புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_m10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_m10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_m10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_m10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_m10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_m10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_m10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_m10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_m10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_m10செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 1:13 am

First topic message reminder :

செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 YgMITroMRnKLb1qOlHge+selvamagal

பாரதப் பிரதமர் மோடி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் சுகன்யா சம்ரிட்ஹி யோஜனா என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். ஆங்கிலத்தில் அதை Girl Child Prosperity Scheme என்கிறார்கள். தமிழில் அதன் பெயர் “செல்வ மகள் சேமிப்புத் திட்டம்”.

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கும், அது முதிர்வடையும்போது வழங்கப்படும் தொகைக்கும் வருமான வரி கிடையாது என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பினால், இந்தத் திட்டத்தில் சேருகிறவர்களுக்கு லாபகரமான திட்டமாக மாறிவிட்டது.

யார் சேரலாம்?

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் பத்து வயது அல்லது பத்துக்கும் குறைவான வயதாகும் பெண் பிள்ளைகள் மட்டுமே சேர முடியும். மற்றவர்கள் பெயரில் இந்த கணக்கு தொடங்க முடியாது. இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் இந்த ஆண்டுக்கு மட்டும் ஒரு சிறிய விதிவிலக்கு கொடுத்திருக்கிறார்கள்.

அதன்படி, வயது பத்துக்கும் மேலாக ஓர் ஆண்டு கூடுதல் ஆகியிருந்தாலும், அதாவது 2003-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதிக்கும், 2004-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிக்கும் இடையில் பிறந்த பெண் குழந்தைகள், அவர்களுக்கு வயது பத்துக்கு மேல் ஆகியிருந்தாலும் இந்தத் திட்டத்தில் சேர அனுமதி உண்டு. அப்படிச் சேர கடைசி நாள் 01.12.2015.

யார் கணக்கு துவங்கலாம்? என்ன சான்றிதழ்கள் தேவை?

பெண் குழந்தையின் பெற்றோர்தான் துவங்க வேண்டும். பெற்றோர் இருவரும் இல்லாதபட்சத்தில் மட்டும் அந்தப் பெண்ணின் சட்டபூர்வமான கார்டியன் கணக்குத் துவங்கலாம்.

எவ்வளவு கட்டவேண்டும்?

திட்டத்தில் சேருகிறவர்கள், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் ரூ.1,000 கட்ட வேண்டும். நூறின் மடங்குகளில் கட்டுகிற தொகை, ஆண்டுக்கு ஆண்டு மாறுபடலாம். குறிபிட்ட அளவு, ஒரே தொகைதான் கட்ட வேண்டும் என்பதில்லை. ஆனால், அதிகபட்சமாக ஒரு ஆண்டில் ஒன்றரை லட்சம்தான் கட்டலாம். கட்டுகிற பணத்தை ஒரே தவணையில்தான் கட்ட வேண்டும் என்பதில்லை. சீட்டு கட்டுவது போல, எஸ்ஐபி போல மாதா மாதமும், மாதம் 100 ரூபாய் முதல் 12,500 ரூபாய் வரைகூடக் கட்டலாம்.

எப்படிக் கட்டினாலும், திட்டத்தில் தொடருவதற்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 கட்ட வேண்டும். எந்த ஒரு ஆண்டும் ரூ.1,000 கட்டத் தவறினால், அதன்பிறகு ரூ.50 அபராதம் செலுத்திவிட்டுத்தான் சேமிப்பைத் தொடரமுடியும்.

இந்தத் திட்டத்தினால் என்ன பலன்?

கட்டுகிற பணத்துக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80-சியின் கீழ் முழு வரி விலக்கு உண்டு. அதேபோல், முதிர்வுத் தொகையை பெறும் நேரமும், பெறுகிற முழுத்தொகைக்கும் வரி கிடையாது.

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் சேரும் பணத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிட்டு வட்டி தருவார்கள். அந்த வட்டியை கையில் தரமாட்டார்கள். கணக்கில் சேர்த்துவிடுவார்கள். தற்சமயம் இருக்கிற பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, வரும் ஆண்டுக்கு அறிவித்திருக்கிற 9.1 சதவீதம் என்பது நல்ல வட்டி. அதுவும், வரிவிலக்குடன். இதனுடன் ஒப்பிடக்கூடிய மற்றொரு சிறுசேமிப்புத் திட்டத்துடன் வைத்துப் பார்த்தால், பி.பி.எஃப்.-ல் இந்த ஆண்டு வட்டி 8.75 சதவீதமாக இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வட்டி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, கவர்மென்ட் செக்யூரிட்டிகளுக்கு நிலவும் வட்டியைவிட 0.75 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று பதில் சொல்கிறார்கள்.

எவ்வளவு காலம்பணம் கட்ட வேண்டும்?

திட்டம், 21 ஆண்டுகளுக்கானது. ஆனால், பணம் கட்டுவது அதிகபட்சமாக 14 ஆண்டுகளுக்குத்தான். அதன்பிறகு பணம் கட்ட வேண்டாம். கட்டவும் முடியாது. கணக்கில் இருக்கிற பணத்துக்கு வட்டியைக் கணக்கிட்டு, முதிர்வுகாலம் வரை கணக்கில் சேர்த்துக்கொண்டே வருவார்கள்.

முதிர்வு எப்போது?

கணக்கு துவங்கியதில் இருந்து 21-ம் ஆண்டுடன் இந்தத் திட்டம் முதிர்வு அடைந்துவிடும். அதன்பிறகும் தொடருவதென்றால் தொடரலாம். கணக்கில் இருக்கிற பணத்துக்கு வட்டி உண்டு.

கணக்குதாரர் விரும்பினாலும், 18 வயதுக்குப் பின் எந்த வயதில் திருமணம் நடந்தாலும், அதன்பின் இந்தத் திட்டத்தில் தொடர முடியாது. முதிர்வுத் தொகை, கணக்குதாரரான பெண்ணிடம்தான் வழங்கப்படும்.

கணக்கு துவங்கி 21 ஆண்டுகள் காத்திருக்காமல் முன்கூட்டியே விலக முடியாதா?

முடியும். ஆனால், விலகுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு.

1. கணக்குதாரருக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். மேலும்,
2. அவருக்கு திருமணம் முடிந்திருக்க வேண்டும்.

அப்படியிருந்து விண்ணப்பித்தால், கணக்கை முடித்து மொத்தப் பணத்தையும் கொடுத்துவிடுவார்கள். கொடுக்கப்படும் தொகை எவ்வளவாக இருந்தாலும் அதற்கு வருமான வரி இல்லை.

இடையில் பணம் தேவைப்பட்டால்?

கணக்கு வைத்திருக்கும் பெண்ணுக்கு 18 வயது ஆன பிறகு, தேவைப்பட்டால் கணக்கில் இருக்கும் பணத்தில் பாதியை பெற முடியும். இந்தத் திட்டத்தில் 50 சதவீதம் பார்ஷியல் வித்டிராயல் அனுமதிக்கப்படுகிறது. இது, அந்தப் பெண்ணின் கல்வி போன்ற செலவுகளுக்கு உதவுவதற்காக.

18 வயதாகும் வரை, முதலீடு செய்த பணத்தை எடுக்கவே முடியாது. அது முழு ‘லாக் இன். 18 வயதுக்குப் பின், பாதிப் பணத்தை எடுக்கலாம். திருமணத்துக்குப் பின் முழுப் பணத்தையும் எடுக்கலாம். பெற்றோர் அல்லது கார்டியன் மிக மோசமான நிதி நெருக்கடியில் இருக்கும்பட்சத்தில், அதற்கென உள்ள தனிப் படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பரிசீலனைக்குப் பின் கணக்கை முடித்து பணம் கொடுப்பார்கள்.

ஒரு பெண் குழந்தைக்கு எத்தனை கணக்குகள் ஆரம்பிக்கலாம்?

ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்குதான் ஆரம்பிக்க முடியும். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர், இரண்டு குழந்தைகளின் பெயரிலும் தனித்தனியே இரண்டு கணக்குகள் துவங்கி சேமிக்கலாம். இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் என்றால் மட்டும், முதல் பிரசவத்தில் பிறந்த பெண்ணுக்கும் சேர்த்து மொத்தம் மூன்று தனித்தனி கணக்குகள் துவக்க அனுமதி உண்டு. முதல் பிரவத்திலேயே மூன்று பெண் குழந்தைகள் என்றாலும், மூன்று கணக்குகளுக்கு அனுமதி தருகிறார்கள். மற்றபடி, ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் பிள்ளைகளுக்குத்தான்.

வாரிசுதாரர் எனும் நாமினேஷன் வசதி இந்தத் திட்டத்தில் இல்லை. கணக்குதாரருக்கு ஏதும் நிகழும்பட்சம், கணக்கை துவங்கிய பெற்றோர் அல்லது கார்டியனிடம் கணக்கு முடித்துக் கொடுக்கப்படும்.

எங்கே, எப்படி இந்தக் கணக்கை துவங்குவது?

குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், கணக்கு துவங்குபவரின் அடையாள அட்டை மற்றும் அவரது முகவரி சான்றிதழ் ஆகியவை போதும். அஞ்சலகங்கள் அல்லது அரசு குறிபிட்டிருக்கும் 28 வங்கிகளில் செல்வ மகள் திட்டக் கணக்கை துவங்கிவிடலாம். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி ஆகியவை அவற்றில் சில.




செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 03, 2015 10:12 pm

என்ன சிவா , குட்டி ஷிவாநிஸ்ரீக்கு , ஒன்னு இந்தியாலே ஆரம்பிக்கவேண்டியது தானே !


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 10:25 pm

T.N.Balasubramanian wrote:என்ன சிவா , குட்டி ஷிவாநிஸ்ரீக்கு , ஒன்னு இந்தியாலே ஆரம்பிக்கவேண்டியது தானே !


ரமணியன்


ஷிவானிக்கு ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்டது ஐயா!
மற்றவர்களும் இந்த சேமிப்பு திட்டத்தை பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என்றுதான் முகநூலிலும், ஈகரையிலும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன்!



செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 03, 2015 10:26 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:என்ன சிவா , குட்டி ஷிவாநிஸ்ரீக்கு , ஒன்னு இந்தியாலே ஆரம்பிக்கவேண்டியது தானே !


ரமணியன்


ஷிவானிக்கு ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்டது ஐயா!
மற்றவர்களும் இந்த சேமிப்பு திட்டத்தை பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என்றுதான் முகநூலிலும், ஈகரையிலும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1128580


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Postgmvkriskumar Sat Apr 04, 2015 11:05 am

எப்படி Intrest Rate Calculate ? 7394



என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 04, 2015 12:36 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:என்ன சிவா , குட்டி ஷிவாநிஸ்ரீக்கு , ஒன்னு இந்தியாலே ஆரம்பிக்கவேண்டியது தானே !


ரமணியன்


ஷிவானிக்கு ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்டது ஐயா!
மற்றவர்களும் இந்த சேமிப்பு திட்டத்தை பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என்றுதான் முகநூலிலும், ஈகரையிலும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1128580


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 04, 2015 1:16 pm

gmvkriskumar wrote:எப்படி Intrest Rate Calculate ? 7394

மாதா மாதம் தானே செலுத்துகிறீர்கள் 12,500 அதனால் தான்.

வருட ஆரம்பத்தில் மொத்தமாக 1,50,000 கட்டினால் வட்டி 13,650 வரும்.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 04, 2015 1:23 pm

உபயோகமான அவசியமான பகிர்வு சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 08, 2015 4:32 pm

செல்வமகள் சேமிப்பு திட்டம்: 11 வயதை கடந்த பெண் குழந்தைகளும் சேரலாம் - அஞ்சல்துறை புதிய அறிவிப்பு

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 11 வயதைக் கடந்தவர்களும் சேரலாம் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

பெண்குழந்தைகளுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தபால்நிலையங்களில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை அஞ்சல் துறை கடந்த ஜனவரி 26-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் சேரலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேரலாம். கணக்குத் தொடங்குவதற்கு ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டும். அதன்பிறகு, ரூ.100-க்கு மேல் விருப்பம் போல் தொகையைச் செலுத்தலாம். ஆண்டுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டும். 21-வயது வரை பணம் செலுத்தியதும், முதிர்ச்சித் தொகை, கூட்டு வட்டியுடன் சேர்த்து கொடுக்கப்படும். இந்தத் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இது குறித்து தமிழக அஞ்சல் வட்டார தலைமை அலுவலகத்தினர் கூறியதாவது:

தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை இத்திட்டத்தில் 6 லட்சத்து 11 ஆயிரத்து 835 பெண் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 2.23 லட்சம் பேர் கணக்கினைத் தொடங்கியுள்ளனர். திருச்சி மண்டலத்தில் 1.72 லட்சம் பேரும், மதுரை மண்டலத்தில் 1.22 லட்சம் பேரும், கோவை மண்டலத்தில் 93 ஆயிரம் பேரும் இத்திட்டத்தின் கீழ் கணக்குத் தொடங்கியுள்ளனர். இதன்மூலம், ரூ.84.55 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

10 வயது என்கிற குறி்ப்பிட்ட வரம்பு காரணமாக, இத்திட்டத்தில் கணக்குத் தொடங்க முடியாத பெண்குழந்தைகளின் பெற் றோரின் வருத்தத்தை உணர முடிகிறது. அதனால், 11 வயதைக் கடந்த பெண் குழந்தைகளையும் இதில் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2003-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைகள் அனைவரும் இத்திட்டத்தில் சேரமுடியும். இந்த சலுகை, வரும் டிசம்பர் 3-ம் தேதி வரை மட்டுமே இருக்கும்.

இத்திட்டத்தின் கீழ் சேர்ந்தி ருக்கும் தொகையில் 50 சதவீதத்தை தேவைப்பட்டால் 18 வயது நிறைவடைந்ததற்குப் பிறகு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பு எடுக்கமுடியாது. ஒரு வேளை பணத்தைத் தொடர்ந்து செலுத்த முடியாவிட்டாலும், அதுவரை கட்டிய பணத்தை 21 வயதுக்குப் பிறகே எடுக்கமுடியும். ஆனால், இடையில் பணம் செலுத்தாத ஆண்டுகளுக்கு தலா ரூ.50 வீதம் அபராதம் செலுத்தவேண்டும். இத்திட்டத்தில் சேர, வயதுச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், அடையாளச் சான்று ஆகியவை அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதில் சேருவதற்கு, ரூ.1000 இல்லையென வருத்தப்படு வோருக்கு வேறு வழியைத் தபால் துறை காட்டுகிறது. இதன்மூலம் ரூ.50 செலுத்தி, அஞ்சலக சேமிப்புக்கணக்கைத் தொடங்க வேண்டும். அதில், கொஞ்சம், கொஞ்சமாக பணம் செலுத்தி ரூ.ஆயிரம் சேர்ந்ததும், அதைக் கொண்டு செல்வமகள் திட்டத்தில் கணக்குத் தொடங்கலாம்.




செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 08, 2015 4:37 pm

யினியவன் wrote:
gmvkriskumar wrote:எப்படி Intrest Rate Calculate ? 7394

மாதா மாதம் தானே செலுத்துகிறீர்கள் 12,500 அதனால் தான்.

வருட ஆரம்பத்தில் மொத்தமாக 1,50,000 கட்டினால் வட்டி 13,650 வரும்.

ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ₹ 12,500 தான் செலுத்த முடியும் தல!



செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 15, 2015 9:27 pm

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: தமிழகத்தில் 6.11 லட்சம் கணக்குகள் தொடக்கம்

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 6.11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மண்டல அஞ்சல் துறை அதிகாரி மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இந்திய பெண்கள் சேமிப்பு தின விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 300 பெண்களுக்கு அஞ்சலக சிறு சேமிப்பு கணக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. சீசா தொண்டு நிறுவனத்தின் மூலம் மதுரவாயல் அஞ்சல் நிலையத்தில் இந்தக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை நகர மண்டல அஞ்சல் துறை அதிகாரி மெர்வின் அலெக்ஸாண்டர், சீசா தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேனியல் ஆகியோர் கணக்குப் புத்தகங்களை பெண்களுக்கு வழங்கினர்.

விழாவில் மெர்வின் அலெக்ஸாண்டர் பேசியதாவது:

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை தமிழகத்தில் 6 லட்சத்து11 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை வட்டாரத்தில் மட்டும் 2 லட்சத்து 23 ஆயிரம் கணக்குகள் மூலம் ரூ.90 கோடி திரட்டப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தாம்பரம் டிவிஷனில் 52 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் 9.1 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இலக்கைத் தாண்டி அதிக கணக்குகளைத் தொடங்கியதற்காக தமிழக அஞ்சல் துறைக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அலெக்ஸாண்டர் கூறினார்.



செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக