புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
156 Posts - 79%
heezulia
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
3 Posts - 2%
prajai
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
1 Post - 1%
Pampu
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
321 Posts - 78%
heezulia
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
8 Posts - 2%
prajai
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10எனது கவிதைகள் ! - Page 15 Poll_m10எனது கவிதைகள் ! - Page 15 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !


   
   

Page 15 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 16, 2015 8:38 pm

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 4:33 pm

நாவிதன் - முடிமன்னன் .( சிலேடை )
=================
கண்டு தலைவணங்கும் மக்களுக்குப் பொன்னாடைத்
துண்டினைப் போர்த்திக் களைந்திடுவார்-மண்டலத்தில்
யாவரும் போற்றும் முடிமன்னர் ஆதலினால்
நாவிதன் வேந்தனுக்கு நேர்.


பொருள் : தன்னைக் கண்டு வணங்கிடும் புலவர் பெருமக்களுக்குப் பொன்னாடைப் போர்த்திப் பொருள் கொடுத்து, அவர்தம் துயர்  களைந்திடுவான் மன்னன். முடிவெட்டிக் கொள்ள நாவிதனிடம் வரும் பொது மக்கள் தலைவணங்கி , இருக்கையில் அமர்ந்து இருப்பர்.
நாவிதன் , அவர்களுக்குத் துண்டினைப் போர்த்தி, அவர்களுடைய முடியைக் களைந்திடுவான். அரசனுக்கு " முடிமன்னன் " என்ற பெயர்
உண்டு. சிகை அலங்காரம் செய்கின்ற நாவிதர்களை , ' முடிமன்னர் ' என்று அழைக்கலாம். ஆகவே இந்த மண்டலத்தில், நாவிதனும்,
வேந்தனும் சமமானவர்கள் என்று சொல்லலாம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 4:37 pm

யாருக்காக ஊளையிட்டது?
===================
ஒருநாள் இரவின் ஜாமத்தில்
தெருநாய் ஒன்று ஊளையிட
பேயும் அஞ்சி நடுங்கியதே!
ஊரார் ஒடி ஒளிந்தனரே!

நாயின் ஊளைச் சத்தத்தால்
நடக்கும் மரணம் என்பார்கள்
ஊரார் அஞ்சி நடுங்கினரே!
யாரோ இறப்பர் என்றனரே!

ஈளை நோயின் தாக்கத்தால்
நாளை எண்ணும் ஒருகிழவன்
அடுத்த வீட்டில் இருந்தனனே!
அவனே உயிர்ப்பலி என்றனரே!

மறுநாள் காலை எழுந்தவுடன்
தெருநாய் இறந்து கிடந்ததுவே!
யாரோ ஒருவன் வழிப்போக்கன்
காரை ஏற்றிக் கொன்றனனே!

நாயின் ஊளைச் சத்தத்தால்
நடக்கும் மரணம் என்பார்கள்
தனக்குத் தானே மரணத்தை
நாயும் தேடிக் கொண்டதுவே!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 4:38 pm

பேய் வீடு
=========
அடுத்தவன் வாழப் பொறுக்காது அவனைக்
கெடுக்க நினைக்கும் பொறாமைப்பேய் ஒருபுறம்

அகிலமே கிடைத்தாலும் அடங்காத ஆசையினால்
அலைகடலும் பெறத்துடிக்கும் ஆசைப்பேய் புறம்

கட்டிய மனைவி கால்கடுக்கக் காத்திருக்க
கொட்டிக் கூத்தாடும் காமப்பேய் ஒருபுறம்

கொள்ளை கொள்ளையாய் ஊதியம் பெற்றாலும்
சில்லறைக்கு அலைகின்ற லஞ்சப்பேய் ஒருபுறம்

அரித்துண்ணும் கரையான்போல் இந்தியத் திருநாட்டை
எரித்தழிக்க என்னும் ஊழல்பேய் ஒருபுறம்

ஆணவத்தின் உச்சியிலே அதிகார போதையிலே
ஈனச்செயல் புரிகின்ற பதவிப்பேய் ஒருபுறம்

எத்தனை பேய்களடா! எத்தனை பேய்களடா!
இத்தனை பேய்களும் உள்ளதடா உன்மனதில்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 4:51 pm

எழுதாக் கவிதை.
=============
காலை வேளை எழுந்தேனா
கவிதை எழுத நினைத்தேனா

காகிதம் எடுத்து வைத்தேனா
கவிதை புனைய முனைந்தேனா

ஐயா ! சாமி ! என்றதொரு
அழுகுரல் தெருவில் கேட்டேனா

ஓடிச் சென்று பார்த்தேனா
ஒல்லிய உருவம் கண்டேனா

பசியின் கொடுமை எல்லாமே
கசியும் கண்களைப் பார்த்தவுடன்

ஓடிச் சென்று அவனுக்கு
ஒருவாய் சோறு போட்டேனா

மீண்டும் கட்டிலில் அமர்ந்தேனா
கவிதை எழுத முனைந்தேனா

வீரிட்டு அழுதது என்குழந்தை
வாரி எடுத்து அணைத்தேனா

கலந்து வைத்த பசும்பாலை
குழந்தை குடிக்கக் கொடுத்தேனா

ஓங்கிய பசியும் அடங்கியதால்
தூங்கிய குழந்தையைக் கண்டேனா

தொட்டிலில் குழந்தையைப் போட்டேனா
கட்டிலில் வந்து அமர்ந்தேனா

மீண்டும் கவிதை எழுதிடவே
முயன்று நானும் பார்த்தேனா

கண்ணைப் பறிக்கும் மின்னலுடன்
விண்ணைப் பிளக்கும் இடியோசை

சூறைக் காற்றும் பேய்மழையும்
கோர தாண்டவம் ஆடியதால்

காகிதம் காற்றில் பறந்ததுவே
கவிதை நெஞ்சமும் முறிந்ததுவே.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 4:53 pm

" தொடர்பு எல்லைக்கு அப்பால் "
=========================
சிட்டுக்குருவி போல சேர்த்துவைத்த பணத்தை எல்லாம்
சீட்டுக் கம்பெனி ஒன்றிலே போட்டுவைத்தார் என் நண்பர்.
முதிர்வடைந்த பணத்தை எடுக்கச் சென்றவரை
எதிர்கொண்டு அழைத்தது தொங்கிய பூட்டு!
படபடப்பு மேலோங்க செல்லிலே பேசினார்
" தொடர்பு எல்லைக்கு அப்பால் " எனப்பதில் வந்தது.

பதினாறு வயது மங்கையாம் மகள்மீது கொண்ட
விடமுடியாத பாசத்தால் விரும்பியதை எல்லாம்
கடைகடையாய் ஏறி வாங்கிக் கொடுத்தார்.
செல்லமாக வளர்த்தார் " செல்லும்" கொடுத்தார்.
ஆனால் அவள் இப்போதோ
" தொடர்பு எல்லைக்கு அப்பால் "

இடிமேல் இடியாக இறங்கியதால் என்நண்பர்
பொடியாகச் சமைந்திட்டார் போகுமிடம் தெரியாமல்
விடிந்தும் விடியாத அதிகாலை வேளையிலே
விடைகொண்டார் உயிரைவிட மானமே பெரிதென்று.
அவரும் இப்போது
" தொடர்பு எல்லைக்கு அப்பால் "

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 4:56 pm

அந்த நாளும் வந்திடாதோ?
=====================
குரங்கு பெடல்போட்டு சைக்கிள் கற்கையில்
கரத்திலும் சிரத்திலும் காயம் பட்டு
கண்ணீர் சிந்திய அந்த நாட்கள்

இச்சைக்கினிய நண்பருடன் கூடி
பச்சைக் குதிரைத் தாண்டியபோது
தடுக்கி விழுந்த அந்த நாட்கள்

எப்போது வருமென்று கடையின் முன்னே
கல்கி இதழுக்காகக் காத்துக் கிடந்து
பொன்னியின் செல்வனைப் படித்த நாட்கள்

மார்கழி மாதம் நடுங்கும் குளிரில்
திருப்பள்ளி எழுச்சியும் திருவெம்பாவையும்
தருமபுரம் சுவாமி நாதனின் குரலில்
விருப்பமுடன் கேட்டு மகிழ்ந்த நாட்கள்

காவேரி வெள்ளத்தில் துடுமெனப் பாய்ந்து
ஆவியை அடக்கி அடிவரை சென்று
கைப்பிடி மணலைக் கொண்டு வந்து
காதலி முன்னே காட்டிய நாட்கள்

காளைப் பருவத்தில் கல்லூரி நாட்களில்
விடுதிக் காவலர் தூங்கிய பின்பு
சடுதியில் சுவர்மீது ஏறிக் குதித்து
எம்ஜியார் சிவாஜி நடித்த படங்களை
நண்பர் குழாத்தொடு பார்த்த நாட்கள்

ஆறுரூபாய் கொடுத்து ஆரிய பவனில்
ஆனியன் ரவாவும் ஆவிபறக்கும் காபியும்
ஆசையுடன் சுவைத்த அந்த நாட்கள்

அப்பாய்மென்ட் ஆர்டர் வந்த போது
அப்பாவும் அம்மாவும் வாங்கிப் பார்த்து
ஆசி வழங்கிய அந்த நாட்கள்

பெண்ணைப் பார்க்கச் சென்றபோது
என்னைப் பார்க்கத் துணிவில்லாமல்
கால் பெருவிரலால் நிலத்தைக் கீறி
கடைக் கண்ணால் அவள் பார்த்த நாட்கள்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 4:58 pm

மூக்கு
======
மூக்கின் அழகே முகத்தழகு என்பது
முன்னோர்கள் சொன்ன மொழி.

பெண்கள்
மூக்கும் முழியுமாக இருந்தால்
பாக்கும் வெற்றிலையும் வைத்து
பரிசம் போட வருவார்கள்.

திருமணச் சந்தையில்
கிளிமூக்குப் பெண்களுக்கு வரதட்சிணை
துளிகூடக் கொடுக்காமல் திருமணத்தை
முடித்திடலாம்.

நாக்கும் மூக்கும் நல்ல நண்பர்கள்
மூக்கிலே சளி பிடித்தால்
நாக்கிலே சுவை தெரியாது.
நாக்குக்கு சுவையாக உணவிருந்தால்
மூக்குப் பிடிக்க சாப்பிடும் வழக்கமுண்டு

முன்னாள் பிரதமர்
இந்திரா காந்தியின் மூக்குக்கு
இணையான மூக்கு ஒன்று
இந்தியத் துணைக் கண்டத்தில் யாருக்கும்
இதுவரையில் இருந்ததில்லை..

நமக்குத் தெரியாத விஷயங்களில்
மூக்கை நுழைத்தால்
மூக்கறுபட்டு மூலையிலே உட்கார வேண்டியதுதான்.

என்றுமே மூக்குக்கும் கண்ணுக்கும்
ஏழாம் பொருத்தம்தான்.
கண்ணிலே அணிகின்ற கண்ணாடிக்கு
மூக்குக் கண்ணாடி எனப்பெயர் வருவானேன்?
மூக்கிலே அணிகின்ற மூக்குத்திக்கு
" கண்குத்தி " என்றால் ஒப்புவரோ?

மூக்குத்தி அணிந்தால்
முகத்தின் அழகு
மும்மடங்கு அதிகமாகும்.

மூக்கின் இருபுறமும்
மூக்குத்தி அணிந்து
எம்.எஸ். அவர்களின்
பாடும் அழகைக் காணக்
கண்கோடி வேண்டும்.

கமலக்கண்ணன் என்றும் செந்தாமரைக்
கண்ணன் என்றும் முண்டகக்கண்ணி என்றும்
அங்கயற்கண்ணி என்றும் ஆயிரம் பெயர்வைத்து
கண்ணுக்குப் பெருமை செய்வோர்
மூக்கழகு கொண்டவனை ' மூக்கன்' என்றும்
மூக்கழகு கொண்டவளை ' மூக்கி' என்றும்
முன்மொழிய யாரும் வருவதில்லையே!

இதயத்தின் வாசல் கண்கள் என்றால்
நுரையீரலின் வாசல் மூக்கு ஆகும்
அவ்வாசலை
மூக்குப் பொடியிட்டு அடைத்து
சாக்கடையாய் மாற்றாதீர்!

மூக்குக்கு மேலே கோபம் வருவதால்
மூண்ட சண்டைகள் ஏராளம் உண்டு.
இலக்குவனால்
மூக்கறுபட்ட சூர்ப்பனகை இராமாயணத்தின்
போக்கையே மாற்றி அமைத்தாள்.

நம் வீட்டில்
அடை சுட்டாலும், வடை சுட்டாலும்
அண்டை வீட்டுக்காரனுக்கு மூக்கிலே வியர்த்து
அடுத்த நிமிடம் நம்வீட்டின் அடுக்களையில் வந்து நிற்பான்.

நம்மிடம்
வாக்கிலே நேர்மையும்
நோக்கிலே தூய்மையும்
இருந்தால் பிறர் தங்கள் மூக்கிலே விரல் வைத்து
அதிசயத்துடன் பார்ப்பர்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 5:05 pm

நாக்கு!
=====
நாக்கைப் பற்றிக் கேவலமாக நாலுபேர் பேசினால் பேசட்டும்
நாக்கைப் பற்றி ஏளனமாக நாலுபேர் ஏசினால் ஏசட்டும்
அதற்காக
நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகவா முடியும்?

நாக்கிலே நரம்பில்லாமல் பேசுவோரைக் கேட்கிறேன்
அப்பர் நாவுக்கரசர் ஆனதும்
அனுமன் சொல்லின் செல்வன் ஆனதும்
நாக்கினால் தான் என்பதை இந்த நாடறியும்.

அண்ணாவின் நாக்குதான் அழகு தமிழை அள்ளிக் கொடுத்தது
திரு.வி.க.வின் நாக்குதான் தூய தமிழை சொல்லிக் கொடுத்தது.
வாரியாரின் நாக்குதான் பக்திச்சுவையை வாரி வழங்கியது.
பாரிலே நாக்கினால்தான் பலபேர் புகழ் பெற்றார்.

நாக்கின் நீளமோ நான்கு அங்குலம்தான்
மருமகளுக்கு நாக்கு நீளம் என்று மாமியார் சொல்வதும்
மாமியாருக்கு நாக்கு நீளம் என்று மருமகள் சொல்வதும்
புரியாது பேசுகின்ற புன்மொழிகள் அன்றோ!

நாக்கு! அதை
ஆளத் தெரிந்தோர்க்கு அற்புதமான ஆயுதம்
ஆயிரம் பீரங்கிகளின் வலிமை கொண்டது.
பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கும்
மேடையில் முழங்கும் அரசியல் வாதிக்கும்
கச்சேரி செய்கின்ற பாடகர் தமக்கும்
வழக்காடு மன்றத்தில் வக்கீல் களுக்கும்
நாக்கு இல்லையென்றால்
நாறிப்போகும் பிழைப்பு!

நாக்கிலே சரஸ்வதி வாழ்வதும்
நாக்கிலே சனி வாழ்வதும்
நாக்கின் குற்றமா? அல்லது நம் குற்றமா?
நாக்கு!
வாயெனும் கோவிலில் வாழுகின்ற தெய்வம்
வழிபடுவோர் தமக்கு வரமளிக்கும் தெய்வம்!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 5:09 pm

காகிதப் பந்துகள்
=============
கசக்கி எறிந்த காகிதப் பந்துகளால்
குப்பைக் கூடை நிரம்பி வழிந்தது.

கவிதை எழுதும் ஆசை வந்தது
மனம்
கம்பனைப் போல எழுத நினைத்தது.

எதுகை மோனைகள் ஏறெடுத்துப் பார்க்கவில்லை
எழுதிய கவிதைகள் எதுவும் பிடிக்கவில்லை.
கசக்கி எறிந்த காகிதப் பந்துகளால்
குப்பைக் கூடை நிரம்பி வழிந்தது.

வெண்பா இலக்கணம் வெறுப்பைத் தந்தது
கலிப்பா இலக்கணம் கவலையைத் தந்தது
கெஞ்சிப் பார்த்தும் வஞ்சிப்பா வரவில்லை
ஆசிரியப் பாவோ அரைகுறை ஆனது.
கசக்கி எறிந்த காகிதப் பந்துகளால்
குப்பைக் கூடை நிரம்பி வழிந்தது.

என்ன செய்வதென்று சொல்லத் தெரியாமல்
கண்ணை மூடிநான் சிந்திக்கும் வேளையிலே
தேனினும் இனிய தேவகானம் ஒன்று
தெருவில் இருந்து தவழ்ந்து வந்தது.

நட்டநடு நிசியினிலே நந்தலாலா! ஒரு
நாடகந்தான் நடக்குதடா நந்தலாலா!
கிட்டசென்று பார்க்கையிலே நந்தலாலா!
கிறுகிறுத்துப் போனேனே நந்தலாலா!

சொந்தமிலாப் பொருளையெல்லாம் நந்தலாலா! மனம்
சொந்தமாக்கிக் கொள்ளுதடா நந்தலாலா!
எந்தநிலை சென்றாலும் நந்தலாலா! நீ
வந்தவழி மறவாதே நந்தலாலா!

உரிமையுள்ள பொருளெல்லாம் நந்தலாலா! நீ
உதறினாலும் போகாது நந்தலாலா!
உடும்பாகப் பிடித்தாலும் நந்தலாலா!
உரிமையற்றது தங்காது நந்தலாலா!

கடனாகப் பெற்றதுதான் நந்தலாலா! அந்தக்
கடவுளிடம் பெற்றதுதான் நந்தலாலா!
குடத்தைவிட்டுப் போகுமுன்னே நந்தலாலா!
குணத்தைமட்டும் காத்திடுவாய் நந்தலாலா!'

தெருவோரப் பாடகனைக் கேட்ட பின்னால்
தெளிவான சிந்தனை என்னுள் பிறந்தது
கவிஞன் என்பவன் கருவிலே பிறக்கின்றான்
காகிதங்களால் கவிஞனை உருவாக்க இயலாது.
கசக்கி எறிந்த காகிதப் பந்துகளால்
குப்பைக் கூடை நிரம்பி வழிந்தது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 5:12 pm

நம்பிக்கைத் துரோகி !
===============
அடி பாதகி! கிராதகி! துரோகி!
கடைசி நேரத்தில் என்னுடைய
கழுத்தை அறுத்து விட்டாயே!
முடியாது என்றுநீ முன்னமே
சொல்லி இருக்கலாமே! என்றுதான்
"விடியுமோ?" எனக்குத் தெரியவில்லை!

உயிருக்கு உயிராகப் பழகினாயே!
உன்னையே நம்பியிருந்த என்னை
வயிறு எரியும்படி செய்தாயே!
வஞ்சகியே! உனக்கு ஒருமுழக்
கயிறு எதுவும் கிடைக்கலையா?
உயிரைப் போக்கிக் கொள்ள?

யார்யாரோ கொடுப்பதாகச் சொன்னார்கள்
அதை எல்லாம் ஒதுக்கிவிட்டு
ஊர்வசியே! உன்னையே நம்பியிருந்தேன்
தேர்போலும் நடந்துவரும் தேவதையே!
இன்று
ஊர்பேசும்படி வைத்தாயே! உன்மத்தம்
பிடித்தவளே!

பெண்ணை நம்பாதே! என்று
பெரியவர்கள் சொல்வார்கள்.
அது உண்மை என்பதைநீ
உலகுக்குக் காட்டிவிட்டாய்!

இருண்டுவிட்டது என்உலகம் என்றுமட்டும்
எண்ணாதே!
சுருண்டு கிடக்கும் பாம்புநான்!
செத்து விட்டதாய் எண்ணாதே!
வறண்டு விடவில்லையடி உலகம்
வாய்ப்புகள் என்னைத் தேடிவரும்.

என்னம்மா! தேவகி! ஏதேதோ பிதற்றுகிறாய்!
என்று
என்அம்மா வந்து எனைக்கேட்டாள்.
அம்மா என் திருமணத்திற்கு
ஆருயிர்த் தோழி ஊர்வசியிடம்
ஐந்து லட்சம் வேண்டுமென்றேன்.
தருவதாகச் சொன்னவள் இப்போது
தகராறு செய்கிறாள்.

என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை!
சின்னதொகை என்றால் புரட்டிவிடலாம்! ஆதலினால்
தாயே! திருமணத்தைத் தள்ளிவைத்து விடலாமா?
ஆயிரம்பொய் சொல்லி திருமணத்தை நடத்துஎன்று
ஆன்றோர்கள் சொல்வார்கள் ஆனால் எனக்கோ
என்னபொய் சொல்வதென்று தெரியவில்லை அம்மா!

Sponsored content

PostSponsored content



Page 15 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக