புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புற்றுநோய் வருவதற்கு புகையிலை காரணமில்லை என்னும் அப்பட்டமான பொய்..! Poll_c10புற்றுநோய் வருவதற்கு புகையிலை காரணமில்லை என்னும் அப்பட்டமான பொய்..! Poll_m10புற்றுநோய் வருவதற்கு புகையிலை காரணமில்லை என்னும் அப்பட்டமான பொய்..! Poll_c10 
79 Posts - 43%
ayyasamy ram

62 Posts - 34%
i6appar

11 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 4%
T.N.Balasubramanian

6 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
prajai

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோய் வருவதற்கு புகையிலை காரணமில்லை என்னும் அப்பட்டமான பொய்..!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 10:19 pm

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் காந்தி அற்புதமான தகவல் ஒன்றை உதிர்த்திருக்கிறார். 'புற்றுநோய் வருவதற்கு புகையிலைதான் காரணமென்று நிரூபிப்பதற்கு இந்தியாவில் எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை' என்பதுதான் அந்த அரிய தகவல்.

திலீப் காந்தியின் இந்த அசாத்தியக் கண்டுபிடிப்புக்கான காரணம் ஏப்ரல் 1-ம் தேதிதான். இந்த நாளில்தான் சிகரெட்டு பாகெட்டுகளின் மீதான அபாயகரமான படத்தை பாக்கெட் அளவில் 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற காலக்கெடு முடிகிறது.

திலீப் காந்தி ஒரு சாதாரணமான பாஜக எம்.பி.யாக இருந்தால் நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை. ஆனால் இந்தக் கருத்தை எந்த பொறுப்பின் அடிப்படையில் அவர் சொன்னார் என்று பார்க்கும்போதுதான் நாம் அதிர்ச்சியில் உரைந்து போகிறோம். 'புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான துணைச் சட்டக் குழுவின் தலைவர் என்ற அதிகாரத்திலிருந்தே இக்கருத்தை அவர் கூறியிருக்கிறார்.

திலீப் காந்தியின் இக்கருத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது, குறிப்பாக புற்றுநோய்க்கு எதிராக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து பல ஆண்டுகளாக போராடி வரும் மருத்துவர்களும், சுகாதார பணியாளர்களும் கோபத்தைத் தாண்டி வெறுப்புக்கே ஆளாகியுள்ளனர். திலிப் காந்தியின் இந்த முடிவால் சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை படத்தை 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக அதிகப்படுத்தும் முடிவு காலவரையின்றி தள்ளிப்போயுள்ளது.

இந்தியாவில் புற்றுநோய்க்கு புகையிலைதான் காரணமென்பதை நிரூபிக்க போதிய ஆராய்ச்சிகள் நடக்கவில்லை என்கிற திலீப் காந்தியின் கருத்து அப்பட்டமான அறியாமை மட்டுமல்ல, இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பதே மருத்துவ நிபுணர்களின் ஏகோபித்த கருத்தாகவும் உள்ளது. மேலும் புற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தில் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து போராடி கொண்டிருப்பவர்களை இது சிறுமைபடுத்துகிறது என்கின்றனர் அவர்கள்.

'இது போன்ற கருத்துகள் மக்கள் மத்தியில் தவறான கருத்தை ஏற்படுத்தி விடுகின்றன. பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு கண்டறியப் பட்ட ஆராய்ச்சி முடிவுகளை இது போன்ற கருத்துகள் மதிப்பிழக்கச் செய்து வருகின்றன. புகையிலை தொழிலதிபர்களின் கருத்தை திலிப் காந்தி பிரதிபலிப்பது அபாயகரமானது' என்கிறார், புற்றுயோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, 80 வயதை கடந்தும் மருத்துவ சேவையாற்றி வரும், அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா.

புற்றுநோய் வருவதற்கு புகையிலை காரணமில்லை என்னும் அப்பட்டமான பொய்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 10:20 pm

இந்த விவகாரத்தின் சூட்சுமமே இதுதான்...

ஆம்… இந்தியாவில் புகையிலை உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் தொழிலதிபர்கள் எவ்வாறு ஓர் அழுத்தம் தரும் குழுவாக, அதாவது 'லாபி'யாக செயற்படுகின்றனர் என்பதற்கு திலிப் காந்தியின் கருத்தே சரியான எடுத்துக்காட்டாகும். இதனைப் புரிந்து கொள்ள ஆண்டாண்டு காலமாகவே புகையிலை உற்பத்தியாளர்கள் எவ்வாறு விதவித மான விளம்பர யுக்திகளை கையாண்டு வந்தார்கள் என்பதை புரிந்து கொள்ளுவது அவசியமானதாகும்.

1940 மற்றும் 1950களில் வந்த திரைப்படங்களில், குறிப்பாக அன்றைய ஹிந்திப் படங்களில் வரும் ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பார்கள். விளம்பர யுக்திகள் பெரியளவில் வளராத அந்தக் காலகட்டத்தில் அது மிகப் பெரிய பலனை சிகரெட் உற்பத்தியாளர்களுக்குத் தந்த்து. இன்னமும் மக்களிடம் பெரும் செல்வாக்குள்ள ஒரு ஹீரோ ஓரு காட்சியில் சிகரெட் பிடித்தால், அது சிகரெட் விற்பனையை பல ஆயிரங்களுக்கு கூட்டி விடுகிறதென்பது சந்தை நிலவரம் தெரிந்தவர்களுக்கு நன்றாகவெ தெரியும்.

உலக சுகாதார நிறுவனம் தொடர்ச்சியாக இது குறித்து எடுத்த முயற்சிகளின் பலனாகவே சினிமாவில் ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பதை முற்றிலும் ஒழிக்கும் காரியங்களில் பல நாடுகள் ஈடுபட்டன. இந்தியாவில் இன்று நாம் இதில் முற்றிலும் வெற்றியும் பெற்றுள்ளோம்.

ஆனால், புகையிலை லாபி என்பது வெட்ட வெட்ட தலை புதிது புதிதாக முளைக்கும் அசுரனைப் போன்றது (ஆங்கிலத்தில் இதனை ஹைட்ரா ஹெட்டட் மான்ஸ்டர் என்பார்கள்). கேன்சர் என்ற லத்தீன் சொல்லுக்கு லத்தீன் மொழியில் பொருள் நண்டு. நண்டு எப்படி மணலில் ஓரிடத்தில் உள்ளே மறைந்தால் மற்றோர் இடத்திலிருந்து வெளியே வருகிறதோ அது போல உடலில் ஒரு முறை புற்றுநோய் வந்தால் அது மீண்டும், ஒரு பாகத்தை குணப்படுத்தினாலும் மற்றோர் பாகத்தில் வரலாம் என்றே புற்றுநோய்க்கு கேன்சர் என பெயரிடப்பட்டது. அது போலவே, புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணியாக விளங்கும் புகையிலை உற்பத்தியாளர்களும். நீங்கள் அவர்களை ஓரிடத்தில் களைந்து எறிந்தால் அவர்கள் வேறோர் ரூபத்தில், முன்னிலும் வலுவுடன் முளைத்து வருவார்கள். என்னே ஒரு முரண் நகை பாருங்கள்.

புற்றுநோய் வருவதற்கு புகையிலை காரணமில்லை என்னும் அப்பட்டமான பொய்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 10:20 pm

புதிய யுக்திகள்...

புதிய, புதிய விளம்பர யுக்திகளை வகுப்பதற்காகவே புகையிலை நிறுவனங்கள் - ஏனெனில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே இன்றைக்கு புகையிலைக்கு எதிராக ஏதாவது ஒரு ரூபத்தில் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக் கொண்டுதான் உள்ளன – புதிய ஆராய்ச்சிகளுக்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவிட்டுக் கொண்டுள்ளன.

இன்று உலகில் வளர்ந்த நாடுகளில் சிகரெட் மீதான மோகம் குறைய ஆரம்பித்துள்ளது. காரணம் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு வளர்ந்தோங்கி யிருப்பதுதான். அதனால் பகாசுர புகையிலை நிறுவனங்களின் கவனம் இந்தியா போன்ற வளரும் நாடுகள் பக்கம் திரும்பியிருக்கிறது.

பல கலை நிகழ்ச்சிகளுக்கு புகையிலை நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்வதுகூட இன்று இடர்பாடு மிக்கதாக மாறிக் கொண்டிருக்கிறது. காரணம் விழிப்புணர்வு கூடியிருப்பதுதான். இதன் காரணமாக பிரதானமாக சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்கள், தாங்கள் சிறியளவில் தயாரிக்கும் மற்ற பொருட்களுக்கு விளம்பரம் செய்வதென்ற போர்வையில் சந்தையைத் தாக்குகின்றனர். ஆனால் அவர்களது பெயரை கேட்டாலே மக்களுக்கு சிகரெட் ஞாபகம்தான் வரும். இது ஒரு விளம்பர யுக்தி.

மற்றொரு தாக்குதல், கடந்த மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நிறுவனங்களுக்கான, அவர்களது லாபத்தில் இரண்டு சதவீதத்தை சமூக நல காரியங்களுக்கு செலவிடுவதென்ற, கார்ப்பொரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிளிட்டி எனப்படும் சிஎஸஆர் திட்டத்தை பகாசுர சிகரெட் நிறுவனங்கள் கையில் எடுத்திருப்பது.

சிகரெட் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க கோரி புகையிலை தடுப்புக்கான தமிழக மக்கள் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 'நாங்கள் போட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிகரெட் நிறுவனங்கள் என்ன மாதிரியான சிஎஸ்ஆர் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதை முடிவு செய்யுமாறு மத்திய சுகாதாரம் மற்றும் கார்ப்பரேட் அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டது. அதற்கான குழுவும் அமைக்க உத்தரவிடப்பட்டது.

தற்போது அக்குழு தனது வழிகாட்டு நெறிகளை உருவாக்கியிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல சர்வதேச அமைப்புகள் சிகரெட் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்றே வழிகாட்டு நெறிகளை உருவாக்கியுள்ளதால் நாங்கள் நீதிமன்றத்துக்கு போனோம். ஏனெனில் சிஎஸ்ஆர் மூலம் சிகரெட் நிறுவனங்களின் வியாபாரம் மறைமுகமாகப் பெருகி விடக்கூடாது என்பதே எங்கள் கோரிக்கை' என்கிறார் வழக்கின் மனுதாரான சிரில் அலெக்சாண்டர்.

புற்றுநோய் வருவதற்கு புகையிலை காரணமில்லை என்னும் அப்பட்டமான பொய்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 10:21 pm

புகையிலை லாபி எத்தகையது?

திலிப் காந்தியின் கருத்து நிராகரிக்கப் பட்டு சிகரெட் பாக்கெட்டின் மீதான மண்டை ஓட்டுப் புகைப்படம் 85 சதவீதமாக விரிந்திருந்தாலும் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்குமா என்பது வேறு விவகாரம். உலகின் பல நாடுகளிலும் இது போன்ற அபாய எச்சரிக்கைகள் சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ளன. 2005-ம் ஆண்டில் புகையிலை பழக்கத்தை மட்டுபடுத்தும் ஐக்கிய நாடுகள் மன்ற தீர்மானத்தில் மையெழுத்திட்டுள்ள இந்தியா புகையிலை பழக்கத்தை ஊக்குவிக்கும் எந்த காரியத்திலும் ஈடுபட முடியாது. ஆனால் தற்போது ஏப்ரல் 1-ம் தேதி கெடுவை இந்தியா மீறியிருப்பது, ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கு எழுத்துபூர்வமாக கொடுத்த வாக்குறுதியை கேலிக்கூத்தாக்கிய செயலாகவே சர்வதேச சமூகத்தால் பார்க்கப்படுகிறது.

இதில் வேடிக்கையான மற்றோர் விஷயம்... இந்த ஏப்ரல் 1-ம் தேதி காலக்கெடுவை உருவாக்கியதே 2014 அக்டோபரில் பாஜகவின் அப்போதய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன்தான். 'இதன் காரணமாகவே ஹர்ஷ்வர்தன் மாற்றப்பட்டு நட்டா சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். புகையிலை லாபி எந்தளவு சக்தி வாய்ந்த்து என்பதை இதிலிருந்தே புரிந்துக் கொள்ளலாம்' என்கிறார் சிரில் அலெக்சாண்டர்.

இதில் இன்னும் முக்கியமானது, இந்திய அரசில் இருக்கும் முரண்பாடான சில விஷயங்கள். 1975-ம் ஆண்டு புகையிலை மேம்பாட்டு வாரியம் ஒன்றை இந்திய அரசு உருவாக்கியது. இதன் நோக்கம் புகையிலை விவசாயிகளின் நலனை மேம்படுத்துவது மற்றும் புகையிலை தொழிலின் வளர்ச்சிக்கான காரியங்களை செய்வதாகும். 2005-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் இந்தியா மையெழுத்திட்டதின்படி பார்த்தால் புகையிலை வாரியத்தை இந்திய அரசு கலைத்திருக்க வேண்டும். ஆனால் புகையிலை வாரியம் இன்னமும் செயற்பட்டுக் கொண்டுதான் உள்ளது. மற்றொன்று இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான அரசுக்குச் சொந்தமான எல்ஐசி புகையிலை வாரியத்தில் சில ஆயிரம் கோடிகளுக்கு முதலீடு செய்திருப்பது.

புற்றுநோய் வருவதற்கு புகையிலை காரணமில்லை என்னும் அப்பட்டமான பொய்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 10:21 pm

குழி தோண்டி புதைக்கப்பட்ட விதிகள்

இது தவிர அரசியல் கட்சிகளுக்கு புகையிலை நிறுவனங்கள் தாராளமாக நன்கொடைகளை வாரி வழங்குவது. மிகவும் முக்கியமான மற்றோர் விஷயம் திலீப் காந்தி புகையிலை சட்டம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட வேண்டிய புகைப்படம் பற்றி சம்மந்தப்பட்ட துறையினரிடமே விவாதித்த்து. இது 2005-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின்படி முற்றிலும் தடை செய்யப்பட்டது.

புகையிலை சம்பந்தமான எந்த கொள்கை வகுப்பிலும் புகையிலை நிறுவனங்களுடன் அரசுகள் பேசக் கூடாதென்பது முக்கிய க்ஷரத்தாகும். இந்த விதியும் மத்திய பாஜக அரசால் காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது. வேறோர் முக்கிய விஷயம், திலீப் காந்தி தலைமையிலான இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கும் மற்றோர் முக்கிய பாஜக எம்.பி மிகப் பெரிய பீடி தொழிலதிபர். தங்கள் நலன்கள் மோதும் விவகாரத்தில் (கான்ஃபிளிக்ட் ஆஃ இண்ட்ரெஸட்) ஒருவர் முடிவு செய்யும் இடத்தில் இருக்க கூடாதென்ற அடிப்படை இயற்கை நீதியையும் பாஜக அரசு ஆழக் குழி தோண்டி புதைத்து விட்டதற்கு வேறு சான்று ஏதாவது தேவையா என்ன?

புகையிலை பற்றிய கொள்கை வகுப்பில் இடதுசாரிகளைத் தவிர்த்து அனேகமாக அனைத்து கட்சிகளிலும் உள்ள எம்பிக்களிடம் தங்களது அழுத்தத்தை புகையிலை நிறுவனங்கள் செலுத்திக் கொண்டுதான் உள்ளன. இந்த அழுத்தம் கணிசமான அளவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது உடைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு கடந்த ஆறாண்டுகளாக நிலைமை பழைய மோசமான நிலைமைக்கே சென்று கொண்டிருப்பதற்கு தற்போதய விஷயம் சரியான சான்றாகும்.

ஆண்டுதோறும் புகையிலை பழக்கத்தால் இந்தியாவில் பத்து லட்சம் பேர் இறக்கின்றனர் என்பது அரசின் புள்ளி விவரம். புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது மிகவும் செலவு பிடிக்கக்கூடியது. லட்சக்கணக்கான சாமானிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட புற்றுநோயால், அவர்களுக்கான மருத்துவ சிகிச்சையால் நடுத்தெருவுக்கே வந்திருக்கின்றன.

புற்றுநோய்க்கு புகையிலைதான் காரணமென்றே இந்தியாவிலிலேயே ஏராளமான ஆராய்ச்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள சூழலில் திலீப் காந்தியின் கருத்து எவ்வளவு ஆபத்தானது என்பதை சாமானியனும் புரிந்து கொள்ளலாம்.

இறுதியாக, சொந்த அனுவத்திலிருந்து ஒரு வார்த்தை: இந்தக் கட்டுரையாளன் சுமார் பதினைந்து ஆண்டுகள் புகை பிடித்தான். பின்னர், மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக சிகரெட் பழக்கத்தை நிறுத்தினான். ஆனால் அதன் பின்னர் மூன்றாண்டுகள் சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டான். பல நாட்கள் மூன்று முதல் நான்கு மணி நேரம் மூச்சு விட சிரமபட்டிருக்கிறான். அந்தக் காலங்களில் அவன் பட்ட வலியும், அடைந்த அச்சமும் எழுத்தில் வடிக்க முடியாதது. கேன்சர் வந்து விட்டதோ அல்லது வரப்போகிறதோ என்ற அச்சம் தினமும் வதைத்த நாட்கள் அவை. இந்தப் பிரச்சனைப் பற்றி இவ்வளவு எழுதுவதற்கு சொந்த அனுபவமும் முக்கிய காரணம்தான்.

ஆர்.மணி - பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர்
தி இந்து!

புற்றுநோய் வருவதற்கு புகையிலை காரணமில்லை என்னும் அப்பட்டமான பொய்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 05, 2015 12:22 pm

இன்றைய மாலைமலரில் படித்த செய்தி

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புகை பிடிப்பதால் ஏற்படும் உடல்நலக்கேடு குறித்த படம் சிகரெட் பாக்கெட்டுகளின் மீது தற்போது சிறிய அளவில் வெளியிடப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி முதல் 85 சதவீத அளவுக்கு பெரிதுபடுத்தப்படும் என்று மத்திய சுகாதார துறை மந்திரி கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்.

இதற்கிடையே சிகரெட் மற்றும் இதர புகையிலை தயாரிப்புகள் சட்டம் 2003 பற்றி மறு ஆய்வு செய்ய பாரதீய ஜனதா எம்.பி. திலிப்காந்தி தலைமையில் பாராளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு சமீபத்தில் அனுப்பியுள்ள அறிக்கையில் ‘‘புகை பிடிப்பதால் புற்றுநோய் வரும் என்று இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஆய்விலும் உறுதி செய்யப்படவில்லை.

வெளிநாடுகளின் அழுத்தத்துக்கு பணிந்து விடக் கூடாது. எனவே உடல் நலக்கேடுக்கு தொடர்பான படத்தை பெரிதாக்கும் முடிவை ஒத்தி வைக்கலாம்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதன் காரணமாக படத்தை பெரிதாக வெளியிட வேண்டும் என்ற உத்தரவு கடந்த 1–ந்தேதி அமல்படுத்தப்படவில்லை.

பாராளுமன்ற நிலைக்குழுவின் இந்த கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. புகையிலை பொருட்கள் தயாரிப்பாளர்கள் நிர்ப்பந்தம் காரணமாகவே இந்த குழு இவ்வாறு அறிக்கை அளித்து உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் பீடி, சிகரெட் பாக்கெட்டுகளின் மீது உடல்நலக்கேடு தொடர்பான எச்சரிக்கையை சித்தரிக்கும் படத்தை பெரிய அளவில் வெளியிட (85 சதவீதம்) பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

மேலும் மக்கள் நலனுக்கு முரண்பட்ட கருத்துக்களை தெரிவிக்கும் எம்.பி.க்களை பாராளுமன்ற நிலைக்குழுவில் இருந்து நீக்கவும் மோடி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த குழுவில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா எம்.பி. குப்தா பீடி தொழில் அதிபர் ஆவார்.
-maalaimalar

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக