புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_m10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_m10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10 
251 Posts - 52%
heezulia
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_m10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_m10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_m10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_m10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10 
18 Posts - 4%
prajai
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_m10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_m10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_m10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10 
2 Posts - 0%
Barushree
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_m10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_m10கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Nov 10, 2009 7:02 pm

கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்

கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் Kannadashan1

* தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான 'நீராடும் கடலுடுத்து' என்று தொடங்கும் பாடல், இசைக்காகப் பிரிக்கப்பட்டதில் குறை உள்ளதாக தாங்கள் பேசியிருக்கிறீர்கள். ஆஸ்தான கவிஞர் என்ற முறையிலே ஒரு புதிய பாடலைத் தாங்கள் ஏன் எழுதக்கூடாது ?

O புதிய பாடல் எழுதித் தருவதாகத்தான் ஏற்கனவே அறிவித்து உள்ளேன். ஆனால் இன்றைய அரசு தமிழ்த்தாய் வாழ்த்தை ஒரு பிரச்சினையாக்க விரும்பவில்லை. இப்போதுள்ள பாடலைக் கெட்டால், 'மனோன்மணியம்' சுந்தரம் பிள்ளையே கண்ணீர் வடிப்பார். முதல் பாலலில் இரண்டாம் பாடலின் இரண்டு வரிகளைத் தூக்கிப்போட்டு, அதையும் தலைகீழாகத் தூக்கிப் போட்டிருப்பது மிகவும் கொடுமை.

பெரியவர்கள் எழுதில் சிறியவர்கள் கை வைத்தால் இந்தக் கதிதான் வந்து சேரும்.


* பெண்களையே கவிதை வடிக்கிறீர்களே ? எங்கே ஆண்களைப் பற்றி சிறு கவிதை பாடுங்கள்..

O என்னுடைய மூதாதையரைவிட நான் கெட்டிக்காரன் அல்ல. 'ஆண்' என்பவனே அபத்தம். அவனைப்பற்றிப் பாடுவதற்கு என்ன இருக்கிறது.

* தங்கள் பாடல்களைக் கேட்கும்போது என் மனதில் உயர்ந்து நிற்கும் தாங்கள், தங்கள் கதைகளைப் படிக்கும்போது மிகவும் இறங்கிவிடுகிறீர்களே.. இக்குறையை நிவர்த்திக்க் முயலுவீர்களா ?

O பாடல்கள் கற்பனையில் பிறக்கின்றன. கதைகள் அனுபவத்தில் பிறக்கின்றன. கற்பனையைவிட அனுபவம் எப்போதும் அசிங்கமாகத்தான் இருக்கும்.

* இறைவன் படைப்பில் தங்களை அதிசயிக்க வைத்தது எது ?

O ஒரு துளி விந்து, ஆயிரக்கணக்கான நரம்பு எலும்புகள் உள்ள குழந்தையாவது.

* உங்களுக்கே பிடிக்காத கெட்ட குணம் உங்களிடத்தில் உண்டா ?

O நிறைய இருப்பதால்தான் தடுமாறுகிறேன். நண்பர்களை நம்புவது. அரசியலில் நாணயத்தோடு இருப்பது. யார் மீதும் இரக்கம் காட்டுவது. இவற்றைவிட மட்டமான கெட்ட குணங்கள் என்ன இருக்கிறது ?

(நன்றி : கண்ணதாசன் பதிப்பகம்)

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Nov 10, 2009 7:30 pm

வணக்கம்
அமரர் கண்ணதாசனைப் பற்றிய இன்னொரு இனிமையான சம்பவம். ஒரு முறை கூட்டத்திற்குத் தாமதமாக வந்தார், மேடை ஏறியதும் அவர் கூறியது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதம் பிடிக்கும் எனக்குப் பிடித்தது தாமதம்

அன்புடன்
நந்திதா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Nov 10, 2009 7:40 pm

அதுமட்டுமல்ல இதையும் பாருங்கள்

கவியரசர் அவர்கள் எழுதிய ஒரு பாட்டைக் கேட்டுவிட்டு இளைஞர்கள் பலர் சேர்ந்து, அவரைப் பிடித்துக்கொண்டு பல கேள்விகள் கேட்டார்கள்.

பாடலின் முதல் பன்னிரெண்டு வரிகளைப்பாருங்கள்.

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே
சிந்தனை இல்லை ..
சிந்தனை இல்லை
காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால்
கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட
நாள் முதலாய் பெண்
உறங்கவில்லை ..
பெண் உறங்கவில்லை.


இளைஞர்கள் கேட்டது இதுதான்.

உணர்வுகள் என்பது ஆண், பெண் என்று
இருபாலருக்கும் பொதுவானதுதானே!
அப்படியிருக்கையில்,உன்னைக் கண்டு
கொண்ட நாள் முதலாய்
பெண் உறங்கவில்லை"
என்று நீங்கள் பெண்ணை மட்டும் எப்படிச்
சிறப்பித்துக் கூறலாம்? அதே காதல்
உணர்வினால் அவளுடைய காதலனும்
பாதிக்கப்பட்டிருக்க மாட்டானா -
சொல்லுங்கள்?"

இவள் உறங்காதது போல அவனும் உறங்கி
யிருக்க மாட்டானில்லையா? அப்படியிருக்கும்
போது பெண் உறங்கவில்லை என்று பெண்ணை
மட்டும் ஏன் உயர்த்தி எழுதினீர்கள்?
காதல் உணர்வில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுத்
தூக்கமின்றித் தவிப்பவன் ஆண்தான் - அது
உங்களுக்குத் தெரியாதா?"" என்று கேட்டுத்
துளைத்து எடுத்து விட்டார்கள்.

அவர் நடத்திக் கொண்டிருந்த தென்றல் என்ற
பத்திரிக்கை மூலமாகத்தான் இந்தக் கேள்வியைப்
பல ஆண் வாசகர்கள் கேட்டு எழுதியிருந்தார்கள்.
கடிதங்கள் நூற்றுக் கணக்கில் வந்து குவிந்து விட்டது.

நம் கவியரசர் அவர்கள் நல்லதாக ஒரு பதிலைக்
கொடுத்து அனைவரையும் சமாதானமடையச் செய்தார்.

அதற்கு முன் வெளிவந்திருந்த வானம்பாடி என்ற
படத்தில் தான் எழுதியிருந்த பாடல் ஒன்றை மேற்கோள்
காட்டிப் பதில் எழுதியிருந்தார்.

"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!"

என்று துவங்கும் பாடல் அது. அந்தப் பாட்டின் இடையில்

"அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!

படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தைப்
படைக்காமல் நிறுத்தி வைப்பான்!"

என்ற வரிகள் வரும். அதைச் சுட்டிக் காட்டிக் கவியரசர்
இப்படி எழுதினார்.

"பெண் குலத்தைப் படைபதை நிறுத்திவை" என்று
ஒரு காதலன் துக்க உணர்வு மேலோங்கிப் பாடுவதாக
எழுதியிருந்தேன்.அவன் ஒருவனுடைய உணர்வுகளுக்காக
மொத்த பெண் குலமும் என்ன செய்யும்? கடவுளென்ன
அவன் வைத்த ஆளா? இவனுக்காக அவர் எப்படி
பெண்களைப் படைப்பதை நிறுத்துவார்?.

இதையே ஒரு பெண் குரல் கொடுத்து ஆண்களைப்
படைபதை நிறுத்து கடவுளே என்றால் என்ன ஆகும்?

ஆனாலும் அவன் பாட்டில் தவறு இல்லை தன் உணர்வு
களின் தாக்கத்தினால் அவன் அப்படிப் பாடுகின்றான்.
அவனுடைய சூழ்நிலை அப்படி.

அதே போன்ற சூழ்நிலையில் தான் அந்தப் பெண்ணும்,
தன் உணர்வுகள் மேலோங்கப் பெண் உறங்கவில்லை
என்கிறாள்!

அதைத் தவறென்று நீங்கள் சொல்வீர்கள் என்றால்,
இதுவும் தவறுதான். அது தவறில்லை என்றால்
இதுவும் தவறில்லை. என்ன சொல்கிறீர்கள்?"

என்று வந்த எதிர்ப்பிற்கு சரியான கேள்வி ஒன்றைக்
கேட்டு அவர்களையே உணரவைத்தார்.

மேலும் அதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த தென்றல்
இதழில் இப்படி எழுதினார்.

"இந்த வானம்பாடிப் படப்பாடல் வந்த போது ஒரு
பெண் கூட என்னைக் கேள்வி கேட்கவில்லை.
நீங்கள் எத்தனையோ பேர் கேட்டு எழுத நான் பதில்
சொன்னேன்.

உங்களுக்கு மேலும் ஒன்று சொல்வேன். உணர்வுகள்
பொதுவானவை. உணர்வுகளுக்கு ஆண், பெண் என்கின்ற
பேதம் கிடையாது!

திரைப்படப் பாடல்கள் எல்லாம் படத்தின் சூழ்நிலைக்கு,
நாயகன், நாயகியின் மன உணர்வுகளுக்கு எழுதப்படுபவை.
அவைகளை நீங்கள் அந்தப் பாத்திரங்களின் தன்மையோடு
மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்"
இந்தப் பாடல் ஒலிப்பதிவின் போது ஒரு சுவாரசியமான
நிகழ்வு நடந்தது.

பாடலை எழுதிக் கொடுத்துவிட்டு ஒலிப்பதிவு அரங்க
வாயிலில் கவியரசர் தன் நண்பர் ஒருவருடன் பேசிக்
கொண்டிருந்தார்.

அப்போது பாடலைப் பாடுவதற்குத் தன்னைத் தயார்
செய்து கொண்டிருந்த பாடகர். திரு.டி.எம்.எஸ்.
பாட்டில் உள்ள ஒரு சொல்லைக் கண்டு திடுக்கிட்டு,
இசையமைப்பாளரிடம் போய் அதைக் காட்டி,
"இந்தப் பாட்டை நான் பாட விரும்பவில்லை என்றார்!"

கவியரசர் முதலில் எழுதியிருந்த வரிகள் இதுதான்.

"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் சாக வேண்டும்....."

அதிர்ச்சியடந்த இசையமைப்பாளர், அதை வாங்கிப்
பார்த்துவிட்டு "ஏன் என்றார்?"

திரு.டி.எம்.எஸ் சொன்னார். "என்னைப் பாட வைப்பதே
இறைவன்தான் என்று நம்பிக் கொண்டிருப்பவன் நான்.
எனவே அவரைச் சாகச் சொல்லி நான் எப்படிப் பாடுவது? "

விஷயம் கவியரசரின் காதுகளுக்கு உடனே எட்டியது.
திரு.டி.எம்.எஸ். அவர்களின் கருத்து சரிதான் என்றுணர்ந்த
கவியரசர், எந்தவித தன்முனைப்புமில்லாமல் அந்த
வார்த்தையை மாற்றி எழுதிக் கொடுத்தார்.

சாக என்றிருந்த வார்த்தை வாட என்று மாற்றப்பட்டது!

பாடலின் வரி இப்படி மாறியது

காதலித்து வேதனையில் சாக வேண்டும்!
என்றிருந்த வரி
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
என்று மாறியது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக