by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
தமிழக அரசியல் செய்திகள்
Page 9 of 13 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.
அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சீமானுக்கு திமுகவின் வரலாறு தெரியுமா? - கொதிக்கும் திமுக தொண்டர்
சென்னை மெரினா கடற்கரையில் வங்கக்கடலில் கலைஞரின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கடற்கரை ஓரம் அமைக்கப்படுவதால் இந்திய ஒன்றிய அரசின் கடற்கரை ஓர பாதுகாப்பு அமைப்பு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் ஜனவரி 31 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் பலதரப்பினரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, பேனா சின்னத்தை வைத்தால் நானே உடைப்பேன் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. சீமான் இந்த பேச்சு திமுகவினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் திமுகவினர், திமுக ஆதரவாளர்கள் சீமானின் பேச்சுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீமானுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு காலத்தில் சர்வாதிகாரம் நடத்திய எம்.ஜி.ஆர் ஆட்சியில் அவரையே எதிர்த்தவர்கள் நாங்கள் என்கின்றனர் திமுகவினர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ஆர்.எம்.வீரப்பன் இருந்தார். திருச்செந்தூர் முருகர் கோவிலில் இருந்த வைரவேல் காணாமல் போனது. இதனை கண்டுபிடித்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளராக இருந்த சுப்பிரமணிய பிள்ளை மர்மமான முறையில் மரணமடைகிறார். இந்த மர்ம மரணத்துக்கு பின்னால் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்க்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள் என கலைஞர் குற்றம்சாட்டினார். இதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பால் நியமிக்கப்பட்டார். அவரின் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினார். அந்த அறிக்கையை அரசு வெளியிடவில்லை. 1984 நவம்பர் 24 ஆம் தேதி பால் கமிஷன் அறிக்கையை எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் வெளியிட்டார்.
அரசின் அறிக்கையை வெளியிட்டதற்காக எம்.ஜி.ஆர் காவல்துறையை ஏவினார். கலைஞரை கைது செய்ய கோபாலபுரத்துக்கு சென்னை காவல் ஆணையர் தலைமையில் போலீஸ் படை வந்தது. என் தலைவனை கைது செய்வீர்களா என கோபமான திமுகவினர் காவல் ஆணையர் காரை தீ வைத்து எரித்தனர். போலீஸ் தடியடி நடத்தி திமுகவினரை கலைத்து கலைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
பிரதமராக இருந்த இந்திராகாந்தி படுகொலையால் பிரதமரான ராஜிவ்காந்தி நாடாளுமன்றத்தை கலைக்கச் செய்தார். மக்கள் இந்திராகாந்தி படுகொலையால் அனுதாபத்தில் இருந்தனர். அப்போது தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி. உடல்நலக்குறைவால் அமெரிக்கா ப்ரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். காங்கிரசுடன் அதிமுக கூட்டணியில் இருந்தது. மக்களின் அனுதாபத்தை ஓட்டாக்க நினைத்து சட்டமன்றத்தை கலைக்கச் செய்தது அதிமுக. காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு அதிமுக நாடாளுமன்றத்தோடு சட்டமன்றத்துக்கும் தேர்தலைச் சந்தித்தது. நோவுக்கு ஒரு ஓட்டு, சாவுக்கு ஒரு ஓட்டு என மக்களிடம் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றது. பெரிய மெஜாரிட்டி இருக்கிறது என தலை கால் புரியாத நிலையில் எம்.ஜி.ஆர் ஆட்சி செய்தார்.
அப்போது, அரசினர் தோட்டத்தில் கட்சிகளுக்கு அரசே அலுவலகம் ஒதுக்கி தந்து இருந்தது. எதிர்க்கட்சி என்பதால் பெரிய அலுவலகக் கட்டிடம் திமுகவுக்கு தரப்பட்டிருந்தது. தேர்தலில் திமுக தோற்று திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருந்ததால் அரசினர் தோட்டத்தில் திமுகவுக்கு தந்திருந்த அலுவலகத்தை காலி செய்யச் சொல்லியதோடு ஒற்றை அறை கொண்ட ஒரு கட்டடத்தை ஒதுக்கினார் எம்.ஜி.ஆர். காலி செய்ய முடியாது என எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் அறிவித்தார். இரவோடு இரவாக திமுக அலுவலகத்தில் இருந்த கலைஞரை போலீஸை வைத்து தூக்கி வெளியே எரிந்தார் எம்.ஜி.ஆர். இந்த சம்பவமே அண்ணா அறிவாலயம் கட்டக் காரணமானது. இதில் கோபமான திமுக மாணவர் அணியினர் தன்னிச்சையாக களத்தில் இறங்கி திமுக தலைவரை வெளியேற்றிய அந்த அலுவலகம் யாருக்கும் பயன்படக்கூடாது என தீவைத்து எரித்தார்கள்.
இந்தியாவில் ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. வி.பி.சிங் பிரதமராக இருந்தார். ஜனதா தளத்தோடு கூட்டணியில் திமுக இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சராக தலைவர் கலைஞர் இருந்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வாழப்பாடி ராமமூர்த்தி இருந்தார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இனியன் சம்பத் இருந்தார். ஜனதா ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் பாரத் பந்த் நடத்தியது. இனியன் சம்பத் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலையின் கீழே கலைஞரின் உருவபொம்மையை கொண்டு போய் எரிக்க முயன்றார்கள். அன்று பந்த் என்பதால் சென்னையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பச்சையப்பன் கல்லூரி விடுதி மாணவர்கள் சாப்பிடுவதற்காக ரெகுலராக வரும் ஹோட்டலுக்கு வந்தனர். அப்போது மாணவர் பட்டாளம் கலைஞரின் உருவபொம்மை எரிப்பதை பார்த்துவிட்டு இனியன் சம்பத் குழு மீது தன்னிச்சையாக தாக்குதல் நடத்தினர். போலீஸார் மாணவர்களிடமிருந்து இனியன் சம்பத்தை மீட்டனர். தனது மனைவி டெய்சி ராணியோடு திருவல்லிக்கேணி இ1 காவல்நிலையத்தில் போய் புகார் தந்தார் இனியன். காவல்நிலையத்துக்குள்ளும் புகுந்து அவரை மாணவர் பட்டாளம் தாக்கியது.
இதுவெல்லாம் திமுக தொண்டர்களின் கடந்த கால வரலாறு. தலைமையை வரைமுறையில்லாமல் நாக்கில் நரம்பில்லாமல் பேசும்போதும், கட்சியை அவமானப்படுத்தினாலும் திமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தனர். இப்போது திமுக தொண்டர்கள் அமைதியான முறையில் சாத்வீக முறையில் நடந்து கொள்வதால்தான் இப்படி சீமானெல்லாம் மறைந்த எங்கள் தலைவரை அவமானப்படுத்தி பேசுகிறார் என வேதனையுடன் கொதிக்கிறார்கள் மூத்த கழக முன்னோடியினர்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
இரட்டை இலை சின்னம்! உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்!!
இரட்டை இலை சின்னத்தை அளிக்கக்கோரி தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி தரப்போ, ஓ. பன்னீர்செல்வம் தரப்போ அணுகவில்லை என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமது கையெழுத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தொடர்ந்த இந்த இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த பதில்களாவன, இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தை யாரும் அணுகவில்லை. கையெழுத்திட அதிகாரமுள்ளவர் என தேர்தல் ஆணைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டவர் கையெழுத்துள்ள வேட்புமனுவையே ஏற்க முடியும்.
ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ தேர்தல் ஆணையத்தின் பணிகள் கிடையாது. வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வதும், தேர்தல் பணிகளை கண்காணிப்பது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி.
ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்.
இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையிலுள்ளதால், கடந்த ஜூலை பொதுக்குழு விதிமாற்றங்களை கருத்தில் கொள்வதில்லை. பொதுக்குழு முடிவுகளையும் அங்கீகரிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை பற்றி தி.மு.க., பேசலாமா? அண்ணாமலை கேள்வி
'அரசையோ, முதல்வரையோ விமர்சித்தால், கைது நடவடிக்கை மேற்கொள்ளும் தி.மு.க.,வுக்கு, ஜனநாயகத்தை பற்றி பேச தகுதி இருக்கிறதா' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை
டில்லியில் ஆம்ஆத்மி அரசு, 2021 நவம்பரில் அறிவித்த, புதிய மதுபான கொள்கை முறைகேடு காரணமாக, அம்மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபான கொள்கை அடிப்படையில், 800க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது.
டில்லி அரசின் தலைமை செயலர், மதுபான கொள்கை குறித்து, அம்மாநில முதல்வர், மேயர், துணை நிலை கவர்னருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். அதை விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு, கவர்னர் உத்தரவிட்டார். லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கையில், 'மதுபான உரிமதாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டன. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது' என்பது உட்பட, பல சாராம்சங்கள் இருந்தன.
மனிஷ் சிசோடியா விதிகளை மீறி, பல நிறுவனங்களுக்கு உரிமங்களை கொடுத்ததாகவும், அதற்காக கோவா, பஞ்சாப் மாநில தேர்தல் செலவுக்கு, பல நுாறு கோடி ரூபாயை ஆம்ஆத்மி கட்சி பெற்றதாகவும், லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தது.
அதை அடிப்படையாக வைத்து, சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்து விசாரணையை துவக்கியது. அதில் கிடைத்த பல்வேறு ஆதாரம் அடிப்படையில், மனிஷ் சிசோடியா உட்பட, 15 பேர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
டில்லி அரசில் இத்தனை முறைகேடுகள் நடந்திருக்க, மனிஷ் சிசோடியா கைதை, 'ஜனநாயக விரோதம், சட்ட விரோதம்' என்று விமர்சனம் செய்திருக்கிறார், தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு.
எப்போது எல்லாம் நாட்டில் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ, உடனே தி.மு.க.,வினருக்கு, அக்கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள், வாரிசுகள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகளும், அமலாக்க துறை வழக்குகளும் ஞாபகத்துக்கு வரும். தி.மு.க, அமைச்சர்களும், எம்.பி.,க்களும் அமலாக்கத் துறை விசாரணைக்கு சென்று வருவது, மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். டி.ஆர்.பாலுவுக்கு தெரியாமல் இருக்குமா?
நாளை, அவரது கட்சியிலும் யாராவது கைதாகும் நிலை வந்தால், மற்ற கட்சிகளின் ஆதரவு வேண்டுமே என்று, பெயருக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.தி.மு.க., அரசையோ, முதல்வரையோ, சமூக வலைதளங்களில் விமர்சித்தால், கைது நடவடிக்கை மேற்கொள்ளும் தி.மு.க.,வுக்கு, ஜனநாயகத்தை பற்றி எல்லாம் பேச தகுதி இருக்கிறதா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதிமுகவில் பிரிந்திருப்போரை சேர்ப்பது எங்கள் வேலை அல்ல: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
திருச்சி: அதிமுகவில் பிரிந்திருப்போரை சேர்ப்பது எங்கள் வேலை அல்ல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிற கட்சியின் பிரச்சனைகளில் தலையிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்கு பதியாத காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! |
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தாத காவல்துறை அதிகாரிகள் மேல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனு மீது, சென்னை குற்றப்பிரிவு காவல்துறையின் வேலை மோசடி பிரிவு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. |
கடந்த 2011 - 2015 வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதனடிப்படையில் செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்துவிட்டதாக கூறியதையும், சமரசமாக போக விரும்புவதாகவும் கூறியதை ஏற்று நால்வர் மீதான வழக்கையும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் செந்தில்பாலாஜி, அவரது அண்ணன் அசோக்குமார் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை எனவும் தெரிவித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி பொறியாளர் தர்மராஜ் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வழங்க முன்னாள் அமைச்சர் முடிவெடுத்ததன் காரணமாக தகுதியான மாணவர்கள் பணியில் சேர முடியவில்லை. எங்களது மதிப்பெண் குறைத்து காட்டப்பட்டது” என குற்றம் சாட்டப்பட்டது
இந்த மனு பல கட்டங்களாக விசாரிக்கப்பட்டு, “சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது” என்று கூறி பண மோசடி தொடர்பான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். மேலும் இந்த முறைகேடு தொடர்பான வழக்கு மீண்டும் தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரிக்கவும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் உத்தரவிடப்பட்டது.
ஆனால் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதியாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் வழக்கு பதியாத சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில் கார்த்திகை ராஜன் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு, நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிடவேண்டும்” என கோரப்பட்டது.
இதனைதொடர்ந்து நீதிபதிகள், அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனு மீது, பதிலளிக்க சென்னை சென்னை குற்றப்பிரிவு காவல்துறையின் வேலை மோசடி பிரிவு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை உதவி ஆணையர் சுரேந்திரன், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர்கள் ரெஜினா மற்றும் கலாராணி ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.
பாஜகவில் இருந்து விலகிய சி.டி.ஆர் நிர்மல் குமார்- தலைமை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். தனது விலகல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாஜக தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் வைத்துள்ளார்.
சிடிஆர். நிர்மல்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து, இன்று நான் பா.ஜ.க-வின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பா.ஜ.க தலைமை தொண்டர்களையும், கட்சியையும், செருப்பாகப் பயன்படுத்தி, கட்சியைப் பற்றி துளியும் சிந்திக்காது, சொந்தக் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதைப் போன்ற அல்பத்தனம், எதுவும் இல்லை. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி, இடத்துக்கு ஏற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையைப் பார்த்து, ஒவ்வொரு நாளும் வேதனையடைந்ததுதான் மிச்சம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ஓர் அமைச்சருடன் கடுமையான சட்டப் போராட்டம் நடத்திவரும் நிலையில், அந்த அமைச்சரை வெளியில் வீரவேசமாக பேசிவிட்டு, திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்.
தன்னை நம்பி இருக்கும் தொண்டர்களையும், கட்சியையும் ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை எப்படி நம்பி பயணிக்க முடியும்?" என தமிழக பாஜக தலைமைக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகியதையடுத்து, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து அக்கட்சியின் உறுப்பினராகவும் சிடிஆர். நிர்மல்குமார் இணைந்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகியது தொடர்பாக நிர்மல்குமார் கருத்தை அறிய பிபிசி தமிழ் தொடர்புகொண்டபோது, `இந்த விவகாரம் தொடர்பாக தற்போது எதையும் விரிவாக பேசுவதை தவிர்க்கிறேன். கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காகவே அறிக்கை வெளியிட்டேன்` என்று முடித்துகொண்டார்.
பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை வந்தபிறகு அக்கட்சியினர் நெருக்கடியான சுழலை எதிர்கொள்கின்றனர் என இந்நிகழ்வு குறித்து மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் கூறுகிறார். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், `அண்ணாமலை தலைவரான பிறகு அவரை சுற்றி ஒரு கும்பலை உருவாக்கியுள்ளார். அந்த கும்பலின் பிடியில் அவர் இருக்கிறாரா அல்லது அந்த கும்பலை அவர் நிர்வகிக்கிறாரா என்பது தெரியவில்லை. சிடிஆர் நிர்மல்குமார், காயத்ரி ரகுராம் விலகல், திருச்சி சிவா- டெய்சி இடையேயான உரையாடல் தொடர்பான ஆடியோ ஆகியவற்றையெல்லாம் பார்க்கும்போது அண்ணாமலையை சுற்றி ஒரு அணி இருப்பதாகவே தோன்றுகிறது` என்றார்.
"ஒரு தோழமை கட்சியைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு தோழமை கட்சியில் சேர்வதை பொதுவாக ஏற்கமாட்டார்கள். தற்போது, பாஜகவிற்கு எதிரானவர் தாங்கள் என்ற தோற்றத்தை கொடுப்பதற்காக எடப்பாடி பழனிசாமி சிடிஆர். நிர்மல்குமாரை கட்சியில் சேர்த்துகொண்டிருக்கலாம். பாஜகவில் இருந்து தாங்கள் விலகியே இருக்கிறோம். தனித்து இயங்குகிறோம் என்ற தோற்றத்தை கொடுப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியில் சேர்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால், எடப்பாடி பழனிசாமியையும் பாஜகவை பிரிக்க முடியாது," என்று குறிப்பிட்டார்.
"தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக அக்கட்சியினர் விமர்சனத்தை வைக்கின்றனர். இந்த விவகாரத்தில் பாஜக மத்திய தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன். இதேபோல், தொடர்ந்து பலரும் கட்சியில் இருந்து விலகினால், தேர்தலில் நிச்சயம் அது எதிரொலிக்கும்" என்றார்.
இந்நிலையில், நிர்மல்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, எங்கு சென்றாலும் அவரது பணி சிறக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
'எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்: அதிமுகவில் இணைந்த நிர்மல்குமாருக்கு அண்ணாமலை வாழ்த்து..!
தமிழக பாஜகவில் இருந்து விலகிய நிர்மல் குமார் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததை அடுத்து எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்
தமிழக பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக நிர்மல் குமார் தெரிவித்த நிலையில் அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை கூறி இருப்பதாவது
“ அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகிய போதும் அவர் எங்கு சென்றாலும் நன்றாக இருக்க தனது வாழ்த்துக்கள் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜக வில் இருந்த பிரமுகர் ஒவ்வொருவராக விலகிக் கொண்டிருப்பது அக்கட்சிக்கு பின்னடைவு என்ற கருதப்படுகிறது.
'மதுரை சம்பவத்துக்கு வழிப்பறி பிரிவில் வழக்கா?' - கொதிக்கும் அ.தி.மு.க
மதுரை விமான நிலைய விவகாரத்தில் இபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு விமானத்தில் சென்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்திற்கு வெளியே வருவதற்காக விமான நிலைய வளாகத்தில் பேருந்தில் காத்திருந்த போது, அதே விமான விமானத்தில் பயணம் செய்த அமமுக நிர்வாகி ‘துரோகியுடன் பயணம் செய்கிறேன்’என்று பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார். மேலும் விமான நிலைய பேருந்தில் இபிஎஸ் காத்திருந்த போது ’சின்னம்மாவிற்கு துரோகம் செய்த எடப்பாடியார்’ என கோஷங்களை எழுப்பினார். இதைக்கண்ட இபிஎஸின் பாதுகாப்பு அதிகாரி அமமுக நிர்வாகி, செல்போனில் வீடியோ எடுப்பதை தடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து விமான நிலையத்திற்கு வெளியே இருந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் அமமுக நிர்வாகியை கடுமையாக தாக்கும் வீடியோ வெளியானது.
இதுகுறித்து அமமுக நிர்வாகி மாதேஸ்வரன் கொடுத்த புகாரில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணன் உள்ளிடோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று( மார்ச்13ம் தேதி) அதிமுக சார்பில் மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதேபோல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் எம்.பி ஜெயவர்தன் தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் இபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்ததைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான இன்பதுரை, ”இதே முதலமைச்சர் ஸ்டாலின் மெட்ரோவில் பயணம் செய்த போது ஒருவர் செல்பி எடுக்க வந்தார். அவரை ஸ்டாலின் கன்னத்தில் அறைந்தார். ஆனால் இபிஎஸ் தன்னை வீடியோ எடுப்பதையும், அவதூறாக பேசுவதையும் வேண்டாம் என கையை காட்டி நாகரிகமான முறையில் தடுத்துள்ளார். அதனையும் மீறி வீடியோ எடுப்பதை கண்டு பாதுகாப்பு அதிகாரி சும்மா இருந்தால் என்ன பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்று நாங்கள் கேள்வி எழுப்புவோம். ஆகையால் பாதுகாப்பு அதிகாரி செல்போனில் வீடியோ எடுப்பதை தடுத்துள்ளார். இதற்கு அவர் மீது வழிப்பறி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவை கண்டிக்கத்தக்கது. இச்சம்பவம் மக்கள் மன்றத்திற்கும், நீதிமன்றத்திற்கும் எடுத்துச் செல்வோம். மேலும் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிரொலிக்கும்” என்று தெரிவித்தார்.
”ராஜினாமா பண்ணிடுவேன்” - அண்ணாமலை பேச்சும் அதிமுக தலைவர்களின் ரியாக்ஷனும்! - தொகுப்பு |
அதிமுக உடனான கூட்டணி நிலைப்பாட்டை முன்னெடுத்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தொண்டனாக பணியாற்றுவேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாக வந்த தகவல்தான் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை தொற்ற வைத்திருக்கிறது.
நாராயணன் திருப்பதி |
இருப்பினும், “நல்ல திரைக்கதை, வசனத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். எங்களுடைய கட்சியில், 4 சுவரில் நடக்கக்கூடிய விஷயத்தை இட்டுக்கட்டி வேண்டுமென்றே பரப்பியிருக்கிறார்கள். இது தவறானது. இது முற்றிலும் எங்களுடைய உட்கட்சி விவகாரம். நாங்கள் பேசாததை சித்தரித்து பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம்.” என தமிழ்நாடு பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இந்த விவகாரத்தில் விளக்கமும், மறுப்பும் தெரிவித்திருந்தார்.
”அது அவரது சொந்த கருத்து..” - நயினார் நாகேந்திரன் |
இப்படி இருக்கையில், “அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. கூட்டணி குறித்து பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுதான் இறுதியானதாக இருக்கும்” என திருநெல்வேலியில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் அதில், “தமிழகத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி இதுவரை அதிமுகவுடனும், திமுகவுடனும் கூட்டணியிட்டு தேர்தல்களை சந்தித்துள்ளது. எனவே கூட்டணி முடிவுகள் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்வது தான் இறுதியாக இருக்கும். கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து.
கருத்து சொல்வதற்கு அவருக்கு தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. அதிமுகவின் ஆதி ராஜாராம் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. அது அவரது சுதந்திரம். மற்றவர்களை கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டிய தேவையில்லை. அதிமுக, திமுக, காங்கிரஸ் என எந்த ஒரு கட்சியிலும் உட்கட்சி பிரச்னை இருக்கும். அதற்கு நாம் கருத்து சொல்ல முடியாது.” எனக் கூறினார் நயினார் நாகேந்திரன்.
அதிமுகதான் முடிவு செய்யும் - ஓ.எஸ்.மணியன் |
“தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும், யாருக்கு எத்தனை சீட் வழங்க வேண்டும் என்ற முடிவை அதிமுகதான் எடுக்கும். அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும்” என முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் கருத்து தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் கருத்தை வரவேற்கிறேன் - ஆதி ராஜாராம் |
“அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என அண்ணாமலை கூறியிருக்கும் கருத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்” என அதிமுக அமைப்புச் செயலாளர் ஆதி ராஜாராம் கூறியிருந்தார்.
எங்களுக்கு என்று தனித்தன்மை உண்டு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் |
”அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே கூறியுள்ளார். அதிமுக தலைமையில் தான் கூட்டணி. அதிமுக தலைமை ஏற்கும் நபர்கள் கூட்டணிக்கு வரலாம். பொதுவெளியில் பேசி இருந்தால் அதுகுறித்து நாம் பதில் அளிக்கலாம், கட்சி நபர்களுக்குள் பேசும் கருத்துக்கு பதில் அளிக்க முடியாது.
நாங்கள் எதையும் சகித்துக் கொண்டு செல்லவில்லை. எங்களுக்கு என்று தனித்தன்மை உள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வழிகாட்டுதல் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். குட்ட குட்ட குனியும் ஆட்கள் நாங்கள் இல்லை. எங்களை யாரையும் குட்டவும் விடவும் மாட்டோம். குனியவும் மாட்டோம்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தொண்டர்களுக்கு பாஜக உடனான கூட்டணியில் உடன்பாடில்லை - பத்திரிக்கையாளர் தராசு ஷியாம் |
இந்த நிலையில் அரசியல் விமர்சகரும் மூத்த பத்திரிக்கையாளருமான தராசு ஷியாம் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “அண்ணாமலையில் நேற்றைய பேச்சின் மூலம் பாஜகவுடன் கூட்டணி இல்லையென்றே நினைக்கிறேன். எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் பாஜகவுடனான கூட்டணியில் உடன்பாடில்லை என்றே தெரிகிறது. மேற்கு மண்டலத்தில் போட்டியிட நினைக்கும் சில பாஜகவினர் அதிமுகவுடனான கூட்டணி ஆமோதிக்கிறார்கள். அதேவேளையில் தென் மண்டலத்தில் போட்டியிட எண்ணுவோர் சசிகலா, ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகியோரது ஆதரவை எதிர்பார்க்கிறார்கள்.
இப்படியாக பாஜகவிற்குள்ளேயே இரு வேறு உணர்வுகள் உள்ளதாலேயே அடிப்படையான சிக்கல் எழுந்துள்ளது. இதனை வைத்து இயல்பாக ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திலேயே பாஜகவின் டெல்லி மேலிடம் உள்ளது. ஆனால் கர்நாடக தேர்தலில் டெல்லி தலைமை கவனமாக இருப்பதால் தமிழ்நாட்டில் நடக்கும் இந்த விவகாரத்தில் உடனடி முடிவு எட்டப்படும் என்பதில் வாய்ப்பு குறைவே. மேலும் அண்ணாமலையை மாற்றுவார்களா என்றால் கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக இருப்பதால் அதற்கும் வாய்ப்பிருக்காது.” என கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே அதிமுக உடனான கூட்டணி குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் 26ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியையும், அக்கட்சியின் தேசியத் தலைவர் நட்டாவையும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- Sponsored content
Page 9 of 13 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்