புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - ஏப்ரல்

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 8:41 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 7LF6qygTRqn45j6ygWw6+11

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 03, 2015 10:31 am

இன்று-

உலக பத்திரிகை சுதந்திர நாள்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Apr 03, 2015 10:37 am

விமந்தனி அவர்களே நன்று ! நன்று !

வரலாற்று உண்மைகள்
நாம் வாங்கிவந்த நன்மைகள் !
வாங்கிவந்த நன்மைகளை
நாம் வாடாது காத்திடுவோம் !
சொல்லிவந்த நன்மைகளை
நாம் சுணங்காது படித்திடுவோம் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 10, 2015 9:39 pm

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 LfxXUN5RIyGYdG9CIlRq+April-4

1581 - உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

1814 - நெப்போலியன் முதற்தடவையாக முடி துறந்து தனது மகன் இரண்டாம் நெப்போலியனை அரசனாக அறிவித்தார்.

1841 - அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் ஹென்றி ஹாரிசன் நுரையீரல் அழற்சியினால் காலமானார். பதவியில் இருக்கும் போது இறந்த முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் இவராவார்.

1850 - இங்கிலாந்தின் கொட்டன்ஹாம் என்ற ஊரின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.

1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள் ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்கு விஜயம் செய்தார்.

1866 - உருசியாவின் இரண்டாம் அலெக்சாண்டர் கீவ் நகரில் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பித்தார்.

1905 - இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1925 - செருமனியில் எஸ்எஸ் காவல்படை என அழைக்கப்படும் சுத்ஸ்டாப்பெல் அமைக்கப்பட்டது.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஆங்கிலோ-அமெரிகப் படையினரால் புக்கரெஸ்ட் நகர் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்கலில் குறைந்தது 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் ஹங்கேரியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

1949 - பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.

1960 - செனிகல், மற்றும் பிரெஞ்சு சூடானை உள்ளடக்கிய மாலி கூட்டமைப்புக்கு விடுதலை தர பிரான்சு ஒப்புக் கொண்டது.

1968 - அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் டென்னிசி மாநிலத்தில் மெம்பிசு நகரில் படுகொலை செய்யப்பட்டார்.

1968 - அப்பல்லோ 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1969 - டெண்டன் கூலி என்பவர் உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.

1973 - உலக வர்த்தக மையம் நியூயோர்க் நகரில் நிறுவப்பட்டது.

1975 - மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், பவுல் ஆல்லென் ஆகியோரின் கூட்டில் ஆல்புகெர்க்கியில் தொடங்கப்பட்டது.

1975 - வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அனாதைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 172 பேர் கொல்லப்பட்டனர்.

1976 - இளவரசர் நொரடோம் சீயனூக் கம்போடியாவின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார். இவர் பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

1979 - பாகிஸ்தானின் முன்னாள் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.

1983 - சலேஞ்சர் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.

1984 - அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன் வேதியியல் ஆயுதங்களைத் தடை செய்யும் கோரிக்கையை
முன்வைத்தார்.

1999 - பாப்பரசரின் வேண்டுகோளையும் புறக்கணித்து நேட்டோ வான்படைகள் உயிர்த்த ஞாயிறு நாளன்று முன்னாள் யூகொஸ்லாவியா மீது குண்டுகளை வீசின.

2002 - அங்கோலாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அங்கோலா அரசும் யுனிட்டா போராளிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 10, 2015 9:40 pm

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 ZcYUzpSaSbCe8Vtkh2RP+April-5

1614 - வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடி போக்கஹொண்டாஸ் ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.

1654 - ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது.

1722 - டச்சு மாலுமி ஜேக்கப் ரோகவீன் ஈஸ்டர் தீவைக் கண்டுபிடித்தார்.

1792 - அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

1804 - முதற்தடவையாக விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.

1818 - ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெர்னார்டோ ஓ'ஹிகின்சு தலைமையில் சிலியின் விடுதலை இயக்கம் வெற்றி கண்டது. 2,000 எசுப்பானியர்களும், 1000 சிலியர்களும் உயிரிழந்தனர்.

1879 - பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது.

1897 - கிரேக்கத்துக்கும் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.

1930 - மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார்.

1932 - பின்லாந்தில் மதுவிலக்கு கொள்கை முடிவுக்கு வந்தது.

1936 - மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் கொல்லப்பட்டனர்.

1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் மூழ்கின.

1944 - இரண்டாம் உலகப் போர்: கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் ஜெர்மனியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1945 - பனிப்போர்: யுகோசுலாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.

1946 - 11 மாதங்கள் ஆக்கிரமிப்பின் பின்னர் சோவியத் படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டு விலகின.

1949 - அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்ததில் 77 பேர் கொல்லப்பட்டனர்.

1955 - ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸ்டன் சேர்ச்சில் விலகினார்.

1956 - பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபருடன் போரை அறிவித்தார்.

1956 - இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன வெற்றி பெற்றது.

1957 - இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.

1964 - பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.

1971 - இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் தென் பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1976 - மக்கள் சீனக் குடியரசில் தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது.

1981 - தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

1998 - அகாசி கைக்ஜோ, உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், சப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 10, 2015 9:41 pm

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 RTAIFMfTNONo0d5JFIAa+April-6

கிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.

1782 - தாய்லாந்து மன்னன் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டான். முதலாம் ராமா மன்னனாக முடி சூடினான்.

1814 - நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.

1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்ட் நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கூட்டமைப்பின் இராணுவத்தினர் தமது கடைசிச் சமரை வடக்கு வேர்ஜீனியாவில் நடத்தினர்.

1869 - செலுலோயிட் கண்டுபிடிக்கப்பட்டது.

1896 - 1,500 ஆண்டுகளாக ரோம் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.

1917 - முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது.

1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.

1936 - ஐக்கிய அமெரிக்கா, ஜோர்ஜியாவில் சுழற்காற்று தாக்கியதில் 203 பேர் கொல்லப்பட்டனர்.

1941 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியா மற்றும் கிரேக்கத்தை ஜெர்மனி முற்றுகையிட்டது.

1965 - "ஏளி பேட்" (Early Bird) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.

1968 - இண்டியானா மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர்.

1973 - பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1994 - ருவாண்டா மற்றும் புருண்டி அதிபர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டாவில் இனப்படுகொலைகள் ஆரம்பமானது.

1998 - இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்தது.

2005 - குர்தியத் தலைவர் ஜலால் தலபானி ஈராக் அதிபரானார்.

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 10, 2015 9:41 pm

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 XxfmiF9MRoezpes7dX3e+April-7

1521 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.

1541 - பிரான்சிஸ் சேவியர் போர்த்துக்கீச இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார்.

1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது.

1827 - ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.

1906 - வேசுவியஸ் மலை தீக்கக்கியதில் நேப்பில்சில் பலத்த சேதம் ஏற்பட்டது.

1906 - ஸ்பெயின், மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.

1927 - முதலாவது தொலை தூர தொலைக்காட்சி சேவை வாஷிங்டன் டிசி, நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் இடம்பெற்றது.

1928 - வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.

1939 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது.

1942 - இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது.

1943 - யூதப் படுகொலைகள்: உக்ரேனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாசிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: உலகின் மிகப்பெரும் போர்க்கப்பலான ஜப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.

1946 - பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.

1948 - உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.

1948 - சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் கொல்லப்பட்டனர்.

1963 - யூகோஸ்லாவியா சோசலிசக் குடியரசாகியது. மார்ஷல் டீட்டோ அதிபரானார்.

1964 - ஐபிஎம் தனது System/360 ஐ அறிவித்தது.

1978 - யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல் துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல் துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

1978 - நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா கைவிட்டது.

1983 - ஸ்ரோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் மீள் விண்ணோடத்தில் இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.

1989 - கொம்சொமோலெட்ஸ் என்ற சோவியத் நீர்மூழ்கிக் கப்பல் நோர்வேயில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

1992 - ஸ்ருப்ஸ்கா குடியரசு விடுதலையை அறிவித்தது.

1994 - ருவாண்டாவின் கிகாலியில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.

2001 - மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது.

2003 - அமெரிக்கப் படைகள் பக்தாத் நகரைக் கைப்பற்றினர். சதாம் உசேனின் அரசு இரு நாட்களின் பின்னர் வீழ்ந்தது.

2007 - தமிழ்நாட்டில் சென்டூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டுசெல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 10, 2015 9:44 pm

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 FgPzhoSZQnC6hcIkAK5X+April-8

217 - ரோம் பேரரசின் மன்னன் கரகல்லா படுகொலை செய்யப்பட்டான்.

1767 - தாய்லாந்தின் அயுத்தயா இராச்சியம் பர்மியரிடம் வீழ்ந்தது.

1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டான்.

1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானாவில் மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் கூட்டமைப்பு படைகள் கூட்டுப் படைகளை தோற்கடித்தன.

1866 - ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிராக இத்தாலியும் புரூசியாவும் அணி திரண்டன.

1867 - முதலாவது எக்ஸ்போ கண்காட்சி பாரிசு நகரில் ஆரம்பமானது.

1919 - பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி டில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

1929 - டில்லி நடுவண் அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பத்துகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.

1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் பிலிப்பீன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர்.

1950 - இந்தியாவும் பாக்கித்தானும் லியாக்கத்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1957 - எகிப்தில் சூயஸ் கால்வாய் மீளத்திறக்கப்பட்டது.

1973 - சைப்பிரசில் 32 குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.

1985 - போபால் பேரழிவு: போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது.

2000 - அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

2004 - சூடான் அரசுக்கும் இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 10, 2015 9:46 pm

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 AWVnYmRSEKobHptaUAc1+April-9

1241 - மங்கோலியப் படைகள் போலந்து மற்றும் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர்.

1413 - ஐந்தாம் ஹென்றி இங்கிலாந்து மன்னனாக மூடிசூடினான்.

1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரொபேர்ட் லீ தனது 26,765 பேருடனான படைகளுடன் வேர்ஜீனியாவில் சரணடைந்ததில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: நோர்வே, மற்றும் டென்மார்க் மீது ஜெர்மனி தாக்குதலைத் தொடுத்தது.

1947 - டெக்சாஸ், ஒக்லகோமா, மற்றும் கன்சாஸ் மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் கொல்லப்பட்டனர். 970 பேர் காயமடைந்தனர்.

1948 - ஜெருசலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிராமத்தில் 120 அரபு மக்கள் இஸ்ரேலியரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1953 - வார்னர் பிறதேர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான "ஹவுஸ் ஒவ் வக்ஸ்" (House of Wax) இனை வெளியிட்டது

1959 - மேர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது.

1967 - முதல் போயிங் 737 பறப்பு.

1984 - யாழ்ப்பாணம் அடைக்கல மாதா கோயில் இராணுவத்தினரின் றொக்கட் தாக்குதலுக்கு உள்ளானது.

1984 - ஸ்ரீ லங்கா கஜபா றெஜிமென்ட் இராண்வ வண்டி மீது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் விடுதலைப்
புலிகளால் நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.

1991 - ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.

1992 - முன்னாள் பனாமா அதிபர் மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் சமஷ்டி நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது.

1999 - நைஜர் அதிபர் இப்ராகிம் மைனசாரா படுகொலை செய்யப்பட்டார்.

2003 - ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 10, 2015 9:56 pm

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 X8Z2BBiKRUms58qYVq4m+April-10

1658 - ஊர்காவற்துறைக் கோட்டை டச்சுக்காரரினால் கைப்பற்றப்பட்டது.

1710 - காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.

1741 - புரூசியா ஆஸ்திரியாவை மோல்விட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வெற்றி கண்டது.

1790 - ஐக்கிய அமெரிக்காவில் காப்புரிமம் (Patent) பற்றிய விதிகள் எழுதப்பட்டன.

1815 - இந்தோனீசியாவில் டம்போரா மலை தீக்கக்கியதில் பல தீவுகள் அழிந்தன. 71,000 பேர் கொல்லப்பட்டனர்.

1821 - கொன்ஸ்டண்டீனோபோலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி துருக்கியர்களினால் தூக்கிலிடப்பட்டார்.

1826 - துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.

1848 - இங்கிலாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.

1864 - முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னனாக முடி சூடினான்.

1868 - அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய மற்றும் இந்தியக் கூட்டுப் படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய/
பிரித்தானியப் படையினரில் இருவர் மாட்டுமே கொல்லப்பட்டனர்.

1869 - கியூபாவில் கியூபா புரட்சிக் கட்சி ஜொசே மார்ட்டீயினால் தொடங்கப்பட்டது.

1912 - டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.

1919 - மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1963 - ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் காணாமல் போனது.

1972 - வியட்நாம் போர்: அமெரிக்க விமானங்கள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின.

1979 - டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

1984 - ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

1985 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

1991 - இத்தாலியின் மொபி பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140 பேர் கொல்லப்பட்டனர்.

1992 - லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.

1998 - அயர்லாந்து குடியரசுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த பெல்பாஸ்ட் உடன்பாடு எட்டப்பட்டது.

2002 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.

2006 - இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 10, 2015 9:58 pm

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 HBkYPJVQD6IZHIU6bAOD+April-11

1079 - போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்டானிஸ்லாஸ் தூக்கிலிடப்பட்டார்.

1831 - உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.

1865 - ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார்.

1899 - ஸ்பெயின் புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தது.

1905 - ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.

1921 - விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.

1955 - ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலாளர்கள்
உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

1957 - பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது.

1965 - ஐக்கிய அமெரிக்காவில் ஆறு மத்திய மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 256 பேர் கொல்லப்பட்டனர்.

1970 - அப்போலோ 13 ஏவப்பட்டது.

1979 - தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.

1981 - தெற்கு லண்டனில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர்.

1987 - இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் லண்டனில் கைச்சாத்தானது.

2002 - வெனிசுவேலாவில் அதிபர் ஹியூகோ சாவெஸ் இற்கெதிராக இராணுவப் புராட்சி இடம்பெற்றது.

2007 - அல்ஜீரியாவின் தாலைநகர் அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33 பேர் கொல்லப்பட்டு 222 பேர் காயமுற்றனர்.

2012 - இந்தோனேசியாவில் சுமாத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஏப்ரல் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக