புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10எனது கவிதைகள் ! - Page 14 Poll_m10எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10 
73 Posts - 77%
heezulia
எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10எனது கவிதைகள் ! - Page 14 Poll_m10எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10எனது கவிதைகள் ! - Page 14 Poll_m10எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10எனது கவிதைகள் ! - Page 14 Poll_m10எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10எனது கவிதைகள் ! - Page 14 Poll_m10எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10 
238 Posts - 76%
heezulia
எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10எனது கவிதைகள் ! - Page 14 Poll_m10எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10எனது கவிதைகள் ! - Page 14 Poll_m10எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10எனது கவிதைகள் ! - Page 14 Poll_m10எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10 
8 Posts - 3%
prajai
எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10எனது கவிதைகள் ! - Page 14 Poll_m10எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10எனது கவிதைகள் ! - Page 14 Poll_m10எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10எனது கவிதைகள் ! - Page 14 Poll_m10எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10எனது கவிதைகள் ! - Page 14 Poll_m10எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10எனது கவிதைகள் ! - Page 14 Poll_m10எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10எனது கவிதைகள் ! - Page 14 Poll_m10எனது கவிதைகள் ! - Page 14 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !


   
   

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 16, 2015 8:38 pm

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 24, 2015 8:26 pm

உறக்கம்
==========
காலையில் பனித்துளி புல்மிசை உறங்கும்
......கண்மணிக் குழந்தை தூளியில் உறங்கும்
சோலையில் வண்டினம் பூவிடை உறங்கும்
......சோதியின் நிலவில் விண்மீன் உறங்கும்
மாலையில் கதிரவன் கடலிடை உறங்கும்
......மன்மதன் அம்புகள் என்னை வருத்துமுன்
வாலைக் குமரியே !உந்தன் மார்பினில்
......மெல்லச் சாய்ந்து நானும் உறங்கவோ ?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 24, 2015 8:29 pm

செல்போன்.
=============
யாமறிந்த விந்தையிலே செல்போன்போல் மேதினியில்
யாங்கணுமே கண்டது இல்.

கற்றவர்க்கும் மற்றவர்க்கும் செல்போன்போல் இவ்வுலகில்
உற்றதுணை உண்டோ உரை.

வாகனம் ஓட்டுகையில் செல்போன் எடுக்காதே
காலன் அழைப்பே அது.

அறிமுகம் இல்லார்கண் செல்போன் கொடுத்தல்
பறிபோகும் வாழ்வென்று அஞ்சு.

பேசலின் நன்றாம் குறுஞ்செய்தி செய்வித்தல்
காசுக்கு சேமிப்பு காண்.

செல்போனில் பெண்கள் மணிக்கணக்கில் பேசுகிறார்
எல்லாமே காசுக்குக் கேடு.

நல்வழியில் செல்போன் பயன்படுத்து இல்லையெனில்
தொல்லைகள் தேடி வரும்.


விலையதிகம் கொண்ட அலைபேசி வேண்டாம்
தொலைந்தாலோ நொந்திடுமே நெஞ்சு.

அதிக ஒலிவைத்து செல்போனில் பேசாதே
காதுக்குக் கேடாம் அது.

நித்தமும் செல்போனைப் பேணிடுக என்றுமது
முத்தமிடும் காதலிக்கு நேர்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 1:07 pm

வேலி தாண்டிய வெள்ளாடுகள்.
======================
கழுத்திலே தொங்குகிறது மஞ்சள் கயிறு
கணவன் கட்டிய தாலிக் கயிறு
மாதர் தமக்கு மங்கலக் கயிறு.
கணவன்
வேலி தாண்டிய வெள்ளாடாக இருந்தாலும்
தாலியை அவள் சுமக்க வேண்டுமாம்!
கல்லானாலும் கணவனாம் !
புல்லானாலும் புருஷனாம் !
பதிலுக்கு
பத்தினி அவள் படிதாண்டி விட்டால்
எத்தனை பழிகள்! எத்தனை வசவுகள்!
அத்தனையும் அவளுக்குத்தான்!
அவனுக்கில்லை!
தீவலம் செய்து கைப்பிடித்த கணவன்
கோவலன் என்றாலும்
கோபம் கொள்ளக் கூடாதாம்.
கேவலமா பெண்ஜன்மம்? கேட்பாரில்லையா?
அடித்தாலும், உதைத்தாலும் அவனே தெய்வமாம்!
குடித்துவிட்டு வருபவனைக் கும்பிட வேண்டுமாம்!
படிக்கும் சிறுவனின் பாட புத்தகங்களையும்
குடிப்பதற்குக் காசாக்கும் கூறுகெட்ட ஜன்மங்கள்!
பெண்ணே! நீ தூங்கும்போது
கட்டிய தாலியைக் கழற்றி
வட்டிக் கடையிலே வைத்திடுவான் !
அதற்குமுன்னே
வெட்டி எறிந்துவிடு அந்த வீணனின் தொடர்பை!
கொட்டி முழக்கிடு! நீ புதுமைப் பெண்ணென்று!
வேலிதாண்டிய வெள்ளாடுகள் கட்டிய
தாலிக்கு மதிப்பில்லை, கழற்றி எறிந்துவிட்டு
கூலிக்கு வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்று!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 1:10 pm

எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகணும் .
===========================
எனக்குஓர் உண்மை தெரிஞ்சாகணும்
அதுவும் இப்பவே தெரிஞ்சாகணும்!

கொன்றால் பாவம் ; தின்றால் போச்சு
என்னும் பழமொழி சொல்லும் மனிதனே!
கொன்ற பாவம் எப்படிப் போகும் ?
என்ற உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்.

மாதராய் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா! என்று
கவிமணி அன்றுரைத்த சொல்லுக்கு எதிராக
நெல்மணி கொடுத்து சிசுக்கொலை புரிவது
ஏன்என்ற உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்!

தெலுங்கர் இருவர் சந்தித்தால்
தெலுங்கில் பேசித் தெளிவதும்
கன்னடர் இருவர் சந்தித்தால்
கன்னடம் பேசிக் களிப்பதும்
மலையாளி இருவர் சந்தித்தால்
மலையாளம் பேசி மகிழ்வதும்
தாய்மொழி மீது கொண்ட
தணியாத தாகமாகும்.
ஆனால்
தமிழர் இருவர் சந்தித்தால் மட்டும்
அரைகுறை ஆங்கிலத்தில் அரட்டை அடிப்பது
ஏனென்ற உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்.

கல்லாத பேர்களே நல்லவராய் இருக்கையில்
எல்லா நூல்களும் கற்றுத் தெளிந்த
அறிவுடை மாந்தர் ஆசை கொண்டு
ஊரை அடித்து உலையில் போட்டு
ஊழல் செய்து சொத்து சேர்ப்பது
ஏனென்ற உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்.

சாதி இரண்டொழிய வேறில்லை என்று
நீதிகள் ஆயிரம் சொன்ன பின்னும்
சாதியின் பெயரால் சண்டைகள் செய்து
வீதியில் இரத்த ஆறுகள் ஓடுவது
ஏனென்ற உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்.

ஒலிம்பிக் என்னும் உலகப் பந்தயத்தில்
எலியை ஒத்த சிறுசிறு நாடெல்லாம்
தங்கம் வென்று தாயகம் திரும்பிட
சிங்கம் நிகர்த்த இந்திய நாடோ
வெள்ளியும் வெண்கலமும் போதும் என்றால்
எள்ளி நகையாடி ஏளனம் செய்யாரோ?
கிராமம் தன்னில் சிறுவர் ஆடும்
கில்லி,சடுகுடு போன்றவை எல்லாம்
கிரிக்கெட் என்னும் மாபெரும் அரக்கனால்
அழிந்து போன அவலம் கண்டும்
ஓடி ஆடும் வீரர் தமக்குக்
கோடி கோடியாய் கொட்டித் தீர்ப்பது
ஏனென்ற உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்.

உலகைக் கைக்குள் அடக்கிய செல்போன்
அறிவியல் தாயின் அற்புத நன்கொடை!
உறவினர் தம்மோடு உறவாடி மகிழவும்
குறுஞ்செய்தி அனுப்பி குதூகலம் செய்யவும்
வியத்தகு செயல்களை விரல்நுனி அசைவில்
செயத்தகு சாதனம் செல்போன் தன்னில்
கலகம் செய்வதும், காதல் புரிவதும்
காமப் படங்களைக் காட்டி மகிழ்வதும்
ஏனென்ற உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்.

கொடுக்க வேண்டியதை கொடுத்த பிறகே
நடக்க வேண்டியது நடக்கும் என்றால்
தடுக்க வேண்டிய அரசுகள் இங்கே
தனக்கென்ன என்று வாளா இருப்பது
ஏனென்ற உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 1:16 pm

கறை நல்லது
=========
பள்ளி செல்லும் பிள்ளைக்கு
படிப்பில் அக்கறை நல்லது.

மாதர் பருவம் எய்தினால்
காதலில் அக்கறை நல்லது.

வரவில் செலவை அடக்கியே
வாழும் அக்கறை நல்லது.

உறவுக்குள் துன்பம் வந்திட்டால்
உதவும் அக்கறை நல்லது.

வாழும் நாளைத் தொடங்கிட
வைகறைப் பொழுது நல்லது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 25, 2015 2:09 pm

எக்ஸ்செல் (லெண்ட்) கவிதையே
கறை கவிதை !
அக்கறையுடன் ஈகரையில் பதிவு .
நன்றி ,
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 2:58 pm

மதுமேகம்
=========
லட்டும் அதிரசமும் ஜாங்கிரியும் முன்பிருக்க
பிட்டு ருசிக்க முடியலையே!-கட்டுடலை
மெல்லக் கரைக்கின்ற சர்க்கரை நோயென்னும்
தொல்லைக்கு என்செய்வேன் கூறு.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 3:01 pm

எதையுமே பாசிட்டிவாக!
====================
பாலெல்லாம் நீராக உள்ளதே எனநினைத்தால் வருத்தம்தான்
நீரிலே பால் உள்ளதே என நினைத்துப் பார்; நிம்மதி கிடைக்கும்.

அடங்காப் பிடாரி ஆத்துக்காரியாக அமைந்தாளே
என நினைத்து ஆதங்கம் கொள்ளாதே!
சிறியவீடு வைத்துக் கொண்டு சிறுமைப்படும்
அடுத்த வீட்டுக்காரனை நினைத்து ஆறுதல் கொள்.

நேர்முகத் தேர்விலே தோல்வி அடைந்ததை எண்ணித்
துவண்டு போகாதே! உன்னுடைய தோல்வியில்தான்
வேறொருவனுக்கு வேலை கிடைத்து அவன்வீட்டில்
விளக்கு எரிவதை எண்ணிப் பெருமைப்படு!

கரியநிறமும், கோரமுகமும் உள்ளவனாக என்னை
இறைவன் படைத்தானே என்று கோபம் கொள்ளாதே!
நாயாய் பேயாய் நரியாய் இல்லாமல்
பகுத்தறிவுள்ள மனிதனாகப் படைத்ததற்கு நன்றிசொல்.

காலன் உன்னைக் கைதட்டிக் கூப்பிடுகிறானே என்று
கவலை கொள்ளாதே! உன்னுடைய இறப்பில்
பூமித்தாய் சுமக்கும் எடையில் அறுபது கிலோ
குறையுமே என்று எண்ணி ஆறுதல் கொள்!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 3:03 pm

விழுதை மறந்த வேர்கள்.
===================
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியை
மறக்காமல் வலியுறுத்தும் மாண்புமிகு பெற்றோரே!
தந்தை மகனுக்குச் செய்யும் கடமையை
தயைகூர்ந்து நெஞ்சிலே நினைவில் கொள்ளுங்கள்.


பெற்றது பெண்ணென்று தெரிந்து விட்டால்
குற்றம் வந்ததே எனக்கூறி அச்சிசுவைக்
குப்பைத் தொட்டியில் எறிந்தது யார்குற்றம்?
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?

பள்ளிக்குச் சென்று படிக்கும் வயதில்
பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி
பட்டாசு கம்பெனியில் வேலைக்குச் சேர்த்தது
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?

பள்ளித் தேர்விலே மதிப்பெண் குறைவானால்
எள்ளி நகையாடி ஏகடியம் பேசியே
தண்டித்து அவனைத் தற்கொலைக்குத் தூண்டியது
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?

காதலித்த ஒருவனைக் கைப்பிடிக்க வழியின்றி
ஜாதிமத பேதங்கள் பேசியே அவள் வாழ்வை
வேதனையில் தள்ளி வேடிக்கைப் பார்ப்பது
வேரின் குற்றமா அன்றி விழுதின் குற்றமா?

வேர்களே! என்றும் விழுதுகள் நல்லவைதான்
நீர்தான் அவற்றை நிலைநிறுத்த வேண்டும்
விழுதுகளை வேர்கள் மறந்து போனால்
பொழுது போக்கிடம் முதியோர் காப்பகம் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 4:29 pm

மன்னிப்பு
========
மன்னிப்பு என்னும் மாபெரும் மந்திரத்தால்
இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதம் செய்யலாம்.
மன்னிக்கப் படுபவன் மனிதநிலை அடைகிறான்
மன்னிப்புக் கொடுத்தவனோ தெய்வநிலை அடைகிறான்.
கற்றவன்தான் அதிகக் குற்றம் செய்கிறான்
கொற்றவனும் சிலசமயம் குற்றம் செய்கிறான்.
தண்டனைகள் குற்றங்களைக் கூட்டவே செய்கின்றன.
மன்னிப்பு மட்டுமே திருடர்களைத் திருத்துகின்றன.
அப்பத்தைத் திருட நினைப்பவனுக்கு அறுசுவை உணவுகொடு.
துண்டைத் திருட நினைப்பவனுக்கு வேஷ்டியை உருவிக்கொடு
நாணித் தலைகுனிந்து நல்லவனாய்த் திருந்திடுவான்.
இன்னா செய்தார்க்கு இனியவே செய்தலும்-ஒரு
கன்னத்தில் அறைந்தவனுக்கு மறுகன்னத்தைக் காட்டலும்
மன்னிப்புப் புத்தகத்தின் மறக்கவொண்ணா பக்கங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக