புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 10 I_vote_lcapதேசியச் செய்திகள் - Page 10 I_voting_barதேசியச் செய்திகள் - Page 10 I_vote_rcap 
73 Posts - 78%
heezulia
தேசியச் செய்திகள் - Page 10 I_vote_lcapதேசியச் செய்திகள் - Page 10 I_voting_barதேசியச் செய்திகள் - Page 10 I_vote_rcap 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
தேசியச் செய்திகள் - Page 10 I_vote_lcapதேசியச் செய்திகள் - Page 10 I_voting_barதேசியச் செய்திகள் - Page 10 I_vote_rcap 
8 Posts - 9%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 10 I_vote_lcapதேசியச் செய்திகள் - Page 10 I_voting_barதேசியச் செய்திகள் - Page 10 I_vote_rcap 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 10 I_vote_lcapதேசியச் செய்திகள் - Page 10 I_voting_barதேசியச் செய்திகள் - Page 10 I_vote_rcap 
238 Posts - 77%
heezulia
தேசியச் செய்திகள் - Page 10 I_vote_lcapதேசியச் செய்திகள் - Page 10 I_voting_barதேசியச் செய்திகள் - Page 10 I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 10 I_vote_lcapதேசியச் செய்திகள் - Page 10 I_voting_barதேசியச் செய்திகள் - Page 10 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தேசியச் செய்திகள் - Page 10 I_vote_lcapதேசியச் செய்திகள் - Page 10 I_voting_barதேசியச் செய்திகள் - Page 10 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
தேசியச் செய்திகள் - Page 10 I_vote_lcapதேசியச் செய்திகள் - Page 10 I_voting_barதேசியச் செய்திகள் - Page 10 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தேசியச் செய்திகள் - Page 10 I_vote_lcapதேசியச் செய்திகள் - Page 10 I_voting_barதேசியச் செய்திகள் - Page 10 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தேசியச் செய்திகள் - Page 10 I_vote_lcapதேசியச் செய்திகள் - Page 10 I_voting_barதேசியச் செய்திகள் - Page 10 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தேசியச் செய்திகள் - Page 10 I_vote_lcapதேசியச் செய்திகள் - Page 10 I_voting_barதேசியச் செய்திகள் - Page 10 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தேசியச் செய்திகள் - Page 10 I_vote_lcapதேசியச் செய்திகள் - Page 10 I_voting_barதேசியச் செய்திகள் - Page 10 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
தேசியச் செய்திகள் - Page 10 I_vote_lcapதேசியச் செய்திகள் - Page 10 I_voting_barதேசியச் செய்திகள் - Page 10 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 10 of 20 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 20  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



தேசியச் செய்திகள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 30, 2018 3:35 pm

பார்மர் :
ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் பகுதியில், அருகில் போஸ்ட்
மார்ட்டம் செய்ய இடவசதி இல்லாத காரணத்தினால், பொதுமக்கள்
முன்னிலையில், வெட்டவெளியில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட
சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம், கதாரா பகுதியை
சேர்ந்தவர் மாயா கன்வார் (30). இவர் தனது வீட்டின் மாடியில்,
துணிகளை உலர்த்தி காயவைத்துக்கொண்டிருந்தார்.

துணி எதிர்பாராதவிதமாக, அருகில் சென்றுகொண்டிருந்த
மின்வயர் மீது பட்டது. இதனால், மாயா கன்னார் மீது மின்சாரம்
பாய்ந்ததில், அவர் மூர்ச்சையாகி கீழே விழுந்தார்.

மாயாவை காப்பாற்ற வந்த அவரின் மாமனார் பதாம் சிங்
மற்றும் மாமியார் ராஜா தேவி மீதும் மின்சாரம் பாய்ந்தது.
அவர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

சம்பவம் அறிந்து அருகிலுள்ள மக்கள், அவர்களை
சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே மாயா கன்வார் மற்றும் ராஜா தேவி
இறந்துவிட்டதாகவும், பதாம் சிங், போராடி வருவதாக டாக்டர்கள்
தெரிவித்தனர்.

பிணவறை இல்லா நிலை :

ராஜஸ்தானில் பார்மர் - கதாரா சாலையில் 100 கி.மீ தொலைவிற்கு
பிரேத பரிசோதனை செய்ய கட்டமபை்பு இல்லாததால்,
இறந்தவர்களின் உறவினர்கள் வேண்டுகோளிற்கிணங்க, பார்மர்
மாவட்ட மருத்துவ உயர் அதிகாரி, இறந்தவர்களின் உடல்களை
வெட்டவெளியிலேயே பிரேத பரிசோதனை ( போஸ்ட்மார்ட்டம்)
செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் போட்டோ
சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது
-
-------------------------------------
தினமலர்


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 30, 2018 7:33 pm

நல்லசெயல் நேர்மையான செயல் என்பதை பாராட்டலாம். வெட்டவெளியில் கேஜ்ரிவால் பதவி ஏற்றதுபோல நல்லதே>>>>

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 30, 2018 8:39 pm

சிவனாசான் wrote:நல்லசெயல் நேர்மையான செயல் என்பதை பாராட்டலாம். வெட்டவெளியில் கேஜ்ரிவால் பதவி ஏற்றதுபோல நல்லதே>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1279910

ஒன்னும் புரியல
ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 05, 2018 12:34 am

மத்திய அரசு அறிவிப்பினைத் தொடர்ந்து பெட்ரோல் , டீசல் விலையைக் குறைக்கும் ஆறு மாநிலங்கள்

புது தில்லி: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து ஆறு மாநிலங்களும் விலைகுறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சரக்கு வாகனங்களுக்கான வாடகை அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடுமையான துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் தில்லியில் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசானது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது கலால் வரியில் இருந்து ரூ. 1.50 குறைத்துக் கொள்வது என்று முடிவு செய்துள்ளது.

அதேபோல் எண்ணெய் நிறுவனங்களும் தங்களது லாபத்திலிருந்து ரூ. 1 குறைத்துக் கொள்வதென்று முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது லிட்டருக்கு ரூ. 2.50 குறையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலையீட்டின் பெயரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மத்திய அரசின் இந்த முயற்சியின் காரணமாக பெட்ரோல் டீசல் விலையானது வியாழன் நள்ளிரவு முதல் ரூ. 2.50 குறைகிறது. இது போலவே மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை ரூ.2.50 அளவில் குறைக்குமானால், விலை ரூ. 5 குறையும். இதன் மூலம் லட்சக்கணக்கானோர் பயன்பெறுவார்கள். அத்தகைய நடவடிக்கையை மாநில அரசு எடுக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து ஆறு மாநிலங்களும் பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத் மாநில அரசுகள் முதலில் விலை குறைப்பு அறிவிப்பினை வெளியிட்டன. தொடர்ந்து உத்தர பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் திரிபுரா மாநிலங்களும் பெட்ரோல், டீசல் விலைகள் குறைகப்படுவதாக அறிவித்தன.

மாநில அரசுகளும் மத்திய அரசு அளவிலேயே ரூ.2.50 விலை குறைந்துள்ளதால் இம்மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 5 குறைய உள்ளது. இந்த விலைகுறைப்பானது வியாழன் நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது.



தேசியச் செய்திகள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 08, 2018 5:08 am



லக்னோ: நாட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டில் நக்சலைட்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் அதிரடிப் படையின் 26-ஆம் ஆண்டு தொடக்க விழா, மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது: 

அதிரடிப்படையினரின் நடவடிக்கை விரைவாகவும், அதிரடியாகவும் இருக்க வேண்டுமே தவிர பொறுப்பற்ற முறையில் இருக்கக்கூடாது. நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 126 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில், தற்போது 10 முதல் 12 ஆக குறைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு மட்டும் 131 நக்சலைட்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். 1,278 பேர் கைது செய்யப்பட்டதுடன், 58 பேர் சரணடைந்துள்ளனர். 

நாட்டில், நக்சலைட்களை ஒழிப்பதற்காக நீங்கள் ஆற்றிய பணிகளுக்காக வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த ராஜ்நாத் சிங், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் தியாகம், கடின உழைப்பு, தைரியத்தால் இன்னும் ஒன்றிரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் நக்சலைட்டுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என உறுதிபடத் தெரிவித்தார். 



தேசியச் செய்திகள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 08, 2018 9:33 am

இந்த நக்சலைட்டுகள் எப்படி இவ்வளவு பெரிய கூட்டமாக உருவாக காரணமாக
இருந்தது என்ன? அதை சரி செய்ய அனைத்தும் அடங்கும்.
நன்றி தலைவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 10, 2018 5:43 pm

தேசியச் செய்திகள் - Page 10 201810101648303640_No-policeman-should-enter-Puri-s-Jagannath-temple-with_SECVPF


ஒடிசாவின் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலில் பக்தர்களுக்கு வரிசை முறையை, கோவில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து கடந்த 3–ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது கோவில் வளாகத்தில் வன்முறை வெடித்தது. கோவில் நிர்வாக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்த வன்முறையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காணுமாறு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின் போது 3–ந் தேதி நடந்த வன்முறை சம்பவத்தின் போது ஏராளமான போலீசார் ‘ஷூ’ அணிந்தும், ஆயுதங்களுடனும் கோவிலுக்குள் சென்றதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் போலீசார் ‘ஷூ’ அணிந்தும், ஆயுதங்களுடனும் செல்லக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக, கோவிலில் நடந்த வன்முறை தொடர்பாக 47 பேரை போலீசார் கைது செய்திருப்பதாக ஒடிசா மாநில அரசு சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.



தேசியச் செய்திகள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 13, 2018 10:06 am



முத்தலாக் நடைமுறையை தடை செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதன் வாயிலாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான உரிமைகளையும், நீதியையும் நிலை நாட்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவகாரத்து செய்யும் இஸ்லாமிய நடைமுறை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடித் தீர்ப்பை வெளியிட்டது.

இதுதொடர்பாக உரிய சட்டத்தை வகுக்குமாறும் மத்திய அரசை பரிந்துரைத்தது.

அதன்படி, இஸ்லாமியப் பெண்களின் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா வரையறுக்கப்பட்டது. முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க அதில் வகை செய்யப்பட்டுள்ளது.
அந்த மசோதா மக்களவையில் நிறைவேறிய போதிலும், மாநிலங்களவையைப் பொருத்தவரை, அதை நாடாளுமன்ற பரிசீலனைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பிய பிறகே நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், முத்தலாக் தடை மசோதாவை அமலாக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், மனித உரிமைகள் மேம்பாட்டு ஆணையத்தின் 25-ஆவது நிறுவன தின விழா
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:

மனித உரிமைகளைக் காக்கவும், மக்கள் நலனை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெவ்வேறு திட்டங்களையும் வகுத்து வருகிறது. அதன் வாயிலாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.

"ஆயுஷ்மான் பாரத்' எனப்படும் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 50 கோடி பேருக்கு இலவச மருத்துவ சேவைகள் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. அத்திட்டம் தொடங்கப்பட்டு இரண்டரை வாரங்களே ஆன போதிலும் அதன் மூலம் இதுவரை 50 ஆயிரம் பயனடைந்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, மக்களுக்கான உரிமைகளைக் காக்கும் நோக்கில் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று முத்தலாக் தடைச் சட்டம். அதுதொடர்பான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் வாயிலாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான நீதி உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் பிரதமர் மோடி.




தேசியச் செய்திகள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 14, 2018 6:05 am


சத்தீஸ்கரில் 65 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்: பாஜகவினருக்கு அமித் ஷாஅறிவுரை


சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில் 65 தொகுதிகளில் பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கட்சியின் தலைவர் அமித் ஷா, தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 12, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாஜக செயல் வீரர்கள் கூட்டம், ராய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமித் ஷா பேசியதாவது: 10 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட பாஜக, தற்போது 11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பரிணமித்துள்ளது.

பாஜகவுக்கு 1,800 எம்எல்ஏக்களும், 330 எம்.பி.க்களும் உள்ளனர். 19 மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது. மத்தியிலும் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியில் உள்ளது.

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் பாஜகவின் கொடி பட்டொளி வீசி பறக்கிறது. இந்த பெருமை அனைத்தும் கட்சியின் தொண்டர்களையே சாரும்.

கட்சிக்காக, லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். தமிழகம், கேரளம், மேற்கு வங்கத்தில் கட்சித் தொண்டர்களின் தியாகம் இன்னும் தொடர்கிறது.

நீண்ட நெடிய போராட்டத்துக்கு கிடைத்த பலனாக, வெற்றியின் உச்சத்தை பாஜக எட்டியுள்ளது. தமிழகம், தெலங்கானா, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்னும் பாஜகவின் ஆட்சி மலரவில்லை என்பதால், இதை வெற்றியாகக் கருத முடியவில்லை.

சத்தீஸ்கரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 65 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும். அதை உறுதிசெய்யும் வகையில் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அமித் ஷா கூறினார்.



தேசியச் செய்திகள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 14, 2018 6:06 am

ரஃபேல்: ஹெச்ஏஎல் நிறுவனத்தின் உரிமையை பறித்துவிட்டார் மோடி: ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு
ரஃபேல் போர் விமானத்தின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான தார்மிக உரிமை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு (ஹெச்ஏஎல்) மட்டுமே உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அந்த உரிமையை பிரதமர் மோடி பறித்துவிட்டதாகவும், மத்திய அரசின் ஊழல் நடவடிக்கைகளால் பாரம்பரியமிக்க அந்நிறுவனம் படிப்படியாக அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் ஹெச்ஏஎல் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களிடம் ராகுல் காந்தி சனிக்கிழமை கலந்துரையாடியபோது இக்கருத்துகளைத் தெரிவித்தார்.

ரஃபேல் விவகாரத்தை முன்னிறுத்தி மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடி வரும் ராகுல் காந்தி, தற்போது அந்த நிறுவனத்தின் ஊழியர்களை நேரடியாக சந்தித்துப் பேசியிருப்பது அவரது அரசியல் வியூகத்தின் அடுத்தகட்ட நகர்வாக கருதப்படுகிறது.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு இந்த விஷயத்தை அவர் தீவிரமாகக் கைகளில் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, அந்நாட்டின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான டஸால்ட் ஏவியேஷன் லிமிடெட்டிடம் இருந்து அவற்றை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே, ரஃபேல் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டது. பிரதமருக்கு நெருக்கமான தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், அதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்த நிலையில், பெங்களூரில் ராகுல் காந்தி தலைமையில் ஹெச்ஏஎல் நிறுவனம் முன்பாக சனிக்கிழமை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொள்ளுமாறு ஹெச்ஏஎல் நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை ஏற்று அந்த நிறுவனத்தின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதில் பங்கேற்றனர். அப்போது அவர்களிடையே ராகுல் காந்தி பேசியதாவது:

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்தே மக்களின் நலன் கேள்விக் குறியாகிவிட்டது. பொதுத் துறை நிறுவனங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. அவற்றை மேம்படுத்துவதற்கு பதிலாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வரிசையில் தற்போது ஹெச்ஏஎல் நிறுவனத்தை சிதைக்கும் செயல்களில் பிரதமர் மோடி அரசு இறங்கியுள்ளது. விமானத் துறையின் மிகப்பெரிய சொத்தாக இருப்பது ஹெச்ஏஎல் நிறுவனம்.

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக விமான தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அந்நிறுவனத்துக்கு உரிய கெüரவம் அளிக்காமல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவமதித்து விட்டது. இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டின் நலன் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளவர்கள் கடுமையாக புண்பட்டுள்ளனர்.

ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு விமான தயாரிப்பில் போதிய அனுபவம் இல்லை என்பதால் அந்த ஒப்பந்தம் வழங்கப்படவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியாயம் கற்பிக்கப் பார்க்கிறார். அவரது கூற்று எத்தனை அபத்தமானது? 78 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு இல்லாத அனுபவமா, சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அம்பானியின் நிறுவனத்துக்கு இருக்கப் போகிறது?

எந்த விதமான கடனும் இல்லாத ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இல்லாத ஆற்றலும், திறனுமா, ரூ.45 ஆயிரம் கோடி கடன் சுமையில் தவித்து வரும் அம்பானி நிறுவனத்திடம் இருக்கப் போகிறது?

பொதுத் துறை நிறுவனங்கள் இந்தியாவின் நவீன கால ஆலயங்கள் போன்றவை. அவற்றை அழிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். ரஃபேல் விமான ஒப்பந்தத்தைப் பெறும் அனைத்து உரிமைகளும் உங்களுக்கு (ஹெச்ஏஎல் ஊழியர்கள்) உண்டு. அதை அம்பானிக்கு அளித்ததற்காக மத்திய அரசு ஒருபோதும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. ஆனால், அவர்களது சார்பாக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றார் ராகுல் காந்தி.



தேசியச் செய்திகள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 10 of 20 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக