புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! Poll_c10தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! Poll_m10தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! Poll_c10தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! Poll_m10தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! Poll_c10 
3 Posts - 8%
heezulia
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! Poll_c10தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! Poll_m10தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! Poll_c10தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! Poll_m10தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! Poll_c10தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! Poll_m10தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 24, 2015 10:03 am

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! LGAFgQVJToahj4MiLGiw+thamizhukku_2319027f

முக்கியப் பிரச்சினை, முதன்மைக் கதாபாத்திரம், அழகான ஊர்களில் டூயட், குத்துப் பாடல் என்று எதுவும் இல்லை. வெவ்வேறு கதாபாத்திரங்கள், வெவ்வேறு பின்னணிகள், வெவ்வேறு பயணங்கள் ஆகியவற்றை ஒரு புள்ளியில் இணைக்கும் திரைக்கதையுடன் களமிறங்கியிருக்கிறார் புது இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா.

ஓட்டேரியில் வசிக்கும் வசந்த் (நகுல்) எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் இளைஞன். அறிவியல் சோதனை களைச் செய்துவரும் இளம் மேதை. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ‘புராஜெக்ட் ரிப்போர்ட்’ எழுதிக் கொடுத்து சம்பாதிக்கிறார். இவரிடம் புராஜெக்ட் வாங்கும் ஹரிணி (ஐஸ்வர்யா தத்தா) நகுல் மீது காதல் வயப்படுகிறார்.

வங்கியில் கடன் ஆலோசனை அதிகாரியாகப் பணியாற்றும் சிமி (பிந்து மாதவி), தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்கிக் காப்பாற்றுவதைச் சேவையாகச் செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் முகவர் முகிலை (அட்டக்கத்தி தினேஷ்) தற்கொலை கேஸ் எனத் தவறாக நினைத்து கவுன்சிலிங் கொடுக்கப் போய் அது காதலாக மாறுகிறது.

கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜாவின் (சதீஷ்) வண்டியில் ஒருவர் தன் பெண்ணுடன் (ஷாலு) பயணம் செய்கிறார். தன்னை ‘மாப்பிள்ளை பார்க்க’ அவர்கள் வந்திருப்பது தெரியாமல் ஓவராகப் பேசும் சதீஷைப் பெண்ணின் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. பெண்ணுக்குப் பிடித்துவிடுகிறது. சென்னையில் குண்டுவெடிப்பை நிகழ்த்த வருகிறான் ஒரு தீவிரவாதி. சதீஷின் கால் டாக்ஸியில் செல்போன் வெடிகுண்டு பொருத்தப்படுகிறது.

இதற்கிடையில் சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் காந்தப் புயலின் தாக்கம் காரணமாக செல்போன் அலைவரிசை பாதிக்கப் படுகிறது. செல்போன் தொடர்பு கிடைக்காததால் தீவிரவாதியின் சதித் திட்டம் முடங்குகிறது. பிந்து மாதவி கட்டுமானம் நடக்கும் இடத்தில் குழியில் சிக்கிக் கொள்கிறார். தன்னைக் காப்பாற்றும்படி காதலனுக்கு அவர் அனுப்பிய குறுஞ்செய்தி அலைவரிசை பிரச்சினையால் போய்ச் சேரவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தக் குழியின் மீது மாபெரும் பாறை ஒன்று விழவிருக்கிறது.

நகுல் தன்னுடைய அலாதியான வழியில் செல்போன்களை வேலை செய்யவைக்க முயல்கிறார். செல்போன்கள் வேலை செய்யத் தொடங்கினால் பிந்து மாதவி காப்பாற்றப்படலாம். அதே நேரம் குண்டு வெடித்துப் பலர் இறக்கலாம். கடைசியில் என்ன ஆயிற்று?

தனித்தனிப் பாதைகளில் பயணிக்கும் நான்கு கதைகளையும் செல்போன் அலைவரிசை என்னும் புள்ளியில் சந்திக்கவைக்கிறார். இயக்குநர். கதாபாத்திரங்களைக் கவனமாகச் செதுக்கியிருக்கிறார். மூன்று கதைகளும் விறுவிறுப்பாக நகரும்படி முடிச்சுகளைச் சரியாகப் போட்டிருக்கிறார். ஒரு பிரச்சினை வெவ்வேறு சூழல்களில் உள்ள மனிதர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதைச் சுவையாகவே காட்டியிருக்கிறார். மூன்று காதல்களையும் வித்தியாசமாகச் சித்தரித்திருக்கிறார்.

பிந்து மாதவியின் காதல் அவஸ்தைகள் ரசமாக உள்ளன. கடைசிக் கட்டத்துப் பரபரப்பு பார்வையாளர்களையும் தொற்றிக் கொள்ளுமளவு காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. மும்பை தீவிரவாதி குண்டு வெடிக்கச் செய்வதற்கான முயற்சிகள் பலவீனமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடைசியில் குண்டு வெடிக்கும் விதம் கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது. பல் வேறு ‘தற்செயல்’ நிகழ்வுகளின் துணையுடன் கிளைமாக்ஸைக் கட்டமைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். வாஸ்து கல் சம்பந்தமான கதையை நம்ப முடியவில்லை.

செல்போன் பறிகொடுத்தவனுக்கும் திருடுபவனுக்கும் இடையிலான உரையாடல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் நம்பகமாக இல்லை. பொறியியல் கல்லூரி கிண்டல்கள் விவாதத்துக்கு உரியவையாக இருக்கலாம். ஆனால் திரை அரங்கில் இந்தக் காட்சிகளுக்குப் பலத்த வரவேற்பு. மூன்று காதல்களில் காமெடியனின் காதலை மட்டும் இளக்காரமாகக் கையாண்டதைத் தவிர்த்திருக்கலாம். மற்ற இரு பெண்களும் கண்ணியமாகக் காட்டப்பட்டி ருக்கையில் கீழ்மட்ட நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் நடத்தையைப் பற்றிய பரிகாச வசனங்கள் உறுத்தலாக இருக்கின்றன.

நகுல், தினேஷ், ஐஸ்வர்யா, பிந்து மாதவி, மனோபாலா, சதீஷ் ஆகியோர் தத்தமது பாத் திரங்களை உணர்ந்து நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ஊர்வசியின் நடிப்பு எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறது. வெவ்வேறு கோணங்களில் பயணிக்கும் திரைக்கதைக்குப் பின்னணி இசை முக்கியமானது. அந்த முக்கியத்துவம் எஸ்.எஸ்.தமனின் இசையில் பிரதிபலிக்கவில்லை.

திரைக்கதையின் விறுவிறுப்புக்கு வி.ஜே. சாபு ஜோசப்பின் கச்சிதமான படத்தொகுப்பு முக்கியப் பங்காற்றியிருக்கிறது.எந்தக் கதாபாத்திரத்தையும் வீணாக்காமல், லாஜிக்கை விட்டு அதிகம் விலகாமல் கதை சொல்ல முயன்றிருக்கும் இயக்குநரைப் பாராட்டலாம். வெடிகுண்டு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் வேறு தளத்துக்குச் சென்றிருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 24, 2015 10:05 am

நல்லா இருக்கு....பார்க்கலாம்.......ஆனால் தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை, மேலும் கிளைமாக்ஸ் கொஞ்சம் 'ஜவ்வுபோல' இழுத்துவிட்டார்கள் .........மற்றபடி நல்ல படம்தான் புன்னகை ..எங்களுக்கு பிடித்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 24, 2015 10:50 am

அதற்குள் பார்த்து விட்டீர்களா...? எப்படி கிருஷ்ணாம்மா உங்களுக்கு மட்டும் டைம் கிடைக்கிறது...? நான் இன்னும் டவுன்லோட் போடவில்லை. படத்தின் தலைப்பே ஒரு மாதிரி இருந்ததால், சாரு யோசித்தேன். அனால், படத்தின் விமர்சனம் பார்க்கச்சொல்லுகிறதே.....
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 24, 2015 1:50 pm

நானும் தரவிறக்கம் செய்துவிட்டேன் . ஆனால் பார்க்கத்தான் முடியவில்லை... சோகம் சோகம் சோகம்

வேறென்ன நேரமின்மைதான் காரணம்...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 24, 2015 3:46 pm

நன்றி ...பார்த்துவிடுவோம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 24, 2015 3:59 pm

படம் முக்கால்வாசி பரபரப்பைத்தான் கொடுத்திருக்கிறது
என்றாலும் இசையைத் தவிர வேறு தலைவலி தரக் கூடிய
விஷயங்கள் இல்லையென்பதால்
தாராளமாக பார்க்கலாம்..!

அறிமுக இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் அடுத்தடுத்த
படங்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்..!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 24, 2015 11:43 pm

விமந்தனி wrote:அதற்குள் பார்த்து விட்டீர்களா...? எப்படி கிருஷ்ணாம்மா உங்களுக்கு மட்டும் டைம் கிடைக்கிறது...? நான் இன்னும் டவுன்லோட் போடவில்லை. படத்தின் தலைப்பே ஒரு மாதிரி இருந்ததால், சாரு யோசித்தேன். அனால், படத்தின் விமர்சனம் பார்க்கச்சொல்லுகிறதே.....
மேற்கோள் செய்த பதிவு: 1122388

இங்கே வேறு வேலை  இல்லையே விமந்தனி.....just  household  works  தானே...........( இந்தியாவில் மட்டும் என்ன கண்ணடி  ? )......... டிவி வேண்டாம் என்று சொல்லி  விட்டேன்..........ஸோ நெட் தான் ஒரே இடம் பொழுது போவதற்கு புன்னகை.என்ன இங்கு கொஞ்சம் ஸ்பீட் கம்மியாக வருது..............இல்லாவிட்டால் இன்னும்பார்க்கலாம்  ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
.
தலைப்புக்கு என்ன விமந்தனி?.....recorded message இல் வருவது போலத்தானே இருக்கு? புன்னகை
.
.
மேலும் நான் எப்பவுமே டைம் இல்லை என்று சொன்னதே இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 24, 2015 11:46 pm

M.Saranya wrote:நானும் தரவிறக்கம் செய்துவிட்டேன் . ஆனால் பார்க்கத்தான் முடியவில்லை... சோகம் சோகம் சோகம்

வேறென்ன நேரமின்மைதான் காரணம்...

ஹோ....உங்களுக்கு இதே பிரச்சனையா சரண்யா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 24, 2015 11:47 pm

பாலாஜி wrote:நன்றி ...பார்த்துவிடுவோம்
மேற்கோள் செய்த பதிவு: 1122456

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 24, 2015 11:47 pm

ayyasamy ram wrote:படம் முக்கால்வாசி பரபரப்பைத்தான் கொடுத்திருக்கிறது
என்றாலும் இசையைத் தவிர வேறு தலைவலி தரக் கூடிய
விஷயங்கள் இல்லையென்பதால்
தாராளமாக பார்க்கலாம்..!

அறிமுக இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் அடுத்தடுத்த
படங்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்..!
மேற்கோள் செய்த பதிவு: 1122466

ஆமாம் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக