புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10 
366 Posts - 49%
heezulia
தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10 
25 Posts - 3%
prajai
தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகச் சுற்றுலா தகவல்கள்


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 2:19 pm

ஓ மெரீனா....ஓ மெரீனா....

மெரீனா...கார்பன் மோனாக்ஸைடு சுவாசத்தில் திணறும் சென்னைவாசிகளுக்கு இளைப்பாறுதல் தரும் இடம்.

மெரீனா எப்படி ஒரு நாளை ஆரம்பிக்கிறது?

இதோ...மெரீனா கடற்கரையில் அதிகாலை 4 மணியிலிருந்து ஒரு "லைவ் ரிலே'... அந்தப் பிரம்ம முகூர்த்த வேளையில் சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் பளபளக்கிறது கடற்கரைச் சாலை. அதில், கலப்படமற்ற காற்றைச் சுவாசித்தபடி வாகனத்தில் சீறுவது அலாதி சுகமாய்த்தான் இருக்கிறது.

கலங்கரை விளக்கம் அருகே நமது வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு நடையைக் கட்டுகிறோம்.

வெளிச்ச மழையில் வெள்ளை மாளிகையாய்த் தகதகத்துக் கொண்டிருக்கிறது, டி.ஜி.பி. அலுவலகம். வாகன ஓட்டிகளை ஸ்பீக்கரில் எச்சரித்தபடி விரைகிறது, புதிய குவாலிஸ் காவல்துறை ரோந்து வாகனம்.

கடற்கரை உள்சாலையை ஒட்டியும் பரந்த மணல்வெளியிலும் வானமே கூரையாய்க் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் இந்நாட்டு "மன்னர்கள்'.

சீரணி அரங்கத்துக்குப் பின்புறம் உள்ள புறக்காவல் நிலையம் தூங்கி வழிந்து கொண்டிருக்க, கரகரத்துக் கொண்டிருக்கிறது ஒயர்லெஸ்.

தூரத்தே கடலில் ஜொலி ஜொலிக்கும் தீவுகளாய் மிதக்கின்றன கப்பல்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 2:20 pm

காலை 4.30 மணிக்குத்தான் மெதுவாய்ச் சோம்பல் முறிக்கிறது மெரீனா. தங்கள் உடல் நலம் குறித்த அதீத அக்கறையாளர்கள் அந்த நேரத்துக்கே நடையையும் மெல்லோட்டத்தையும் ஆரம்பித்து விடுகிறார்கள். சிலைகளாய்ச் சமைந்த சான்றோர்கள் மெüனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் (எப்ப லாரி வருமோ?)

நேரம் ஆக ஆக மெரீனாவில் ஜனத் தொகையும் அதிகரிக்கிறது (அதிலும் காலை 5.30 மணி முதல் 6.30 வரைதான் பீக் அவர்!). ட்ரவுசர் போட்டுக் கொண்டு இளைஞர் போல நடந்து செல்கிறார் நம்பியார் (வயது 82 - ஆம்!). திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி, நடிகர் சாருஹாசன் உள்ளிட்ட பிரபலங்களையும் பார்க்க முடிகிறது.

ஐந்தே காலுக்கு கிழக்குச் சிவக்கையிலே மெரீனாவின் உள் சாலையிலும் பிளாட்பாரத்திலும் மனித சமுத்திரம்!

மெரீனாவுக்கு வரும் நடையாளர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். "அர்னால்டு உடலுக்கு' ஆசைப்படும், இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள், முப்பதைத் தாண்டிய இளந்தொந்தியாளர்கள், "ஒம் பேத்தி இப்ப நல்லா பேசறாளா?' - விசாரித்தபடி நடையிடும் ஓய்வூதியக்காரர்கள்.

"அரைச் சதம்' அடித்தவர்களே அதிகம்...

இதில் ஆச்சரியமான விஷயம், 60+ ஆசாமிகள்தான் அதிகம். இளைஞர்கள் சிறுபான்மையினர் (இளையபாரதமே, இது தகுமா?). பெண்களையும் குறைவாகத்தான் காண முடிகிறது. மதராஸிகளுக்குக் கட்டுக்கோப்பான உடல் குறித்த அக்கறை குறைவு என்ற குற்றச்சாட்டுக்கு ஏற்ப, வடக்கத்திய முகங்கள்தான் அதிகம்.

சிந்தனைச் சிற்பியாய் கேஷுவலாய் நடக்கின்றனர் சிலர்; கருமமே கண்ணாயினார் என்று வேர்க்க விறுவிறுக்க நடக்கின்றனர் சிலர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 2:20 pm

மெரீனாவுக்கு காலை விஜயம் செய்பவர்களைக் குறிவைத்து நிறைய பிளாட்பாரக் கடைகள் முளைத்திருக்கின்றன. கேழ்வரகுக் கூழ், காளான் சூப், அருகம்புல் சாறு, வாழைத்தண்டு, வல்லாரைச் சாறு என்று குளிர்ந்த காலை வேளையில் சூடான வியாபாரம் (அருகம்புல்சாறு, ரத்தத்தைச் சுத்திகரிக்கும்; வாழைத்தண்டுச் சாறு, கிட்னி கல் கரைக்கும் என்று ஒவ்வொன்றுக்கும் மருத்துவக் குறிப்பு வேறு).

இயற்கை உணவு என்ற பெயரில், அவித்த நிலக்கடலை, கொண்டைக் கடலை, துண்டு போடப்பட்ட பச்சைக்காய்கறிகளை (காரட், வெள்ளரி, கோஸ் துண்டுகள், கொத்துமல்லித் தழை...) ஒரு பாக்கெட்டில் போட்டு 5 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். இயற்கை உணவு பற்றிய ஆர்வம் தற்போது எக்கச்சக்கமாக எகிறியிருப்பதால் பலர் இதை வாங்கிக் கொறிக்கிறார்கள். (பெரும்பாலானோருக்கு காலை டிபனே இதுதான்!)

அப்படியே பராக்குப் பார்த்தபடி நடந்து வந்தால் காந்தி சிலை அருகே ஒரு கூட்டம் வட்டமாக நின்று கொண்டு கைதட்டுவது, குதிப்பது, ஒருவரையொருவர் இடுப்பில் கிள்ளி (!) கிச்சுகிச்சு மூட்டுவது, பென்குயின் போல தத்தித்தத்தி நடப்பது, வாய்விட்டு "ஹஹ்ஹஹ்ஹா' என்று சிரிப்பது என கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். விசாரித்தால், "நடையாளர் கழகம்' போல "சிரிப்பாளர் கழகம்' (Laughter’s Club) என்கிறார்கள்.

""புதிதாய்ப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் இது வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால் உலகம் முழுவதும் 700 கிளைகளைக் கொண்டது இக்கழகம். சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டது. 60 பேர் உறுப்பினர்கள். இங்கு மொத்தம் 4 கிளைகள் உள்ளன'' என்கின்றனர் இதன் ஒருங்கிணைப்பாளர்களான மனோகர் பொகாடியாவும், கண்ணனும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:37 pm

""இப்படி செயற்கையாய்ச் சிரிப்பதால் பலனுண்டா?'' என்று சீண்டினால், ""என்ன அப்படிக் கேட்டுட்டீங்க...? ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு எல்லாமே கட்டுப்படுதுங்க...இதனால நல்ல பலன் இருக்குதுன்னு டாக்டர்கள் சிலரே அனுபவப்பூர்வமா உணர்ந்து சொல்லியிருக்காங்க...'' என்கின்றனர் கோரஸாக.

மெரீனாவுக்கு ஞாயிறுகளில் கும்பல் அதிகம் வருகிறது. நீச்சல் குளத்தில் கூச்சலும் உற்சாகமும் ததும்பி வழிகின்றன. வருங்காலச் சச்சின்களும் சேவாக்களும் பேட்டும் பந்துமாய் மெரீனா மைதானத்தில் இறங்கி விடுகின்றனர். இவற்றுக்கிடையில் ஒரு மூலையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் பயிற்சி வகுப்பும் ("ஷாகா') நடக்கிறது.

கடிகாரத்தில் முள் எட்டை எட்டியிருக்க, வெயில் ஏறுகிறது. நடையாளர்களின் எண்ணிக்கை குறைகிறது.

காலை வேளையில் சுறுசுறுப்பான முகங்களைப் பார்த்ததில் நமக்குள்ளும் ஓர் உற்சாகத் தீ பற்றிக் கொண்டதை உணர முடிகிறது. அதே புத்துணர்ச்சியுடன் நமது கான்கிரீட் குகைக்குத் திரும்புகிறோம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:38 pm

மெட்ராஸ்...நல்ல மெட்ராஸ்...

கிழக்கிந்தியக் கம்பெனி ஏஜன்டுகளான பிரான்சிஸ் டேயும் ஆன்ட்ரூ கோகனும் 1639-ல் வங்கக் கடற்கரையில் வந்திறங்கியபோது சென்னை ஒரு சிறிய மீன்பிடிக் கிராமம். இன்று இது நாட்டின் நான்கு மாநகரங்களுள் ஒன்று. 350 ஆண்டுகளில் 200 சதுர கி.மீ. பரப்பளவுக்கு விரிந்து (மக்கள்தொகை 60 லட்சத்தைத் தாண்டுகிறது.) வளர்ந்துள்ளது, இந்நகரம்.

விஜயநகர நிர்வாகத்திடம் இருந்து இங்கு ஒரு துண்டு நிலத்தை குத்தகைக்குப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியினர், செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். ஆரம்பத்தில் ஒரு தொழிற்சாலைக்காகக் கட்டப்பட்ட இக்கோட்டை, இந்தியாவில் ஆங்கில ஆதிக்கத்துக்கான முக்கியப் புள்ளியாக விழுந்தது.

கோட்டைக்கு அருகில் இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு போன்ற கிராமப் பகுதிகள் (!) ஒன்று சேர்ந்து சென்னைப் பட்டணமானது. ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தின் தலைநகராக இருந்த சென்னை, மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது தமிழகத்தின் தலைநகரானது.

தற்போது பழைமையின் பெருமையும், புதுமையின் பொலிவும் கலந்த பெருநகரமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் கலாசாரத் தலைநகர்; தென்னகத்தின் நுழைவாயில் என்று இன்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்கிறது, சென்னை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:38 pm

முதலாவது அசுத்தமான கடற்கரை?

உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையாகத் திகழும் மெரீனா, விரைவில் உலகின் முதலாவது அசுத்தமான கடற்கரை என்று பெயர் பெற்றுவிடுமோ என்று அச்சம் எழுகிறது. கடற்கரை மணல்வெளியிலும், பூங்காக்களிலும் அலட்சியமாக வீசியேறியப்பட்ட பிளாஸ்டிக் பைகள், குப்பைகள், காகிதங்கள், உணவுப் பொருள்களின் மிச்சங்கள், கால்நடைகளின் கழிவுகள்...

மெரீனாவுக்கு தற்போதுள்ள 50 பேருடன் கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்விஷயத்தில் திருவாளர் பொதுஜனத்துக்கும் கொஞ்சம் பொறுப்பு வேண்டும். பூங்கா பராமரிப்பிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதிகள் உள்பட 25 பூங்கா பிரிவுகள், சிலைகள் மெரீனா கோட்ட பொதுப்பணித் துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதில் பூங்கா பராமரிப்புக்கு ஆண்டொன்றுக்கு ஒதுக்கப்படும் ரூ. 6 லட்சம் போதுமானதாக இல்லாததால் கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி வருவதாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடற்கரைக்கு வருபவர்களின் அவஸ்தை கருதி போதுமான கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:40 pm

புனித பூமி காஞ்சி

பழமைமிக்க காஞ்சிபுரத்தில் ஏராளமான அளவில் தரிசிக்க வேண்டிய கோயில்களும் சுற்றுலாத் தலங்களும் அமைந்துள்ளன.

காமாட்சியம்மன் கோயில்:

இந்தியாவில் மூன்று முக்கிய சக்தி வழிபாட்டு தலங்களில் இக்கோயில் பிரதான இடத்தில் உள்ளது. இப்போது அமைந்துள்ள கோயில் 14ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாகும்.

ஏகாம்பரேஸ்வரர் கோயில்:

இக்கோயில் பல்லவர்கள், சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் புனரமைக்கப்பட்டது. 57 மீட்டர் உயரமுள்ள இக்கோயில் கோபுரம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய கோபுரங்களில் ஒன்றாகும். 2500 ஆண்டுகள் பழமைமிக்க மாமரம் ஒன்று இக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆயிரங்கால் மண்டமும், 5 சுற்றுப் பிரகாரங்களும் அழகுற அமைந்துள்ளன.

வரதராஜர் கோயில்:

அதிகளவிலான பக்தர்கள் வருவது இக்கோயிலின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு. இங்குள்ள நூறுகால் மண்டபத்தில் உள்ள தூண்களின் கலைப்பாடு பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும். இங்குள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கல்சங்கிலி பார்ப்போர வியக்க வைக்கும்.

அண்ணா நினைவிடம்:

'அண்ணா' என்று அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரை வாழ்ந்த இல்லம் தற்போது நினைவிடமாக இயங்கி வருகிறது. இங்கு அவர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவரது அரிய புகைப்படங்களை காணலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:41 pm

மாமல்லபுரம் நாட்டிய விழா!

நெருக்கடியில்லாத பரந்த திறந்த வெளி. இதமாகத் தாலாட்டும் கடல் காற்று. வானில் நிலவு, நட்சத்திரங்களின் ஜாலம். கண்ணை உறுத்தாத ஒளியில், கலைச் சிற்பங்களின் பின்னணியில் இமைக்க விடாமல் ரசிக்கவைக்கும் நடனங்கள், இணைந்து இன்பம் கூட்டும் இசை... நினைக்கவே இனிக்கிறதல்லவா?

இது அழகிய கற்பனையல்ல. மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்றுவரும் நாட்டிய விழாவின் வர்ணனை. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் கடந்த 92 முதல் நடைபெற்றுவரும் நாட்டிய விழாவுக்கு ஆண்டுக்காண்டு பார்வையாளர்களின் ஆர்வமும் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது.

இந்த நாட்டிய விழாவில் பரத நாட்டியத்துடன், கரகாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளுக்கும், கதக், மணிப்புரி, குச்சிப்புடி, ஒடிசி போன்ற அனைத்து வகை நடனங்களுக்கும் சரிசமமான இடமுண்டு.

இருபது நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், தமிழகத்தின் அனைத்து இடங்களிலிருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரபல நாட்டியக் கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர்.

தினசரி 25 பேர் வீதம் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பர். பார்வையாளர் (இதில் வெளிநாட்டவரே அதிகம்!) எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:41 pm

பதினோராவது ஆண்டாக வரும் டிச. 25 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தவச் சிலைகள் பின்னணியில் நாட்டிய விழா நடைபெறுகிறது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நாட்டிய விழாக்களில் தனஞ்ஜெயன், பத்மா சுப்ரமணியம், ஊர்மிளா சத்யநாராயணன், அலமேலுவள்ளி போன்ற பிரபலக் கலைஞர்கள் பங்கேற்று கலா ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளனர்.

இதயத்தில் நிலைக்கும் இந்த இனிய அனுபவத்தைப் பெற நீங்களும்தான் நாட்டிய விழாவுக்குப் போய் வாருங்களேன்!

பின் குறிப்பு : இந்த நாட்டிய விழாவையொட்டி மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன. மேலும் விழாக் காலத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்து மகாபலிபுரத்துக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:43 pm

பஞ்சபூத தலம்

பாண்டிச்சேரியிலிருந்து 75 கி.மீ. தூரத்தில் சிதம்பரம் நகரம் அமைந்துள்ளது. சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும்.

இங்கு ஆண்டுதோறும் மகாசிவராத்திரியிலிருந்து 5 நாட்கள் நாட்டியாஞ்சலி திருவிழா நடைபெறும். இதில், நாடெங்கும் இருந்து பல நாட்டியக் கலைஞர்கள் கலந்துகொள்வது வழக்கம்.

சிதம்பரம் அருகே ராமலிங்க அடிகள் வாழ்ந்த வடலூர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் அன்னதானம் நடைபெறுவது சிறப்பம்சமாகும். தைபூசத் தினம் இங்கு மிகவும் விசேஷமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

புகழ்பெற்று சுற்றுலா தலமான பிச்சாவரம் சிதம்பரம் அருகே அமைந்துள்ளது.

இந்நகருக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மேலும் சிறப்பு சேர்க்கிறது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக