புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 5 of 20 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



40 - தேசியச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 4:06 am

மேற்கு வங்கம்: எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை உயரும் அபாயம்

கோல்கட்டா:இந்தியாவிலேயே எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 1.61 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் புதிதாக உருவாகியுள்ளனர்.

இதில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் 8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.சில ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவான மாநிலமாக இருந்த மேற்கு வங்கம், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிலையை அடைந்திருப்பது எச்சரிப்பதாக உள்ளது.



40 - தேசியச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 4:07 am

லஞ்சம் கொடுத்த எம்எல்ஏ கைது: அரசின் திட்டமிட்ட நாடகம் என தெ.தே.கட்சி எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு

தெலுங்கானா சட்ட மேலவையில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இந்தநிலையில் தேர்தலில் தெலுங்கு தேசம் வேட்பாளரை ஆதரிக்க லஞ்சம் பேசப்பட்டு, அதில் ரூபாய் 5 கோடி பேரம் பேசி முதல் கட்டமாக ரூபாய் 50 லட்சத்தை ஐதராபாத்தில் நியமன உறுப்பினருக்கு கொடுத்தபோது தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ரேவேந்த்ரெட்டி கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ரேவேந்த்ரெட்டி கைது செய்யப்பட்டதை கண்டித்த தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆளும் கட்சியின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகிறது. தெலுங்கானா அரசு நடத்திய திட்டமிட்ட நாடகம்தான் இது. எம்எல்ஏவை திட்டமிட்டே கைது செய்துள்ளனர். எதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பதே புதிராக உள்ளது. இது ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் எதிரான செயல். எம்எல்ஏ ரேவநாத் உயிருக்கு டிஜிபி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.



40 - தேசியச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 4:08 am

தங்கம், வெள்ளி மீதான அடிப்படை விலை குறைப்பு

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், இறக்குமதி வரியை நிர்ணயிப்பதற்கு முக்கிய காரணியாக உள்ள தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.

பொதுவாக, இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலையை குறைத்து மதிப்பீடு செய்து வரி ஏய்ப்பு நடிவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துவிட்டது. இதை தடுக்கவே, தங்கம், வெள்ளி இறக்குமதி மீதான அடிப்படை விலையை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது.

அந்த வகையில், தங்க இறக்குமதி மீதான அடிப்படை விலையை 398 டாலரிலிருந்து (10 கிராம்) 385 டாலராக மத்திய அரசு குறைத்துள்ளது. அதேபோல், வெள்ளி இறக்குமதி மீதான அடிப்படை விலையை 567 டாலரிலிருந்து (ஒரு கிலோ) 544 டாலராக குறைத்துள்ளது மத்திய அரசு.

பெட்ரோலுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் பொருளாக தங்கம் உள்ளது. எனினும், அதிக அளவிலான தங்க இறக்குமதி நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை பாதிக்கும் என்பது நினைவு கூரத்தக்கது.



40 - தேசியச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 4:09 am

நோயாளியை பார்க்க வந்த இளம் பெண் மருத்துவமனை ஊழியர்களால் பலாத்காரம்

கொல்கத்தாவில் நோயாளியை பார்க்க வந்த இளம் பெண் ஒருவர் மருத்துவமனை ஊழியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, "கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரைப் பார்ப்பதற்காக இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். அவருக்கு வயது 24. சொந்த ஊர் முர்சிதாப் மாவட்டத்தில் உள்ள பஹ்ரம்பூர். தனது உறவினரை பார்த்துவிட்டு திரும்பும்போது மருத்துவமனையின் லிஃப்ட் ஊழியர்கள் இருவர் சேர்ந்து அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தில் தொடர்ப்ய்டைய மவுசம் அலி கான், ஹைதர் அலி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனை அறிக்கையை எதிர்நோக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், கொல்கத்தாவின் பல்வேறு மருத்துவமனைகளிலும் பணியாற்றும் பெண்கள் தங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.



40 - தேசியச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 10:47 pm

இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளில் தேர்தலை அறிவித்தது பாகிஸ்தான்: இந்தியா கடும் எதிர்ப்பு

இந்தியாவுக்கு சொந்தமான, காஷ்மீர் மாநிலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கில்கிட், பல்டிஸ்தான் ஆகிய பகுதிகள், இந்தியாவுக்கு சொந்தமானவை ஆகும். ஆனால், அப்பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில், அப்பகுதிகளில், வருகிற 8-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் கூறியதாவது:
கில்கிட், பல்டிஸ்தான் உள்பட ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். அப்படி இருக்கும்போது, கில்கிட், பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் தேர்தல் அறிவித்திருப்பது, அப்பகுதிகளை சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்திருப்பதை மூடி மறைக்கும் செயலாகும்.

மேலும், கில்கிட், பல்டிஸ்தான் பகுதி மக்களுக்கு அரசியல் உரிமைகளை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. அந்த பகுதிகளை விழுங்க துடிக்கிறது. பாகிஸ்தான் மந்திரி ஒருவர்தான், கில்கிட், பல்டிஸ்தான் பகுதிகளுக்கு கவர்னராகவும் இருக்கிறார் என்ற உண்மையே இதற்கு சாட்சி.அதுமட்டுமின்றி, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு கொள்கைகளால், அந்த பகுதி மக்கள் சமீபகாலமாக இன கலவரங்களாலும், தீவிரவாதத்தாலும், பொருளாதார கஷ்டங்களாலும் அல்லல்பட்டு வருகிறார்கள். இதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு விகாஸ் ஸ்வருப் கூறினார்.



40 - தேசியச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 06, 2015 11:18 pm

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 7 பேர் பலி

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மும்பை புறநகர்ப்பகுதியான போவாய், சாந்திவாலியில் இருக்கும் 21 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை தெரிவித்துள்ள தகவலின்படி இன்று இரவு நிலவரப்படி 7 பேர் பலியாகியுள்ளனர். 17 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

15 தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்புப் படையினர் தீயை அணைக்கவும், குடியிருப்பில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றவும் போராடி வருகின்றனர். இன்னும் தீ முழுமையாக அணைக்கப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.



40 - தேசியச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 06, 2015 11:19 pm

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும் - ராணுவத்தினருக்கு நடைப்பெற்ற கடும் துப்பாக்கி சண்டைக்கு பிறகு 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரிலுள்ள பரமுல்லா மாவட்டத்தில் துட்காரலி எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ, நேற்று காலை, 3 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுடன், இந்திய ராணுவம் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டது. இந்த சண்டைக்கு பிறகு தீவிரவாதிகள் மூவரையும் ராணுவம் சுட்டுக்கொன்று அவர்களின் முயற்சியை முறியடித்தது.

சுமார் 4 தீவிரவாதிகள் இந்த ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என ராணுவத்தினர் நம்புவதால் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் நடைபெறும் தீவிரவாதிகளின் 3வது ஊடுருவல் முயற்சி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




40 - தேசியச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 12:35 pm

இந்தியா முழுவதும் மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்தியாவில் தமிழ்நாடு உள்படஅனைத்து மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக் கப்பட்டு உள்ளது.

உடல் நலம் பாதிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் காரீயமும், மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற ரசாயன பொருளும் அதிக அளவில் இருப்பதாக பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.

மேகி நூடுல்சை சாப்பிட்ட பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறி பீகார், உத்தரபிரதேச மாநில கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. மேகி நூடுல்சில் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக் கும் ரசாயன பொருள் அளவுக்கு அதிகமாக கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்ததை தொடர்ந்து, மேகி நூடுல்சின் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது. மேலும் பல்வேறு மாநில அரசுகளும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தன.

மும்பை ஐகோர்ட்டில் வழக்கு

மேகி நூடுல்சின் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும், மராட்டிய மாநில அரசும் தடை விதித்ததை எதிர்த்து நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 9 வித மேகி நூடுல்சின் விற்பனைக்கு தடை விதித்து கடந்த 5-ந் தேதி உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேகி நூடுல்ஸ் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்றும், பாதுகாப்பற்றது என்றும் கூறி அதன் உற்பத்தி, இறக்குமதி, வினியோகம், விற்பனை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

சட்ட விரோதம்

இதே காரணங்களின் அடிப்படையில் மராட்டிய மாநில அரசும் தடை விதித்து உள்ளது. இந்த தடை உத்தரவு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய சட்டத்தின் 34-வது பிரிவுக்கு எதிரானது ஆகும். மேலும் இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமாகவும், தன்னிச்சையாகவும் இந்த தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை அல்ல. மேகி நூடுல்சை ஆய்வு செய்து எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானவை அல்ல. எனவே மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

நீதிபதிகள் வி.எம்.கனடே, பி.பி.கொலாபாவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அவசியம் இல்லை

மனுவை விசாரித்த நீதிபதிகள், மேகி நூடுல்ஸ் விற்பனை ஏற்கனவே நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், அதன் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மீது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழக்கு தொடர விரும்பினால், 72 மணி நேரத்துக்கு முன்பு அந்த நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்பவேண்டும் என்றும் கூறினார்கள்.

மேலும் மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பான பதில் மனுவை உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையமும், மராட்டிய அரசும் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.



40 - தேசியச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 12:43 pm

அமோனியா வாயு கசிவு: 8 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல்!

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்று அதிகாலை டேங்கர் லாரியிலிருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து லூதியானா போலீசார் கூறும்போது, ''பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமோனியா வாயு ஏற்றி கொண்டு சென்ற டேங்கர் லாரி ஒன்று அங்கிருந்த மேம்பாலத்தை கடக்கும்போது, திடீரென பழுதடைந்துள்ளது. இதனால், அந்த லாரியில் இருந்த அமோனியா வாயு கசிய தொடங்கியது.

அமோனியா வாயுவை சுவாசித்த 8 பேர் பரிதாமபாமக் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. உடனே அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, வாயு கசிவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தனர்.



40 - தேசியச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 14, 2015 1:42 am

உத்தர பிரதேசத்தில் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அடித்து கொலை

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரும் தகவல் அறியும் உரிமை ஆர்வலருமான நபர் ஒருவரை கிராம தலைவர் உட்பட சிலர் அடித்து கொலை செய்துள்ளனர்.

இது குறித்து கூடுதல் சூப்பிரெண்டு போலீஸ் ஜே.பி. பாண்டே கூறும்போது, கிராம தலைவர் திரிலோகி நாத் மேற்கொண்டு வரும் கிராம மேம்பாட்டு பணிகள் குறித்து தகவல் அறிவதற்காக விண்ணப்பித்து வந்ததுடன், மாவட்ட தலைமையகத்தில் சமீபத்தில் தர்ணா ஒன்றையும் நடத்தினார்.

இந்நிலையில், போலீசாரிடம் மிஸ்ராவின் குடும்பத்தினர் அளித்த புகாரில், திரிலோகி தனது சகோதரர்கள் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டு தங்களது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், குரு பிரசாத்தையும் கடுமையாக தாக்கினர் என்று தெரிவித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மிஸ்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே மரணமடைந்து விட்டார்.

இது தொடர்பாக கிராம தலைவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று போலீசார் கூறி உள்ளனர்.



40 - தேசியச் செய்திகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 20 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக