புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
1 Post - 2%
prajai
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
383 Posts - 49%
heezulia
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
26 Posts - 3%
prajai
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பறக்காதே ! Poll_c10பறக்காதே ! Poll_m10பறக்காதே ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறக்காதே !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 07, 2015 8:46 pm

புதிதாக வாங்கிய பைக்கில், அபரிமித வேகத்தில், கல்தூரிக்குள் நுழைந்த சுந்தர், நண்பர்களின் முன், 'சரக்'கென்று பிரேக் போட்டு நிறுத்தினான்.

''டேய் சுந்தர்... பைக் புதுசாடா?'' என்று கேட்டான் ஒருவன்.
''எவ்வளவுடா...'' என்றான் மற்றொருவன்,
''மச்சான் சூப்பரா இருக்குடா... ம்ம்... கலக்குற சுந்தரு,'' என்றான் இன்னொருத்தன்.
நண்பர்களின் விசாரிப்பில், சுந்தருக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

பைக் அருகில் வந்த முரளி, அதை ஆசையாய் தொட்டு பார்த்து, ''மச்சி... நான் ஒரு ரவுண்டு போயிட்டு வாறேன்டா,'' என்றதும், பட்டென்று, அவன் கையைத் தட்டி விட்ட சுந்தர், ''ச்சீ... பைக் ஓட்ற மூஞ்சப் பாரு... இந்த மாதிரி பைக் ஓட்டுறதுக்கெல்லாம் ஒரு கெத்து வேணும் மச்சி... நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே,'' என்று கிண்டலாகச் சொல்லி சிரித்தான். உடனிருந்தவர்களும் சிரிக்கவே, அவமானத்தில் முரளியின் முகம் சுருங்கியது.

அன்று முழுவதும், அவனுக்கு பாடமே ஏறவில்லை.
மூஞ்சியை தொங்கப் போட்டவாறு வீட்டுக்குள் நுழைந்தான்.

''என்ன... சார் ரொம்ப டல்லா இருக்கிற மாதிரி தெரியுது... படிச்ச களைப்போ...'' என்று கிண்டலாக கேட்டாள் அம்மா ஆனந்தி.
''போம்மா... நான் இனிமே காலேஜ்க்கு போக மாட்டேன்...''
முரளியின் கையில் இருந்த புத்தகம் பறந்தது.

''என்னப்பா... என்னாச்சு, எதுக்கு இவ்வளவு கோபம்...''என்று பதறினாள் ஆனந்தி.
''எங்கூடப் படிக்கிற எல்லாருமே பைக்ல தான் வர்றாங்க. நான் மட்டுந்தான் காலேஜுக்கு பஸ்சுல போறேன்; அவமானமா இருக்கு,'' என்றான்.

தன் ஒரே மகன், முக வாட்டத்துடன் பேசியதைக் கேட்டு மனம் கலங்கினாள் ஆனந்தி.
''எவனெவனோ புதுப் புது பைக்கில வந்து, 'சீன்' போடுறான்மா. இன்னக்கி, எங்கூடப் படிக்கிற ஒருத்தன் புது பைக் வாங்கியிருக்கான். 'குடுடா, ஒரு ரவுண்டு போயிட்டு வந்து தரேன்'னு கேட்டதுக்கு, என்னை ரொம்ப கேவலமா பேசிட்டான். எல்லாருமே சிரிச்சாங்க,'' என்றான்.
''யாரு அவன்?''

''சுந்தர்ன்னு ஒருத்தன்; நமக்கு என்னம்மா குறைச்சல்... அவனால தான் பைக் வாங்க முடியுமா, நம்மால வாங்க முடியாதா?''

''ஏன் முடியாது... நீ கவலப்படாதடா செல்லம். நம்மகிட்ட என்ன காசா இல்ல; அப்பா வந்ததும் சொல்லி, நாளைக்கே உனக்கு ஒரு பைக் வாங்கித் தாரேன் சரியா...''
''ஆமா... இப்படித்தான் சொல்வே... அப்புறம் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி தட்டிக் கழிச்சிடுவீங்க...''

''நாந்தான் சொல்றேன்ல... உனக்கு பைக் வாங்கித் தர்றது என் பொறுப்பு. உன்ன கிண்டலடித்தவன் முன், நீ பைக் ஓட்டியே ஆகணும். நாம யாருக்கும் சளைச்சவங்க இல்லேங்கிறத அந்த சுந்தருக்கு மட்டுமில்ல, உன்னைப் பாத்துச் சிரிச்ச அத்தனைப் பசங்களுக்கும் காட்றோம் சரியா... இந்தா... இப்ப இந்த பாலை குடி!''

டம்ளரை நீட்டிய அம்மாவை கட்டிக் கொண்டான் முரளி.
சிறிது நேரத்தில், அப்பா ரகுராமன் வீட்டிற்குள் நுழைந்தார்.
''என்னாங்க... நம்ம புள்ளைய, காலேஜுல சுந்தர்ன்னு ஒரு பையன் ஏளனமா பேசி கிண்டல் செஞ்சானாம்,'' என்றாள் ஆனந்தி.
''என்ன பேசினான்...''

''அவன் ஒரு பைக் வாங்கியிருக்கானாம்... அதை ஓட்டி பாத்துட்டு தர்றேன்னு நம்ம பையன் அவன்கிட்ட கேட்டுருக்கான். அதுக்கு அந்த பையன், 'பஞ்சப் பரதேசியெல்லாம் ஏன்டா, இந்த மாதிரி பைக்குக்கு ஆசைப்படுறீங்க'ன்னு கேவலமா பேசியிருக்கானுங்க,'' என்றாள்.
மனைவியை ஏறிட்டுப் பார்த்தவர், ''இப்ப என்ன செய்யணும்ன்னு சொல்றே...'' என்றார்.
''அந்த சுந்தரு வாங்குன பைக்கைவிட, விலை அதிகமா ஒரு பைக் வாங்கி, நம்ம பையனுக்கு கொடுக்கணும்,'' என்றாள்.

''ஆனந்தி... உனக்கென்ன பைத்தியமா புடிச்சுருக்கு... அவனுங்க சின்னப் பசங்க, விளையாட்டுத்தனமா எதையோ பேசிருக்கானுங்க. இதப் போயி பெரிசா எடுத்துக்கிட்டு பேசறே,'' என்றார் ரகுராமன்.

''அதெல்லாம் பேசாதீங்க; இப்ப, இவனுக்கு பைக் வாங்கி தரப் போறீங்களா இல்லையா,'' பிடிவாதமாக கேட்ட மனைவியையும், பக்கத்தில் நிற்கும் மகனையும், ஒரு கணம் நிதானமாகப் பார்த்தார் ரகுராமன்.

''இப்ப வாங்கித் தர முடியாது,'' பட்டென்று சொன்னார்.
கோபத்துடன், ''ஏன் முடியாது?''என்று கேட்டாள் ஆனந்தி.
''முடியாதுன்னா முடியாது...''
''அது தான் ஏன்னு கேக்கிறேன்...''

''பதினெட்டு வயசு முடிஞ்சாத்தான் லைசென்ஸ் தருவான்; இவனுக்கு, இப்பதான், 17 வயசு முடிஞ்சிருக்கு. ஒரு ஆண்டு போகட்டும்; அடுத்த ஆண்டு பாக்கலாம்,''என்றார் நிதானமாக!
''அப்ப, மத்த பசங்கெல்லாம், 'லைசென்ஸ்' வாங்கிட்டுத் தான் வண்டி ஓட்றாங்களா...'' இடையில் புகுந்தான் முரளி.

''மத்த பசங்க எப்பிடியோ... ஆனா, என் மகன், 'லைசென்ஸ்' வாங்கி தான் வண்டி ஓட்டணும்; 'லைசென்ஸ்' இல்லாம வண்டி ஓட்றது சட்டப்படி குற்றம்,'' என்றார்.
குதிக்க ஆரம்பித்தான் முரளி.

''ஹூம்... இவரு எல்லாத்தையுமே, 'ரூல்ஸ்' படிதான் செய்வாரு. மத்த அம்மா, அப்பால்லாம் அவங்க புள்ளைங்களுக்கு பைக் வாங்கித் தரலையா... சே... உங்களுக்குப் போயி புள்ளையா பொறந்தேன் பாரு... எல்லாம் என் தலையெழுத்து,'' தலையில் அடித்துக் கொண்டான்.

''ஏங்க... இருக்கிறது ஒத்தப் புள்ள; அவனையும் ஏன் இப்படி கவலைப்பட வைக்கறீங்க,''என்றாள் ஆனந்தி.

''ஒரு தகப்பனா அவனுக்கு என்னென்ன செய்யணுமோ, அதையெல்லாம் இதுவரைக்கும் சரியாத்தான் செஞ்சிருக்கேன். நல்ல காலேஜ்ல டொனேஷன் குடுத்து சேத்துவிட்டிருக்கேன்; வீட்டு வாசல்லயே காலேஜ் பஸ் வருது; ஜம்முன்னு போயிட்டு வர வேண்டியது தானே... அதை விட்டு எவங்கூடவோ போட்டி போட்டுக்கிட்டு, பைக்ல தான் போவேன்னு அடம் புடிச்சா எப்பிடி...'' என்றார் ரகுராமன்.

.........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 07, 2015 8:47 pm

''கூடப் படிக்கிற பசங்கல்லாம் பைக்ல வர்றப்ப, இவனுக்கும் ஆசை இருக்காதா... அவன் கேக்குறதை வாங்கிக் கொடுங்களேன்,'' நைசாகப் பேசத் துவங்கினாள் ஆனந்தி.

''ஆனந்தி... அவன் சின்ன பையன்; பொறுப்புன்னா என்னான்னு கேக்குற வயசு. பொறுமையும் கிடையாது. பைக்குங்கறது, ஒரு இடத்துக்கு வசதியா போயிட்டு வர்றதுக்குத் தான்; இன்னொருத்தங்கூட போட்டி போட்டு வேகமா போறதுக்கும், நம்ம கவுரவத்தைக் காட்றதுக்கும் இல்ல. நீயும் தான் பாக்குறியே... இப்ப இருக்கிற பசங்கெல்லாம் ரோட்டுல வண்டியா ஓட்றானுங்க... மூணு பேரு, நாலு பேருன்னு, 'சர்ரு புர்ரு'ன்னு பறந்துகிட்டு, எங்கியாவது போயி கையைக் காலை உடைச்சிக்கிறானுங்க.

அவனுங்களுக்கென்ன பிரச்னை... வலியெல்லாம் பெத்தவங்களுக்குத்தானே...'' என்றார்.
''என்ன நீங்க... அபசகுனமா பேசிக்கிட்டு... நம்ம பையன் நல்ல பையனுங்க; அவனுக்குத் தெரியாதா... அதெல்லாம் பொறுப்பா ஓட்டுவான்; வாங்கிக் குடுங்க.''

''என்னம்மா நீ, அவருகிட்டப் போயி கெஞ்சிக்கிட்டு... வாங்கிக் கொடுக்கிறாரா, இல்லையான்னு கேளு. இல்லேன்னா, நாளையிலருந்து காலேஜுக்குப் போக மாட்டேன்,'' என்று கத்தினான் முரளி.
''நீ, காலேஜுக்கு போக வேண்டாம்... எங்கயாவது பன்னி மேய்க்கப் போ,'' என்று பதிலுக்கு கத்தினார் ரகுராமன்.

''சேய்... இந்த வீட்ல வந்து பொறந்தேன் பாரு...'' என்று கூறி, கோபத்துடன் வேகமாக வெளியே போனான் முரளி.
''டேய் முரளி... நில்லுடா... எங்கடா போற... என்னாங்க... அவனை நிக்கச் சொல்லுங்க...'' என்று கத்தினாள் ஆனந்தி.

''போகட்டும் விடு; எங்க போயிடப் போறான். பசிச்சா தன்னால வீட்டுக்கு வரப் போறான்.''
''ஆமா... வரப் போறான்; ஒத்தப் புள்ளைய வீட்டை விட்டு அனுப்பிட்டு, நீங்களும், நானும் உக்காந்திருப்போம். கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாம இப்படி கல் நெஞ்சக்காரரா இருக்கீங்களே...'' அழுதபடி, மகனின் பின்னால் ஓடினாள் ஆனந்தி.

மனைவியின் அழுகை ரகுராமனைக் கரைத்தது. பின்னாலேயே, அவரும் ஓடினார். இருவரும் மகனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

ரகுராமன் பைக் வாங்கித் தர சம்மதித்ததால், தாயும், பிள்ளையும் சந்தோஷமாயினர்.
அடுத்த இரண்டு நாட்களில், முரளியின் புது பைக் சீறி பறந்தது. காற்றில் மிதந்தான் அவன். தன் நண்பர்களை பைக்கில் ஏற்றி, சுந்தரின் முன் வளைய வந்தான்.

''முரளி... பைக்கைப் பாத்துட்டு, அந்த சுந்தரு பய என்னடா சொன்னான்?'' ஆர்வமாக கேட்டாள் ஆனந்தி.
''அதை ஏன்ம்மா கேக்குற... அவன் மூஞ்சில ஈ ஆடலை. 'ஆ...'ன்னு வாயைப் பொளந்துட்டான்; அவனுக்கு சரியான, 'பல்பு'மா,'' என்றான் சந்தோஷமாக!
''நல்லா வேணும்; இனி மேலாவது யாருக்கிட்ட என்ன பேசணும்ன்னு தெரிஞ்சிக்கட்டும்,'' என்று கூறி, இருவரும் சிரித்தனர்.

'தோ பாருப்பா... பைக்கில வேகமா போகக் கூடாது; நிதானமா போறது தான் பாதுகாப்பு. எல்லா வண்டிகளையும், 'ஓவர்டேக்' செய்யணும்ன்னு நினைக்கக் கூடாது; எப்பவும் ஹெல்மெட் போட்டுக்கணும்...' என்று, மகனுக்கு தினமும் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார் ரகுராமன்.

அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, பைக்கில் பறந்து கொண்டிருந்தான் முரளி.
'ரகுராமா, பையனுக்கு பைக் வாங்கிக் குடுத்திருக்கே போல... கொஞ்சம் மெதுவா போகச் சொல்லுப்பா, கண்ணுமண்ணு தெரியாம ஓட்றான்...' என்று நிறைய பேர் சொல்லி விட்டனர். ரகுராமன் சொல்லிப் பார்த்தார், திட்டிப் பார்த்தார். 'சரி சரி...' என்று சொன்னானே தவிர, அவன் வேலையை செய்தபடி தான் இருந்தான். நான்கைந்து முறை போலீசிலும் மாட்டிக் கொண்டான்.

'ஏன் சார்... காசு இருக்குங்கறதுக்காக சின்ன பசங்களுக்கெல்லாம் பைக் வாங்கிக் குடுக்குறீங்க... பொறுப்பில்லாத வயசுல, அவன் பொறுமையா ஓட்டுவான்னு எப்புடி நம்புறீங்க... ஓவர் ஸ்பீடுல போனா, பிரச்னை ஓட்றவங்களுக்கு மட்டுமில்ல, ரோட்டுல போற மத்தவங்களுக்குந்தான்...' என்ற போலீசின் அறிவுரையோடு, அபராதத்தையும் கட்டியாச்சு.

மதியம் வங்கிக்கு சென்று திரும்பும் போது, முரளி பைக்கில் வேகமாக போவதைப் பார்த்து விட்டார் ரகுராமன்.

மாலை முரளி வீட்டிற்கு வந்ததும்,''டேய்... அறிவு கெட்ட ராஸ்கல்... எத்தனை தடவை சொன்னாலும், உனக்கு மண்டையில ஏறாதா... எதுக்குடா அவ்வளவு வேகத்துல போற... ரோட்டுல அடிபட்டு சாகிறதுக்கா உனக்கு பைக் வாங்கிக் குடுத்திருக்கேன்; முட்டாள்.

''ஒரு பொருளை, அவனவன் சம்பாதிச்சு வாங்கினாத்தான்டா அதோட அருமை தெரியும்; அதை எப்பிடி பயன்படுத்தணுங்கிற பொறுப்பும் வரும். அப்பன் சம்பாதிச்ச காசு, ஆடத்தானே சொல்லும்...''
மகனுக்கு எதுவும் ஆகி விடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் கத்தினார் ரகுராமன்.
'சே... என்ன மனுஷன், எப்பப் பாத்தாலும் புள்ளய கரிச்சிக் கொட்டிக்கிட்டே...' மனதுக்குள் எரிச்சல் பட்டாள் ஆனந்தி.

''அம்மா... மெதுவாத்தான்மா போறேன்; நாம பைக் வாங்கிட்டோம்ன்னு எல்லாருக்கும் பொறாமைம்மா; அதான், அப்பாகிட்ட ஒண்ணுக்குப் பத்தா போட்டு விட்றானுங்க,'' அம்மாவை ஏமாற்றினான் முரளி.

''எனக்குப் புரியுது; இருந்தாலும், நீ கொஞ்சம் மெதுவாப் போப்பா,'' என்றாள்.
ஞாயிற்றுக்கிழமை. கிரிக்கெட் விளையாட பேட், ஸ்டம்புடன் மைதானத்திற்கு கிளம்பினான் முரளி. பைக்கில் அவனோடு இரண்டு பேர். ஆக்ஸிலேட்டரை முறுக்கி, 'உர் உர்'ரென்று சத்தத்தோடு, புழுதி பரத்தினான் முரளி.
''மச்சான்... செம பைக்குடா...''

''சரியான பிக்கப் மச்சான்; ஆனாலும், உன்னை மாதிரி ஓட்ட முடியாதுடா...''
பின்னால் இருந்த நண்பர்கள் உசுப்பி விட, முறுக்கிய நரம்புகளோடு, ஆக்ஸிலேட்டரையும் சேர்த்து முறுக்கினான் முரளி.

''மச்சான் செம ஸ்பீடுடா...''
''யே... ஸ்பீடு, 100ஐ தொட்ருச்சுடா...''

பின்னால் இருந்தவன் சொல்ல, முரளியின் பார்வை ஸ்பீடாமீட்டரை நோக்கியது. மீட்டரின் முள், 100ல் இருந்ததைப் பார்த்ததும், சந்தோஷத்தின் எல்லையைக் கடந்தான் முரளி. அந்த மிதப்போடு தலையை நிமிர்த்தியவன், சந்துக்குள் இருந்து, 'சரக்'கென்று வெளிப்பட்ட தண்ணி லாரியை கவனிக்காததால், தடுமாறினான்.

''டேய்... தண்ணி லாரிடா...''

பின்னால் இருந்தவன் சொல்லி முடிப்பதற்குள், லாரியின் சக்கரத்தை நோக்கிப் பாய்ந்தது பைக்.
''ஐயோ... நான் பெத்த ராசா... என்னை விட்டுப் போயிட்டீயே... பாத்துப் பாத்து வளர்த்தேனே, எல்லாமே முடிஞ்சி போச்சே...'' கதறினாள் ஆனந்தி.

குளிரூட்டும் கண்ணாடிப் பெட்டியில், கண்களை மூடியவாறு பிணமாகக் கிடந்தான் முரளி.
வாய் விட்டு அழ முடியாமல், மூலையில் அமர்ந்து எதையோ வெறித்துப் பார்த்தபடி இருந்தார் ரகுராமன்.

வீட்டின் வெளியே ஒரு பெரியவர் புலம்பிக் கொண்டிருந்தார்.
''ப்ச்... சின்ன வயசு; என்ன பாடுபட்டு வளத்தாங்களோ...பொசுக்குன்னு போயிட்டான். அவனுக்கென்ன நிம்மதியா போயிட்டான். அவன் அப்பா, அம்மாவ நினைச்சுப் பாருங்க...

காலத்துக்கும் அவனை நினைச்சு கண்ணீர் விட வேண்டியது தான். பிள்ளையா பொறந்தவன், தாய், தகப்பனுக்கு இதையா குடுத்திட்டுப் போகணும்...'' என்ற அந்த பெரியவரின் புலம்பலைக் கேட்டு, அருகில் நின்றிருந்த இளைஞர்கள் தலை குனிந்தனர்.

மு.கவிமதி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக