புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
5 Posts - 13%
heezulia
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
3 Posts - 8%
Raji@123
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
7 Posts - 2%
prajai
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10அக்னி நக்ஷத்திரம் !  Poll_m10அக்னி நக்ஷத்திரம் !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்னி நக்ஷத்திரம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2015 6:08 pm

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை…

நல்ல கடுங்கோடைக் காலம் ஆரம்பிச்சாச்சு. எல்லாருமே வெயிலில் வெந்து கொண்டிருக்கோம். இன்னும் வெயில் அதிகமாய்த் தெரியும் அக்னி நக்ஷத்திரம் என்னும் நாட்கள் வேறே வரப் போகின்றது. சூரியன் பூமிக்கு மிக அருகே வரும் நாட்கள் தான் அவை என அறிவியல் கூறுகின்றது. ஆனால் நம் முன்னோர்கள் எதையும் மெய்ஞானத்தோடு சேர்த்தே பார்க்கிறவர்கள் ஆகையால் அவங்க சொல்லும் காரணத்தை இங்கே பார்ப்போமா?  

சுவேதகி என்ற மன்னன் ஒருவன் தொடர்ந்து பனிரண்டு வருஷங்கள் யாகம் செய்தான். யாகத் தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. யாகத்தில் விடப் பட்ட நெய்யை அக்னி தொடர்ந்து ஏற்றுக் கொண்டான். அதைத் தொடர்ந்து சாப்பிட்டதிலே அவனுக்கு வயிற்றில் நோய் ஏற்பட அதன் காரணமாய் அவன் பிரம்மாவைச் சரணடைந்தான். அவனோட நோய்க்கு நிறைய பச்சிலைகள் நிரம்பிய  காண்டவ வனம் தான் என்று பிரம்மா சொல்கின்றார்.

காண்டவ வனம் எங்கே இருக்கு? அக்னி தேடுகின்றான். ஆஹா, அதோ காண்டவ வனம், யமுனைக்கரையிலே! ஆவலுடன் சென்றான் அக்னி, அந்த வனத்தைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தான்.  மூலிகைச் செடிகள் நிறைந்த காண்டவ வனத்தை உண்டால், அவனது உடல் நலமாகும் ...ஆனால் அவன்  அதனை அழிக்க முற்பட்டபோது, அங்கிருந்த உயிர்கள் வருணனை வேண்ட, பலத்த மழை பெய்தது.

என்ன செய்வது எனப் புரியாமல் தவித்தான் அக்னி. அப்போது, ஆற்றங்கரைக்கு அர்ஜுனனோடு பேசிக் கொண்டே வந்த ஸ்ரீகிருஷ்ணனைக் கண்டான் அக்னி. ஸ்ரீகிருஷ்ணர் தான் நம்மைக் காக்க வல்லவர் என்ற எண்ணம் அவன் மனதில் உண்டாகியது.

ஸ்ரீகிருஷ்ணர்  என்ன வேண்டும் எனக் கேட்க, தன நிலைமையை சொன்னான் அக்னி. மழை  வந்து தான் காண்டவ வனத்தை நெருங்க விடாமல் செய்வதை அக்னி சொல்கின்றான். ஸ்ரீகிருஷ்ணர் அக்னியிடம், “உனக்கு 21 நாட்கள் கெடு கொடுக்கின்றேன். அதற்குள்ளாக நீ வனத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும். இந்திரன் பெரு மழையாகக்கொட்டினாலும் உன்னை நெருங்க மாட்டான். நீ அதற்குள்ளாக உன் வேலையை முடித்துக் கொள்ள வேண்டும்.” என்று சொல்லிவிட்டுப் பார்த்தனைப் பார்க்கின்றார்.

காண்டவ வனத்தை அழித்தே அங்கே இந்திரப் பிரஸ்தம் கட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தனர் பாண்டவர்கள். ஆனால் காண்டவ வனத்தை அழிப்பது எவ்வாறு? இதோ தக்க சமயத்தில் அக்னி உதவிக்கு வந்துவிட்டானே.

அர்ஜுனன் அஸ்திரங்களை எய்து வானத்தை நோக்கிச் செலுத்தினான். ஆயிரமாயிரம் அம்புகள் அர்ஜுனனால் ஏவப் பட்டன. அனைத்தும் ஆகாயத்தில் இணைந்து ஒரு சரக் கூடமாக நின்று காண்டவ வனத்தை மழையில் இருந்து காத்தது. அக்னியும் உள்ளே நுழைந்தான். அங்கே உள்ள அனைத்தையும் அள்ளி விழுங்க ஆரம்பித்தான். இந்திரனோ அதைத் தடுக்க ரொம்ப ரொம்ப பலமா மழையைப் பொழிய வைக்க முயல, ஒரு துளி கூட அங்கே விழாதபடிக்கு சரக்கூடம் தடுத்து நின்றது.

முதல் எழு நாட்கள் அக்னி மெல்ல மெல்ல உணவை விழுங்க ஆரம்பித்தான். அப்போது வெப்பம் மெல்ல மெல்லப் பரவ ஆரம்பித்தது. அடுத்த ஏழு நாட்கள் கொஞ்சம் அதிகமாயும், வேகமாயும் காட்டை விழுங்க ஆரம்பிக்க வெப்பம் கடுமையானது. கடைசி எழு நாட்கள், படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது காடும், அக்னியின் வேகமும். வெப்பம் மெல்ல மெல்லக் குறைந்தது.

இந்த இருபத்தி ஒரு நாட்களையே அக்னி நட்சத்திரம் என்ற பெயரில் சொல்லுகின்றோம். சென்னை மக்களால் கத்திரி வெயில் என்றழைக்கப் படும் இவற்றின் முதல் ஏழு நாட்கள் வெப்பம் படிப்படியாக அதிகரித்து நடு ஏழு நாட்கள் வெப்பம் உச்ச கட்டத்தை அடைந்து கடைசி ஏழு நாட்களில் வெப்பம் படிப்படியாகக் குறைவதையும் உணரலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2015 6:16 pm

அக்னி நட்சத்திரம். இந்தப் பெயரைச் சொன்னாலே, வியர்த்து விறுவிறுத்து, பெருமூச்சு விடத் தொடங்கிவிடுவார்கள் பலர்.

சூரியனுக்கும் அக்னிக்கும் என்ன சம்பந்தம்? நட்சத்திரம் என்று சொல்வது ஏன்?

சூரியனும் ஓர் நட்சத்திரம்தான். அதீத பிரகாசத்தினாலும் பூமிக்கு அருகிலேயே இருப்பதாலும் பகலில் தெரிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். குறிப்பிட்ட காலகட்டத்தில் பூமிக்கு மிக அருகில் சூரியன் வருவதால் வெம்மை அதிகரிக்கிறது. அதோடு, அக்னிநட்சத்திர காலகட்டத்தில் சூரியனும், சந்திரனும் பூமிக்க அருகே வருவதாகச் சொல்கின்றனர்.

புராணம் என்ன சொல்கிறது?

முன்பொரு காலத்தில் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாமல் நெய் ஊற்றி சுவேதகி எனும் யாகம் செய்தனர் முனிவர்கள். அக்னி தேவன் அந்த யாக நெய்யை உண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டான். மூலிகைச் செடிகள் நிறைந்த காண்டவ வனத்தை உண்டால், அவனது உடல் நலமாகும் என்றனர் எல்லோரும். அதன்படி அவன் அதனை அழிக்க முற்பட்டபோது, அங்கிருந்த உயிர்கள் வருணனை வேண்ட, பலத்த மழை பெய்தது. எனவே அக்னி திருமாலின் உதவியை நாடினான். மகாவிஷ்ணு, அர்ஜுனனை அனுப்பினார். அவன் அம்புகளால் கூரை அமைத்து மழையைத் தடுத்து, அக்னிபகவான் காட்டினை உண்ண உதவினான். இருபத்தொரு நாட்கள் இந்த காண்டவ வன தகனம் நடந்தது.
சூரியனின் வெப்பமும், அக்னியின் வெம்மையும் சேர்ந்து உலகையே தகித்தது அந்த நாட்களில், இது அக்னி நட்சத்திர காலகட்டமாகச் சொல்லப்படுகிறது.

சூரியனின் மனைவி உஷாதேவி, தன் கணவனின் உடல் வெப்பம் தாங்காமல் தவித்தாள். தன் நிழலையே ஒரு பெண்ணாகப் படைத்து அங்கே இருக்கச் செய்துவிட்டு தான் மறைந்து வாழ்ந்தாள். நிழல் பெண்ணுடன் வாழ்ந்த சூரியன் ஒரு காலகட்டத்தில் உண்மை உணர்ந்தான். உஷாவை மீண்டும் அழைத்தான். அவள் மறுக்க, சூரியனின் வெம்மையைக் குறைத்திட முடிவு செய்தார், அவள் தந்தையான விஸ்வகர்மா, அதன்படி பகலவனின் தேஜஸைத் தேய்த்து மழுக்கி அவனது வெப்பத்தைத் தணித்தார்.

உஷா மகிழ்வோடு கணவன் வீடு வந்தாள். தான் இழந்த ஒளியை வருடத்தில் சில நாட்கள் திரும்பப் பெற வேண்டும் என விரும்பினான், சூரியன். சம்மதித்தார் விஸ்வகர்மா. சூரியன் தன் முழுமையான தேஜஸுடன் இருக்கும் காலகட்டமே அக்னி நட்சத்திரம் என்கிறது மற்றொரு புராணம்.

ஈசனின் அனல் விழிக் கனலில் இருந்து அவதரித்தவன் ஆறுமுகன். தீப்பிழம்பு சரவணப் பொய்கையில் விந்து சிசுவான போது அவனை எடுத்து வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். குழந்தையின் உடல் தகிப்பைத் தணிக்க, தங்கள் உடலோடு சேர்த்து அணைத்க் கொண்டனராம் அப்பெண்கள். அவர்களிடம் இருந்த குளிர்ச்சி குழந்தைக்கு போக, பாலகனின் உடல் வெப்பம் அந்தப் பாவையர்க்குச் சென்றதாம். தன் மீது அன்பு கொண்ட அவர்களது உடல் வெப்பத்தை, பிரகாசமான ஒளியாக மாற்றி அவர்களை நட்சத்திரங்களாக வானத்தில் சுடர்விடச் செய்தான் சுப்ரமண்யன். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி தேவன். பொதுவாகவே கார்த்திகை நட்சத்திரத்தினை வெப்பமான நட்சத்திரம் என்பார்கள்.

அக்னி நட்சத்திரத் தொடக்கநாள் முதல் காலத்தில் அதிகாலையில் எழுந்து நீராடுங்கள். சூரியனுக்கு உரிய கோலத்தை பூஜை அறையில் அரிசி மாவினால் போடுங்கள். சூரியனை நோக்கி மனதார வேண்டுங்கள். முதல் நாளிலும் கடைசி நாளிலும் சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம்.

நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து முருகப் பெருமான் துதிகளைச் சொல்லுங்கள் வெம்மை தீர்க்கும் அம்மன்களான, மாரிய்மன் மீனாட்சியம்மன் ஆகியோரை வழிபடுவதும் நல்லது. பரணிக்குரிய துர்க்கையும், ரேவதிக்கு உரிய பிரம்மனையும் கிருத்திகைக்கு உரிய அக்னி பகவானையும் கும்பிடுவதும் சிறந்தது. சிவபெருமான், நரசிம்மர், மகாவிஷ்ணு, சீதளா தேவி போன்ற தெய்வங்களை வணங்குவது மிகவும் நன்மை தரும்.

நோய்கள் எளிதாக பரவும் காலகட்டம் இது. எனவே மஞ்சள் கரைத்த நீரை வேப்பிலையால் தொட்டு வீடு முழுவதும் தெளிக்கலாம். இவை அனைத்தையும் விட, வெயிலால் வாடுவோர் குளிரும் வண்ணம் பானகம், நீர்மோர், தண்ணீர், தயிர்சாதம், விசிறி, காலணிகள் என உங்களால் இயன்றதை தானமாக அளியுங்கள். கால்நடைகளுக்கு நீரும், கீரையும் கொடுங்கள்.

உங்கள் மனமும் உடலும் குளிர இறைவன் அருள் மழை பொழிவான்.

ஜெயலட்சுமி ராமசுவாமி குமுதம் பக்தி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 04, 2015 7:06 pm

இங்கு எங்களூரில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே உள்ளது. எனவே வெய்யிலே இல்லை. காலையில் சற்றுக் குளிர் அடிக்கிறது.
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2015 7:21 pm

நீங்களும் பெங்களூர் தானே ஐயா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 04, 2015 7:24 pm

krishnaamma wrote:நீங்களும் பெங்களூர் தானே ஐயா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1134769
ஆம் கிருஷ்ணம்மா ....என்னை மறந்து விட்டீர்களே !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2015 7:33 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
krishnaamma wrote:நீங்களும் பெங்களூர் தானே ஐயா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1134769
ஆம் கிருஷ்ணம்மா ....என்னை மறந்து விட்டீர்களே !
மேற்கோள் செய்த பதிவு: 1134775

இல்லை ஐயா மறக்கலை புன்னகை .........நல்லா நினைவில் இருக்கீங்க ஐயா ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .மேலே சொன்ன கட்டுரை மெட்ராஸ் காராளுக்கு ஜாலி ஜாலி ஜாலி ......நமக்கு இல்லை அக்னி நக்ஷத்திரம் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 04, 2015 8:39 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இங்கு எங்களூரில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே உள்ளது. எனவே வெய்யிலே இல்லை. காலையில் சற்றுக் குளிர் அடிக்கிறது.
அப்படியா...? பெங்களூர் வாசிகள் கொடுத்து வைத்தவர்கள். புன்னகை



அக்னி நக்ஷத்திரம் !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅக்னி நக்ஷத்திரம் !  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அக்னி நக்ஷத்திரம் !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2015 9:51 pm

விமந்தனி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இங்கு எங்களூரில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே உள்ளது. எனவே வெய்யிலே இல்லை. காலையில் சற்றுக் குளிர் அடிக்கிறது.
அப்படியா...? பெங்களூர் வாசிகள் கொடுத்து வைத்தவர்கள். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1134794

என்ன இவ்வளவு slow வா சொல்லரீங்க விமந்தனி......புன்னகை.....................வருடத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் இல் மட்டும் சில சமயம் fan போட வேண்டி வரும்.......மற்றபடி no need for fan ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2015 6:01 am

அக்னி நக்ஷத்திரம் !  103459460 அக்னி நக்ஷத்திரம் !  3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக