புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_c102015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_m102015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_c10 
16 Posts - 59%
heezulia
2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_c102015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_m102015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_c102015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_m102015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_c10 
58 Posts - 62%
heezulia
2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_c102015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_m102015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_c102015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_m102015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_c102015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_m102015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 28, 2015 8:41 pm

சேவை வரி உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

மத்திய பட்ஜெட்டில் சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

மத்திய பட்ஜெட்டில் வணிகர்களுக்கென்று முத்ரா வங்கி என்ற பெயரில் தனி வங்கியை அமைக்க உள்ளதாக அறிவிப்பு செய்த பிரதமர் நரேந்திரமோடி, நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோருககு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

வணிகர்கள், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமானவரி விலக்கு வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். சேவைவரி 12 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை 10 சதவீதமாக குறைக்க வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்கள் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், விவசாயிகளுக்கான திட்டங்கள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை முன்னிலைப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 28, 2015 8:44 pm

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்காதது ஏமாற்றம் : இளங்கோவன்
-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிக்கையில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது என்று கூறியுள்ளார்.

மேலும்,

அதேநேரத்தில் நிறுவன வரியை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைத்திருப்பது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசு என்பது வெளிப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்தால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். நமது நாட்டு மக்கள் தொகையில் மிகமிக குறைவானவர்களே வருமான வரி செலுத்தி வருகிறார்கள். இதற்கு காரணம் போதிய கல்வி அறிவு இல்லாத நிலையில் வருமான வரி கட்ட வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்நிலையில் கடுமையான நடவடிக்கை பயன் தருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
-

நிதியமைச்சர் எல்லாவற்றிற்கும் அரசு - தனியார் துறை இணைந்த முயற்சிகளையும், அந்நிய முதலீட்டையும் தான் தொழில் வளர்ச்சிக்கு நம்பியிருக்கிறாரே தவிர, நமது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்பதையே காட்டுகிறது. சேவை வரியை 12.34 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரித்திருப்பது சாதாரண, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கிற நடவடிக்கையாகும்.

கடந்த ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்காக பல அறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தன. அதில் குறிப்பாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக தமிழகத்தில் மருத்துவ நிலையம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் அதே அறிவிப்பை மறுபடியும் செய்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கையாகும். அதேபோல சென்னை கே.கே. நகரில் ரூ.180 கோடியில் 200 படுக்கைகளுடன் முதியோர் மருத்துவ நிறுவனம் தொடங்கப்படும் என்று கடந்த முறை அறிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது என்று கூறியுள்ளார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 28, 2015 8:46 pm

மத்திய பட்ஜெட்: எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது: ஜெயலலிதா
-


பலவகையான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தாலும், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியபோது, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற தமது வேண்டுகோளை ஏற்றும், இதற்காக 3 இடங்களில் நிலம் ஒதுக்க தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடிதமும் எழுதியிருந்தேன். அதே நேரத்தில் உலக பாரம்பரிய கலாச்சார சின்னத்திற்கான உதவியை பெறுவதற்கு தமிழகத்தில் எந்தவொரு பாரம்பரிய கலாச்சார சின்னமும் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் தொழில்துறை வளர்ச்சிக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மதுரை-தூத்துக்குடி, சென்னை-பெங்களூரு போன்ற வணிக வழித்தட தொழில் முனையங்களுக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும். மொத்தத்தில் பலவகையான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தாலும், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 28, 2015 8:47 pm

உண்மை நிலைக்கு ஏற்றவாறு பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை: ஜி.கே. வாசன்
-


மத்திய அரசின் பொது பட்ஜெட் உண்மை நிலைக்கு ஏற்றவாறான அறிவிப்பு இல்லையென குற்றஞ்சாட்டினார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.திருவாரூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. மக்கள் பயன்பெறும் மிகப் பெரிய திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்துக்கு சொற்ப அளவில் தொகை ஒதுக்கியுள்ளது. கோடிக்கண க்கான மக்கள் பயன்பெறும் இத்திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும்.

தென்மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். காவிரியில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகத்தின் பிடிவாத போக்கு ஜனநாயகத்துக்கு எதிரானது. இப்பிரச்னையில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு அதிகாரப்பூர்வமாக தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை - தமிழக மீனவர்கள் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாநில அரசின் வளர்ச்சிக்கு ஏற்ப நிதி ஒதுக்காதது கவலையளிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதுடன் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதால் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டுமென்றார் வாசன்.

பேட்டியின் போது, கட்சியின் மாவட்டத் தலைவர் குடவாசல் தினகரன், முன்னாள் பேரவை உறுப்பினர் எம். ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் செந்தில்பாண்டியன், சங்கர், செல்லதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
-
--தினமணி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக