புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_m10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_m10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_m10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_m10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_m10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_m10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_m10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_m10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_m10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_m10மே 3 சித்ரா பௌர்ணமி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 3 சித்ரா பௌர்ணமி !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2015 3:34 pm

மே 3 சித்ரா பௌர்ணமி ! A4KOYLStQPOe26fFfSo7+chitra-pournami1

சித்திரை மாதம் பௌர்ணமி திதியில்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது

இத் திதியும், நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர் தர்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும் அமைகின்றது.

சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன. அம்மனுக்குச் சிறப்புப் பொருத்திய இச்சித்திரா பௌர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.

ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர் சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை. நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் தொகுத்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது.

எமதர்மனின் கணக்கரான சித்ர குப்தன் சித்திரை நட்சத்திர தினத்தன்றுதான் நீலாதேவி மற்றம் கர்ணிகாம்பா ஆகியோரை மணந்ததாகப் புராணம் சொல்கிறது. அன்னை மீனாட்சி, மதுரையில் சொக்கநாதரை மணந்ததும், சித்திரை மாத பவுர்ணமி தினத்தில் தான். கள்ளழகர் மதுரை வைகையாற்றில் சித்திரை மாத பவுர்ணமியில் விழா காண்கிறார்.

இறைவியாகிய அம்பாள்; இயற்கையின் சக்தியாக தர்மத்தின் காவலாக, உலக இயக்கத்தின் ஆதாரமாக விளங்குவதாக இந்துக்கள் கொள்கின்றனர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்த அம்பாள் காலத்திற்குக் காலம் பல்வேறு அவதாரங்களை எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

பூமா தேவியாக, பொறுமையின் இருப்பிடமாக வீற்றிருக்கும் அன்னை பொறுமை இழந்தால் எரிமலையாகக் கிளர்ந்தெழவும், புயலாக, வெள்ளமாக, வரட்சியாக, ஆழிப்பேரலையாக, அதிர்வாக, கொடுநோய்களாக வெளிப்பட்டு தன் சக்தியைக் காட்டி உலகத்தோருக்குப் புத்தியைப் புகட்டும் ஆற்றல் மிக்கவள்.

தாயாக இருந்து வாழ்வளிக்கும் அம்மனை இந் நன்நாளில் நம்பிக்கையுடன் தொழுது நின்றால் நிச்சயம் வாழ்வில் மலர்ச்சியும், எழுச்சியும் நம்மை நாடி வரும். துன்ப, துயரங்கள் தூர விலகி விடும். மங்களம் பொங்கும். நல்வாழ்வு கிட்டும் என புராணங்கள் கூறுகின்றன.

அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது. வெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம்.

உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.
.................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2015 3:36 pm

மே 3 சித்ரா பௌர்ணமி ! UaSoZFtfTIKrnXo0CJYl+89e2e581-c8a0-466c-8cb6-a64fa03e968a_S_secvpf

சித்திர புத்திரனாரின் தீர்ப்பின்படியே கர்ம வினைகள் தொடரும் என்பதால் அவரை நினைத்து விரதமிருந்து வாழ்வைச் செம்மைப்படுத்தி நேரிய வழியில் செயற்பட மனப்பக்குவம் பெற இவ்விரதம் உதவுகின்றது. அதனால் போலும் “புண்ணியம் (தர்மம்) செய் புனிதனாவாய்”என்பதனை உணர்த்த அம்பாள் ஆலயங்களில் சித்திரபுத்தினார் கதை படித்து சித்திரைக் கஞ்சி வார்த்து தர்மம் செய்யத் தூண்டுகிறார்கள்.

அத்துடன் அம்பிகையின் ஆலயங்களில் “குளிர்த்தி” செய்வதன் மூலம் அம்பிகையின் சீற்றத்தை, கோபத்தை, தணிப்பதனால் அம்பிகையின் சீற்றத்தால் ஏற்படும் அம்மாள் வருத்தம்(கொப்பளிப்பான், சின்னம்மை போன்றவை) ஏற்பாடாது எம்பது ஐதீகம். அதனால் அம்பிகை ஆலயங்களில் குளிர்த்தி பெரு விழாவாக கொண்டாடப்பெறுகின்றது.

மனதைச் செம்மைப்படுத்தி பகுத்தறிந்து தீயன தவிர்த்து, நல்லனவற்றை நாடி செயற்பட உறுதி கொள்ளும் இச்சித்திர புத்திரனார் விரதமானது மனித குலம் வாழ வேண்டிய சீரிய வழியைச் செப்பனிடும் ஒரு முக்கிய விரதமாகவும் கொள்ளப்படுகின்றது.

பிதிர்களுக்குரிய விரதநாள்
தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை அன்று விரதமிருந்து வழிபாடு செய்வதைப் போன்று; தாயாரை இழந்தவர்கள் சித்திரா பௌர்ணமி தினத்திலே விரதத்தை மேற்கொள்கின்றனர். தாயாரை இழந்தவர்கள் இத்தினத்திலே விரதமிருந்து வழிபாடு செய்வதால் இந்நாள் பிதிர்களுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது.

எம்மைப் பெற்று, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவு கூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தூய்மையின் பெருமையை மனதிலிருத்தி அவரது ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெற இறைவனைத் தொழும் நாளாகவும் இந்நாள் அமைகின்றது.

வான மண்டலத்தில்; சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் அளவை திதி என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் (ஒரே நேர் கோட்டில் அமையும்) நாளில் மூதாதையர்களுக்கு திதிகொடுப்பதும், (அன்று சூரிய சந்திரர்கள் ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்.) பெளர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அன்று சூரிய சந்திரர்கள் சம சப்தமமாக இருப்பார்கள்.)

அமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் இணைந்த சந்திரன், தினமும் 12 டிகிரி நகர்ந்து 15 நாளான பெளர்ணமி அன்று 180 ஆம் டிகிரியை அடைகிறது. சூரியனுக்கு சம சப்தமமாகி முழுமையான ஆகர்ஷண சக்தியை (ஈர்ப்பு) வெளிப்படுத்துகிறது. அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் சிறப்பைப் பெறுகின்றன.

சூரியனை பித்ருகாரகன் (தந்தையை நிர்ணயிப்பவர்) என்றும், சந்திரனை மாத்ருகாரகன் (தாயை நிர்ணயிப்பவர்) என்றும் கூறுவர். அதாவது அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு திதி தர்ப்பணம் செய்கிறோம்.

சூரியனுக்கு அதிதேவதையாக பரமசிவனையும், சந்திரனுக்கு அதிதேவதையாக பார்வதியையும் வைத்திருப்பதும் ஆராய்ச்சிக்கு உகந்தது. அமாவாசை, பெளர்ணமி அன்று முறையே சூரிய சந்திர சங்கமத்தையும், சமசப்தமமாக இருப்பதையும் சிவசக்தியின் ஐக்கியம் என்று கூறுவது மிகையாகாது.

மனித மனத்தின் மீது அமாவாசை, பெளர்ணமி திதிகளின் தாக்கம், அமாவாசை, பெளர்ணமி அன்று நிகழும் ஆகர்ஷண சக்தியின் வேறுபாடுகள் மனித மன இயல்புகளில் பெரும் மாறுதல்களை உண்டாக்குகின்றன என்பதை மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது. இந்தக் காலங்களில் மன நோயாளிகளின் நடத்தையில் மாற்றங்கள் உண்டாகின்றன. மேலும் ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சித்தப்பிரமை. மன அழுத்தம், ஹிஸ்டீரியா பொன்றவைகள் உண்டாவதையும் அனுபவரீதியாகக் காண்கிறோம்.

..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2015 3:37 pm

இதற்கு ஜோதிடத்தின் மூலமாக காரணங்களைத் தேடுங்கால் சூரியனை ஆத்மகாரகன் என்றும், சந்திரனை மனோகாரன் என்றும் நமது புராதன நூல்கள் குறிப்பிடுவதன் மகத்துவம் புரிகிறது. நமது ஆத்ம பலம் பெருகினால்தான் நம்மால் இந்த உலகில் சிறப்புடன் வாழ முடியும். கடவுளைத் தேடும் ஆற்றலும் உண்டாகும். அதாவது ஆன்மீகத்தின் மூலமாக ஆத்மபலத்தைப் பெற இத்தகைய ஜாதக அமைப்பு உதவுகிறது.

ப்ராணாயாம், யோகா போன்றவற்றிற்கு சூரிய பகவானின் அனுக்கிரகம் அவசியம் தேவை. ஆத்மபலம் மேம்பட, மனதின் சக்தி அவசியம் �மனம் வசப்பட உன்னை உணர்வாய்� என்பது பெரியோர் வாக்கு. அப்படிப்பட்டமனதை நிர்ணயிப்பவர் சந்திர பகவான்.

அதனால்தான் சூரிய சந்திரர்களின் பலத்தைப் பெருக்கிக் கொள்வதால் வசிய சக்திகளைப் பெறும் ஆற்றல் உண்டாகிறது. அத்துடன் இச்சித்திரா பௌர்ணமி விரதத்தைக் கைக்கொள்வதன் மூலம் மறைந்து விட்ட தாயாரை ஆண்டு தோறும் நினைவுபடுத்திக் கொள்ளவும் வழிகோலப்படுகின்றது.

தாய் உயிருடன் இல்லாத ஆண்களும், தாரமிழந்த பெண்களும் காலையில் எழுந்து புனித (இலங்கையில் கீரிமலை, பாலாவி போன்ற) நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை மனதில் நினைத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த முதலாம் ஆண்டு தினம் முடியும் வரை இவ்விரதத்தை அனுசரிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் செய்யாமல் இவ்விரதத்தை அனுசரிப்பர்.

பாவ காரியங்களிலிருந்து நீங்கி மேலான புண்ணிய சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் வழிமுறையை விரதங்கள் காட்டுகின்றன. உடலையும் உள்ளத்தையும் சீர் செய்யவும் விரதங்கள் வழி கோலுகின்றன. திருவிளையாடற் புராணத்திலே சித்திரை விரதத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. இந்நூலில் இந்திரன் சிவனை வணங்கித் தீவினைகள் நீங்கப்பெற்றான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

மறைந்து விட்ட தாயாரை நினைவிற் கொண்டு விரதமிருப்பதுடன் வாழ்வில் தவறுகள் தவிர்க்க நல்வழி செய்ய தூண்டுதல் செய்யும் சித்திர புத்திரனார் விரதமிருப்பதும் இந்நாளின் சிறப்பை இரட்டிப்பாக்குகின்றது.

இந்நாளில் தமிழகத்தின் திருவண்ணாமலை உள்பட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வர்.

தமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச் சிறப்பு உடையதாகவும் அமைந்து விளங்குவது பாடல் பெற்ற சிவஸ்தலமான மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும். சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.

64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும். இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாக்ஷி அம்மையை வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.

சித்ரா பௌர்ணமி; தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ராபௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது.

...................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2015 3:40 pm

மே 3 சித்ரா பௌர்ணமி ! 35rp9yrCQ5ChHpGymXCp+229e96ef-b56e-4383-83b1-43061d8907c6_S_secvpf

ஒருமுறை விருத்தராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான்.

குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான்.

இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று அம்பிகையை பூஜித்து நல்வாழ்வு பெறலாம்.

அம்பிகை வழிபாட்டிற்கு பௌர்ணமி தினம் சிறப்பானதாக குறிப்பிடப்படும் புனித நாளாகும். அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.

பௌர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.

நன்றி : இணையம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 02, 2015 5:40 pm

நல்லத் தகவல் .
வடஇந்தியாவில் வசந்த் பூர்ணிமா என்று இதை கொண்டாடுவார்கள் .
பொதுவாக வெட்டவெளியில் , குடும்பம் குடும்பமாக சேர்ந்து , பஜனை செய்து ,
இறைவணக்கம் செய்து , பாலை சுண்ட காய்ச்சி, இரவு 12 மணிக்கு ,
சந்திரனுக்கு நைவேத்தியம் செய்து , எல்லோருக்கும் கொடுப்பார்கள் .
சூப்பராக இருக்கும் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 02, 2015 10:29 pm

திரு அண்ணாமலையார் பாதம் போற்றி போற்றி!

திருவண்ணாமலை கிரிவலம், சதுரகிரி கிரிவலம் இந்நாளில் மிக விசேடமாக இருக்கும். அனைவர்க்கும் சிவனருள் கிடைக்கட்டும்...சிவாயநம !



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2015 11:59 pm

T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல் .
வடஇந்தியாவில் வசந்த் பூர்ணிமா என்று இதை கொண்டாடுவார்கள் .
பொதுவாக வெட்டவெளியில் , குடும்பம் குடும்பமாக சேர்ந்து , பஜனை செய்து ,
இறைவணக்கம் செய்து , பாலை சுண்ட காய்ச்சி,  இரவு 12 மணிக்கு ,
சந்திரனுக்கு நைவேத்தியம் செய்து , எல்லோருக்கும் கொடுப்பார்கள் .  
சூப்பராக இருக்கும் .

ரமணியன்

நாங்கள் இரவு நிலா வெளிச்சத்தில், மொட்டைமாடி இல் சித்ரான்னகள் செய்து கொண்டு போய் வைத்துக்கொண்டு சாப்பிடுவோம்புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 12:00 am

நன்றி ஐயா, நன்றி சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 03, 2015 12:54 am

நன்றி இணையம் என்று போட்டுள்ளீர்கள் , எந்த தளம் யார் எழுதிய கட்டுரை என்று தெரியவில்லை
கட்டுரையாளர் பல தகவல்களை தொகுத்துள்ளார் நன்றிகள் புன்னகை ஆனால் ,
சித்ரா பௌர்ணமி; தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ராபௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது.
மதுரை தான் தமிழ்நாட்டில் இவருக்கு தெரிந்த ஒரே ஊராக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். சித்திரா பவுர்ணமி என்றதும் எங்களை போன்ற பழைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் தற்போதைய நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் மட்டுமில்லாது சிலப்பதிகாரம் தெரிந்த அனைத்து தமிழ் ஆர்வலர்களுக்கும் முதலில் நினைவுக்கு வருவது பூம்புகாரும் அங்கு நடக்கும் சித்திரை விழாவும் தான் புன்னகை இதை பற்றி கட்டுரையாளர் ஒன்றுமே போடவில்லையே



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 03, 2015 6:54 am

Raja wrote:சிலப்பதிகாரம் தெரிந்த அனைத்து தமிழ் ஆர்வலர்களுக்கும் முதலில் நினைவுக்கு வருவது பூம்புகாரும் அங்கு நடக்கும் சித்திரை விழாவும் தான் புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆம் ,

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக