புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_m10 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 24, 2015 7:10 am

First topic message reminder :

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - மின்னஞ்சலில் வரும் இவரின் கவிதைகள் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளதால் தொடர் பதிவாக பதிய விரும்புகிறேன்... உங்களுக்கும் பிடிக்கும். புதுக்கவிதையில் இது புதுமாதிரி....

காதலர் தினம்
=========================================ருத்ரா

சுட்டெரிக்கும் சூரியன் கூட‌
கடலில் முகம் கழுவி
காற்றில் பல் தேய்த்து
பளிச்சென்று காத்திருக்கும்...
எங்கோ ஒதுங்கி இருக்கும்
அந்த மேக மங்கை
தன் முகம் தழுவி
கொடுக்கும் முத்தத்திற்கு
காத்திருக்கும்.
பிப்ரவரி பதினாலு
எனும் காலண்டர் தாள்
நரம்புக்குள்
ஆயிரம் மகரயாழை
நிமிண்டி விடும்.
இது வெள்ளைக்காரனின்
கருப்பு நிழல் என்று
வெறுப்பு கொள்வோரே
உங்கள் செல்லரித்த‌
சுவடிகளைத்தடவிப்பாருங்கள்
அங்கே ஒரு "காந்தர்வ"முறையில்
இளம் உள்ளங்கள்
காதலின் கிலுகிலுப்பைகளை
ஒலித்துக்கொண்டிருப்பது கேட்கும்.
இன்னும்
நம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
வால் எயிறு ஊறி
சொல் குழறிய மாணிக்கப்பரல்களில்
ஒலித்து ஒலித்து விளையாடும்
ஒளிப்பூக்கள் சிதறும்.
எலும்பு இற்று குருதி வற்றி
இதயத்தின்
ஓட்டைக்கசிவுகளில்
முனகும் துடிப்புகளில்
காலம் உன்னை
துவைத்துக் கசக்கிப்பிழியும்
நாட்களில்
நீ கொளுத்திப்பார்க்கும்
மத்தாப்புக்குச்சிகள் இது தானே!
மனிதா!
மழலை போல
இன்னொரு இனிய‌
தெய்வீக மொழியை உன்னால்
கேட்க முடியுமா?
சமுதாய வளர்ச்சியின்
ஒரு மழலை உருவகம்
இது.
இதைத்தகர்க்கவா
வெறும் சம்ப்ரதாயங்களின்
வெடிமருந்தை
மூட்டை கட்டி
முதுகில் சுமந்து கொண்டிருக்கிறாய்
எதிர்ப்பு என்ற பெயரில்?
வேண்டாம்..ஜாக்கிரதை!
வீணாய் நீ
வெடித்துச்சிதறாதே!
கண்ணாடிச்சிறகுகளில்
சர சரக்கும் தட்டாம்பூச்சிகளே!
உங்கள்
கனவுகளைச்செதுக்கி
கல்வெட்டு ஆக்கிக்கொள்ளுங்கள்.
________________



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 12:32 pm

வாக்குப்பெட்டியில் முடியவில்லை.
விவசாயியின்
உயிர் தான் கிடைத்தது.

டில்லி



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 30, 2015 12:32 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:கானல் நீர்.!
கங்கைகளும் காவிரிகளும்
இன்னும் இங்கு தான்.உற்பத்தி.


ஜனநாயகம்
மேற்கோள் செய்த பதிவு: 1133905

அருமை ,நன்றி ! ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 3838410834  ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 103459460

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 12:34 pm

உள்ளே...
வெளியே..
ஆட்டம் வெகு ஜோர்.

பரப்பன அக்ரஹாரம்.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 12:34 pm

நேபாளம்
========================================ருத்ரா

மலை மடிப்புக்குள்ளிருந்தும்
மண் பாம்பின் சீற்றமா?
பாளம் பாளமாய் ஆனதே
நேபாளம்.
நசுங்கிய உடல்கள்
காங்கிரீட் பிணங்களாய்
என்னே அவலம்.
செங்கல் நொறுங்கிய குவியல்களில்
தொன்மைப்படிவங்களும்
தொலைந்து கிடக்கின்றன.
குரல்கள் அவிழ்க்கும் முன்
உயிர்ப்பூக்கள் கூழாய்ப்போயின.
ஊழிக்கூத்தின் உடுக்கைக்கள்
கோவில்களில்
அதிர்ந்து காட்டிய போதெலாம்
கண்களில் ஒற்றிக்கொண்டோமே
ஒத்திகை தான் அது என‌
இன்று காட்டினானோ அந்த சிவன்.
எண்ணிக்கை தெரியாத குற்றமல்ல.
கிடைக்கின்ற கைகளும் கால்களும்
முழுக்கணக்கு காட்டும்போது நம்
மூச்சடங்கி அல்லவா போகிறது
பெரும் அதிர்ச்சியில்.
அந்த மக்களுக்கு
நாம் தோள் கொடுப்போம்.
அவர்கள் துவண்டு போகாமல் இருக்க‌
நம் இதயங்களால்
அவர்கள் கண்ணீரை ஒற்றி யெடுப்போம்.
துன்பத்துக்கும் கூட
எவரெஸ்ட் சிகரம் அங்கு உண்டு
என்று சொன்னதோ இந்த நில நடுக்கம்.
கடவுளின் குழந்தை
கிலு கிலுப்பையை
நேபாளத்தில் வீசி எறிந்து
விளையாடியதில்
வீணாய் எத்தனை எத்தனை உயிர்கள்
சிதறி நொறுங்கின!
நம் உதவிகள் குவியட்டும்.
மீட்பு பணியும் தொடரட்டும்.

===================================



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 12:35 pm

தாகம்
==============================================ருத்ரா

தெரு வெறிச்சிட்டு கிடக்கிறது.
வெயிலின் வெண்மை நாக்கு நக்கி கொடுத்ததில்
தூசு தும்புகள் கூட மினுமினுத்து
கதிர் வீசின..வெப்பம் கக்கின.
வழக்கமான கோடையின் புலம்பல்
சூரியனை நோக்கி காறி உமிழ்ந்தது.
சன்னல் கம்பிகளில்
பாம்பு மூச்சுகள் சுற்றிக்கிடந்தன.
தாகத்தை தர்ப்பூசணிகளில்
அறு கோணமாய் எண் கோணமாய்
ஒரு குங்கும ஜியாமெட்ரியில்
கொலு வைத்திருந்தார்கள்.
அடங்காத தாகம் அருகே இருந்த‌
தூங்குமூஞ்சி மரத்தின்
பஞ்சு மிட்டாய்ப்பூக்களில் கூட‌
உதடு சப்பிக்கொண்டிருந்தது அருவமாய்.
இயற்கையின் நதிகள்
மனிதன் கைகளின் கசாப்புக்கத்திகளில்
சின்னா பின்னம் ஆனதில்
பத்து பன்னிரெண்டு டி.எம்.சி என்றெல்லாம்
புள்ளி விவரம் வந்த போதும்
அத்தனை டி.எம்.சி யும் தண்ணீர் அல்ல‌
இன்னும் அது
நம் கண்ணீர் தான்.
நம் மண்ணின் தாகத்துக்கு
பூட்டுக்கு மேல் பூட்டுகள் போடும்
அணைக்கட்டுகள் எனும் மகிஷாசுரன்களை
கர்ப்பம் தரித்துக்கொண்டிருப்பதே
கர்னாடம் எனும் துர்நாடகம்.
பேச்சு வார்த்தை மூலம்
இரு மாநிலங்களிலுமே
தேன் ஆறு ஓடலாம்.
பாலாறு ஓடலாம்.
சிந்தனையில் பாழாறு ஓடுகிறதே.
ஓட்டு வங்கி எனும்
புற்று நோய்க்கிடங்கில்
மனித நேயம் செத்துக்கிடக்கிறதே!
சர்வாதிகாரத்தின் கொடூரங்கள் எல்லாம்
கறுப்பு பணத்திலும் லஞ்சத்திலும்
ஜனநாயக முகமூடி போட்டுக்கொண்டதால்
இங்கு
ஜனங்களும் இல்லை.
நியாயங்களின்
நாயகங்களும் இல்லை.

===================================



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 30, 2015 12:36 pm

 ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 103459460  ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - Page 3 3838410834

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri May 01, 2015 8:07 am

மே தினம்
================================ருத்ரா

இது
அமெரிக்க சிகாக்கோ நகரத்தில்
ஒரு "வைக்கோல் கட்டுகளின் சந்தையில்"
வயிற்றுப்பாட்டின் நெருப்பு
வியர்க்கின்ற நேரத்தையும் கூலியையும்
ஒரு சமன்பாட்டுக்கு கொண்டுவர‌
முடிச்சுபோட்ட‌
ஒரு வரலாற்றுத் துண்டு
என்றாலும்
பாரிஸ் கம்யூனில்
அன்று ஒரு நாள் கருவுற்றது.
கார்ல் மார்க்ஸ்
எனும் அன்னையே
தன் வயிற்றை அறுத்து
சிசேரியன் செய்து
பிறப்பித்துக்கொண்ட போதும்
குழந்தை
இன்னும் இன்குபேட்டரில் தான்.
உப்புரித்த வர்க்கத்துக்கும்
உப்பரிகை வர்க்கத்துக்கும்
இடையே
கயிற்று இழுப்பு போட்டி
நடந்த போதும்
ஒரு வினோதம் பாருங்கள்
இந்த பால் கடல் கடையும் விளையாட்டில்
இரண்டு பக்கமுமே
அசுரர்கள் தான்
தொழிலாளர்களின்
அந்த நரம்புக்கயிறு மட்டுமே நிஜம்.
புதிய பொருளாதாரம்
அது இது என்று எத்தனையோ
பொது உடைமைக்கு
பள பளப்பாய் பளிங்குச்சித்திரங்களோடு
சவப்பெட்டிகள்
பிறந்து கொண்டே இருக்கின்றன.
கருப்பைக்குள்ளிருந்தே
கணினியோடு
கை மடக்கி கை விரித்து
மானிடன்
அறிவின் மடைதிறந்து வருவதாய்
"சாம்பெய்ன்" நுரைக்க‌
கொண்டாடி குத்தாட்டம் போடுகிறார்கள்.
அன்று
மோசஸ் கட்டளைப்பாளங்களை
அடித்து நொறுக்கிய பின்னும்
ஒரு புதிய "சுத்தியலின்"
ஒரு "ஆப்ஸ்"ம் அந்த கையில்
இருப்பதாய்
மறைவாய் நின்று
ஒரு லாவாவில்
முலைப்பால் ஊட்ட‌
சமுதாயத்தின் தாய்
புன்னகைக்கிறாள்
என்பதே இந்த மே தினம்.
மே தினம் தினம் அல்ல.
கிழிக்கப்பட முடியாத ஒரு யுகத்தின்
வரலாற்றுக் காலண்டர் அது.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Jun 10, 2015 8:03 am

நடுவுல கொஞ்சம் "வெக்கத்தைக் "காணோம்
===================================================ருத்ரா


நேற்று நான் எழுதிய கடிதம்
அவளுக்கு கிடைத்திருக்கும்.
என் மனப்படம் விரிகிறது.
அவள் என்னிடம் பேசுவாள்.
ரோஜா தாமரை சண்பகம் அல்லி
ஆகிய பூக்கள்
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
என்றெல்லாம் பூத்து
அவள் கன்னத்தில்
ரவிவர்மாவின் ஓவியமாய்
குழைந்து நிற்கும்.
நிலம் நோக்கி
கால் விரல்களால்
அரைவட்டம் போட்டு
குறிப்பாய்
காதலின் "யூக்ளிட் ஜியாமெட்ரியாய்"
ஒரு குமுக்குச்சிரிப்பு சிரிப்பாள்.
நினைக்கும்போதே சிலிர்த்தது.
..அதோ ...அதோ வந்து விட்டாள்.
என் அருகில்
நிலவு முகம் வெள்ளி அருவியாய்...
என்ன செய்யப்போகிறாள்.
"ஐ லவ் யூ டா" என்று
சொல்லி முடிக்கும் முன்னேயே
என் முகத்தோடு அவள் முகம் சேர்த்து
இழுத்துப்பிடித்து அச்சடித்தாள்.
இதழ்கள் இச்சானதில்
எங்கோ ஒரு க்யூஜியமாவில்
பூகம்பம் ரிக்டரில் பத்து பன்னிரென்டு இருக்கும்.
நான் தூளாகிக்கிடந்தேன்.
கால் வேறு கை வேறு சிதிலமாய்
இடிபாடுகள்.
என் இதயம் துள்ளி துள்ளி துடித்து
எங்கோ கிடந்தது.
"அச்சம் மடம்...."
அந்த நாலு வார்த்தையை அவளிடம் கேட்டது.
"போடா ஃபூல்"..
நுரை விலங்கு பூட்டி
பொன் கூண்டுக்குள் அடைத்து
சிறகுகள் வெட்டி எங்களுக்கு
கிச்சு கிச்சு மூட்டியதெல்லாம் போதும்.
"ஹா ஹா ஹா ஹா"
காதலின் புதுயுகக் காளியாய் நின்றிருந்தாள்.
"சிதறிக்கிடந்தது போதும்!
ம்ம்ம் எழுந்திரு.."
கை கொடுத்து என்னைத் தூக்கினாள்.

=======================



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Jun 10, 2015 8:04 am

கடவுள் என்னும் கொசுத்தொல்லை
=============================================ருத்ரா


தூங்க முடிவதில்லை.
ஒலிபெருக்கிகளில்
மின்சாரத்தொண்டைகளின்
ஒலிமழை.
அது என்ன‌
கடவுள் என்பது கொசுத்தொல்லையா?
காதுகளில் ரீங்காரம்.
மொழி புரியாத வேதம்போல்.
சட்டென்று தட்டினால்
கையும் தொடையும்
அடித்துக்கொண்டது தான் மிச்சம்.
அதற்குள்
இமை முகட்டில்
மூக்கு நுனியில்
இன்னொரு ஜெபகீதங்களின்
ரீங்காரம்.
பயப்படு
பயந்து கொண்டேயிரு.
அப்போது தான்
பஜனைப் பாடல் வழியே
நான் உனக்குள்
சுரங்கம் வெட்டுவேன்.
இது யார் பேசுவது?
இருப்பினும்
ஆகாசத்திலிருந்து
யார் அதை எறிந்தது?
டி.வி சீரியல்களிலும் கூட‌
அர்ச்சனைத்தட்டுகளும்
அர்ச்சகர்களுமே
கதாநாயகர்கள்.
கடவுளே
வானத்திலிருந்து எறிந்த கேள்வி இது!
கடவுள் என்பது எது?
தலையில்
விண்கல் விழுமோ என்று
ஓராயிரம் கவலையாய் அது.
அடுத்த தடவை
சுநாமியின் நாக்கு
எத்தனை லட்சம் உயிர்களை
சுருட்டுமோ
என்று அடி வயிற்றுக் கலக்கமாய் அது.
பூகம்பக்கோட்டில்
நம் வீடும் வந்துவிட்டது.
அதனால் குளியலறை
கரப்பான் பூச்சியை
நசுக்கும்போதும்
காலின் கீழ் பூமி
ரிக்டர் ஸ்கேல் ஏழரையில்
ஒரு குலுங்கலா?
என்ற‌ தெய்வ அச்சம் அது.
சூரியன் கூட
வெப்பத்தை காறி உமிழ்ந்ததில்
இந்த தடவை
ஆயிரம் பேர் பலி!
தெய்வ குற்றத்தால்
வானத்துக்கே தீப்பிடித்து விட்டதோ
என்ற ஐயம் அது.
எறியப்பட்டது என்ன‌
அதைப் பார்க்கவும் தைரியம் இல்லை.
அதைத் தொடவும் தைரியம் இல்லை.
குலை நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
"கடவுள் என்பது எது"
இது கேள்வியா? விடையா?
இரண்டுமே அச்சம் தான்.
கடவுளுக்கு
மனிதனிடம் அச்சம்.
மனிதனின் அறிவினால்

மனிதனுக்கு
கடவுளிடம் அச்சம்.
இன்னும் அவனிடம் மிஞ்சியிருக்கும்
அறியாமையினால்.

=======================================



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Jun 10, 2015 8:05 am

"ஜெல்லி ஹவுஸ்"
===================================================ருத்ரா

கற்பனை ஜெல்லியில்
கட்டினேன் ஒரு ஜெப வீடு.
வழ கொழ வசனங்களில்
சன்னல்கள் திறந்து வைத்தேன்.
ஆகாயமும் உருகி வந்து
மூக்குநுனியில்
சளி பெய்தது.
குற்றம்
தண்டனை
நல்வினை
புண்ணியம்
கும்பிபாகம்
கிருமி போஜனம்
எல்லாம் கிராஃபிக்ஸில்
உறுமியது.
செறுமியது.
சொர்க்கம் என்று
போர்னோக்களை
வளைத்து நெளித்து
குழைத்து குவித்து தந்தது.
இந்திரனும் இந்திராணியும்
சோமத்தில்
குமிழி விட்டார்கள்.
காட்சிகள்
காமா சோமாக்கள்.
டாஸ்மாக்குகளில்
ஆர்டிகிள் முன்னூத்தி அறுபத்தெட்டு.
ஜனநாயகத்தைக்கூட்டல் செய்து
ஜனநாயகத்தை கழித்தல் செய்வோம்.
ஒண்ணு மட்டும் மிஞ்சும்.
அசோகசக்கரம் இனி நிறுத்துவோம்
உருட்டுக்கட்டையில்.
இனி
அம்பத்தொண்ணு வேண்டாம்.
ஒண்ணே ஒண்ணு
போதும் ஜனநாயகத்துக்கு!
அதுவே கட்டிங்க்..கட்டிங்க்
கட்டிங்க் தவிர வேறு இல்லை.
பாட்டில்கள் உடைத்து
சத்தியம் செய்தன.
மேலவை கீழவை எல்லாம்
இந்த ஜெல்லி ஹவுஸ் தான்.
ஜெல்லிப்புழுக்கள் எனும்
ஓட்டுகளின்
டேப் வோர்ம்கள்.

=============================



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக