புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
4 Posts - 3%
prajai
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
426 Posts - 48%
heezulia
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
29 Posts - 3%
prajai
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
40 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 16 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 16 of 20 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19, 20  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



40 - தேசியச் செய்திகள் - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2023 7:08 pm



ராஜஸ்தானில் போர் விமானங்கள் விழுந்து நொறுங்கி விபத்து



மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இன்று அதிகாலை சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 ஆகிய இரண்டு போர் விமானங்கள் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றன.

நடுவானில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இரண்டு விமானங்களும் திடீரென்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இரண்டு விமானங்களும் மொரேனா என்ற பகுதியில் கீழே விழுந்தது. இதில் விமானங்கள் முழுவதும் நொறுங்கி தீப்பிடித்தது.

விமானங்கள் விழுந்ததால் ஏற்பட்ட பயங்கர சத்தத்தை கேட்டு பொதுமக்கள் அங்கு வந்தனர். விமானங்கள் நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விமானங்கள் விழுந்து கிடந்த பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

விமானங்களின் பாகங்கள் வேறு பகுதியில் விழுந்து கிடக்கிறதா என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுகோய்-30, மிராஜ்-2000 ஆகிய இரண்டு போர் விமானங்கள் விபத்தில் சிக்கியதை உறுதிப்படுத்திய பாதுகாப்புத்துறை விபத்து நடந்த பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தது. விமானங்கள் மோதுவதற்கு முன்பே விமானிகள் இருவரும் தங்களது விமானங்களில் இருந்து பாராசூட் மூலம் வெளியேறினர். அவர் களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இது குறித்து மொரேனா மாவட்ட கலெக்டர் அங்கித் அஸ்தானா கூறும்போது, "விமானங்களில் இருந்து வெளியேறிய விமானிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் காயம்அடைந்து உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். மீட்பு பணியில் போலீசார் மற்றும் உள்ளூர் நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது" என்றார். கடும் பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராஜஸ்தானில் மற்றொரு போர் விமானம் விழுந்து நொறுங்கியது. பரத்பூரில் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. உஜ்சைன் என்ற பகுதியில் திறந்த வெளியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்ததும் ராணுவத்தினர், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் இருந்த விமானி குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. அவர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து முப்படை தலைமை தளபதி சுனில் சவுகான், விமான படை தளபதி வி.ஆர். சவுத்திரி ஆகியோரிடம் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தகவல்களை கேட்டறிந்தார். சுகோய்-30 என்ற விமானம் ரஷியாவிடம் இருந்தும், மிராஜ்-2000 என்ற விமானம் பிரான்சிடம் இருந்தும் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:36 pm

40 - தேசியச் செய்திகள் - Page 16 1571444738
“தேசியச் செய்திகள்” என்ற தலைப்பு அருமை! #தேசியப் பார்வை , தமிழர்களுக்குத் , திட்டம்போட்டு மறைக்கப்பட்டுள்ளது! இதனால் நமக்கு இழப்பே தவிர , இலாபமும் இல்லை! பெருமையும் இல்லை!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 31, 2023 1:31 am

சென்னையில் ஜி-20 மாநாடு நடைபெறுவதையொட்டி, 3 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.



ஜி-20 மாநாட்டின் நிகழ்வுகள் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலை நகரங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜி-20 மாநாடு வரும் 31 மற்றும் பிப்.1, 2 தேதிகளில் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் மற்றும் கன்னிமரா நட்சத்திர விடுதிகள், கிண்டி ஐ.டி.சி. சோழா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

மாநாட்டில் அா்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட 20 நாடுகளைச் சோ்ந்த 100 விருந்தினா்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனா்.

மாநாட்டுக்கு வரும் விருந்தினா்கள் வரும் பிப்.1-ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை மாலை 3 மணி முதல் 6 மணி வரை பாா்வையிட சுற்றுலாத் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாமல்லபுரத்துக்கு வரும் வெளிநாட்டு விருந்தினா்களுக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பளிப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் நாளை முதல் பிப்.2 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 11:45 am

கணவரின் தற்கொலைக்கு நியாயம் கேட்ட பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


40 - தேசியச் செய்திகள் - Page 16 Vikatan%2F2023-02%2F057fbf29-6b73-4308-809c-be4fee439524%2Fnashik_story_97493629

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சிவ்ரே என்ற கிராமத்தில் வசிப்பவர் சுக்ராம். கடந்த சில நாள்களுக்கு முன்பு சுக்ராம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்த போது வீட்டில் அவரின் மனைவி இல்லை. தற்கொலை செய்வதற்கு சில நாள்களுக்கு முன்பு சுக்ராமும் அவரின் மனைவியும் காரில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதில் சுக்ராம் மனைவிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் சுக்ராம் தனது மனைவியை அவரின் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தார்.

வீட்டில் தனியாக இருந்த போது தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக சுக்ராம் மனைவி தனது உறவினகளுடன் கணவரின் ஊருக்கு வந்தார். அப்போது அவர், தனது கணவரின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக சந்தேகப்பட்டார். அது குறித்து முழுமையாக விசாரிக்கப்படவேண்டும் என்று கோரினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுக்ராம் குடும்பத்தினரும், உறவினர்களும் சேர்ந்து அப்பெண்ணையும் அவருடன் வந்தவர்களையும் அடித்து உதைத்தனர். அதோடு விடாமல் சுக்ராம் உறவினர்கள் அப்பெண்ணிற்கு முகத்தில் கறுப்பு சாயம் பூசி கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து கிராமத்தில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அழைத்துச்செல்லும்போது அவரை அடித்து உதைத்தனர்.

இது குறித்து அப்பெண்ணின் உறவினர்கள் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகள் தப்பிச்சென்றுவிட்டனர். அவர்களை தேடி வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு சுக்ராம் உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 11:55 am

மோா்பி பால விபத்து- ஒரேவா குழும மேலாண் இயக்குநா் சிறையிலடைப்பு



குஜராத் மாநிலம், மோா்பியில் கடந்த ஆண்டு தொங்கு பாலம் அறுந்து நேரிட்ட விபத்து தொடா்பான வழக்கில், பாலத்தின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுக்கு பொறுப்பான ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநா் ஜெய்சுக் படேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். இதையடுத்து, நீதிமன்றக் காவலில் அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

மோா்பியில் மச்சு நதியின் குறுக்கே ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்தது. இப்பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி திறக்கப்பட்டது. அக்டோபா் 30-ஆம் தேதி பாலத்தில் சுமாா் 250 போ் நின்றிருந்த நிலையில், அது அறுந்து விழுந்து, 135 போ் உயிரிழந்தனா்.

நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில், ஒரேவா குழுமத்தின் 2 மேலாளா்கள், 2 டிக்கெட் பதிவு ஊழியா்கள், பாலத்தை பழுதுபாா்க்கும் பணியை மேற்கொண்ட 2 துணை ஒப்பந்ததாரா்கள், 3 பாதுகாவலா்கள் என 9 போ் கைதாகினா்.

இந்த வழக்கில், மோா்பி தலைமை நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காவல் துறையினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். 1,200-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட 10-ஆவது நபராக ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநா் ஜெய்சுக் படேல் பெயா் இடம்பெற்றிருந்தது. அவருக்கு எதிராக நடுவா் நீதிமன்றம் 2 வாரங்களுக்கு முன் கைது ஆணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், நீதிபதி எம்.ஜே.கான் முன்பு ஜெய்சுக் படேல் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இதனிடையே, ஜெய்சுக் படேல் மீது கைது நடவடிக்கையை காவல்துறையினா் மேற்கொண்டனா். அவரை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யவிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, பாலம் விபத்து தொடா்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஒரேவா நிறுவனத்தின் தரப்பில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. துருப்பிடித்த கம்பிகள் மாற்றப்படாதது, பழுதுபாா்ப்புப் பணியில் நிபுணா்களின் ஆலோசனை கேட்கப்படாதது, இப்பணிக்காக தோ்வு செய்யப்பட்ட துணை ஒப்பந்ததாரா்கள் தகுதியற்றவா்களாக இருந்தது, சம்பவத்தன்று மட்டும் 3,165 டிக்கெட்டுகள் விற்கப்பட்டது என பல்வேறு குறைபாடுகள் விசாரணையில் தெரியவந்தன.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 12:00 pm

பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் அசராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை - குஜராத் மாநில காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பு


40 - தேசியச் செய்திகள் - Page 16 937243

முந்தைய பாலியல் வன்கொடுமை வழக்கில், ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஆஜர்படுத்தப்பட்ட அசராம்பாபு.
அகமதாபாத்: பாலியல் வன்கொடுமை வழக்கில், சாமியார் அசராம் பாபுவுக்கு, ஆயுள் தண்டனை வழங்கி குஜராத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

பாகிஸ்தானின் சிந்து பகுதியில் 1941-ம் ஆண்டு பிறந்தவர் அசுமல் சிறுமலானி ஹர்பலானி. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் இவரது குடும்பம் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு குடிபெயர்ந்தது. சிறு வயதில் அசுமல் சைக்கிள் பழுது பார்ப்பது, டீ விற்பது, சாராயம் விற்பது என பல தொழில் களை செய்துள்ளார்.

தனது 15-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளூர் ஆசிரமம் ஒன்றில் அடைக்கலம் புகுந்தார். அங்கிருந்த சாமியார் இவரை சீடராக ஏற்று அவருக்கு அசராம் என பெயர் சூட்டினார்.

அதன்பின் இந்தியாவிலும், வெளிநாடுகளில் 400-க்கும் மேற்பட்ட ஆசிரமங்களையும், 40 பள்ளிகளையும் தொடங்கினார்.

இவர் மீது ஆக்கிரமிப்பு, பாலியல் வன்கொடுமை உட்பட பல வழக்குகள் உள்ளன. ராஜஸ்தானில் உள்ள ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இவருக்கு ஏற்கெனவே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு ஜோத்பூர் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் ஆசிரமத்தில் தங்கியிருந்த சூரத் நகரைச் சேர்ந்த பெண் சீடர் ஒருவர், அசராம் பாபு மீது 2013-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். கடந்த 2001 முதல் 2006 வரை அந்தப் பெண் சீடர் அசராம் பாபு ஆசிரமத்தில் தங்கியிருந்துள்ளார். அப்போது அசராம் பாபு, தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார் என பெண் சீடர் புகார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் சீடரின் தங்கையை, அசராம் பாபுவின் மகன் நாராயண் சாய், ஆசிரமத்தில் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் நாராயண் சாய்க்கு கடந்த 2019-ம்ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அசராம் பாபு மீதான வழக்கு காந்திநகர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அசராம் பாபு குற்றவாளி என நீதிபதி டி.கே.சோனி கூறினார்.

இவரது குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அசராம்பாபுவின் மனைவி, மகள் உட்பட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். அசராம் பாபுக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது. அசராம் பாபுவுக்கு (81) ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி டி.கே.சோனி நேற்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அசராம்பாபுவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 12:02 pm

மக்கள் மனநிலை குறித்த கருத்துக் கணிப்பு - மத்திய அரசுக்கு 67% பேர் ஆதரவு : பொது சிவில் சட்டம் அவசியம் என பதில்



புதுடெல்லி: மக்களின் மனநிலை குறித்து இந்தியா டுடே சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 67 சதவீத மக்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போதே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில் மக்களின் மனநிலை குறித்து இந்தியா டுடே, சி வோட்டர் சார்பில் தேசிய அளவில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

அதில் 67 சதவீத மக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கரோனா பெருந்தொற்று காலத்திலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. சீனாவின் அச்சுறுத்தல்களை மோடி அரசு திறம்பட எதிர்கொண்டு வருகிறது. என்று பெரும்பாலான மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுவது பாஜக அரசின் மிகப்பெரிய சாதனை என்று மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

சுமார் 18 சதவீதம் பேர் மட்டுமே மத்திய அரசு குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். நாட்டின் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசியமா என்ற கேள்விக்கு 69 சதவீதம் பேர் அவசியம் என்று பதில் அளித்துள்ளனர். 19 சதவீதம் பேர் மட்டுமே பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஹிஜாபுக்கு தடை விதிப்பது சரியா என்ற கேள்விக்கு 57 சதவீதம் பேர் சரி என்றும் 26 சதவீதம் பேர் தவறு என்றும் பதில் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது சரியான அணுகுமுறையா என்பது குறித்து மக்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு 38 சதவீதம் பேர், சரி என்று பதில் அளித்தனர். அரசு நிர்வாகமே, நீதிபதிகளை நியமிக்கவேண்டும் என்று 19 சதவீதம் பேர் வாக்களித்தனர். அரசு மற்றும் நீதித்துறை இணைந்து நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று 31 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

இந்த ஆண்டு 10 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் இந்தியா டுடேவின் கருத்துக் கணிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 1:02 pm

'என்னை இந்து என்று அழைக்கவும்': கேரள ஆளுநர் விருப்பம்



திருவனந்தபுரம்: என்னை இந்து என்று அழைப் பதையே பெரிதும் விரும்புவதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்து மாநாட்டில் அவர் இதுகுறித்து மேலும் பேசியது.

இந்து என்று கூறுவது தவறு என்று உணரும் வகையில் மாநிலத்தில் சதி நடந்து வருகிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் சையத் அகமது கான்ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவேதான் ஒரு இந்து என்று அழைக்கப்படுவதையே விரும்பினார். தற்போது அதனை இங்கு எடுத்துக்காட்ட வேண்டியு சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்து என்பது புவியியல் ரீதியான சொல். இந்தியாவில் பிறந்தவர்கள், இங்கு விளையும் உணவை உண்டு வாழ்பவர்கள், இந்திய நதிகளின் நீரை பருகுபவர்கள் அனைவருமே இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ள தகுதியுடையவர்களே.

எனவே, இந்து என்பதை நாம் இங்கு மதச் சொல்லாக பிரித்துப் பார்க்க கூடாது. அந்த வகையில் ஆர்ய சமாஜ் உறுப்பினராகிய நீங்கள் ஏன் என்னை இந்து என்று அழைக்கவில்லை என்பதே வருத்தமாக உள்ளது. அப்படி அழைப்பதால் தவறு எதுவும் இல்லை. அழைக்காமல் இருப்பதுதான் தவறு.

இவ்வாறு ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 03, 2023 6:31 am

சட்டசபை தேர்தல்: மேகாலயாவில் 60 தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டி



மேகாலயாவில் 60 தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடுகிறது. அதேநேரம் நாகாலாந்தில் 20 இடங்களில் களமிறங்குவதாக அறிவித்து உள்ளது.


வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் திரிபுராவில் வருகிற 16-ந் தேதியும், மேகாலயா, நாகாலாந்துக்கு 27-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதற்கான வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.


தனித்து களம் காண்கிறது



இந்த நிலையில் மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பா.ஜனதா அறிவித்து உள்ளது. அங்கு முதல்-மந்திரி கன்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்களின் கட்சியுடன் கூட்டணி அரசில் தற்போது நீடித்து வரும் நிலையில், வருகிற தேர்தலில் பா.ஜனதா தனித்து களம் காண்கிறது.

அதேநேரம் நாகாலாந்தில் கூட்டணி கட்சியான ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் இணைந்தே போட்டியிடுகிறது. அந்தவகையில் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதியில், 20 இடங்களில் மட்டுமே பா.ஜனதா போட்டியிடுகிறது.

இந்த தகவல்களை பா.ஜனதா செயலாளரும், வடகிழக்கு மாநிலங்களுக்கான இணை பொறுப்பாளருமான ரிதுராஜ் சின்கா நேற்று தெரிவித்தார். மேகாலயாவில பிரதமர் மோடியை முன்வைத்து பிரசாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


வேகமான வளர்ச்சி



இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

மத்திய அரசின் திட்டங்கள் சென்றடைந்த போதும், வடகிழக்கு மாநிலங்களில் ஊழல் மற்றும் மெதுவான வளர்ச்சியே காணப்படுகிறது. எனவே ஊழல் இல்லாத அரசு மற்றும் வேகமான வளர்ச்சியை பிரதமர் மோடியால் மட்டுமே தர முடியும் என மக்கள் நம்புகின்றனர்.

அதன்பேரில் முதல் முறையாக மேகாலயா சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா களம் காண்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா சிறப்பாக செயல்படும்.

பிரதமர் மோடி தனது ஆட்சிக்காலத்தில் வடகிழக்கு பகுதிகளுக்கு 50 முறைக்கு மேல் சென்றுள்ளார். இது முந்தைய அனைத்து பிரதமர்களின் வருகையை விட அதிகமாகும்.


தேசிய முன்னுரிமை



கிழக்கு சார்ந்த கொள்கையை 'செயல் கொள்கையாக' பிரதமர் மாற்றியுள்ளார். அமைதியின் சகாப்தத்தைக் கண்ட இப்பகுதியில் நெடுஞ்சாலைகள், இணைய இணைப்பு, சாலைவழிகள் மற்றும் விமான நிலையம் போன்ற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு உழைத்துள்ளது,

உண்மையில், வடகிழக்கு பிராந்திய தேவைகளை தேசிய முன்னுரிமை பட்டியலில் பிரதமர் மோடி இணைத்துள்ளார்.

இவ்வாறு ரிதுராஜ் சின்கா கூறினார்.


வாக்காளர்களை கவரும்



நாகாலாந்து மாநிலத்துக்கான பா.ஜனதா பொறுப்பாளர் நயின் கோலி கூறும்போது, 'பிரதமர் மோடியின் பணிகள், வளர்ச்சி மற்றும் அமைதியில் கவனம் செலுத்துதல் ஆகியவை நாகாலாந்து வாக்காளர்களை கவரும் முக்கியமான காரணிகள் என்று நம்புகிறோம்' என தெரிவித்தார்.

மேகாலயாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 47 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜனதா 2 இடங்களை வென்றது. எனினும் பிரதமர் மோடியை முன்வைத்து இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அந்த கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:20 am

"நான் கடவுள்" என்று சொல்வோரெல்லாம் போக்சோ சட்டத்தில் கைதாகிறார்கள் -
சுகி சிவம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 16 of 20 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19, 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக