புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
89 Posts - 77%
heezulia
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
254 Posts - 77%
heezulia
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசியல் செய்திகள்

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 20 May 2015 - 0:46

First topic message reminder :

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு

தமிழக அரசியல் செய்திகள் - Page 5 201505192025138979_traffic-ramaswamy-challenge-jayalalitha-acquittal_SECVPF
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது.   இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.

அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 9 Oct 2018 - 7:37

அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராக
தலைமைச் செயலாளர் மாறி இருக்கிறார்
மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
-

மழையை காரணம் காட்டி திருவாரூர், திருப்பரங்குன்றம்
இடைத்தேர்தல்களை ஒத்தி வைத்திருக்கிறார்களே,
இது ஏற்கக்கூடியதா?
-
மு.க.ஸ்டாலின் பதில்:-
-
இவ்விரு தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை ச
ந்திப்பதற்கு ஆளுங் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க.
எந்தளவிற்கு பயந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு
சாட்சி, சான்று தேவையில்லை.

தலைமைச் செயலாளர், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு
செயலாளராக மாறி, அவரே தேர்தல் ஆணையத்திற்கு
அறிக்கை தந்திருக்கிறார் என்பதும் வெட்டவெளிச்சமாகி இ
ருக்கிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
-
------------------------------------------

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 18 Oct 2018 - 15:44

திமுக மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுராந்தகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
முதல்வர் தனது துறையை பயன்படுத்தி தனது உறவினர்களுக்கு ஒப்பந்தங்கள் தந்திருக்கிறார். முகாந்திரம் இருப்பதாக கூறிய உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. உத்தரவு வெளியான உடனே முதல்வர் ராஜினாமா செய்து, வழக்கை சந்தித்திருக்க வேண்டும். இதுவரை ஊழல் வழக்கில் திமுக தண்டனை பெற்றது இல்லை.

எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. 2 ஜி பொய் வழக்கில், நீதிமன்றம் அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 18 Oct 2018 - 15:48

எந்த வழக்கையும் கண்டு அஞ்சக்கூடியவர்கள் அல்லர் அதிமுகவினர். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள். எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக 47ஆம் ஆண்டு தொடக்க விழா, பொதுக் கூட்டத் திடலில் உள்ள கட்சி கொடிக் கம்பத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கொடியை ஏற்றி வைத்து, 47-ஆம் ஆண்டையொட்டி கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

தமிழகம் அதிமுகவின் கோட்டை: அதைத் தொடர்ந்து, அவர் பேசியதாவது: தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவும், அண்ணாவின் லட்சியத்தை நிறைவேற்றவும், அதிமுகவை கடந்த 1972-இல் எம்ஜிஆர் தொடங்கினார். 28 ஆண்டுகள் ஆட்சி செய்து, அதிமுக தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்ட உதவிகளை அளித்து, தமிழகத்தை தனது கோட்டையாக வைத்துள்ளது. தமிழகத்தில் 28 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள இயக்கம் அதிமுக மட்டுமே.

வழக்குகளைக் கண்டு அஞ்சவில்லை: ஆட்சிக் கலைப்பு நடவடிக்கைகள் எடுபடாததால் வழக்கு போட்டு அவப்பெயரை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். எந்த வழக்கையும் கண்டு அஞ்சக்கூடியவர்கள் அல்லர் அதிமுகவினர். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள். எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை.

புதிய தலைமைச் செயலகக் கட்டடம் தொடர்பான வழக்கு விசாரணை என்ற உடனேயே, அதற்கு மு.க.ஸ்டாலின் தடை வாங்குகிறார். விசாரணையைக் கண்டு நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்? என் மீது புகார் அளித்துள்ளீர்கள், நான் பதவியில் இருப்பதால், நீதிமன்றம் சரியாக விசாரிக்கச் சொல்லியிருக்கிறதே தவிர, என்னைக் குற்றவாளி எனக் கூறவில்லை. இருப்பினும், என் மீதான புகார் விசாரணையை நேரடியாக எதிர்கொள்கிறேன்.

திமுக ஒரு கம்பெனி: வாரிசு அரசியலை நடத்தும் திமுக ஒரு கட்சியே அல்ல, அது ஒரு கம்பெனி. அந்தக் கட்சித் தலைமை முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் வாரிசு அரசியல் நடத்தி வருகின்றனர். மாவட்டந்தோறும் தந்தை, மகன் எனப் பதவியில் உள்ளனர். ஆட்சியை கைப்பற்றும் திமுகவின் கனவு ஒரு நாளும் நிறைவேறாது.

தினகரன் கட்சி காணாமல் போகும்: டிடிவி தினகரன் தொடங்கிய கட்சியோடு, அதிமுகவை இணைக்க வேண்டுமாம். அதிமுக அகில இந்திய அளவில் பெரிய கட்சி மட்டுமன்றி, மக்களுக்காக சாதனைகள் செய்து வரலாறு படைத்த கட்சியை அவருடன் சேர்க்க வேண்டுமாம். அவரது கட்சி வரும் தேர்தலோடு காணாமல் போய்விடும்.

சினிமாவிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் நுழைந்துள்ள நடிகர் கமல்ஹாசன் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கிறார். ஜெயலலிதா அரசியலுக்கு வராதபோதே தேசப்பற்றோடு நாட்டுக்கான யுத்த நிதிக்கு தனது நகைகளையெல்லாம் பிரதமரிடம் வழங்கியவர். அவரைப் பற்றிப் பேச கமல்ஹாசனுக்கு தகுதி இல்லை.

யாருடனும் கூட்டணி இல்லை: தற்போது பாஜக மோசமான கட்சி என விமர்சிக்கும் திமுகவினர், ஏற்கெனவே மத்தியில் அவர்களுடன் கூட்டணி வைத்து பதவி சுகம் அனுபவித்தபோது , அது மதவாத கட்சியாக தெரியவில்லையா? பிறகு பதவிக்காக காங்கிரஸுடன் கூட்டணி வைத்தனர். திமுகவுக்கு கொள்கையே கிடையாது.

தற்போது, நாங்கள் யாருடனும் கூட்டணியில் இல்லை. தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி வைப்போம். தேசியக் கட்சிகள் தமிழகத்தை நம்பியுள்ளதால், நமக்கான திட்டங்களைப் பெற அதிக மக்களவைத் தொகுதிகளை வென்றெடுக்க வேண்டும் என்றார் முதல்வர் பழனிசாமி.

கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் மோகன், ஆனந்தன், செஞ்சி ராமச்சந்திரன், எம்.பி.க்கள் இரா.லட்சுமணன், காமராஜ், ராஜேந்திரன், ஏழுமலை, எம்எல்ஏக்கள் சக்கரபாணி, முருகுமாறன், முன்னாள் எம்எல்ஏ அழகுவேல்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள், அதிமுகவினர் திரளாகக் கலந்துகொண்டனர்.

தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 23 Oct 2018 - 5:11

சேலத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி திமுக கட்சி என்றைக்கும் ஆட்சிக்கு வராது என்றும் ஸ்டாலின் அப்படி என்ன செய்து விடுவார் என்றும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பின்வருமாறு, அதிமுகவில் யார் சிறப்பாக செயல்படுகின்றார்? யார் விசுவாசமான இருக்கின்றார்?யார் மக்களிடத்திலேயே செல்வாக்கு பெறுகின்றார்? மக்களுக்கு சேவை செய்பவர்கள் யார்? என்பதை கண்டறிந்து பதவி வழங்கப்படுகிறது.

ஆனால், திமுக-வில் இப்படி எல்லாம் பார்க்க முடியாது. இதையெல்லாம் பொறுக்க முடியாத திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொய் புகார்களை அதிமுக மீது அள்ளி வீசி வருகிறார்.

உங்களுடைய அப்பா கருணாநிதி இருக்கும்போதே அதிமுக-வை ஒன்னும் பண்ண முடியவில்லை. நீங்கள் என்ன பண்ண போறீங்க சொல்லுங்க பார்ப்போம். அவர் இருக்கின்றபோது எவ்வளவு பிரச்சினை உண்டாக்கினாங்க, துன்பத்தை உண்டாக்கினாங்க என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

அத்தனையும் தாக்கு பிடித்துதான் இன்றைக்கு தமிழகத்திலேயே 28 ஆண்டுகாலம் ஆட்சியில் இருக்கிறது அதிமுக. இந்த கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 23 Oct 2018 - 5:12

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெகு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென அவரது உடல்நிலை மிகவும் சரியில்லாமல் போகவே அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 23 Oct 2018 - 5:13

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனை யாரும் சந்திக்க வரவேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெகு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென அவரது உடல்நிலை மிகவும் சரியில்லாமல் போகவே அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
anbu

இன்று அவரை மருத்துவமனையில் சந்தித்து, அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தபின் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துவிட்டது. தொடர்ந்து அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால், சிறிது நாட்கள் அவர் மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பார். ஆகவே கழக தொண்டர்கள் யாரும் அவரை சந்தித்து இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 23 Oct 2018 - 5:54

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் குற்றாலத்தில்
ஒன்றாக தங்கியிருக்க முடிவு:
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு
-

டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் 18 எம்.எல்.ஏ.-க்கள்
ஒன்றாக தங்கியிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள்
அனைவரும் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள
தனியார் தங்கும் விடுதியில் தங்க உள்ளனர்.

இதனிடையே, தேசிய அளவில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும்
18 எம்.எல்.ஏ.-க்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஓரிரு
நாள்களில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

அதிமுகவைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.-க்கள் கொண்ட குழுவினர்,
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை கடந்த ஆண்டு ஆகஸ்ட்
மாதம் சந்தித்துப் பேசினர்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை மாற்ற வேண்டுமென
அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 19 பேருக்கும்
பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அளித்தார்.

அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில்
பேரவைத் தலைவர் தனபால் இந்த நடவடிக்கை எடுத்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு: 19 பேரில் ஒருவரான ஜக்கையன் தனது
கோரிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு அரசுக்கு ஆதரவு
அளிப்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, 18 எம்.எல்.ஏ.-க்களையும் இடைநீக்கம் செய்து
பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார். பேரவைத் தலைவரின்
தீர்ப்புக்கு எதிராக, 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடர்ந்தனர்.

மூன்றாவது நீதிபதி:

18 எம்.எல்.ஏ.-க்களின் வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி
இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு முன்
விசாரணைக்கு வந்தது.

இரண்டு நீதிபதிகளில் ஒருவருக்கு ஒருவர் முரணான தீர்ப்புகளைக்
கூறியதால், மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது.
நீதிபதி சத்யநாராயணா இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும்
தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், நீதிபதி தீர்ப்பை எழுதி முடித்து விட்டதாகவும்
ஓரிரு நாள்களில் அதாவது வரும் 24-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகலாம்
எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
-------------------------------------
தினமணி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 23 Oct 2018 - 16:48

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் குற்றாலத்தில் ஒன்றாக முகாமிட்டுள்ளதால் அதிமுக ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

அதிமுகவைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.-க்கள் கொண்ட குழுவினர், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தித்துப் பேசினர். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை மாற்ற வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 19 பேருக்கும் பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அளித்தார். அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் பேரவைத் தலைவர் தனபால் இந்த நடவடிக்கை எடுத்தார்.

19 பேரில் ஒருவரான ஜக்கையன் தனது கோரிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு அரசுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, 18 எம்.எல்.ஏ.-க்களையும் இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார். பேரவைத் தலைவரின் தீர்ப்புக்கு எதிராக, 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

18 எம்.எல்.ஏ.-க்களின் வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரண்டு நீதிபதிகளில் ஒருவருக்கு ஒருவர் முரணான தீர்ப்புகளைக் கூறியதால், மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சத்யநாராயணா இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், தேசிய அளவில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் 18 எம்.எல்.ஏ.-க்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பை நீதிபதி எழுதி முடித்து விட்டதாகவும் அதாவது வரும் 24-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அதிமுக மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் தினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் முகாமிட்டுள்ளதால் ஆட்சி கவிழ்ந்துவிடாது என கூறினார்.

மேலும், ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியினரே சொல்லாததால் தான் ஸ்டாலின் குழம்பி போய் உள்ளார். திமுக - பாஜக இடையே மறைமுக தொடர்பு உள்ளதாக கூறினார். நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அந்தந்த கட்சிக்கான வாக்கு வங்கி அப்படியே இருக்கும் என்று தெரிவித்தார்.

தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 23 Oct 2018 - 16:49

தேசிய அளவில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் 18 எம்.எல்.ஏ.-க்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும், ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு குறைவே என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.-க்கள் கொண்ட குழுவினர், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தித்துப் பேசினர். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை மாற்ற வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 19 பேருக்கும் பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அளித்தார். அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் பேரவைத் தலைவர் தனபால் இந்த நடவடிக்கை எடுத்தார்.

19 பேரில் ஒருவரான ஜக்கையன் தனது கோரிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு அரசுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, 18 எம்.எல்.ஏ.-க்களையும் இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார். பேரவைத் தலைவரின் தீர்ப்புக்கு எதிராக, 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

18 எம்.எல்.ஏ.-க்களின் வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இரண்டு நீதிபதிகளில் ஒருவருக்கு ஒருவர் முரணான தீர்ப்புகளைக் கூறியதால், மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சத்யநாராயணா இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், நீதிபதி தீர்ப்பை எழுதி முடித்து விட்டதாகவும் ஓரிரு நாள்களில் அதாவது வரும் 24-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஐனப்பன் சந்திரத்தில் செய்தியாளர்களிம் சரத்துகுமார் பேசுகையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும், ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு குறைவே என சரத்குமார் தெரிவித்தார்.

தமிழக அரசியல் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 26 Oct 2018 - 17:01

உள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதமே உள்ளாட்சி தேர்தல்
நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,
ஏன் இன்னும் தேர்தலை நடத்தவில்லை என தமிழக அரசிற்கு
சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும்,தேர்தல் அறிவிப்பை உடனடியாக வெளியிட
உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தாதது குறித்து,
4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசிற்கு
உத்தரவிட்டு உள்ளது.
-
---------------------------
தினமலர்

Sponsored content

PostSponsored content

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக