புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_m10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10 
7 Posts - 58%
heezulia
வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_m10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_m10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_m10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_m10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_m10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_m10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_m10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_m10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_m10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_m10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_m10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_m10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_m10வேதியியல் தொகுப்பு - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதியியல் தொகுப்பு


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 12:18 am

First topic message reminder :

* ஒரு அமிலத்திற்கும், காரத்திற்குமிடையேயான நடுநிலையாக்கல் வினையில் இடப்பெயர்ச்சி செய்யப்பட வேண்டிய ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ராக்சில் அயனிகளில் சில இடப்பெயர்ச்சி அடையாமல் இருந்தால் அவ்வினை பகுதியளவு நடுநிலையாக்கல் எனப்படும்.

* இவ்வகை வினையில் கிடைக்கும் விளை பொருட்கள் அமில அல்லது கார உப்புக்களாக இருக்கும்.

* ஒரு அமிலத்தை ஒரு காரத்தால் பகுதியளவு நடுநிலையாக்கல் செய்யும்போது அமில உப்புக் கிடைக்கும். அமில உப்பில் குறைந்த அளவு ஒரு ஹைட்ரஜன் அயனியாவது காணப்படும்.

* சோடியம் ஹைட்ரஜன் பாஸ்பேட், சோடியம் பைசல்பேட் போன்ற உப்புக்கள் அமில உப்புக்களுக்கு பிற எடுத்துக்காட்டுகள் ஆகும்.

* ஒரு காரத்தை அமிலத்தால் பகுதி அளவு நடுநிலையாக்குமேபோதும் கார உப்பு கிடைக்கும் கார உப்புக்களில் குறைந்தது ஒரு ஹைட்ராக்சைடு அயனியாவது காணப்படும்.

* சோடியம் குளோரைடு உணவுப் பொருட்கள் தயார் செய்யவும். ஊறுகாய், மீன், இறைச்சி, காய்கறி போன்றவை கெடமால் பாதுகாக்கவும் பயன்படுகிறது.

* ரொட்டிச் சோடா, ரொட்டி மற்றும் கேக்குகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

* சலவைச் சோடா துணிகளை சலவை செய்யப் பயன்படுகிறது. சலவைத் தூள் துணிகள் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்யப் பயன்படுகிறது.

* கால்சியம் கார்பனேட் சுண்ணாம்புக் கட்டி செய்யப் பயன்படுகிறது.

* பொட்டாஷ் படிகாரம், நீரில் உள்ள மாசுகளை விரைவாக வீழ்படியச் செய்து நீரைத் தூய்மை யாக்குகிறது.

* சோடியம் பென்சோயேட் உணவு கெடாமல் பாதுகாக்கும் பொருளாகப் பயன்படுகிறது. சில்வர் நைட்ரேட் முடிச்சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது.

* அம்மோனியம் குளோரைடு, அம்மோனியம் சல்பேட், கால்சியம் சூப்பர் பாஸ்பேட் ஆகியவை உரங்களாகப் பயன்படுகின்றன.

* NPK (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்) வகை உரங்களில் அம்மோனியம் நைட்ரேட், அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் பாஸ்பேட், பொட்டாசியம் குளோரைடு உப்புக்கள் அடங்கியுள்ளன.

* காப்பர் சல்பேட் உப்பு காளான் கொல்லியாகப் பயன்படுகிறது. நைட்டர் (பொட்டாசியம் நைட்ரேட்) ஒரு உரமாகப் பயன்படுகிறது.

* பாரிஸ் சாந்து (Plaster of Paris) எலும்பு முறிவு சிகிச்சையில் பயன்படுகிறது. எப்சம் உப்பு மலச்சிக்கலைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

* முகரும் உப்பு சளித்தொல்லைகளிலிருந்து விடுபெறப் பயன்படுகிறது. ரொட்டிச் சோடா வயிற்றில் அமிலத் தன்மையைக் குறைக்கும் ஆன்டாசிட் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

* சில்வர் நைட்ரேட், சில்வர் புரோமைடு, சோடியம் தயோ சல்பேட் (ஹைப்போ) ஆகியவை புகைப்படத் தொழிலில் பயன்படுகின்றன.

* பொட்டாசியம் நைட்ரேட் பட்டாசுகள் தயாரிக்கவும், சோடியம் நைட்ரேட் துப்பாக்கித் தூள் மற்றும் பட்டாசுகள் செய்யவும், பொட்டாஷ் படிகாரம் தோல் பதனிடுதலிலும், காகிதங்களின் தரத்தை உயர்த்தவும், நிறமூன்றியாகவும் பயன்படுகிறது.

* பொட்டாசியம் குளோரேட் தீப்பெட்டித் தொழிற் சாலைகளில் பயன்படுகிறது. காப்பர் சல்பேட் சாயத்தொழிலிலும், அச்சுத் தொழிலிலுலம், முலாம் பூசுதலிலும் பயன்படுகிறது.



வேதியியல் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 12:24 am

ஆல்ஃபா தத்துவம்

* தாழ்நிலையில் இருக்கும் அணுக்களில் எலக்ட்ரான்கள் ஆர்பிட்டால்களின் ஆற்றலைப் பொறுத்து ஏறுமுக வரிசையில் நிரம்பும்.

* அதாவது எலக்ட்ரான்கள் முதலில் ஆற்றல் மிக்ககுறைந்த ஆர்பிட்டால்களில் நிரம்பிய பின்னர் அதர்கு அடுத்த அதிக ஆற்றலை உடைய ஆர்பிட்டால்களுக்குச் செல்லும். அந்த ஆர்பிட்டால்களில் எல்க்ட்ரான்கள் நிரப்புதல் ஏறுமுக வரிசையில் அமையும்.

* தனிமத்தின் வேதிப்பண்புகள் வெளிக்கூட்டில் காணும் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அமைப்பைப் பொறுத்து அமைகின்றன.

* ஒரே மாதிரி வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ள தனிமங்கள் பல தொகுதிகளாகப் பிரிகிகப்ப்டடுள்ளன. எனவே ஒரே தொகுதியில் உள்ள தனிமங்களின் வேதியில் மற்றும் இயற்பியல் பண்புகள் ஒத்திருக்கும்.

* எனவே தனித்தனியாக ஒவ்வொரு தனிமத்தின் பண்புகளை அறிவதற்குப் பதிலாக ஒவ்வொரு தொகுதியின் அறிந்தால் மட்டுமே போதுமானது.

* வெளிக்கூட்டில் ஒரு s எலக்ட்ரான் உடைய தனிமங்கள் 1ம் தொகுதி என்றும், இரு s எலக்ட்ரான்கள் வெளிக்கூட்டில் அமையப்பெற்ற தனிமங்களின் 2ம் தொகுதி காரமண் உலோகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்விரு தொகுதிகளும் s தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.

* தனிமங்கள் தங்களின் வெளிக்கூட்டில் 3 எலக்ட்ரான்கள் அதாவது இரு s எலக்ட்ரான்கள் மற்றும் ஒரு p எலக்ட்ரான்கள் அமைப்பினைப் பெற்ற தனிமங்களின் தொகுதி 13ம் தொகுதி என அழைக்கப்படுகிறது.

* 13, 14, 15, 16, 17, 18ம் தொகுதித் தனிமங்களில் s ஆர்பிட்டால்கள் நிரம்பிய நிலையிலும் இருப்பதால் இத்தனிமங்களின் பண்புகள் p ஆர்பிட்டால் எல்க்ட்ரான்களைப் பொருத்து அமைகிறது. இத்தொகுதிகள் இணைந்து p தொகுதி தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

* இதே போன்று d ஆக்பிட்டால்களை நிரப்பும் தன்மையுடைய தனிமங்கள் d தொகுதி தனிமங்கள் அல்லது இடைநிலைத் தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

* f ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான் நிரவுதல் செய்யும் தனிமங்கள் f தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.



வேதியியல் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 12:25 am

டாபர்னீரின் மும்மை வகைப்படுத்துதல்

* ஒத்த பண்புடைய மூன்று தனிமங்கள் கொண்ட தொகுதிகளாக டோபரினர் என்பவர் வகைப்படுத்தினார். இத்தொகுதி தனிமங்கள் மும்மைகள் எனப்படும்.

* இவ்விதிகளின்படி மூன்று தனிமங்கள் அவற்றின் அணுநிறை எண் ஏறு வரிசையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. நடுவில் உள்ள தனிமத்தின் அணு நிறையானது மற்ற இரு தனிமங்களின் அணு நிறைகளின் இயற்கணித சராசரியாக இருக்கும்.

நியூலாண்டின் எண்ம விதி

* இவ்விதிகளின்படி தனிமங்களை அணு நிறைகளின் ஏறு வரிசையில் வரிசைப்படுத்தும்போது எட்டாவது தனிமமானது முதலாவது தனிமத்தின் பண்புகளை ஒத்திருக்கும். இதுவே நியூலாண்டின் எண்ம விதி எனப்படும்.

* ஆனால் இவ்விதி அதிக அணு நிறை கொண்ட தனிமங்களுக்குப் பொருந்தாது.

மெண்டலீஃபின் தனிம வரிசை அட்டவணை

* மெண்டலீஃப் அறிமுகப்படுத்திய தனிமங்களை வகைப் படுத்தும் முறையானது ஆவர்த்தன விதி எனப்படும். இவ்விதிப்படி தனிமங்களின் பண்புகளானது அவற்றின் அணு நிறைகளின் சார்பாக இருக்கும்.



வேதியியல் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 12:25 am

மெண்டலீஃப் தனிம வரிசை அட்டவணை பற்றிய விவரம் பின்வருமாறு:

* தனிம வரிசை அட்டவணையில் செங்குத்தாக அமைந்துள்ள பத்திகள் தொகுதிகள் என அழைக்கப்பட்டன. இவை I முதல் VIII மற்றும் 0 எனக் குறிக்கப்பட்டன. பூஜ்ஜியத் தொகுதி தனிமங்கள் மெண்டலீஃப் காலத்தில் கண்டறியப்படவில்லை.

*தனிம வரிசை அட்டவணையில் கிடை மட்டத்தில் உள்ளவை வரிசைகள் எனப்படும். இவை 1 முதல் 7 என்ற எண்களால் குறிக்கப்படுகின்றன.

*முதல் விரிசையில் 2 தனிமங்கள், 2 மற்றும் 3 வது வரிசையில் 8 தனிமங்கள், 4 மற்றும் 5ம் வரிசைகளில் 18 தனிமங்கள் உள்ளன.

*6வது வரிசையில் 32 தனிமங்கள் உள்ளன. 7வது வரிசை முற்றுப்பெறாமல் 19 தனிமங்களைப் பெற்றுள்ளன.

*1913ல் ஆங்கிலேய இயற்பியல் வல்லுநர் ஹென்றி மோஸ்லி என்பவர் ஒரு தனிமத்தின் அணு எண்ணானது அணு நிறையை விட முக்கியமான அடிப்படைப் பண்பு என்பதைக் கண்டறிந்தார்.

*இதன் விளைவாக புதிய ஆவர்த்தன விதிப்படி தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இதுவே புதிய ஆவர்த்தன விதியாகும்.



வேதியியல் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 12:26 am

தணிமங்களின் வகைகள் தொகுதிகள்

தனிமங்களின் வகைகள் - s, p, d, f தொகுதிகள்

*தொகுதி 1 (கார உலோகங்கள்) மற்றும் தொகுதி 2 (காரமண் உலோகங்கள்) தனிமங்கள் முறையே வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பை ns1 மற்றும் ns2 எனப்பெற்றிருப்பதால் அவை s தொகுதி தனிமங்கள் எனப்படும். இவை குறைந்த அயனியாக்கும் என்பதால் பி கொண்ட வினைத் திறன் மிக்க உலோகங்கள்.

*தொகுதிகள் 13 முதல் 18 வரை உள்ள தனிமங்கள் p தொகுதி தனிமங்கள் ஆகும். s தொகுதி தனிமங்களும் சேர்ந்து இவற்றை முதன்மைத் தொகுதி தனிமங்கள் என்றும் அழைப்பர்.

*ஒவ்வொரு தொகுதியிலும் வெளிச்சுற்று எல்க்ட்ரான் அமைப்பு ns2 np1லிருந்து ns2np6 வரை மாறுபடுகிறது. ஒவ்வொரு வரிசையும் மந்தவாயு எலக்ட்ரான் அமைப்புடன் முடிவுறுகிறது.

*மந்த வாயுக்கள் மிகக் குறைந்த வினைதிறனைப் பெற்றுள்ளன. மந்த வாயுக்கள் தொகுதிக்கு முன்னதாக இரு முக்கிய வேதியியல் தொகுதிகள் உள்ளன. அவை ஹாலஜன்கள் (தொகுதி 17) மற்றும் சால்கோஜென்கள் (தொகுதி 16) ஆகும்.

*தொகுதி 3 முதல் 12 வரை உள்ள தனி வரிசை அட்டவணையின் மையத்தில் உள்ள தனிமங்கள் d தொகுதி தனிமங்கள் அல்லது இடைநிலைத் தனிங்கள் ஆகும்.

* அணுக்களின் உட்கூட்டில் உள்ள d ஆர்பிட்டால்கள் எலக்ட்ரான்களால் நிரப்பப்படுகின்றன. எனவே இவை d தொகுதி தனிமங்கள் எனப்படுகின்றன. இவற்றின் வெளிச்சுற்றின் எலக்ட்ரான் அமைப்பு (n-1) d1-10 ns1-2 இவை அனைத்தும் உலோகங்கள் ஆகும். பெரும்பாலும் நிறமுள்ள அயனிகளைத் தருகின்றன.

*தனிம வரிசை அட்டவணையின் கீழ்ப்பகுதியில் உள்ள லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் உள் இடைநிலைத் தனிமங்கள் எனப்படும். இவற்றின் இணைதிறன் கூட்டு எலக்ட்ரான் அமைப்பு (n-2) f1-14 (n-1) d0-1 ns2



வேதியியல் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 12:26 am

அயனியாக்கும் ஆற்றல்

* அயனியாக்கும் ஆற்றலானது அயனியாக்கும் என்தால்பி என அழைக்கப்படுகிறது. ஒரு அணுவிலிருந்து ஒரு எலக்ட்ரானை நீக்குவதற்கு தேவைப்படும் ஆற்றல் அயனியாக்கும் என்தால்பி எனப்படும்.

*தனித்த வாயு நிலையில் உள்ள ஒரு அணுவில் இருந்து ஒரு எலக்ட்ரானை நீக்குவதற்கு தேவைப்படும் ஆற்றல் முதல் அயனியாக்கும் என்தால்பி எனப்படும்.

* அதே தனிமத்திலிருந்து இரண்டாவது எலக்ட்ரானை நீக்குவதற்கு முதல் எலக்ட்ரானை நீக்குவதை விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. ஏனெனில் ஒரு நடுநிலை அணுவை விட நேர்மின்சுமை கொண்ட அயனியிலிருந்து எலக்ட்ரானை நீக்குவது கடினமாகும்.

* பொதுவாக தனிம வரிசை அட்டவணையில் உள்ள தொகுதியில் மேலிருந்து கீழிறங்கும்போது அயனியாக்கும் என்தால்பி குறைகிறது. அயனியாக்கும் என்தால்பி ஒருவரிசையில் இடமிருந்து வலமாகச் செல்லும்போது அதிகரிக்கிறது.

அயனியாக்கும் ஆற்றலைப் பாதிக்கும் காரணிகள்

அணுவின் உருவளவு, அணுக்ருவின் மின்சுமை, எலக்ட்ரான் திரை விளைவு, எலக்ட்ரான் நாட்டம் போன்ற காரணிகள் மூலம் பாதிக்கப்படுகிறது.



வேதியியல் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 12:27 am

எலக்ட்ரான் நாட்டம்

* வாயு நிலையில் உள்ள நடுநிலை அணுவிற்கு ஒரு எலக்ட்ரானை சேர்த்து எதிர்மின்சுமையுடைய அயனியை உருவாக்கும்போது வெளியிடப்படும் ஆற்றலே எலக்ட்ரான் நாட்டம் அல்லது எலக்ட்ரான் கவர் என்தால்பி எனப்படும்.

* ஒரு தொகுதியில் கீழிறங்கும்போது எலக்ட்ரான் கவர் ஆற்றலின் மதிப்புக்கள் குறைந்து கொண்டே வருகிறது.

* எலக்ட்ரான் கவர் என்தால்பி மதிப்புக்களில் எதிர்பார்த்தது போல அல்லாமல் ஃப்ளூரினின் எலக்ட்ரான் கவர் என்தால்பியானது குளோரினை விட குறைவாக உள்ளது.

* எலக்ட்ரான் கவர் என்தால்பி ஒரு வரிசையில் இடமிருந்து வலமாகச் செல்லும்போது அதிகரிக்கும்.

* அணுக்கருவின் மின்சுமை அதிகரிப்பதால் எலக்ட்ரான் கவர்ச்சி விசையும் அதிகரிப்பதே இதற்குக் காரணமாகும்.

* எலக்ட்ரான் நாட்டத்தின் எண் மதிப்பை பாதிக்கும் காரணிகள் 1. அணுவின் உருவளவு 2. பயனுடைய அணுக்கரு மின்சுமை 3. உள் எலக்ட்ரான்களின் மறைத்தல் விளைவு ஆகியன.



வேதியியல் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 12:27 am

1 s தொகுதி தனிமங்கள்

* ஆவர்த்தன அட்டவணையில் ஹைட்ரஜன் முதல் தனிமமாகும். உட்கருவில் ஒரு புரோட்டானையும் மற்றும் வெளிச்சுற்றில் ஓர் எலக்ட்ரானையும் கொண்டது.

ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள்

* ஒரே அணு எண்களையும் வெவ்வேறு நிறை எண்களையும் உடைய ஒரே தனிமத்தின் அணுக்கள் ஐசோடோப்புக்கள் எனப்படும்.

* ஹைட்ரஜனுக்கு புரோட்டியம், டியூட்ரியம், டிரிட்டியம் என மூன்று ஐசோடோப்புக்கள் காணப்படுகின்றன.

* இயற்கையில் காணப்படும் மொத்த ஹைட்ரனில் 99.98 சதவீதம் சாதாரண ஹைட்ரஜனாகிய புரோட்டியமே உள்ளது. இதன் அணு நிறை 1.

* டியூட்ரியம் அல்லது கன ஹைட்ரஜன் இயற்கையில் மிகச்சிறிதளவே காணப்படுகிறது. இயற்கையில் காணப்படும் ஹைட்ரஜனில் இவற்றின் விகிதமானது 1: 6000.

* டிரிட்டியம் உயர் வாயு மண்டலத்தில் மின்காந்த நுண்ணலைகளால் தூண்டப்படும் உட்கரு வினைகளில் தொடர்ச்சியாக உருவாவதாகும். இது கதிரியக்கத் தன்மை கொண்ட ஐசோடோப்பு ஆகும். இதன் அரை ஆயுட்காலம் - 12.3 ஆகும்.

* புரோட்டியத்தின் அணுநிறை 1. டியூட்ரியத்தின் அணு நிறை 2. டிரிட்டியத்தின் அணுநிறை 3 ஆகும்.

* செயற்கைக் கதிரியக்கத்தை ஏற்படுத்த அதிவேக டியூட்ரான்கள் பயன்படுகின்றன. வேதிவினைகளின் வழிமுறைகளை அறியும் சுவடறிவானாகப் பயன்படுகிறது.

* கனநீர் எனப்படும் டியூட்ரியம் ஆக்சைடு அணுக்கரு உலைகளில் நியூட்ரான் வேகத்தைக் குறைக்க மட்டுப்படுத்தியாகப் பயன்படுகிறது.

* லித்தியத்தை மெதுவாகச் செல்லும் நியூட்ரான்களைக் கொண்டு தாக்குவதால் டிரிட்டியம் கிடைக்கிறது. அணுக்கரு பிணைப்பு வினைகளில் டிரிட்டியம் பயன்படுகிறது.



வேதியியல் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 12:28 am

கன நீர்

* இது டியூட்ரியம் ஆக்சைடு எனவும் அழைக்கப்படுகிறது. கன ஹைட்ரஜனின் ஆக்சைடு கன நீர் ஆகும். கன நீர் 1932ம் ஆண்டு யூரே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. சோதனை மூலம் சாதாரண நீரில் மிகச்சிறிதளவு கனநீர் இருப்பதைக் காட்டினார்.

* பொதுவாக கனநீர் தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின் வளர்ச்சியைத் தடை செய்கிறது. கனநீரில் புகையிலை விதைகள் முளைப்பதில்லை. சிறு மீன்கள், தலைப்பிரட்டை மற்றும் எலிகள் தூய கன நீரை உட்கொண்டால் இறந்து விடுகின்றன.

ஹைட்ரஜன் பெராக்சைடு

* எல்.ஜே. தெனார்டு என்பவரால் 1813 ஆம் ஆண்டு ஹைட்ரஜன் பெராக்சைடு (H2O2) தயாரிக்கப்பட்டது. நீர்த்த அமிலத்தை பேரியம் பெராக்சைடில் வினைப்படுத்தி ஹைட்ரஜன் பெராக்சைடு தயாரிக்கப்பட்டது. வாயு மண்டலத்திலும் ஒரு சில தாவரங்களிலும் H2O2 மிகச்சிறிதளவு காணப்படுகிறது.

* ஹைட்ரஜன் பெராக்சைடில் ஆக்சிஜனேற்றப் பண்பால் ஒரு சிறந்த வலிமை மிக்க வெழுப்பானாகவும், தீமையற்ற கிருமி நாசினி மற்றும் தொற்று நீக்கியாகவும் பயன்படுகிறது. மிருதுவான பொருட்களான பட்டு, கம்பளி, முடி ஆகியவை ஹைட்ரஜன் பெராக்சைடினால் வெளுக்கப்படுகிறது.

* பாக்டீரியாவை அழிப்பதில் புரை தடுப்பானாக, கிருமி நாசினியாக, காயங்கள், காதுகள், பற்கள் இவற்றைக் கழுவி சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. இராக்கெட்டுகளில் உந்துவிசையை ஏற்படுத்த உதவுகிறது.



வேதியியல் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 12:28 am

திரவ நிலையில் உள்ள ஹைட்ரஜன் எரிபொருள்

* ஹைட்ரஜன் சாதாரணமாக H2 மூலக்கூறுகளால் ஆன நிறமற்ற மணமற்ற வாயுவாகும். வியாபார ரீதியாக பெருமளவு தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜனில் சுமார் 40 சதவீதம் அம்மோனியா தயாரிக்கவும், அதே அளவு பெட்ரோலியம் சுத்திகரித்தலிலும் பயன்படுகிறது.

* எதிர்காலத்தில் இதைவிட அதிக அளவில் ஹைட்ரஜன் ஒர் எரிபொருளாகப் பயன்படுகிறது.

* நீர்ம ஹைட்ரஜன் H2 ஒரு சிறந்த இராக்கெட் எரிபொருளாகும். அதை எரிக்கும்போது மற்ற எரிப்பொருட்களை விட ஒரு கிராமிற்கும் அதிக வெப்பத்தைத் தருகிறது.

* ஹைட்ரஜன் காற்றில் எரியும்போது கிடைப்பது நீரே ஆகும். எனவே படிம எரிபொருட்களான இயற்கை வாயு, பெட்ரோலியம் மற்றும் நிலக்கரியை விட ஹைட்ரஜனை எரிப்பதில் சிறந்த பலன் கிடைக்கிறது.

* அமில மழை ஏற்படாமல் தடுப்பதற்கும், சுற்றுப்புறம் மாசடைதலைத் தடுப்பதற்கும் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.



வேதியியல் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 12:29 am

கார உலோகங்கள்

* கார உலோகங்கள் பளபளப்பானவை, வெண்ணிற மானவை, மிருதுவானவே. அனைத்து கார உலோகங்களும் +1 ஆக்சிஜனேற்ற நிளையைப் பெற்றுள்ளன. ஏனெனில் அவை வெளிக்கூட்டில் உள்ள ஒற்றை எலக்ட்ரானை எளிதாக இழக்கின்றன.

* கார உலோகத் தொகுதியின் இறுதியில் உள்ள பிரான்சியம் கதிரியக்கத் தனிமமாகும்.

* கார உலோகங்கள் புன்சன் சுடரில் குறிப்பிட்ட நிறத்தை அளிக்கின்றன. லித்தியம் அடர்சிவப்பு நிறத்தையும், சோடியம் மஞ்சள் நிறத்தையும். ரூபிடியம், சீசியம் ஆகியவை

ஊதா நிறத்தையும் தருகின்றன.

* எல்லா கார உலோகங்களும் திண்ம நிலையில் வலுக்குறைந்த பிணைப்பைப் பெற்றிருப்பதால் குறைவான உருகுநிலையும், கொதிநிலையும் பெற்றுள்ளன.

* கார உலோகங்களை கத்தியால் வெட்ட இயலும். கார உலோகங்கள் வீரியம் மிகுந்தவை. எனவே இயற்கையில் சேர்மங்களாக மட்டுமே காணப்படுகின்றன.

* கார உலோகத் தொகுதியில் லித்தியத்திலிருந்து சீசியத்திற்கு கீழ்நோக்கிச் செல்லும்போது அணுப்பருமன் அதிகரிக்கிறது. இதே காரணத்தால் அணு ஆரமும், அயனி ஆரமும் படிப்படியாக உயருகின்றன.

* கார உலோகங்களின் அயனியாக்கும் ஆற்றல் மற்றவைகளை விடக் குறைவு. கார உலோகங்கள் ஒரு இணைத்திறன் எலக்ட்ரான்களை இழந்து ஒடுக்க வினைகளைத்

தருகின்றன. எனவே இவை சிறந்த ஒடுக்கிகளாகச் செயல்படுகின்ரன.

* கார உலோகங்களின் வினைதிறன் லித்தியத்திலிருந்து சீசியம் வரை கீழே செல்லும்போது அதிகரிக்கிறது.

* சோடியம் டெளன் முறையின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. சோடியம் லேசான உலோகக் கலவை தயாரிப்பிலும் சில அரிய மண் உலோகங்களை அதன்

ஆக்சைடுகளிலிருந்து தயாரிக்கும்போதும் ஆக்சிஜன் நீக்கியாகப் பயன்படுகிறது.

* ஐசோப்ரினை பலபடியாக்கி செயற்கை இரப்பர் தயாரிப்பில் சோடியம் வினையூக்கியாகப் பயன்படுகிறது.



வேதியியல் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக