5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!by சக்தி18 Today at 1:12 am
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am
» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am
» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm
» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by krishnaamma Yesterday at 8:45 pm
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm
» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm
» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Yesterday at 2:05 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கனிந்த சாறு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am
» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நகை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» சொத்து - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:55 am
» துரோகம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» மருமகள் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:03 am
» முடிவு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:00 am
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by ayyasamy ram Yesterday at 6:14 am
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm
» மைசூர்பாகு ! - சிறு கதை !
by krishnaamma Mon Mar 01, 2021 9:25 pm
» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm
» சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:52 pm
» துரோகி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:49 pm
» கடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:48 pm
» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:46 pm
» யார் கிட்ட??? நாங்க கும்பகோணத்துகாரங்க :)
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:44 pm
» ஒரு பத்து நிமிடங்கள் முன்னதாக......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:08 pm
» அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:06 pm
» ரஜினி முதலமைச்சரானா என்ன பண்ணுவீங்க?
by krishnaamma Mon Mar 01, 2021 7:11 pm
» ஸ்ரீரங்கத்தில் கணக்கூடிய அதிசயம் !
by krishnaamma Mon Mar 01, 2021 6:59 pm
Admins Online
அருட்பா - அகப்பா - ஆதிரா
Page 1 of 1
அருட்பா - அகப்பா - ஆதிரா
திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் திருஅருட்பாவில் அமைந்துள்ள அகப்பாடல்களையும் அதன் விளக்கத்தையும் இத்திரியில் தொடர் பதிவாக எழுதலாம் என்று தொடங்கியுள்ளேன். காலம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்வேன் என்னும் நம்பிக்கையில். வள்ளல் பெருமானின் அருளாசியுடனும் என் ஈகரை உறவுகளின் அன்பாசியுடனும் இத்திரி வெற்றியடைய வேண்டும். என் காலம் வெல்லட்டும்.
பதிக விளக்கம்:
தணிகை மலையில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் மீது ஏற்பட்டக் காதலினால் தம்மைத் தலைவியாகவும் இறைவனைத் தலைவனாகவும் பாவித்து நாயகன் நாயகி பாவத்தில் வள்ளல் பெருமானால் எழுதப் பெற்ற பாடல்கள் இவை. ஆற்றா விரகம் என்றால் பொறுக்க மாட்டாத காம நோய் என்று பொருள்படும். வள்ளலார்தம் இறைக்காதலின் தீராத ஆசைகள் ‘ஆற்றா விரகம்‘ என்னும் இப்பதிகப் பாடல்கள் முழுவதிலும் ஒலிக்கிறது. ஆற்றா விரகத்தைத் தொல்காப்பிய இலக்கணம் “மிக்க காமத்து மிடல்” என்று குறிக்கும். இதனைக் கைக்கிளைத் திணையில், “கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்” எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. கைக்கிளை என்பது ஒருதலைக்காதல். இங்கு வள்ளலாரின் என்னும் நாயகியின் சொல்லுக்கு எதிர்ச் சொல் கிடைக்கப் பெறாது என்னும் காரணத்தினால் இதனைக் கைக்கிளைக் காதல் என்பர். கடவுள் மீது கொண்ட கைக்கிளைக் காதலில் வள்ளலாராகிய நாயகி தம் ஆசைகளைத் தாமே கூறிப் புலம்புவது இப்பதிகம் முழுவதும் நிறைந்துள்ளது.
1.
தணிகை மலையைப் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ
பிணிகை யறையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ
அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ
பணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும் நீரேனோ (272)
பொருளுரை:
கையறை - கையறவு - செயலற்று இருத்தல்,
கூர்தல் - மிகுதல்,
தொழும்பு - அடியவர்
பேர்தல்-நீங்குதல்.
கூர்தல் - மிகுதல்
முதல் திருமுறை
பதிகம் 20
ஆற்றா விரகம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
பதிகம் 20
ஆற்றா விரகம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
பதிக விளக்கம்:
தணிகை மலையில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் மீது ஏற்பட்டக் காதலினால் தம்மைத் தலைவியாகவும் இறைவனைத் தலைவனாகவும் பாவித்து நாயகன் நாயகி பாவத்தில் வள்ளல் பெருமானால் எழுதப் பெற்ற பாடல்கள் இவை. ஆற்றா விரகம் என்றால் பொறுக்க மாட்டாத காம நோய் என்று பொருள்படும். வள்ளலார்தம் இறைக்காதலின் தீராத ஆசைகள் ‘ஆற்றா விரகம்‘ என்னும் இப்பதிகப் பாடல்கள் முழுவதிலும் ஒலிக்கிறது. ஆற்றா விரகத்தைத் தொல்காப்பிய இலக்கணம் “மிக்க காமத்து மிடல்” என்று குறிக்கும். இதனைக் கைக்கிளைத் திணையில், “கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்” எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. கைக்கிளை என்பது ஒருதலைக்காதல். இங்கு வள்ளலாரின் என்னும் நாயகியின் சொல்லுக்கு எதிர்ச் சொல் கிடைக்கப் பெறாது என்னும் காரணத்தினால் இதனைக் கைக்கிளைக் காதல் என்பர். கடவுள் மீது கொண்ட கைக்கிளைக் காதலில் வள்ளலாராகிய நாயகி தம் ஆசைகளைத் தாமே கூறிப் புலம்புவது இப்பதிகம் முழுவதும் நிறைந்துள்ளது.
தணிகை மலையைப் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ
பிணிகை யறையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ
அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ
பணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும் நீரேனோ (272)
பொருளுரை:
“இந்தப் பூமியின் மீது இருந்து இன்ப துன்பங்களில் உழலும் நான் தணிகை மலைக்குச் சென்று சேர மாட்டேனோ. அங்கு இருக்கும் முருகப் பெருமானின் அழகைக் கண்களால் கண்டு ரசிக்க மாட்டேனோ. உலக இன்ப துன்பங்களால் ஏற்பட்ட உடல் நோயால் செயலற்று இருக்கும் இந்நிலையைப் போக்க மாட்டேனோ. முருகப் பெருமான் மீது குறையாத அன்பு உடையவளாக இருக்க மாட்டேனோ. உடல் மனம் இரண்டுக்கும் அழகு தரக்கூடிய திருவருளாகிய நீரைப் பருக மாட்டேனோ. அருள் நீரைப் பருகுவதனால் இறைவனாகிய முருகப் பெருமான் மீதுற்ற குறையாத ஆசைத் தணியாதோ. இறைத்தொண்டு செய்து வாழுகின்ற அடியவர் கூட்டத்தில் நானும் ஒருவளாகச் சேர மாட்டேனோ” என்று தன் தலைவனாகிய முருகப் பெருமான் மீது பக்திக் காதல் கொண்ட தலைவியாகிய வள்ளலார் கூறுகிறார். இந்த அருள் நீரை மாணிக்க வாசகர் தம் திருவாசகத்தில் “தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய்” என்று கூறுகிறார்.
இதன் மூலம் வள்ளலார், தணிகை மலையை அடைந்து, முருகப் பெருமானது திருவருட் கோலத்தைக் கண்டு களித்து, திருத்தொண்டர் கூட்டத்துள் சேர்ந்து, திருவருள் ஞானம் பெற்று உய்ய வேண்டும் என்னும் தம் ஆவலை வெளிப்படுத்துகின்றார்.
அருஞ்சொல் பொருள்:இதன் மூலம் வள்ளலார், தணிகை மலையை அடைந்து, முருகப் பெருமானது திருவருட் கோலத்தைக் கண்டு களித்து, திருத்தொண்டர் கூட்டத்துள் சேர்ந்து, திருவருள் ஞானம் பெற்று உய்ய வேண்டும் என்னும் தம் ஆவலை வெளிப்படுத்துகின்றார்.
கையறை - கையறவு - செயலற்று இருத்தல்,
கூர்தல் - மிகுதல்,
தொழும்பு - அடியவர்
பேர்தல்-நீங்குதல்.
கூர்தல் - மிகுதல்
Last edited by Aathira on Tue Jun 16, 2015 9:54 pm; edited 8 times in total
Re: அருட்பா - அகப்பா - ஆதிரா
வாழ்த்துக்கள்
தங்களுடைய தொடர் திரி வந்து நாட்கள் பல ஆகிவிட்டன . தொடருங்கள் .
பதிக பாடல் /பொருளுரை / அருஞ்சொல் பொருள் அருமை .
நிச்சயமாக அநேகர் விரும்பி படிப்பர்.
ரமணியன்


தங்களுடைய தொடர் திரி வந்து நாட்கள் பல ஆகிவிட்டன . தொடருங்கள் .
பதிக பாடல் /பொருளுரை / அருஞ்சொல் பொருள் அருமை .
நிச்சயமாக அநேகர் விரும்பி படிப்பர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28207
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10074
Re: அருட்பா - அகப்பா - ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1145736@T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள்![]()
![]()
தங்களுடைய தொடர் திரி வந்து நாட்கள் பல ஆகிவிட்டன . தொடருங்கள் .
பதிக பாடல் /பொருளுரை / அருஞ்சொல் பொருள் அருமை .
நிச்சயமாக அநேகர் விரும்பி படிப்பர்.
ரமணியன்
மிக்க நன்றி ரமணியன் சார்.
நீண்ட நாள் கனவு. கனவு மெய்ப்பட வேண்டும்.
தாங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.
Re: அருட்பா - அகப்பா - ஆதிரா
நன்றாக உள்ளது
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: அருட்பா - அகப்பா - ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1145745@Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145736@T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள்![]()
![]()
தங்களுடைய தொடர் திரி வந்து நாட்கள் பல ஆகிவிட்டன . தொடருங்கள் .
பதிக பாடல் /பொருளுரை / அருஞ்சொல் பொருள் அருமை .
நிச்சயமாக அநேகர் விரும்பி படிப்பர்.
ரமணியன்
மிக்க நன்றி ரமணியன் சார்.
நீண்ட நாள் கனவு. கனவு மெய்ப்பட வேண்டும்.
தாங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.
சொல்லவும் வேண்டுமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28207
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10074
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|