புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதவி அதிகாரம்! Poll_c10பதவி அதிகாரம்! Poll_m10பதவி அதிகாரம்! Poll_c10 
40 Posts - 63%
heezulia
பதவி அதிகாரம்! Poll_c10பதவி அதிகாரம்! Poll_m10பதவி அதிகாரம்! Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
பதவி அதிகாரம்! Poll_c10பதவி அதிகாரம்! Poll_m10பதவி அதிகாரம்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பதவி அதிகாரம்! Poll_c10பதவி அதிகாரம்! Poll_m10பதவி அதிகாரம்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
பதவி அதிகாரம்! Poll_c10பதவி அதிகாரம்! Poll_m10பதவி அதிகாரம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதவி அதிகாரம்! Poll_c10பதவி அதிகாரம்! Poll_m10பதவி அதிகாரம்! Poll_c10 
232 Posts - 42%
heezulia
பதவி அதிகாரம்! Poll_c10பதவி அதிகாரம்! Poll_m10பதவி அதிகாரம்! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
பதவி அதிகாரம்! Poll_c10பதவி அதிகாரம்! Poll_m10பதவி அதிகாரம்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பதவி அதிகாரம்! Poll_c10பதவி அதிகாரம்! Poll_m10பதவி அதிகாரம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
பதவி அதிகாரம்! Poll_c10பதவி அதிகாரம்! Poll_m10பதவி அதிகாரம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பதவி அதிகாரம்! Poll_c10பதவி அதிகாரம்! Poll_m10பதவி அதிகாரம்! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
பதவி அதிகாரம்! Poll_c10பதவி அதிகாரம்! Poll_m10பதவி அதிகாரம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பதவி அதிகாரம்! Poll_c10பதவி அதிகாரம்! Poll_m10பதவி அதிகாரம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பதவி அதிகாரம்! Poll_c10பதவி அதிகாரம்! Poll_m10பதவி அதிகாரம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பதவி அதிகாரம்! Poll_c10பதவி அதிகாரம்! Poll_m10பதவி அதிகாரம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவி அதிகாரம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 6:28 pm

வீட்டுக்கு போயி அப்பாவப் பாத்து பேசினாத்தான், மனசுக்கு அமைதி...' என்று மனசுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான் குணா.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்று, வருவாய்த் துறையின் உயர் பதவிக்கு, நேரடி பணி நியமனம் செய்யப்பட்டிருந்தான் குணா.
பணியில் சேர்ந்து, மூன்று மாதங்கள் தான் ஆகியிருந்தது.

ஆனால், அதற்குள், ஏகப்பட்ட பிரச்னைகள்.இளம் வயதில், பொறுப்புமிக்க பதவியில் அமர்த்தப்பட்டிருந்தது, அவனது கல்வி தகுதிக்கு ஏற்றதாய் இருந்தாலும், 'குருவி தலையில் சுமத்தப்பட்ட பனங்காயோ...' என, அவனே நினைக்கும்படி இருந்தது.

அவன் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் வயதிலும், அனுபவத்திலும், மூத்தவர்களாக இருந்தனர்.
குணாவுடன், கல்லுாரியில் ஒன்றாகப் படித்த பாலுவும் அந்த அலுவலகத்தில் தான் வேலை பார்த்தான். பாலுவைப் பார்த்ததும், குணாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பணிக்கு சேர்ந்த புதிதில், பாலுவுடன் மிக நெருக்கமாக பழகினான் குணா. பிற ஊழியர்களுடனும், அதிகாரி என்ற முறையில் பழகாமல், சக ஊழியன் என்ற ரீதியிலேயே, நட்பு பாராட்டினான்.
ஆனால், இந்த குணமே அவனை, பலவித சிக்கல்களில் இழுத்து விட்டது.

அதிலும், இன்று காலை, அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவம், குணாவின் மனதை வேதனைப்படுத்தியது மட்டும் அல்லாமல், வேலையே வேண்டாம் என எழுதி கொடுத்து விடலாமா என, யோசிக்கும் அளவிற்கு, அவனுள் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

சீனியர் டைப்பிஸ்ட், பாலு, ஆபீஸ் உதவியாளர் என, அனைவருமே, அலுவலக வேலையில் அக்கறையில்லாமல் இருந்தனர். பொறுத்துப் பொறுத்து பார்த்த குணா, இன்று, அனைவரிடமும், 'அவரவர் வேலைகள குறித்த நேரத்தில முடிக்கப் பாருங்க...' என்றான்.

இதைக் கேட்டவுடன், சீனியர் டைப்பிஸ்ட் கோபமாய், 'தம்பி... உங்க வயசும், என் சர்வீசும் ஒண்ணு தெரியுமா... எந்த வேலைய, எப்ப செய்யணும்ன்னு எங்களுக்குத் தெரியும்; நீங்க சொல்லி தெரிஞ்சிக்கணும்ங்கிற அவசியம் இல்ல...' என்றார் வெற்றிலையைச் குதப்பியவாறே!
பாலுவோ, 'குணா... இதையெல்லாம் கண்டுக்காதே... நீ வேலைக்குப் புதுசு; போகப் போக உனக்கே எல்லாம் புரியும், சும்மா இரு...' என்றான்.

அலுவலக உதவியாளர் கூட, இவனை மதிக்காமல், 'நேரடி அப்பாயின்ட்மென்ட்ல வந்தவங்கன்னாலே இந்த தொல்ல தான்; கீழேயிருந்து, படிப்படியா கஷ்டப்பட்டு, உயர்நிலைக்கு வந்திருந்தாதானே, கஷ்ட நஷ்டம்ன்னா என்னாங்கிறது தெரியும்...' என்று அலுத்துக் கொண்டான்.
இப்படி ஆளாளுக்கு ஒன்று கூறி, நேரத்தை கடத்தினார்களே தவிர, செய்து முடிக்கப்பட வேண்டிய எந்த வேலையும் செய்யப்படாமல், அப்படியே கிடந்தது. இதைப் பார்த்த குணாவிற்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை.

மனக்குழப்பத்துடன் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தவன், 'இதைப் பற்றி அப்பாவிடம் பேசி, ஒரு யோசனை கேட்க வேண்டும்...' என நினைத்தவனாய், ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தான்.
வீட்டிற்குள் நுழைந்தவனை பார்த்ததும், அம்மா, ''வா குணா... எப்படிப்பா இருக்க... சரியா சாப்பிடறது இல்லையா... ரொம்ப இளைச்சிட்டியே...'' என்றாள்.

''அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா; அப்பா எங்கே?'' என்று கேட்டான்.
''அப்பாவுக்கு காய்ச்சல்; ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டு இருக்காரு.''
இவர்களின் பேச்சைக் கேட்டு, அறையிலிருந்து வெளியே வந்த அப்பாவைப் பார்த்தான் குணா.
காய்ச்சலில் அவர் முகம் வாடியிருந்தது.

''அம்மா... நானும் அப்பா கூட, ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வர்றேன்,'' என்றான்.
''நீ ரெஸ்ட் எடுப்பா. ஆஸ்பத்திரி, பக்கத்தில தான் இருக்கு; நானே, மெதுவா போயிட்டு வர்றேன்,'' என்றவரைத் தடுத்து, தானும் உடன் கிளம்பினான்.
''அப்பாயின்ட்மென்ட் வாங்கியாச்சாப்பா?''
''காலையிலேயே போன் போட்டு சொல்லிட்டேன்,'' என்றார் அப்பா.

...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 6:32 pm

இருவரும், ஆட்டோவில் மருத்துவமனையை அடைந்தனர். நோயாளிகள் கூட்டம், 'ஜே ஜே' என்று இருந்தது. 'எப்படியும் டாக்டரை பார்க்க, ரெண்டு மணி நேரம் காத்திருக்கணும் போல இருக்கே...' என நினைத்துக் கொண்டவன், ரிசப்ஷனுக்குச் சென்று, அப்பாவின் பெயரைக் கூறி, பதிவை உறுதி செய்து கொண்டான்.

டாக்டரின் உதவியாளராக இருந்த பெண், நோயாளிகளை வரிசைப்படி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தாள்.
அவளிடம் அப்பாவின் உடல் நிலையைக் கூறி, டாக்டரை உடனே பார்க்க அனுமதி கேட்கலாம் என நினைத்தவனாய், அப்பெண்ணை நெருங்கினான்.

அவளைப் பார்த்தவுடன், 'இவள் அப்பாவிடம் படித்த கயல்விழி ஆயிற்றே...' என நினைத்துக் கொண்டே, ''சிஸ்டர்... நீங்க, கயல்விழி தானே?'' எனக் கேட்டான்.
''ஆமாம் சார்... அப்பா நல்லா இருக்காரா?'' என்று கேட்டாள்.
''அப்பாவுக்கு தான் காய்ச்சல்; அவரால உட்கார கூட முடியல. அதனால, கொஞ்சம் முன்னாடியே அனுப்ப முடியுமா ப்ளீஸ்...'' என்றான்.

''சாரி சார்; டோக்கன் வரிசைப்படி தான் அனுப்ப முடியும். கொஞ்சம்,' வெயிட்' செய்யுங்க; எப்படியும் கொஞ்ச நேரத்தில பாத்திடலாம்,'' என்றவாறே அப்பாவைப் பார்த்து, வணக்கம் கூறினாள்.
பின், தெர்மா மீட்டரை கொண்டு வந்து, டெம்ப்ரேச்சர் பார்த்தவள், ''101 டிகிரி காய்ச்சல் இருக்கு. ரொம்ப முடியலன்னா பக்கத்து ரூம்ல, 'பெட்' காலியா இருக்கு; அங்க போய் படுத்துக்குங்க. டாக்டரை பாக்கிறப்ப, நான் வந்து கூப்பிடுறேன்; அப்ப வந்தா போதும்,'' என்று கூறி அடுத்த நோயாளியை கவனிக்கச் சென்றாள்.

அப்பாவை அடுத்த அறைக்கு மெதுவாக அழைத்துச் சென்று படுக்க வைத்தவன், ''ஏன்ப்பா... இந்தப் பொண்ணு, உங்ககிட்ட படிச்சவ தானே... உங்களுக்கு முடியல; சீக்கிரம் அனுப்புன்னா, முடியாதுன்னு சொல்றாளே...'' என்றான் கோபத்துடன்.
அப்பா சிரித்துக் கொண்டே, ''கயல், எங்கிட்ட படிச்ச பொண்ணு தான்; அதனால தான், அவ இவ்வளவு, கரெக்ட்டா நடந்துக்கிறா,'' என்றார்.

''என்னப்பா... அவ திமிரா இருக்கிற மாதிரி தெரியுது; நீங்க என்னடான்னா, பெருமையா பேசுறீங்களே...'' என்றான்.

''குணா... ஆஸ்பத்திரிங்கிறது தினமும் பல நூறு பேர் வந்து போற இடம்; இங்க 'ரூல்ஸ்' படி நடந்தா தான், குழப்பம் இல்லாம வேலை நடக்கும். நம்மள மாதிரி முடியாதவங்க எத்தனை பேர் வந்திருக்காங்கன்னு பாத்தயில்ல... என்னை மட்டும், கயல்விழி, ஸ்பெஷலா உடனே அனுப்பினா, மத்தவங்க மத்தியில அதிருப்தி ஏற்படும்; அதோட, கூச்சலும், குழப்பமும் வரும்.

''வந்திருக்கிறது தன்னோட வாத்தியாருங்கிறதால தான், அதுக்குரிய மரியாதைய காட்டுற விதமா என்னை இந்த ரூம்ல உட்கார வச்சிருக்கா. பொது இடங்கள்ல நம்மோட அதிகாரத்த துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. நான் அவளுக்கு வாத்தியாருங்கிறது, பள்ளிக்கூடத்தில மட்டும் தான். இங்க, அவ நர்ஸ்; நான் நோயாளி. இந்த கண்ணோட்டத்தில மட்டும் தான், அவ நம்மை பார்க்கிறா... இது தான் சரி.

''அவ தன்னோட, பதவிக்குரிய அதிகாரத்த சரியா பயன்படுத்தி, வந்திருக்கிற நோயாளிகள எந்தவித பாரபட்சமும் இல்லாம, டாக்டரப் பாக்க அனுமதிக்கிறா. இது அவளோட, நிர்வாகத் திறமை தானே தவிர, திமிர்த்தனம் இல்ல.

''பள்ளிக்கூடத்தில, நான் வேலை பாத்துட்டு இருந்த காலத்துல மற்ற வாத்தியாருங்க எல்லாம் என்னை, ரொம்ப திமிர் பிடிச்சவன்னு சொல்வாங்க; அதுக்கு காரணம் என்ன தெரியுமா?''
''தெரியாதுப்பா.''

''நான், ரூல்ஸ் படி நடப்பேன். தலைமை ஆசிரியரா இருந்தப்ப, என்னை விட வயசுல மூத்தவங்க, எனக்கு உதவியாளரா வேலை பாத்தாங்க.

அவங்க, என்னை விட மூத்தவங்கன்னாலும் எனக்கு மதிப்பு கொடுக்கணும்ன்னு எதிர்பார்ப்பேன்; காரணம், அந்த மரியாதை, எனக்கு உரியது இல்ல; அது, என் பதவிக்குரியது. அதேசமயத்தில, என் உயரதிகாரி, என்னை விட வயசுல இளையவங்களா இருந்தாலும், அவங்களுக்குரிய மரியாதையக் கொடுப்பேன்;

இது தான், அவங்க பதவிக்கு, நான் தர்ற மரியாதை. எப்பவுமே, உயரதிகாரியா இருந்தா, நாம சீட்ல இருக்றோமோ இல்லயோ, நடக்க வேண்டிய வேலைகௌல்லாம், அதுபாட்டுக்கு சரியான நேரத்தில நடந்துகிட்டே இருக்கணும். அந்த கட்டுப்பாட்டை, நாம கொண்டு வந்தாத்தான், அந்த பதவியில நாம ஜெயிச்சதா அர்த்தம்.

''இப்ப பாரு... அந்த பொண்ணு அந்த இடத்தில இல்லன்னாக் கூட நோயாளிக எந்த குழப்பமும் இல்லாம, வரிசைப்படி உள்ளே போறாங்க. இது தான், அவளோட நிர்வாகத் திறமை,'' என்றார் அப்பா.

'ஒருவன் தன்னோட பதவி அதிகாரத்த சரியா பயன்படுத்தினாத்தான், அவனால தனக்கு கீழே வேலை செய்றவங்கள வேலை வாங்க முடியும். அப்பத்தான், எந்தவித சுணக்கமும் இல்லாம வேலை சீக்கிரமா முடியும்ங்கிறத கயல்விழியும், அப்பாவும் எனக்கு உணர்த்திட்டாங்க. இனி, என்னாலும் என் நிர்வாகத்தில எந்தவிதச் சிக்கலும் இல்லாம வேலை வாங்க முடியும்...' என்று நினைத்துக் கொண்டவன் மனதில் நம்பிக்கை ஏற்பட்டது.

எஸ்.ஆர்.சாந்தி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக