புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_m10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_m10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10 
13 Posts - 25%
Baarushree
வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_m10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_m10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10 
2 Posts - 4%
prajai
வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_m10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10 
2 Posts - 4%
Rutu
வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_m10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10 
1 Post - 2%
சிவா
வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_m10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10 
1 Post - 2%
viyasan
வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_m10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_m10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_m10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10 
1 Post - 8%
Rutu
வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_m10வாட்ஸப் வக்கிரங்கள் !  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸப் வக்கிரங்கள் !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 01, 2015 9:29 pm

வாட்ஸப் வக்கிரங்கள் !  P88b

இன்றைய நாளின்... ஏன் இந்த நிமிடத்தின் பரபரப்பைத் தீர்மானிக்கும் அதிரடி ஊடகமாக உருவெடுத்திருக்கிறது வாட்ஸ்அப்!

புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ... என ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று அதில் வைரலாகப் பரவுகிறது. பல நடிகைகளின் அந்தரங்க செல்ஃபிகள் ஆரம்பத்தில் அணிவகுக்க, இப்போது சாமானியர்களின் அந்தரங்கம் அதில் பரபரப்பாகப் பரப்பப்படுகிறது. சென்னை காவல்துறை உதவி ஆணையருக்கும் பெண் காவலருக்கும் இடையிலான உரையாடல் கடந்த மாத வைரல் என்றால், 'ஆசிரியை - மாணவன் காதல்’ இரண்டு வாரங்களுக்கு முந்தைய வைரல். 'கிளாட்வின் - எழிலரசன் ஆடியோ’ கடந்த வாரம். இந்தக் கட்டுரை அச்சுக்குச் செல்லும் சமயம், ஒரு பேராசிரியரின் வீடியோ. இவற்றில் பெரும்பாலானவை பாலியல் தொடர்பானவையாக இருக்கின்றன. அவற்றை ரகசியமாகப் பார்த்துவிட்டு யாரும் அழித்துவிடுவது இல்லை. 'அய்யய்யோ... யாரோ ஒருவரின் பெர்சனல் ஆயிற்றே இது!’ எனப் பதறும் மனச்சங்கடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நம்மவர்கள் இழந்துவருகிறார்கள். தனக்கு வந்ததை இந்த உலகத்துக்குச் சொல்லியே ஆக வேண்டும் என்ற தீராத துடிப்புடன் முடிந்தவரை அதிகம் பேருக்கு ஷேர் செய்துவிட்டுத்தான் ஓய்கிறார்கள். மொத்த சமூகமும் இந்த நோய்க்கூறு மனநிலையில்தான் திரிகிறது. 'இன்னைக்கு என்ன வாட்ஸ்அப் ட்ரெண்டிங்?’ என ஒருவருக்கு ஒருவர் குறுஞ்சிரிப்புடன் விசாரித்துக்கொள்வதைப் பார்த்தால், கலக்கமாக இருக்கிறது.

''இணையத்தின் வழியாக உருவாகும் வெர்ச்சுவல் களமானது, மனிதமனத்தின் இயல்புத்தன்மையோடு சடுகுடு ஆடத் தொடங்கியிருக்கிறது. இதுவரை இந்தச் சமூகம் பார்த்திராத விசித்திரமான மனிதர்களையும் அந்த மனிதர்களின் வக்கிரங்களையும் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். இங்கு யாருக்கும் எந்தவிதமான மரியாதையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்தவர்களின் அடிப்படைச் சுதந்திரத்தைக்கூட மதிக்கத் தேவை இல்லை. நாம் பகிரும் வீடியோ/ஆடியோ/புகைப்படத்தால் இன்னொரு குடும்பம் எப்படிப்பட்ட மன அழுத்தங்களுக்கு ஆளாகும் என யோசிப்பதே இல்லை. நம் தேவையெல்லாம் அந்தச் சொற்ப நேர அற்பச் சந்தோஷம் மட்டுமே'' என்கிறார் இணையத்தில் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் வா.மணிகண்டன்.

ஆனால், இந்த அற்பத்தின் பாதிப்புகள் மிக, மிக அதிகம். எந்த வக்கிரமும், இறுதியில் ஒரு பெண்ணின் இருப்பைச் சிதைப்பதைப்போலவே, இவற்றின் இறுதி பாதிப்பைச் சுமப்பவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். வாட்ஸ்அப்பில் பரவும், தனிப்பட்ட ஓர் அந்தரங்க வீடியோவில் இடம்பெற்றிருக்கும் பெண் அடையும் மன அழுத்தத்தை யாராலும் அளவிட முடியாது. அவரது அப்பாவுக்கும் அண்ணனுக்குமே அந்த வீடியோ பகிரப்படலாம்; அவரது திருமண வாழ்வைச் சிதைக்கலாம்; மணமுடித்த பெண்களுக்கு எதிர்காலத்தில் மீண்டும் சிக்கல் உண்டாக்கலாம். அது, அந்தப் பெண்ணை வாழ்நாள் எல்லாம் துரத்தப்போகும் பூதம்; காலை எடுத்தால் வெடித்துவிடுவதற்காகக் காத்திருக்கும் கண்ணிவெடி. அந்தரங்கத்தைப் படம்பிடித்துக்கொண்ட அறியாமையும் தவறும் அவருடையதாக இருந்தாலும், மற்றவர்களின் அந்தரங்கத்தைப் பகிரங்கப்படுத்தவும் பகிரவும் நமக்கு என்ன இருக்கிறது உரிமை? வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோவை அனுப்பியது யார், யார்-யார் வழியாக கைமாறி இது வந்திருக்கிறது என்ற விவரத்தை வெளிப்படையாக அனைவரும் பார்க்க முடியும் என்ற நிலை வந்தால் மட்டுமே, இந்த அபாயக் கலாசாரத்தை ஓரளவேனும் கட்டுப்படுத்த முடியும்!

''ஒரு பெண்ணைப் பற்றி பரப்பப்படும் பொய்யான செய்திகள், அவரது வாழ்க்கையை அழித்து, குடும்பத்தையே தற்கொலைக்குத் தள்ளும் அளவுக்கு வன்முறையானவை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கும் பகிர்வதற்கும் என்றே ஆயிரக்கணக்கான வலைதளங்கள் இயங்குகின்றன. தமிழிலும் உள்ளன. லட்சக்கணக்கானவர்கள் இவற்றைப் பார்ப்பதால், விளம்பரம் மூலமும் வேறு வழிகளிலும் அவர்களுக்கு வருவாய் வருகிறது. கிசுகிசுக்களையும் அவதூறுகளையும் பரப்புவது கொழுத்த லாபம் தரும் தொழிலாக உருவெடுத்துள்ளது'' என்கிறார் இணையம் சார்ந்த தொழில்நுட்பத்தில் இயங்கிவரும் இலங்கையைச் சேர்ந்த மயூரன்.

மேலும், ''தொழில்நுட்பரீதியாகப் பார்த்தால், ஆபாச, அவதூறு செய்திகளை உள்ளடக்கிய லிங்க்குகள்தான், ஹேக்கர்களின் தூண்டில்களாக இருக்கின்றன. லிங்க்கில் இருக்கும் தலைப்பு அல்லது புகைப்படத்தைக் கண்டு மயங்கி, நீங்கள் அதைச் சொடுக்கிய உடனேயே உங்கள் கணினியில் வைரஸைப் பரவச் செய்யலாம். உங்களை ஏமாற்றி, உங்களின் அந்தரங்கத் தகவல்களைப் பெற முடியும்; உங்களை இணையம் வழியாக உளவு பார்க்க முடியும். தகவல்களின் சுவாரஸ்யத்தில் நீங்கள் ஏமாற்றப்படுவது உங்களுக்கே தெரியாமல் போய்விடும்'' எனவும் எச்சரிக்கிறார்.

வாட்ஸப் வக்கிரங்கள் !  88c

செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பற்றிய விவரம், நேபாளம் பூகம்பம் குறித்த வீடியோ, ரத்தம் தேவை என்ற அறிவிப்பு... என வாட்ஸ்அப்பில் பயன்தரக்கூடிய எத்தனையோ தகவல்களும் வரத்தான் செய்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த அளவுடன் ஒப்பிடும்போது அவை சொற்பம். ஆபாசமும் அசிங்கமுமே அதிகம் பகிரப்படுகின்றன. செல்போனில் அதிவேக இணையம் சாத்தியமான பிறகு, இதற்காக கம்ப்யூட்டரைத் தேடிச் செல்லவேண்டிய அவசியம்கூட இல்லாமல் போய்விட்டது. அலுவலகம், வீடு, டீக்கடை, பேருந்து, ரயில், கழிப்பறை, கோயில், நடுத்தெரு... என எங்கிருந்தும் இந்த வீடியோ, புகைப்படங்களைப் பார்க்கவும் அனுப்பவும் முடியும். இதனால் சாலைகளில், செல்போன் திரையில் முகத்தைப் புதைத்துக்கொண்டே நடக்கிறார்கள். காதில் இருக்கும் இயர்போனில் என்ன ஆடியோ ஒலிக்கிறது என்பது நமக்குக் கேட்பது இல்லை. ஆனால், அவர்களின் முகங்களில் நவரசம் மிளிர்கின்றன.

அதே நேரம் இந்த நவீன சமூக ஊடகங்களின் வரவையும் வளர்ச்சியையும் முற்றிலுமாக நிராகரிக்க முடியாது. இவற்றுக்கு நேர்மறையான பங்களிப்பும் இருக்கத்தான் செய்கிறது.

'' 'சிட்டிசன் ஜர்னலிசம்’ என்பது நீண்ட காலமாக உலகளாவிய அளவில் இருந்துவரும் ஒரு போக்கு. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக இந்தவிதமான இதழியல், பிரமாண்டமாக உருவெடுத்துள்ளது. 'அரேபிய வசந்தம்’ என்றழைக்கப்படும் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட பெரும் கிளர்ச்சிகளுக்கு இந்த சிட்டிசன் ஜர்னலிசமே வித்திட்டது. மக்களே செய்திகளைத் திரட்டுதல், அவற்றைப் பரப்புதல், அதன் மூலமாக ஒரு குடிமைச் சமூகத்தின் கண்காணிப்பை நிறுவனங்களின் மீதும் அரசின் மீதும் உருவாக்குதல் எனப் பல செயல்பாடுகள் உலகம் முழுக்க நடந்துவருகின்றன. இது, ஜனநாயகத்துக்கும் சமூக வளர்ச்சிக்கும் பயன்படக்கூடிய ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மேலும், இன்று சுயநலம் சார்ந்த பல்வேறு காரணங்களுக்காக செய்தி ஊடகங்கள் மறைக்கிற அல்லது அழிக்கிற பல செய்திகளை இந்த சிட்டிசன் ஜர்னலிசம் மூலம் வெளிக்கொணர முடியும்'' என்கிறார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

இதே கருத்தை மயூரனும் வலியுறுத்துகிறார். ''ஒரு கிசுகிசுத் தகவலுக்கு, அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்கும் பண்பும் எதிர்ப்பு அரசியல் பண்பும் உண்டு. இலங்கையில் மகிந்த ராஜபக்ஷே குடும்ப ஆட்சி நிலவியபோது, ஊடகங்கள் மிக மோசமாக அச்சுறுத்தி ஒடுக்கப்பட்டன. எல்லா இடங்களிலும் தணிக்கை இருந்தது. அந்தச் சமயத்தில் மகிந்த ராஜபக்ஷே குடும்பத்தின் ஊழல்களும் அரசப் படைகளின் குற்றங்களும் அரசாங்கத் துக்கு எதிரான மேலும் பல தகவல்களும் கிசுகிசு வடிவத்திலும் வதந்தி வடிவத்திலுமே பரவின. பல சிங்கள கிசுகிசு இணையதளங்களே இதைப் பரப்பின. அவை வழக்கமான... கீழ்த்தரமான பாலியல் கிசுகிசுக்களுடன், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கிசுகிசுக்களையும் வெளியிட்டன. கடுமையான இனவெறியும் மகிந்த ராஜபக்ஷே மீதான தலைவர் வழிபாடும் உச்சத்தில் இருந்த வேளையில், இவ்வாறான தகவல்களை சிங்கள மக்கள் ஆர்வமாகப் படித்ததும் பகிர்ந்ததும் கவனிக்கப்படவேண்டிய நிகழ்வு'' என்கிறார் மயூரன்.

ஆனால், இதே தொழில்நுட்பம் சமூக விரோதிகளின் கையில் செல்லும்போது அது பெரும் சீரழிவை உருவாக்குகிறது.

''வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் வரும் செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள் உண்மைதானா என்பதை நாம் எப்போதும் சந்தேகிக்க வேண்டும். ஏனென்றால், பொய்களை உருவாக்கிப் பரப்புவதற்கு எளிதான ஊடகம் அது. மேலும், இதுபோன்ற செய்திகளை உருவாக்கி துர்நோக்கத்துடன் பரப்புகிறவர்கள் மேல் கடுமையான தண்டனைகளை அளிக்கக்கூடிய தெளிவான சட்டங்கள் தேவை. தமிழ்ச் சமூகத்தில் எது புதிதாக உள்ளே வந்தாலும், அது ஏன் ஒரு மனநோய்க்கூறுடன் வருகிறது என எனக்குப் புரியவே இல்லை'' என்கிறார் மனுஷ்யபுத்திரன்.

ஆபாசத்துக்கு அப்பால், நவீன சமூக ஊடகங்களும் இணையமும் மனித மனங்களில் ஏற்படுத்தும் உளவியல் தாக்கத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டும். இவை மேம்போக்கு மனநிலையை வளர்த்தெடுத்து, எதையும் ஆழமாகக் கற்றறியும் மனப்பாங்கை மனித மனங்களில் இருந்து அகற்றுகின்றன. பத்து வரிகள் எழுதினால் படிக்க ஆள் இல்லை. ரெண்டு வரி, ஏழெட்டு வார்த்தை... அவ்வளவுதான். சுருங்கச் சொல்லப் பழக்கப்படும் மனம், அதற்கு ஏற்றவாரே சிந்திக்கிறது. 'நாலு வரிகள் போதும்’ என்றால், நாலு வரிகளுக்குத் தேவையான அளவுக்குச் சிந்தித்தால் போதும்; நாலு வரிகளுக்குப் படித்தால் போதும் என, இது பரிணாம வளர்ச்சியடையும்.

சிந்தனைப் பரப்பு, இப்படிச் சுருங்குவது ஆபத்தானது. பொட்டலம் எத்தனை பெரிதாக இருந்தாலும் உள்ளே காலியாக இருந்தால் என்ன பயன்? அதனால்தான் இன்றைய இளைஞர்களால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தீர்க்கமான ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. 'இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால், ஊழலை ஒழித்துவிடலாம்’ என, ஃபார்வர்டு மெசேஜ் ஒன்று வந்தால், அதை இன்னும் நான்கு குரூப்புக்கு ஃபார்வர்டு செய்கிறார்களே தவிர, அதன் அபத்தத்தைச் சிந்திக்க மறுக்கின்றனர்.

வாட்ஸப் வக்கிரங்கள் !  P88d

அதுபோலவே இவர்கள் எதற்காகவும் காத்திருப்பதும் இல்லை. எல்லாம் உடனடியாக வேண்டும். செயலின் விளைவுகள் இப்போதே தெரிய வேண்டும். அனுப்பிய எஸ்.எம்.எஸ்-ஸுக்கு அடுத்த நொடியே ரிப்ளை வரவேண்டும். 'டபுள் டிக் வந்திருச்சுல்ல... அப்புறம் ஏன் உடனே ரிப்ளை பண்ணலை?’ என வாட்ஸ்அப்பில் பாய்கிறார்கள். அப்லோடு செய்த புகைப்படத்

துக்கு உடனடி லைக் வேண்டும். உடனடி காதல், உடனடி புரமோஷன் என இது வாழ்வின் செயல்களில் எதிரொலிக்கிறது. இது,சோம்பேறித்தனத்தை வளர்த்தெடுக்கிறது. ஃபேஸ்புக்கில் கமென்ட் எழுதுவது என்றால், அது இரண்டு வரிகளே ஆயினும், அதற்காக யோசிக்க வேண்டும்; எழுத வேண்டும். ஆனால், லைக், ஷேர் செய்வதற்கு ஒன்றும் தேவை இல்லை. ஒரு டச்... ஒரு ஸ்வைப்... முடிந்தது. இத்தகைய எளிய, சுருக்கப்பட்ட வடிவம் நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நிரம்பியிருக்கிறது.

ஆனால், தனக்கு விருப்பமானதைத் தேடிச் செல்லும் ஆர்வமும், அதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் உழைப்பும்தான் ஒரு மனிதனுக்கு அனுபவங்களைத் தரக்கூடியவை. அவைதான் மனித அறிவைச் செறிவூட்டுகின்றன. ஒரு தனி மனிதனை, சமூகத்துடன் இணைக்கும் புள்ளியும் அதுதான். அத்தகைய தேடல் இல்லாமல் இருப்பது இளைஞர்களின் விருப்பமா, அவர்களைச் சூழ்ந்திருக்கும் தொழில்நுட்ப மாய உலகத்தில் அவர்களுக்கு வேறு தேர்வுகள் இல்லையா என்றால், இரண்டும்தான்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக மனித இனம் சேமித்துவைத்திருக்கும் அறிவு, கருவிகளின் வடிவில் புற உலகில் உலவுகிறது. அது ஒவ்வொன்றும் மனித வாழ்வை முன் எப்போதும் இல்லாத வகையில் இலகுவாக்கியிருக்கிறது. இந்தக் கருவிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அதன் சுலபத்தன்மை நம் எண்ணங்களுக்குள் இடம் மாறுகிறது. எல்லாமே சுலபமாக நடக்க வேண்டும் என நினைக்கிறோம். வரிசையில் நின்று, காத்திருந்து... ம்ஹூம், அதெல்லாம் முடியாது. குரோர்பதி நிகழ்ச்சியில் 'அந்த 20-வது கேள்வியை முதல்ல கேளு. சீக்கிரம் கிளம்பணும்’ என்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். இப்படி நவீனத் தொழில்நுட்பம் அகத்திலும் புறத்திலும் ஏற்படுத்தும் மாற்றங்கள் அதிரவைக்கின்றன.

''இந்த அவசர உலகத்தில், திண்ணைகளில் அமர்ந்து பேசும் கிசுகிசுக்கள் இல்லை; கல்யாண வீடுகளில் ஆற அமர ஊர்க்கதைகளைப் பேசும் நிலைமை இல்லை; டீக்கடைகளிலும் சலூன்களிலும் நாட்டுநடப்புகளைப் பேசுவது இல்லை. குடும்பத்திலேயேகூட சக மனிதரிடம் மனம்விட்டுப் பேசி எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கும்? பேருந்திலும் ரயிலிலும் சக பயணிகளிடம் பேசுகிறோமா? இறுகிப்போய் கிடக்கிறோம். எந்த நேரமும் எல்லாவற்றிலும் அவசரம். ஓடிக்கொண்டே இருக்கிறோம். இடைப்பட்ட நேரங்களில் கணினித் திரையும் மொபைல் திரையும் தோள்கொடுக்கின்றன. எங்கேயோ இருக்கும் முகம் தெரியாத ஒரு மனிதனின் வழியாக நமக்கு அடுத்தவனின் கிசுகிசுக்களும் அந்தரங்கங்களும் வந்து சேர்கின்றன. அதை முகம் தெரியாத இன்னொரு மனிதனுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து ஆனந்தம் அடைகிறோம். இது ஒருவிதமான வடிகால்.

நம்மாழ்வார் சொல்வார், 'டிராக்டர்களைப் பார்த்தால் உழுவதுபோலத்தான் தெரியும். ஆனால், அவை உழுவது இல்லை; மேல்மட்ட மண்ணை மட்டும் கிளறிவிடுகின்றன. ஆனால், டிராக்டரின் எடையைத் தாங்க முடியாமல் அடியில் இருக்கும் மண் மேலும் மேலும் கெட்டிப்பட்டுப்போகிறது’ என்று. அப்படித்தான் சமூக ஊடகங்களும். இப்போதைக்கு வேண்டுமானால் சக மனிதர்களிடம் கிடைக்காத உறவை இந்தச் சமூக ஊடகங்கள் நமக்கு உருவாக்கித் தருவதைப்போன்ற பிம்பம் இருக்கலாம். ஆனால், நம்மை மேலும் மேலும் இறுகச்செய்து மனிதத்தைக் கூறுபோட்டு வீசும் வேலையைத்தான் வேகமாகச் செய்துகொண்டிருக்கின்றன'' என வா.மணிகண்டன் சொல்வது நினைவில்கொள்ள வேண்டிய கருத்து.

நவீனத் தொடர்பு ஊடகங்கள் நமக்குத் தகவல்களையும் ஆச்சர்யங்களையும் அள்ளித் தருகின்றன. அறிவு என்பது, யாரோ சிலருக்குச் சொந்தமானது என்ற நிலையை உடைத்திருக்கின்றன. ஆனால், இவை அடிப்படை மனித உணர்வுகளை மழுங்கடித்து எல்லாவற்றையும் வெறும் பொழுதுபோக்காக மாற்றுகின்றன. மெய் உலகின் அழகை நிராகரித்து மெய்நிகர் உலகை ஆராதிப்பதால் என்ன பயன்? இந்த உலகின் பேரழகுகள் யாருக்காக? எல்லாம் உங்களுக்காக. கேண்டிகிரஷ்ஷில் இருந்து கையை எடுங்கள். பால்வீதியில் முளைத்துக்கிடக்கும் கோடிக் கோடி நட்சத்திரங்கள் அழைக்கின்றன. அவற்றுக்குக் கண்களைக் கொடுங்கள்!

பாரதி தம்பி @ விகடன்



வாட்ஸப் வக்கிரங்கள் !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 01, 2015 9:55 pm

நல்லதும் இருக்கு , கெட்டதும் இருக்கு.
நல்லதை பகிர்வதற்கு சிலரே இருக்கின்றனர். கெட்டதை  பகிரவே அநேகர் உள்ளனர்.

கலி முதிபோச்சு....... சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 02, 2015 12:00 pm

சரவணன் wrote:நல்லதும் இருக்கு , கெட்டதும் இருக்கு.
நல்லதை பகிர்வதற்கு சிலரே இருக்கின்றனர். கெட்டதை  பகிரவே அநேகர் உள்ளனர்.

கலி முதிபோச்சு....... சோகம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



வாட்ஸப் வக்கிரங்கள் !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாட்ஸப் வக்கிரங்கள் !  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாட்ஸப் வக்கிரங்கள் !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2015 1:16 pm

சரவணன் wrote:நல்லதும் இருக்கு , கெட்டதும் இருக்கு.
நல்லதை பகிர்வதற்கு சிலரே இருக்கின்றனர். கெட்டதை  பகிரவே அநேகர் உள்ளனர்.

கலி முதிபோச்சு....... சோகம்

நிஜம் சரவணன்......................உடலுக்கு தீங்கு தரும் சாராயம் இருந்த இடத்திலேயே விற்று போகும்........ஆனால் உடலுக்கு நல்லதான நீர் மோரை கூவி கூவி தான் விற்கணும் ....................சோகம்................அது போல கெட்டதே அதிகம் பகிரப்படுகிறது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2015 1:18 pm

''இந்த அவசர உலகத்தில், திண்ணைகளில் அமர்ந்து பேசும் கிசுகிசுக்கள் இல்லை; கல்யாண வீடுகளில் ஆற அமர ஊர்க்கதைகளைப் பேசும் நிலைமை இல்லை; டீக்கடைகளிலும் சலூன்களிலும் நாட்டுநடப்புகளைப் பேசுவது இல்லை. குடும்பத்திலேயேகூட சக மனிதரிடம் மனம்விட்டுப் பேசி எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கும்? பேருந்திலும் ரயிலிலும் சக பயணிகளிடம் பேசுகிறோமா? இறுகிப்போய் கிடக்கிறோம். எந்த நேரமும் எல்லாவற்றிலும் அவசரம். ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

romba  sariyaana vaarththaigal ......nalla katturai .....pagirvukku nandri sivaa



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat May 02, 2015 3:18 pm

வாட்ஸ் அப் அக்கவுண்ட் இருந்தா - மாடர்ன் ஜெனரேசன்
இல்லன்னா ஓல்ட் மேன் போல பாக்குற யுகம் சார் இது



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 02, 2015 7:09 pm

M.M.SENTHIL wrote:வாட்ஸ் அப் அக்கவுண்ட் இருந்தா - மாடர்ன் ஜெனரேசன்
இல்லன்னா ஓல்ட் மேன் போல பாக்குற யுகம் சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1134343

எனக்கு பாங்குலேதான் அக்கவுண்ட் இருக்கு .
வாட்சப் இல் இல்லை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 02, 2015 10:22 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:நல்லதும் இருக்கு , கெட்டதும் இருக்கு.
நல்லதை பகிர்வதற்கு சிலரே இருக்கின்றனர். கெட்டதை  பகிரவே அநேகர் உள்ளனர்.

கலி முதிபோச்சு....... சோகம்

நிஜம் சரவணன்......................உடலுக்கு தீங்கு தரும் சாராயம் இருந்த இடத்திலேயே விற்று போகும்........ஆனால் உடலுக்கு நல்லதான நீர் மோரை கூவி கூவி தான் விற்கணும் ....................சோகம்................அது போல கெட்டதே அதிகம் பகிரப்படுகிறது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1134322
ஒரு வாக்கியம் சொன்னாலும் திரு வாக்கியம் சொன்னீர்கள்....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக