புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
62 Posts - 63%
heezulia
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
254 Posts - 44%
heezulia
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
15 Posts - 3%
prajai
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_m10தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Fri Feb 20, 2015 11:42 am

First topic message reminder :

இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.

தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்


  • தகுதிவாய்ந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றே அடியெடுத்து வைக்கத் தொடங்குங்கள்.


  • சுய முயற்சியினால், முழுமையான நிறைந்த முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய ஒரு மனிதன் இவ்வுலகிலே கண்டிப்பாக இருக்கிறான். அது நீதான்.


  • உலக வரலாற்றைப் பாருங்கள். மேன்மையாக ஏதாவது சாதித்த அனைவரும் மிகுந்த முயற்சியுடன் உழைத்தனர் என்பதைக் காண்பீர்கள்.


  • வெற்றி என்பது தற்செயலாக நிகழ்வதல்ல. அது, இடைவிடாது செய்யும் முயற்சிக்குக் கிடைத்த வரமாகும்.


  • உண்மையான பயனும், இடைவிடாத முயற்சியும் எப்போதும் இணைபிரியாதவை.


  • இடைவிடாத முயற்சியினால் மட்டுமே உயர்ந்த, விலைமதிப்பற்ற பொருளைப் பெறமுடியும்.


  • எந்தத் துறையாயினும், உயர்ந்த சாதனையை சொல்லிலும், செயலிலும் வேறுபாடற்ற, ஓய்வற்ற முயற்சியினாலேயே பெற இயலும்.


  • நாம் செய்யும் செயலிலே பயனைப் பெறவேண்டுமெனில் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் அதனைச் செய்யவேண்டுமென்ற உறுதியுடன் முன்னேற வேண்டும்.


  • செய்யும் வேலைகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்யுங்கள்.


  • எதிர்கால இன்பம், கனவுகளை கற்பனை செய்துகொண்டு சோம்பேறியாக உட்கார்ந்து கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.


  • இந்த நாள் நல்ல நாள். நிகழ்காலம் மட்டுமே நம் கையில் உள்ளது. அதனை எல்லாவிதங்களிலும் முயன்று, நல்ல முறையிலே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.


  • எதிர்காலத் திட்டங்களிலே வெற்றிபெற வேண்டுமானால் நிகழ்காலத்தை நன்கு, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


  • நிகழ்காலத்தில் செயலாற்றினால் மட்டுமே சராசரியானவன் திறமைசாலியாக முடியும்.


  • முழுமையாக செயலாற்றுவதற்கு நீங்கள் கற்றுக் கொண்டால், நீங்கள் யாரைப்பற்றியும் பயப்படத் தேவையில்லை.
    உங்களின் திறமையில் நம்பிக்கை வையுங்கள்.


  • நம் வாழ்வின் வெற்றியென்பது, ஒவ்வொரு நாளின் ஒவ்வொருமணியிலும், ஒவ்வொரு நொடியிலும் நாம் வாழும் முறையினைச் சார்ந்தே உள்ளது.


  • நீங்கள் வாழும் முறையைச் சிறிது திறனாய்வு செய்துகொள்ளுங்கள். சிறிது விழிப்புணர்வுடன் உங்கள் நோக்கத்தைக் கண்டுகொள்ளுங்கள்.


  • உங்களிடம் அடங்கியுள்ள ஆற்றலை, தட்டியெழுப்ப வேண்டுமெனில் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும்.


  • உங்கள் நோக்கத்தைக் குறித்த தெளிவான அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்.


  • உங்களின் இலக்கைக் குறித்த தெளிவு உங்களுக்கு இருந்தால், உங்களின் மன ஆற்றல் அந்த திசை நோக்கி பாயத் தொடங்கும்.


  • சிரத்தையுடன் முயற்சி செய்தால் எதையும் அடையமுடியும்.


  • தீவிரமான ஆசை மற்றும் தீவிரமான விருப்பங்களே இலக்கை சாதிப்பதற்கான சூழ்நிலைக்கு உங்களை இழுத்துச் செல்கின்றன.


  • மனிதன் எதை ஆசைப்படுகிறானோ அதையே அடைகிறான்.


  • உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது கண்டிப்பாகக் கிடைக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உறுதி செய்துகொண்டு, அதை அடைவதற்கு உடனே செயலில் இறங்குங்கள்.



subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Sat Feb 28, 2015 8:12 am

தன்னம்பிக்கை சூப் 16 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்


  • திட்டமே வெற்றிக்கு விதை.

  • முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை.

  • திட்டமிட்ட உழைப்பும், செயல் வேகத்தோடு கூடிய முயற்சியும் உங்களிடம் இருக்குமானால் உங்களால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.

  • அதிகாலையில் உங்களுடைய செயலைத் தொடங்கிவிடுங்கள்.

  • நம்பிக்கையே நமது வாழ்க்கை என்பதைப் புரிந்துகொண்டு எதையும் ஆக்கப்பூர்வமான சிந்தனையோடு அணுகுங்கள்.

  • நல்லது நடக்கும் என்ற நேர்மறையான சிந்தனையோடு எதையும் எதிர்நோக்குங்கள்.

  • செயல்களே வெற்றியின் விதைகள்.

  • முடியுமென்று நினைப்பவர்கள் முடித்துக் காட்டுகிறார்கள்.

  • எதையும் செய்யவேண்டுமென்று மனதால் முடிவெடுப்பதே வெற்றியின் முதல் நிலையாகும்.

  • ஒரு செயலைத் திட்டமிட்டவாறு செய்து முடிக்கும்போது வெற்றி தானாகவே நம்மைத் தேடிவரும்.

  • வெற்றி பெறும்வரை முயற்சிப்பேன் என்ற பிடிவாத குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

  • உங்களால் நிச்சயம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கைதான் உங்கள் வாழ்வின் ஆதாரம்.

  • உங்கள் மனதில் நம்பிக்கைச் சுடர் எப்போதும் அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

  • உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் இருந்தால் உங்களால் எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.

  • அவ்வப்பொழுது உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • உங்களின் செயல்பாடுகள் எப்போதும் உங்கள் இலக்கை நோக்கியே அமைந்திருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

  • உங்களுடைய தனித்திறமையை புரிந்துகொண்டு அதை முழுமையாக பயன்படுத்துங்கள்.

  • எதையும் உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.

  • உங்கள் மனதிற்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுக்கக்கூடிய நூல்களை தினமும் சிறிதுநேரமாவது படிக்கப் பழகுங்கள்.

  • இலட்சியம்தான் உங்களை இயக்கும் உன்னதமான ஆற்றல்.

  • இரவு உறங்கச் செல்வதற்கு முன்பும், அதிகாலையில் எழுந்தவுடனும் உங்கள் இலட்சியம் பற்றி சிந்திப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

  • உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் உபயோகமாகச் செலவிடுங்கள்.

  • சிறிய செயலாக இருந்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.

  • மனதில் தெளிவான எண்ணமும், முன்பே திட்டமிடப்பட்ட குறிக்கோளும் இருந்தால் எந்தப் பிரச்சனையும் அரிய வாய்ப்பாகவே தோன்றும்.

  • எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுப்பதற்கு முன் தெளிவான மனநிலையுடன் இருக்கப் பழகுங்கள்.

  • உங்களிடம் உள்ள தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உங்களை நிச்சயமாக முன்னேற்றும்.

  • இடைவிடாத முயற்சியும், முழுமையான மன ஈடுபாடும், கடின உழைப்பும் தொடர்ந்து வெற்றிகளைத் தரும்.

  • தினமும் நீங்கள் உழைக்கும் நேரமே உங்களுடைய முன்னேற்றத்திற்காக நீங்களே விதைக்கும் நேரம்.

  • உழைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியே உங்கள் மனதில் உற்சாகத்தைத் தோற்றுவிக்கிறது.

  • மனதை தெளிவாகவும், நம்பிக்கையுடனும் வைத்துக்கொள்வது உங்களுடைய வெற்றிக்கு முதல் படி.

  • வெற்றி பெறுவேன் என்ற எண்ணமே வெற்றி பெறுவதற்கான வலிமையையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 28, 2015 8:26 am

மனதை தெளிவாகவும், நம்பிக்கையுடனும் வைத்துக்கொள்வது உங்களுடைய வெற்றிக்கு முதல் படி.

முற்றிலும் உண்மை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Sat Feb 28, 2015 8:58 pm

தன்னம்பிக்கை சூப் 17 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • முடியும் என்ற எண்ணமே எதையும் முடிக்கும் சக்தியையும், ஆற்றலையும் நமக்குக் கொடுக்கின்றது.

  • உங்களுடைய வெற்றிக்கு நீங்கள்தான் முழுமையாக முயலவேண்டும்.

  • வெற்றிகள் சிறிய அளவில் இருந்தாலும் உங்கள் ஆழ்மனதை பாராட்டுங்கள்.

  • உறுதியான, திட்டமிட்ட செயல்களின் மூலமாகத்தான் நீங்கள் எண்ணியதை எண்ணியவாறு அடையமுடியும்.

  • எதையும் தொடங்குவதைவிட, முடிப்பதில்தான் வெற்றி இருக்கின்றது.

  • நீங்கள் செய்கின்ற முயற்சிகள் அனைத்தும் உங்கள் இலக்கை நோக்கியே இருக்கட்டும்.

  • வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு தன்னம்பிக்கை இன்றியமையாதது.

  • தன்னம்பிக்கையோடு தொடர்ந்து முயற்சிகளைச் செய்யும்போதே வெற்றி கிட்டுகிறது.

  • உங்கள் இலக்கை நோக்கிய முயற்சியில் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் இறுக்கமாகப் பற்றிக் கொள்ளுங்கள்.

  • வாய்ப்பு எப்போது வருமென்பது தெரியாததால் முயற்சிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருங்கள்.

  • ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் தொடங்கப்படும் எந்தக் காரியமும் வெற்றியடையவே செய்யும்.

  • விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் வாழ்க்கையை முன்னுக்குத் தள்ளிக்கொண்டு செல்லும் இயற்கையின் சக்திகள்.

  • முடியாது என்று நீங்கள் நினைக்கின்ற காரியங்களைக்கூட முயற்சியினால் முடிக்க முடியும்.

  • எந்தக் காரியமும் நடக்கும் என்று நம்பிக்கை கொள்ளும்போது நடக்க ஆரம்பித்து விடுகிறது.

  • உங்களைப்பற்றி நீங்கள் உயர்வாக எண்ணிக்கொண்டால் உயர்வடைவீர்கள்.

  • எந்த அளவுக்கு உங்கள் திறமையையும், தகுதியையும் வளர்த்துக் கொள்கிறீர்களோ அந்த அளவு வெற்றி கிடைக்கும்.

  • திறமையை வளர்த்துக் கொள்ளும்போது தன்னம்பிக்கையும் தானாகவே வளரும்.

  • வாழ்க்கைப் பாதை இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் பயணம் சுலபமாகி விடுகிறது.

  • உங்கள் உழைப்பும் ஒரு மூலதனம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • வாய்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

  • முன்னேறுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டால் எதுவும் தடையாக இருக்க முடியாது.

  • செய்கிற தொழிலில் நாம் காட்டும் ஈடுபாடுதான் அந்தத் தொழிலை சிறப்பாகச் செய்வதற்கு உதவியாக இருக்கிறது.

  • பொறுப்புடன் செய்யும் எந்தக் காரியத்திற்கும் நிச்சயம் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும்.

  • உழைப்பு ஒருபோதும் வீணாகாது. பலன் நிச்சயம் கிடைத்தே தீரும்.

  • உழைக்காமல் பலன் கிடைக்காது.

  • உழைப்பைப்போல் உன்னதமானது உலகத்தில் வேறு எதுவுமில்லை.

  • இறைவன் நம்மை திறமையுடன்தான் படைத்திருக்கிறான் என்று நம்புங்கள்.

  • நம்மிடமுள்ள திறமையை முழுமையாக வெளிப்படுத்தி செயலாற்றுவதில்தான் வெற்றி உள்ளது.

  • காலத்துக்கேற்றவாறு நம்முடைய திறமையை வளர்த்துக் கொண்டால்தான் முன்னேறிச் செல்லமுடியும்.

  • வீசும் காற்றும், எழும் அலையும் எப்போதும் மிகத் திறமையான மாலுமியின் பக்கமே இருக்கும்.

  • வரும் வாய்ப்பை தங்களுக்கேற்ற வகையில் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்வின் உயர்ந்த நிலைக்குச் செல்வீர்கள்.

  • நல்ல சிந்தனை, செயலாக மாறும்போதுதான் வாழ்வு பயனுள்ளதாகும்.

  • திறமையை வளர்த்துக் கொள்பவர்கள் புகழும், செல்வாக்கும் அடைவது உறுதி.



subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Sun Mar 01, 2015 7:55 am

தன்னம்பிக்கை சூப் 18 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

  • தொடர்ந்த முயற்சிதான் அனைத்து சாதனைகளுக்கும் அடிப்படையாக உள்ளது.

  • உங்கள் வயது எதுவாக இருந்தாலும் திறமையை வளர்த்துக்கொண்டு வாழ்வில் வெற்றிபெற முடியும்.

  • திறமைக்கு வயது வித்தியாசம் கிடையாது.

  • திறமைக்கும், வயதுக்கும் தொடர்பே கிடையாது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

  • வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருப்பது எண்ண ஓட்டமே.

  • நம்முடைய எண்ணமே வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறது.

  • நாம் வெற்றிபெறுவதற்குத் தேவையானவை அனைத்தும் இங்கேயே இருக்கின்றன.

  • ஊக்கம் இருந்தால் எந்தச் செயலையும் எளிதாகச் செய்து ஏற்றம் பெறலாம்.

  • ஊக்கமே வாழ்வின் ஆதாரமாக உள்ளது.

  • முயன்றால் எதிலும் வெற்றி பெறலாம்.

  • கஷ்டப்பட்டு முயன்றால் நம்முடைய பெயரும் சரித்திரத்தில் இடம் பெறும்.

  • நாம் செய்யும் செயலில் ஆர்வம் இருந்தால் உடனே ஊக்கம் பிறக்கும்.

  • ஊக்கத்தின் மேம்பாட்டினால், ஆர்வத்தின் மிகுதியால் மனோவலிமையைப் பெறலாம்.

  • இறைவன் மனிதனுக்கு அளித்துள்ள ஈடு, இணையற்ற செல்வம் உழைப்பு.

  • உழைப்பென்னும் மூலதனம் இல்லாமல் வேறு எந்த மூலதனம் இருந்தாலும் பலன் கிடையாது.

  • உழைப்புதான் நம்முடைய வாழ்க்கையை வளப்படுத்தி வலுவடையச் செய்கிறது.

  • தன்னம்பிக்கையோடு இந்த உலகை தலைநிமிர்ந்து பாருங்கள். ஏராளமான வாய்ப்புகள் உங்கள் முன் காட்சியளிக்கும்.

  • உங்களின் கடமையை நிறைவேற்றும்போது புதிய சக்தி பிறக்கும்.

  • கூர்மையான அறிவும், செய்யவேண்டும் என்ற ஆர்வமும், கடுமையான உழைப்பும், திறமையும் கொண்ட மனிதனின் இன்பப் பயணம் என்றும், எதனாலும் தடைபடாது.

  • ஒவ்வொரு மனிதனிடமும் ஏதாவது ஒரு தனிப்பட்ட ஆற்றல் இருந்தே தீரும்.

  • நம்முடைய நம்பிக்கையே உரிய வழிகளையும், வாய்ப்புக்களையும் தேடித்தரும்.

  • யாரொருவர் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்கிறாரோ, தர்மத்திலிருந்து வழுவாமல் இருக்கிறாரோ அவரை உலகில் எந்த சக்தியும் ஒன்றும் செய்ய முடியாது.

  • கடினமான வேலைகளைச் செய்வதில் மகிழ்ச்சியடைபவர்கள்தான் புகழ்பெறுவார்கள்.

  • முழுமையான ஈடுபாட்டோடு எந்தவொரு செயலையும் செய்யும்போது அது சிறப்பாக அமையும்.

  • நம்முடைய குறுகிய கால வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது.

  • காலமே உங்கள் உயிர் என்று நினைத்துச் செயல்படுங்கள்.

  • உறுதியுடன் நடந்தால் உங்கள் இலட்சியத்தை அடைவீர்கள்.

  • உயர்ந்த குறிக்கோளை அடைய வேண்டுமெனில் அயராது உழைக்க வேண்டும்.

  • பெரும் சாதனை ஒன்றை சாதிக்க விரும்பினால், அச்சாதனையின் ஒவ்வொரு பகுதியும் வெற்றிகரமாக முடியும்போது நம்மை நாமே பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும்.

  • நீங்கள் சாதனைபுரிய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் சவால்களை, பொறுப்புக்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.

  • வாழ்வில் நாம் நிர்ணயித்துக் கொள்கின்ற இலக்குதான் நம்முடைய அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்தி உழைக்கவும், உயரவும் வழிகோலுகிறது.

  • மனித இனத்தின் மேம்பாடு உழைப்பில்தான் அடங்கியுள்ளது.

  • சிந்தனைகளைத் தொடர்ந்து செய்கின்ற செயல்களே நம்முடைய வாழ்க்கையாக உருவாகும்.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Mon Mar 02, 2015 8:24 am

தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்


  • வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அதை நிறைவேற்றுவதற்காகவே ஆண்டவன் உங்களுக்குக் கொடுத்துள்ள உறுதியையும், உடல் வலிவையும் பயன்படுத்திப் பாடுபடுங்கள்.

  • நம்பிக்கை என்பது ஒரு உணர்வோ, கருத்தோ அல்ல. அதுதான் வாழ்க்கை.

  • வாழ்க்கையென்னும் செடியின் ஆணிவேராக இருப்பது தன்னம்பிக்கையே.

  • நன்றாகப் பேசுவது நல்லதுதான், ஆனால் நன்றாகச் செய்வது அதைவிட நல்லது.

  • வாழ்க்கையென்னும் பெட்டகத்தைத் திறக்கும் திறவுகோல் நம்பிக்கை ஒன்றுதான்.

  • இரவும், பகலும் பாடுபட்டு தங்கள் திறமையை வளர்த்துக் கொள்பவர்கள் நிச்சயம் புகழ்பெறுவார்கள்.

  • நல்ல குறிக்கோள் இருந்தால் வாழ்க்கை உற்சாகமாக இருக்கும்.

  • நம்முடைய திறமைக்கு அளவுகோல் கிடையாது.

  • வெற்றி பெறுவதற்காகவே நாம் இந்த உலகிற்கு வந்திருக்கிறோம் என்பதை நம்புங்கள்.

  • திறமையின்மூலமே எதையும் சாதிக்க முடியும்.

  • நாம் இந்த உலகில் செய்யவேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டுமானால் எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

  • கடமையை யாரொருவர் சரிவர நிறைவேற்றுகிறாரோ அவரை உலகம் மதிக்கும்.

  • சிறு கடமையில்கூடக் கருத்தாயிருத்தல் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகச்சிறந்த வழி.

  • நம்முடைய திறமையை மற்றவர்கள் அறியும் வண்ணம் செயலாற்ற வேண்டும்.

  • திறமையில்லாமல் யாரும் பிறப்பதில்லை. ஏதேனும் ஒரு திறமை ஒவ்வொருவரிடமும் உள்ளது.

  • ஒரு செயலை செய்துமுடிக்க வேண்டுமென்று தீர்மானித்துவிட்டால் அதனைவிட்டு கொஞ்சம்கூட விலகக்கூடாது.

  • நம்முடைய இலட்சியம் உறுதியாக இருக்குமானால் தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகி விடும்.

  • திறமையை வளர்த்துக்கொள்வதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கிக் கிடக்கிறது.

  • திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொண்டே இருப்பவர்கள்தான் உயர்வு பெறுவார்கள்.

  • உங்களிடமுள்ள திறமையே செல்வத்தைப் தேடித்தரும்.

  • நாம் எதையும் செய்துமுடிக்க நம்பிக்கை அவசியம்.

  • எந்த விஷயத்திலும் அவநம்பிக்கை கொள்ளாமல் நம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயமாக நம்மால் எதையும் சாதித்துவிட முடியும்.

  • மனித சக்தியின் பிரதிபலிப்பு என்பது தன்னம்பிக்கையே ஆகும்.

  • தன்னம்பிக்கையின் ஆணிவேராக இருப்பது சுய முயற்சியாகும்.

  • முடியாது என்பதே கிடையாது.

  • உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே உயரத்தைத் தொடமுடியும்.

  • இறைநம்பிக்கை நமக்கு பல விஷயங்களில் வெற்றியைத் தருகிறது.

  • நம்பிக்கை நிச்சயம் உயர்வினை அளிக்கும்.

  • நம்மால் எதையும் செய்துமுடிக்க முடியும் என்கிற உணர்வு மேலெழுகிறபோதே நாம் வெற்றியை அடைந்து விட்டோம் என்று நம்பலாம்.

  • வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடிப்பவன் எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளக்கூடிய மனோசக்தியைப் பெற்றுவிடுகிறான்.

  • நம்பிக்கையுடன் செயல்படுங்கள், நீங்கள் தொட்டது துலங்கும்.

  • திட நம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயமாக நம்மால் ஓர் நல்ல இலக்கினை அடையமுடியும்.

  • நம்பிக்கையுள்ளவன் நிச்சயம் ஆரோக்கியமாகவே இருக்கிறான்.


Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக