புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருந்த வேண்டும் Poll_c10திருந்த வேண்டும் Poll_m10திருந்த வேண்டும் Poll_c10 
24 Posts - 77%
heezulia
திருந்த வேண்டும் Poll_c10திருந்த வேண்டும் Poll_m10திருந்த வேண்டும் Poll_c10 
5 Posts - 16%
viyasan
திருந்த வேண்டும் Poll_c10திருந்த வேண்டும் Poll_m10திருந்த வேண்டும் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
திருந்த வேண்டும் Poll_c10திருந்த வேண்டும் Poll_m10திருந்த வேண்டும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருந்த வேண்டும் Poll_c10திருந்த வேண்டும் Poll_m10திருந்த வேண்டும் Poll_c10 
201 Posts - 40%
heezulia
திருந்த வேண்டும் Poll_c10திருந்த வேண்டும் Poll_m10திருந்த வேண்டும் Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
திருந்த வேண்டும் Poll_c10திருந்த வேண்டும் Poll_m10திருந்த வேண்டும் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருந்த வேண்டும் Poll_c10திருந்த வேண்டும் Poll_m10திருந்த வேண்டும் Poll_c10 
21 Posts - 4%
prajai
திருந்த வேண்டும் Poll_c10திருந்த வேண்டும் Poll_m10திருந்த வேண்டும் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
திருந்த வேண்டும் Poll_c10திருந்த வேண்டும் Poll_m10திருந்த வேண்டும் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
திருந்த வேண்டும் Poll_c10திருந்த வேண்டும் Poll_m10திருந்த வேண்டும் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருந்த வேண்டும் Poll_c10திருந்த வேண்டும் Poll_m10திருந்த வேண்டும் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருந்த வேண்டும் Poll_c10திருந்த வேண்டும் Poll_m10திருந்த வேண்டும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருந்த வேண்டும் Poll_c10திருந்த வேண்டும் Poll_m10திருந்த வேண்டும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருந்த வேண்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 3 Mar 2015 - 3:42


சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் நிகழ்ந்த பாலியல் பலாத்காரத்தில் குறிப்பிட்ட பெண்ணை பலவந்தம் செய்ததில் ஓர் இளைஞருக்கும் பங்கு இருந்தது. இவ்விளைஞரைச் சிறுவர் என்று நம் பத்திரிகைகள் அழைக்கின்றன. நம் நீதிமன்றங்கள் அழைக்கின்றன. இதில் உள்ள அடிப்படையை ஆராய வேண்டும்.

பெருங்குற்றம் செய்வதில் சிறுவர் என்ன? பெரியவர் என்ன? சின்ன வயதிலேயே ஒரு பெருங்குற்றத்தைச் செய்வானேயானால், சிறுவன் என்ற முறையில் அவனைத் தண்டிக்காமல் விடுவது சரிதானா?

தாமாகத் திருந்திவிடுவார்கள் என்று விடப்பட்ட குற்றவாளிகளில் எத்தனை பேர் திருந்தி உள்ளார்கள்? பல பேர் திருந்துவது இல்லை என்பதுதான் படிப்பினையாக இருக்கிறது.

ஒரு பெண் ஒவ்வொருவராகத் திருமணம் செய்து, திருமணம் செய்துகொண்டவரிடமிருந்து பணமும் நகையும் பறித்துத் தப்பி விட்டு, பிறகு அடுத்தவரைத் திருமணம் செய்து கொள்வது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இப்படி நான்கு பேரை மாற்றி மாற்றித் திருமணம் செய்துகொண்ட அந்தப் பெண் நான்காவது நபரை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட போது, அவரிடமிருந்து ஐந்து இலட்சம் பணமும், ஐந்து பவுன் நகையும் வேண்டும் என்று கேட்டாள், அவர் விழித்துக் கொண்டார். விசாரிக்கத் தொடங்கினார்.

இந்தப் பெண்ணுக்கு இதுதான் வேலை என்று அறிந்தவுடன், காவல்துறையிடம் முறையிட்டு அந்தப் பெண் அண்மையில் கைது செய்யப்பட்டிருக்கிறாள். முதல் தவற்றின் போதே தண்டிக்கப்பட்டிருந்தால் இத்தனை பேர் ஏமாறவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

சாலையில் நடக்கும் போக்குவரத்துக் குற்றமும், பிக்பாக்கெட் அடிக்கும் குற்றமும் வீடுகளில் திருடுவோர் செய்யும் குற்றமும் இன்னபிற குற்றங்களும் நிரூபிக்கப்பட்டவுடன் அவர்களுக்குத் தண்டனை அளிக்காமல், தவறும் சமுதாயத்தில் குற்றங்கள் குறையாது. நாளும் பல்கிப் பெருகுவதையே நடப்பில் பார்க்கிறோம்.

சிலப்பதிகாரத்தில் கோவலன் கையில் இருந்த காற்சிலம்பை அரண்மனையில் திருடப்பட்ட சிலம்பு என்று பொற்கொல்லன் மன்னரிடம் தெரிவித்து மரணதண்டனை வாங்கிக் கொடுத்துவிடுகிறான்.

அதனால், வாழ்க்கையை இழந்த கண்ணகி, வழக்காட பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மனையில் நுழைந்து, "தேரா மன்னா' என்று அழைத்து நியாயம் வேண்டியபோது, ஒரு கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோன்மை அன்று என்று பாண்டிய அரசன் இயல்பாகச் சொல்கிறான்.

இன்ன பிற செய்திகள் ஒரு பக்கம் இருந்தாலும், திருடனைக் கொன்று விடுவது முற்காலத்தில் வழக்கமாக இருந்திருக்கிறது. அதிலிருந்து இன்னபிற குற்றங்களுக்கு எத்தகு தண்டனை வழங்கப்பட்டிருக்கும் என்பதை ஊகித்து விடலாம்.

குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதில், நாட்டுக்கு நாடு வேறுபாடு இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவையும் சிங்கப்பூரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இதனைப் புரிந்து கொள்ளலாம்.

சாலை போன்ற பொது இடங்களை எவ்வளவு அசுத்தப்படுத்தினாலும், இந்தியாவில் கேள்வி கேட்பாரில்லை. தெருவைக் கூட்டி அடுத்த வீட்டு வாசலில் ஒதுக்குவோர் இன்னும் இருக்கிறார்கள். சாலையை அசுத்தப்படுத்துவோர் கடுங் குற்றம் செய்தவராகக் கருதப்பட்டுத் தண்டனை வழங்குவது சிங்கப்பூரில் இன்னும் வழக்கத்தில் இருக்கிறது. விளைவு, அந்த நாட்டில் சாலையை அசுத்தப்படுத்துவோர் இல்லை.

சிங்கப்பூரில் பொதுவாக கொசு இல்லை. காக்கை இல்லை. அதன் அடையாளம் அந்த நாடு தூய்மையாக இருக்கிறது என்று பொருள். கொசு அழுக்கிலிருந்து பிறக்கிறது. இருட்டில் இருந்து பிறக்கிறது. ஆனால், எல்லா நோய்களையும் உண்டாக்குகிறது.

அதுமட்டுமில்லாமல், மனிதனின் உறக்க நேரத்தை ஒழித்துக் கட்டுகிறது. இரவில் உறங்க வாய்ப்பில்லாத மனிதன் பகலில் வேலை செய்யும் இடத்தில் சோர்வாகச் செயல்படுகிறான். வேறு வழி?

செத்த எலி, உண்ட இறைச்சித் துண்டங்கள் இவையெல்லாம் தெருவில் சிதறிக் கிடப்பதால், வானத்தில் காகங்கள் வட்டமிடுகின்றன.

இதனை அறிந்துகொண்ட சிங்கப்பூர் அரசு அசுத்தங்களுக்குப் பொது இடங்களில் இடமே இல்லை என்னும்படிக்குச் செயல்படுகிறது. அங்குள்ள அடுக்கு வீடுகளில் சிங்கப்பூர் அரசின் உள்ளாட்சி ஊழியர்கள் ஈரம் இருக்கும் இடமெல்லாம் கொசு மருந்து அடிப்பதைக் காணலாம்.

நாட்டிலேயே மிக அசுத்தமாக இருக்கும் பகுதி தமிழர் மிகுதியாக வாழும் பகுதி என்று கேவலமாகப் பேசும்படி இருக்கிறது. இதே பார்வையும் சொல்லும் இந்தியத் தலைநகரான தில்லியிலும் சென்னைத் தமிழரைப் பற்றிப் பேசப்படுகின்றன.

தவறு செய்பவர் தமக்குத் தண்டனை உறுதியாக உண்டு என்று நம்பும்படியாக காவல் துறையும் நீதித் துறையும் அவற்றைப் பின்னிருந்து இயக்கும் அரசுத் துறையும் இருக்கவேண்டும்.

தவறு செய்தால் பண நோட்டுகள் சிலவற்றைக் கொடுத்துவிட்டால் போதும் தப்பிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கும் நாட்டில் தவறுகள் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும்.

வெளிநாடுகளில் "நோ பார்க்கிங்' என்ற இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் உடனடியாகக் காவல் துறையின் நடவடிக்கை பாயும். சில சமயம் வண்டியையே காவல்துறையினர் சிறைப்படுத்தி எடுத்துச் சென்று விடுவது உண்டு.

வாகனத்தின் மீது "உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது' என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டிருப்பதும் உண்டு.

இத்தகு இடங்களில் போக்குவரத்தை மீறும் குற்றங்கள் மிகக் குறைவு. போக்குவரத்தை மீறினால் என்ன என்ன நடக்கும்? இந்தக் கேள்விகளுக்கு நம் நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளைக் கவனித்தால் விடை கிடைத்துவிடும்.


க.ப. அறவாணன்




திருந்த வேண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 3 Mar 2015 - 7:57

மன்னன் எப்படியோ அப்படியே மக்களும்... அரசு எப்படியோ அப்படியே அதிகாரிகள்.. .......சட்டத்தை மதித்து நடப்பவனே நல் மனிதனாவான்..........மற்றவன்........வாதியாவான். என்னே நிர்வாகம்........??????

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக