புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
113 Posts - 75%
heezulia
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
3 Posts - 2%
Pampu
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
278 Posts - 76%
heezulia
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_m10பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரவுசர் தரும் பிழைச் செய்திகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 07, 2015 3:10 am


இந்த இணைய தளம் சரியில்லை. நம்மால் அணுக முடியாது” என்று முடிவு செய்து விலகிவிடுகிறோம். ஆனால், அந்தப் பிழைச் செய்திகளை விரிவாகப் படித்துத் தெரிந்து கொண்டால், நாம் இலக்கு வைத்திடும் இணைய தளங்களில் பெரும்பாலான தளங்களைப் பிற வழிகளில் அணுகிப் பார்த்து விடலாம் என்பதே உண்மை.

நாம் சந்திக்கும் பிழைச் செய்திகளில் முக்கியமான சில குறித்து இங்கு காணலாம்.நம் இணைய அணுகலில், தவறாகச் செல்கையில், நம் பிரவுசர் என்ன நிகழ்கிறது என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுவதே இந்த பிழைச் செய்திகளாகும். இவற்றில் எப்போதும் ஓர் எண் காட்டப்படும். எடுத்துக்காட்டாக '404' மற்றும் '500' என இருக்கலாம். இந்த எண்களுடன் சுருக்கமாக சிறு விளக்கமும் அளிக்கப்படும். ஆனால், அது நமக்குப் புரியாததாக இருக்கலாம். இந்த பிழைகளில் பெரும்பாலானவற்றை நாம் சரி செய்து நம் தேடல் முயற்சியைத் தொடரலாம். எனவே, இவை என்ன சொல்ல வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியை இங்கு மேற்கொள்ளலாம்.

எண் 400 வரிசையில் பல பிழைச் செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றில் நான்கு பிழைச் செய்திகள் நாம் அடிக்கடி சந்திப்பவையாக உள்ளன. அவை:

1. 400 - பிழையுள்ள வேண்டுகோள் (Bad Request): நீங்கள் அனுப்பிய, இணைய தளத்திற்கான விண்ணப்பம் அல்லது வேண்டுகோள் சரியான முறையில் அனுப்பப்படவில்லை. நீங்கள், அந்த இணைய தளத்தின் முகவரியைச் (URL) சரியாக அமைத்து உள்ளீடு செய்தீர்களா எனச் சரிபார்க்கவும். அல்லது குறிப்பிட்ட இணையப் பக்கத்தினை புதுப்பித்தும் (Refresh) பார்க்கலாம். நீங்கள் உங்கள் வேண்டுகோளை அனுப்பியபோது, உங்களின் இணைய இணைப்பில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருந்தால், இந்த பிழைச் செய்தி பெற வாய்ப்புண்டு.

2. 401 - உரிமையற்றது (Unauthorized): இந்த செய்தியே உங்களுக்கு அதன் தன்மையை விளக்குகிறது. இந்த செய்தியை நீங்கள் பெற்றால், குறிப்பிட்ட இணைய தளத்தினைப் பெற, உங்களுடைய இணைய முகவரிக்கு உரிமை இல்லை. அல்லது நீங்கள் தந்த தகவல்கள் இதற்கானவை இல்லை. அல்லது இதில் லாக் இன் செய்து, தளத்தினுள் செல்ல உங்களுக்கு உரிமை இல்லை. இது போன்ற பிழைச் செய்தி கிடைக்கும் பட்சத்தில், முயற்சியைக் கைவிடுவதே நல்லது. ஏனென்றால், அந்த இணையப் பக்கம் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

3. 404 - காணப்படவில்லை (Not Found): நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு பொதுவான பிழைச் செய்தி இது. நீங்கள் காண விரும்பும் பக்கம் அல்லது இணைய தளம், இணையத்தில் காணப்படவில்லை. நீங்கள் அமைத்துள்ள முகவரியினைச் சரி பார்க்கவும். ஒருமுறைக்கு இருமுறையாக அதனை நுணுக்கமாகச் சரி பார்க்கவும். அதன் பின்னரும், குறிப்பிட்ட இணைய தளம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் பார்க்க விரும்பும் இணைய தளத்திற்கான முகவரி இது இல்லை என்றாகிறது. அந்த இணையப் பக்கத்தின் முதன்மைத் தளப் பக்கத்தினை (home page) அணுகிப் பின்னர் நீங்கள் விரும்பும் பக்கத்தினைப் பெறுவதற்கான வழிகளை ஆய்வு செய்து, பக்கத்தைக் காண முயற்சிக்கவும்.

4. 408 - விண்ணப்ப நேரம் கடந்துவிட்டது (Request Timeout): நீங்கள் ஓர் இணைய தளத்திற்கான முகவரியை அமைத்து, அதனைப் பெற்றுத் தர உங்கள் பிரவுசரை இயக்குகையில், உங்கள் பிரவுசர் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, சில குறியீடுகளை அனுப்புகிறது. இந்த அழைப்புக் குறியீடுகள், பல சர்வர்களைக் கடந்து சென்று, உங்களுக்கான இணைய தளம் உள்ள சர்வரைச் சென்றடைந்து, பின் அந்த சர்வர் தரும் தகவல்களை உங்களுக்கு அளிக்கிறது. இதற்கு, உங்கள் பிரவுசர் குறிப்பிட்ட கால வரையறையை அமைத்துக் கொள்கிறது. குறிப்பிட்ட அந்தக் கால வரையறை கடந்தும், உங்களுக்கான இணைய தளம் குறித்த தகவல் பிரவுசருக்கு அனுப்பப்படவில்லை எனில், “காலம் கடந்துவிட்டது” என்ற பிழைச் செய்தியை பிரவுசர் உங்களுக்குத் தெரிவிக்கிறது. இந்த பிழைக்குக் காரணம், உங்கள் பக்கமும் இருக்கலாம்; இணைய தளத்தினைக் கொண்டுள்ள சர்வர் பக்கமும் இருக்கலாம். சிறிது காலம் காத்திருந்து, பிரவுசரை புதுப்பிக்கும் வகையில் ரெப்ரெஷ் செய்தால், ஒரு வேளை, குறிப்பிட்ட தளம் கிடைக்கலாம். இல்லை எனில், முயற்சியைச் சிறிது காலம் சென்று மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து 500 என்ற எண்களைத் தாங்கி வரும் பிழைச் செய்திகளைப் பார்க்கலாம். 500 என்ற எண் சார்ந்து வரும் பிழைச் செய்திகள் கிடைத்தால், அது நீங்கள் பார்க்க விரும்பும் இணைய தளங்களைக் கொண்டுள்ள சர்வரிடம் உள்ள பிழை சார்ந்ததாகவே இருக்கும். எனவே, இதனை நாம் சரி செய்திட முடியாது. இந்த வகையான பிழைச் செய்திகள், குறிப்பிட்ட நேரத்திலோ, அல்லது குறிப்பிட்ட பக்கங்களைக் காண முயற்சி செய்கையிலோ கிடைக்கப் பெற்றால், அந்த தளத்தின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, உங்களுக்குக் கிடைக்கும் பிழைச் செய்தி குறித்து தெரிவிக்கவும். இந்த வகையில் நாம் பெறக் கூடிய சில பொதுவான பிழைச் செய்திகளை இங்கு காணலாம்.

1. 500 - சர்வர் அமைப்பு பிழை (Internal Server Error) : இது சர்வரின் கட்டமைப்பு சார்ந்த பிழையைச் சுட்டிக் காட்டுகிறது. பிழை என்னவென்று, துல்லிதமாக இதில் அறிய முடியாது.

2. 502 - மோசமான வழித்தடம் (Bad Gateway): இந்த பிழைச் செய்தி கிடைத்தால், உங்கள் பிரவுசருக்கும், இணைய தளம் உள்ள சர்வருக்கும் இடையேயான வழியில் உள்ள இரண்டு சர்வர்கள் சரியாகத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை. இந்த பிழை, இணைய தளத்தில் ஒரு புதிய பக்கம் ஒன்றை பிரவுசருக்கு அனுப்பும் போது ஏற்படலாம். அல்லது அந்த சர்வரில் லாக் இன் செய்திடும்போது ஏற்படலாம். அல்லது ஏதேனும் பொருட்கள் வாங்க ஓர் இணைய தளத்தை அணுகும்போது கிடைக்கலாம்.

3. 503 - சேவை கிடைக்கவில்லை (Service Unavailable): இந்த பிழைச் செய்தி தற்காலிகமானதாகவோ, அல்லது வெகு காலத்திற்குக் காட்டப்படும் வகையிலோ இருக்கலாம். “இப்போதைக்கு இந்த இணைய தளம் உங்களுக்குக் கிடைக்காது” என்பதே இதன் பொருள். எனவே, மிகவும் அவசரமாக இதனைக் காண வேண்டும் என்றால், சில மணி நேரம் கழித்து இதனைக் காண முயற்சிக்கலாம். இல்லை எனில், சில நாட்கள் கழித்து முயற்சிக்கலாம்.

4. 504 - வழித்தட நேரம் கடந்துவிட்டது (Gateway Timeout): இது பிழைச் செய்தி 408 போன்றது. “நேரம் கடந்துவிட்டது” என்பது இங்கு இரண்டு சர்வர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னை. உங்கள் கம்ப்யூட்டருக்கு இதில் பங்கில்லை. ஏதேனும் ஒரு சர்வர் தன் இயக்க நிலையினை இழந்திருக்கலாம். சில மணித்துளிகளிலோ அல்லது சில மணி நேரங்கழித்தோ, இந்த தளம் இயக்கப்படலாம்.

பிறவகை பிழைச் செய்திகள்

பிழைச் செய்திகள் எப்போதும் ஓர் எண்ணுடன் வருவதில்லை. சில வேளைகளில், தகவல்களுடன் ஒரு பிழைச் செய்தி தரப்படலாம். இவற்றை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இப்படிக் கிடைக்கும் பிழைச் செய்திகளில் பொதுவான சிலவற்றை இங்கு காணலாம்.

சான்றிதழ் பிழைகள் - (Certificate errors):

நீங்கள் அணுக விரும்பும் இணைய தளம் தான் பாதுகாப்பானது என்பதற்கான அடையாளங்களைக் காட்டி, அதற்கெனச் சான்றிதழ் வழங்கும் அமைப்பிடம் பாதுகாப்பு சான்றிதழ் பெறவில்லை. அல்லது ஏற்கனவே பெற்றிருந்த சான்றிதழின் காலக்கெடு முடிந்திருக்கும். இந்த தளத்தினை ஏதேனும் ஹேக்கர்கள் கைப்பற்றி இருந்தாலும், இத்தகைய பிழைச் செய்தி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இது போன்ற இணைய தளங்களை அணுகாமல் இருப்பதே நல்லது. இந்த பிழை சரி செய்யப்பட்டு, சரியான சான்றிதழை இந்த தளம் பெற்ற பின், இதனைப் பார்ப்பது நல்லது. முடியுமானால், இந்த தளத்தின் உரிமையைப் பெற்றவருடன் தொடர்பு கொண்டு இதனைத் தெரிவிக்கலாம். அல்லது பிழை என்னவென்று அறியலாம். அது உண்மையிலேயே சான்றிதழ் குறித்ததா அல்லது தவறான பிழைச் செய்தி தரப்படுகிறதா என அறிந்து அதற்கேற்ப செயல்படலாம்.

பாதுகாப்பு எச்சரிக்கைகள் - (Security warnings):

அனைத்து பிரவுசர்களும் பாதுகாப்பு தருவதற்கான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரவுசர் பயனாளர்களை, தங்கள் வாடிக்கையாளர்கள் நலன் காக்கவே இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. இதன் மூலம், வழக்கமாக மால்வேர் அல்லது ஸ்கேம் செய்திகளைப் பரப்பும் தளங்களிடமிருந்து பாதுகாக்க இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன்படும். உங்கள் பிரவுசரின் பாதுகாப்பு அமைப்பை மிக உயர் நிலையில் (High) அமைத்திருந்தால், இந்த பிழைச் செய்தி அடிக்கடி கிடைக்கும். நீங்கள் செட் செய்துள்ள அளவிற்கு பாதுகாப்பான வழிகளை, நீங்கள் பார்க்க விரும்பும் தளம் கொண்டிருக்காது என்பதே இதன் பொருள். இது போன்ற பிழைச் செய்தி அடிக்கடி பெறுவதைக் குறைக்க விரும்பினால், உங்கள் பிரவுசரின் பாதுகாப்பு அமைப்பினை, மத்திய அல்லது கீழ் நிலையில் (Low or Medium) அமைக்கலாம். எப்போது உங்கள் பிரவுசர் இது போன்ற ஒரு பிழைச் செய்தியினைத் தருகிறதோ, அந்த இணைய தளத்தினை அணுகாமல் இருப்பதே நல்லது. அப்படி அணுகினால், உங்களிடம் மிகச் சக்தி வாய்ந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இருந்தாலும், மால்வேர் தடுப்பு செயலி இருந்தாலும், உங்கள் கம்ப்யூட்டருக்கு மால்வேர் அல்லது வைரஸ் வரும் வாய்ப்புகள் உண்டு.

இது போன்ற பிழைச் செய்திகள், நீங்கள் அமைத்துள்ள ப்ளக் இன் அல்லது ஆட் ஆன் புரோகிராம்களாலும் கிடைப்பதுண்டு. இவ்வாறு பிரச்னைகளைத் தரும் ப்ளக் இன் புரோகிராம்களை அடையாளம் கண்டு நீக்கிவிடுவதும் நல்லது. பின்னர், தேவைப்படும்போது மட்டும் அதனை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

சில வேளைகளில், ஒரு குறிப்பிட்ட தளத்தினை இணைப்பு பிரச்னைகளால் பெற முடியவில்லை எனச் செய்தி கிடைத்தால், அதே அமைப்பில், வேறு ஒரு தளத்தை அணுக முயற்சிக்கவும். அப்போதும் கிடைக்கவில்லை என்றால், உங்கள் நெட்வொர்க் அமைப்பில் தான் தவறு இருப்பது உண்மையாகிறது. உங்களுடைய இணைய இணைப்பினைச் சரி பார்க்கவும். சரி செய்திட முடியவில்லை என்றால், உங்களுக்கு இணைய இணைப்பினைத் தரும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தினை அணுகவும்.

கம்ப்யூட்டர் மலர்



பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 07, 2015 11:19 am

நேற்றைய அனுபவமா தல ... புன்னகை

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Apr 07, 2015 2:25 pm

பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் 103459460 பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 07, 2015 2:56 pm

நம்ம அரசியல்வாதிகளுக்கு 420 ன்னு வருதாம் பாஸ்

அது பிழை செய்தி ன்னு அவங்களும் கண்டுக்கறதில்ல நாமளும் கண்டுக்கறதில்ல




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 07, 2015 4:52 pm

தெரிந்து கொள்ளவேண்டிய குறிப்புகள் . நன்றி  சிவா  பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் 103459460 பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் 3838410834

நம் பதிவர்கள் பலர் 404 பிழை தலைப்பில் வருகிறார்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 07, 2015 4:57 pm

பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் 103459460 பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் 103459460

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 07, 2015 6:10 pm

ராஜா wrote:நேற்றைய அனுபவமா தல ... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1128911

சிரி சிரி சூப்பருங்க



பிரவுசர் தரும் பிழைச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக