புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
85 Posts - 77%
heezulia
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
250 Posts - 77%
heezulia
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10எனது கவிதைகள் ! - Page 6 Poll_m10எனது கவிதைகள் ! - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !


   
   

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 16, 2015 8:38 pm

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 29, 2015 6:41 pm

நான் கர்ப்பத்தில் கவியானேன் !
=================================
அன்னை கர்ப்பத்தில் உருவான நாள்முதலாய்
...ஆத்திச் சூடியும் கொன்றை வேந்தனும்
என்னை அறியாமல் என்காதில் விழுந்ததுவே
...எதுகையும் மோனையும் என்னைக் கவர்ந்ததுவே
முன்னை நான்செய்த தவத்தின் பயனாக
...முத்தமிழும் கேட்டேனே தாய்வயிற்றில் இருக்கையிலே
பின்னை பிறந்தேனே புலவனாய் இம்மண்ணில்
...தாய்க்கு மட்டுமல்ல தமிழுக்கும் மகனாக !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 29, 2015 6:45 pm

எல்லாம் அவனே !
===================
அளிப்பவனும் அவனே; பெறுபவனும் அவனே !
...அடிப்பவனும் அவனே; அழுபவனும் அவனே !
விளிப்பவனும் அவனே; கேட்பவனும் அவனே !
...விதைப்பவனும் அவனே; அறுப்பவனும் அவனே !
களிப்பவனும் அவனே; கவலைகளும் அவனே !
...கண்களும் அவனே; காட்சிகளும் அவனே !
எளியவனும் அவனே; அரியவனும் அவனே !
...ஏழுலகும் தொழுகின்ற எம்மீசன் அவனே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 29, 2015 6:48 pm

வெண்ணிலா !
================
வானவீதி நீந்தியோடும் வெண்ணிலாவே!- நீதான்
...வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே?
கானவெளியில் ஜோதிவீசும் வெண்ணிலாவே!- உந்தன்
...காதலுக்குக் காத்திருப்பேன் வெண்ணிலாவே!
கூனலான உன்பிறையை வெண்ணிலாவே!-அந்தக்
...கூத்தன்ஏனோ சூடிவைத்தான் வெண்ணிலாவே!
மானமுள்ள மனுஷிஎன்றால் வெண்ணிலாவே!-சிவனை
...மறந்துஎன்னை ஏற்றுக்கொள்வாய் வெண்ணிலாவே!

காயமென்ன உன்முகத்தில் வெண்ணிலாவே!- அந்தக்
...காரணத்தைச் சொல்லிவைப்பாய் வெண்ணிலாவே!
தூயதான உன்ஒளிக்கு வெண்ணிலாவே- அந்தத்
...தும்பைப்பூவும் ஈடுஆமோ வெண்ணிலாவே?
மாயமாக மாதமொருநாள் வெண்ணிலாவே!- நீதான்
...மறைந்துஎங்கே செல்கிறாயோ வெண்ணிலாவே!
தேயுமுன்னைக் கண்டபின்னும் வெண்ணிலாவே!-மாந்தர்
...தேன்நிலவென் றேனுரைத்தார் வெண்ணிலவே?

பாரிமகளிர் உன்னைக்கண்டு வெண்ணிலவே!- பாடும்
...பாட்டிலுள்ளம் பரிதவிக்கும் வெண்ணிலாவே!
மாரிக்காலம் வந்துவிட்டால் வெண்ணிலாவே!-உந்தன்
...முகத்தைநீயும் மூடுகின்றாய் வெண்ணிலாவே!
யாருமுன்னைப் பார்க்குமுன்னே வெண்ணிலாவே!- நீயும்
...என்னருகில் வந்திடுவாய் வெண்ணிலாவே!
வாரியுன்னை அனைத்துநானும் வெண்ணிலாவே!- இன்பம்
...வழங்கியுன்னை வாழ்த்திடுவேன் வெண்ணிலாவே!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 30, 2015 8:58 am

தமிழ்த்தாத்தா உ ,வே .சா .
==========================
ஓடினாய் ஓடினாய் ஓலைச் சுவடிகளைத்
தேடியே நித்தமும் கால்சலித்தாய் -வாடும்
பயிருக்குப் பெய்த மழைபோல் தமிழின்
உயிர்செழிக்க வந்தவனே வாழ்க !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 30, 2015 9:03 pm

அம்மிக்கல்
============
அம்மியே ! உன்னுடைய எண்ணிக்கை இவ்வுலகில்
கம்மியாய்ப் போனதே நாடோறும்-சும்மாவே
வீட்டில் கிடக்கின்றாய் உந்தன் எதிர்காலம்
ஏட்டிலே மட்டும் இனி.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 30, 2015 9:08 pm

ஒரு பேயின் புலம்பல்.
=======================
உச்சி மரத்தின் கிளையே என்வீடு
நச்சி அங்கே நாளெல்லாம் குடியிருப்பேன் !
மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்துவிட்டால்
குரங்கும் நானும் எங்குக் குடியிருப்போம்?
எட்டடுக்கு மாளிகையில் நீங்கள் குடியிருக்க
வெட்டவெளிப் பொட்டலிலே நான்மட்டும் சாகவா?
நாயெல்லாம் வீடுகளில் நன்றாய் சுகித்திருக்க
பேயெல்லாம் வீடின்றி பெருந்துன்பம் அடைவதுவோ?
சுடுகாடும் இடுகாடும் மெல்லமெல்ல நாடாக
வீடின்றி நான்மட்டும் விழிபிதுங்கி நின்றிடவோ?
எங்களைச் சீண்டாதீர்! எச்சரிக்கை செய்கின்றேன்
தங்க இடமின்றி தவிக்கும் நிலைவந்தால்
உங்களிடம் வந்திடுவேன் உம்இல்லம் குடிபுகுந்து
அங்கிருக்கும் பேயுடனே அடுத்தொன்றாய் வாழ்ந்திடுவேன்!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 31, 2015 5:25 pm

கள்வன் மகன்.
================
கற்றறிந்தோர் ஏத்தும் கலித்தொகை காவியத்தில்
கபிலர் காட்டும் காதல் ஓவியத்தின் செய்யுள் வடிவம் இது !


தோழி: யாரடி வந்தார் ? என்னடி சொன்னார் ?
......... ஏனடி இந்த உல்லாசம் ?

தலைவி: ஆற்றங்கரை மணலில் ஆலமர நிழலில்
............. ஊற்றுநீர் தோண்டி உண்டு மகிழ்ந்ததெல்லாம்
............. நேற்று நடந்ததுபோல் இருக்குதடி ! அந்த
............. நினைவு நெஞ்சினிலே இனிக்குதடி !
............. சின்னஞ்சிறு வயதில் அறியாப் பருவத்தில்
............. கன்னல் மொழிபேசி களிப்புடனே நம்மோடு
............. ஆடி மகிழ்ந்த அச்சிறுவன் நாமிருவர்
............. கட்டியமணல் வீட்டை சின்னஞ்சிறு  காலால்
............. எட்டியே உதைத்துச் சிதைத்த அச்சிறுவன்
............. தலையில் சூடிய மலர்களைப் பறித்து
............. குலைத்து வீசி மகிழ்ந்த அச்சிறுவன்
............. பந்தைக் கவர்ந்து ஓடியே நம்மனதை
............. நொந்து போகவே செய்த அச்சிறுவன்
............. நெடுநாள் கழித்து நேற்று வந்தனனே !
............. அடடா ! என்னே ! அவனது தோற்றம்!
............. பரந்த மார்பும் விரிந்த தோளும்
............. சுருண்ட குழலும் கூரிய கண்ணால்
............. மருண்டு நோக்கிய பார்வையும் கண்டு
............. நாணம் மிக்குநான் உள்ளேசெல்ல
............. காண என்னை விரும்பிய அவனோ
............. " அம்மா ! கொஞ்சம் தண்ணீர் வேண்டும்
............. அருந்தக் கொடுப்பீர் ! " என்றே கேட்க
............. அன்னை எந்தன் முகத்தை நோக்கி
............. " கண்ணே ! யாரோ வாசலில் வந்து
............. தண்ணீர் வேண்டி காத்து நின்றார்
............. தங்கக் குவளையில் தண்ணீர் மொண்டு
............. தாகம் தீர்த்து வாவென இயம்ப
............. அவனது தாகம் தீர்க்க வேண்டி
............. குவளை அவன்கை கொடுத்த போது
............. வளையல் அணிந்த எந்தன் கையை
............. இளையோன் அவனும் இறுகப் பற்ற
............. ஐயோ ! அம்மா இவனைப் பாரென
............. பொய்யாய் நானும் குரலை எழுப்ப
............. " என்ன நடந்தது ? என்றே அலறி
............. அன்னையும் பயந்து அவ்விடம் போத
............. காதலன் தன்னைக் காட்டிக் கொடுக்க
............. பேதை நானும் விரும்பா நிலையில்
............. " உண்ணும் நீரை விக்கினன் " என்றே
............ நம்பும் படியாய்ப் பொய்யைச் சொல்ல
............ " ஐயோ ! பாவம் ! ' என்றே சொல்லி
............ அன்னையும் அவனது முதுகைத் தடவ
............ என்னைப் பார்த்து அப்பெருங் கள்வன்
............ புன்னகை செய்தே கண் சிமிட்டினனே!





சுடர்த் தொடீஇ ! கேளாய் ! தெருவில் நாம் ஆடும்
மணற்சிற்றில் காலிற் சிதையா , அடைச்சிய
கோதை பரிந்து , வரிப்பந்து கொண்டோடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, " இல்லிரே !
உண்ணுநீர் வேட்டேன் " என வந்தாற்கு, அன்னை,
அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் , சுடர் இழாய் !
உண்ணுநீர் ஊட்டிவா " என்றாள்; என யானும்,
தன்னை அறியாது சென்றேன்; மற்று , என்னை
வளை முன்கை பற்றி தலியத், தெருமந்திட்டு,
" அன்னாய் ! இவன் ஒருவன் செய்தது காண் ! " என்றேனா!
அன்னை அலறிப் படர்தரத் , தன்னையான்
" உண்ணுநீர் விக்கினான் "என்றேனா ; அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக்கூட்டம்,
செய்தான் அக் கள்வன் மகன். "


குறிஞ்சிக்கலி - கபிலர்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 01, 2015 3:34 pm

கொண்டான் மேல் கிடந்தேன் !
================================
மீனாட்சி : எந்தன் உள்ளம் துள்ளி விளை யாடுவதும் ஏனோ ?
............. கண்ணும் கண்ணும் ஒன்றாய்க் கூடி பேசும் விந்தை தானோ!

காமாட்சி : என்னடி மீனாட்சி ! ஏதடி உனக்கு ஆச்சு ?
............. புன்னகை பூக்கின்றாய்; பூ முகம் காட்டுகிறாய்!
............. பொன்எழில் மேனியிலே புத்தொளி வீசுதடி !
............. மன்னவன் வந்துனக்கு மாலை இட்டானோ ?
............ மின்னலிடை மோகினியே! என்தோழி ! எனக்குரைப்பாய்!

மீனாட்சி : மல்லாண்ட திண்தோள் மாவீரன் ஒருவன்
............. வில்லேந்தி தினமும் என்அருகில் வந்திடுவான்
.............சொல்லேதும் பேசாது சொக்கியே நின்றிடுவான்
.............பொல்லாத பார்வைக் கணைகள் வீசிஎன்னைக்
.............கொல்லாமல் கொல்கிறான் என்மீது அவன்கொண்ட
.............காதலைப் பேசாது வறிதே சென்றிடுவான்
.............பேதையேன் நானும் ஏங்கியே அவன்சென்ற
.............பாதையைப் பார்த்தே பன்னாளும் நின்றிடுவேன்
.............போதை காதலினால் போகம் வேண்டுகிறேன்.

காமாட்சி: அவன்மீது நீகொண்ட காதலை உரைப்பதனால்
..............தவறேதும் இல்லையடி ! தக்க தருணத்தில்
............. காளை முகம்பார்த்துக் காதலை உரைத்திடுவாய்!
............. வேளை வரட்டும்என வீணாய்க் கழிக்காதே!

மீனாட்சி: பெண்ணே தன்னாசைப் பேசுதல் உண்டோடி?
............. வண்டைத் தேடியே மலர்கள் சென்றிடுமோ?
............. நாணம் தடுக்குதடி ! நாக்கு எழவில்லை!
............. கோணல் பிறைசூடி சிவனால் எரியுண்ட
............. மன்மதன் தன்னுடைய மலரம்பு வீசியே
............. துன்பம் செய்கின்றான் தூக்கம் போனதடி!
............. அன்றொருநாள் ....

காமாட்சி: அன்றொருநாள் என்ன நடந்தது ?

மீனாட்சி: தீஞ்சுவைப் புனத்தினிலே இருந்த மரக்கிளையில்
............ ஊஞ்சல் கட்டியே ஆடிக் கொண்டிருந்தேன்
............ அந்த வேளையிலே ஆண்மகன் வந்தானே !
............ சொந்தம் கொண்டாட என்மனம் தூண்டியதால்
............ நாணம் விட்டொழித்து நம்பி முகம்நோக்கி
............ ' ஊஞ்சல் ஆட்டிடுவாய்! உல்லாசம் தந்திடுவாய்! '
............ என்றே நான்கூற , " நன்று " எனச்சொல்லி
............ ஆடவனும் ஆட்டிவிட ஆசை எழுந்ததடி
............ மோடி கிறுகிறுத்து மோகம் தலைக்கேற
............ மயங்கி அவனுடைய மார்பில் விழுந்திட்டேன்
............ தயங்கி ஆண்மகனும் வாரித் தழுவிட்டான்
............ பொய்யாய்க் கண்மூடித் தூங்கும் என்னிலையை
............ மெய்யென்று நம்பியே மேனி பதைத்திட்டான்
............ கண்திறந்து விழித்தாலோ காளை எனைவிட்டுப்
............ " பெண்ணே நீ செல்க !" என்றே சொல்கின்ற
............ பண்பாளன் உயர்குலத்துக் கோமான் என்றறிவாய்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




கயமலர் உண்கண்னாய் ! காணாய் ; ஒருவன்
வயமான் அடித்தேர்வான் போலத் , தொடைமாண்ட
கண்ணியன், வில்லன் வரும்;என்னை நோக்குபு,
முன்னத்திற் காட்டுதல் அல்லது , தான் உற்ற
நோய் உரைக்கல்லான், பெயரும்மன் பன்னாளும்,
பாயல்பெறேன்,படர்கூர்ந்து,அவன்வயின்
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண்ணின்று கூறுதல் ஆற்றான் அவனாயின்;
பெண்அன்று உரைத்தல் நமக்காயின்; இன்னதூவும்
காணான், கழிதலும் உண்டு என்று, ஒருநாள் என்
தோள் நெகிழ்புற்ற துயரால் துணிதந்து ஓர்
நாண்இன்மை செய்தேன்; நறுனுதால்! ஏனல்
இனக்கினி யாம் கடிந்து ஓம்பும் புனத்துஅயல்
ஊசல் ஊர்ந்துஆட ஒருஞான்று வந்தானை
' ஐய ! சிறிது என்னை ஊக்கி எனக்கூறத்,
" தையால் ! நன்று " என்று அவன்ஊக்க கைநெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பில்! வாயச்செத்து
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல்
மெய்யறியா தேன்போல் கிடந்தேன்மன் ; ஆயிடை
மெய்யறிந்து ஏற்றெழுவேனாயின், ஒய்யென
" ஒண்குழாய் ! செல்க " எனக்கூறி விடும்பண்பின்
அங்கண் உடையன் அவன்.


குறிஞ்சிக்கலி- கபிலர்.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 02, 2015 7:30 am

அய்யா தங்களுடைய கவிதைகளை என்ன வென்று புகழ்வது ? அந்த வெண்ணிலவே கவிதை என் மனதை வென்று விட்டது . பேய் பேசும் கவிதையும் அருமை . மிகவும் சரி . நாம் அது வாழும் இடத்தை எடுத்துக்கொண்டு விட்டோம் . தங்களது கவிதைகள் பத்திரிகையில் பிரசுரம் ஆகி உள்ளத ? தாங்கள் பாராட்டு பெற்ற துண்ட ?? ஏன் என்றல் அதனை கவிதைகளும் அவளவு அருமை . சிந்தனை அருவியாக கொட்டுகின்றது . மெரீனாவில் நீங்கள் அந்த காட்சி யை கண் முன் கொண்டு வருகிறீர்கள் . சாணம் தீட்டுபவன் கவிதையும் அட்டகாசம் . மேலும் எழுத்துகள் . ரசிக்க காத்து இருக்கிறோம் . நன்றி . எனது கவிதைகள் ! - Page 6 3838410834 எனது கவிதைகள் ! - Page 6 3838410834 எனது கவிதைகள் ! - Page 6 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 02, 2015 8:05 pm

உள்ளுவது உயர்வு உள்ளல்.
============================
மாடமாளிகைக்கு மனக்கோட்டைக் கட்டு
அப்போதுதான் ஒரு
மண்குடிசையாவது உனக்குக் கிட்டும்.

கம்பனைப்போல் காவியம் படைக்க எண்ணு
அப்போதுதான் ஒரு
கண்ணதாசனின் புலமையாவது உன்
கவிதையில் காணப்படும்.

கோடிகளில் புரள ஆசைப்படு
அப்போதுதான் சில
ஆயிரங்களாவது உன் கணக்கில் சேரும்.

உலகஅழகி ஆவது உன் லட்சியமாக இருக்கட்டும்
அப்போதுதான்
உள்ளூரிலாவது உன் காதல் விலைபோகும்.

ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுக்க முயற்சிசெய்
அப்போதுதான் சில
கிளிஞ்சல்களாவது உன்கைக்குக் கிட்டும்.

அரபிக்கடலைத் தாண்ட ஆசைப்படு
அப்போதுதான் ஒரு
அல்லிக் குளத்தையாவது உன்னால் தாண்ட முடியும்.

நூறாண்டு வாழ ஆசைப்படு
அப்போதுதான்
எண்பது வரையிலாவது எமன் நெருங்க அஞ்சுவான்.

Sponsored content

PostSponsored content



Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக