புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
156 Posts - 79%
heezulia
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
1 Post - 1%
prajai
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
1 Post - 1%
Pampu
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
321 Posts - 78%
heezulia
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
8 Posts - 2%
prajai
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10எனது கவிதைகள் ! - Page 8 Poll_m10எனது கவிதைகள் ! - Page 8 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !


   
   

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 16, 2015 8:38 pm

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 05, 2015 6:36 pm

மாற்றுப் பாதை.
=================
இளமையில் அன்னையை இழந்த குழந்தைக்கு
அளப்பரிய அன்பும் அமுதப் பாலும்
எட்டா நிலையில் உதவிக்கு வருவது
புட்டிப் பாலெனும் மாற்றுப் பாதையாம்!

மரபுக் கவிதையின் இலக்கணம் அறிந்து
சரபக் கவிகள் சாற்றும் புலமை
அரிதினும் அரிதே! அத்தகு திறமை
தெரிந்தவர் சிலரே! அவற்றோ ருள்ளும்
கவினுறு பாட்டால் கற்போர் நெஞ்சைக்
கட்டிப் போட்டவர் சிலரே அறிவீர்!
இத்தகு திறமை எதுவும் இன்றி
மெத்தகு தமிழைத் துணையாய்க் கொண்டு
யாப்பின் இலக்கணம் அறியா மாந்தரும்
காப்பியம் படைக்கக் கைகொடுத் துதவும்
வேற்றுப் பாதையென புலவோர் வைத்த
மாற்றுப் பாதையே புதுக்கவி தையாம்!

இம்மையும் மறுமையும் துணைக்கு வந்து
மம்மர் அறுக்கும் மாமருந் தென்னும்
கல்வியைப் பள்ளியில் கற்கா மாந்தர்
தொல்லையும் துயரமும் எய்திய காலை
உதவிக்கு வந்து உறுதுயர் தீர்த்து
பதவியும் புகழும் பெற்றுத் தந்திடும்
தபால் வழியே கல்வி பயின்றிடும்
உபாயம் நமக்கொரு மாற்றுப் பாதையாம்!

பலமணி நேரம் வரிசையில் நின்று
உலகைக் காக்கும் இறைவனைக் கண்ணால்
கண்டு வணங்க இயலா மாந்தரும்
தொண்டு செய்யும் உள்ளம் இருந்தால்
ஆதியும் அந்தமும் இல்லா இறைவனின்
அருளை எளிதில் பெறலாம் என்று
திருமந் திரமெனும் நூலில் ஆங்கே
ஒருமந் திரத்தை உரைத்தார் கேளீர்!
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஈகில்
படமாடும் கோயில் பகவற்கு அதுஆம்
என்றதோர் அறத்தை எளிதில் யாரும்
நின்ற இடத்தில் செய்யும் திறத்தால்
உண்ணும் முன்பு ஒருபிடி அன்னம்
நண்ணும் உயிர்கள் நாயுடன் பூனை
காக்கைக் குருவி இவற்றுடன் ஆங்கே
யாக்கை மெலிந்து இரப்போர் தமக்கும்
அளித்து வந்தால் அதுவே இறைவனைக்
களிக்கச் செய்யும் மாற்றுப் பாதையாம்!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 06, 2015 3:48 pm

பன்மாயக் கள்வன்.
=====================
கைப்பிடித்த நாள் முதலாய்
கண்கலங்கி நிற்கின்றேன்.
மாலையிட்ட கணவனுக்கு
மங்கை மனம் தெரியவில்லை.
வருகின்ற வருமானம்
வாடகைக்கும் உணவுக்கும்
சரியாகப் போகின்ற
சராசரி குடும்பத்தில்
குடிப்பழக்கம் வந்திட்டால்
குடிமுழுகிப் போமென்று
எடுத்துரைத்துச் சொன்னால்
எரிந்து விழுகின்றான்.
கண்டபடி ஏசுகிறான்
கைநீட்டி அடிக்கின்றான்.
பொய்கள் பேசுகிறான்
புன்மை செய்கின்றான்.
சிறுவாட்டுப் பணத்தைத்
திருடிக் குடிக்கின்றான்.
தட்டிக் கேட்டாலோ
எட்டி உதைக்கின்றான்.

ஆனால்
மாலைப் பொழுதினிலே
மறுஜென்மம் எடுக்கின்றான்
இரவு நேரத்தில்
இனிக்கப் பேசுகிறான்.
தலைவலி என்றாலோ
தைலம் தேய்க்கின்றான்.
பாலைக் காய்ச்சியே
பருகத் தருகின்றான்.
செல்லமே! என்றழைத்து
மெல்லத் தொடுகின்றான்.
கரும்பே! என்றழைத்து
கட்டி அணைக்கின்றான்.
அந்த அணைப்பினிலே
ஆசை வந்ததடீ!
பெண்மை தோற்றதடீ!
ஆண்மை வென்றதடீ !

குறள்:
=====
பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. ( கற்பியல்-1258 )

பொருள்:
========
பல பொய்களையும் பேசவல்ல கள்வனது பணிவான இனிய சொற்கள் என்னுடைய பெண்மைக் கோட்டையை உடைக்கும் படையாகும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 07, 2015 2:51 pm

காவடிச் சிந்திலே காதலி.
==========================
முழுநிலா போன்றதொரு முகமே !- அதைப்
பார்ப்பதில் தோன்றும் தனிசுகமே !- இந்த
ஜெகத்தினில் அவளழகை
வெல்லுகின்ற பெண்ணொருத்தி
இல்லையே !- சொல்லு கிள்ளையே !

கற்றைக் குழலில் மணம் வீசும்- முல்லைப்
பற்களைக் கண்டு கண்கள் கூசும்- அவள்
கன்னமதில் தோன்றுகின்ற
குழியிலே நான்விழுந்து
தவிப்பேன் !-இன்பம் குவிப்பேன் !

கிடக்கும் நெற்றியிலே சுட்டி- நித்தம்
காலில் ஒலியெழுப்பும் மெட்டி- அவள்
நடக்கும் நடையழகைக்
காணவே கண்கள்கோடி
வேணும்-அன்னம் நாணும் !

பாம்பினை ஒத்ததொரு சடையே !-தேடிப்
பார்க்கினும் கிடைக்காத இடையே !-மலர்க்
காம்பினை அகற்றாது
பூக்களைச் சூடினாலும்
எரியும்- இடை முறியும்.

தங்கத்திலே வார்த்தெடுத்த பதுமை- இந்தத்
தரணியில் காணாத புதுமை-கடல்
வங்கத்திலே விளைகின்ற
முத்தெடுத்து திருமணத்தை
முடிப்பேன்-கரம் பிடிப்பேன்.

கன்னல்சுவை வெல்லுகின்ற மொழியே !- அவள்
காதலைச் சொல்லுமந்த விழியே !- அந்த
முன்னழகை வெல்லுகின்ற
பின்னழகைக் காணும்போது
மறப்பேன்- உயிர் துறப்பேன் !

கம்பநாடன் பாடிவைத்த சீதை- தந்த
கற்புநெறி அவள்கொண்ட பாதை- மலர்
அம்பெடுத்து மன்மதன்
கோடிமுறை தொடுத்தாலும்
மனையாள்- பிறரை நினையாள்!

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sun Jun 07, 2015 8:56 pm

அனைத்து கவிதைகளும் அருமையோ அருமை ஐயா.
மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்!!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 07, 2015 9:16 pm

நன்றி ! பிரீதிகா சந்திரகுமார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 08, 2015 1:27 pm

இப்போதே திருமணம்.
========================
கண்ணுக்கு லட்ஷணமாய் காசுபணம் உள்ளவனாய்
......கல்வியிலே கம்பனாய் காண்பதற்கு எளியவனாய்
பெண்ணுக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்தவனாய்
......பெரியோர்கள் கைகூப்பி வணங்கத் தகுந்தவனாய்
புண்ணுக்கு மருந்தேபோல் உதவும் குணத்தினனாய்
......புவிமாந்தர் போற்றும் உயர்குலத்துக் கோமானாய்
மண்ணிலே யாரேனும் இருந்தால் அவனைநான்
......மாலையிட்டு மணமுடிக்க இப்போதே ஒப்பிடுவேன்.

மணமகளின் தகுதிகள் !
========================

மூக்கோ சப்பை; முறமொத்த காது
தூக்கிய பற்கள் ; துருத்திய நாக்கு
முட்டைக் கண்கள்; முகமோ ஆந்தை
அட்டைக் கறுப்பு;கால்கள் நொண்டி
குட்டை உருவம்;குனிந்த முதுகு

அவளுந்தான்

கல்வி அறிவில்லா கைநாட்டுப் பேர்வழியாம்
காசு பணமில்லா அன்றாடம் காய்ச்சியாம்
ஒண்டிக் குடித்தனம்; ஓராயிரம் பொத்தலுடன்
அண்டி இருந்திடுவாள்; அதுவே அவள்வீடு.

அவளின் சபதத்தை அறிந்திருந்த பெரியோர்கள்
தவமாய் இருக்கின்ற அவளின் நிலைகண்டு

அம்மா!பெண்மணியே! அறிவில் சிறந்தவளே!
சும்மா வந்திடுமா சுகபோக வாழ்க்கையெலாம்?
முடவன் கொம்புத்தேன் ஆசை பட்டதுபோல்
நடக்காத ஒன்றிற்காய் பருவத்தை வீணாக்கி
நாளைக் கடத்துகிறாய்! நல்லவளே! இதுகேட்பாய்!
வேளை போய்விட்டால் மீண்டும் வந்திடுமா?
உன்னுடைய தகுதிக்கு ஊமையோ செவிடோ
கண்ணிரண்டும் இல்லாத குருடோ அதுவன்றி
கொட்டும் மழைக்கும் பள்ளிக்கு ஒதுங்காத
கட்டுடல் கொண்ட காளை ஒருவன்தான்
கிட்டுவன் கணவனாய் இதுவே உறுதியென

சட்டென அவள் உரைப்பாள்

ஐயா! பெரியோரே! அறிவிற் சிறந்தோரே!
எத்தனை குறைகள் என்னிடம் இருந்தாலும்
அத்தனையும் பொறுத்தென்னை ஆட்கொள்ள வந்திடுவான்
கண்ணை இமைபோலே வைத்தென்னைக் காத்திடுவான்
பெண்ணை இடபாகம் வைத்திட்ட சிவனருளால்
முப்பத்து முக்கோடி தேவரும் மலர்சொரிய
தப்பாது என்னைக் கைப்பிடித்து மணந்திடுவான்.
நிறத்தழகு என்பதெல்லாம் நில்லாது மறைந்துவிடும்
புறத்தழகு என்பதெல்லாம் காலத்தால் அழிந்துவிடும்
அழகென்று சொல்வதெல்லாம் அவரவர் பார்வையிலே
பழகும்குணமொனநிரந்தரஅழகாகும்
தானாகத் தங்கம் ஆபரணம் ஆகாது
தாமிரம் சேர்ந்தாலே தங்கநகை ஆவதுபோல்
தங்கமாய் அவரிருக்கத் தாமிரமாய் நானிருந்து
பங்கமிலா இல்வாழ்வைப் பாங்காக நடத்திடுவோம்.
அசைந்தாடி வருகின்ற உருள்பெருந் தேரொன்று
இசைவான அச்சாணி இல்லாமல் ஓடாது
தேராக அவரிருக்க அச்சாணி நானாக
ஊர்மெச்ச வாழ்ந்திடுவோம் உண்மை இதுவாகும்.
மணமுள்ள மலரெல்லாம் மாலையாய் ஆவதற்கு
இணக்கமாய் நாரொன்று இருந்திட வேண்டுமய்யா!
நன்மலராய் அவரிருக்க நாராக நானிருந்து
இல்வாழ்க்கை மாலைதனை இருவரும் கட்டிடுவோம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 08, 2015 8:10 pm

என் கணவன்
===============
என்னை மணம்பேச அன்றொருநாள் மாலையிலே
மன்னவனும் வந்தானே ! உற்றார் உறவோடு !

வந்தவனை நான்பார்க்க ; என்னை அவன்பார்க்க
சிந்தனைப் பறவையோ சிறகடித்துப் பறந்ததுவே !


வந்தவன்


கோவலனாய் இருப்பானோ ; கொடுமைபல செய்வானோ
பூவுக்குப் பூ தாவும் வண்டுமனம் கொண்டவனோ ?
குடிப்பழக்கம் உடையவனோ ? குடித்துவிட்டு வந்தென்னை
அடித்துத் துன்புறுத்தி ஆனந்தம் கொள்பவனோ ?
வரவுக்கு மீறியே செலவுகள் செய்பவனோ ?
இரவில் தாமதமாய் இல்லம் வருபவனோ ?
மாமன் மாமியை உதாசீனம் செய்பவனோ ?
சாமியே இல்லையெனச் சத்தியம் செய்பவனோ !

என்றெல்லாம் எண்ணி அலமரும் வேளையிலே



தந்தைஎன் முகம்நோக்கித் தாயே ! மணமகனைச்
சிந்தை களிகூரப் பார்த்தேஉன் சம்மதத்தை
இச்சபையில் தெரிவித்தால் இவ்வூர் மக்களெல்லாம்
மெச்சும் வகையினிலே திருமணத்தை நடத்திடுவேன்


என்றலும்


நாணித் தலைகுனிந்தேன்! நகத்தால் நிலம்கீறி
தூணின் பின்சென்று முகம்புதைத்து சிரித்திடவும்
" மகளே ! சம்மதத்தை மறைவாகத் தெரிவித்தாய் !
புகழே ! நானுன்னை புதல்வியாய்ப் பெற்றதற்கு !"

என்றுரைத்தார்.


மத்தளம் கொட்ட , மங்களஇசை முழங்க
கொத்தலர் பூங்குழலி கோதை என்கழுத்திலே
இந்திரன் முதலாய தேவரும் வாழ்த்திடவே
மந்திரத் தாலியை மன்னவனும் கட்டினனே !



சிங்கநிகர்த் தோற்றம்; சிரித்தமுகம் கொண்டான்
குங்குமப் பொட்டழகன் ; குனித்த புருவத்தன்
தங்கநிற மேனி; தருவதிலோ கர்ணன்
அங்கமெலாம் வர்ணிக்க ஆயிரம் நா வேண்டும்.
இந்தப் பிறவிக்கு இருவேறு மாதரை
சிந்தையிலும் நினையாத சீரிய பண்பாளன்
முன்னைசெய் தவமோ ! மூண்டெழுந்த காதலால்
என்னைக் கைப்பிடித்தே துணையாய் ஏற்றிடவே
எங்கிருந்தோ வந்தான்; என்னுயிரே நீ என்றான்!
இங்கிவனை யான்பெறவே என்னதவம் செய்தேனோ ?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 08, 2015 8:19 pm

கிழவிமேல் காதல் கொள்ளடா!
================================
கிழவிமேல் காதல் கொள்ளடா -ஒளவைக்
கிழவிமேல் காதல் கொள்ளடா!

ஆத்திச் சூடியும் கொன்றை வேந்தனும்
ஏத்திப் பாடி உலகோர் உய்ய
மூதுரை சொல்லி நல்வழி தன்னை
பேதற மொழிந்து செந்தமிழ் செய்த

கிழவிமேல் காதல் கொள்ளடா-ஒளவைக்
கிழவிமேல் காதல் கொள்ளடா!

அரிதின் பெற்ற நெல்லிக் கனியை
அதியன் என்னும் மன்னன் கொடுக்க
நெடுநாள் வாழ்ந்து சங்கத் தமிழால்
புற நானூற்றில் புதுமை செய்த

கிழவிமேல் காதல் கொள்ளடா-ஒளவைக்
கிழவிமேல் காதல் கொள்ளடா!

ஒல்காப் பெரும்புகழ் தொல் காப்பியனால்
சொல்லும் பொருளும் எழுத்தும் கண்டு
புலவர் நாவில் பொருந்திய தமிழின்
வளமை கூட்ட இளமை துறந்த

கிழவிமேல் காதல் கொள்ளடா-ஒளவைக்
கிழவிமேல் காதல் கொள்ளடா!

அரிய பிறப்பு மானுடம் என்றும்
பெரியது தொண்டர் பெருமை என்றும்
கொடிது கொடிது வறுமை என்றும்
நெடிது உரைத்து நெஞ்சினில் நின்ற

கிழவிமேல் காதல் கொள்ளடா-ஒளவைக்
கிழவிமேல் காதல் கொள்ளடா!

கற்றது கைப்பிடி மண்ணள வென்றும்
விட்டது இந்த உலகள வென்று
ஏழை மக்கள் அன்புடன் கொடுத்த
கூழைக் குடித்து நீதிகள் உரைத்த

கிழவிமேல் காதல் கொள்ளடா-ஒளவைக்
கிழவிமேல் காதல் கொள்ளடா!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 08, 2015 8:32 pm

பூதம் கொடுத்த புதையல் !
==========================
அதுஒரு அழகிய அற்புதக் காடு
ஆறும் மலையும் இருக்கும் காடு
உதய சூரியன் ஒளியின் வெள்ளம்
உள்ளே நுழையா அடர்ந்த காடு
துள்ளிப் பாயும் அருவிகள் மலையில்
தும்பைப் பூவெனக் கொட்டும் ஒருபால்
புள்ளும் மாவும் அருகே சுனையில்
புதுநீர் அருந்தும் காட்சிகள் ஒருபால்
மலையை ஒத்த யானைகள் கூட்டம்
மத்தகம் முட்டி போரிடும் ஒருபால்
கலைமான் கூட்டம் காதலி தம்மோடு
அலையெனப் பாய்ந்து ஓடும் ஒருபால்
கோடை இடியின் தாளம் கேட்டு
ஆடும் மயில்கள் கூட்டம் ஒருபால்
கடுவன் குரங்கு மந்தி தம்மோடு
காதல் செய்யும் காட்சிகள் ஒருபால்

இயற்கை அன்னையின் அத்தனை அழகும்
கொட்டிக் கிடக்கும் காட்டின் நடுவில்
ஆயிரம் ஆண்டுகள் வளர்ந்து செழித்த
ஆல மரம்தன் விழுதுகள் பரப்பி
கோல எழிலொடு தண்ணிழல் கொடுத்து
வழியிடை வருவோர் போவோர்க் கெல்லாம்
கழிபெரும் துணையாய் விளங்கும் காலை

கருநிறங் கொண்ட பூதம் ஒன்று
காட்டில் எங்கும் அலைந்து திரிந்து
ஆல மரத்தின் அருகே வந்தது.
நெடிய மரத்தின் உச்சியில் தங்கிய
கொடிய பூதம் கர்வம் கொண்டு
மரத்தின் அடியில் தங்கிய மனிதரை
மிரட்டி அவரை புசித்து வந்தது.

ஒருசமயம்

மாலை நேரம் மயங்கும் வேளையில்
வேலை முடிந்து மக்கள் எல்லாம்
வீடகம் விரைந்து ஏகும் நேரம்
ஆடகப் பொன்னால் செய்த காசுகள்
நிரம்பிய மூட்டையைத் தலையில் சுமந்து
திருடன் ஒருவன் அங்கு வந்தான்.
கொள்ளை அடித்த காசு மூட்டையை
அள்ளையில் வைத்துக் கையால் அணைத்து
தூங்கும் வேளையில் திருடன் முன்னே
ஓங்கிய சினத்துடன் பூதம் தோன்றி
" அற்பப் பதரே ! மானிட உயிரே !"
என்றே விளித்து அவனை நோக்கி
" இனிமேல் இங்கே தூங்குதல் வேண்டாம்
தனியாய் இருக்கும் பூதம் எனக்கு
இனிதாய் அமைந்தது இம்மர வீடு
எனக்கே சொந்தம்; எனக்கே சொந்தம்
ஆலம் உண்ட சிவனும் கூட
ஆல மரத்தின் நிழலில் தூங்க
அனுமதி இல்லை என்றே அறிவாய்!

என்றே பூதம் மிரட்டிய வேளையில்
வெகுண்ட திருடன் பூதம் நோக்கி
"பொல்லாப் பூதமே! நாவை அடக்கு!
எல்லா உயிர்க்கும் இம்மரம் சொந்தம்
விழுதுகள் கொண்ட இப்பெரு மரத்தை
எழுதி உனக்குக் கொடுத்தது யாரோ ?
உன்னைப் படைத்த ஆண்டவன் கூட
என்னைத் தடுக்க இயலா தென்றான்.

உடனே
கரிய பூதம் திருடன் முன்னே
சிறிய குடத்தைக் கண்முன் காட்டி
" இச்சிறு குடத்தில் உன்னிடம் உள்ள
காசுகள் அனைத்தும் போட்டு நிரப்பு.
குடத்தை நிரப்பும் செயலைச் செய்தால்
இடத்தை விட்டு அகல்வேன் உறுதி
மாறாக
காசுகள் குடத்தை நிரப்பத் தவறின்
ஏசுவேன் உன்னை; எடுப்பேன் உயிரை

என்றே பூதம் கூறிய வேளையில்
திருடிய பணத்தை ஒவ்வொன் றாகத்
திருடன் குடத்தில் போடப் போட
நிரம்பா திருக்கும் தன்மை கண்டு
மந்திரக் குடமோ?மாயக் குடமோ?
தந்திரக் குடமோ? எந்திரக் குடமோ?
மதியை மருட்டும் இச்சிறு குடத்தில்
விதியை மாற்றும் ஆற்றல் உளதோ?
இவ்வா றெல்லாம் எண்ணிய திருடன்
கவ்விய பயத்தில் பூதம் நோக்க

உடனே பூதம்,

தீய வழியில் வந்த பொருளால்
மாய இக்குடம் நிரம்பா தறிவாய்!
என்றே கூறிய அப்பெரும் பூதம்
பைய திருடனின் பக்கலில் சென்று
நையப் புடைத்து அவனை உண்டது.


காட்டின் அருகே கிராமம் ஒன்றில்
ஜனகன் என்றொரு விறகு வெட்டி
தினமும் கிடைக்கும் ஊதியம் கொண்டு
மனையும், சுற்றமும் மகிழ உண்டு
இனிதே வாழ்வை நடத்தி வந்தான்.

ஒருநாள் ஜனகன் காட்டில் வெட்டிய
விறகுக் கட்டைத் தலையில் சுமந்து
பெருநடை யாக நடந்து வருகையில்
வழிநடைக் களைப்பும் வலியும் சேர்ந்து
விழியிடைத் தூக்கம் விரைவாய்க் கொணர
ஓய்வு கொள்ள ஆல்மர நிழலில்
சாய்ந்தே படுத்து தூங்கும் வேளையில்
கலகல வென்னும் சிரிப்பொலி கேட்டு
அலறிப் புடைத்து எழுந்தனன்; ஆங்கே
தலையில் கொம்பும் கோரைப் பல்லும்
குலையை நடுக்கும் தோற்றம் கொண்ட
கருநிற பூதம் ஜனகனை நோக்கி
காதுகள் அதிரக் கட்டுரை செய்தது.

" அற்பப் பதரே ! மானிட உயிரே !
வற்றல் உடம்பால் வாடிக் கிடக்கும்
கற்றறி வில்லா ஏழை மனிதா !
எற்றுக் கெந்தன் நிழலில் தூங்கினை ?"
என்றே பூதம் மிரட்டிக் கேட்க,

" ஐயா! நானொரு விறகு வெட்டி
கையால் வெட்டும் விறகினை நாளும்
விற்று வருகின்ற காசினைக் கொண்டு
சுற்றமும் நானும் உண்டு வருகிறோம்
குற்றம் ஏதும் செய்திட வில்லை
வெட்டிய வேலையின் களைப்புத் தீர
கிட்டிய நிழலில் உறங்கும் தகைமையில்
ஆல்மர நிழலில் அயர்ந்து தூங்கினன்
அறியாச் சிறுவன் செய்த பிழையை
பெரியோய் நீவிர் பொறுக்க வேண்டும். "
என்றே சொல்ல

அவ்வுரை கேட்ட கொடிய பூதம்
செவ்விய அவனது திருமுகம் நோக்கி
" என்னிடம் உள்ள இச்சிறு குடத்தில்
உன்னிடம் உள்ள பணத்தைப் போட்டு
நிரப்பி என்முன் காட்ட வேண்டும்
இரக்கம் சற்றும் காட்ட மாட்டேன்.
இட்ட காசுகள் நிரப்பா விட்டால்
கெட்டது உன்குடி; கெட்டது உன்னுயிர்"

என்றலும் ஜனகன் தன்னிட மிருந்த
ஒற்றைக் காசைக் குடத்தில் போட்டனன்.
என்னே அதிசயம்! என்னே அதிசயம்!
பொன்னாய் மாறிய அக்குடம் நிரம்பி
மின்னும் தங்கக் காசுகள் வழிந்தன!
வியத்தகுக் காட்சியைக் கண்ட பூதம்
நயத்தகு மொழிகளால் ஜனகனை நோக்கி
" கண்டோம் ! அரிய காட்சியைக் கண்டோம்!
கொண்டோம் மனதில் மகிழ்வு கொண்டோம்
என்றும் இதுபோல் நிரம்பா இக்குடம்
உன்னால் நிரம்பிய அதிசயம் கண்டோம்
சொந்த உழைப்பால் உடலை வருத்தி
வந்த பணத்தை இட்டால் மட்டுமே
இக்குடம் நிரம்பும் அத்தகு வேளையில்
வக்கிரம் கொண்ட என்னுரு நீங்கி
மனித வடிவம் பெறுவேன் என்ற
புனித வரத்தை இறைவன் அருளினன் ".

என்று சொல்லிய ஒருசில நொடியில்
குன்றை ஒத்த அப்பெரும் பூதம்
மறைந்து அங்கே மானிட வடிவில்
நிறைந்த அழகொடு ஒருவன் தோன்றி
" ஜனகா! இக்குடம் உனக்கே சொந்தம்
மனதால் உன்னை வாழ்த்து கின்றேன்
சொந்த உழைப்பில் வாழும் உன்னை
வந்தனை செய்து வழிபடு கின்றேன்
என்றே சொல்லி நீங்கினன் ஆங்கே.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 09, 2015 3:45 am

அருமை . அணைத்து கவிதைகளும் அருமையாக உள்ளது . மாற்று வழி பற்றிய கவிதை மிகவும் சிறப்பு அய்யா .

Sponsored content

PostSponsored content



Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக