புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
75 Posts - 57%
heezulia
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
Guna.D
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
70 Posts - 56%
heezulia
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
38 Posts - 31%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10எனது கவிதைகள் ! - Page 9 Poll_m10எனது கவிதைகள் ! - Page 9 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !


   
   

Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 16, 2015 8:38 pm

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 09, 2015 7:22 am

நன்றி ஷோபனா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 09, 2015 9:19 pm

காமமும், நாணமும்
=====================
தலைவியின் உள்ளத்திலே காமத்திற்கும் ,நாணத்திற்கும் இடையே போராட்டம் நடக்கிறது.முதலில் நாணம் பேசுகிறது.பிறகு காமம் பேசுகிறது.

நாணம்:

காமம் பெண்ணுக்கு அழகல்ல
காமம் பெண்ணுக்கு ஏமம் தராது
கழிமிகு காமத்தால்
கற்பை இழந்தாள் அகலிகை!
எழில்மிகு மூக்கை
இழந்தாள் சூர்ப்பனகை!
நாணமென்னும் நகையணிந்து
பேணவேண்டும் பெண்கள் தம்மை!
தமிழகத்துப் பெண்களின் தலையாய
சொத்தே தலைகவிழ்க்கும் நாணம்தானே!

ஆகவே

காமமே! கடுகிப்போ! இவள் நெஞ்சில்
கடுகளவும் உனக்கு இடமில்லை!

என்று நாணம் சொல்ல ,கடுப்படைந்த


காமம்:

வாழ்க்கை என்னும் மாபெருங் கடலில்
இல்லறப்படகு இனிதாய்ச் செல்ல
காமம் என்னும் துடுப்பு வேண்டும்.
ஆண்பெண் சேர்க்கையின்றி அவனி ஏது?
அந்த
ஆண்டவனையே நான் விட்டு வைக்கவில்லையே!
கரும்பு வில்கொண்டு காமன் விடும் மலர் அம்புகளை
இரும்பு இதயம் இருந்தாலும் தடுக்க இயலாதே!
துரும்பு நீ! தூரப் போ! இல்லையெனில்
தூக்கியெறிவேன்! நினைவில் கொள்!

தலைவி:

இருவருக்கு என் உள்ளத்தில் இடமில்லை!
காமம் இருந்தால் நாணத்திற்கு இடமில்லை
நாணம் இருந்தால் காமத்திற்கு இடமில்லை.
ஒருவர் மட்டுமே ஒண்டிக் கொள்ளலாம்.


குறள்:

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே!
யானோ பொறேனிவ் விரண்டு.

நல்ல நெஞ்சே! நீ நாணத்தைக் காப்பாற்ற நினைத்தால் , காமத்தை விடுவாயாக! காமமே பெரிதென்று நினைத்தால் நாணத்தை விட்டுவிடுவாயாக! என்னால் ஒருசேர இரண்டையும் தாங்கமுடியாது.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jun 10, 2015 3:22 am

நன்றாக உள்ளது அய்யா . நீங்கள் திருக்குறளை கவிதையாக்கி தருகிறீர்கள் . நன்றி அய்யா . புரிந்து கொளவும் பல விஷயங்களை தெரிந்து கொளவும் உதவுகிறது . எனது கவிதைகள் ! - Page 9 103459460 எனது கவிதைகள் ! - Page 9 1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 10, 2015 7:36 am

பாராட்டுக்கு நன்றி ஷோபனா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 10, 2015 10:51 pm

உப்பும் சர்க்கரையும் !
=====================
மோர்சாதம் உண்ணுகையில் கணவன் மனைவியிடம்
"ஊர்செல்கிறேன் வருவதற்கு நாளாகும்" என்றான்

அதைக்கேட்டதும்
விழிநீர் பெருக்கி அழுதாள் மனைவி
வழியும் நீரைத் துடைத்தான் கணவன்

"கண்ணே! அழாதே! கவலையை விட்டுவிடு
எண்ணிப் பத்துநாளில் வருவேன்" என்றான்.

அப்போது அவள்
"உண்ணும் சோற்றுக்கு உப்பிட மறந்துவிட்டேன்.
மண்ணை உண்பதுபோல் உண்டு முடித்தீரோ?"
என்று கேட்டாள்.

" கண்ணே நீ!
விழிநீர் பெருக்கி அழுதபோது சோற்றில்
விழுந்தது அம்மா இரண்டொரு துளிகள்
மூடமறந்து கண்கள் அழுதகண்ணீர் நீ
போடமறந்த உப்பைப் போட்டு விட்டதம்மா!"
என்றான்.

மாலை மணி நான்காயிற்று
மனைவியிடம் கணவன் கேட்டான்.

"விடைபெற்றுக் கொள்கிறேன் கண்ணே நீசெய்த
வடைஇரண்டும் காபியும் கொண்டு வா! என்றான்.

அப்போது கைபேசி கத்தியது.
கத்திய கைபேசியில் கணவன் பேசினான்.

"ஒத்திப்போடு பயணத்தை" என்று
சத்தமிட்டுப் பேசினார் மேலாளர்.

அருகில் நின்றிருந்த
மான்விழியாள் மங்கையவள் காதுகளில்
தேனாகப் பாய்ந்தது இச்செய்தி.
ஆனந்தக் கண்ணீர் கொட்டியது அருவிபோல.

அதைக்கண்ட கணவன்
" ஏன் கண்ணே அழுகிறாய்? பயணம்
ரத்தான பின்னும் முத்தான கண்ணீர் எதற்கு?"
என்றான்.

" அத்தான்! இது அழுகையல்ல ஆனந்தக் கண்ணீர்!
தித்திக்கும் அதிமதுரம் போல் இனிக்கும்"
என்றுரைத்தாள்.

"அப்படியானால் இந்தக்
காபியிலே உன் கண்ணீரைக் கலந்துவிடு!
சர்க்கரை போட மறந்து விட்டாய்" என்றான்.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jun 11, 2015 3:11 am

சிரி சிரி சர்க்கரையும் உப்பும் ஒன்றே . நல்ல கவிதை அய்யா . சூப்பருங்க சூப்பருங்க

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 11, 2015 7:33 am

ஷோபனாவின் பாராட்டுக்கு நன்றி



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 11, 2015 8:08 am

பாப்பாவுக்காக
===========
பறவை தேடுவது இரை
பக்தன் தேடுவது இறை

புலியைப் பார்த்தால் கிலி
சொன்னதைச் சொல்வது கிளி

கடலில் வீசுவது அலை
நண்பனை விருந்துக்கு அழை

உடலில் இருப்பது பலம்
உண்ண இனிப்பது பழம்

ஆற்றின் இருபுறம் கரை
ஆடையில் படிவது கறை

மதுவின் நினைப்பை விலக்கு
மங்கையர் வீட்டின் விளக்கு

வயலில் விளைவது களை
வளைந்து கொடுப்பது கழை

சமைக்க வைத்திடு உலை
சம்பளம் பெறுவதற்கு உழை

வீட்டின் பின்புறம் கொல்லை
திருடன் அடிப்பது கொள்ளை

மாட்டுக்கு இருப்பது வால்
மரத்தை அறுப்பது வாள்

பொங்கலில் இடுவது வெல்லம்
பொங்கிப் பாய்வது வெள்ளம்

இராமன் விட்டது பாணம்
தாகம் தணிப்பது பானம்

அரசன் இடுவது ஆணை
அசைந்து வருவது ஆனை.

கணவன் கட்டியது தாலி
குழம்புக்கு எண்ணையிட்டு தாளி

காட்டில் வாழ்வது புலி
கரைத்து விடுவது புளி

வாசலில் கட்டுவது வாழை
குளத்தில் இருப்பது வாளை

அப்பா செய்வது வேலை
உண்பது மூன்று வேளை

மரத்தில் இருப்பது இலை
துணியில் இருப்பது இழை

நாளின் தொடக்கம் காலை
வண்டியை இழுப்பது காளை

வயிற்றில் வருவது சூலை
செங்கல் சுடுவது சூளை

மீனைப் பிடிப்பது வலை
மாதர் அணிவது வளை

வீட்டை ஆக்குவது கல்லு
வீட்டை அழிப்பது கள்ளு

பாம்பைக் கண்டால் கொல்லு
குதிரை உண்பது கொள்ளு

பருக இனியது பால்
நீறில்லா நெற்றி பாழ்

சுவரில் அடிப்பது ஆணி
மாதத்தின் பெயரும் ஆனி

உண்ணும் உணவு ஊண்
தின்னும் புலால் ஊன்

கண்ணால் உலகைக் காண்
விலங்குகள் வாழ்வது கான்

தருமம் செய்வது அறம்
இரும்பை அறுப்பது அரம்

பரந்து கிடப்பது பரவை
வானில் பறப்பது பறவை

ஏழைகளுக்கு மனம் இரங்கு
ஏணியிலிருந்து கீழே இறங்கு

தேங்காய் நாரை உரி
வெண்ணெய் வைப்பது உறி

அடுப்பில் விறகை எரி
குப்பையை வெளியில் எறி

அடுப்பில் எரிவது கரி
அன்னை சமைப்பது கறி

பாம்பைக் கொல்வது கீரி
பழத்தைப் பிளந்திடு கீறி

துணியை நெய்வது தறி
நெற்றியில் நீறு தரி

எலியைப் பிடிப்பது பொறி
எண்ணையில் அப்பளம் பொரி

குற்றம் செய்தால் சிறை
தலையில் மயிரைச் சிரை

காட்டில் வாழ்வது மரை
கடவுளுக்கு ஓதுவது மறை

வீட்டின் மேற்புறம் கூரை
மணப்பெண் அணிவது கூறை

தலைவர்கள் பேசுவது உரை
தலையணைக்கு இடுவது உறை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 11, 2015 8:14 am

ஒன்றும் ஒன்றும் இரண்டு
===================
ஒன்றும் ஒன்றும் இரண்டு
கடவுள் ஒருவர் உண்டு.

இரண்டும் ஒன்றும் மூன்று
வீட்டில் மரக்கன்று ஊன்று.

மூன்றும் ஒன்றும் நான்கு
நல்ல பொருளை வாங்கு.

நான்கும் ஒன்றும் ஐந்து
ஆடை போகும் நைந்து.

ஐந்தும் ஒன்றும் ஆறு
பிறருக்குச் செய்யாதே ஊறு.

ஆறும் ஒன்றும் ஏழு
ஊரார் மெச்ச வாழு.

ஏழும் ஒன்றும் எட்டு
குப்பையை வெளியில் கொட்டு.

எட்டும் ஒன்றும் ஒன்பது
செரித்தபின் நன்று உண்பது.

ஒன்பதும் ஒன்றும் பத்து
ஊருடன் வாழ்வோம் ஒத்து.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 11, 2015 8:22 am

யார் மனிதன்?
============
தட்டிப் பார்த்தே மண்கலத்தை வாங்குகிறார்
கொட்டிப் பார்த்தே தேங்காயைத் தெளிகிறார்
உரைத்துப் பார்த்தே தங்கத்தின் குணமறிவார்
அரைத்துப் பார்த்தே சந்தணத்தின் மணமறிவார்.
குடித்துப் பார்த்தே தண்ணீரின் சுவையறிவார்
ஒடித்துப் பார்த்தே வெண்டையின் நலமறிவார்.
நூலைப் பார்த்தே சேலையின் தரமறிவார்
தோலைப் பார்த்தே பழத்தின் நிலையறிவார்.
மனிதனை அறிதற்கு உரைகல் எதுவெனப்
புனிதனே! இறைவா! புத்திக்குத் தெரியலையே!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக