புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
6 Posts - 18%
i6appar
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
3 Posts - 9%
Jenila
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
88 Posts - 35%
i6appar
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
எனது கதைகள் -- - Page 6 Poll_c10எனது கதைகள் -- - Page 6 Poll_m10எனது கதைகள் -- - Page 6 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கதைகள் --


   
   

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 17, 2015 8:55 am

First topic message reminder :

ஓட்டைப் படகு.
============
காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக்கொண்டது. ஆக நான்கு ஓட்டைகள் வழியாக தண்ணீர் வேகமாக உள்ளே வந்துகொண்டிருந்தது. படகோட்டி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த தத்துவ ஞானி,

"ஓட்டைப்படகிலே மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன . " என்றார்.

" ஐயா ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? "

" தம்பி ! மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே ! அதைக் குறிப்பிட்டேன் ! "

" ஐயா ! தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல! படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் மூவரும் தப்பிக்க ஏதாவது வழியுண்டா ? அதைச் சொல்லுங்கள் !"

" தம்பி ! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது. இந்தக் கடலைக் கடக்கவேண்டும் என்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே ஓட்டைகள் இருக்கக் கூடாது. முக்கியமாக நான்கு ஓட்டைகள் இருக்கக்கூடாது. அதாவது தாமதம், மறதி, சோம்பேறித்தனம், தூக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள் இருக்கக் கூடாது ; அவ்வாறு இருந்தால் நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும். இதை நான் சொல்லவில்லை ; வள்ளுவர் சொல்லுகிறார்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ( மடியின்மை- 606 )

" ஐயா ! அவசரம் தெரியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ! திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல. நாம் சாகப் போகிறோம்; தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்! வெட்டிப்பேச்சு வேண்டாம். "

" நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கும் வள்ளுவர் ஒரு வழி சொல்லுகிறார் ! "

" அது என்ன வழி ? "

" அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை-421 )

அதாவது , அறிவு இருந்தால் , அது நம்மை மரணத்திலிருந்து கூடக் காப்பாற்றும்; மேலும் அந்த அறிவு பகைவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும்."

" ஐயா! இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் ? அதைச் சொல்லுங்கள் !"

உடனே தத்துவஞானி ஓடக்காரனைப் பார்த்து," தம்பி ! படகின் மூலையிலே இருக்கின்ற அந்த நான்கு தகர பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன ? "

" ஆம் ஐயா ! காலியாகத்தான் உள்ளன. "

" அப்படியானால் அதன் வாயிலே இருக்கின்ற மூடியைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த நான்கு பீப்பாய்களையும் பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு. "

ஓடக்காரனும், நானும் விரைவாக அந்தப் பணியைச் செய்து முடித்தோம்.

" அப்படியே அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள் இறக்குங்கள்! "

நாங்கள் பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சரியாக இருந்தது. ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகுபோல மிதந்தன. நாங்கள் மூவரும் தட்டுத்தடுமாறி பீப்பாய்கள் மேலே ஏறி அமர்ந்தோம்.பிறகு ஓடக்காரனின் துணையோடு பத்திரமாகக் கரை சேர்ந்தோம்.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 30, 2015 8:07 am

கோதண்டராமன்
=============
கோதண்டராமன் படுத்த படுக்கையாகக் கிடந்தார். பத்து நாட்களாக அன்ன ஆகாரம் எதுவும் இல்லாமல், உடம்பு துரும்பாக மெலிந்து விட்டது.அன்றைய தினம் நிலைமை மிகவும் மோசமாகப் போய்விட்டது.

நாடித்துடிப்பு மெல்ல, மெல்ல அடங்கிக்கொண்டே வந்தது. கால் பாதங்கள் ஜில்லிடத் தொடங்கின. கருவிழிகள் ஆடவில்லை. டாக்டர், நாடித்துடிப்பைத் தொட்டுப் பார்த்தார். அவருக்கு நம்பிக்கையில்லை. உறவினர்களை அழைத்து," சொல்ல வேண்டியவர் களுக்கு சொல்லி அனுப்பிவிடுங்கள். இன்று இரவு வரைக்கும் கூடத்தாங்காது" என்று சொன்னார். உறவினர்கள் எல்லோருக்கும் சொல்லி அனுப்பினார்கள்.

தான் சொன்னபடியே டாக்டர் கோதண்டராமன் அன்று இரவு 8 மணிக்குக் காலமானார்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 8:23 pm

M.Jagadeesan wrote:சோமுவும், ராமுவும் ஒரே ஊரினர் ; ஒரே வயதினர்; நெருங்கிய நண்பர்கள். நீண்டகாலம் அரசுப் பணியிலிருந்து, தற்போது ஓய்வுபெற்று வீட்டில் இருக்கின்றனர். இருவருக்கும் வயது 65 ஆகிறது. இதுநாள்வரையில் அவர்களுடைய கால்கள் தமிழ்நாட்டைத் தாண்டியதில்லை. வடஇந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளையும், கோவில்களையும் பார்த்து வரவேண்டும் என்று ஆவல் கொண்டனர். எனவே சுற்றுலா நிறுவனம் ஒன்றில் தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்துகொண்டனர்.

இன்றிரவு பத்து மணிக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து வண்டி புறப்படுகிறது. பக்கத்துத் தெருவிலிருக்கும் தன் நண்பர் ராமுவைப் பார்த்துவர , சோமு புறப்பட்டார். சோமுவைப் பார்த்தவுடன், ராமு

' வா! சோமு! நானே வரலாம்னு நினச்சுகிட்டு இருந்தேன்; நல்லவேளை நீயே வந்துட்டே! இப்படி உட்காரு! காபி சாப்பிடறயா?"

" ஒரு கப் சூடா கொண்டு வரச் சொல்லு!"

" அம்மா! மாலதி! சோமு வந்திருக்கார்! காபி கொண்டு வாம்மா!"

" இதோ கொண்டுவரேன் அப்பா !"

மாலதி , ராமுவின் ஒரே மகள். மாலதி கொண்டுவந்த காபியைப் பருகிக் கொண்டே சோமு பேசத் தொடங்கினார்.

" என்னப்பா! ராமு! மாலதிக்கு வரன் ஏதும் பாக்கலியா? "

" இல்ல சோமு , அவளுக்கு வயசு இருபத்தஞ்சு தானே ஆகுது! இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்; அவ கல்யாணத்துக்கு முன்னாடி வீட்ட இடிச்சிக் கட்டனும்;வீடு கட்றதுக்காக லோனுக்கு அப்ளை பண்ணியிருந்தேன் ; பத்து லட்சம் சாங்க்ஷன் ஆகியிருக்கு! பத்து வருஷத்துல லோனைக் கட்டி முடிக்கணும். மாலதிக்குக் கல்யாணம் முடிஞ்ச கையோட கார் ஒன்னு வாங்கலாம்னு இருக்கேன்; நாலு இடத்த சுத்திப் பாக்க வசதியா இருக்கும்ல? நீ என்ன சொல்றே?"

" ராமு! நீ சொல்றதப் பாத்தா, நீ புறப்படத் தயாரா இல்ல போலிருக்கே?"


" என்னப்பா சோமு அப்படிச் சொல்லிட்டே? இத பாரு ! இந்த சூட்கேசுல எல்லாம் எடுத்து வச்சிட்டேன்; பத்து நாள் பயணத்துக்குத்
தேவையான துணிமணிகள், ஸ்வெட்டர், சோப்பு, சீப்பு, பவுடர், கண்ணாடி,மருந்து மாத்திரைகள், ATM கார்டு , ரேஷன் கார்டு ஜெராக்ஸ் காபி எல்லாம் எடுத்து வச்சிட்டேன் ! அது சரி ! நீ எப்படி? Are you ready for the journey ?"

" ராமு! என்னோட ஒரே பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டேன்;ரெண்டு மகன்களுக்கும் சொத்தைப் பாகம் பிரிச்சு எழுதி ரிஜிஸ்தர் பண்ணிட்டேன்; எனக்கு ஒரு பைசாக் கடன் கிடையாது; என்னோட இறுதிச் சடங்குச் செலவுக்குக் கூட ஐம்பதாயிரம் ரூபாய வீட்ல ரெடியா வச்சி இருக்கேன்;எது எப்படி செய்யனும்னு பசங்களுக்கு சொல்லிக் கொடுத்திட்டேன்."

" என்னப்பா சோமு! நான் ஒன்னு கேட்டா ; நீ ஒன்னு பதில் சொல்றே?"

" இல்ல ராமு! நான் எந்தப் பயணத்துக்கும் ரெடின்னு சொல்ல வந்தேன்."

ரொம்ப அருமை ஐயா......இது ரொம்ப முக்கியம் ! ........உங்களின் எல்லா கதைகளுமே அருமையாக இருக்கு ! பகிர்வுக்கு நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 30, 2015 8:59 pm

கிருஷ்ணம்மாவின் பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 31, 2015 12:09 am

" மாமி! மணி ஐஞ்சு ஆறது. நான் ஆபீஸுக்குப் போய் கிருஷ்ணாவை அழச்சுண்டு வரணும்.அப்படியே ஸ்கூலுக்குப் போய் பசங்களையும் அழச்சுண்டு வரணும்."

" சரி ஜானு! நான் ஆத்துக்குப் போறேன்" என்று சொல்லிவிட்டுப் பங்கஜம் மாமி போய் விட்டாள்.

" அவசர அவசரமாக சட்டையையும், பேண்டையும் அணிந்துகொண்டு, தன் மனைவி கிருஷ்ணவேணியையும், குழந்தைகளையும் அழைத்து வருவதற்காக ஜானகிராமன் டூவீலரில் கிளம்பினான்.
ஹ... ஹா.. ஹா... சரியான ட்விஸ்ட்..... சூப்பருங்க கதை அருமை.



எனது கதைகள் -- - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது கதைகள் -- - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது கதைகள் -- - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 31, 2015 12:12 am

தான் சொன்னபடியே டாக்டர் கோதண்டராமன் அன்று இரவு 8 மணிக்குக் காலமானார்.
எதிர்பாராத க்ளைமாக்ஸ் கதைகளாக இருக்கே...! சூப்பருங்க தொடருங்கள் எனது கதைகள் -- - Page 6 3838410834



எனது கதைகள் -- - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது கதைகள் -- - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது கதைகள் -- - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 31, 2015 8:10 am

ரமணியன் ,கிருஷ்ணம்மா ,விமந்தனி ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2015 9:50 pm

விமந்தனி wrote:
" மாமி! மணி ஐஞ்சு ஆறது. நான் ஆபீஸுக்குப் போய் கிருஷ்ணாவை அழச்சுண்டு வரணும்.அப்படியே ஸ்கூலுக்குப் போய் பசங்களையும் அழச்சுண்டு வரணும்."

" சரி ஜானு! நான் ஆத்துக்குப் போறேன்" என்று சொல்லிவிட்டுப் பங்கஜம் மாமி போய் விட்டாள்.

" அவசர அவசரமாக சட்டையையும், பேண்டையும் அணிந்துகொண்டு, தன் மனைவி கிருஷ்ணவேணியையும், குழந்தைகளையும் அழைத்து வருவதற்காக ஜானகிராமன் டூவீலரில் கிளம்பினான்.
ஹ... ஹா.. ஹா... சரியான ட்விஸ்ட்..... சூப்பருங்க கதை அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1154248

ஆமாம் விமந்தினி.மேலும் இந்த IT இல் யாருக்கு, எப்போ, எதுக்காக வேலை போகும் என்று தெரியலையே........இப்படி அட்ஜஸ்ட் பண்ணி இருப்பது தான் குடும்பத்துக்கு நல்லது............புன்னகை....அது தான் கிருஷ்ணா , ஜானுக்கு செயின் வாங்கி தந்திருக்கா ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 03, 2015 10:42 am

காபி எஸ்டேட் ஓனர் கனகலிங்கம்
=================================
காபி எஸ்டேட் ஓனர் கனகலிங்கத்தின் வீட்டின் முன்பாக பல கார்கள் நின்றிருந்தன. ஊட்டியில் அவருக்கு நிறைய காபித் தோட்டங்கள் இருந்தன.அவருடைய ஒரேமகள் சாந்தி. B.Sc..பட்டதாரி.மேற்கொண்டு படிப்பதற்கு சாந்தி விரும்பாததால் அவளுக்கு வரன் தேடும் முயற்சியில் கனகலிங்கம் ஈடுபட்டார்.

காரில் வந்த பெரிய மனிதர்கள் வரவேற்பறையில் சோபாவில் அமர்ந்திருந்தனர். கனகலிங்கம் பரபரப்புடன் காணப்பட்டார்.சமையலறையிலிருந்த மனைவியிடம் ஓடிவந்து," காபி ரெடியாயிடுச்சா?எல்லாரும் வந்துட்டாங்க!சீக்கிரம் காபியை சாந்திகிட்ட கொடுத்தனுப்பு" என்று சொல்லிவிட்டு வரவேற்பறைக்கு ஓடினார்.

மணப்பெண் போல அலங்காரம் செய்துகொண்டு சாந்தி, ஒரு தட்டில் காபி டம்ளர்களை வைத்து எடுத்துக்கொண்டு வந்தாள்.வந்திருந்த பெரிய மனிதர்கள் ஆளுக்கொரு காபி டம்ளரை எடுத்துக்கொண்டனர்.

" இவள்தான் என்மகள் சாந்தி " என்று கூறி எல்லோருக்கும் தன் மகளை அறிமுகம் செய்து வைத்தார் கனகலிங்கம்.சாந்தி எல்லோருக்கும் வணக்கம் சொன்னாள்.

காபியை ருசித்தபடியே எல்லோரும் சாந்தியைக் கவனித்தனர்.காபி குடித்து முடித்த பிறகு வந்திருந்த பெரிய மனிதர்கள் தங்களுக்குள் கூடிப் பேசினர். பிறகு கனகலிங்கத்தைப் பார்த்து," மிஸ்டர் கனகலிங்கம்! எங்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. ஒரு நல்ல நாள் பார்த்து மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கலாம்" என்று கூறிவிட்டு அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

கனகலிங்கம் மனைவியிடம் ஓடிவந்தார். அவருடைய மனைவி அவரைப் பார்த்து,"என்னங்க! என்ன சொன்னாங்க? அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களா?"

" நம்ம காபி எஸ்டேட்டின் புதிய கண்டுபிடிப்பான காபிக்கொட்டை பீபரி 32 வோட டேஸ்டும்,பிளேவரும் ரொம்ப பிரமாதம்னு சொன்னாங்க! அந்த காபிக்கொட்டையில நீ போட்ட காபி A1..அப்படின்னு சொல்லிட்டாங்க! ஒரு நல்ல நாள் பார்த்து ஏஜென்ஸி அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்னு சொல்லிட்டாங்க!"என்று சொன்னார் கனகலிங்கம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 10:53 am

// நம்ம காபி எஸ்டேட்டின் புதிய கண்டுபிடிப்பான காபிக்கொட்டை பீபரி 32 வோட டேஸ்டும்,பிளேவரும் ரொம்ப பிரமாதம்னு சொன்னாங்க! அந்த காபிக்கொட்டையில நீ போட்ட காபி A1..அப்படின்னு சொல்லிட்டாங்க! ஒரு நல்ல நாள் பார்த்து ஏஜென்ஸி அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்னு சொல்லிட்டாங்க!"என்று சொன்னார் கனகலிங்கம்//

இப்படித்தான் முடிவு இருக்கும் என்று நான் நினைத்தேன் புன்னகை...........சூப்பர் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 12:23 pm

அய்யா ,நான் நினைத்தபடியே ,முடிவு இருந்தது .
twist மாற்றவேண்டிய தருணம் என நினைக்கிறேன் புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக