by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
தேசியச் செய்திகள்
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்
பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.
இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
'புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களை நாடு எப்போதும் நினைவுகூறும்' - ராகுல் காந்தி
புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களை இந்தியா எப்போதும் நினைவு கூறும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 40 சி.ஆர்.பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
புல்வாமா தாக்குதல் தினத்தையொட்டி பலரும் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி. அவர்களது அவரது உன்னத தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூறும்' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அவர் புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அவர்களது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஏர் இந்தியா 250 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்
புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.
பொதுத் துறை நிறுவனமாக செயல்பட்டுவந்த ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை, கடந்த 2022-ம் ஆண்டு டாடா குழுமம் வாங்கியது. இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவின் செயல்பாட்டை மேம்படுத்திவரும் டாடா குழுமம், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
காணொலி வாயிலாக நடைபெற்றஇந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் கலந்துகொண்டனர். அப்போது, இந்த ஒப்பந்தத்தை முக்கியநிகழ்வு என்று பிரதமர் மோடி பாராட்டினார். தொடர்ந்து, அவர் கூறியதாவது:
நாட்டின் பாதுகாப்பு, உணவு, சுகாதார பாதுகாப்பு, இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் சுமுகநிலை ஆகியவற்றுக்கு இந்தியாவும், பிரான்ஸும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.
இந்த சூழலில், தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது, இந்தியா –பிரான்ஸ் இடையிலான வலுவான உறவை மட்டுமின்றி, இந்திய விமானத்துறையின் வெற்றியையும் காட்டுகிறது.
நாட்டு வளர்ச்சியின் ஓர் அங்கமாக விமானத் துறை உள்ளது. இத்துறையை வலுப்படுத்துவது நாட்டின் உள்கட்டமைப்பு கொள்கையின் முக்கிய அம்சமாக உள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-ல் இருந்து 147 ஆக அதிகரித்துள்ளது. விமானத் துறையில் உலகின் 3-வது பெரிய நாடாக இந்தியா விரைவில் மாறும்.
விமான பராமரிப்பு, சரிபார்ப்பு, செயல்பாடுகளுக்கான தளமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. தற்போது அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் இந்தியாவில் உள்ளன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் விமான உற்பத்தியில் நிறைய வாய்ப்பு உள்ளது. உலக நாடுகள் இதைபயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரதமர் கூறினார்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறும்போது, ‘‘இந்தியா – பிரான்ஸ் உறவில் இந்த ஒப்பந்தம் ஒரு மைல்கல். இந்தியாவுக்கு சிறந்த தொழில்நுட்பத்தை வழங்க வேண்டும் என்பதில் பிரான்ஸ் உறுதிகொண்டுள்ளது. இந்தியாவின் சிறந்த வளர்ச்சிக்கு ஏர்பஸ் சிறந்த பங்களிப்பு வழங்கும்” என்றார்.
டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கூறியபோது, ‘‘ஏர் இந்தியா நிறுவனம் மாபெரும் மாற்றத்துக்கு உள்ளாகி வருகிறது. உலகத் தரத்திலான கட்டமைப்பை இங்கு உருவாக்கி வருகிறோம். ஏர் இந்தியா சேவையை விரிவுபடுத்த, ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து40 அகன்ற விமானங்கள், 210 குறுகிய விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம்’’ என்றார். அகன்ற விமானங்கள் 16 மணி நேரத்துக்கு மேற்பட்ட நீண்டதூர பயணத்துக்கு பயன்படுத்தப்படுபவை.
ஏர் இந்தியா புதிய விமானங்கள் வாங்கி 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இறுதியாக, 2005-ல் 68 போயிங், 43 ஏர்பஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், டாடா குழுமம் 250 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்திருப்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஆக்கிரமிப்பு பகுதியில் போராட்டம்.. தாய், மகள் உயிரோடு தீ வைத்து எரித்து கொலை!
உத்தர பிரதேசத்தில் அரசு இடத்தில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கான்பூர் திகாத் பகுதிக்கு உட்பட்ட மராவ்லி என்ற கிராமத்தில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் பணிக்கு அதிகாரிகள் சென்றனர்.
ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக அதிகாரிகள் வந்ததை அறிந்த மக்கள், வீட்டில் இருந்து வெளியே வராமல் எதிர்ப்பு தெவித்தனர். மீறினால் குளித்து விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். எனினும் அதிகாரிகள் மக்களை வெளியேறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர்.
இந்நிலையில், திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. அதில் இரண்டு பெண்கள் சிக்கியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த பிரமீளா தீட்சித் (44) மற்றும் அவரது மகளான நேஹா தீட்சித் (22) ஆகிய இருவர் தீயில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.
காவல் துறையினர் குவிக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இது பற்றி பிரமீளாவின் மகன் சிவம் தீட்சித் கூறுகையில், அதிகாரிகள் உள்ளிட்ட பிற நபர்கள் வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் நானும், எனது தந்தையும் உயிர் தப்பினோம். ஆனால் தாயாரும், சகோதரியும் தீயில் சிக்கி உயிரிழந்தனர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனினும், வீடு தீ பிடித்து எரிந்ததற்கான சரியான காரணம் எதுவென தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நொய்டாவில் மருத்துவ மாணவியை மதமாற்றம் செய்ய, கட்டாயப்படுத்தியதாக இரண்டு பேர் கைது
உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதி காவல் நிலையத்தில் மருத்துவம் பயிலும் மாணவி ஒருவர் மதமாற்றம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டதாகப் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில்," சமூக வலைதளம் மூலம் ஆதித்யா ஷர்மா என்ற நபருடன் நட்பு ஏற்பட்டது. நல்ல நண்பராக பழகிவந்த அவர், நான் கிரேட்டர் நொய்டாவில் மருத்துவம் படிக்கவும் ஆலோசனை வழங்கினார். அதன் பிறகே கிரேட்டர் நொய்டாவிலுள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன்.
ஆனால், சமீபத்தில்தான் அவரின் பெயர் ஆதித்யா ஷர்மா அல்ல, முகமது அக்லக் ஷேக் என்பது தெரியவந்தது. அந்த நபர் தன்னுடைய உண்மையான பெயரை மறைத்து என்னுடன் நட்பு வைத்துக்கொண்டு, என்னைத் திருமணம் செய்துகொள்ளவும் முன்வந்தார். டெல்லி லட்சுமி நகரிலுள்ள தன் நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக உறவு வைத்துக்கொண்டார்.
மேலும், எனது அந்தரங்கப் படங்களை வைத்துக்கொண்டு அவற்றைச் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டியும்வருகிறார். ஜனவரி 27 அன்று, அக்லக்கும், அவரின் தந்தை முகமது மொய்தீன் ஷேக்கும் என்னுடைய கல்லூரிக்கு வந்து மதம் மாற வற்புறுத்தத் தொடங்கினர். மதம் மாறாவிட்டால் என் புகைப்படத்தை வெளியிட்டுவிடுவதாகத் தெரிவித்தனர். எனவே, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் டங்கூர் காவல் நிலையப் பகுதியில் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள்மீது மதமாற்றத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்திருக்கிறது
2 மணிநேரத்தில் மோடி, அதானியை கைது செய்து காட்டுகிறேன்: ஆம் ஆத்மி எம்.பி. சவால்..!
சிபிஐ அமைப்பை என்னிடம் ஒப்படைத்தால் 2 மணி நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் அதானியை கைது செய்து காட்டுகிறேன் என ஆம் ஆத்மி எம்பி ஒருவர் சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அமைப்பு கைது செய்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் மணிஷ் சிசோடியா கைதுக்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறது என்றும் ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடியும் என்றும் தெரிவித்தார்.
விசாரணை முகாம்களை தவறாக பயன்படுத்தினால் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்றும் என்னிடம் சிபிஐ அமைப்பு மற்றும் அமலாக்கத்துறை ஆகியிருந்தால் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா தொழிலதிபர் அதானி ஆகியோரை இரண்டு மணி நேரத்திற்கு கைது செய்து காட்டுகிறேன் என்றும் தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பாஜக எம்எல்ஏ மகன் கைது: லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையில் ரூ.6 கோடி பறிமுதல்!
பெங்களூருவில் ரூ.40 லட்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ரூ.6 கோடி பறிமுதல் செய்துள்ளனர்.
கர்நாடகம் மாநிலம், தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மாதல் விருபாஷப்பா. இவரது மகன் பிரசாந்த் மாதல். இவர் கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று பெங்களூருவில் பொதுப்பணித் துறையில் தலைமை கணக்கு அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் துறைக்கு ரசாயன பொருள்கள் வாங்குவது தொடர்பாக டெண்ருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பல ஒப்பந்ததாரர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில் ஒரு ஒப்பந்ததாருக்கு டெண்டர் வழங்க தலைமை கணக்கு அதிகாரியான பிரசாந்த் மாதல் ரூ.81 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஒப்பந்ததாரும் சம்மதம் தெரிவித்ததாகவும், வியாழக்கிழமை மாலை முதற்கட்டமாக ரூ.40 லட்சத்தை கொடுப்பதாக அந்த அந்த ஒப்பந்ததாரரிடம் கிரென்ட் சாலையில் உள்ள தன்னுடைய தந்தையின் அலுவலகத்தில் வைத்து பெற்றுக் கொள்வதாக பிரசாந்த் மாதல் கூறியுள்ளார்.
இதுகுறித்து லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து பாஜக எம்எல்ஏ மாதல் விருபாஷப்பா அலுவலகத்தில் வியாழக்கிழமை லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் என கட்டு கட்டாக இருந்த ரூ.40 லட்சம் உள்பட ரூ.1.7 கோடியை லோக் ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், தலைமை கணக்கு அதிகாரி பிரசாந்த் மாதலையும் கைது செய்தனர்.
இந்நிலையில், லஞ்சம் வாங்கிய புகாரில் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சுமார் ரூ.6 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்கள், சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பாஜக எம்எல்ஏவின் மகன் கைது செய்யப்பட்டது எப்படி?
பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் சோதனை: கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணம்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் லோகாயுக்தா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், கிடைத்த பணம் வீட்டின் ஒரு அறை முழுக்க கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
பாஜக எம்எல்ஏ மதல் விருப்பாக்சப்பாவின் மகன் பிரசாந்த். இவரது வீட்டில் வியாழக்கிழமை லோகாயுக்தா அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் சோதனை நடந்த வீட்டில் இருந்தவர்களைக் காட்டிலும், வீட்டிக் கிடைத்த கட்டுக்கட்டான பணத்தைப் பார்த்து அதிகாரிகள்தான் அதிகம் அதிர்ச்சியடைந்தார்கள்.
தோண்டத் தோண்டப் பணம் என்பது போல, எங்கு தொட்டாலும் பணக்கட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றை ஒரே இடத்தில் கட்டுக்கட்டாக அடுக்கி அனைத்தையும் இரவு பகல் பாராமல் எண்ணிப் பார்த்ததில் வெறும் 6 கோடி பணம் என்பது தெரிய வந்தள்ளது.
கிரெசன்ட் சாலையில் உள்ள மதல் விருப்பாக்ஷப்பாவின் அலுவலகத்தில், அவரது மகன் மூலம் லஞ்சம் வாங்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, வியாழக்கிழமை மாலை, பாஜக எம்எல்ஏவின் அலுவலகம் சென்ற காவல்துறையினர், மறைந்திருந்து அங்கு நடப்பதை பார்த்தனர். அப்போது, தந்தைக்கு தர வேண்டிய ரூ.40 லட்சம் லஞ்சப் பணத்தை மகன் பிரசாந்த் வாங்கியதை காவல்துறையினர் பார்த்து கையும் களவுமாகக் கைது செய்தனர்.
இதையடுத்தே, பிரசாந்த் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையில் ரூ.6 கோடி அளவுக்கு கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டு, அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
லஞ்ச மகன் சிக்கியதால் கர்நாடக பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜினாமா!
ஒப்பந்ததாரரிடம், 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, கர்நாடக பா.ஜ., - எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பாவின் மகன் உட்பட ஐவரை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முதல் குற்றவாளியான எம்.எல்.ஏ., விருபாக் ஷப்பா, கர்நாடக அரசின் சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவன தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இவரது அலுவலகம், வீடுகளில் நடந்த சோதனையில், 8.13 கோடி ரூபாய் ரொக்கம், கிலோ கணக்கில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்களிடம், ஆளுங்கட்சியினர், 40 சதவீதம் கமிஷன் பெறுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.தாவணகெரே மாவட்டம், சன்னகிரி சட்டசபை தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் மாடால் விருபாக் ஷப்பா. இவர், கர்நாடக அரசின் சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவன தலைவராகவும் பதவி வகித்தார். இந்நிறுவனத்தில் தான், பிரசித்தி பெற்ற மைசூர் சாண்டல் சோப் தயாரிக்கப்படுகிறது.
ரூ.40 லட்சம்
இவரது இரண்டாவது மகன் பிரசாந்த் மாடால், 45, பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைமை கணக்காளராக உள்ளார். தந்தை தலைவராக இருக்கும் சோப் நிறுவனத்துக்கு ரசாயனம் சப்ளை செய்யும் ஒப்பந்தம் வழங்க, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் 81 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, 'டீல்' பேசியுள்ளார்.முதல் கட்டமாக, 40 லட்சம் ரூபாய் வழங்குவதாக, அந்த ஒப்பந்ததாரர் தெரிவித்தார். இதன்படி, பெங்களூரு குமாரகிருபா அருகே, கிரசன்ட் சாலையில் உள்ள எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் மாலையில் சென்ற ஒப்பந்ததாரர், 40 லட்சத்தை கொடுத்த போது, அதை வாங்கிய
பிரசாந்தை, லோக் ஆயுக்தா போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.அலுவலகம் முழுதும் சோதனை நடத்தி, 2.02 கோடி ரூபாய் அளவுக்கு, 2,000, 500 ரூபாய் நோட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். பின், பிரசாந்த் கைது செய்யப்பட்டார்.
வீடுகளில் 'ரெய்டு'
அதே வேளையில், 40க்கும் அதிகமான லோக் ஆயுக்தா போலீசார், ஐந்து குழுக்களாக பிரிந்து, பெங்களூரு சஞ்சய் நகரில் உள்ள விருபாக் ஷப்பா வீடு; சிவானந்தா சதுக்கத்தில் இருக்கும் மற்றொரு வீடு; தொகுதியில் உள்ள வீடு.கர்நாடக அரசின் சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவன நிர்வாக இயக்குனர் மஹேஷ் வசிக்கும் பனசங்கரி வீடு ஆகிய இடங்களில் அதிரடி சோதனையில் இறங்கினர். நேற்று மதியம் வரை சோதனை நடந்தது.வீடுகளில் இருந்தோர், போலீசாரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரு பகுதியை கூட விடாமல், மூலை முடுக்கு எல்லாம் சோதனை செய்தனர். இதில், யாரும் எதிர்பாராத வகையில், எம்.எல்.ஏ.,வின் சஞ்சய்நகர் வீட்டில், 6 கோடியே 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.
மேலும், கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் இருந்தன. இவை அனைத்தும் கணக்கில் காட்டப்படாதவை என்பதால், லோக் ஆயுக்தா போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
பணத்தை ஏழு பைகளில் நிரப்பி எடுத்து சென்றனர். நகையின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.
எம்.எல்.ஏ., ஓட்டம்
மொத்தமாக நடந்த சோதனையில், 8.13 கோடி ரூபாய் சிக்கியுள்ளது. இந்த விவகாரம், கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. இதையடுத்து, மாடால் விருபாக் ஷப்பா தலைமறைவாகி விட்டார்.இந்நிலையில், 'என் மகன் லஞ்சம் வாங்கியதற்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. என் குடும்பத்திற்கு எதிராக சூழ்ச்சி நடந்துள்ளது. 'ஆனாலும், என் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், கர்நாடக அரசின் சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவன தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்' எனக் குறிப்பிட்டு, முதல்வர் பொம்மைக்கு மாடால் விருபாக் ஷப்பா, நேற்று கடிதம் அனுப்பினார்.இந்த வழக்கில், இவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால், இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஐவர் சிறையில் அடைப்பு
கர்நாடக லோக் ஆயுக்தா தலைமை நீதிபதி பி.சி.பாட்டீல், பெங்களூரில் நேற்று கூறியதாவது:இந்த விவகாரத்தில், முதல் குற்றவாளியாக எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பா; இரண்டாவது குற்றவாளியாக அவரது மகன் பிரசாந்த் மாடால்; இவரது அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரியும் சுரேந்திரா; உறவினர் சித்தேஷ்; கள பணியாளர்கள் ஆல்பர்ட் நிகோலா; கங்காதர் ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், எம்.எல்.ஏ., தவிர மற்ற ஐவர் கைது செய்யப்பட்டு, லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மார்ச் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஐ.ஜி., அசோக் மேற்பார்வையில் விசாரணை மற்றும் சோதனை தொடர்ந்து நடக்கிறது. மிகவும் முக்கியமான வழக்கு என்பதாலும், அதிகபட்ச ரொக்கம் கிடைத்துள்ளதாலும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்க்கட்சியினருக்கு அவல்
தற்போதைய பா.ஜ., அரசின் பதவிக் காலம், மே 23ம் தேதியுடன் நிறைவு பெறுவதால், சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கர்நாடகாவில் பிரசாரம் செய்தார்.இந்த சூழலில், பா.ஜ., - எம்.எல்.ஏ., வீட்டில் கோடிக்கணக்கில் லஞ்ச பணம் கிடைத்திருப்பது ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வகையில், காங்கிரசின் சித்தராமையா, சிவகுமார்; மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள், பா.ஜ.,வினரை குற்றஞ்சாட்டுகின்றனர். '40 சதவீதம் கமிஷன் அரசு, கர்நாடகாவை கொள்ளை அடிக்கும் ஏ.டி.எம்., இயந்திரம்' எனவும் விமர்சித்துள்ளனர்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஆஸ்திரேலிய பிரதமர் மார்ச் 8-ல் இந்தியா வருகை!
ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி வருகிற மார்ச் 8 ஆம் தேதி இந்தியா வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், மார்ச் 8 ஆம் தேதி ஆமதாபாத் வரும் ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி, பிரதமா் நரேந்திர மோடியுடன் இணைந்து ஹோலி பண்டிகையில் கலந்துகொள்கிறார். பின்னர் மார்ச் 9ல் நடைபெறவுள்ள இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தை இரு தலைவா்களும் பாா்வையிடுகின்றனா்.
அதன்பின்னர் தில்லி செல்லும் அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். வா்த்தகம், முதலீடு, முக்கிய கனிமங்கள் உள்ளிட்டவை குறித்து இரு நாடுகளின் பிரதமா்களுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது.
தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்தித்துப் பேசுகிறார் ஆல்பனேசி.
இந்த பயணம் குறித்து ஆல்பனேசி, 'பிரதமராக இது எனது முதல் இந்தியப் பயணம். ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வலுவான பிணைப்பை வலுப்படுத்த எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இந்தியாவுடனான எங்கள் உறவு வலுவானது, ஆனால் அது மேலும் வலுப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமராக ஆல்பனேசி கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றதையடுத்து, முதல் முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். அவரது இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தகத்தை விரிவுப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
4௦% கமிசன் தானய்யா எங்கும்!
‘மேதாவிகள்’ வேடிக்கை பார்ப்பது ஏன்?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்