புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்... திறக்கிறது மத்திய அரசு! Poll_c10நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்... திறக்கிறது மத்திய அரசு! Poll_m10நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்... திறக்கிறது மத்திய அரசு! Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்... திறக்கிறது மத்திய அரசு! Poll_c10நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்... திறக்கிறது மத்திய அரசு! Poll_m10நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்... திறக்கிறது மத்திய அரசு! Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்... திறக்கிறது மத்திய அரசு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 27, 2015 5:34 pm

நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்... திறக்கிறது மத்திய அரசு! Central%20minister%201மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 3 ஆயிரம் மலிவு விலை மருந்தகங்கள்  திறக்கப்பட உள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் கூறியுள்ளார்.

ஆந்திரம் மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களுக்குப்  பேட்டியளித்த அமைச்சர் ஹன்ஸ்ராஜ்,
" ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில், வெளிச்சந்தை விலையை வைத்து ஒப்பிட்டுப்பார்க்கையில் 20-30 சதவீத விலையில் மருந்து, மாத்திரைகளை விற்கும் ’ஜன் ஔஷாதி’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.

இந்த திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகள் , வட்டார அளவிலான சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் போன்றவற்றில் இனம் சார்ந்த பொது மருந்துகளை  விற்பனை விலையில் 20-30 சதவீத விலைக்கு  விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் அறிமுகப்படுத்தவுள்ள இந்த திட்டத்தின் முதல்கட்டமாக நாடு முழுவதும் 3 ஆயிரம் ’ஜன் ஔஷாதி’ மருந்துக்கடைகள் தொடங்கப்படும். படிப்படியாக இந்த எண்ணிக்கையை அதிகரித்து, வரும் 5 ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் கடைகள் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மலிவு விலை மருந்தகங்களை தொடங்குவதற்கு மருந்தாளுநர் பட்டயம், பட்டம் மற்றும் முதுகலைப்பட்டம் பெற்றவர்களுக்கும், நல்ல பின்னணி கொண்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இந்தக்  கடைகளுக்கு தேவையான கம்ப்யூட்டர் மற்றும் ’ஷோ-கேஸ்’ வாங்குவதற்கு ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் சார்பில் இரண்டு முதல் இரண்டரை லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்"  என்று அவர் கூறினார்.

நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்... திறக்கிறது மத்திய அரசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 27, 2015 6:16 pm

அம்மா, அய்யா கவனிக்க - இதற்கு மோடியின் பெயரோ அல்லது அவரின் குடும்பத்தாரின் பெயரோ வெக்கல

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 27, 2015 8:17 pm

மிக நல்ல பயனுள்ள மக்களுக்கான திட்டம். நன்றியுடன் வரவேற்கலாம். பதிவிற்கு நன்றி அன்பரே.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Mar 28, 2015 4:28 pm

நல்ல வரவேற்க வேண்டிய திட்டம்...........

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்... திறக்கிறது மத்திய அரசு! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 28, 2015 5:32 pm

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஜூலை மாதம் முதல் "ஜன ஒளஷதம்' (மக்கள் மருந்து) என்ற வணிக முத்திரையுடன் மூலக்கூறு மருந்துகள் (GENERIC MEDICINE) குறைந்த விலையில் கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை, மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் தற்போது நிலவும் நோய்க்கு மாமருந்தாக இருக்கும்.

இந்த ஜன ஒளஷதம், 504 மூலக்கூறு மருந்துகளில் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதில் நோய் எதிர்ப்பு மாத்திரைகள், வலி நிவாரணிகள், ஊட்டச்சத்து மாத்திரைகள்; இருதயம், நுரையீரல், வயிறு தொடர்பான நோய்களுக்கான மருந்துகள், சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் ஆகியவையும் அடங்கும்.

நோயாளிகளுக்கான மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள், மாத்திரைகளின் மூலக்கூறு பெயர்களை மட்டுமே எழுத வேண்டும் என்றும், பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் வணிக முத்திரை மருந்துகளின் (BRANDED MEDICINE) பெயர்களை எழுதக்கூடாது என்றும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடைமுறையை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமே கடைப்பிடிக்கின்றனர்.

அதே மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்போது, தனியார் வணிக முத்திரை மருந்துகளின் பெயர்களையே எழுதும் நிலை உள்ளது. மருத்துவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை அல்லது ஆலோசனை வழங்கினாலும் மூலக்கூறு மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடுமானால், இந்த ஜன ஒளஷதம் மூலம் மக்கள் பெருமளவு பயனடைவார்கள்.

1980-களில் ரூ.1,500 கோடியாக இருந்த இந்திய மருந்து தயாரிப்புத் தொழில், 2012-ஆம் ஆண்டு இறுதியில் ரூ.1,19,000 கோடி மதிப்புள்ள தொழில்துறையாக வளர்ந்துள்ளது. அந்த அளவுக்கு நோய்களும் பெருகியுள்ளன. விழிப்புணர்வும் பெருகியுள்ளது.

தற்போது நடைமுறையில், சுமார் 300 மருந்துகள் அட்டவணைப் பட்டியலில் உள்ளன. இந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அரசு நிர்ணயிக்கும் விலையில்தான் அவற்றை விற்க வேண்டும். இந்த மருந்துகளை மிகக் குறைந்த அளவிலேயே மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. இதன்மூலம் சந்தையில் மருந்துத் தட்டுப்பாட்டை உருவாக்குகின்றன. அட்டவணையில் உள்ள மூலக்கூறு மருந்துகளுடன் சில வைட்டமின்களை சேர்த்து வணிக முத்திரையுடன் சந்தையில் விற்கின்றன. இந்த மாத்திரைகளின் விலையை மருந்து நிறுவனங்கள் தாங்களாகவே நிர்ணயித்துக்கொள்ள முடியும். ஆகவேதான் 300 மடங்குவரை கூடுதல் விலை நிர்ணயித்து விற்பதிலும், இவற்றைப் பரிந்துரை செய்ய மருத்துவர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதிலும் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இதனால்தான் மூலக்கூறு மருந்துகள் பலவும் சாமானியனின் வாங்கும் சக்தியை மீறியதாக இருக்கின்றன.

சில உயிர்காப்பு மருந்துகளின் விலையை நிர்ணயிக்க முடியாதபோதிலும், அதனைக் கட்டுப்படுத்தும் பணியில் அரசு ஈடுபடுகிறது. ஆனாலும், காப்புரிமைப் பிரச்னைகளால் இத்தகைய முயற்சிகள் வெற்றி பெறுவது கடினமாக உள்ளது.

ஜன ஒளஷதம் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டுமானால், அரசு மருந்தகங்கள் மட்டுமின்றி, தனியார் கடைகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்தப் பணியில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரிமா, ரோட்டரி சங்கங்கள், மாநில அரசுகள் ஈடுபடலாம். இவற்றுக்கு விலைக் கழிவு உண்டு என்று ஜன ஒளஷதம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதைச் சில்லறை மருந்து விற்பனையாளர்களுக்குப் புரிய வைத்தாக வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை அம்மா மருந்தகங்கள் பல இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றை விரிவுபடுத்துவது, அல்லது முகவர்களை நியமித்து அம்மா மருந்தகத்தின் கொள்கைப்படி குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்வது மிக எளிது. இருப்பினும், தற்போது அம்மா மருந்தகங்களில் வணிக முத்திரை மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன. ஜன ஒளஷதம் மருந்து, மாத்திரைகள் மூலக்கூறு அடிப்படையில் கிடைக்கும்போது, அவற்றை அம்மா மருந்தகங்கள் விற்பனை செய்ய முற்பட்டால், மக்களுக்கு உண்மையிலேயே குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் கிடைக்கும்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் மூலக்கூறு மருந்துகள் எழுதித் தரப்படுகின்றன என்ற போதிலும், வெளியிடங்களிலும் பெருநிறுவன மருத்துவக்கூடங்களிலும் அத்தகைய சூழ்நிலை இல்லை. தமிழ்நாட்டில் மருத்துவ ஆலோசனை வழங்கும் அனைத்து மருத்துவர்களும் மூலக்கூறு மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டால், இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் மாத்திரை, மருந்துகள் கிடைக்கும் முதல் மாநிலமாக தமிழகம் திகழும்.

தமிழ்நாட்டில் ஒருசில கூட்டுறவு அங்காடிகளில் மருந்துகள் விலைக் கழிவுடன் விற்பனை செய்யப்பட்டாலும், அந்த மருந்தகங்கள் நொடிந்து போனதற்குக் காரணம், அவை விற்கும் வணிக முத்திரை மருந்துகளின் பெயரை மருத்துவர்கள் பரிந்துரைகளில் குறிப்பிடாததுதான். உண்மையில் மருந்து இருக்கும். ஆனால் மருத்துவர் எழுதித் தந்த பெயரிலான மருந்தாக இருக்காது. அதற்கு இணையான மருந்து என்று சொல்லி விற்கவும் மாட்டார்கள். ஆகவேதான், கூட்டுறவு அங்காடிகள் நொடிந்து போயின.

விரைவில் ஜன ஒளஷதம் என்ற வணிக முத்திரையில் மூலக்கூறு மருந்துகள் கிடைக்க இருக்கும் நிலையில், தமிழகத்தில் அனைத்து மருந்துக் கடைகளும் மூலக்கூறு மருந்துகளை விற்பனை செய்யவும், அனைத்து மருத்துவர்களும் மூலக்கூறு மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்யவுமான நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
(மருந்துக்கு மருந்து - தலையங்கம் - தினமணி நாளிதழ்)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக