புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_m10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_m10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10 
77 Posts - 36%
i6appar
திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_m10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_m10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_m10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_m10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_m10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_m10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_m10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10 
2 Posts - 1%
prajai
திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_m10திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 12:26 am

திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  Yt3hiLCQbihPfIQWv5da+cococola5001

திரும்பிய திசையெல்லாம் பசுமையான வயல் வெளிகள், தூய்மையான காற்று, சுத்தமான தண்ணீர் என ஒரு காலத்தில் செழிப்பாய் காட்சியளித்த கேரள நெற்களஞ்சியத்தின் ஒரு பகுதி பாலக்காடு அருகே உள்ள பிளாச்சி மடா கிராமம். இப்போது அந்த கிராமம் கிட்டத்தட்ட ஒரு பாலைவனம். ஒரு சில ஆண்டுகளில் நிகழ்ந்த இந்த தலைகீழ் மாற்றத்துக்கான ஒற்றை காரணம் கோக கோலா ஆலைதான்.

பிளாச்சி மடா கிராமத்தில் 2000ம் ஆண்டில் தொழிற்சாலையை கட்டியது கோக கோலா நிறுவனம். பல ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து நிலத்தடியில் தண்ணீரை அளவு கடந்து உறிஞ்சியது. 'வேலை கிடைக்கிறது. ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது' என கொண்டாடினர் ஊர் மக்கள். இரு ஆண்டுகள் கடந்ததும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. நிலத்தடி தண்ணீர் கறுத்து, மாசுபட்டது. நீர்வளமிக்க பிளாச்சி மடாவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. மக்கள் தண்ணீர் லாரியை எதிர் நோக்கினர்.

எல்லாவற்றுக்கும் காரணம் கோக கோலா ஆலைதான் என்பதை உணர்ந்த பொதுமக்கள், ஆலையையும், அதற்கு உறுதுணையாய் இருந்த அதிகாரபீடத்தையும் எதிர்த்து, தெருவில் இறங்கி போராடத் துவங்கினர். இடைவிடா போராட்டத்தின் மூலம் கோக கோலா ஆலையை பிளாச்சி மடாவில் இருந்து விரட்டியடித்தனர் அப்பகுதி மக்கள்.

கேரளா மாநிலம் பிளாச்சி மடாத்தின் இந்த கதை, பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும். பெருந்துறையில் கோக கோலா நிறுவனம் தனது ஆலையை அமைப் பதற்கான வேலையை துவங்கிய போது, அதன் சிக்கலையும், ஆபத்தையும் பிளாச்சி மடாத்தின் கதையை சொல்லித்தான் மக்களுக்கு புரிய வைத்தார்கள் சூழலியலாளர்கள்.

.......................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 12:27 am

திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  NvAI9rtOS7mSonEo7qnZ+cococola5002

இதன் விளைவாக ஒன்று திரண்டு, அதிகார பீடத்தை தைரியமாக எதிர்கொண்டு பெருந்துறையில் அமைய விருந்த கோக கோலா நிறுவனத்தை ஆரம்பத்திலேயே விரட்டியும் அடித்துள்ளனர் பெருந்துறை மக்கள்.

ஒரு ஏக்கர் நிலம் ஆண்டுக்கு ஒரு ரூபாய்!

கோக கோலா நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது இந்தியா. இதன் காரணமாக இந்தியாவில் ஆண்டுதோறும் கோக கோலா நிறுவனம் தனது முதலீடையும் ஆலைகளின் எண்ணிக்கை யையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கோக கோலா நிறுவனம் ஆலை ஒன்றை அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை 2013 ம் ஆண்டு துவங்கியது.

இதற்காக பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள 71.30 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் கோக கோலா நிறுவனத்துக்கு ஒப்படைத்தது 'மக்கள் முதல்வரின்' அரசு. அதுவும் மிக மிக குறைந்த விலைக்கு.

இதை விலைக்கு என்று கூட சொல்ல முடியாது, இலவசம் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் குத்தகை தொகை ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு வெறும் ஒரு ரூபாய். 71 ஏக்கருக்கு ஆண்டுக்கு 71 ரூபாய். 99 ஆண்டுக்கும் சேர்த்தால் கூட குத்தகை தொகை 7 ஆயிரத்தை எட்டாது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ஏக்கருக்கு பல லட்சம். நிலம் மட்டுமல்ல, நீரையும் கோக கோலா நிறுவனத்துக்கு வழங்க ஒப்பந்தமிட்டது அரசு.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீரை லிட்டருக்கு 4 பைசா வீதம் வழங்கவும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இது தவிர ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அங்கிருந்து தண்ணீரை உறிஞ்சி எடுக்கவும் அனுமதி கொடுத்திருப்பதாக சொல்லப்பட்டது.

........................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 12:30 am

திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  9WN8fJUvQsGCSbsCx4sP+cococolalefttt

கொந்தளித்த சூழலியலாளர்கள்

இந்த தகவல் வெளியே கசிய, மக்களுக்கு கிடைக்கும் தண்ணீரை கோக கோலா ஆலைக்கு தாரை வார்த் தால் நிலத்தடி நீரை முழு மையாக ஆலை உறிஞ்சிக்கொண்டு சுற்றுச்சூழல் மிக மோசமான பாதிப்பை சந்திக்கும் என அஞ்சிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியர், மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மனு கொடுத்தனர்.

நடவடிக்கை எதுவும் இல்லாததால் மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தை துவக்கினர். தங்களது பகுதிக்கு புதிய தொழிற்சாலை வேண்டும் எனக் கேட்டு போராடும் மக்களுக்கு நடுவே, எங்கள் பகுதிக்கு ஆலை வேண்டாம் என போராடிய பெருந்துறை மக்களின் போராட்டம் தமிழகத்தை ஒட்டுமொத்தமாக திரும்பி பார்க்க வைத்தது. மக்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் களமிறங்கின.

போராட்டம் வலுத்ததால் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தியது மாவட்ட நிர்வாகம். இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் எங்களுக்கு ஆலை வேண்டாம் என ஒற்றை குரலில் தங்களது கருத்தை பொதுமக்கள் பதிவு செய்தனர். அதன் பின்னரும் அரசு இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்க... மக்களின் போராட்டம் தொடர்ந் தது.

.................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 12:31 am

திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  OMfok2A8QgufeGhyvrrj+cococola500alt2

பின்வாங்கிய கோக கோலா... ரத்தானது அனுமதி

மக்களின் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்காத நிலையில், கோக கோலா நிறுவனம் அறிக்கை மூலமாக விளக்கமளித்தது. "தாங்கள் நிலத்தடி நீரை எடுக்கப் போவதில்லை. தேவையான தண்ணீரை சிப்காட் நிர் வாகத்திடமிருந்தே பெற உள்ளோம். கழிவுநீரையும் சுத்திகரித்தே வெளியிடுவோம்," என அந்நிறுவனம் அளித்த உறுதியை ஏற்க மறுத்து தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டனர். நிறுவனத்தின் அறிவிப்புக்கும் பின்னர், ஏப்ரல் 23ம் தேதி ஒப்பந்த நகல் எரிப்பு போராட்டம், ஏப்ரல் 30ம் தேதி அனைத்து அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் பேரணி பொதுக்கூட்டம் என அடுத்தடுத்த போராட்டங்களை போராட்டக்குழு அறிவிக்க பரபரத்தது பெருந்துறை.

மக்களின் ஆவேசத்தைக் கண்ட கோக கோலா நிறுவனம், இனி இங்கு ஆலையை நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தது. ஆலை துவங்கும் திட்டத்தை கைவிட்டது. இதையடுத்து கோககோலா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது சிப்காட். 'மக்கள் எதிர்ப்பு காரணமாக இங்கு ஆலை துவங்க விரும்பவில்லை' என கோக கோலா நிறுவனம் பதிலளித்ததையடுத்து வேறு வழியின்றி கோக கோலா நிறுவனத்திற்கு நிலம் வழங்கியதற்கான அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 12:32 am

திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  M0VMuMOQjGeWGd11xeJw+cococola500alt

கடைசி வரை ஆலைக்கு சாதகமாய் இருந்த 'மக்கள் முதல்வரின்' அரசு

மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. ஆனால் மக்களோடு, மக்களுக்காக இருக்க வேண்டிய அரசு தரப்பு, கடைசி வரை கோக கோலா நிறுவனத்துக்கு சாதகமாகவே இருந்ததுதான் மக்களை எரிச்சல்படுத்திய விஷயம். குறிப்பாக பெருந்துறை தொகுதியைச் சார்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், கோக கோலா நிறுவனத்துக்கு சாதகமாகவே செயல்பட்டார் என வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகின்றனர் போராட்டக்குழுவினர்.

"இங்க கோக கோலா ஆலை வரக்கூடாதுனு முதல்ல அமைச்சர்ட்டதான் மனு கொடுத்தோம். ஆனா அவர் அதை கண்டுக்கலை. கருத்துக்கேட்பு கூட்டத்துல ஒட்டுமொத்த மக்களும் ஆலை வேண்டாம்னு சொன்னதற்கு பிறகும் அவர் இந்த பிரச்னையில மக்கள் பக்கம் நிக்கலை.

கோக கோலா ஆலை பிரச்னையில இரு வேறு கருத்து இருக்குறதால நடவடிக்கை எடுக்க முடியலைனு சொன்னார். ஒட்டு மொத்த மக்களும் ஆலை வேண்டாம்னு கருத்து கேட்பு கூட்டத்துல சொன்னதுக்கு அப்புறம் எங்கே ரெண்டு கருத்து வந்துச்சு.

சட்டமன்றத்துல இந்த பிரச்னையில் கோக கோலா நிறுவனத்துக்கு ஆதர வாகத்தான் அரசும், அமைச்சரும் செயல்பட்டாங்க. செய்யப்பட்ட ஒப்பந்தத் தை மறைச்சு, 'கோகோ-கோலா ஆலைக்கு அனுமதியே அளிக்கவில்லை' னு அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சொன்னார்.

மக்களோட தொடர்ச்சியான போராட்டங்களால கடந்த ஒரு வருஷமா வேலையை துவங்க முடியாம கோக கோலா நிறுவனமே ஆலையை திறக்க வேண்டாம்னு முடிவெடுத்தது. அது தெரிஞ்சுதான் கடந்த ஏப்ரல் 14ம் தேதி கோக கோலா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய சிப்காட், “தங்களுக்கு இடம் ஒதுக் கப்பட்டும் இதுவரை பணிகளைத் தொடங்கவில்லை. அதனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்தை ஏன் நாங்கள் திரும்பப் பெறக்கூடாது?” என கேட்டிருந்தாங்க.

அதுக்கு, 'மக்கள் போராட்டம் நடக்குறதால ஆலையை துவங்கினாலும் சிக்கல்தான். அதனால நாங்க இங்கே ஆலையை துவங்கறதா இல்லை'னு கோக கோலா நிறுவனம் பதில் அனுப்பிய பின்தான், இந்த திட்டம் கைவிடப்பட்டிருக்கு. அரசு நினைச்சிருந்தா ஆலைக்கான ஒப்பந்தத்தை அப்போதே ரத்து செய்திருக்கலாம். ஆனா கடைசி வரை கோக கோலாவுக்கு ஆதரவாதான் இருந்துச்சு" என்கின்றனர் போராட்டக் குழுவினர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 12:32 am

திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!  ILqRvJYZTKGEbJJ90EkI+cococola5003

கோக், பெப்ஸி ஆலைக்கு தமிழகத்தில் எங்கும் அனுமதி கூடாது

தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலனிடம் பேசினோம்.

"பெருந்துறை கோக கோலா ஆலைக்கான அனுமதியை ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கவில்லை. சிப்காட் மூலம்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை அரசு வெளிப்படையாக அறிவித்தால், தமிழகம் முழுவதும் கோக், பெப்ஸி நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகும் என அரசு அஞ்சுகிறது.

கோகா கோலாவை எதிர்த்து தமிழக அரசு ஒரு போதும் பேசாது. ஏனென்றால் அந்நிறுவனத்துக்கு ஆதர வான நடவடிக்கையில்தான் அரசு நிர்வாகமே இயங்குகிறது. இனிமேலாவது அரசு மக்களுக்கு மதிப்புக் கொடுத்து, சிப்காட் பகுதியில் ஆபத்தான, மாசுபடுத்தக்கூடிய, மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடிய எந்த தொழிற்சாலைகளையும் கொண்டு வரக்கூடாது. தமிழகத்திலுள்ள மற்ற கோக், பெப்சி ஆலைகளின் அனுமதியையும் அரசு ரத்து செய்ய வேண்டும்," என்றார் காட்டமாக




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 12:33 am

விளைவுகளை அறிந்து அரசு செயல்பட வேண்டும்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம், "சட்டப்பேரவையில் நில ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பியபோது சுற்றுச்சூழல் துறை அமைச்சர், 'கோக கோலா கம்பெனிக்கு நிலம் வழங்கப்படவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தார். நில ஒப்பந்த நகல் இருப்பதை மறுநாள் நிரூபித்த பிறகு வேறு வழியின்றி “நிலம் வழங்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் பணிகள் துவங்கப்படவில்லை” என்று ப(தி)ல் இ(அ)ளித்தார்." என்றார்.

"மக்களுக்காக திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல' என்று அம்மா எப்போதும் சொல்லி வருகிறார். அந்த வாக்கை மெய்பி ப்பது போன்று, மக்கள் ஏற்றுக்கொள்ளாத, மக்களுக்கு இடையூறாக இருக்கும், கோக கோலா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நில ஆர்ஜித ஆணை, அம்மாவின் உத்தரவுப்படி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த கோக கோலா நிறுவனத்தை நாம் கொண்டு வரவில்லை. மத்தி யில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது நமது நாட்டுக்குள் நுழைந்தது" என இப்போது பொதுக்கூட்டங்களில் தமிழக அரசின் சார்பில் பேசி வருகிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்.

ஏன் தமிழக அரசு தொடர்ந்து பொய்களையே பேசி வருகிறது என பரிதாபமாய் பார்க்கின்றனர் அப்பாவி விவசாயிகளும், பொதுமக்களும்...

ச.ஜெ.ரவி
படங்கள் : ரமேஷ் கந்தசாமி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 12:34 am

சபாஷ்......................இதுபோல மீத்தேன் திட்டத்திலும் செய்தால் தமிழ் நாட்டுக்கு நல்லது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 03, 2015 1:00 am

நல்லவிஷயம் , தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப வசதியை கொண்டு பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற பொதுபிரச்சினைகளுக்கு அனைத்து ஜாதி , மத , கட்சி பேதமில்லாது ஒன்றிணைந்து போராடினால் தான் தமிழகத்தை ஆண்ட , ஆளுகின்ற , ஆளும் கனவுகளுடன் இருக்கிற அனைத்து அரசியல் நாய்களுக்கு கொஞ்சமாவது பயமும் மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது என்ற எண்ணமும் வரும்.


ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 03, 2015 6:43 am

நல்ல செய்தி ....nanri

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக