புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
44 Posts - 45%
heezulia
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Barushree
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10தேசியச் செய்திகள் - Page 3 Poll_m10தேசியச் செய்திகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 3 of 20 Previous  1, 2, 3, 4 ... 11 ... 20  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



தேசியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 3:36 am

பஸ்தார் போலீஸாருக்கு மாவோயிஸ்ட்கள் கடும் எச்சரிக்கை

சத்தீஸ்கரில் பஸ்தார் பகுதியில் பணியாற்றும் கீழ்நிலை போலீஸார்கள் 'வேலையை விட்டுச் செல்ல வேண்டும் இல்லையேல் உயிரை விடவேண்டும்' என்று மாவோயிஸ்ட்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி பஸ்தார் பகுதியில் பணியாற்றிய வீர வசந்த் என்ற கான்ஸ்டபிளை கடத்திச் சென்ற மாவோயிஸ்ட்கள் அவரை கொலை செய்தனர். இந்தக் கொலைக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட மாவோயிஸ்ட் அமைப்பு, இவரது கொலை, உள்ளூர் போலீஸார்களுக்கு ஒரு எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து மேற்கு பஸ்தார் மாவோயிஸ்ட் அமைப்பு டிவிஷனல் கமிட்டி செயலர் மாதவி அளித்த செய்தியாளர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மாநில அரசு எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. மாறாக பள்ளி மாணவர்களை வைத்து மவுன் ஊர்வலம் நடத்தினர். எங்கள் கட்சிக் கொள்கையின் படி ஆயுதமற்ற எவரையும் கொலை செய்யும் வழக்கமில்லை. நாங்கள் இப்படி நிறைய ஜவான்கள், போலீஸாரை விடுவித்திருக்கிறோம்.

ஆனால், உள்ளூர் மக்கள் மீது தெரிந்தே அராஜகங்களை செய்பவர்களை நாங்கள் விட்டுவிட மாட்டோம். வீர வசந்த் அப்படிப்பட்ட ஒரு போலீஸ்காரர்தான்.

மக்கள் இயக்கத்துக்கு எதிராக அந்த போலீஸ் 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். பல போலி என்கவுண்டர்களை நடத்தியுள்ளார், கிராம மக்களை துன்புறுத்தி பிஜப்பூர் பழங்குடி மக்களை தாக்கியிருக்கிறார், அவர்களிடமிருந்து பணத்தையும் பிடுங்கிச் சென்றுள்ளார்.

மேலும் போலீஸார் கூறுவது போல் அவர் தன் குடும்பத்தினரைச் சந்திக்கச் செல்லவில்லை, அவாப்பள்ளி பகுதியில் எங்களைப் பற்றிய துப்புத் தகவல் சேகரிக்க வந்து விட்டு பிஜப்பூர் எஸ்.பி. அலுவலகத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு தான் என்ன செய்கிறோம் என்பது நன்றாகத் தெரியும் இவரைப் போன்ற மக்கள் விரோதியை நாங்கள் விட்டுவிட முடியாது.

வீர வசந்த் கொலை பஸ்தார் பகுதியில் மற்ற கீழ்நிலை போலீஸார்களுக்கு ஒரு எச்சரிக்கை. பழங்குடியினரின் நிலத்தை அபகரிக்கும் கார்ப்பரேட்களுக்கு பணியாற்றுவதை நிறுத்த வேண்டும். பஸ்தாரில் இருக்க வேண்டுமென்றால் போலீஸ் வேலையைத் தவிர வேறு வேலையைப் பார்க்கவும். இல்லையெனில் எங்கள் கையில் உயிரை விட தயாராக இருக்கவும்" என்று கூறப்பட்டுள்ளது.



தேசியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 3:40 am

2014-ம் ஆண்டில் 5 லட்சம் பேர் புற்றுநோய்க்கு பலி: மத்திய அமைச்சர் நட்டா தகவல்

முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் புகையிலைப் பயன்பாடு காரணமாக 2014-ம் ஆண்டு நாட்டில் சுமார் 5 லட்சம் பேர் புற்றுநோய்க்கு பலியாகியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா மக்களவையில் இன்று தெரிவித்தார்.

இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் தரவின் படி, 2013-ம் ஆண்டு 4,78,180 ஆக இருந்த புற்று நோய் மரணங்கள் 2014-ம் ஆண்டில் 5 லட்சமாக அதிகரித்துள்ளது.

2014-ம் ஆண்டு 11,17,269 பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

புற்றுநோய் சிகிச்சையில் மீண்டு வருவது என்பது நோய்க்கணிப்பின் கட்டங்கள், சிகிச்சை ஆரம்பிக்கும் போது நோயின் நிலை, புற்றுநோய் தாக்கிய உடல் உறுப்பு மற்றும் அதன் வகை ஆகிய காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது என்று கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த நட்டா தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த நட்டா, “நாட்டில் நிகழும் மொத்த இறப்புகளில் தொற்று நோய் அல்லாத நோய்களினால் 42% இறப்பு ஏற்படுகிறது. தொற்று நோய், பேறுகால நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றினால் ஏற்பட்ட இறப்புகள் 38%, காயங்கள் மற்றும் விளக்கமுடியா காரணங்களினால் ஏற்பட்ட இறப்புகள் 10% என்றும் மத்திய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது” என்று கூறினார்.



தேசியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 12:55 am

ஆளில்லா குட்டி விமானங்களை இறக்குமதி செய்வதில் இந்தியாவுக்கு முதலிடம்

கடந்த 1985 முதல் 2014-ம் ஆண்டு வரை உலகில் அதிக அளவு ஆளில்லா குட்டி விமானங்களை இறக்குமதி செய்த நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது.

பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் அதற்கு அடுத்த இடங்களில் உள்ளன. பொதுவாக, கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளுக்காக ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க விடப்படுகின்றன. இந்தியாவி்ல் முதன்முதலாக 1998-ம் ஆண்டு இஸ்ரேலில் இருந்து ஆளில்லா குட்டி விமானம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

உலகின் மொத்த இறக்குமதியில் 22.5 சதவீதத்தை இந்தியா பெற்றிருக்கிறது. அண்மையில் நேபாள நிலநடுக்க மீட்பு பணியில் ஆளில்லா குட்டி விமானங்களை தேசிய பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகமாக பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.




தேசியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 1:18 am

மத்தியப் பிரதேசத்தில் பஸ் தீப்பிடித்து 50 பயணிகள் பலி

மத்தியப் பிரதேச மாவட்டம், பன்னா மாவட்டத்தில் சாலையோர பள்ளத்தில் பயணிகள் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்து 50 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சொகுசு பஸ் மத்தியப் பிரதேசத்தின் சாகத்பூர் நகரில் இருந்து சாட்னா நகருக்கு புறப்பட்டது. அந்த பஸ்ஸில் சுமார் 55 பயணிகள் இருந்தனர்.

தேசிய நெடுஞ்சாலை 75-ல் மாட்லா காட் என்ற பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டீசல் டேங்க் தீப்பிடித்து பஸ் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. பஸ்ஸுக்குள் சிக்கிக் கொண்ட 50 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

சிலர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்து பயணிகளின் உடல்களை மீட்டனர்.

ரூ.2 லட்சம் நிவாரண உதவி

இந்த விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியும் பலியானோர் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.



தேசியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 1:19 am

ஓடும் பஸ்ஸில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: பஞ்சாபில் ஓட்டுநர், நடத்துநர் கைது

பஞ்சாபில் ஓடும் பஸ்ஸில் மேலும் ஒரு பெண்ணுக்கு பயணி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து புகார் செய்தும் கண்டுகொள்ளாததால் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை போலீஸார் கைது செய்துள்ளனர். எனினும் அந்தப் பயணி தப்பிவிட்டார்.

இதுதொடர்பாக அந்தப் பெண் போலீஸில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:

தலைநகர் சண்டீகரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள கன்னா மாவட்டம் சிர்ஹிந்த் என்ற இடத்திலிருந்து லூதியானா அருகே உள்ள சானேவாலுக்கு செல்வதற்காக பஸ்ஸில் ஏறியுள்ளார் 30 வயதுடைய ஒரு பெண்.

அப்போது அந்தப் பெண்ணின் இருக்கைக்கு அருகே உட்கார்ந்த ஒரு பயணி, அவரை தகாத முறையில் தொட்டுள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததும் அந்த நபர் பின் இருக்கைக்கு சென்று அமர்ந்துவிட்டார். எனினும், கீழ்த்தரமான வார்த்தைகளால் அந்தப் பெண்ணை விமர்சனம் செய்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து பஸ் நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் புகார் செய்துள்ளார் அந்தப் பெண். ஆனால் அவர்கள் இதைப் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து தனது கணவரை செல்போனில் தொடர்புகொண்டு நடந்ததைக் கூறியுள்ளார். அவர் போலீஸில் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து, அந்த பஸ் பயணித்த சாலையில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். பஸ் நெருங்கியதும் போலீஸார் நிறுத்துமாறு சைகை காட்டியதும் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார் ஓட்டுநர். பின்னர் போலீஸார் விரட்டிச் சென்று அந்த பஸ்ஸை நிறுத்தி, ஓட்டுநர் ஜக்விந்தர் சிங் மற்றும் நடத்துநர் குல்விந்தர் சிங் ஆகிய இருவரையும் கைது செய்ததாக கன்னா மாவட்ட காவல் துறை அதிகாரி ஜி.எஸ்.கில் தெரிவித்துள்ளார்.

எனினும், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பயணி தப்பிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் நிறுவனத்துக்குச் சொந்தமான பஸ்ஸில் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு கீழே தள்ளியதில் 14 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சிறுமியின் தாய் உயிர் தப்பினார். இந்த சம்பவம் நடந்து 5 நாட்களான நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



தேசியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 05, 2015 7:39 am

கொடுமை கோபம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 10, 2015 3:06 am

அரியானா மாநிலத்தில் புனித நதியான சரஸ்வதி ஓடியதற்கான அடையாளம் கண்டுபிடிப்பு

வேத காலத்தில் புனித நதியாக கருதப்பட்ட சரஸ்வதி நதி, காலப்போக்கில் மறைந்து விட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓடிய இந்த நதியை கண்டுபிடிக்க புவி அறிவியல் வல்லுனர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். செயற்கை கோள் வரைபடத்தை கொண்டு வல்லுனர்கள் ஆய்வு செய்த போது சரஸ்வதி நதி அரியானா மாநிலத்தில் ஓடியதற்கான ஆதாரம் கிடைத்தது.

இதையடுத்து அரியானா மாநிலம் ஆதி பத்ரி என்ற இடத்தில் யமுனா நகர் அருகே முகல்வாலி பகுதியில் சுமார் 7 முதல் 8 அடி ஆழம் வரை கடந்த மாதம் குழி தோண்டினர். அப்போது சிற்றோடை போல தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதையடுத்து சரஸ்வதி நதி இங்கு ஓடியதை உறுதிபடுத்தினர்.

இதை அறிந்த அரியானா அரசு சரஸ்வதி நதி இருக்கும் இடத்தை அறிய புவி அறிவியல் வல்லுனர்களுக்கு பக்கபலமாக நிதி ஒதுக்கி ஆராய்ச்சியை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த ஆய்வில் ஒப்பந்த தொழிலாளர்களுடன் உள்ளூரை சேர்ந்த சரஸ்வதி தேவி பக்தர்களும் ஈடுபட்டு குழி தோண்டி வருகின்றனர்.

இதுவரை 3 கிலோமீட்டர் தூரத்துக்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பணி வெற்றிகரமாக முடிந்தவுடன் ஆதி பத்ரி பகுதியை ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றவும் ஆளும் பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நதி ஆராய்ச்சியை வெற்றிகரமாக நடத்த 20 பேர் கொண்ட குழுவை அரியானா அரசு அமைத்துள்ளது. எனினும் இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பு அதிகாரபூர்வமாக இதனை உறுதிபடுத்தவில்லை.



தேசியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 16, 2015 2:07 am

கூலிங் கிளாஸ் அணிந்து மோடியை வரவேற்ற கலெக்டருக்கு நோட்டீஸ்!

தேசியச் செய்திகள் - Page 3 Modi%20meet%20ias1

பாஸ்தர்/சட்டீஸ்கர்: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியபோது கூலிங் கிளாஸ் அணிந்து இருந்த கலெக்டருக்கு சத்தீஸ்கர் மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக கடந்த 9ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் சென்றார். பஸ்தார் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார்.

அப்போது பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரி அமித் கட்டாரியா, கூலிங் கிளாஸ் அணிந்து இருந்தார்.

கூலிங் கிளாஸ் அணிந்திருந்தது தொடர்பாக பதில் அளிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி கட்டாரியாவுக்கு அம்மாநில பா.ஜ.க அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசில், “பஸ்தார் மாவட்ட ஆட்சியராக நீங்கள் அன்று பிரதமரை ஜக்தால்பூரில் வரவேற்றீர்கள். ஆனால், நீங்கள் முறையான உடைகளை அணியவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டதோடு, கூலிங் கிளாஸ் அணிந்தபடியே அவரை வரவேற்றுள்ளீர்கள். எனவே, இத்தகைய தவறான அணுகுமுறையை இனி கடைபிடிக்க வேண்டாம் என்று மாநில அரசு உங்களை எச்சரிக்கிறது.

நீங்கள் செய்தது அரசு ஊழியருக்குரிய நடத்தை விதிகளுக்கு புறம்பாக அமைந்துள்ளது. அரசு ஊழியர்கள், குறிப்பாக சேவைத்துறையில் பணியாற்றுபவர்கள் நேர்மையையும், கடமை உணர்வையும் பராமரிப்பது அவசியம்” என்று கூறப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி அமித் கட்டாரியா, பிரதமர் மோடியுடன் கைகுலுக்கும் காட்சியை தனது ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளார்.



தேசியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 16, 2015 2:08 am

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கான விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில், மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.3.13ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.71ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கட்டுள்ளது.

கடந்த 1ஆம் தேதியும் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.3.96ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.37ம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



தேசியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 18, 2015 3:27 pm

உ.பி.யில் 5 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்

உத்தரபிரதேச மாநிலம் சாஜன்பூர் மாவட்டம் ஜலால்பாத் பகுதி அருகே பாதே ஹரிவா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த உயர்சாதி பெண் ஒருவர் தலித் இளைஞனுடன் காதல் ஏற்பட்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.

இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்று இளைஞனின் தாயார் மற்றும் உறவு பெண்களை இழுத்து சென்றனர். 5 பெண்களை ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்றனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பகுதியில் கடை வைத்து இருந்த சிலர் இந்த செயலை கண்டித்தார்கள். இதைத் தொடர்ந்து அந்த பெண்களை அவர்கள் விடுவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பெண்களை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற 15 பேரை கைது செய்தனர்.



தேசியச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 20 Previous  1, 2, 3, 4 ... 11 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக