புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
51 Posts - 44%
heezulia
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
417 Posts - 49%
heezulia
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
284 Posts - 33%
Dr.S.Soundarapandian
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_m10டிராஃபிக் ராமசாமி - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிராஃபிக் ராமசாமி


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 12:33 am

First topic message reminder :

டிராஃபிக் ராமசாமி - Page 2 Traffic%20ramasamy%20%20thth1949 ஆம் ஆண்டு. எனக்கு அப்போது வயது 14. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அம்மா என்னை அரிசி எடுத்து வருவதற்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் அனுப்பி இருந்தார். நான் காஞ்சிபுரத் தில் இருந்து 10 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்தேன். அதற்கான அனுமதியையும் பெற்று இருந்தேன்.

அப்போதையக் காலத்தில் குறிப்பிட்ட எடைக்கு மேல் அரிசி மற்றும் நெல்லை அனுமதி இல்லாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. (அப்போது சென்னையில் இருந்து காஞ்சி புரத்துக்கு பஸ் கட்டணம் 1 ரூபாய் 25 காசுகள்)

சென்னையை நோக்கி வந்துகொண்டு இருந்தது பஸ். ஆற்காடு செக்போஸ்ட்டில் வந்தபோது பஸ்ஸை நிறுத்தி அவரவர் கைகளில் இருந்தப் பொருட்களை அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தனர். என்னைப் பரிசோதித்த ஓர் அதிகாரி என் மடியில் இருந்த அரிசிப் பையைப் பார்த்துவிட்டு, ‘பத்து கிலோ அரிசியைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கி இருக்கிறாயா?’ என்றார். நான் அனுமதி வாங்கிய விவரத்தைச் சொன்னேன்.

ஆனாலும், அந்த தாசில்தார் நான் கொண்டுவந்த அரிசிப் பையைப் பிடுங்கிக் கொண்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் அரிசிப் பையைக் கொடுக்கவில்லை. ‘எங்கள் வயலில் விளைந்த அரிசி இது. பத்து கிலோ எடுத்துச் செல்ல உரிய அனுமதி வாங்கி இருக்கிறேன். அப்படியும் நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?’ எனக் குரலை உயர்த்தி நியாயம் கேட்டேன். அதில், அந்த தாசில்தாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. ‘என்னிடமே நியாயம் பேசுகிறாயா? உன்னால் முடிந்ததைச் செய்துகொள். அரிசியைத் தர முடியாது. மீறிப் பேசினால் போலீஸுக்குத் தகவல் சொல்ல வேண்டி இருக்கும்!’ என மிரட்டி அனுப்பிவிட்டார்.

எங்கள் குடும்பத்தில் அப்போது 11 பிள்ளைகள். நான் கொண்டுபோகும் அரிசியில்தான் சாப்பாடு செய்ய வேண்டிய நிலை. சில நேரங்களில் அப்பா ஓவர் டியூட்டி பார்த்தாலும் பார்ப்பார். வெறும் கையோடு போனால் அம்மா என்ன செய்வாள்? பலவித வேதனைகளும் மனதைக் குழப்ப, அரிசிப் பையை இழந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

தாசில்தார் அரிசிப் பையைப் பிடுங்கிக்கொண்ட விஷயத்தைச் சொன்னேன். சொல்லும்போதே எனக்கு அழுகை பொங்கியது. அப்போது வீட்டுக்கு வந்த என் தந்தை, ‘சரி, விடு. அதிகாரிகள் ஏதோ தவறான அரிசின்னு நினைச்சுப் பிடிச்சிருப்பாங்க. அதை விட்டுத்தள்ளு. நான் கடைக்குப்போய் அரிசி வாங்கி வருகிறேன்’ என எனக்கு ஆறுதல் சொல்லிக் கிளம்பிவிட்டார்.

ஆனால், என்னால் என்னை சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை. ‘ஏதோ ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளும் குடும்பம் என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. இதேபோல் ஒரு அன்றாடங்காய்ச்சியின் குடும்பத்துக்கு நேர்ந்து இருந்தால் என்னாகி இருக்கும்?’ என்கிற எண்ணம் அன்று முழுக்க என்னைத் தூங்கவிடவில்லை. தவறாக நடந்துகொள்வது எத்தகையக் கண்டனத்துக்கு உரியதோ... அதேபோல்தான் தவறைத் தட்டிக் கேட்காமல் அலட்சியம் காட்டுவதும். அந்த ஆவேசம் எனக்குள் அடங்காதத் தீயாகத் தகிக்கத் தொடங்கியது.

‘ஒரு தனி நபர் ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு எத்தனை கிலோ அரிசியை எடுத்துச் செல்லலாம்? அதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்?’ என்கிற விவரங்களை எல்லாம் மறுபடியும் படித்துப் பார்த்து தெரிந்துகொண்டேன். சட்டப்படி நான் 10 கிலோ அரிசியைக் கொண்டு வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற நிறைவு எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. நியாயமாக நடந்தும் அரிசியைப் பறித்துக்கொண்ட அந்த தாசில்தாரை நிச்சயம் சும்மா விடக்கூடாது என்கிற ஆவேசமும் எனக்குள் அடங்கிவிடவில்லை.

‘எப்போதடா விடியும்?’ எனப் புரண்டு புரண்டுப் படுத்தேன். காலையில் எழுந்த உடன் தபால் ஆபீஸுக்குப் போனேன். மூன்று பைசாவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் வாங்கினேன். எனக்கு நடந்த அநீதியை அப்படியே எழுதி அப்போதையக் காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பினேன். ‘நிச்சயம் எனக்கான நியாயம் கிடைக்கும்’ என்கிற நம்பிக்கையோடு பள்ளிக்கூடம் சென்று விட்டேன்.

நான்கு நாட்கள் கழித்து, ஆற்காடு சிக்னலில் என் அரிசியைப் பிடுங்கி வைத்துக்கொண்ட அதே தாசில்தார் எங்கள் வீட்டுக்கு முன், கையில் அரிசிப் பையோடு நின்றுகொண்டு இருந்தார். நான் அவரை பார்க்காதது போல் வீட்டுக்குள் சென்றுவிட்டேன். ‘தம்பி... தம்பி...’ என்றபடியே பதறிய அவர், மாவட்ட ஆட்சியர் தன்னை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகக் கூறினார்.

‘‘உங்களோட அரிசிப்பை ஒரு அரிசிகூடக் குறையாமல் இதோ இருக்கு. நடந்தது தவறுதான். என்னைவிட எத்தனையோ வயசு சின்னப் பையனான உங்ககிட்ட மனசு வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கிறேன்’’ என்றார் கண்ணீரோடு.

அரிசிப் பையை என்னிடம் கொடுத்து, ‘‘நடந்த சம்பவத்தை மறந்து என்னை மன்னிச்சிட்டதா நீங்க ஒரு கடிதம் கொடுத்தாத்தான் மறுபடியும் நான் தாசில்தார் உத்தியோகம் பார்க்க முடியும். தயவு பண்ணி என்னை மன்னிச்சிட்டதா ஒரு கடிதம் எழுதிக் கொடுங்க தம்பி’’ என அவர் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டபடி சொல்ல... எனக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.

இது என் நியாயத்துக்கான வெற்றி என சத்தம் போட்டுக் கத்த வேண்டும்போல் இருந்தது.

வயதில் சிறுவனாக இருந்தாலும், எனக்கு நடந்த அநீதியை யாருடைய துணையும் இல்லாமல் என்னால் தட்டிக் கேட்க முடியும். அதற்கான நியாயத்தைப் பெற முடியும் என்கிற துணிச்சல் எனக்குள் முதல் முறையாகப் பூத்தது. யாரையும் அழவைத்து ரசிக்கும் குரூரம் எனக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. அதனால், ‘நடந்த தவறை தாசில்தார் ஒப்புக்கொண்டார். என் அரிசிப் பையையும் முறைப்படி திருப்பிக் கொடுத்தார். இனி இதுபோல் அவர் யாரிடமும் நடந்துகொள்ள மாட்டார் என நம்புகிறேன். திருந்திய மனநிலையில் இருக்கும் இவரை சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து விடுவித்து உரிய பணியில் அமர வைக்கலாம்!’ எனக் கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினேன்.



டிராஃபிக் ராமசாமி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Mar 21, 2015 5:57 am

நியாயம் வெல்லும் என்ற உறுதியில் உயர்ந்த மனிதர் மக்கள் நல ஆர்வலர் உரை விவேகமுள்ளது.......பதிவு செய்த சிவா அன்பருக்கு நன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 21, 2015 10:38 am

மதுக்கடை அகற்றுவோம்!

மதுக்கடைகளில் கழிப்பறைகள் இல்லை. அப்படியே இருந்தாலும் சுகாதாரக் கேடுடன் சாக்கடைப் போல கிடக்கின்றன. குடிமகன்கள் எல்லாம் மதுவைக் குடித்துவிட்டுச் சாலைகளிலும், சந்துக்களிலும் சிறுநீர் கழித்து மதுக்கடையைச் சுற்றியுள்ள ஏரியாவையே நாற்றத்தில் மூழ்கவைத்து விடுகிறார்கள். சரியான கழிப்பறை இல்லாத மதுக்கடைகளை மூட உத்தரவு இடவேண்டும். இல்லையேல், நவீனக் கழிப்பறைகள் அமைக்க உத்தரவு இடவேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தேன்.

நீதிபதிகள் சிவஞானம், இக்பால் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள், ‘‘இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றன. இனியும் இதுபோன்ற வழக்குகளைத் தொடராமல் இருப்பதற்காக, வழக்கைத் தொடுத்தவர் 5000 ரூபாய் அபராதமாகக் கட்ட வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு, நீதிமன்ற நேரத்தை வீணடித்து விட்டது குற்றம் என்றால், இன்று ஆயிரக்கணக்கானப் படித்த இளைஞர்கள், அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பம் நடத்துபவர்கள், அறிவு சார்ந்த ஆண்மகன்கள் என எல்லோரும் மதுவுக்கு அடிமையாகி மதுக்கடைகளில் தங்களின் நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடித்து வீழ்ந்து கிடக்கிறார்களே... அது எவ்வளவு பெரிய குற்றம்? தனது மண்ணில் வசிக்கும் குடிமகன்களுக்கு உயரிய ஒழுக்கங்களை எல்லாம் கற்றுக்கொடுத்து அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவர்களாக்கிச் செருக்கோடு நடக்கச் செய்ய வேண்டிய அரசு, அவர்களை மதுவுக்கு மண்டியிட வைத்தது எவ்வளவு பெரிய குற்றம்? குடித்தவனின் பாக்கெட்டில் இருந்து பணத்தைத் திருடி, கோடிகளில் லாபம் பார்ப்பது எவ்வளவு வஞ்சகமான செயல்? அதை முன்நின்று நடத்தும் அரசாங்கம் எவ்வளவு மூடத்தனமாக இருக்கிறது.??

வருடத்துக்கு 12,000 கோடி ரூபாய் வருமானத்தை மது விற்பனை மூலம் ஈட்டுவதாக அறிக்கை தருகிறது அரசு. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களுக்கு முந்தின நாட்களில் எல்லாம் மது விற்பனை வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக விற்பனையாகிறது. தேசிய தினங்களில்கூட திகட்டத் திகட்டக் குடிக்கும் குடிமகன்களின் கூட்டம் அதிகரித்து விட்டதைத்தானே இது காட்டுகிறது.

கோடிகளைக் கொட்டும் மதுக்கடைகள், பார்கள், சுகாதாரக் கேடின் உச்சமாக இருக்கிறது. ஈக்கள், கொசுக்கள், சிறுநீர், வாந்தி, பிளாஸ்டிக் குவளைகள், காலியான பாட்டில்கள் எனக் கொடூரமான வாசனைக்கூடமாக இருக்கிறது. கொடிய வகை நோய்கள் பல, இந்தக் கூடத்தில் இருந்துதான் பரவுகிறது.

மது ஒழிப்புப் போராட்டத்துக்காகப் பெரியார் தன்னுடைய 5,000 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் என்று படித்த வரலாறு போய், இன்று மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் ஈட்டப்படுகிறது. தீபாவளி அன்று எவ்வளவு விற்பனையானது. பொங்கல் அன்று எவ்வளவு விற்பனையாகும் எனக் கணக்கிட்டு உரிய இலக்கை எட்டுவதற்கு அரசு இயந்திரம் எப்படியெல்லாம் சுறுசுறுப்புடன் பணியாற்றுகிறது? குடிமகன் நிரந்தர போதையில் இருந்தால்தான் கஜானாவைக் காப்பாற்ற முடியும் என்பது அரசு போடும் கணக்கு.

இந்தப் பணமெல்லாம், மூட்டைத் தூக்கப்போன தன் கணவன் எப்போது வருவான் என உணவு சமைத்து, அவனோடு உண்டு மகிழ்ந்து உறங்குவதற்காகக் காத்திருந்த முனியாண்டியின் மனைவியுடையது. சம்பாதிப்பதற்காக மகனைப் பட்டணத்துக்கு அனுப்பிவிட்டு, கிராமங்களில் காத்திருக்கும் கிழட்டுத் தாய்மார்களுடையது. தங்கைகளின் திருமணத்துக்காக, தம்பிகளின் படிப்புக்காக, அம்மாக்களின் சாப்பாட்டுக்காக, அப்பாக்களின் மருத்துவச் செலவுக்காக, குழந்தைகளின் படிப்புக்காகச் செல்ல வேண்டிய பணத்தைத்தான் மதுக்கடைகளில் பறிகொடுத்துவிட்டுப் புத்தி பேதலித்தவர்கள்போல் தெருவெங்கும் புலம்பித் திரிகிறார்கள்.



டிராஃபிக் ராமசாமி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 21, 2015 10:38 am

இப்படித்தான், எனது நண்பரின் ஒரே மகன் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டான். நண்பர் கார்ப்பரேஷனில் வேலை பார்த்தார். ஏழ்மையாக வாழ்ந்த காலத்திலும், தன் பிள்ளையை நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் படிக்க வைத்தார். அவனும் நல்லமுறையில் படித்து, பெரிய சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தான்.

நண்பனின் குடும்பம் ஏழ்மையைக் கடந்து நல்ல நிலைமைக்கு வந்தது. ‘வேலையை விட்டுவிட்டு பையன் என்னை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டான்’ என்று தன்னுடையப் பிள்ளையைப் பற்றி என்னைப் பார்க்கிறபோதெல்லாம் பெருமையாகப் பேசுவார்.

அந்தப் பிள்ளைதான் தன்னுடைய நண்பர்களோடு ‘தண்ணி பார்ட்டியில்’ கலந்து போதையில் மூழ்கியிருக்கிறார். அங்கு நடந்த கூத்து, கும்மாளத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார். முதுமையைப் பேரப் பிள்ளைகளோடு ஒய்யாரமாக ஓய்வில் கழிக்க வேண்டிய எனது நண்பர், ஒரு கம்பெனியில் வாட்ச்மேனாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். இந்த நாட்டையும், வீட்டையும் நல்வழியில் காக்க வேண்டிய இளம் சிங்கங்களின் உயிர், அற்ப ஆயுசில் பறிக்கப்படும் கொடூரத்துக்கு மதுபானங்கள்தானே காரணம்.

சிகரெட் முதன்முதலில் விற்பனைக்கு வந்தபோது ஆண்மையின் அடையாளமாகவும், அறிவாளிகளின், அணிகலனாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கொல்லும் நோய்கள் பலவற்றை அது கொண்டுவந்து குவித்தபோதும், அதை விரட்ட முடியாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதுபோல இன்று திரைப்படங்களில் குடித்துவிட்டு ஒருவன் செய்யும் கோமாளித்தனங்களை ஹீரோயிஸமாகக் காட்டி, மது அருந்துவதைக் கொண்டாட்டமாகவும், குதூகளிப்பாகவும் காட்டுகிறார்கள். இந்த மாயப் பிம்பங்களும், கற்பனைப் பாத்திரங்களும், இளைஞர்களின் மனதுக்குள்ளும், மண்டைக்குள்ளும் புகுந்து மதுக்கடையின் வாசம் பார்க்க வைத்துவிடுகிறது.

இன்று நடக்கும் எல்லா சந்திப்புகளும், பார்களிலேயே துவங்குகின்றன; வளர்கின்றன; நிச்சயிக்கப்படுகின்றன; உறுதிசெய்யப்படுகின்றன. இன்று மது அருந்தாமல் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடப்பதில்லை. சின்னச் சின்ன சந்தோஷங்களை, பதவி உயர்வுகளை, கொண்டாட்டங்களை, பரவசங்களை எல்லாம் பெரிய பெரிய ஹோட்டல்களில், மதுக் கூடாரங்களில் கொண்டாடி, தங்களின் நேரத்தையும், பணத்தையும், வாழ்க்கையையும் வீணடித்துக்கொண்டு இருக்கிறது நமது இளைஞர் கூட்டம். அநீதிகளை, அக்கிரமங்களை, அநியாயங்களை எதிர்த்து ஆற்றுவெள்ளம்போல் பாய வேண்டிய நமது இளைஞர்கள், காயடிக்கப்பட்ட காளை மாடுகள்போல் ‘மதுவே சரணம்!’ என்று மயங்கிக்கிடக்கிறார்கள்.

சமூகத்தில் நடக்கும் சகலக் குற்றங்களுக்கும் மதுதான் காரணமாக இருக்கிறது. இங்கு நடக்கும் கொள்ளைகள், கொடூரக் கொலைகள், தொடரும் திருட்டுகள், மரண விபத்துகள், திருமணப் பிரிவுகள் என அனைத்துக்கும் மதுதான் ஆரம்பப்புள்ளியாக இருக்கிறது. தினக்கூலிகளை, நடுத்தர வர்க்கத்தினரை மது தின்று தீர்க்கிறது. அவர்களின் வாழ்க்கையை அறுத்துப்போடுகிறது. அவர்களின் குடும்பங்களை நடுரோட்டில் நிறுத்தி, ஐந்துக்கும், பத்துக்கும் கையேந்த வைக்கிறது. அவர்களைத் திக்குத் தெரியாதத் திசையில் அலைய விடுகிறது.

ஆடை இல்லாதவனை அரை மனிதன் என்கிறோம். மூளை இல்லாதவனை என்னவென்று சொல்வது? மனித உடலில் உயிர் இருந்தும் மூளை இறந்துவிட்டால் அவனை இறந்து விட்டதாகவே சொல்கிறது மருத்துவம். மூளையின் செயல்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து மனிதனின் செயல்பாட்டையும், எண்ணங்களையும் சிதைத்து, தனக்கு அடிமையாக்கி, அவனை உயிரோடு இறக்கச் செய்யும் மதுவை இந்த மனிதகுலத்தில் வைத்து இருக்கலாமா..?

சமீபத்தில் சென்னை புறநகரில் மூன்று இளைஞர்கள், கட்டடம் கட்டுவதற்காக இருந்த கம்பிகளைத் திருடி இருக்கிறார்கள். அதைத் தடுக்க வந்த காவலாளியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். அடுத்த நாள் கைதாகி அவர்கள் கொடுத்த வாக்குமூலம் என்ன தெரியுமா..? ‘மது குடிக்க காசு இல்லாததால் கம்பி திருடினோம். இப்படி கொலையில் வந்து முடியும் என நாங்கள் நினைக்கவில்லை!’ மது இன்றைய இளைய தலைமுறையை எந்தளவுக்கு ஆட்டிப்படைக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவத்தைவிட உதாரணம் வேறு வேண்டியது இல்லை.

20 வருடங்களுக்கு முன் சாராய வியாபாரிகள் அரசியலையும், அரசாங்கத்தையும் எப்படித் தீர்மானித்தார்களோ... அதுபோலவே இன்றும் மதுக்கடை அதிபர்கள் அரசாங்கத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக வலம் வருகின்றனர். அவர்கள் வழங்கும் நிதியில் இன்றைய அரசியல் கட்சிகள் தைரியமாகத் தேர்தலைச் சந்திக்கின்றன. தேர்தல் பிரசாரக் காலங்களில் கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பொருளாகவும், வாக்காளர்களைக் கட்டிப்போடும் பொருளாகவும் மது இருக்கிறது.

இன்றைய அரசியல் கட்சிகள் தங்கள் தொண்டர்களின் மூளையை மழுங்கச் செய்யவும், தங்களுக்கானக் கோஷங்களை முழங்கச் செய்யவும் மதுவைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வோர் அரசியல் கட்சியும் மதுபானக் கடை அதிபர்களைத் தங்களின் பினாமிகளாக வைத்துள்ளன.

மதுக்கடைத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். இனி என் பிரதானப் போராட்டம் மது ஒழிப்புப் பற்றியே இருக்கும். ‘மது’ என்ற கோர அரக்கனை, மக்களின் மனங்களில் இருந்து விரட்டுவதுதான் இனி என் வேலை!



டிராஃபிக் ராமசாமி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Mar 21, 2015 10:49 am

அணைவரும் இவர்போல் இருந்துவிட்டால் .............

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 22, 2015 7:11 pm

//இது என் நியாயத்துக்கான வெற்றி என சத்தம் போட்டுக் கத்த வேண்டும்போல் இருந்தது.

வயதில் சிறுவனாக இருந்தாலும், எனக்கு நடந்த அநீதியை யாருடைய துணையும் இல்லாமல் என்னால் தட்டிக் கேட்க முடியும். அதற்கான நியாயத்தைப் பெற முடியும் என்கிற துணிச்சல் எனக்குள் முதல் முறையாகப் பூத்தது. யாரையும் அழவைத்து ரசிக்கும் குரூரம் எனக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. அதனால், ‘நடந்த தவறை தாசில்தார் ஒப்புக்கொண்டார். என் அரிசிப் பையையும் முறைப்படி திருப்பிக் கொடுத்தார். இனி இதுபோல் அவர் யாரிடமும் நடந்துகொள்ள மாட்டார் என நம்புகிறேன். திருந்திய மனநிலையில் இருக்கும் இவரை சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து விடுவித்து உரிய பணியில் அமர வைக்கலாம்!’ எனக் கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினேன்.//


அருமை அருமை சிவா..............நல்ல பகிர்வு ..தொடர்ந்து படிக்கிறேன்............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக