புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
87 Posts - 64%
heezulia
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
sram_1977
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
prajai
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Shivanya
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
423 Posts - 76%
heezulia
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 1%
prajai
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
sram_1977
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_m10தேர்வை சந்திப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வை சந்திப்பது எப்படி?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Mar 02, 2015 2:52 pm

இன்னும் ஒரு சில நாட்களில் பொதுத் தேர்வு துவங்க இருக்கிறது. எவ்வளவு தான் சிறப்பாக படித்திருந்தாலும், தேர்வு நாள் நெருங்க நெருங்க பெரும்பாலான மாணவ – மாணவியருக்கு பயம், பதற்றம் மற்றும் டென்ஷன் ஏற்பட்டு, படித்ததெல்லாம் மறந்து விடும் நிலைமைக்கு ஆளாகின்றனர். இது, முழுக்க முழுக்க தவிர்க்கப்பட வேண்டியது. தன்னம்பிக்கையை வளர்த்து, வெற்றி பெற, கீழே உள்ள, ‘டிப்ஸ்’கள் உங்களுக்கு பயன்படும். படித்து பயன் பெறுங்களேன்.
தேர்வை சந்திப்பது எப்படி? OB07ma4qQj6TNCoZk0X1+plus-2-exam
தேர்வை சந்திப்பது எப்படி?
* திட்டமிடாமல் கடைசி நேரத்தில் படிப்பது மற்றும் அவசரப்படுவது, டென்ஷனைத் தான் உருவாக்கும்.

* உங்கள் லட்சியங்களையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் எண்ணிப் பார்த்து, அதிக மதிப்பெண்கள் பெற உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். மதிப்பெண் பட்டியல் என்பது, உங்கள் எதிர்காலத்தின் பாஸ்போர்ட் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுவிடும்.

* ஒருநாள் முழுவதும் செய்ய வேண்டிய, படிக்க வேண்டிய வேலையை பட்டியலிட்டு, உடனே படிக்க வேண்டியதை அவசரம் என்றும், உடனே படிக்க வேண்டாததை, முக்கியம் என்றும் குறியுங்கள். அவசரம் என்று இருப்பதை அதிகாலையிலும், முக்கியமானதை மாலையிலும் படிக்கலாம். எழுத்து வேலைகளை நிதானமாக செய்யலாம்.

* பயம் உங்கள் உடல் மற்றும் மனதை செயல் இழக்கச் செய்வதுடன், தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, அவநம்பிக்கை மற்றும் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கி, உங்களை அழித்து விடும். அதனால், பயத்தை விட்டொழியுங்கள்!

* எவ்வளவு புத்திசாலித்தனமாக திட்டமிட்டாலும், நேரம் வீணாவது என்னவோ நடந்து கொண்டு தான் இருக்கும். அதனால், பாடங்களை பகிர்ந்தளித்து நேரத்தை மிச்சப்படுத்துங்கள். படிப்பதை ஒத்தி போடாமல், எதைப்படித்தாலும் விரைவாகவும், சுறுசுறுப்பாகவும் படியுங்கள்.

* படிப்பதற்கு அதிகாலை நேரமே ஏற்றது. அதிகாலைப் பொழுதில் மனமும், உடலும் மிகவும் ஒன்றிணைந்து இருக்கும்.

* பொதுவாக, இரவில் அதிகபட்சம், 11:00 மணி வரை படிக்கலாம்; பின், ஐந்து மணி நேரம் நிம்மதியான தூக்கம். அதன்பின், அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து படிக்கும் போது, மனதில் பாடங்கள் பசுமரத்தாணி போல பதியும்.

* நாள் முழுவதும் படித்தாலும், முக்கியமற்ற பாடங்களுக்காக நேரத்தை செலவிட்டால், அதில் எவ்வித பயனும் ஏற்படாது. எனவே, எந்தப் பாடங்கள் முக்கியம், எந்தப்பாடங்கள் உங்களுக்கு எளிமை, எந்தப்பாடங்களை படிக்க விரும்புகிறீர்கள், கடினமான மற்றும் புரியாத பாடங்கள் எவை என்று கண்டறிந்து, திட்டமிட்டு நேரத்தை செலவிடுங்கள்.

* ஒரு பாடத்தை படிக்கும் போது, மொத்தமாக படிக்காமல், அதை பல பிரிவுகளாக பிரித்து, சிறு சிறு தலைப்புகளைச் சூட்டி, அதை குறிப்புகளாக தயாரித்து படிக்கலாம். அக்குறிப்புகள் அப்பாடத்தின் கருத்தை எளிதில் ஞாபகத்திற்கு கொண்டு வருவதுடன், தேர்வு நேரத்தில் எளிதில் ஞாபகத்திற்கு வரும்.

* கண்டிப்பாக எந்த ஒரு செயலையும் தொடர்ந்து செய்யக் கூடாது. படிக்கும் போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும், ஐந்து நிமிடம் இடைவெளி கொடுக்கலாம். தொடர்ந்து படிப்பதால், மூளை எளிதில் சோர்வடைந்து விடும். திறந்த வெளி அல்லது ஜன்னலின் ஓரம் நின்று, நன்றாக மூச்சை இழுத்து, மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். காலாற நடந்த பின்போ, உங்களுக்கு பிடித்தமான இசையை கேட்ட பின்போ படிக்கலாம். ஆனால், மறுபடியும் படிப்பதை மறக்காமல் தொடர வேண்டும்.

* நீண்ட நேரம் தூங்காமல், தொடர்ந்து படிக்கும் போது, கண்கள் சோர்ந்து, களைத்து விடும். அதனால், தூங்க தயாராகும் போது, வெள்ளரித்துண்டை மூடிய இமையின் மேல் சிறிது நேரம் வைத்து படுத்தால், கண்கள் பிரகாசத்துடன், ‘பளிச்’சென்று இருக்கும்.

* கீரைகள், பழங்கள், காய்கறிகள், கொண்டைக்கடலை, பேரீட்சை, பாதாம் பருப்பு, பசும் பால் மற்றும் தயிர் ஆகியவற்றை தேர்வு நேரத்தின் போது, கட்டாயம் உண்ண வேண்டும்.

* மாணவர்கள் படிக்கும் போது அமைதியான, நிசப்தமான சூழ்நிலை தேவை. அதனால், பொற்றோர், மாணவர்களின் கவனத்தை களையும் வகையிலான, தேவையற்ற சத்தத்தை வீட்டில் குறையுங்கள்.

* தேர்வு நாளில் எளிய உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகளை, 10 நிமிடங்கள் செய்யுங்கள். பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் மாதவிலக்கு வயிற்று வலியும், அதிக ரத்தப் போக்கும் தேர்வு பயத்தில் அதிகமாகலாம். இது, உடல் மற்றும் மனநிலையை பாதிக்கும் என்பதால், முதலிலேயே மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெறுவது அவசியம்.

தேர்வு நாளை சந்திப்பது எப்படி என்று பார்ப்போம்…
தேர்வுக்கு தேவையான உபகரணங்களான பேனா 2 (மை நிரப்பி), பென்சில், ரப்பர், ஸ்கேல் மற்றும் ஷார்ப்னர் போன்றவற்றை முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஹால் டிக்கெட், அடையாள அட்டை மற்றும் பஸ் பாஸ் இவை உங்கள் பையிலேயே இருக்கட்டும். குளுக்கோஸ் கலந்த நீர் கொண்டு செல்லவும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். சரியான நேரத்தை காட்டும் கடிகாரத்தை கட்டிச் செல்லவும். தேர்வுக்கு வெற்றி மனோபாவத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செல்லுங்கள்.

* தேர்வு அறையில் உண்டாகும் மன பதற்றம், கை, கால் வியர்வை, நடுக்கம், பய உணர்வு போன்றவைகளை தவிர்க்க வேண்டும். ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி, ‘நான் அமைதியாக பயமில்லாமல், உற்சாகமாக இருக்கிறேன்; இத்தேர்வில் வெற்றி பெறுவேன்…’ என்று நிதானமாக மனதிற்குள் கூறினால், படபடப்பு குறையும். கைகளை ஐந்து முறை இறுக்கமாக மூடி திறங்கள்; கழுத்து, தோள்பட்டையை தளர்த்துங்கள்; இப்போது, உங்களுக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும்.

* கேள்வித்தாளை பதற்றமில்லாமல், அமைதியாக வாசியுங்கள். சுருக்கமான பதில்களுக்கு நீண்ட பதில்களும், நீண்ட பதில்களுக்கு சுருக்கமான பதில்கள் எழுதுவதை தவிருங்கள். நன்றாக தெரிந்த பதில்களை முதலில் எழுதுங்கள். ஒவ்வொரு கேள்விப் பகுதிக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். எக்கேள்வியையும் விட வேண்டாம். மதிப்பெண்களுக்கு தகுந்த மாதிரி நேரத்தை ஒதுக்குங்கள். எதிர்பாராத பகுதியிலிருந்தோ, படிக்காத பகுதியிலிருந்தோ கேள்விகள் வந்திருந்தால், மனம் பதற வேண்டாம்.

* விடைகள் எழுதும் போது பதற்றமில்லாமல், தகுந்த தலைப்புகளை பயன்படுத்தி, தெளிவான முறையில் எழுதுங்கள். கேள்விக்கு தகுந்த பதிலை சுற்றி வளைக்காமல் எழுதுங்கள். படித்ததையெல்லாம் எழுதிவிட வேண்டும் என்று எழுதாதீர்கள். இறுதியில் எழுதியவற்றை சரி பார்க்க, முதலிலேயே நேரம் ஒதுக்குங்கள். எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், அடித்தல் இல்லாமல் எழுதுங்கள். மறக்காமல் பதிவு எண், பக்கம் எண், கேள்வி எண் எழுதுங்கள். இறுதியில், விடைத்தாள்களை சரிபார்த்து இறுக்கமாக கட்டுங்கள்.

* கையெழுத்து அழகாக இல்லாவிட்டாலும், தெளிவாக, புரியும்படி, வாசிக்கும்படி இருக்க வேண்டும். தேவையான இடங்களில், உதாரணங்களை மறக்காமல் எழுதுங்கள்.
நீங்கள் வெற்றி பெற திட்டமிட்டதற்கு பின், வேண்டாத சிந்தனைகளை தூக்கி எறியுங்கள். தோல்வி கண்டவர்களை பார்க்காதீர்கள்; வெற்றியாளராக மாறுங்கள். வாழ்த்துகள்.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Mar 02, 2015 4:16 pm

மாணவர்களுக்கு நல்ல பயனுள்ள தகவல். நன்றி பவுன்ராஜ் யா.


கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue Mar 03, 2015 1:00 pm

தேர்வை சந்திப்பது எப்படி? 3838410834 தேர்வை சந்திப்பது எப்படி? 3838410834 தேர்வை சந்திப்பது எப்படி? 3838410834

தேர்வை சந்திப்பது எப்படி? 103459460

தேர்வை சந்திப்பது எப்படி? 1571444738



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 03, 2015 4:08 pm

தேர்வை சந்திப்பது எப்படி? 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக