புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
37 Posts - 36%
heezulia
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
1 Post - 1%
mruthun
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
2 Posts - 1%
manikavi
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
2 Posts - 1%
mruthun
எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10எனது கவிதைகள் ! - Page 12 Poll_m10எனது கவிதைகள் ! - Page 12 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !


   
   

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 16, 2015 8:38 pm

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 15, 2015 9:47 pm

M Jagadeesan wrote:திருந்தா முண்டம்

ஆம் திருந்தா முண்டம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 15, 2015 9:51 pm

அற்ப ஆசைகள்
[quote]அற்ப ஆசைகள் மனதில் நுழைந்தால்
அறிவுக்கு அங்கே என்ன வேலை?
எப்பொருள் யார்யார் வாய் கேட்டாலும்
மெய்ப்பொருள் காண்பதே அறிவின் வேலை."quote

அன்றே வள்ளுவன் சொன்னதை ,
அன்றே மறந்து விட்டோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:15 am

அருமைன வரிகள்



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 5:41 pm

அறிந்தே வந்த காதல்
======================
அறிந்தே வந்த காதல்
அழகாய் வந்த காதல்
தெரிந்தே வந்த காதல்
தெளிவாய் வந்த காதல்

இளமையில் வந்த காதல்
இயற்கையில் வந்த காதல்
பள்ளியில் பாடம் தன்னைப்
படிக்கையில் வந்த காதல்

கருவறை தொடங்கிய பயணம்
கல்லறை முடியும் மட்டும்
உயிருடன் கலந்து என்றன்
உணர்வொடு ஒன்றிய காதல்

உலகையே தந்தால் கூட
உதறியே தள்ளி விட்டு
எதுவுமே வேண்டாம் என்று
எண்ணுகின்ற தமிழ்க் காதல்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 5:51 pm

கறை நல்லதா?
=================
அப்பிலே உப்பு அதிகரித்தால் எப்படித்தான்
தப்பிடினும் பேரழுக்கு நீங்கிடுமோ ? - ஒப்பாதீர்
ஆடையிலே பட்டகறை நல்லதென்று சொல்வோரே
ஓடுமதி பட்டகறை நீக்கு.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 5:53 pm

சுகமான சுமைகள்.
====================
மண்ணுக்கு மரமும் விண்ணுக்கு நிலவும்
கண்ணுக்கு மையும் பெண்ணுக்கு நகையும்
சுகமான சுமைகள்! சுகமான சுமைகள்!!

கடலுக்கு படகும் உடலுக்கு உயிரும்
மடலுக்கு எழுத்தும் மனதுக்கு நினைவும்
சுகமான சுமைகள்! சுகமான சுமைகள்!!

மலருக்கு வண்டும் மாரிக்கு நீரும்
நிலவுக்குக் கறையும் நீருக்கு மீனும்
சுகமான சுமைகள்! சுகமான சுமைகள்!!

பிணக்கு ஆயிரம் வந்த போதும்
எனக்கு நீயும் உனக்கு நானும்
சுகமான சுமைகள்! சுகமான சுமைகள்!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 5:56 pm

பொருட்டல்ல !
===============
ஐந்தோ, பத்தோ பொருட்டல்ல
ஆணுக்கு அழகு ஒரு வேலை

கருப்போ, சிவப்போ பொருட்டல்ல
பெண்ணுக்கழகு திருமணமே!

ஊமையோ ,செவிடோ பொருட்டல்ல
தாய்மைக்கழகு அன்பு பாராட்டல்.

ஆணோ, பெண்ணோ பொருட்டல்ல
தந்தைக்கழகு சான்றோனாக்குதல்

வெற்றியோ, தோல்வியோ பொருட்டல்ல
வீரனுக்கழகு துணிவுடைமை.

உறவோ, பகையோ பொருட்டல்ல
வீட்டிற்கழகு விருந்தினர் போற்றல்.

இலாபமோ நட்டமோ பொருட்டல்ல
வணிகனுக்கழகு நேர்மையுடைமை.

பாஸோ, பெயிலோ பொருட்டல்ல
மாணவனுக்கழகு விடாமுயற்சி

தமிழோ, ஆங்கிலமோ பொருட்டல்ல
நாவிற்கழகு இனியவை கூறல்.

ஆறோ, குளமோ பொருட்டல்ல
ஊருக்கழகு நீர்சூழ நிற்றல்.

மலையாளியோ, மராட்டியனோ பொருட்டல்ல
தமிழனுக்கு அழகு தோழமை பாராட்டல்.

நல்லவனோ, தீயவனோ பொருட்டல்ல
கடவுளுக்கு அழகு கருணைகாட்டல்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 9:56 pm

கிளி ஜோதிடம் !
============
சிலசில ஆண்டுகள் முன்னம்
பலரும் போற்றும் வண்ணம்
வாழ்ந்து வந்தவன் நான்-இன்று
வாழ்ந்து கெட்டவன் நான்.

என்னுடைய வாழ்வே என்னுடைய செய்தி
எல்லோரும் கேட்பதற்கே என்கதையை உரைக்கின்றேன்.

உணவுக்கடை ஒன்று வைத்தேன்
உளுந்துவடை பொங்கல் மற்றும்
மணங்கமழும் நெய் தோசை
மல்லிகைப்பூ இட்லி என்று
கணக்கின்றி பொது மக்கள்
கடன் சொல்லித் தின்றதனால்
பணக்கஷ்டம் வந்தது ஐயா
படுத்தது ஐயா வியாபாரம்.

மக்கள் நோய் தீர்த்திடவே
மருந்துக் கடை வைத்தேன்
சிக்கல் எதுவும் இன்றி
சில காலம் சென்றதையா
என்கடை மருந்துண்டு ஏழையொருவன் கண்மூட
போலி மருந்தென்று போலீஸ் என்னை விலங்கிட
சிக்கல் வந்ததய்யா கடை சீரழிந்து போனதையா.

பல்லாயிரம் செலவிட்டுப் பலசரக்குக் கடைவைத்தேன்
பொல்லாப் பணியாளர் பொறுப்பிலே விட்டுவைத்தேன்
கல்லாவில் எல்லோரும் கைவைத்த காரணத்தால்
கலகலத்துப் போனதையா பலசரக்கு வியாபாரம்.

இனியொரு தொழில் வேண்டாம்
இருக்கின்ற பணத்தை மட்டும்
பெருக்கிடுவோம் என்று எண்ணி
சிக்கல் இல்லாத சீட்டுக் கம்பெனி ஒன்றில்
பிக்செட் டிபாசிட்டில் போட்டு வைத்திட்டேன்.
பட்ட காலிலே மீண்டும் பட்டதையா
கெட்ட குடியே மீண்டும் கெட்டதையா
குருவிபோல் சேர்த்திட்ட பணத்தை எல்லாம்
பருந்தெடுத்துப் போனதுபோல் பைனான்ஸ் காரன்
இரவோடு இரவாக ஓடிவிட்டான்
இருக்கின்ற நம்பிக்கையும் தகர்ந்ததையா.

செய்வது அறியாமல் சேருமிடம் தெரியாமல்
கால்போன போக்கினிலே போகின்ற வேளையிலே
ஆலமரத்தடியில் அழகான கூண்டு ஒன்றில்
கோல மொழிபேசும் கிளிஒன்றை வைத்தொருவன்
ஜோதிடம் சொல்லக் கண்டு
அவனிடம் நான் சென்று
ஐயா என்பெயர் ஆடியபாதம் என்பார்
செய்யாத தொழிலில்லை, செய்வதற்கு ஏதுமில்லை
தொட்ட தொழிலெல்லாம் துலங்கவில்லை ஐயா
நட்டம் வந்ததையா, நடுத்தெருவில் நிற்கின்றேன்
என்ன தொழில் செய்தால் ஏற்றம் வருமென்று
சொன்னதைச் சொல்லும் கிளியிடம் கேட்டுரைப்பீர்
எனக்கேட்க, ஜோசியனும்
கிளியை நோக்கி
"வாடா ராஜா வந்திடுவாய் வெளியே
ஆடியபாதம் என்ற அழகான பேருக்கு
தேடியொரு சீட்டைத் தேர்ந்தெடுப்பாய்"
எனச் சொல்ல
அழகான கிளியொன்று வெளியே வந்ததையா
அலகால் கவ்வியொரு சீட்டை எடுத்ததையா
சீட்டைப் பிரித்துப் பார்த்திட்ட ஜோசியனும்
சிரித்திட்டான் பலமாக சிரித்திட்டான் எனக்காக

'ஐயா
தக்கதொரு வழிசொல்வேன் தலைவணங்கிக் கேட்டிடுவீர்
மிக்கபுகழ் உண்டாகும் மேதினியில் உந்தனுக்கு
மூலதனம் வேண்டாம், முதலீடு தேவையில்லை
காலம் முழுமைக்கும் காசுபணம் பார்த்திடலாம்
கல்லூரிக் கட்டிடங்கள், கல்யாண மண்டபங்கள்
எல்லாமே கைகூடும்,எண்ணியபடி நடக்கும்
உல்லாசம் எல்லாமே உன்மடியில் காத்திருக்கும்
பெண்டு பிள்ளைகள் பெரியோர்கள் எல்லாமே
கண்டு வணங்கிடுவர், காலில் விழுந்திடுவர்"

"ஜோசியரே அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?'
எனக்கேட்க,
"காவிஉடை அணிந்தே, கமண்டலத்தை ஏந்திடுவீர்
தரையில் விழுமளவு தாடி வளர்த்திடுவீர்
நெற்றியில் திருநீறும், நடுவில் குங்குமமும்
கற்றைமுடி வளர்த்து, கழுத்தில் கொட்டையும்
தாங்கி
சாமியாராகப் போவதே சரியான வழியென்று
நான் சொல்லவில்லை ஐயா,கிளிசொன்ன வழி" என்று
பாவாடைச் சாமியாரின் படம் எடுத்துக் காட்டிட்டான்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 19, 2015 8:22 am

பேருந்து ஹைகூக்கள்
=======================
சில்லரை கேட்டுத் தொந்தரவு செய்பவன்
பிச்சைக்காரன் மட்டுமல்ல
கண்டக்டரும்தான் !

பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருந்தேன் !
ஒருவழியாகப் பேருந்து வந்தது !
எதிர்த் திசையில் !

பேருந்தில் உட்கார இடம் கிடைத்தும்
இருப்புக் கொள்ளவில்லை !
கண்டக்டர் சில்லரை பாக்கி !

பேருந்தில் எழுதியிருந்த வாசகம்
" திருடர்கள் ஜாக்கிரதை ! "
தான் திருடிய பணத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான் -பிக்பாக்கெட் !

படியிலே கால்வைக்க இடமிருந்தும்
தொங்கிக்கொண்டே  பயணித்தான் கல்லூரி மாணவன் !
படிக்கட்டுப் பயணம் பரலோகப் பயணம் என்பதால் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 19, 2015 10:22 am

பேருந்து நகைச்சுவை
பேறுவுகை தந்ததே !
நன்றி ,ஜெகதீசன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக