால் பொங்கி வருகையில் பொங்கலோ பொங்கல் என எல்லோருமாய்க் கூவியதை வீடியோ க்ளிப்பிங்காக எடுத்திருந்தான். பானையில் அச்சுவெல்லக் கட்டிகளைச் சேர்த்த சுமதியின் வளை கரங்களை மட்டுமின்றி, கண்ணும் மூக்கும் அருவியெனப் பொங்க, அடுப்புப் புகையில் இவள் ஓலை வைக்கத் திண்டாடுவதைக் கூட க்ளோஸ் அப்பில் எடுத்து விட்டிருந்தான்.

”ஓ நோ.. இதை உடனே டெலிட் செய்யுங்க” கடுப்பாகிக் கூவினாள்.

”அட இருந்துட்டுப் போகட்டும் விடு. நான் ரசிப்பேன்ல. வேணுமானா ஆல்பத்திலே ஏத்தல” என்று சிரித்தவன், சரி, உன் வேலையைக் கவனியேன். இதை முடிச்சுட்டு வந்து சாப்பிட்டுக்கறேன். இன்னிக்கு விட்டா மறுபடி ஒருவாரம் இழுத்துடும். சித்திரை பொறக்கப் போகுது. பொங்கலுக்கு வந்து போனவன் இன்னும் படங்களை அனுப்பலையேன்னு சித்தப்பா பொசுபொசுங்கிறாராம்.

நாமெல்லாம் சேர்ந்து எடுத்துக்கிட்ட படத்தைப் பெரிசா ப்ளோ அப் செய்து போட்டுக்கணும்மாம் அவருக்கு. தம்பி ரெண்டு மூணு தடவை ஃபோன் பண்ணிட்டான்.”

”அரைமணியிலே வந்து சேருங்க.” பெரிய மனதுடன்

அனுமதி தந்தவளாய் நகர்ந்தாள் சுமதி.

எத்தனை வருடங்களுக்குப் பிறகு வாய்த்தது இது. பெருநகரமும் கிராமமும் இல்லாத ஊர் அவனுடையது. அவனது பள்ளிப் பருவம் வரை அங்கேதான் வளர்ந்தான். அப்பாவுடன் பிறந்த தம்பி விவசாயத்தைப் பார்த்துக் கொள்ள அவர் மட்டும் படித்து வங்கியில் வேலைக்குச் சேர்ந்து விட்டிருந்தார். ஊர் ஊராக மாற்றலாகும் உத்தியோகம் படிப்பு கெட்டு விடக் கூடாது என ஒரே மகனென்றாலும் இவனைத் தன் பெற்றோரிடமே விட்டு விட்டார்.

சித்தப்பாவின் பிள்ளைகளோடு, கிராமத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட இரண்டு அத்தைகளும் டவுன் பள்ளிக்கூடத்திலதான் படிப்பு நல்லாயிருக்கும் என ஏற்கனவே தங்கள் பிள்ளைகளைக் கொண்டு விட்டிருந்தார்கள். அந்தப் பெரிய மழலைப் பட்டாளத்தில் இவனும் ஐக்கியமாகி, கூடி வாழ்ந்த சொந்தங்களுடன் எந்தக் குறையுமில்லாமல்தான் வளர்ந்தான்.

அத்தைகள் அடிக்கடி தம் பிள்ளைகளை வந்து பார்த்துப்போக, தாய் தகப்பனை விட்டு ரொம்பத் தள்ளி வந்த பிள்ளை என இவன் மேல் எல்லோருக்கும் எப்போதும் தனி அக்கறை கரிசனம்தான். ஆனால் அவர்களை விடவும் ஒருபடி மேலாகவே இயற்கை தன்னை அரவணைத்துக் கொண்டதாகவே தோன்றும்.

தோட்டத்தில் பம்பு செட்டுக் குளியல், பண்ணையில் துள்ளும் கன்றுகளோடு ஆட்டம், வயலில் வைக்கோற் போரையே சறுக்கு மரமாக்கி வழுக்கி ஆடியது, வாழை, கொய்யா, பப்பாளி, இளநீர் எனப் பறித்த கையோடு குளிரக் குளிர வயிற்றை நிரப்பியது எல்லாம் எப்போது நினைத்தாலும் மனது குளிர்ந்து போகும்.

அறுவடையாகி வந்த அடுக்கப்பட்ட நெல்மூட்டைகள் மேலே ஏறி அமர்ந்து கொண்டு அரட்டை அடிப்பார்கள். வீட்டுப் பாடம் செய்வார்கள். பெரிய பெரிய அடுப்புகளில் மெகா சைஸ் உருளிகளில் நெல் அவிக்கும் அழகை வேடிக்கைப் பார்ப்பார்கள். மரத்துடுப்பைத் தாமும் பிடித்து கிண்டிக் கொடுப்பார்கள் ரொம்பச் சமர்த்தாய்.

பின்பக்க முற்றத்தில் நீண்ட நீண்ட பிறை நிலா வடிவில் அவித்த நெல்லைப் பண்ணைப் பெண்கள் அழகாய்ப் பரத்திக் காய வைத்துவிட்டு அந்தப் பக்கம் நகரக் காத்திருப்பார்கள்.

நெல் வெதுவெதுப்பாகி விட்டதா எனக் கவனமாய்க் காலாலே கிளறி உறுதி செய்த பிறகு அதில் உருண்டு புரண்டு சிந்திச் சிதறி மகிழ்வார்கள் யாராவது வந்து பெரிதாக அதட்டல் போடும்வரை. நெல் முழுதாகக் காய நாலு நாள் பிடிக்கும். கூத்தும் அதுவரை தொடரும். ஒருமுறை தாத்தா பார்த்து விட்டார்.

”டேய் டேய் பசங்களா என்ன இது. விளையாட்டுக்குக் கூட நெல்லை இப்படியெல்லாம் சிந்தியடிக்கப் படாதுடா” என எல்லோரையும் இழுத்துப் பிடித்து வரிசையாக அமர்த்தி விட்டார். இவர்களது எந்தக் குறும்புகளையும் கண்டு கொள்ளாத அவர் எதையாவது வலியுறுத்திச் சொல்லுகையில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து மகுடிக்குக் கட்டுப்படும் பாம்பாகி விடுவார்கள்.

அப்படித்தான் அன்றும். எப்படி உழவும் நெல்லும் சோறு தரும் கடவுள் என அவர் விவரிக்க விவரிக்க மனதில் ஒரு பயபக்தி ஏற்படத் தொடங்கியது. தொடர்ந்து வந்த பொங்கலின் போது, பண்ணை ஆட்களுக்குக் கொடுக்கின்ற பொங்கல்படி புதுத்துணி எல்லாம் தானமோ தர்மமோ அல்ல, நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை எனப் புதிய கோணத்தில் பார்க்க வைத்தார்கள்.

அதுமட்டுமில்லாமல், நாட்கதிர் என்றொரு வழிபாடு இருந்தது. அறுவடையானதும் பசுமை மாறாத நெற்கதிர் கட்டு ஒன்று வயலில் இருந்து வீடு தேடி வரும் அருள் பாலிக்க. முற்றத்தில் கோலமிட்ட மணை ஒன்றில் அதை நேராக நிறுத்தி பொட்டு பூவெல்லாம் வைத்து சூடம் காட்டிக் கும்பிடுவார்கள்.

பின்னர் தாத்தா அனைவர் கையிலும் ஒரு கதிர் எடுத்துக் கொடுப்பார். நெற்குதிர் அறையில் சுண்ணாம்புக் கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட புது மண் பானை காத்திருக்கும். முதல் கதிரைத் தாத்தா வைக்க, மற்ற பெரியவர்கள் தொடர,கூகூஊஊ என ரயில் வண்டி மாதிரி ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்து வந்த குழந்தைகளும் விளையாட்டு போலவேதான் அதில் கதிர்களைச் சேர்ப்பார்கள்.

அன்றைக்கும் நெல்மூட்டைகளுடன் தாம்பூல மரியாதை உண்டு. கதிரை எடுத்துவந்த பண்ணையாட்களுக்கு வடை பாயாசத்துடன் சாப்பாடும். புதுக்கதிரினைக் கசக்கியெடுத்து வரும் அரிசிமணிகளைச் சேர்த்துதான் பாயாசமே செய்வார்கள். ஒரு சிறிய கொத்தினைப் பூஜை அறையிலும் தொங்க விடுவார்கள். அந்த ஐதீகங்களின் அர்த்தமும் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கியது. செய்யும் தொழில் தெய்வம் என்பதும் ஆழப் பதிந்தது.

கேட்டு கேட்டு வளர்ந்து ப்ள்ஸ் டூ வரை வந்து விட்டிருந்தவன் அரும்பு மீசையைத் தடவியபடி ஒருமுறை திருப்பிக் கேட்டு விட்டான்.

”அப்போ ஏன் தாத்தா அப்பாவை மட்டும் வேற வேலைக்கு அனுப்பிட்ட…”

கேள்வியின் கூர்மையில் தாத்தா சற்று திணறிப் போன மாதிரி இருந்தது. ஆனால் என்றைக்காவது இப்படிக் கேட்பான் எனப் பதிலைத் தயாராகவே வைத்திருந்த மாதிரியும் இருந்தது.

”நாந்தான் படிக்க முடியாது போச்சு. படிப்பு நல்லா வந்ததாலே புள்ளைங்கள்ல ஒருத்தராவது உத்தியோகம் பாக்க பட்டணம் போகட்டும்னு அனுப்பிச்சேன். காடுகரைய பாத்துக்க சித்தப்ப்பா போதும்னுதான்.”

”அப்பாவுக்குப் பதிலா நான் விவசாயத்தைப் பண்ணட்டுமா தாத்தா… படிச்சு முடிச்சுட்டே செய்யறேன்.”

”வேண்டாம்பா வேண்டாம்” என்றார் பதட்டமாக. அவனை அருகில் அமர வைத்துக் கையைப் பிடித்துக் கொண்டார்.

”ஒன் தம்பிதான் இருக்கானே. ஒஞ்சித்தப்பா அவனை விவசாயத்துக்கே படிக்க வைக்கப் போறானாம். அவன் பார்த்துப்பான் இந்த நெலம் நீச்சையெல்லாம். ஒன்னைய என்ஜினீயராக்கணும்னு கனவு கண்டுட்டிருக்கான் ஒங்கப்பா. நீயும் படிப்புல அவனப் போலவே புலியா இருக்கே. அவன் பேச்சைக் கேட்டு நட. பெரிய உத்தியோகத்துக்குப் போ.”

நெருடலாக இருந்தது அவர் அப்படிப் பேசியது.

அடுத்த வருடம் கல்லூரியில் சேர ஊரைப் பிரிந்தவன்தான். பாட்டி இருந்தவரை அப்பா வேலைக்கு லீவு போட்டு வருடாவருடம் எல்லா பண்டிகைகளுக்கும் அழைத்துச் சென்றார். பாட்டி போனதும் தாத்தாவுக்காக பொங்கலுக்கு மட்டுமாவது போவது கட்டாயமாக இருந்தது. அவர் மறைவுக்குப் பின் அதுவும் நின்று போனது.

இவனும் படித்து முடித்து கணினித் துறையில் வேலையாகி, பட்டணத்துப் பெண்ணே மனைவியாய் வர அசுர வேக இயந்திர வாழ்வில் தொலைத்த பலவற்றில் ஒன்றாகிப் போனது பண்டிகைகளைக் கொண்டாடும் முறைகளும். எப்போதோ ஊர் விட்டு வந்துவிட்ட அம்மாவும் இவற்றில் அத்தனை ஆர்வம் காட்டாதாது இன்னும் வசதியாகப் போயிற்று சுமதிக்கு.

அப்பா தன் பாகத்துக்கு வந்த வயல்வெளி அத்தனையையும் கிரயம் செய்து சென்னையில் இந்த வீட்டை வாங்கிப் போட்டுக் காலமாகியும் விட்டிருந்தார் திடீர் மாரடைப்பில். ஊரில் மிச்சமாகி இருந்தது ஐம்பது செண்ட் அளவிலான தோட்டம் மட்டுமே.

இரண்டு பெண்களைக் கட்டிக் கொடுத்து விட்ட சித்தப்பாவுக்கும் வயதாகி விட விவசாயத்தில் முன் போல ஈடுபட இயலவில்லை. அதை நம்பி மட்டும் பிழைக்க முடியாதென மகன் குமரேசன் நான்கு கார்களை வாங்கி வாடகைக்கு விட்டான். நன்றாக அவை ஓடவே டிரான்ஸ்போர்ட் பிஸினஸில் கவனம் செல்ல ஆரம்பித்து விட்டது. இப்படியாக வயல்கள் எல்லாம் கிரயமாகி கார்களாக வேன்களாக மாற ஆரம்பித்தன. சித்தப்பாவால் தடுக்க முடியவில்லை.

ஆனாலும் தன் ஆத்ம திருப்திக்காக என்று சொல்லி சில தோட்டங்களை வசப்படுத்திக் கொண்டு அத்தோடு இவனுடையதையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

தனக்கும் வயதாகிக் கொண்டே வருவதால் குடும்பத்தோடு பொங்கலுக்கு வந்து போப்பா என்ற அவரது அன்புக்குக் கட்டுப்பட்டுத்தான் இந்தமுறை அங்கு சென்றிருந்தான். அப்போதுதான் அவனுக்கான தோட்டத்தைக் காட்டினார். அதில் வாழை பயிரிட்டிருந்தார். சுற்றிலும் சுமார் பத்து தென்னைகளும் இருந்தன. நல்லா வச்சிருக்கீங்க சித்தப்பா என அவர் கையைப் பிடித்து தழுதழுத்து விட்டான்.

மாதாமாதம் அவர் அனுப்புகிற பணத்தை வாங்கிக் கொள்ளுகையில் ஏற்படாத குற்ற உணர்வு பச்சை பசேல் என அவனுடைய தோட்டத்தைப் பராமரித்திருந்த அழகைப் பார்த்ததும் ஏற்பட்டது. வருடக் கணக்கில் எட்டிப் பார்க்காதது எத்தனை பெரிய தப்பென வருத்தியது.

சித்தப்பா அதை பெரிது பண்ணிக் கொள்ளவில்லை.

”எனக்கென்ன சிரமம் சொல்லப் போனா சந்தோசம்தான். உன் தம்பியானா எல்லா வயலையும் வித்து வண்டியாக்கிட்டான். மனசு வலிச்சாலும் அவன் வாழ்க்கைக்கு எது வேணுமின்னு அவந்தானே தீர்மானிக்கணுமின்னு விட்டுட்டேன். எப்படியொ நல்லாயிருந்தா சரிதான். கிராமத்தில நாம நெல்லு விளைச்சல் பாத்த பூமியெல்லாமே கைய விட்டுப் போயாச்சு. என் ஆயுசு மட்டும் மிச்சமிருக்கிற தோட்டங்களையாவது விக்கப்படாதுன்னு சொல்லி பயிர் பண்ணிட்டிருக்கேன்” என்றபடியே அடுத்து இருந்த அவரது தோட்டத்துக்கும் அழைத்துச் சென்றார்.

கத்திரி, வெண்டை, புடலை, தக்காளி எல்லாமும் பயிரிட்டிருந்தார். தள்ளாத வயதிலும் தினசரி இரண்டு மூன்று மணி நேரங்களாவது அங்கு செலவிடுகிறார் என்பது பேச்சிலே தெரிந்தது. இளசாய் வெண்டைக்காய்களைப் பறித்து சாப்பிடத் தந்தார்.

”ஊரோடு இருக்கேன் உழவைப் பாக்கேன்னு அக்ரி படிச்ச ஒன் தம்பியும் இப்போ வேற பொழப்பைத் தேடிக்கிட்டான்” என்றார் விரக்தியாக.

என்ன சொல்வதெனத் தெரியவில்லை அவனுக்கு.

ஊரிலே பரிச்சயமான பல இடங்களில் முன்பிருந்த பச்சை வயலெல்லாம் வணிக வளாகங்களாகவும் பெரிய மருத்துவமனைகளாகவும் பள்ளிக் கூடங்களாகவும் அல்லவா மாறி விட்டிருந்தன பட்டணத்தில்தான் அநியாயம் என நினைத்தால் பெருகி விட்ட போக்குவரத்துக்கென, சாலைகளை விஸ்தரிக்கப் போட்டுத் தள்ளியிருந்தார்கள் பலநூறு வயதான விருட்சங்களை சகட்டுமேனிக்கு. ஏரி குளங்களைத் தூர் வாருவதில் அக்கறை காட்டுவதாகச் சொல்லும் அரசும் தேவையென்று வருகையில் நீர்வளத்தில் கைவைக்கத் தயங்கவில்லையே ஊரின் பெரிய குளத்தை மூடிப் பேருந்து நிலையமாக்கி விட்டிருந்தார்கள். பழைய நிலையத்தில் நெருக்கடி அதிகமாகி விட்டதாம்.

ரியல் எஸ்டேட்கார்கள் சாக்லேட் வார்த்தைகளையும் மீறி ஒரு சிலரே நிலங்களை விளைச்சலுக்குப் பயன்படுத்தி வந்தனர்.

உழந்தும் உழவே தலை என்றிருக்கும் சித்தப்பாவின் வைராக்கியத்தில் பத்து சதவிகிதமாவது வேண்டும் தனக்கு என்கிற ஆசை வந்திருந்தது இப்போது. நேரடியாகத்தான் இறங்க முடியவில்லை. போகட்டும்.

ஆனால் யார் என்ன ஆசை காட்டினாலும் குத்தகைக்கு விட்டாவது ஆயுளுக்கும் தனது தோட்டத்தை விளைநிலமாகவே தக்க வைத்துக் கொள்வது ஒன்றுதான் ஆளாக்கிய தாத்தாவுக்கும், பூமித் தாய்க்கும் செய்யக் கூடிய மரியாதையாக இருக்கும் என உறுதி எடுத்துக் கொண்ட போது மனது கொஞ்சம் இலேசான மாதிரி இருந்தது.

தொலைக்காட்சிப் பெட்டியின் பக்கமே போகாமல், பொங்கலைக் கொண்டாடிக் களித்து மறுநாள் விடைபெறுகையில், வளர்த்த பாசம் கண்ணில் வழிய விடை கொடுக்கத் திணறித்தான் போனார்கள் சித்தியும் சித்தப்பாவும். அம்மாவின் முன் அதிகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலாதவனாய் ”அடிக்கடி வந்து போறேன் சித்தப்பா.தோட்டத்தையும் பார்த்தாப்ல ஆச்சு” என்றான்.

”அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்கப்பா.”

நினைவுகளிலிருந்து மீண்டு, தேர்ந்தெடுத்த படங்களை ஆல்பத்தில் ஏற்றி முடிக்கையில், கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தாள் மகள்.

இதோ ஆச்சுடா ஒரே நிமிஷம் ஷேர் ஆல்பம் என்பதைக் க்ளிக் செய்து தம்பியின் மெயில ஐடியை தட்டச்சிட ஆரம்பித்தான். கு ம ரே சன் அட் ஜிமெயில் டாட் காம் எனக் கூடவே நிறுத்தி வாசித்தவள், இவன் அனுப்பி விட்டுக் கணினியை மூடியதும், அப்பா சம்மர் லீவு வரப் போகுது. சின்ன தாத்தா வீட்டுக்குப் போலாம்னு நான் சொன்னா பாட்டியும் அம்மாவும் இப்பதானே போயிட்டு வந்தோம். அடுத்த வருஷம் யோசிக்கலாம் அப்படிங்கிறாங்கப்பா என்றாள்.

”யோசிப்பாங்களாமா ம்ம் நான் அழைச்சுட்டுப் போறேண்டா செல்லம். உன் ஆசையெல்லாம் அவங்களுக்குப் புரியாது.”

ஆதங்கமாய் சொன்னவனைப் பார்த்து ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஆதுரமாய்த் தலையசைத்தன எங்களுக்குப் புரியும் என்பது போல், வீட்டைக் கட்டும்போது அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஹாலின் அளவு குறைந்தாலும் பரவாயில்லை எனப் பத்துக்குப் பதினைந்தடி அளவில் அமைத்திருந்த சின்ன தோட்டத்தில் அவன் நட்டு வைத்து, இப்போது நெடுநெடுவென வளர்த்து விட்டிருந்த நெல்லி மரமும், காய்த்துக் குலுங்கி நின்றிருந்த தென்னை மரமும்.

ராமலக்ஷ்மி




வயலோடு உறவாடி… Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sat Jun 20, 2015 5:58 pm

வயலோடு உறவாடி… 103459460 வயலோடு உறவாடி… 103459460 வயலோடு உறவாடி… 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 20, 2015 6:26 pm

வயலோடு உறவாடி… 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக