by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
தமிழக அரசியல் செய்திகள்
Page 10 of 13 • 1, 2, 3 ... 9, 10, 11, 12, 13
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.
அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
``பாஜக-வின் பிராண்ட் அம்பாசிடரே ராகுல்தான்" - அண்ணாமலை
``ராகுல் காந்தி பேசிக்கொண்டேயிருந்தால்தான் பா.ஜ.க வளர்ந்துகொண்டே இருக்கும். 2024-ல் ராகுல் காந்தி புது ஸ்லோகனோடு வர வேண்டும் என்பதே எங்களது விருப்பம்." - அண்ணாம |
2019-ல் தேர்தல் பிரசாரத்தின்போது மோடி தொடர்பாகப் பேசிய கருத்தால் அவதூறு வழக்குக்குள்ளான ராகுல் காந்திக்கு, குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, அவரின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `ராகுல் காந்திதான் பா.ஜ.க-வின் பிராண்ட் அம்பாசிடர்' என்றும், `அவர் பேசிக்கொண்டேயிருந்தால் பா.ஜ.க வளர்ந்துகொண்டேயிருக்கும்' என்றும் விமர்சனம் செய்திருக்கிறார்.
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ``பிரதமர் நரேந்திர மோடி ஒன்பது ஆண்டுக்கால ஆட்சியை முடித்துவிட்டு, பத்தாவது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறார். இந்த ஆட்சி, தொடாத இடங்களையும் தொட்டுவிட்டது. தேர்தலுக்காக மட்டும் வாக்காளர்களைக் குறிவைத்து ஆட்சி நடந்ததை மாற்றியமைத்தது மோடியின் ஆட்சி. தமிழகத்தில் களம் மாறிவிட்டது. 30 ஆண்டுகளாகக் கூண்டில் இருந்த கிளி, தற்போது கூண்டைவிட்டு வெளியே வரத் தயாராகிவிட்டது, பறப்பதற்கும் சக்தி வந்துவிட்டது.
பா.ஜ.க ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது. தமிழகத்தில் புரட்சிக்கான நேரம் தயாராகிவிட்டது. பா.ஜ.க-வினர் கூனிக்குறுகி வாக்கு கேட்கவேண்டிய நிலை எங்கும் இல்லை. நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம். இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் ஆட்சியைவிட, பா.ஜ.க ஆட்சியில் 45 சதவிகிதத்துக்கும் அதிகமாகவே அரசுத் திட்டங்கள் செய்திருக்கின்றன.
மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. நம்முடைய பாதை தனிப்பாதை, சிங்கப்பாதை. தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் ஊழல் அமைச்சர்கள். தூத்துக்குடியைச் சேர்ந்த அமைச்சர் கீதா ஜீவன், அழுகிய முட்டை வாங்கி ஊழல் செய்துவருகிறார். `அண்ணாமலை வந்தால் அவரை ஒருகை பார்த்துவிடுவோம்' என்று கூறினார்கள் தி.மு.க-வினர். இப்போது நான் வந்திருக்கிறேன். ஏதாவது செய்யுங்கள் பார்ப்போம்... அப்பா பெயரைச் சொல்லி அரசியல் செய்யும் அமைச்சர் கீதா ஜீவனுக்கே இவ்வளவு இருந்தால், பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் சுயமாக இருக்கக்கூடியவர்கள். தனியாகப் போராடி ஜெயிக்கக்கூடியவர்கள். எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?
மோடி என்ற பெயருடையவர்கள் அனைவருமே கொள்ளையர்கள் என்று ராகுல் காந்தி பேசியது தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன் காரணமாக அவர், மக்கள் பிரதிநிதி பதவியில் இருக்கும் தகுதியை இழக்கிறார். இந்தியாவின் உச்சபட்ச காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அரசை எதிர்த்து கார்ட்டூன், மீம்ஸ் போடுபவர்கள் அனைவருமே நள்ளிரவு 2 மணிக்கு கைதுசெய்யப்படும்போது, ராகுல் காந்திக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.
ராகுல் காந்தி இந்த விவகாரத்தை அவராகவே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். 'சௌகிதார்' என்ற விவகாரம் தொடர்பாகப் பேசும்போது நீதிமன்றம், ராகுல் காந்தியை ஏற்கெனவே எச்சரித்தது. சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சாதாரண மனிதனுக்கும், ராகுல் காந்திக்கும் சட்டம் பொருந்தும் என்பதே சரி.
நாடாளுமன்ற சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருந்தால் இதற்கு முன்பு எடுத்த நடவடிக்கை குறித்து மக்கள் கேள்வி கேட்பார்கள். இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு பல வழிகள் இருக்கின்றன. சபாநாயகர் எடுத்த நடவடிக்கையில் எந்தவிதத் தவறும் இல்லை. ராகுல் காந்தி கட்டாயம் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
பா.ஜ.க-வின் பிராண்ட் அம்பாசிடரே ராகுல் காந்திதான், ராகுல் காந்தி அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம். 'பாரத் ஜோடோ யாத்திரை'க்குப் பிறகு பல குழப்பங்களை ராகுல் காந்தி ஏற்படுத்தியிருக்கிறார். ராகுல் காந்தி பேசிக்கொண்டேயிருந்தால்தான் பா.ஜ.க வளர்ந்துகொண்டேயிருக்கும். 2024-ல் ராகுல் காந்தி புது ஸ்லோகனோடு வர வேண்டும் என்பதே எங்களது விருப்பம்" என்றார்.
அழைக்கும் காங்கிரஸ்... ஆசைகாட்டும் பா.ஜ.க... எந்தப் பக்கம் ஜி.கே.வாசன்?
``இரண்டு பக்கமும் எனக்கு அழைப்பு இருக்கிறது என்று சொல்லப்படுவதெல்லாம் தவறான செய்தி. |
கண்டனத்தைக்கூட தன்மையாகக் கூறும் அரசியல்வாதியான ஜி.கே.வாசனுக்கு திடீரென மவுசு அதிகரித்திருக்கிறது. காங்கிரஸ், பா.ஜ.க இரண்டு தேசியக் கட்சிகளுமே அவரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன.
மதுரையில் கடந்த மார்ச் 19-ம் தேதி நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ``காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஜி.கே.மூப்பனார் போன்ற பல தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பிய வரலாறு உண்டு. என்னுடைய அன்புத் தலைவர் வாசன்... நீங்கள் இந்திய தேசிய காங்கிரஸில் வந்து இணையுங்கள் என அழைக்கிறேன். உங்களுக்குக் கீழிருந்து நாங்கள் பணியாற்றுகிறோம். எனக்கு அதில் கருத்து வேறுபாடெல்லாம் இல்லை” என பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.
இதே அழகிரிதான் கடந்த ஆண்டு, ``கத்தியும் குதிரையும் இல்லாத தலைவராக ஜி.கே.வாசன் இருக்கிறார். அவரை தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இணைத்துக்கொள்ள மாட்டோம்” எனத் தெரிவித்திருந்தார். தற்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான தலைவர் பதவிக்கான போட்டி கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்குள்ளேயே சூடுபிடித்திருக்கும் நிலையில், ஜி.கே.வாசனை திடீரென அழகிரி அழைத்திருப்பது காங்கிரஸில் மட்டுமல்லாமல் த.மா.க தொண்டர்கள் மத்தியிலும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
இன்னொரு பக்கம் பா.ஜ.க-வும் ஜி.கே.வாசனைத் தங்கள் பக்கம் இழுப்பதற்குத் தொடர்ந்து முயல்வதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக, `த.மா.கா-வை பா.ஜ.க-வுடன் இணைந்தால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உங்களை மத்திய அமைச்சர் ஆக்குகிறோம்’ என ஆசை காட்டப்பட்டதாகவும், `கட்சியினரிடம் கலந்து பேசிவிட்டு முடிவைச் சொல்வதாக’ வாசன் பதிலளித்ததாகவும் செய்திகள் அடிபடுகின்றன.
`காங்கிரஸுக்கு நன்றி... பா.ஜ.க செய்தி வதந்தி!’
இந்த `சர்ச்சை அழைப்புகள்’ குறித்து, டெல்லியில் இருக்கும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனிடம் தொடர்புகொண்டு பேசினோம். ``இரண்டு பக்கமும் எனக்கு அழைப்பு இருக்கிறது என்று சொல்லப்படுவதெல்லாம் தவறான செய்தி. மதுரையில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸில் இணைந்த நிகழ்வில், த.மா.கா-வினர் சிலரும் இணைந்ததாகக் கூறப்படுகிறது. அப்படிக் கட்சியில் சேர்ந்தவர்களை ஊக்கப்படுத்துவதற்காக, `த.மா.கா தலைவரும் முன்பு காங்கிரஸில் இருந்தவர்தான்; அவர் மீண்டும் காங்கிரஸுக்கு வந்தால் அவருக்குக் கீழே பணியாற்றுவோம்’ என ஒரு `மரியாதை நிமித்தமாக’ அழகிரி சொல்லியிருக்கிறார். இதில் தவறொன்றுமில்லை. இதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
பா.ஜ.க அழைப்பு குறித்து கேட்டபோது, ``எந்தச் செய்தி அதிகாரபூர்வமானதாக இல்லையோ, அதுவும் பொய்ச் செய்திதான். அதில் உண்மை இல்லை. என்னுடைய கட்சிப் பணியை நான் தொடர்ந்து செய்து கொண்டிருக் கிறேன். மத்தியில் பா.ஜ.க-வோடும், மாநிலத்தில் அ.தி.மு.க-வோடும் கூட்டணியில் இருக்கிறோம். இதுதான் எங்கள் நிலைப்பாடு” என முடித்துக்கொண்டார்.
‘மாம்பழத்தை’த் தொடர்ந்து, ‘தென்னந்தோப்பு’ம் நழுவுகிறதோ?!
“அலட்சியமா இருக்குறீங்க!” - வருத்தம்... கோபம்... ஆதங்கம்... ஸ்டாலின்!
‘எங்கள் பேச்சை அதிகாரிகள் கேட்பதே இல்லை. நியாயமான கோரிக்கை மனுக்களை எடுத்துச் சென்றால், தாசில்தார்கூட மதிப்பதில்லை’ எனக் கொதித்தனர். |
“தலைவரை இவ்வளவு கோபமா பார்த்ததில்லப்பா. பிச்சு எடுத்துட்டாரு..!” - மார்ச் 22-ம் தேதி நடந்த தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், கூட்டத்தை முடித்துக்கொண்டு வந்தவர்கள் இப்படித்தான் முணுமுணுக்கிறார்கள். “தி.மு.க தலைவர்கள், நிர்வாகிகள் சிலரின் சமீபகாலச் செயல்பாடுகள், பேச்சுகள், மோதல்கள் முதல்வர் ஸ்டாலினை வெகுவாகக் கோபப்படுத்தியிருக்கின்றன. அதனால்தான் ‘தலைமையை மீறி சில வருந்தத்தக்கச் செயல்கள் நடக்கின்றன. இனியும் தொடர்ந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன்’ எனக் கண்டிப்பு காட்டியிருக்கிறார். கட்சிப் பணிகளில் நிர்வாகிகள் காட்டும் சுணக்கம் குறித்து வருத்தப்பட்டவர், எதிர்க்கட்சியோடு ஒப்பிட்டு ஆதங்கமும் பட்டார். வழக்கமான அறிவுரையாக, எச்சரிக்கையாக மட்டும் இதை எடுத்துக்கொள்ள முடியாது. அவர் பேசிய டோனை வைத்துப் பார்த்தால், இந்த முறை விவகாரம் சீரியஸ்தான்” என்கிறார்கள் தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள். கடந்தகாலத் தவறுகள் குறித்தும், எதிர்காலக் கனவுகள் குறித்தும் பேசப்பட்ட... நவரச உணர்ச்சிகளும் முதல்வரின் முகத்தில் வெளிப்பட்ட... எம்.எல்.ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டங்களில் ‘என்ன நடந்தது..?’ விரிவாக விசாரித்தோம்... |
“சொல்லிக்கொள்ளும்படி இல்லை...”- வருத்தப்பட்ட முதல்வர்!
மார்ச் 21-ம் தேதி நடந்த தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், அவை நடவடிக்கைகளில் பங்கேற்பது குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தக் கூட்டத்தில், எம்.எல்.ஏ-க்களுக்கு பாலபாடம் எடுத்திருக்கிறார் முதல்வர். “அவையில், எதிர்க்கட்சியினரைத் தேவையில்லாமல் விமர்சனம் செய்யக் கூடாது. கண்ணியத்தோடு பேசுங்கள். உங்களுக்கு பதில் சொல்லத் தெரிந்தால் சொல்லுங்கள், இல்லையென்றால் சீனியர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்ற முதல்வர், அடுத்து சொன்னதுதான் எம்.எல்.ஏ-க்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேசினோம். “எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளில் முதல்வருக்கு வருத்தம் ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. ‘மாவட்டம்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். செல்லுமிடங்களிலெல்லாம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் குறித்து வரும் தகவல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அரசுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. நம் சட்டமன்ற உறுப்பினர்கள்தான் தாமதப்படுத்துவதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். திட்டங்களை நிறைவேற்றாமல், மக்களை எப்படிச் சந்திக்க முடியும்... ஒவ்வொரு மாதமும் உங்கள் தொகுதியில் நீங்கள் செய்த பணிகள் குறித்து ரிப்போர்ட் கொடுக்கச் சொல்லியிருந்தேன். ஆனால், ஒரு சிலரைத் தவிர மற்ற யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை’ என வருத்தப்பட்டார்.
தொகுதியில் நடைபெறும் அரசு ஒப்பந்தங்களில், குறிப்பிட்ட அளவு ‘ஸ்வீட்’ பாக்ஸ்களை சில எம்.எல்.ஏ-க்கள் எதிர்பார்ப்பதால்தான், திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டார் முதல்வர். ‘இதே நிலை தொடர்ந்தால், என் நடவடிக்கை கடுமையாக இருக்கும்’ என முதல்வர் எச்சரிக்கவும், பல எம்.எல்.ஏ-க்கள் முகத்தில் ஈயாடவில்லை. தவிர, சில எம்.எல்.ஏ-க்கள் லோக்கல் காவல்துறையைக் கையில் போட்டுக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் புகார் எழுந்திருக்கிறது. உள்துறைக்குத் தான்தான் பொறுப்பு என்பதால், எம்.எல்.ஏ-க்களின் அத்துமீறல் தொடர்பாகவும் கடுமையாகவே எச்சரித்தார்” என்றனர்.
“உங்க பதவியைக் காப்பாத்திக்கோங்க...” - கண்சிவந்த ஸ்டாலின்!
அடுத்த நாள் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்தான் ஏகத்துக்குக் காரசாரமாக நடந்திருக்கிறது. கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு ஆகியோர் ஒரே காரில் வந்திறங்கினார்கள். காலை 10:50 மணிக்குத் தொடங்கி, கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், கழக நிர்வாகிகளை வார்த்தைகளால் வறுத்தெடுத்திருக்கிறார் ஸ்டாலின்.
கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “மறைந்த தி.மு.க தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து முடிவெடுக்கத்தான், இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. அது தொடர்பான தீர்மானத்தையும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வாசித்தார். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல், ஓராண்டுக்கு அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களுக்கும் கலைஞரின் பெயரைச் சூட்டுவதெனப் பேசப்பட்டது. ‘ஓராண்டுக்குத் தொடர்ச்சியாகப் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். செலவாகுமேனு அமைதியா இருந்துடாதீங்க... பேராசிரியர் நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடணும்னு சொன்னோம். பெயருக்கு இரண்டு பொதுக்கூட்டம் போட்டதோட அமைதியாகிட்டீங்க. அது மாதிரி இந்த முறை இருக்கக் கூடாது’ எனக் கண்டிப்பு காட்டினார் துரைமுருகன். சில மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர்.
தென்மாவட்டச் செயலாளர்கள் சிலர், ‘எங்கள் பேச்சை அதிகாரிகள் கேட்பதே இல்லை. நியாயமான கோரிக்கை மனுக்களை எடுத்துச் சென்றால், தாசில்தார்கூட மதிப்பதில்லை’ எனக் கொதித்தனர். ‘எல்லாத்தையும் தலைவர் பார்த்துக்குவாரு...’ என அவர்களை அமைதிப்படுத்தினார் கே.என்.நேரு. கூட்டத்தில் எ.வ.வேலு பேசும்போது, மகளிருக்கான உரிமைத்தொகை குறித்து, ‘தகுதியுள்ள பெண்களுக்கு...’ என்று பேச்சை எடுத்தார். குறுக்கிட்ட முதல்வர், ‘நாம சொன்னபடி திட்டத்தை அறிவித்திருக்கிறோம். தகுதியுள்ள என்று நாம் சொன்னதன் அர்த்தத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்’ எனத் தெளிவுபடுத்தி அமரச் சொன்னார். ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்ததற்காக அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜியைப் பாராட்டவும் செய்தார் முதல்வர். அவ்வப்போது இடைமறித்துப் பேசிக்கொண்டிருந்த முதல்வர் இறுதியாக, தான் பேசுவதற்காக எழுந்தபோது, அவரின் முகம் உக்கிரமாக மாறியது.
‘இந்தக் கட்சியை ஆட்சிப் பொறுப்பில் அமரவைப்பதற்குக் கடுமையாகவே கஷ்டப்பட்டிருக்கிறோம். பத்து வருடங்கள் எதிர்க்கட்சியாகத் தாக்குப்பிடிப்பது என்பது எளிதான விஷயமல்ல. அந்தக் கஷ்டங்களை மறந்துவிட்டு, நம் கட்சி நிர்வாகிகள் சிலர், ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயரைத் தேடித்தரும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். தலைமையை மீறி வருந்தத்தக்கச் சில செயல்கள் நடக்கின்றன. இந்தநிலை தொடரக் கூடாது. அதையும் மீறித் தொடர்ந்தால், யாரையும் பதவியிலிருந்து நீக்கவும், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் நான் தயங்க மாட்டேன். உங்க பதவியைக் காப்பாத்திக்கோங்க...’ என்று வெடிக்க, கூட்டத்தில் மயான அமைதி நிலவியது. கே.என்.நேரு - திருச்சி சிவா விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டுத்தான் முதல்வர் இந்த எச்சரிக்கையைச் செய்தார். அதேநேரம், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தூண்டுதலும் இந்த விவகாரத்தில் இருப்பதாக நேரு தரப்பு முதல்வரிடம் போட்டுக் கொடுத்திருந்ததால், முதல்வரின் எச்சரிக்கை அன்பிலையும் சுட்டது. அரங்கத்தில் இருவருமே தரையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர்.
“நான் கடுமையாக உழைக்கிறேன்... - நீங்க அலட்சியமா இருக்குறீங்க..!”
தொடர்ந்து பேசிய முதல்வர், ‘எனக்கு 70 வயதாகிறது. இந்த வயதிலும் கடுமையாகவே உழைக்கிறேன். ஒரு நாளைக்குக் குறைந்தது ஏழு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். ஆனால், நீங்க அலட்சியமா இருக்குறீங்க. ஒரு வருடத்துக்கு முன்பு, அ.தி.மு.க நான்கு துண்டுகளாக இருந்தது. அந்தக் கட்சியில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்தன. அவ்வளவு பலவீனமாக இருந்த அ.தி.மு.க இன்று, எடப்பாடி தலைமையில் ஒன்றாகத் திரள ஆரம்பித்திருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், தீவிரமான எதிர்க்கட்சி அரசியலை நாம் எதிர்கொள்ள நேரிடும். களம் நமக்கு அவ்வளவு லகுவாக இருக்காது. இது குறித்தெல்லாம் எந்தக் கவலையும் உங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. தொகுதிவாரியாக, மாவட்டவாரியாக நாம் என்ன செய்தோம், என்ன செய்வதற்குத் தவறிவிட்டோம் என்கிற விவரங்களை அ.தி.மு.க-வினர் சேகரித்துவருகிறார்கள். அவர்களுக்கு ‘கன்டென்ட்’ கொடுக்கும் வேலையைப் பார்க்காமல், பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும். முதல்ல உங்க வாய்க்குப் பூட்டுப் போடுங்க’ என்றதும்... பொன்முடி, நாசர், சிவபத்மநாபன் உள்ளிட்டவர்களின் முகத்தில் இறுக்கம் கூடியது.
‘நாடாளுமன்றத் தேர்தல்ல, 40 தொகுதிகள்லயும் ஜெயிச்சாகணும். 100 வாக்காளருக்கு ஒரு கட்சிப் பொறுப்பாளர். பத்து பொறுப்பாளருக்கு ஒரு மேற்பார்வையாளர் போடப்போறோம். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தனியாகப் பொறுப்பாளர் நியமிக்கப்படுவார். மத்தியிலும் மாநிலத்திலும் நாம ஒருசேர அதிகாரத்திலிருந்து பத்து வருஷமாகிடுச்சு. இப்ப நமக்கு அந்த வாய்ப்பு வந்திருக்கு. உங்களோட சின்னச் சின்ன உட்கட்சிப் பிரச்னைகளை ஒதுக்கிவெச்சுட்டு, கட்சியை கவனிக்குற வேலையைப் பாருங்க’ என ஆதங்கத்தோடு பேச்சை முடித்தார் முதல்வர்.
கூட்டம் முடிந்த பிறகு முதல்வரிடம் சில நிமிடங்கள் பேசுவதற்கு அன்பில் மகேஸ் முயன்றபோது, அருகிலேயே நேரு நின்றுகொண்டிருந்ததால், அன்பிலால் முதல்வரை நெருங்க முடியவில்லை. கடுப்பில் முதல் ஆளாக அரங்கிலிருந்து வெளியேறினார் அன்பில். முதல்வரின் வருத்தமும், கோபமும், ஆதங்கமும் வழக்கமான கண்டிப்பு வார்த்தைகளாகத் தெரிய வில்லை. ‘ஆட்சிக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது’ என்கிற பதற்றம் தான் அவரிடம் அதிகமாக மேலோங்கியிருந்தது. தலைமையின் எச்சரிக்கையை மீறி இனி யார் ஆடினாலும், அவர்கள் பதவிக்கு நிச்சயம் வேட்டுதான்” என்றனர் விரிவாக.
ஒரு கோடி டார்கெட்... கிலியில் நிர்வாகிகள்!
இந்தக் கூட்டத்தில், ஒரு கோடி உறுப்பினர்களைப் புதிதாகக் கட்சியில் இணைப்பது என முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. அதை இரண்டு மாத காலத்துக்குள் முடிப்பதற்கு ‘டார்கெட்’ நிர்ணயித்திருக்கிறார் ஸ்டாலின். ஜூன் 3-ம் தேதி, திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறக்கப்படும்போது, ‘இரண்டு கோடி உறுப்பினர்களைக்கொண்ட மாபெரும் இயக்கம் தி.மு.க’ என முழங்க ஆசைப்படுகிறாராம் ஸ்டாலின். ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் கையிலும் பத்திலிருந்து பதினைந்தாயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான சேர்க்கைப் படிவ பண்டல்களைக் கொடுத்து திடீரென டாப் கியரில் அவர் வேகமெடுக்க, அதுவே பல நிர்வாகிகளுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.
நம்மிடம் பேசிய வடமாவட்ட தி.மு.க செயலாளர் ஒருவர், “கழகத்தில், ஒரு கோடி உறுப்பினர்கள் இருப்பதாக இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்கள். அந்த எண்ணிக்கையைத் தொடுவதற்கு 73 வருடங்களாகிவிட்டன. ஆனால், அடுத்த இரண்டே மாதங்களில், மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என ‘டார்கெட்’ போட்டிருக்கிறார்கள்.
234 சட்டமன்றத் தொகுதிகளிலும், தலா 50,000 உறுப்பினர்களை இணைக்கச் சொல்லியிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை இரண்டே மாதங்களில் எட்டுவது சாத்தியப்படக்கூடிய காரியமல்ல. ஆனால், தலைமையின் கோபத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக, இதில் சில முறைகேடான கணக்குகளைச் சமர்ப்பிக்கத்தான் மாவட்ட நிர்வாகிகள் முயல்வார்கள். ஏற்கெனவே, பலரும் பசைப் பிரச்னையில் இருக்கிறோம். ஐம்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பல கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், உறுப்பினர் சேர்க்கை முகாம், திண்ணைப் பிரசாரம், கலைஞர் நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் எனக் கிளம்பச் சொல்கிறார்கள். இதனால், கன்னா பின்னாவெனச் செலவாகும். அடுத்ததாக, நாடாளுமன்றத் தேர்தல் வேறு வருகிறது. அதற்கும் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும். நினைத்தாலே கண்ணைக் கட்டுகிறது” என்றார் ஆற்றாமையுடன்.
கிராமம்தோறும் பூத் கமிட்டிகளை வைத்திருப்பது தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் மட்டும்தான். ஒவ்வொரு பூத்திலும் தலா 40 உறுப்பினர்கள் இருக்கும் அளவுக்கு பூத் கமிட்டிகளை வலிமைப்படுத்த உத்தரவிட்டிருக்கிறாராம் ஸ்டாலின். பூத் அளவில் சமூக வலைதள அணியையும் வலுவாக்கும்படிச் சொல்லியிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலை நோக்கித் தன் வேகத்தைக் கூட்டியிருக்கிறார் ஸ்டாலின். ஆனால், நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் மத்தியில் இந்த வேகம் பிறந்திருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சரிசெய்யப்படவேண்டிய உட்கட்சிப் பிரச்னைகள், கூட்டணி உரசல்கள் நிறைய இருக்கின்றன. அதிகாரிகளுக்கும் கட்சிக்காரர்களுக்குமான மோதல் இன்னொரு பக்கம் உருண்டோடுகிறது. ‘தூக்கம் கெடுகிறது... கடைசி எச்சரிக்கை... அலட்சியம் காட்டாதீர்கள்... பதவி பறிபோகும்...’ என பலப்பல வார்த்தைகளால் வருத்தப்பட்டு, ஆதங்கப்பட்டு, கோபப்பட்டு ஸ்டாலின் பேசினாலும், கட்சி நிர்வாகிகளின் மனதில் இதனால் மாற்றம் நிகழுமா என்பது தெரிய இன்னும் சில மாதங்கள் ஆகும்!
பாஜக-வினர்போல, எங்களுக்கும் சித்து விளையாட்டு ஆடத் தெரியும் - அதிரடிகாட்டும் ஜெயக்குமார்
மகளிருக்கான உரிமைத்தொகையை, தகுதியானவர்களுக்கு மட்டும் கொடுப்பதுதானே நியாயம்?
தேர்தலின்போதே அப்படிச் சொல்லியிருந்தால் வரவேற்கலாம். ஆனால், ‘குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் கொடுப்போம்’ என்று சொல்லி, ஓட்டை வாங்கி, அதிகாரத்தைச் சுவைத்துவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், ‘தகுதியான தாய்மார்கள்’ என்று உருட்டுவதால்தான் எதிர்க்கிறோம். எல்லாத் திட்டங்களையும், தன் தந்தை கருணாநிதி பிறந்தநாளில்தானே ஸ்டாலின் தொடங்குவார்... இந்தத் திட்டத்தை மட்டும் அண்ணா பிறந்தநாளில் தொடங்கும்போதே தெரிய வேண்டாமா, இது வெறும் கண்துடைப்பு அறிவிப்பு என்று.
ஆனால், அரசின் வருவாய்ப் பற்றாக்குறையை 62,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாகக் குறைத்திருக்கிறார்களே?
நானும் நிதியமைச்சராக இருந்தவன்தான். தாலிக்குத் தங்கம், முதியோருக்கான உதவித்தொகை குறைப்பு, இலவச லேப்டாப் உள்ளிட்ட மக்கள் நலன் திட்டங்களையெல்லாம் முடக்கிவிட்டு, வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்துவிட்டதாக மார்தட்டுவது கேலிக்கூத்தானது. வேட்டையாடுவது எருமையை, இதிலென்ன பெருமை வேண்டியிருக்கு?
அ.தி.மு.க ஆட்சியில் கஜானாவைக் காலியாக்கிவிட்டுச் சென்றதே இத்தனைக்கும் காரணம் என்கிறார்களே?
1991, 2001, 2011 என தி.மு.க ஆட்சி முடியும்போதெல்லாம், களஞ்சியமும் காலி, கஜானாவும் காலி. அ.தி.மு.க ஆட்சியில்தான் கஜானாவை நிரப்புவோம். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொரோனா, வெள்ளம் போன்ற இடர்ப்பாடுகளால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. நாங்கள் ஒன்றும் தி.மு.க-வைப்போல ஊதாரித்தனமாகச் செலவு செய்யவில்லை.
ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட விவகாரத்தில், மசோதாவைத் திருப்பியனுப்பிய ஆளுநரை விமர்சிக்காமல், அரசை மட்டும் குறை சொல்வது நியாயமா?
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உறுதியாக, ஆணித்தரமாக தி.மு.க அரசு சொல்லவில்லை என்பதுதான் இங்கு பிரச்னை. ரம்மி விஷயத்தில் தி.மு.க அரசுதான் விளையாடுகிறது. நீட் விவகாரத்திலும் இதுதான் நடக்கிறது.
நீட் விலக்கு விவகாரத்தில் தொடர்ந்து சட்டப் போராட்டம் செய்வோம் என்று அரசு தெளிவாகக் கூறிவிட்டதே?
நீட் தேர்வை ரத்துசெய்யும் ரகசியம் எங்களுக்குத்தான் தெரியும்’ என்றுதானே உதயநிதி பிரசாரம் செய்து ஓட்டு வாங்கினார். இப்போது ‘உரிமைக்காகப் போராடுவோம், அதுதான் ரகசியம்’ என்று சொல்லி எங்களையே புல்லரிக்கவைத்துவிட்டார். அப்படி என்ன உரிமைக்காகப் போராடிக் கிழித்துவிட்டார்கள்... உதயநிதி ஒரு கத்துக்குட்டி, கைப்பிள்ளை என்பது இதிலிருந்தே தெரிகிறது. பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்ப்பதுபோல வெளியே காட்டிக்கொண்டு, தேர்தலுக்குப் பின்னர் ஆதரவு கொடுப்பதாக பிரதமரிடம் வாக்கு கொடுத்திருக்கிறார் உதயநிதி. இதைப்போல இரட்டை வேடதாரிகள் நாங்கள் இல்லை.
பிரதமர் மோடியைச் சந்தித்தாலே இரட்டை வேடமா... அப்படியே பார்த்தாலும், பிரதமர் மோடியை அதிகமாகச் சந்தித்தது அ.தி.மு.க-வினர்தானே?
எங்களுக்குள் வெளிப்படையான நட்புறவு இருக்கிறது. இவர்கள் வெளியில் பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்ப்பதுபோல காட்டிக்கொண்டு, திரைமறைவில் நெருக்கமாவது இரட்டை வேடம் இல்லையா?
பா.ஜ.க-வுடன் தி.மு.க நெருக்கம் காட்டுவதால், ‘எங்கே நமது தலைக்கு ஆபத்து வந்துவிடுமோ...’ என்று அச்சப்படுவதுபோல் தெரிகிறதே?
அப்படியெல்லாம் இல்லை. எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம்.
ஆனால், எடப்பாடியின் புகைப்படத்தை தமிழக பா.ஜ.க-வினர் எரிக்கும் அளவுக்கு கூட்டணிக்குள் பிரச்னை இருக்கிறது. அவர்கள் என்ன சொன்னாலும் அமைதியாகவே இருப்போம் என்ற நிலைக்கு அ.தி.மு.க வந்துவிட்டதோ?
இல்லை. எடப்பாடியின் பட எரிப்புக்கும், அம்மாவோடு அண்ணாமலை தன்னை ஒப்பிட்டுப் பேசியதற்கும் எங்களது கண்டனத்தைப் பதிவுசெய்தோம். ஆனால், படத்தை எரித்த நபரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, மறுநாளே சேர்த்துக்கொண்டார்கள். பா.ஜ.க-வினர்போல எங்களுக்கும் சித்து விளையாட்டு ஆடத் தெரியும். பூட்டிய அறைக்குள் கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை பேசியதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. பொதுவெளியில் பேசட்டும், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். எங்கள் காலை மிதித்தால், எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் பதிலுக்கு மிதிக்காமல் விட மாட்டோம்.
கடற்கரை மணலைக்கூட எண்ணிவிடலாம்போல, அ.தி.மு.க உட்கட்சி வழக்குகள் எத்தனை இருக்கிறதென்று தெரியவில்லையே?
எல்லாவற்றுக்குமே ஒரு முடிவு உண்டு. தலைமைக் கழக நிர்வாகிகள் முதல் கிளைக்கழகம் வரை எல்லோரும் ஒன்றுபட்டு, சட்டப்படி எடப்பாடியை ஒற்றைத் தலைமையாக தேர்வுசெய்திருக்கிறார்கள். ஓ.பி.எஸ் தலைமைலான ஒரு குழு, தி.மு.க-வுடன் கைகோத்துக்கொண்டு கட்சியை முடக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. ஏற்கெனவே பூஜ்ஜியமாகிப்போன ஓ.பி.எஸ்., தற்போது பூஜ்ஜியத்துக்கும் கீழே சென்றுகொண்டிருக்கிறார்.
சட்டவிதிகளைத் தளர்த்தினால், நானும் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்’ என்று பன்னீர் கூறியிருக்கிறாரே?
எப்படி... அவர் மட்டும் அவருக்கு ஓட்டுப்போட்டாலே, பொதுச்செயலாளராகிவிடலாம் என்று விதியை மாற்றச் சொல்கிறாரா... இன்றைய சூழலில் பொதுச்செயலாளர் தேர்தலில் நின்றாலும் படுதோல்விதான் என்பது அவருக்கே தெரியும்.
பன்னீரின் தாயார் மறைவுக்கு அரசியல் நாகரிகம் கருதி முதல்வர் ஸ்டாலின் துக்கம் விசாரிக்கிறார். இதில் உங்களுக்கு என்ன பிரச்னை?
துக்கம் விசாரிப்பதும், காபி கொடுப்பதும் நமது பண்பாடுதான். ஆனால், துக்கம் விசாரிக்க வந்த முதல்வர் ஸ்டாலினையும் உதயநிதியையும் இன்முகத்தோடு சிரித்து ஓ.பி.எஸ் வரவேற்கிறார். ரவுண்ட் டேபிள் போட்டு சிரித்துச் சிரித்து ஆலோசனை செய்கிறார்கள். அம்மா இருக்கும்போது இது போன்ற சம்பவம் நடக்குமா... ஓ.பி.எஸ் செய்ததை எந்தத் தொண்டனும் ஏற்கவில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
- Code:
பன்னீரின் தாயார் மறைவுக்கு அரசியல் நாகரிகம் கருதி முதல்வர் ஸ்டாலின் துக்கம் விசாரிக்கிறார். இதில் உங்களுக்கு என்ன பிரச்னை?
துக்கம் விசாரிப்பதும், காபி கொடுப்பதும் நமது பண்பாடுதான். ஆனால், துக்கம் விசாரிக்க வந்த முதல்வர் ஸ்டாலினையும் உதயநிதியையும் இன்முகத்தோடு சிரித்து ஓ.பி.எஸ் வரவேற்கிறார். ரவுண்ட் டேபிள் போட்டு சிரித்துச் சிரித்து ஆலோசனை செய்கிறார்கள். அம்மா இருக்கும்போது இது போன்ற சம்பவம் நடக்குமா... ஓ.பி.எஸ் செய்ததை எந்தத் தொண்டனும் ஏற்கவில்லை.
மறைந்தவர்கள் வீட்டிற்கு செல்லும் யாவருக்கும் அரை டம்பளராவது காபி கொடுப்பது நம் பண்பாடு.
குற்றம் ஒன்றே கண்டுபிடிப்பதில் குறியாய் இருப்பவர்களுக்கு இதெல்லாம் மறந்துவிடுமோ!
ஒரு அரசியல் தலைவர் வீட்டிற்கு மற்றொரு அரசியல் தலைவர் துக்கம் விசாரிக்க போகும் போது
இதைக்கூட செய்யமல் இருப்பது தமிழரின் பண்பாடு இல்லை.
ஏ .......குற்றம், இ -------ழும் குற்றம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அமித்ஷாவிடம் பேசியது என்ன? அண்ணாமலை சொன்ன தகவல்
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் 2 மணி நேரம் பேசினேன். அந்த வகையில், தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவிற்குத் தயாராக வேண்டும். அதுவே எங்கள் இலக்கு. இதைத்தான் அமித்ஷாவிடம் பேசினேன் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், பா.ஜ.க - அ.தி.மு.க. கூட்டணி என்பது இறுதியானது அல்லது உறுதியானது என்று இப்போது எதுவுமே கூறமுடியாது.
தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளது. அப்படி இருக்கையில், இப்போது தேர்தல் கூட்டணி குறித்தோ அல்லது போட்டியிடப்போகும் தொகுதிகள் குறித்து இறுதியான முடிவு எதுவும் எடுக்கமுடியாது.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அமித்ஷாவிடம் 2 மணி நேரம் பேசினேன். அந்த வகையில், நாங்கள் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவிற்குத் தயாராக வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. அதைநோக்கி சென்றுகொண்டுள்ளோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தூய்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என பா.ஜ.க. நினைக்கிறது. அதில் சிறிது பின்னடைவு இருந்தாலும் கவலையில்லை. இன்று நாம் செல்லும் அரசியல்பாதை 20 ஆண்டுகளுக்குப் பின்னர் சரிவராது. மேலும், தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெறுவதால் எந்தப் பயனும் இல்லை என்பது எனது கருத்து. நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் தூய்மையான அரசியலை கொண்டுவருவேன்.முன்னெடுப்பேன்.
திட்டமிட்டபடி வரும் 14-ம் தேதி தி.மு.கவினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றவர், சென்னையில், நான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். அவருடன் அரசியல் குறித்து ஏதும் பேசவில்லை' என்று விளக்கம் அளித்தார்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
வெறும் பேச்சு அழகிரி... வேதனையில் காங்கிரஸார்!
நீங்கள் குறிப்பிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு அப்போதே விளக்கம் கொடுத்துவிட்டேன். கடந்த வாரம்கூட கடலூர் தொகுதியில் 10 ஊர்களில் கொடி ஏற்றினோம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்றபோது, அவர்மீது பெரிய எதிர்பார்ப்பெல்லாம் எழவில்லை. ‘இருக்கிற கட்சியை டேமேஜ் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே போதும்’ என்கிற மனநிலையில்தான் டெல்லியே இருந்தது. ஆனால், “நிர்வாகிகள் கட்சியை டேமேஜ் செய்வது போதாதென தன் பங்குக்கும் கண்ணாடி வீட்டுக்குள் இருந்தபடி கற்களை வீசியெறிகிறார் கே.எஸ்.அழகிரி. சர்ச்சைப் பேச்சுகள், கேலிக்கூத்தான செயல்பாடுகள் என அவர் உடைத்த ஃபர்னிச்சர்கள் ஏராளம்” என விசும்புகிறார்கள் கதர்கள்.
நம்மிடம் பேசிய காங்கிரஸ் மாநிலச் செயலாளர்கள் சிலர், “பதவிக்காலம் முடிந்து எக்ஸ்டென்ஷனில் இருக்கும் அழகிரியின் சமீபகாலச் செயல்பாடுகள் ரொம்பவே அபத்தமாக இருக்கின்றன. தனது 71-வது பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், ‘சிறந்த படை இருந்தால்தான் போரிட முடியும். `இம்சை அரசன் 23-ம் புலிகேசி’யில் வருவதுபோல் வாள், கேடயம் இல்லாமல் போரிட முடியாது. கட்சியை பலப்படுத்த வேண்டும்’ என்றார். சொந்தக் கட்சியையே 23-ம் புலிகேசியுடன் ஒப்பிட்டு அவர் பேசியதை சீனியர்கள் ரசிக்கவில்லை. தவிர, ‘இத்தனை நாள்கள் கட்சித் தலைவர் பதவியில் இருந்தவர், கட்சியை பலப்படுத்தியிருக்கலாமே?’ என்கிற கேள்வியும் எழுந்தது.
சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் நேருவின் புகழ் பாடுவதாக நினைத்துக்கொண்டு, ‘இந்திய கலாசாரத்துக்குப் புறம்பான பழக்க வழக்கங்களில் நம்பிக்கைகொண்டவராக இருந்திருக்கிறார்’ என்ற பொருள்படும்படி பேசினார் அழகிரி. கூட்டத்திலிருந்து விஷ்ணு பிரசாத் எம்.பி உள்ளிட்டோர் கோபத்தோடு வெளியேறியதெல்லாம் நடந்தது.
தான் தொடங்கிய எதையும் முடித்ததாக அழகிரியிடம் வரலாறு இல்லை. ராகுல் காந்தி ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கியபோது, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 கொடிக் கம்பங்கள் வீதம், 23,400 கொடிக்கம்பங்கள் நடும் திட்டத்தைத் தொடங்கினார் அழகிரி. அந்தத் திட்டம் பாதியிலேயே நிற்கிறது. `ராகுல் காந்தியின் நடைப்பயணம் குறித்து பரப்புரை இயக்கம் நடத்தப்படும்’ என்றார். ஓரிரு இடங்களோடு அதுவும் சுருண்டுவிட்டது. கட்சியை பலப்படுத்த, ‘மாபெரும் தொண்டர்கள் சந்திப்புக் கூட்டம்’ நடத்தப்படும் என அறிவித்தார். அதுவும் அறிவிப்போடு நின்றுவிட்டது. அழகிரியிடம் வெறும் பேச்சு மட்டும்தான் இருக்கிறதே தவிர, செயல்பாடுகள் எதுவும் இல்லை” என்றனர் வேதனையுடன்.
இது குறித்து கே.எஸ்.அழகிரியிடமே விளக்கம் கேட்டோம். “நீங்கள் குறிப்பிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு அப்போதே விளக்கம் கொடுத்துவிட்டேன். கடந்த வாரம்கூட கடலூர் தொகுதியில் 10 ஊர்களில் கொடி ஏற்றினோம். பல மாவட்டங்களில் தொண்டர் சந்திப்பு கூட்டமும் நடந்துவருகிறது. பேசுவது மட்டுமல்ல, கட்சி வேலைகளிலும் கவனம் செலுத்தவே செய்கிறேன்” என்றார்.
‘உள்ளே பகை.. வெளியே நட்பு...’ எங்கே போய் முடியும் அ.தி.மு.க - பா.ஜ.க முரண்பாடு?
அம்மாவின் மறைவுக்குப் பிறகு, ஆட்சியைத் தக்கவைக்க மத்திய பா.ஜ.க அரசின் உதவி தேவைப்பட்டது. எனவே, அவர்களுடன் கூட்டணி வைத்தது சரிதான்.
தங்கள் அணியை, ‘இயற்கைக் கூட்டணி’ என்று வர்ணித்த அ.தி.மு.க - பா.ஜ.க தலைவர்களும் நிர்வாகிகளும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால், ‘செயற்கைச் சிரிப்போடு’தான் கடந்து செல்கிறார்கள். `உள்ளே இவ்வளவு பகையை வைத்துக்கொண்டு, இந்தக் கூட்டணி எத்தனை காலம் நீடிக்குமோ தெரியவில்லை’ என்று அடுத்தகட்ட தலைவர்கள் புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
கூட்டணிக்குள் உரசல்!
1999-ல் முஸ்லிம் இளைஞர் இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ஜெயலலிதா, “முஸ்லிம் சகோதரர்களுக்கு நான் ஓர் உத்தரவாதம் தருகிறேன். செய்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு உண்டு. அந்தத் தவறுக்குப் பரிகாரமாக, பா.ஜ.க ஆட்சியைக் கவிழ்த்தேன். இனி ஒருபோதும் அ.தி.மு.க., பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது. கடைசிவரை முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பேன்’’ என்றார். அதை உயிருள்ளவரை காப்பாற்றவும் செய்தார். ஆனால், 2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியையும் ஆட்சியையும் தக்கவைத்துக்கொள்வதற்காக பா.ஜ.க-வை ஆதரிக்கும் நிலைக்கு அ.தி.மு.க தலைவர்கள் வந்தார்கள்.
2019 மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க., பா.ஜ.க-வுடன் அதிகாரபூர்வமாகக் கூட்டணி வைத்தது. மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் ஓரிடத்திலும், இடைத்தேர்தலில் 22 சட்டமன்றத் தொகுதிகளில் 9 இடங்களிலும் மட்டுமே அ.தி.மு.க வென்றது. அடுத்து நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆட்சியையே இழந்தது அ.தி.மு.க. “பா.ஜ.க கூட்டணியால்தான் தோற்றோம்” என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்ல, பதிலுக்கு பா.ஜ.க-வின் அன்றைய நிர்வாகி கே.டி.ராகவனும் அதே குற்றச்சாட்டைச் சொன்னார். அன்று தொடங்கிய உரசல், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்துப்போட்டியிடும் அளவுக்கு வளர்ந்தது. பா.ஜ.க மாநில நிர்வாகி நிர்மல் குமாரை அ.தி.மு.க தங்கள் பக்கம் இழுத்தபிறகு, வெளிப்படையாகவே இரு கட்சிகளும் மோதிக்கொண்டன. இப்போது அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்பதை அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியாலேயே உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்குப் பிரச்னை முற்றியிருக்கிறது.
என்ன பிரச்னை?
இந்தப் பிரச்னை குறித்து அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “அம்மாவின் மறைவுக்குப் பிறகு, ஆட்சியைத் தக்கவைக்க மத்திய பா.ஜ.க அரசின் உதவி தேவைப்பட்டது. எனவே, அவர்களுடன் கூட்டணி வைத்தது சரிதான். ஆனால், அந்த உறவை 2021 சட்டமன்றத் தேர்தலின்போது முறித்திருக்க வேண்டும். இரட்டைத் தலைமை இருந்ததால், இந்த விஷயத்தில் துணிச்சலான முடிவெடுக்க முடியாமல் போனது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பா.ஜ.க தனித்துப்போட்டியிட்டது. அப்போது, ‘இனி நமக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்றே தலைமை எங்களிடம் கூறியது. நாங்களும் கீழ்மட்ட நிர்வாகிகளிடம் அப்படித்தான் சொன்னோம். ஆனால், கூட்டணி குறித்து ஏதாவது சர்ச்சை எழும்போதெல்லாம் மௌனம் காத்துவந்த எடப்பாடி, அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகாவது இதற்கொரு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால், `மத்தியில் இருப்பவர்கள்தான் கூட்டணியை இறுதிசெய்பவர்கள். மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல’ என்று பட்டும் படாமல் பேசியிருக்கிறார் எடப்பாடி. இது எங்கள் கட்சியின் நிர்வாகிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
`வரும் தேர்தலுக்குள் என்ன வேண்டுமானாலும் மாறலாம்’ என்று கூட்டணி குறித்து அண்ணாமலை ‘க்’ வைத்துப் பேசும்போது, ‘நாங்கள் இன்னும் கூட்டணியில்தான் இருக்கிறோம்’ என்று அ.தி.மு.க தலைமை கூறுவதை, தொண்டர்கள் ரசிக்கவில்லை. அம்மா குறித்த அண்ணாமலையின் சர்ச்சைக் கருத்துகள், எடப்பாடியின் படத்தை எரித்தவர்களைக் கட்சியில் மீண்டும் சேர்த்தது இவையெல்லாம் பா.ஜ.க தேசியத் தலைமைக்கு தெரியாமலா இருக்கும்... நிலைமை இப்படியிருக்க, ‘கூட்டணி குறித்து மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்று சொல்லும் எடப்பாடி, அந்த அளவுக்கு தேசிய பா.ஜ.க தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பது உண்மையென்றால், அண்ணாமலைக்கு எதிராகப் புகார் கொடுத்து அவரது துடுக்குத்தனத்தை அடக்கியிருக்கலாம்தானே... அதையும் செய்யாமல், அவருக்குத் தக்க பதிலடியும் கொடுக்காமல் இருப்பது தலைமைக்கு அழகல்ல.
தனிப்பட்ட முறையில் தலைமையுடன் பேசும்போதெல்லாம், ‘பா.ஜ.க-வை எப்படியும் கழற்றிவிட்டுவிடலாம்’ என்றே சொல்கிறார். அதனால்தான் எங்கள் ஐடி பிரிவில் இருக்கும் நிர்வாகிகள் சிலர் பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசுகிறார்கள். ஆனால் பொதுவெளியில், `கூட்டணியில்தான் இருக்கிறோம்’ என்று தலைமையே பேசுவதை நாங்கள் எப்படிப் புரிந்து கொள்வது... தமிழ்நாட்டில் தி.மு.க அரசு நிறைய தவறுகளைச் செய்கிறது. ஆனால், அவற்றைப் பற்றியெல்லாம் பேசினால், ‘அடிமை அ.தி.மு.க’ என்ற ஒற்றை வார்த்தையால் மடக்கிவிடுகிறார்கள். இதே நிலை நீடித்தால், அ.தி.மு.க-வால் தமிழ்நாட்டில் அரசியலே செய்ய முடியாது. பா.ஜ.க-வுடன் உறவா, பகையா என்பதை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக முடிவெடுத்தே ஆக வேண்டும்” என்றனர் ஆற்றாமையுடன்.
அ.தி.மு.க-வின் அச்சம்தான் பா.ஜ.க-வின் முதலீடு!
அ.தி.மு.க-வுடனான கூட்டணி விவகாரத்தில் தேசியத் தலைமைக்கும், மாநிலத் தலைமைக்கும் இருக்கும் மாறுபட்ட கருத்து குறித்து பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் குறிப்பிட்ட தொகுதிகளைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதற்கான முன்னெடுப்புகளைத்தான் தேசியத் தலைமை செய்கிறது. கொங்குப் பகுதியில் சில தொகுதிகள், ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட ஒன்பது தொகுதிகளைத் தேர்வுசெய்து வேலையை ஆரம்பித்திருக்கிறோம். அதேநேரத்தில், தமிழக பா.ஜ.க-வுக்கென சில முக்கியப் பணிகளையும் டெல்லி தலைமை கொடுத்திருக்கிறது. அதன்படிதான் அண்ணாமலை நடக்கிறார். ஆனால், நேரடியாகத் தலைவர் பொறுப்புக்கு வந்தவர் என்பதால், ஆர்வத்தில் ஏதாவது பேசிவிடுகிறார்.
அவர் பேசுவதிலும் சில நன்மைகள் இருக்கின்றன என்று டெல்லி கருதுகிறது. ஏனென்றால், அ.தி.மு.க பலவீனமாக இருக்கிறதென்று மக்கள் நினைத்தாலே அது பா.ஜ.க-வுக்கு பலமாக மாறிவிடும்.
அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டும்தான். தி.மு.க எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் பல முரண்பாடுகளோடு இணைந்து பயணிக்கிறோம். கொள்கைரீதியாக ஒன்றிணைந்திருக்கும் தி.மு.க கூட்டணியிலேயே பல பிரச்னைகள் இருக்கும்போது, தேர்தலுக்கான கூட்டணியில் பிரச்னை இருக்கத்தானே செய்யும்... ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க-வை பிரசாரமே செய்யவிடாமல் அ.தி.மு.க தடுத்ததே... நாங்கள் ஏதாவது சொன்னோமா... அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சியான அ.தி.மு.க வெற்றிபெற, தேசிய முகமான பிரதமர் வேட்பாளர் தேவை. அதை பா.ஜ.க-வால்தான் கொடுக்க முடியும். அதனால், எங்கள் இழுப்புக்கு அ.தி.மு.க வந்துதான் ஆக வேண்டும். தட்ட வேண்டிய இடத்தில் தட்டி, அரவணைக்க வேண்டிய இடத்தில் அரவணைப்பதுதான் அரசியல். அதை நாங்கள் சரியாகத்தான் செய்கிறோம்” என்றனர் விவகாரமாக.
இது குறித்து பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணனிடம் கேட்டபோது, “அ.தி.மு.க - பா.ஜ.க இரு கட்சிகளுக்கும் தனித்த அடையாளம் இருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், பா.ஜ.க-வின் உதவியால்தான் எடப்பாடி நான்கு ஆண்டுகள் ஆட்சியைச் சமாளிக்க முடிந்தது. அவர்கள் உதவி இல்லாமல் ஓராண்டுகூட ஆட்சி நடத்தியிருக்க முடியாது. எனவே, ‘நம் உதவியோடு ஆட்சி நடத்திய எடப்பாடி, தங்களுக்குக் கட்டுப்பட்டு, சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும்’ என்று பா.ஜ.க எதிர்பார்க்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பிளவுபட்ட அ.தி.மு.க-வை ஒன்றுபடுத்தும் வேளையில் அமித் ஷா இறங்கினார். அது எடப்பாடிக்குப் பிடிக்கவில்லை. யாரும் இல்லாமல் வெற்றிபெற்றுக் காட்டுகிறேன் என்று எடப்பாடி சொன்னதைக் கேட்கும் இடத்தில்தான் அன்று பா.ஜ.க-வும் இருந்தது. ஆனால், தற்போதும் அதே மனநிலையில் எடப்பாடி இருப்பதை பா.ஜ.க ரசிக்கவில்லை. இதில் பா.ஜ.க-வின் சுயநலமும் இருக்கிறது. அதனால்தான், இந்த உரசல், வார்த்தைப்போர்கள் வெடிக்கின்றன. வாக்கு அரசியலுக்காக பா.ஜ.க-வைக் கழற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் எடப்பாடிக்கு இருக்கிறது. ஆனால், அதை அமல்படுத்துவதற்கான துணிச்சல் அவருக்கு இன்னும் வரவில்லை. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க-வும், அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க-வும் வேண்டும் என்ற சுயநலக் கணக்கு இருவருக்கும் இருக்கிறது. இதில் பா.ஜ.க-வுக்குதான் அதிக லாபம் இருப்பதால், அவர்கள் இறங்கி வருவார்கள். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உடையாத வரை, அ.தி.மு.க., பா.ஜ.க-வுக்கு வேறு நாதியில்லை. சட்டமன்றத் தேர்தலில் இந்த நிலைமை மாறும். அதுவரை பா.ஜ.க-வை நேரடியாக எடப்பாடி பகைத்துக்கொள்ள மாட்டார்” என்றார் விரிவாக!
5 மாவட்டங்களுக்குப் புதிய பார்வையாளர்கள் : தமிழக பா.ஜ.க. தலைவர் அறிவிப்பு
தமிழகத்தில் செங்கல்பட்டு தெற்கு, தருமபுரி, சேலம் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யும் பணி டெல்லியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக, தமிழக பா.ஜ.க. தலைவரும், கர்நாடகா தேர்தல் இணைப் பொறுப்பாளருமான அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அங்கு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால், சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்ற விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இந்த நிலையில், இந்த அறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழகத்தில் தருமபுரி, சேலம் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, ராமநாதபுரம், செங்கல்பட்டு தெற்கு ஆகிய 5 மாவட்டங்களுக்குப் புதிய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பார்வையாளராக எம்.ரவி, சேலம் மேற்கு பார்வையாளராக ஆர்.கே.வரதராஜன், தருமபுரி மாவட்ட பார்வையாளராக கே.முனியராஜ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பார்வையாளராக கே.வெங்கடேசன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பார்வையாளராக கே.முரளிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.
- Sponsored content
Page 10 of 13 • 1, 2, 3 ... 9, 10, 11, 12, 13
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்