புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வசூல் ராஜா MBBS !!!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
நல்லா சொன்னாங்க நம்ம பெரியவங்க.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று.. ஒவ்வொரு வீட்டிலும் பிரேம் போட்டு மாட்டவேண்டிய வாசகம் இது. இந்த வாழ்வு வாழ்வதற்கு நம்ம தாத்தாக்கள் ... திருவள்ளுவர், திருமூலர் போன்றவர்கள் பல சொல்லியிருந்தாலும் நம்ம விதி... இந்த அல்லோலகலப்பட வைக்கும் அலோபதியிடம்தானே மாட்டிக்கொள்ளும்படி நேரிடுகிறது.
அலோபதி டாக்டர்களிடம் போய் மாட்டிக்கொள்ளாத "புண்ணியவான்களே" நமது ஊரில் இருக்க முடியாது. "ரமணா" படம் எல்லாம் சும்மாதான். அந்தப்படம் கோலிக்குண்டு அளவுதான்; நிசம் இமயமலையைவிட பெரிசு.
என் அனுபவத்தில் இப்படி நான் மாட்டிக்கொண்ட நிஜக்கதைகள் ஏராளம். அதைப்பற்றி சொல்லத்தான் இந்தத்திரி. உறவுகள் நீங்களும் நிச்சயமாக மாட்டியிருப்பீர்கள். அதையும் இந்தத் திரியில் வெளியிடுங்கள். மேலே சொன்ன புண்ணியவான்களை உருவாக்க முடியுமா என்று பார்ப்போம்.
முதல் கதை:- "ஸ்டெதஸ்கோப்பை" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்!
(தொடரும்)

"ஒரு நாள் நோயாளி"யை "வாழ்நாள் நோயாளி"யாக்கி வருமானம் பார்க்கும் கில்லாடி டாக்டர் -தொடர்ச்சி...
காலையில் மருத்துவமனைக்குச் சென்றேன். பெட்டில் படுக்கச்சொன்னார்கள். TRACTION முறைப்படி (படம் பார்க்க) கையையும் காலையும் கட்டி விட்டு ஊசி மற்றும் மருந்து (சலைன் போல) ஏற்றினார்கள். ஏற்கனவே சொன்ன 'கரண்ட்' டெஸ்ட் வேறு முதலில் செய்தார்கள். 'டங்குவார்' கழன்று விட்டது என்று பேச்சுவழக்கில் சொல்வார்களே அது இதுதான் போலிருக்கிறது. அசதி என்றால் அப்படி ஒரு அசதி. வேலைக்கே போகமுடியாத நிலை.
இந்த 'ட்ரீட்மெண்ட்' காலை ஒரு வேளை மட்டுமல்ல. ஒரு நாளில் காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் இந்த மருத்துவம் தொடர்ந்தது.
இதைத் தொடர்ந்து மாத்திரைகள். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.... ஒரு வேளைக்கு 13 காப்ஸ்யூல் மாத்திரைகள். விதவிதமான நிறங்கள். அந்த டாக்டருடைய மனைவிதான் 'மெடிக்கல் ஷாப்' இன்சார்ஜ். என்னைப்போலவே பலரும் இப்படி மூட்டை மூட்டையாக கலர் கலராக மருந்து வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.
ஒரு தடவை TRACTION முறைப்படி ட்ரீட்மென்ட் செய்வதற்கு 300 ரூபாய். ஒருநாளைக்கு 900 ரூபாய் TRACTION க்கு மட்டும். இது மட்டுமல்லாமல் மாத்திரை மருந்து செலவுகள் வேறு.
மூன்று வேளை TRACTION மற்றும் ஒரு வேளைக்கு 13 மாத்திரைகள் விழுங்கினால் எப்படி இருக்கும் என யோசித்துப்பாருங்கள். மாத்திரைகளை விழுங்கும்போது எனக்கு 'விக்கல்' வந்துவிடும். இந்தக் கொடுமை ஒரு வாரம் தொடர்ந்தது.

"ஒரு நாள் நோயாளி"யை "வாழ்நாள் நோயாளி"யாக்கி வருமானம் பார்க்கும் கில்லாடி டாக்டர்" - தொடர்ச்சி...(பாகம்-3)
அதற்கு அடுத்த வாரம் காலை மாலை என இருவேளை வரச் சொன்னார். மாத்திரைகள் குறையவில்லை. TRACTION போட்டு ஊசி குத்தி மருந்து ஏற்றி...இப்படியே மருத்துவம் தொடர்ந்தது ஒரு மாதம் வரை (இப்படி மருந்து ஏற்றினால்தான் நரம்புக்கு நேரடியாகச் செல்லுமாம் !?!?!?!)
அதற்கு அடுத்த மாதம் சாயந்தரம் ஒரு வேளை எனத் தொடர்ந்தது. மருந்து குறையவில்லை. "ரொம்ப லென்த்தியா போய்க்கிட்டே இருக்கே" எப்ப முடியும் என டாக்டரைக் கேட்டால் புன்னகையை மட்டும் சிந்தி தலையை லேசாக முன்னும் பின்னும் அசைப்பார் (அவரே ஒரு நாள் சொல்லுவாராம்... அல்லக்கைகள் சொல்லியது).
இதற்குள் திருமண நாளும் நெருங்கிவிட்டது. ட்ரீட்மெண்ட் நடக்கும்போதே பெண்வீட்டாரிடம் சொல்லச் சொல்லிவிட்டேன். நாளைக்கு ஏமாற்றி திருமணம் செய்துவிட்டார்கள் எனச் சொல்லக்கூடாது என்று.
டாக்டரிடம் சென்று திருமணம் அடுத்தவாரம், ட்ரீட்மெண்ட் எப்படி செய்வது? என எங்களுடைய சந்தேகங்களைக் கேட்டோம். அதிசயமாக இரண்டு வாரம் 'லீவ்' கொடுத்துவிட்டார் டாக்டர். மருந்தை மட்டும் தொடருங்கள் எனச் சொல்லிவிட்டார். அதற்குப்புறம் வந்து பாருங்கள் என்றார்.
திருமணம் முடிந்து வந்து டாக்டரிடம் காட்டினேன். வரவேற்றவர் நாளையிலிருந்து 3 வேளையும் வந்து TRACTION போட்டுக்கொள்ளுங்கள் (மறுபடியும் முதல்ல இருந்தா?...) என்றார். ஒரு வாரம் தொடர்ந்தேன்.
"இப்படியே போய்க்கொண்டே இருந்தால் எப்படி" எனத்தோன்ற ஒட்டுமொத்த ரெக்கார்டுகளையும் கொண்டுபோய் புதிய ஆவடி சாலை, பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள எம்.என்.ஆர்த்தோபீடியாக் மருத்துவமனைக்குச் சென்று காட்டினேன். அந்த டாக்டரின் பெயர் நடராசன். முதியவர். எழுந்து நிற்கச் சொன்னார். இரண்டு உடற்பயிற்சிகள் செய்யச்சொன்னார். (கையையும் தோளையும் குலுக்குவது கைகளை நீட்டுவது என்று). இது போதும் என்று சொல்லிவிட்டார்.
அதன்பின்னர் இன்றுவரை எனக்கு அந்த வலி இல்லை.
அந்த நரம்பியல் நிபுணரிடம் நான் செலவு செய்தது 50 ஆயிரம் ரூபாய்க்கும்மேல் இருக்கும். நான் சொல்லும் காலகட்டத்தில் யமஹா 125 சிசி பைக் (பழைய யமஹா) வெறும் 35 ஆயிரம் மட்டும்தான். அவரிடம் நான் வைத்தியத்தை தொடர்ந்திருந்தால் இன்று வரை சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்திருப்பேன். இப்படித்தான் பலரும் அவரிடம் வந்துக்கொண்டிருந்தார்கள் (வந்து கொண்டிருப்பார்கள்!!!)
முதலில் ஒரு நாளில் மூன்று வேளை... அடுத்து இரண்டு... ஒன்று... வாரத்திற்கு ஒரு தடவை.... பிறகு மாதத்திற்கு ஒரு தடவை... இப்படியாக அந்த புண்ணியவான் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார் பாவத்தை!!!

(பாகம்-4)
டாக்டர்..........!?!?!?!?!?!?!?!?!?!?!?!?
தொழில்ரீதியாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். இது நடந்தது 2007 இருக்கும் என நினைக்கிறேன். சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சென்னையிலிருந்து அந்த ஊருக்கு புறப்படத்தயாராக இருந்தது ரயில். ஓடோடிச் சென்று ஏசி மூன்றாம் வகுப்பில் உட்கார்ந்தேன். ஏசி வகுப்பு என்பதால் பயணம் செய்பவர்கள் அளவாகத்தான் பேசிக்கொள்வார்கள். சாப்பிடும்போது கூட வாய் அதிகமாக அசையாது. பயணம் செய்வது என்னவோ நம்மூர் முனியாண்டிகளும் கண்ணம்மாக்களும்தான்... ஆனால் பெரும்பாலும் ஆங்கிலம்தான் பேசிக்கொள்வார்கள்.
வழக்கம்போல் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துப் படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய பக்கம் இரண்டு பேரும் எதிரில் 2 பேரும் உட்கார்ந்திருந்தனர். எதிரில் ஒரு சீட் காலியாக இருந்தது. ரயில் புறப்படும் சமயம் ஒரு பெண் அவசரம் அவசரமாக வந்து எதிரில் உட்கார்ந்தார்.
அந்தப்பெண் எதேச்சையாக பக்கத்தில் உட்கார்ந்தவரை திரும்பிப்பார்க்க... உரையாடல் ஆரபித்தது.
பெண்: சார் நீங்களா? வணக்கம் சார்! (55 வயதுக்கும் மேற்பட்ட அவர் காலை தொட்டுக்கும்பிட்டார். இந்தப்பெண்ணுக்கு வயது சுமார் 35 க்குள் இருக்கும்.)
அவர்: எப்படிம்மா இருக்கீங்க? வீட்டில எல்லாரும் செளக்கியமா?
பெண்: நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க?
அவர்: நல்லா இருக்கேன். வேலை எப்படிப்போகுது.
பெண்: என்ன இருந்தாலும் உங்ககிட்ட வேலை பார்த்தமாதிரி கிடையாது சார். என்ன ஒரு அன்பு உங்களுக்கு எங்ககிட்ட எல்லாம். இப்பல்லாம் அப்படி இல்ல சார். இன்னக்கி வரைக்கும் காலேஜ்ல உங்கபேரு சொன்னா தனி மரியாதைதான் சார்.
இப்படியாக அவர்கள் இருவர் பேச்சும் போய்க்கொண்டிருந்தது. நான் சாப்பிட்டு முடித்து விட்டேன். அவர்கள் இருவரும் அவ்வளவு அன்னியோன்னியமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தப்பெண் தான் கொண்டு வந்திருந்த டிபனை அவருக்குக் கொடுக்க அவர் இந்தப்பெண்ணுக்கு தான் கொண்டு வந்ததை கொடுத்தார். அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்கும்பொழுது அவர் ஒரு சீனியர் டாக்டர் எனவும், இந்தப்பெண் அவரிடம் பணிபுரிந்த ஸ்டாஃப் எனவும் தெரிந்தது. கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது. அப்படி ஒரு நெகிழ்ச்சியான பேச்சு.
டிக்கெட் பரிசோதகர் வந்து செக் செய்துவிட்டுப்போன பிறகும் பேச்சு தொடர்ந்தது. அவர் அன்பாக, தன்னுடைய வீட்டுக்கு வாங்கி வைத்திருந்த திண்பண்டங்களில் சில எடுத்துக்கொடுத்து குழந்தைகளுக்குக் கொடுங்கள் என்றார். அந்த வருட டைரிகல் சிலவற்றையும் கொடுத்தார். இந்தப்பெண்மணி மறுக்க அவர் கட்டாயப்படுத்திக்கொடுத்தார். என்னுடைய வாழ்நாளில் இப்படி ஒரு பாசமான BOSS – STAFF நான் பார்த்ததில்லை.
ரயில் மேல்மருவத்தூர் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. எனக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்ற UPPER BERTH இல் படுத்துக் கொண்டேன். மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்க “கடமையே கண்ணாக” கண் அயர்ந்தேன்.
நடு இரவு. விழிப்பு வந்து விட்டது. ஏசி அல்லவா? சிறுநீர் போய்விட்டு வந்துவிடலாம் என இறங்க எத்தணிப்பதற்குள்....எதிரே பார்த்தால்....எதிர் சீட் டாக்டரும் பெண்மணியும் தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தனர். (அவர்களுடைய சீட் LOWER BIRTH & MIDDLE BIRTH). அட... இன்னமுமா பேசிக்கொண்டிருக்கிறார்கள் என யோசித்தேன். எழுந்திருக்காமல் கண்ணை மட்டும் சுழற்றிப்பார்த்தால்... அடச்சே...... இரண்டு சனியன்களும் அசிங்கம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். மங்கலான வெளிச்சமும் ஏசி என்பதால் மற்றவர்கள் அனைவரும் இழுத்துப் போர்த்திக் கொண்டிருப்பதும் இந்த நாய்களுக்கு வசதியாகப் போய்விட்டது. இதுக்குதான் அவ்வளவு பில்டப்பா? எனக்குப்புரியாம போச்சே!
எனக்கு அந்த ஏசியிலும் வேர்த்துக்கொட்டியது. நான் பார்த்தது அவர்களுக்குத் தெரிந்து என்மீது அபாண்டமாக பழி ஏதாவது போட்டுவிட்டால்...? ஆகக் கண்ணை மூடிக்கொண்டு வந்த இயற்கை அழைப்பையும் பொறுத்துக்கொண்டு தூங்கி விட்டேன்.
காலை 5 மணி அந்தப்பெண்மணி இறங்கவேண்டிய ஸ்டேசனில் அவள் இறங்கிக்கொள்ள இவன் டாட்டா காட்டினான். இவன் இரவில் செய்த அட்டூழியத்தை எத்தனை பேர் என்னைப்போல் பார்த்தார்களோ... தெரியவில்லை. அதற்கு அடுத்த ஸ்டேசன் நான் இறங்கவேண்டிய ஸ்டேசன். இறங்கினேன்.
என்னை இறங்கவிடாமல் கீழேயிருந்த ஒரு அரசாங்க டவாலி ஒருவன் “இருங்க.. இருங்க.. ஐயா எங்கே... ஐயா எங்கே... என உள்ளே ஓடினான். நான் கீழே இறங்கிவிட்டு வேடிக்கைப்பார்த்தேன். யாரைக் கூட்டிவர இப்படி ஓடினான் என்று. உள்ளேயிருந்து அந்த டாக்டர் இறங்கிக் கொண்டிருந்தான். இந்த டவாலி கூட்டத்தை அப்புறப்படுத்தி அந்த டாக்டரை வெளியே கூட்டிச் சென்றான். கூட்டத்தில் சிலர் அந்த டாக்டரைப்பார்த்து கும்பிட்டார்கள். அந்த டாக்டர் நெஞ்சை நிமிர்த்தி இரண்டு கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு நடந்து போய்க்கொண்டிருந்தான்.
கும்பிட்ட ஒருவரைப்பார்த்து கேட்டேன்.
“யார் சார் அவர்?”
“அவர்தான் இந்த ....................... ...........................க்கல்லூரியின் டீன்”
?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?
(மனதுக்குள்) அடப்பாவி! டீனா? நீயெல்லாம் மருத்துவம் சொல்லிக்கொடுத்து நாடு உருப்படுமா? உங்கிட்ட படிக்கிற மாணவிகளை நீ எப்படிப்பார்ப்ப....? உங்கிட்ட மருத்துவம் பார்க்க வர பெண்கள்கிட்ட நீ எப்படி நடந்துப்ப....? கடவுளே....கடவுளே...!

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆஹா........2 ...3 படிக்கணும் நான்.......வந்து படித்து பதிவு போடுகிறேன் சாமி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஹிப்போக்றேடிஸ் பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்களா தற்காலத்திய மருத்துவர்கள் ? சந்தேகம் தான் .
எடுத்துக்கொண்டாலும் அதன் படி நடந்து கொள்கிறார்களா என்பது வேறு விஷயம் .
தற்காலத்தில் கற்பு என்பதற்கு அர்த்தம் என்ன என்று தெரியவில்லை .
பெண்களும் /மனைவிகளும் கவலை படுவதில்லை -கணவன்மார்கள் கண்டு கொள்வதே இல்லை .
10 பேர்களுடன் படுக்கை பகிர்ந்து கொண்ட நடிகைகளை , மணம் புரிந்து வாழ்க்கை நடத்துவதால் ,
அந்த நடிக நடிகைகளை தெய்வமென மதிக்கும் இளம் தலை முறையினர் அவர்களை பின்பற்றுவதால் தான் இந்த அசிங்கமெல்லாம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1130974T.N.Balasubramanian wrote:ஹிப்போக்றேடிஸ் பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்களா தற்காலத்திய மருத்துவர்கள் ? சந்தேகம் தான் .
எடுத்துக்கொண்டாலும் அதன் படி நடந்து கொள்கிறார்களா என்பது வேறு விஷயம் .
தற்காலத்தில் கற்பு என்பதற்கு அர்த்தம் என்ன என்று தெரியவில்லை .
பெண்களும் /மனைவிகளும் கவலை படுவதில்லை -கணவன்மார்கள் கண்டு கொள்வதே இல்லை .
10 பேர்களுடன் படுக்கை பகிர்ந்து கொண்ட நடிகைகளை , மணம் புரிந்து வாழ்க்கை நடத்துவதால் ,
அந்த நடிக நடிகைகளை தெய்வமென மதிக்கும் இளம் தலை முறையினர் அவர்களை பின்பற்றுவதால் தான் இந்த அசிங்கமெல்லாம் .
ரமணியன்
கசப்பான நிஜம் ஐயா
நோயைச் சொன்னா மருந்து பலிக்காது........!
இது போன மாதம் நடந்த கதை. தொழில் காரணமாக ஒரு இயற்கை மருத்துவக் கிளினிக்கிற்குச் சென்றிருந்தேன். உயர் அதிகாரிக்காக காத்துக்கொண்டிருந்தேன். அங்கே தலையில் முண்டாசு கட்டிய ஒரு வைத்தியரும் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் இங்கே விற்பனை ஆகும் மருந்துகளை வாங்கி தனது வைத்தியத்திற்கு பயன்படுத்திக்கொள்பவர்.
அவர் என்னைப்பார்த்து வணக்கம் வைக்க நானும் பதில் வணக்கம் வைத்தேன். பேச்சு ஆரம்பித்தது. தூய தமிழில் பேச ஆரம்பித்தார். “தாங்கள் எவ்வளவு நாட்களாக கண்ணாடி அணிகிறீர்கள்” எனக்கேட்டார். நான் பதில் சொல்லவும் தான் சில மாதங்களுக்கு முன் கண்ணாடி அணிவதை விட்டுவிட்டேன் என்றார். எனது பார்வையில் முன்னேற்றம் அடைந்துள்ளது இந்த மருந்துகளினால் என்றார். திருவள்ளுவர் படம், திருவள்ளுவர் எழுதிய ‘மருந்து’ அதிகார குறள் அச்சிட்ட அடையாள அட்டையை என்னிடம் கொடுத்தார். வாங்கிக்கொண்டேன். அதற்குள் உயர் அதிகாரி வர, நான் அவரிடமிருந்து கழன்று கொண்டேன்.
அந்த கிளினிக்கில் இருந்து என்னுடைய அலுவலகத்திற்கு மதியம் வந்து சேர்ந்தேன். என்னுடைய நண்பர் ஒருவருக்கு ‘இனிப்பு கட்டிகள்’ உடல் முழுவதும் பரவியுள்ளது. இதற்கு அந்த வைத்தியரை நாடினால் என்ன என்று ஒரு யோசனை தோன்ற அவருக்கு போன் செய்தேன்.
“நீங்கள் கூப்பிடுவீர்கள் என எமக்குத்தெரியும். சொல்லுங்கள்” என்றார்.
“உங்களை பார்க்க முடியுமா ஐயா”
“நாம் தற்போது திருவான்மியூரில் உள்ளோம். நீங்கள் எங்கு உள்ளீர்கள்?”
“எனக்கு ஆபீஸ் அண்ணாநகர் ஐயா”
“அப்படியென்றால் நாம் கோயம்பேடு பேருந்து.நிலையத்தில் சந்திக்கலாம். சரியாக மாலை ஆறு மணிக்கு வந்துவிடுவேன்”
“சரி வந்துவிடுகிறேன் ஐயா”
என்னுடைய நண்பருக்கு அவசர அவசரமாக போன் செய்து என்னுடைய ஆபீஸுக்கு வரவைத்தேன். அருமையான வைத்தியர் மாதிரி தெரியுது. போய்ப்பார்த்துவிட்டு வந்துவிடலாம் என அவரை கன்வின்ஸ் செய்து ஆறு மணிக்கு கோயம்பேடு சென்றுவிட்டேன். அவர் வந்தவுடன் பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றுவிடலாம் அங்கு பேசிக்கொள்ளலாம் என யோசித்தோம்.
ஆறு பத்துக்கு முண்டாசு வைத்தியர் வந்துவிட்டார்.
“ஐயா வணக்கம்! இவர்தான் எனது நண்பர்”
“வணக்கம் அன்பரே! மிக்க மகிழ்ச்சி”
“ஐயா வாங்க ஹோட்டல்ல உக்கார்ந்து பேசுவோம்”
“எதற்கு அன்பரே ஹோட்டல்.... வாருங்கள் அங்கே அமர்ந்து கொள்ளலாம்”
அவர் காட்டிய இடம் கோயம்பேடு பிரதான சாலையில் இருந்த ஒரு தலைவர் சிலைக்கு அடியில்.....!!!!!!

- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3