புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 2%
prajai
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%
Pampu
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_lcap'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_voting_bar'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி?

avatar
dawndhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 17/10/2009

Postdawndhan Tue Nov 10, 2009 5:11 pm

'வாழ்க்கை வரைபடத்தை' உருவாக்குவது எப்படி? Boston
திட்டமிட்ட வாழ்வே திகட்டாத வாழ்வு. துடுப்பு இல்லா படகு காற்று அலைக்கழிக்கும் திசைக்கெல்லாம் போகும். பிறகு குப்புற கவிழ்ந்துவிடும். திட்டமிடாத வாழ்வும் அந்த படகின் நிலையைப்போல தடுமாற்றம் கண்டு தவிடு பொடியாகிவிடும். வாழ்க்கையை தெளிவான வரைபடம்போல திட்டமிட்டு வெற்றி பெறுவது எப்படி?

வாழ்க்கைப் பாதையில் ஒவ்வொரு அனுபவத்தை சந்திக்கும்போதும் முடிவெடுத்துச் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. அந்த முடிவின்படி வாழ்க்கையின் போக்கு திசைமாற வாய்ப்புள்ளது. எனவே ஒவ்வொரு வரும் திட்டமிட்டு செயல்பட்டால் இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கலாம்.

இதற்காக ஒவ்வொருவரும் தாங்கள் எப்படி வாழ வேண்டும் என்று மனதளவிலாவது ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். அதன்படி வாழவும் முனைகின்றார்கள். ஒவ்வொரு முறையும் யோசித்து யோசித்து செயல்படுவது கடினம். ஆகவே ஒவ்வொருவரும் அவரவர் அளவில் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான 'வாழ்க்கை வரைபட'த்தை உருவாக்கிக் கொண்டு செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

இவ்வாறு வரைபடத்தை உருவாக்கும்போது யதார்த்த உலகின் நடைமுறைகளை கருத்தில் கொண்டு உருவாக்கினால் வாழ்வை எதிர்கொள்வது சவாலாக இருக்காது. சவால்களை எதிர்கொண்டாலும் அவற்றை சமாளிக்கும் மனப்பக்குவம் வந்துவிடும்.

காலத்திற்கேற்ப மாற்றுங்கள்:

நடைமுறைக்கு சரிப்பட்டு வராத விஷயங்களை திட்டத்தில் வைத்துக் கொண்டு வாழ்க்கையை எதிர்கொண்டால் முரண்பாடுகள் நிறைந்ததாக வாழ்க்கை காட்சி அளிக்கும். கால மாற்றத்திற்கேற்ப வரைபடத்திலும் ஏற்புடைய மாற்றங்களை செய்ய வேண்டும்.

நாம் குழந்தையாக இருந்தபோது பெற்றோர்களையும், பிறரையும் சார்ந்தவர்களாக செயல்படுகின்றோம். பெரியவர்கள் ஆனவுடன் ஆளுமைத் திறன்கள் வலிமை பெறுகின்றது. அதே சமயம் நோய்வாய்ப்படும்போது வலிமை குறைகின்றது. வயது முதிர்வு அடையும்போதும் சார்ந்து வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

நாம் வசதிக் குறைவுடன் ஏழ்மையாக வாழ்க்கை நடத்தும்போது உலகம் ஒரு மாதிரி தோற்றமளிக்கின்றது. அதே சமயம் வசதியாக வாழும்போது வேறுமாதிரி தோன்றுகின்றது. அக வளர்ச்சி, புற வளர்ச்சி, புதுப்புது தொழில்நுட்பங்கள் என்று அனைத்தும் மாற்றத்திற்கு உட்படும்போது அவரவர் ஏற்படுத்திக் கொண்டுள்ள திட்ட வரைபடங்களிலும் உரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

மாற்றங்களை மனதில் கொள்ளாமல், புதிய தகவல்களை உள்வாங்காமல் செயல்பட்டால் இன்றைய சவால்களை எதிர்கொள்ள முடியாது. அதாவது உலகம் ராக்கெட் வேகத்தில் போகும்போது நாம் மாட்டு வண்டியில் பயணித்தால் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கரை சேர முடியாமல் போய்விடுவோம். மாற்றங்களை நிறுத்த முடியாது. ஆனால் மாற்றங்களை சிறப்பாக எதிர்கொள்ள அவரவர் வரைபடங்களில் உரிய மாற்றங்களை செய்வது எளிதில் சாத்தியமானது.

காலாவதியான வரைபடம்:

படித்த, வேலை நாடும் இளைஞர்கள் யதார்த்த வேலை உலகை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதாலேயே அவர்கள் படித்த படிப்பிற்கும் வேலை உலகத்திற்கும் நடுவே இடைவெளி காணப்படுகிறது. சிலர் ஐந்து வயதில் உருவாக்கிய வரைபடத்தை ஐம்பது வயதிலும் பயன்படுத்த முயற்சிக்கும்போது முரண்பாடு ஏற்படுகின்றது. மன அழுத்தம் உண்டாகின்றது.

ஒரு கணினி தொழில்நுட்ப உதவியாளர், அவரது மனைவி குழந்தைகளுடன் வீட்டைவிட்டு போய்விட்டதாகக் கூறி மனம் வருந்தினார். மனைவியைப் பிரிந்து வாழ்வது வருத்தம் அளிக்கவில்லை. ஆனால் குழந்தைகளை பிரிந்து வாழ்வது வருத்தமாக உள்ளது என்றார். எந்த வேலை பார்த்தாலும் ஒரு வருடத்திற்கு மேல் நிலைத்து அந்த வேலையை பார்ப்பதில்லை என்று மனைவி கணவன் மீது குற்றம் சுமத்தினார். மேலும் வீட்டில் சரியாக பேசுவதில்லை, அன்புடன் நடந்து கொள்வதில்லை, ஆகவே இனிமேல் கணவருடன் சேர்ந்து வாழப் பிடிக்கவில்லை என்று மனைவி கூறினார்.

கணினி தொழில்நுட்ப உதவியாளரின் இளமைக்கால செயல்பாடுகளை ஆராய்ந்தால் கல்லூரி படிப்பை தொடராமல் தவறவிட்டது, அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டது, வேலை அளிப்பவரிடம் எதிர்வாதம் செய்தது போன்ற எவரிடமும் ஒத்துப்போகாத மனோ பாவத்தை வளர்த்துக் கொண்டவர் என்று தெரியவந்தது. அவரிடம் திறமை, புத்திக்கூர்மை இருந்ததால் மட்டுமே அவ்வப்போது பணிவாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரது மனோபாவமும், செயல்பாடுகளும் முரண்பாடாக இருந்ததால் எந்த வேலையிலும் நிலைக்க முடியவில்லை.

அவர் சின்னவயதில் பிறந்தநாளை கொண்டாடும்போது பெற்றோர்கள் இரு சக்கர மோட்டார் வாகனம் வாங்கித் தருவதாகக் கூறி வாங்கித் தராமல் இருந்தது மற்றும் பலசமயங்களில் பெற்றோர்கள் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றாமல் போனது அவருக்கு பெற்றோர் மேல் நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தியதாகக் கூறினார்.

சராசரி குடும்பங்களில் இது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால் அவற்றை மனதில் நிறுத்திக் கொண்டு பெற்றோர்களை நம்பி எந்தவித பயனும் இல்லை என்று முடிவு செய்தார். அவ்வாறு முடிவு செய்தவுடன் பிரச்சினை குறைந்துவிட்டது. ஆனால் புது பிரச்சினை கிளம்பியது. அவர் யாரையும் நம்பத் தயாராக இல்லை. மன நல மருத்துவரின் ஆலோசனைகளை பெறும் அளவுக்கு போய்விட்டது. தான் எந்த சூழ்நிலையிலும் சரியாக இருப்பதாக கருதிக் கொண்டு செயல்பட்டதால் அவரது மனநலம் குன்றியது. தனிமைப்படுத்திக் கொண்டதாலும் பிறரை நம்பத் தயங்கியதாலும் மேலும் மன அழுத்தம் அதிகமானது.

நாமாக மனதில் ஏற்படுத்திக் கொண்ட வரைபடத்தை மாற்றி அமைக்க தயங்கக் கூடாது. அத்தகைய முயற்சி கடினமானதாக இருந்தாலும் தயக்கம் காட்டாமல் முயல வேண்டும். உண்மையை உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்ற சிந்தனை ஒழுக்கம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

வெற்றி- தோல்விக்கான முக்கியத்துவம் :

ஒருவர் சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்கினார். அவரை யாராலும் வெல்ல முடியாது. விளையாடும்போது போட்டி மனப்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்றே முயற்சிப்பார். ஆனால் இந்தமுறை போட்டி அவருக்கும் அவரது மகளுக்கும் இடையில் ஏற்பட்டது. வழக்கம்போல் போட்டி போட்டுக் கொண்டு விளையாடித் தன் மகளை தோற்கடித்து விட்டார்.

சோர்ந்து போன முகத்துடன் காணப்பட்ட தன் மகளை காணும்போது அவருக்கு மனது பொறுக்கவில்லை. எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது தவறு. மகளுடன் விளையாடும்போது தோற்றால், அப்பா- மகள் உறவுக்கு வெற்றி தான். விளையாட்டில் வேண்டுமானால் தோல்வி ஏற்படலாம் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தார்.

நல்லொழுக்கம் என்பது முறையாக ஆரோக்கியமான ரீதியில் துன்பத்தை பொறுத்துக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலுதல் ஆகும். இத்தகைய பழக்கம் இளைஞர் களுக்கு ஏற்பட்டால் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காணும் பக்குவம் வந்துவிடும்.

உடனடியாக இன்பம் தரக்கூடியவற்றை தள்ளிப் போடுதல், செயலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படுதல், உண்மைக்கு புறம்பாக எக்காலத்திலும் செயல்படாத பண்பு, வெற்றி தோல்விகளை சமமாக பாவிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவையே சுய கட்டுப்பாட்டுடன் செயல்படுபவர்களிடம் உள்ள குணநலன்களாகும்.

மனித குலத்தின் வளர்ச்சிக்கு சுயகட்டுப்பாட்டுடன் கூடிய நல்லொழுக்கம் முக்கியம். ஆனால் அதுவே கர்த்தா கிடையாது. உண்மையில் காரணமாக இருப்பது விலை மதிக்க முடியாத அன்பே ஆகும். அன்பை ஆதாரமாகக் கொண்டு ஒவ்வொரு குடும்பமும் செயல்படும்போது அக்குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்களின் செயல்பாடுகளும் அன்பின் ஆதாரமாகவே அமையும். மன அழுத்தம் இல்லாத மன மலர்ச்சி இளைஞர்களிடம் தோன்றும்போது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தோன்றும். அவற்றை உள்வாங்கிக் கொண்டு செயல்படும்போது முழுமையாக மனநிறைவுடன் பலரும் பயன் பெறும் வகையில் செயல்பட முடியும். மனவளத்துடன் கூடிய மனித வளமே முழுமையான வளர்ச்சி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக