புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_m10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10 
423 Posts - 74%
heezulia
கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_m10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_m10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_m10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_m10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10 
8 Posts - 1%
prajai
கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_m10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_m10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10 
6 Posts - 1%
kaysudha
கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_m10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_m10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10 
4 Posts - 1%
sram_1977
கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_m10கோடை கால அழகு குறிப்புகள் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை கால அழகு குறிப்புகள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 2:18 pm

கோடை கால அழகு குறிப்புகள் ! RwgmyYJgQRacps8wajQh+images

உதடுகளில் உள்ள வெடிப்புகளை போக்க:

படுப்பதற்கு முன்பு பாலேட்டை சிறிதளவு எடுத்து உதட்டில் தடவ வேண்டும். அப்படியே மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் காய்ந்த நிலையில் இருக்கும் பாலேட்டை சிறிதளவு காட்டனில் பன்னீரை நனைத்து துடைக்கவும். பீட்ரூட் காய்களை நறுக்கும்போது அதன் தோலை நாம் நீக்குவோம். அந்த தோலை உதட்டில் தேய்த்தால் நாளடைவில் உதட்டில் உள்ள வெடிப்பு நீங்கி ரோஜா இதழ்கள் போல் நிறம் மாறி உதடுகள் மென்மையாக காணப்படும்.

வறண்ட சருமத்தை போக்க :

அதிகமாய் வறண்டு போன சருமத்துக்கு தேன் கலந்த முக பேக் நல்லது. இரண்டு ஸ்பூன் தேனில் சிறிதளவு முல்தானிமெட்டி பவுடர் போட்டு நன்றாக பேஸ்ட் போல் குழைத்துவிடவும். இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். படுப்பதற்கு முன்பு வாஸ்லின் அல்லது வெதுவெதுப்பான தேங்காய்ப்பால் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வறண்ட சருமம் நீங்கி முகம் மென்மையாக மாறும்.

கால்களில் உள்ள வெடிப்புகள் நீங்க :

காலில் பித்த வெடிப்பு இருந்தால் எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் காலை வைத்தால் பித்த வெடிப்பு, கால் வலி நீங்கிவிடும்.அல்லது வெதுவெதுப்பான நீரில் தேங்காய்ப்பால் சிறிதளவு, ரோஜா இதழ்கள், ரோஸ் வாட்டர், உப்பு, ஆகியவற்றை கலந்து அதில் கால்களை முழங்கால் வரை விட்டு 15 நிமிடம் ஊறவிடவும். பின்னர் குளிர்ந்த நீர்க்கட்டி (ஐஸ் ஸ்கியூப்) கொண்டு பாதத்திலிருந்து முழங்கால் வரை மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்வதால் நாளடைவில் வெடிப்பு நீங்கி பூ போன்ற பாதங்களாக மாறும்.

.........................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 2:18 pm

கோடை கால அழகு குறிப்புகள் ! DjsoiMKTLqEbjt3YovlQ+ld2348

சருமம்

3 வகையானது. உலர்ந்த சருமம், எண்ணெய் பசை சருமம், சாதாரண சருமம் என்று உள்ளது. இதில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு கோடை காலம் மேலும் எண்ணெய் பசையை அதிகரிக்க செய்யும். இதனால் முக அழகு கெடும். எண்ணெய் பசை நீங்க இயற்கை மருத்துவ குறிப்புகள் ஏராளமாக நடைமுறையில் உள்ளது.

அவை பின்வருமாறு:

எண்ணெய் பசை சருமத்தினர் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர் கடலைமாவு, எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிதுநேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும். வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம்.

வெள்ளரிச்சாற்றுடன் பால் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும். தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஒட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம். பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

எண்ணெய் பசை சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால் எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும். மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது மிக நல்லது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 2:23 pm

கொளுத்தும் கேடை வெயிலில் இருந்து தப்பிக்க என்ன வெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. வெயிலில் இருந்து பாதுகாக்கா விட்டால் வியர்வை, வேர்க்குரு, எண்ணெய் பிசுபிசுப்பு, முகப்பரு, வறண்ட சருமம் என்று பளிங்கு போன்ற சருமத்தையும் சம்மர் பாழாக்கி விடும். இப்படிப்பட்ட சம்மரிலும் நீங்கள் அழகாக ஜொலிக்க சம்மர் பியூட்டி டிப்ஸ் தருகிறார் அழகுக்கலை நிபுணர் மஹா

கேடைக்காலங்களில் சிலருக்கு முகம் வறண்டு காணப்படும். அதற்கு பாலேடு சேர்த்து சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊறிய பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படிச் செய்தால், முகம் ஈரப்பதமாகவும், வழுவழுப்பாகவும் மாறும். ஆனால் முகப்பரு உள்ளவர்கள் பாலேடு உபயோகப்படுத்தக் கூடாது.

வெயில் காலங்களில் சிலர் அருகில் வந்தாலே வியர்வை வாடை தாங்காது. வியர்வை அதிகமாக உள்ள பெண்கள் சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து உடம்பில் பூசி வந்தால் வாடை குறையும்.

வெயிலாலும், கவரிங் நகைகளை அணிவதாலும் சிலருக்கு கழுத்து மட்டும் கறுத்து காணப்படும். இதற்கு கோதுமை, ஓட்ஸ், பாசிப்பயிறு மாவு மூன்றையும் பாலுடன் கலந்து கழுத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் கழுவி வந்தால் கறுமை படிப்படியாக மறைந்துவிடும்.

வேர்க்குரு பிரச்னையுள்ளவர்கள், நீரில் சிறிது சந்தனம் கரைத்து வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி வந்தால் வேர்க்குரு மறைந்து போகும். கோடைக்காலத்தில் சருமம் கருத்துப் போனால், இரவில் கசகசாவை பாலில் ஊறவைத்து அதைக் காலையில் அரைத்து உடம்பில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பின்னர் குளித்து வந்தால் சருமம் நிறமாகவும், பள பளப்பாகவும் மாறும்.

பப்பாளிப் பழத்தை நன்றாக மசித்து அதை முகத்தில் பூசிவர, முகத்திலுள்ள இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளபளப்பாகும். வெள்ளரிப் பிஞ்சு மற்றும் உருளைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி கண்ணின் மேல் வைத்தால் இந்த கொளுத்தும் வெயிலில் கண்களுக்கும் குளிர்ச்சி. தவிர நாட்பட்ட கறு வளையம் நீங்கிவிடும்.

தர்ப்பூசணியின் அடிப்பகுதியை முகம், உடம்பு, கை, கால்கள் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர சம்மரில் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து புதுப்பொலிவு உண்டாகும். வெயில்ல இருந்து உங்க சருமத்தை நீங்க தான் பத்திரமா பாத்துகணும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 2:25 pm

வியர்வை அதிகமிருக்கும் என்பதால் வாரம் 3 முறை கூந்தலை தரமான ஷாம்பு கொண்டு அலச வேண்டும். வியர்வை சேர்ந்தால் மண்டையின் துவாரங்கள் அடைபட்டு முடி உதிரும். கூந்தல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வெயிலில் வெளியே செல்லும் போது தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டாம். எண்ணெய் வைத்தால் தான் முடி படியும் என்பதால் சிலர் எண்ணெய் இல்லாமல் வெளியே செல்ல மாட்டார்கள். எண்ணெய் வைத்தால் சிறிது நேரத்தில் தலையை அலசி விட வேண்டும். அல்லது முதல் நாள் இரவு வைத்து காலையில் தலையை அலச வேண்டும்.

வெளியே செல்லும் போது முடிபறக்காமலிருக்க ஸ்டைலிங்க் பொருட்களையோ, கண்டிஷனரையோ உபயோகிக்கலாம். எண்ணெயுடன் வெளியே செல்லும் போது அழுக்கும், தூசியும் அதிகம் சேர்ந்து பொடுகு முடி உதிர்வெல்லாம் வரலாம். சிறிதளவு தயிரில் முதல் நாள் இரவே கொஞ்சம் வெந்தயத்தை ஊறவைக்கவும். காலையில் அதை பேஸ்ட் போல அரைத்து தலை முழுக்க தடவி சிறிது நேரம் ஊறி அலசலாம். இது உச்சி முதல் பாதம் வரை உடலைக் குளுமையாக்குவதுடன் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் உதவும்.சிலருக்கு இந்த நாள்களில் பொடுகு வரும். எண்ணெய்யில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம்.

ஆரம்ப நிலை பொடுகுக்கு இது உதவும். செம்பருத்தி இலையை அரைத்து தயிர் சேர்த்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் உடலுக்கும் குளிர்ச்சி, கூந்தலும் மிருதுவாகும். தேங்காயை அரைத்து பாலெடுத்து தலை முழுக்க தடவி சிறிது நேரம் ஊறிக் குளிப்பது குளிர்ச்சியை தரும்.

கூந்தலையும் கண்டிஷன் செய்யும். சருமத்தை போலவே கூந்தலுக்கும் வெயிலில் இருந்து பாதுகாப்பு அவசியம். எனயே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பியோ, துணியோ அணியவும். அல்லது குடை எடுத்துச் செல்லவும். வெயிலுக்கேற்றபடி கூந்தலை குட்டையாக வெட்டிக்கொள்ளவும். போனி டெயிலே, உச்சந் தலை கொண்டையோ போட்டுக் கொள்ளலாம்

கூந்தலுக்கு...

சிலருக்கு இந்த நாள்களில் பொடுகு வரும். எண்ணெய்யில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம். ஆரம்ப நிலை பொடுகுக்கு இது உதவும். செம்பருத்தி இலையை அரைத்து தயிர் சேர்த்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் உடலுக்கும் குளிர்ச்சி, கூந்தலும் மிருதுவாகும்.

தேங்காயை அரைத்து பாலெடுத்து தலை முழுக்க தடவி சிறிது நேரம் ஊறிக் குளிப்பது குளிர்ச்சியை தரும். கூந்தலையும் கண்டிஷன் செய்யும். சருமத்தை போலவே கூந்தலுக்கும் வெயிலில் இருந்து பாதுகாப்பு அவசியம். எனயே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பியோ, துணியோ அணியவும். அல்லது குடை எடுத்துச் செல்லவும். வெயிலுக்கேற்றபடி கூந்தலை குட்டையாக வெட்டிக்கொள்ளவும். போனி டெயிலே, உச்சந் தலை கொண்டையோ போட்டுக் கொள்ளலாம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 2:26 pm

நம் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும், சருமத்தை அழகூட்டவும் தானிய வகைகளை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

கடலைப்பருப்பு

கடலைப்பருப்பும் இதிலிருந்து மாவாகும் கடலை மாவும் சமையலறையில் அதிகமாகப் பயன்படுத்தக்கூடியது. ஆபத்தபாந்தவன் மாதிரி அநேக சந்தர்ப்பங்களில் கை கொடுக்கக் கூடியது இந்த கடலை மாவு தான்.

இது உணவுப் பொருளாக மட்டுமல்லாது, சிறந்த அழகு சாதானமாகவும் கருதப்படுகிறது. எளிய, செலவில்லாத முகத்திற்குப் போடக் கூடிய பேக், கடலை மாவுதான். இது தோலை இறுக்கச் செய்யும். இறந்த செல்களை அகற்றக்கூடியது.

நல்ல நிறமாக வர வேண்டுமென்பவர்கள் கடலை மாவை உபயோகித்தால் சருமம் பளிச்சென்று இருக்கும்.

கடலை மாவு ஒரு சிலருக்கு அலர்ஜியாவதுண்டு. அவர்கள் கடலை மாவுடன், பன்னீர், தேன், பால் தயிர், இவைகளில் ஏதாவது ஒன்றை சிறிதளவு கலந்து முகத்தில் பேக்காகப் போடலாம். (அவரவர் சரும வகைக்குத் தகுந்த மாதிரி ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்)

பச்சைப் பயறு

பொதுவாகவே எல்லோருடைய சருமத்திற்கும் பொருந்தக் கூடிய தானிய வகை பச்சைப் பயறு. இது பித்தத்தைப் போக்கக் கூடியது. புரதச் சத்து அதிகமாக இருக்கும். இதில் ஒட்டும் தன்மை (பசைத் தன்மை) அதிகம்.

நமது சருமம் புரதத்தால் ஆனது. உணவாகச் சாப்பிடும் போதும் புரதம் நமக்குத் தேவையான ஒன்று. அதே சமயம் புரதத்தை வெளிப் புறத்தில் கொடுக்கும் பொழுது, சருமம் மென்மையாக மாறுகிறது. முளை கட்டின பச்சைப் பயறில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.

பயத்தம் மாவுடன் பால், தேன், பன்னீர் கலந்து சருமத்திற்குச் பூச உபயோகப்படுத்தலாம். அல்லது வெள்ளரிச்சாற்றை பயத்ம் மாவுடன் கலந்து பேக்காகப் பயன்படுத்தலாம்.

எண்ணெய் குளியல் எடுக்கும்பொழுது சிலருக்கு சிகைக்காய் தேயத்துக் குளிப்பது, அலர்ஜியாக இருக்கும். கண் எரிச்சலைக் கொடுக்கும். அவர்களும்

சரி, சிறு குழந்தைகளுக்கு எண்ணெய் குளியலின் போது சரி பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கலாம்.

உலர்ந்த சரும வகைக்கு பால் ஏடுடன் பயத்தம் மாவையும், எண்ணெய் சருமத்திற்கு பயத்தம் மாவுடன் ஆரஞ்சு சாற்றையும் கலந்து உபயோகப்படுத்தலாம். இதைத் தவிர வெள்ளரிச்சாறு, பன்னீர், இளநீர் இவைகளில் ஏதாவதொன்றைச் சேர்ப்பது சருமத்திற்கு எந்தவித தீங்கும் செய்யாது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக