by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
தமிழக அரசியல் செய்திகள்
Page 12 of 13 • 1, 2, 3 ... , 11, 12, 13
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.
அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஸ்டாலின் சந்தித்த 3 முதலீட்டாளர்கள் ஏற்கனவே இந்தியாவில் முதலீடு செய்தவர்கள் தான்: அதிமுக நிர்வாகி
சிங்கப்பூரில் ஸ்டாலின் சந்தித்த மூன்று முதலீட்டாளர்கள் ஏற்கனவே தமிழகம் உள்பட இந்தியாவில் முதலீடு செய்தவர்கள் தான் என அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமார் தனது சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது:
ஸ்டாலின் சந்தித்த 3 முதலீட்டாளர்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் முதலில் செய்த நிறுவனங்கள்தான்,
* Temasek
* Sembcorp
* Capita Land
இதில் Capitaland ரியல் எஸ்டேட் நிறுவனம் தமிழகத்தில் அடுத்த 2 வருடத்திற்கான செயல் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசிடம் அனுமதி கேட்கும் நிறுவனங்களை முதலீட்டாளர்கள் என்ற பெயரில் சந்திப்பது எல்லாம் ஒரு வேலையா
நாடாளுமன்ற திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பு...
நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவரை அழைக்காததால், புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திமுக புதன்கிழமை அறிவித்தது.
புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை வருகின்ற மே 28 -ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறாா்.
இந்நிலையில், குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காதது, ஹிந்து தேசியவாதி வி.டி.சாவா்க்கரின் பிறந்த தினமான மே 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி எதிா்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமா்சித்தன.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்திருந்தனர்.
நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவை திமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. முன்னதாக, விசிகவும் புறக்கணித்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, சண்முகம், சந்திர சேகரன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மு.க ஸ்டாலின் அழைப்பு ஏற்பு: திடீரென மறுத்த ஜனாதிபதி: காரணம் என்ன?
சென்னை கிண்டில் ரூ.250 கோடியில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதி பெயரை சூட்ட மு.க. ஸ்டாலின் முடிவு செய்தார்.
அதன்படி, இந்த மருத்துவமனையை திறந்துவைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லி சென்று ஜனாதிபதி மாளிகையில் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்தார்.
இந்த நிலையில், பன்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் தேதி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (மே 24) தெரிவித்தார்.
எனினும், எந்தத் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. இந்தத் தேதி மாற்றத்துக்கு குடியரசுத் தலைவரின் வருகை திடீரென ரத்து ஆனதே காரணம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மா. சுப்பிரமணியன், “வரமுடியாது என புதிய தலைமுறை செய்தி சேனல் மட்டுமே கூறியுள்ளது. வர்றாங்க.. தேதி மாறும்” என்று பதிலளித்தார்.
எனினும் ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகை ரத்து ஆனது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விழா ஒன்றுக்கும் தி.மு.க. ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
'செந்தில் பாலாஜியால் தி.மு.க ஆட்சிக்கு கெட்ட பெயர்' - அன்புமணி
செந்தில் பாலாஜி போன்றவர்களால் தி.மு.க ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுவதால், தமிழ்நாடு மதுவிலக்கு துறைக்கு சமூக அக்கறையுள்ள நபரை நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வரவேண்டும் என பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி அதியமான் கிரிக்கெட் கிளப் சார்பில் ஏ.எம்.ஆர் கிரிக்கெட் போட்டி கடந்த 15 தினங்களாக நடைபெற்றது . ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணிகளின் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். இறுதி போட்டியை ராஜ்யசபா எம்.பி. அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 'கோடை விடுமுறை காலத்தில் இளைஞர்கள் திசைமாறி போகக்கூடாது என்பதற்காக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் மற்ற போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சுமார் 620 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.
அம்பத்தூர் பகுதியில் 77 மது குடிப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. இது காவல் துறையினருக்கு தெரியாமல் நடைபெறாது. 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொன்னார்கள். கலைஞர் பிறந்த நாளில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், வரவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த 10 மாதத்திற்கு முன்புதான் மின் கட்டணம் உயர்த்தியது அரசு. தற்போது மீண்டும் மின் கட்டணம் உயரும் என தகவல் வருகிறது. அவ்வாறு உயர்த்தினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக மேற்கொண்டு வருகிறது. இதே நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் தான், அணை கட்ட நிதி ஒதுக்கி, பல அரசியல் செய்தார். அவர்கள் சொல்வதை நாம் நம்ப கூடாது. கர்நாடகாவில் 4 பெரிய அணைகள் உள்ளது.
ஆனால், நமக்கு மேட்டூர் அணை என்ற ஒன்றே ஒன்று மட்டும்தான் உள்ளது. எனவே, மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தனும்.
இந்தியா முழுவதும், 40 மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. 170 மருத்துவக் கல்லூரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை மோடி அனுமதிக்க கூடாது. இந்தியாவிற்கு இன்னும் 10 இலட்சம் மருத்துவர்கள் தேவை இருந்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அதிகமாக சிறுதானியம் விளைவது தருமபுரி தான், ஆனால் சிறுதானியத்தை கர்நாடகவில் வாங்குகிறார்கள். காரணம், பணம், கமிஷன் மட்டுமே.
செந்தில் பாலாஜி போன்றவர்களால் தி.மு.க ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுவதால், தமிழ்நாடு மதுவிலக்கு துறைக்கு சமூக அக்கறையுள்ள நபரை நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வரவேண்டும்.
ஒடிசா ரயில் விபத்திற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால், ரயில்வே துறையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற விபத்தினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புல்லட் ரயில் கொண்டு வருவதைவிட, பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, தொழில்நுட்பத்தினை கொண்டு வரவேண்டும் என்றார்.
அமைச்சர் இந்த ஆணவத்தை அவரது அடிப்பொடிகளிடம் வைத்துக் கொள்ள வேண்டும்- அண்ணாமலை
கோவில்பட்டி நகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி சகோதரர் விஜயகுமாரை, திமுக அமைச்சர் கீதா ஜீவன் தகாத வார்த்தைகள் கூறி அவமானப்படுத்தியிருக்கிறார் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
‘’கோவில்பட்டி நகராட்சி இருபதாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் பாஜகவின் திரு. விஜயகுமார் அவர்கள். கடந்த நான்கரை வருடங்களாக அவரது பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது என்றும், அவர் நகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கடந்த ஒன்றரை வருடங்களாக பல மனுக்கள் கொடுத்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்றும், தூத்துக்குடி தொகுதி திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களிடம் மனு கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான சகோதரர் விஜயகுமார் அவர்களை, திமுக அமைச்சர் கீதா ஜீவன் தகாத வார்த்தைகள் கூறி அவமானப்படுத்தியிருக்கிறார்.
திமுக உள்கட்சி அரசியலில், தன்னை கட்சி மேலிடத்துக்கு நெருக்கமானவராகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள அமைச்சர் கீதா ஜீவன், இந்த ஆணவத்தை எல்லாம் அவரது அடிப்பொடிகளிடம் வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் பிரச்சினைக்காக, பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு கொடுப்பதைத் தடுக்க நீங்கள் யார்?
ஒரு வார காலத்திற்குள் அந்தப் பகுதியின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால், பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க-வில் இணைந்துவிடக் கூடாது என்ற அச்சத்தில் செந்தில் பாலாஜியை பாதுகாக்கிறது தி.மு.க!
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம், அதைத் தொடர்ந்த அரசியல் சர்ச்சைகள், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மோதல்கள் உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் கேட்டு, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பேசினேன். |
“செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரியே செய்துவிட்டார்கள். இப்போதும்கூட, ‘நெஞ்சுவலி நாடகம்’ என்று அ.தி.மு.க பேசிவருவது அரசியல் நாகரிகம்தானா?” |
“மனிதாபிமானமற்று அ.தி.மு.க பேசுகிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் அல்லவா... விசாரணையின்போது நன்றாக இருந்தவர், கைது என்றவுடன் நெஞ்சு வலிக்கிறது என்கிறார். ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து ஏன் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்... அரசு மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லையா?”
“அரசு மருத்துவர்கள், இ.எஸ்.ஐ மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்... இதற்கு மேலும் யார் சொன்னால் ஒப்புக்கொள்வீர்கள்?” |
“நெஞ்சுவலி, யாருக்கு, எப்போது வரும் என்று சொல்ல முடியாதுதான். இந்தக் காலத்தில் பைபாஸ் சர்ஜரி சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால், அவருக்கு 30 நாள்கள் ஓய்வு வேண்டுமென்று சொல்கிறார்கள். சந்தேகம் வராதா... அமலாக்கத்துறை விசாரிப்பதற்கு ஏன் இத்தனை தடை என்பதுதான் எங்களின் கேள்வி.”
“செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்கிறீர்களே... வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி வீடுகளில் ரெய்டு நடந்தபோது, அவர்களைக் கட்சிப் பதவியிலிருந்து நீக்கிவிட்டீர்களா?” |
“முகாந்திரம், ஆதாரத்தின் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி விவகாரம் கைதுவரை நீண்டிருக்கிறது. விசாரணைக்கு ஒத்துழைக்க வில்லை என்பதுதானே அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. அமைச்சர் பதவி இருப்பதால்தானே ஒத்துழைக்கவில்லை?”
“சி.விஜயபாஸ்கர் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோதுதான் அவரது வீட்டில் ரெய்டு நடந்தது. அ.தி.மு.க அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதா?” |
“நாங்கள் செந்தில் பாலாஜியை நிரந்தரமாக நீக்கச் சொல்லவில்லை. விசாரணை முடிந்த பிறகு, குற்றவாளி இல்லையென்றால் அமைச்சராக்கிக் கொள்ளுங்கள். நாசர் மீது குற்றச்சாட்டு வந்தவுடன் அவரை நீக்கவில்லையா... பி.டி.ஆர் மீது ஆடியோ குற்றச்சாட்டு வந்தவுடன் துறை மாற்றம் செய்யவில்லையா... ஆனால் செந்தில் பாலாஜியை மட்டும் பாதுகாக்கிறார்கள் என்றால், அதற்குள் இருக்கும் ரகசியம் என்ன?”
“என்ன ரகசியம் காரணமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” |
“விசாரணையில் திடுக்கிடும் தகவல் எதையாவது சொல்லிவிடுவார் என்று அஞ்சுகிறார்கள். லைசென்ஸ் இல்லாமலேயே ஆயிரக்கணக்கான பார்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஒரு மது பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குகிறார்கள். இதில் மட்டுமே மாதத்துக்கு 300 கோடி ரூபாய் கொள்ளையடிக்கிறார்கள். விற்பனை கூடியும் வருவாய் இல்லை என்பதை அமைச்சர் பி.டி.ஆரே ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையெல்லாம் செந்தில் பாலாஜி வாய் திறந்துவிட்டால் என்ன ஆவது என்றுதான் தி.மு.க அரசு பயப்படுகிறது.”
“ ‘கொங்கு மண்டலத்தில், தி.மு.க-வை வலுப்படுத்திவிட்டார் செந்தில் பாலாஜி. அதனால் அவரைக் குறிவைக்கிறார்கள்’ என தி.மு.க-வினர் சொல்கிறார்களே?” |
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-தானே அதிகம் வெற்றிபெற்றது... சட்டமன்றத் தேர்தலின்போது செந்தில் பாலாஜி என்ன பாண்டிய மண்டலத்திலா இருந்தார்?”
“கோவைக்கு செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சரான பின்னர் உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு கிழக்குத் தேர்தலில் அ.தி.மு.க-வால் வெற்றிபெற முடியவில்லையே?” |
“உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும் என்பதைக் காலங்காலமாக நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்... அதைவைத்து சொல்லக் கூடாது. செந்தில் பாலாஜியை மற்றவர்களைவிட நான் நன்றாக அறிவேன். அ.தி.மு.க மாணவரணியில் இருவரும் சமகாலத்தில் பயணித்தவர்கள். பவர் பாயின்ட் எங்கே இருக்கிறதோ, அங்கே நேரடியாகத் தொட்டுவிடுவார். அந்தக் கலையை நன்கு கற்றவர் செந்தில் பாலாஜி.”
“அதிகாரத்தை நோக்கி செந்தில் பாலாஜி செல்வார் என்றால், தி.மு.க-வைவிடப் பெரிய அதிகாரம் பா.ஜ.க-விடம்தானே இருக்கிறது?” |
“அமலாக்கத்துறை விசாரணை முழுமையாக முடிந்தால்தான் தெரியவரும். ரெய்டு மிரட்டலுக்குப் பிறகு பா.ஜ.க-வில் இணைந்தவர்கள் என சசிதரூர் வெளியிட்ட பட்டியல் குறித்து, நீங்களே ஜூ.வி-யில் எழுதியிருந்தீர்களே... அந்தப் பட்டியலில் செந்தில் பாலாஜியின் பெயரும் இணைந்துவிடக் கூடாது என்ற அச்சத்தில்தான் தி.மு.க அவரைப் பாதுகாக்கிறது. ஆனால், அவர் மன உறுதி என்னவென்பது எங்களுக்குத்தான் நன்றாகத் தெரியுமே!”
“அப்படியானால், அவர் பா.ஜ.க-வுக்குச் சென்றுவிடுவார் என்கிறீர்களா?” |
“அதை செந்தில் பாலாஜிதான் சொல்ல வேண்டும். ம.தி.மு.க., தி.மு.க., அ.தி.மு.க எனப் பயணித்து, பின்னர் டி.டி.வி-யுடன் சேர்ந்து அ.ம.மு.க-வில் இணைந்து தேரை இழுத்துத் தெருவில் விட்டுவிட்டு, மீண்டும் தி.மு.க-வுக்குப் போனவர்தான் செந்தில் பாலாஜி.”
“ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்குப் பிறகும் பா.ஜ.க-வோடு நீங்கள் கூட்டணியைத் தொடர்வது, ‘ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம்’ என அ.தி.மு.க தொண்டர்கள் நினைக்க மாட்டார்களா?” |
“தோழமைக் கட்சியாக இருந்தாலும், அண்ணாமலையின் பேச்சை இதுவரை இல்லாத வகையில் அ.தி.மு.க கடுமையாகக் கண்டித்து விட்டது. எங்கள் பொதுச்செயலாளரும் கண்டித்துவிட்டார். தான் பேசியதைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள் என்று அண்ணாமலையும் சொல்லிவிட்டார். வாஜ்பாய், நரேந்திர மோடி போன்ற தலைவர்களெல்லாம் மதித்த தலைவர் ‘அம்மா.’ அவரைப் பற்றிய வரலாறெல்லாம் அண்ணாமலைக்குத் தெரியாது!”
கழுத்தை நெரிக்கும் வழக்குகள்... தப்பிப்பாரா அமைச்சர் பொன்முடி?
செம்மண் குவாரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்பா அமைச்சர்... மகன் எம்.பி. இந்த அதிகாரங்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு, கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாகத் தந்தையும் மகனும் வழக்கை இழுத்தடிக்கிறார்கள்.
கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி விழுப்புரம் மாவட்டம், பூந்துறையிலுள்ள செம்மண் குவாரியை, முறைகேடாகத் தன்னுடைய மகன் கௌதம சிகாமணிக்கு வழங்கியதாகப் புகார் எழுந்தது. இதன் மூலம் ரூ.28.38 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அவர்கள்மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்த வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கின் விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரியும், வழக்கை ரத்துசெய்யக் கோரியும் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து முன்னாள் கனிம வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பேசினோம். “பூந்துறை கிராமத்தில், செம்மண் குவாரி மூலமாக ஒரு பெரிய பள்ளத்தாக்கையே அமைச்சர் பொன்முடியும், அவர் மகனும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த வழக்கில் பொன்முடி தரப்பு, விசாரணைக்குத் தடை கேட்பது இது முதன்முறையல்ல. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கடந்த 2022 நவம்பரில் அமைச்சர் பொன்முடி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி பொன்முடியின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார். இப்போது கௌதம சிகாமணியின் மனுவும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
செம்மண் குவாரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்பா அமைச்சர்... மகன் எம்.பி. இந்த அதிகாரங்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு, கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாகத் தந்தையும் மகனும் வழக்கை இழுத்தடிக்கிறார்கள். செந்தில் பாலாஜியின் வழக்கைப்போல இந்த வழக்கிலும் காலம் தாழ்த்தாமல், அமலாக்கத்துறை தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். மேலும் சொத்துக் குவிப்பு, அரசு நிலத்தை மோசடியாகப் பத்திரப்பதிவு செய்தது ஆகிய வழக்குகளும் அவரின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்திருக்கின்றன. தன்மீது தவறு இல்லையென்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்த வழக்குகளை எதிர்கொள்ள பொன்முடி தயாரா?” என்றார் காட்டமாக.
இது தொடர்பாக விளக்கம் கேட்க அமைச்சர் பொன்முடி, அவருடைய மகனும் எம்.பி-யுமான கௌதம சிகாமணி இருவரையும் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவர்கள் நம் அழைப்பை ஏற்கவில்லை. நமது குறுஞ்செய்திகளுக்கும் பதிலளிக்கவில்லை. அவர் சார்பில் பேசியவர்களோ, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் புனையப்பட்ட வழக்கு இது. இதைச் சட்டரீதியாக அமைச்சர்ரும் அவரின் மகனும் எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும்போது, இருவரும் குற்றமற்றவர்கள் என்பது நிரூபணமாகும்” என்றனர்.
ஜெயலலிதாவை ‘வாய்தா ராணி’ என்று விமர்சித்தவர்கள், தங்கள் மீதான வழக்குகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
ஆளாளுக்கு அரசியல் பேசும் போது ஆளுனர் ஏன் பேசக் கூடாது? தமிழிசை கேள்வி
கோவையில் உள்ள தனியார் பள்ளி அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டி.ஐ.ஜி மரணம் அதிர்ச்சியாக உள்ளது. காவலர்கள் விழாக்கள் காலத்திலும் பணி புரிகின்றனர். அவர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். காவலர்கள் சங்கம் வைக்க வேண்டும். அவர்களின் கோரிக்கையை நியாயங்களை ஆட்சியாளர்கள் பார்க்க வேண்டும். அரசியல் அழுத்தமும் காவல்துறையில் உள்ளது.
அவர்களை சுதந்திரமாக பணியாற்ற விடுவதில்லை. அவர் மரணம் இதில் பாடத்தை சொல்கிறது. ஆனால் தற்கொலை ஒன்றே தீர்வு கிடையாது. சங்கம் தொடர்பான கோரிக்கையை பரிசீலிக்கலாம்.
தற்கொலை செய்வதற்கு ஏதோ ஒரு அழுத்தமான காரணம் தூண்டுதல் உள்ளது. அதை கண்டுபிடிக்க வேண்டும். நோய் என்று கடந்து விட முடியாது. இவ்வளவு உயர் அதிகாரி தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் கடந்து போவதை விட்டுவிட்டு கடைந்து ஆராய்ந்து ஏன் இந்த சூழ்நிலை நிலவுகிறது என்பதை அறிய வேண்டும். வாழ்க்கையில் பிளசர் இருக்க வேண்டும் பிரஷர் இருக்கக் கூடாது. நானே இரண்டு மாநிலங்களில் பிரசர்களை கடந்து தான் செல்கிறேன்.
ஆளுநர் என்பது போஸ்ட் அதை போஸ்டர் ஒட்டி கண்டிக்கக் கூடாது. அரசியல் பேச அனைவருக்கும் உரிமை உண்டு. ஆளாளுக்கு அரசியல் பேசும் பொழுது ஆளுநர் ஏன் அரசியல் பேசக்கூடாது. போஸ்டர் ஒட்டி கருப்புக் கொடிகாட்டி செய்வது சரியான அரசியலாக இருக்க முடியாது. யாருக்கு வேண்டுமானாலும் அரசியல் பேச உரிமை இருக்கும்பொழுது ஆளுநருக்கும் உள்ளது” என்று கூறினார்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர்கள் அரசியல் பேசக் கூடாது என தெரிவித்த கருத்து குறித்து தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேட்ட நிலையில், நான் தெரிவிக்கும் கருத்து அண்ணாமலைக்கு இல்லை. ஆளாளுக்கு பேசும் பொழுது ஆளுநர் ஏன் அரசியல் பேசக்கூடாது என்பது தான் என்னுடைய ஜென்ரல் ஸ்டேட்மென்ட்.
அண்ணாமலை கருத்தை அண்ணாமலை இடம் கேட்டுக் கொள்ளுங்கள். ஆளுநர்கள் அரசியல் பேசலாம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளேன்.
ஹோட்டல்களில் அரசியல் பேசக் கூடாது என எழுதி இருப்பார்கள், ஆனால் அதற்கு கீழ் உட்கார்ந்து தான் அரசியல் பேசுவார்கள். அரசியல் இல்லாமல் ஒரு நொடியும் கிடையாது. கட்சித் தலைவர் போல ஆட்சித் தலைவர்கள் ஆளுநர்கள் அவர்களும் பேசலாம். ஆளுநர்கள் கருத்தை சொல்லலாம் உடன்பாடு இல்லை என்றால் இல்லை என்று சொல்லிவிட்டு போங்கள். உங்கள் மனநிலையில் தான் ஆளுநர் பேச வேண்டும் என நினைக்க கூடாது. நான் தமிழ்நாடு ஆளுநரை பற்றி பேசவில்லை என்னைப் பற்றி பேசுகிறேன். ஆளாளுக்கு பேசும் போது ஆளுநர் பேசினால் என்ன தப்பு.
புதுச்சேரியில் இதற்கு முன் முதல்வரும்- ஆளுனரும் எலியும் பூனையுமாக இருந்தனர். இப்போது அண்ணன் தங்கையாக இணக்கமாக உள்ளோம். இது எதிர்க்கட்சிக்கு ஆதங்கமாக உள்ளது. புதுச்சேரி புதுமையான வளர்ச்சியை அடைந்து வருகிறது என்று கூறினார்.
ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியுடன் இருப்போம்: ஸ்டாலின்
ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியோடு நிற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசுவின் இல்ல திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்டாலின் பேசியதாவது “ தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டி, பெண்களுக்கு இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை உதாரணம். வாக்குறிதிகளை பாஜக நிறைவேற்றியதா? 2014-ல் கொடுத்த வாக்குறிதிகளில் ஒன்றைவாது பாஜக நிறைவேற்றியதா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என சொன்னதை செய்யவில்லை. கருப்பு பணத்தை மீட்டு ரூ. 15 லட்சம் தருவேன் என சொன்னார்கள், இதுவரை ரூ. 15 -கூட தரவில்லை. சர்வாதிகார ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம்.
யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியோடு நிற்போம்.” என்று அவர் கூறினார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கலாம் மூன்றாவது நீதிபதி உத்தரவு
அமைச்சா் #செந்தில்_பாலாஜி கைது தொடா்பான ஆள்கொணா்வு மனு மீதான விசாரணை, வரும் 11, 12 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவித்த 3-ஆவது நீதிபதி காா்த்திகேயன், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை முதன்மை அமா்வு நீதிமன்றம் நீட்டித்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளாா்.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு, மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்க 3-ஆவது நீதிபதியாக சி.வி.காா்த்திகேயன் நியமிக்கப்பட்டாா்.
இந்த வழக்கு நீதிபதி காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இரு நீதிபதிகள் அமா்வில், எந்தெந்தக் கருத்துகளில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளனா் என்பது குறித்து மேகலா தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிமன்றக் காவலில் வைத்து உத்தரவிட்ட பின்னா், ஆள்கொணா்வு மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்ற விஷயத்திலும், அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்தும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்றக் காவல் காலமாக கருத முடியுமா என்ற அம்சங்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அம்சத்தில் நீதிபதிகள் முரண்பட்டுள்ளனா் எனக் கூற முடியாது என அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா குறிப்பிட்டாா். மேலும், கைது செய்யும் முன் நோட்டீஸ் அனுப்ப வகை செய்யும் குற்ற விசாரணை முறைச் சட்டம் 41 ஏ பிரிவு, அமலாக்கத் துறைக்கு பொருந்துமா என்பது குறித்து இரு நீதிபதிகளும் கருத்து தெரிவிக்காத நிலையில் அதுகுறித்த வாதங்களை முன்வைக்கக் கூடாது எனவும் துஷாா் மேத்தா குறிப்பிட்டாா்.
ஆனால், இது சம்பந்தமாக வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும் என மேகலா தரப்பு மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, வழக்கில் இறுதி முடிவெடுக்க இந்த அம்சம் குறித்து வாதம் செய்யலாம் எனத் தெரிவித்த நீதிபதி காா்த்திகேயன், அமைச்சா் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா?, நீதிமன்றக் காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின்னா் ஆள்கொணா்வு மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா?, செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்றக் காவல் காலமாக கருதலாமா, கூடாதா என மூன்று கேள்விகளைத் தீா்மானிக்க விசாரணையை ஜூலை 11, 12 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைத்தாா்.
மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜூலை 12-இல் நிறைவடைய உள்ள நிலையில், அவருக்கு முதன்மை அமா்வு நீதிமன்றம் காவல் நீட்டிப்பு வழங்கலாம் எனவும் நீதிபதி காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா்.
- Sponsored content
Page 12 of 13 • 1, 2, 3 ... , 11, 12, 13
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்