புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_c10விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_m10விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_c10விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_m10விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_c10விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_m10விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_c10விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_m10விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_c10விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_m10விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_c10விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_m10விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2015 2:20 am


சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

கோடிக்கணக்கான தமிழர்கள் ஓட்டளித்து வெற்றி பெற்ற மகிழ்ச்சியை விட விடுதலைத் தீர்ப்பு கட்டாயம் 'வாழ்வில் நிம்மதியும்' ஆனந்தத்தையும் கொடுத்திருக்கும். மக்களின் முதல்வர் மீண்டும் தமிழக முதல்வராகிறார் என வாண வேடிக்கையும், காது கிழிக்கும் பட்டாசுகளும். ஆர்ப்பாட்டமான ஆட்டமும் முதல்வரை வரவேற்கத் தயாராகி விட்டன. நீதிபதி குன்ஹாவை வெறுத்தவர்கள் நீதிபதி குமாரசாமிக்கு கோவில் எழுப்பும் நிலையில் உள்ளனர்.

டாஸ்மாக் மதுக்கடைகளை அடைப்பது ஒட்டு மொத்த தமிழருக்கும் விடுதலை அளிக்கும் செய்தியாகும். மதுவால் அழிந்த குடும்பங்கள் கூட உங்கள் விடுதலைக்காக கோவிலில் நேர்த்திகடன் செய்தவர்கள்தான். அப்படிப்பட்ட குடும்பங்கள் மதுவால் அழிய வேண்டுமா? உங்கள் மகிழ்ச்சியின் பரிசாக, 'டாஸ்மாக் கடைகள் பூட்டப்படும்' என்ற அறிவிப்பை தமிழ் பெண்களுக்கு கொடுப்பீர்களா? உங்களுக்கு கிடைத்த விடுதலைச் செய்தி போல எங்களுக்கும் டாஸ்மாக்கில் இருந்து விடுதலைச் செய்தி வேண்டும். ஆந்திராவில் தமிழனை கொள்கிறார்கள், இலங்கை கடற்படை மீனவத் தமிழனை சுடுகிறார்கள், நாமும் நம் பங்கிற்கு டாஸ்மாக் மூலம் தமிழனை கொல்ல வேண்டுமா?

அதிக தரத்துடன், அதிக எண்ணிக்கையில் அம்மா உணவகத்தின் மூலம் வருமானம் தேடலாம். இலவசத்தை ஒழித்து மக்கள் வாழ்வு முன்னேற மனம் வையுங்கள். அரசிடம் இலவசம் வாங்கும் தமிழன் மறு கையில் காசு கொடுத்து சாவை (டாஸ்மாக் சரக்கு) விலைக்கு வாங்கி வருகிறான். இனி தமிழ் இனம் மலட்டு சமூகமாக மாறுவதும், மனிதனாக மலர்வதும் உங்கள் கையில் தான் உள்ளது. டாஸ்மாக் ஒழிந்தால் உங்கள் கட்சிக்கு பெண்களது ஒட்டு விகிதம் கட்டாயம் கூடும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

மலைக்க வைத்த மலை அழிப்பு கிரானைட் கொள்ளை, கடல் தாண்டிச் சென்ற கனிம மணல் கொள்ளை என தமிழகத்தின் இயற்கை வளக் கொள்ளைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, அவற்றை அரசே ஏற்று நடத்த வேண்டும். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் நமது இயற்கை வளங்கள் மூலம் பெற முடியாதா? அரசுக்கு வருமானம் பார்க்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. இலவசத்தை ஒழித்து, அரசின் செலவுகளை குறைத்து, பொதுப்பணித்துறையின் ஊழல்களை ஒழித்தாலே அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் மிச்சமாகுமே. தேவை அற்ற அரசின் செலவுகளை குறைப்பதும் லாபத்திற்கு வழி.

நீங்கள் அடைந்த மகிழ்ச்சியைப்போலவே தமிழர்களும் நிம்மதி, மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். ஆனால், கடந்த ஆறு மாதங்களாக ஆட்சி முடங்கி விட்டது, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அதிகமாகி விட்டது. கொலை, கொள்ளை சம்பவங்கள் மக்களின் நிம்மதியை அழித்து விட்டது. மக்களுக்கான எந்த திட்டமும் சீரிய முறையில் செயல்படவில்லை. பொதுப்பணித்துறை பொறுப்பாக லஞ்சம் வாங்கும் துறையாக மாறி விட்டது. லஞ்சம் வாங்கவே அரசு அலுவலகம் பயன்படுகிறது என்ற நிலைக்கு தமிழர்கள் அரசு அலுவலகத்தை நினைத்து கொதித்துப் போய் வருகின்றனர். கற்றுக்கொடுக்கும் கல்வி முதல், நாட்டை காக்கும் காவல் துறை வரை லஞ்சப் பேய்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது. உங்கள் அறையை தூய்மை செய்வது போல, அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் தூய்மை ஒட்டு மொத்த தமிழருக்கும் செய்யும் மாபெரும் சேவையாகும்.

தற்போதைய கோடை காலத்தில் கண்மாயில் நிற்க வேண்டிய மழை நீர், சாலைகளில் வெள்ளம் போல மக்களை கஷ்டப்படுத்தி வருகிறது. கண்மாயில் நீர் இல்லாமல் சாலைகளில் வெள்ளம் பார்க்க வைத்த அரசு நீர் வள பொதுப் பணித்துறையினரின் செயல்பாடுகள் விவசாயிகளை மிரட்டி வருகிறது. தூர் வாரப்படாத கண்மாயும், வரத்துக் கால்வாயும் உங்களுக்காக ஓட்டு போட்ட விவசாயிகளுக்கு கஷ்டத்தையே தரும் என்பதை உணர்ந்து, நீர் நிலைகளை தூர் வார உத்தரவிட வேண்டும். தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை ஆரம்பமாகி விட்டது. அதை தடுக்க நவீன திட்டம் கொண்டு வர வேண்டும்.

மக்களின் அடிப்படைத் தேவையான நீர், சாலை சதி, போக்குவரத்து, மருத்துவ வசதி இந்நான்கிலும் மக்களின் எதிர்பார்ப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது சுத்தமான நீர் கிடைப்பது அரிது, தரமான சாலைகள் இருந்தால் 'கின்னஸ் சாதனைக்கு' சொல்லும் அளவிற்கு உள்ளது. பள்ளமான சாலைகள் பல அரசு ஊழியர்களை கோடீஸ்வரராக மாற்றி இருக்கும். பேருந்துகள் பெயரில் மட்டுமே சொகுசுப் பேருந்து, மற்றபடி பேருந்துகள் எல்லாம் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் அளவிற்கு தரமற்றதாக, உயிரை எடுக்கும் அளவில் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் லஞ்சமும், தரமற்ற மருத்துவ சேவையும், படுக்க இடமின்றி நோயாளிகள் அவதிப்படுவதும் மக்களுக்கு அரசு செய்யும் நன்றிக்கடனா எனத் தெரியவில்லை.

இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் ஊடகங்கள் வாயிலாக தங்களது விடுதலைச் செய்தி ஒரு நிமிடத்திலேயே உலகம் முழுவதும் தெரிந்து விட்டது. அமைச்சர்கள் தங்களது பணிகளை முனைப்புடன் கவனிக்கவும், விடுதலை ஆனந்த பெருவிழா என்ற பெயரில் ஊர் ஊருக்கு காது கிழியும் பாடல்களுடன், மக்களை இம்சிக்கும் பொதுக்கூட்டம் நடத்தாமல் இருக்கவும் ஆணையிட வேண்டும். தங்களுக்காக ஆடல் பாடல் நிகழ்சிகள், குத்துப்பாட்டு, கோவில் வேண்டுதல்கள் நடத்துவதை மக்கள் பிரதிநிதிகள் நடத்துவதற்கு பதிலாக, மக்கள் குறையை கேட்க தொகுதிப்பக்கம் வரச் சொன்னால் அதுவே மக்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவி.

உங்கள் கூட்டணியில் உள்ள ஒருவரே நான் முதல்வராக மக்கள் ஆசைப்படுகிறார்கள் என்று சொல்வதும், கூட்டணி திசை மாறி நான்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஒருவரும், பத்திரிகையளர்களை மிரட்டும் கட்சித் தலைவரும், உங்களை புகழ்ந்து பேசி தவறான வழியில் சம்பாதிக்கும் உங்கள் அருகில் உள்ள அமைச்சர்களும் சூழ்ந்துள்ள தமிழகத்தில் மக்களுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்ற உறுதியுடன் திறம்பட செயல்பட வேண்டும்.

தங்களது வெற்றி மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வீண் ஆடம்பரமும், விளம்பரமும் இல்லாத அரசியலை பொதுமக்கள் விரும்புகின்றனர். ஏழை மக்களுக்காகவே மீண்டும் முதல்வராக நீங்கள் பதவி ஏற்பதாகச் சொன்னால், டாஸ்மாக் ஒழிப்புச் செய்தி எங்கள் இதயங்களில் விடுதலைச் செய்தியாக மகிழ்ச்சியுடன் வந்து நிறையட்டும். மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும்.

எஸ். அசோக் @ விகடன்



விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 12, 2015 5:44 am

நல்ல பதிவு

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 12, 2015 11:19 am

ஐயோ இதெல்லாம் முடியாது சார்...
இப்ப இது அதாவது மது, நமது கலாச்சாரங்களில் ஒன்றாகி விட்டது

எப்படி இருந்த நாங்க விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Z
இப்படி ஆயிட்டோம்.விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Alcohol_jpg_1128715g

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. டாஸ்மாக், தமிழ்நாடு முழுதும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 12, 2015 7:19 pm

நல்ல மடல், அவங்க கண்களுக்கு எட்டியது என்றால் நலம் நமக்குத்தான் புன்னகை...................எவ்வளவோ செய்யலாம்,
சூரிய சக்தியை பயன்படுத்தி , மின்சார செலவை குறைத்து என்று நிறைய சொல்லலாம்.ஆனால் அவங்க செய்வாங்களா அல்லது ...........பழைய குருடி கதவை திறடி என்பது போல பழிவாங்கல் படலத்திலேயே நின்று விடுவாங்களா? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி..புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக