புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:39 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:25 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 7:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 6:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:15 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 6:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:38 pm
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:39 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:25 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 7:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 6:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:15 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 6:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
First topic message reminder :
இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- தகுதிவாய்ந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றே அடியெடுத்து வைக்கத் தொடங்குங்கள்.
- சுய முயற்சியினால், முழுமையான நிறைந்த முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய ஒரு மனிதன் இவ்வுலகிலே கண்டிப்பாக இருக்கிறான். அது நீதான்.
- உலக வரலாற்றைப் பாருங்கள். மேன்மையாக ஏதாவது சாதித்த அனைவரும் மிகுந்த முயற்சியுடன் உழைத்தனர் என்பதைக் காண்பீர்கள்.
- வெற்றி என்பது தற்செயலாக நிகழ்வதல்ல. அது, இடைவிடாது செய்யும் முயற்சிக்குக் கிடைத்த வரமாகும்.
- உண்மையான பயனும், இடைவிடாத முயற்சியும் எப்போதும் இணைபிரியாதவை.
- இடைவிடாத முயற்சியினால் மட்டுமே உயர்ந்த, விலைமதிப்பற்ற பொருளைப் பெறமுடியும்.
- எந்தத் துறையாயினும், உயர்ந்த சாதனையை சொல்லிலும், செயலிலும் வேறுபாடற்ற, ஓய்வற்ற முயற்சியினாலேயே பெற இயலும்.
- நாம் செய்யும் செயலிலே பயனைப் பெறவேண்டுமெனில் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் அதனைச் செய்யவேண்டுமென்ற உறுதியுடன் முன்னேற வேண்டும்.
- செய்யும் வேலைகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்யுங்கள்.
- எதிர்கால இன்பம், கனவுகளை கற்பனை செய்துகொண்டு சோம்பேறியாக உட்கார்ந்து கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.
- இந்த நாள் நல்ல நாள். நிகழ்காலம் மட்டுமே நம் கையில் உள்ளது. அதனை எல்லாவிதங்களிலும் முயன்று, நல்ல முறையிலே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
- எதிர்காலத் திட்டங்களிலே வெற்றிபெற வேண்டுமானால் நிகழ்காலத்தை நன்கு, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- நிகழ்காலத்தில் செயலாற்றினால் மட்டுமே சராசரியானவன் திறமைசாலியாக முடியும்.
- முழுமையாக செயலாற்றுவதற்கு நீங்கள் கற்றுக் கொண்டால், நீங்கள் யாரைப்பற்றியும் பயப்படத் தேவையில்லை.
உங்களின் திறமையில் நம்பிக்கை வையுங்கள்.
- நம் வாழ்வின் வெற்றியென்பது, ஒவ்வொரு நாளின் ஒவ்வொருமணியிலும், ஒவ்வொரு நொடியிலும் நாம் வாழும் முறையினைச் சார்ந்தே உள்ளது.
- நீங்கள் வாழும் முறையைச் சிறிது திறனாய்வு செய்துகொள்ளுங்கள். சிறிது விழிப்புணர்வுடன் உங்கள் நோக்கத்தைக் கண்டுகொள்ளுங்கள்.
- உங்களிடம் அடங்கியுள்ள ஆற்றலை, தட்டியெழுப்ப வேண்டுமெனில் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும்.
- உங்கள் நோக்கத்தைக் குறித்த தெளிவான அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்.
- உங்களின் இலக்கைக் குறித்த தெளிவு உங்களுக்கு இருந்தால், உங்களின் மன ஆற்றல் அந்த திசை நோக்கி பாயத் தொடங்கும்.
- சிரத்தையுடன் முயற்சி செய்தால் எதையும் அடையமுடியும்.
- தீவிரமான ஆசை மற்றும் தீவிரமான விருப்பங்களே இலக்கை சாதிப்பதற்கான சூழ்நிலைக்கு உங்களை இழுத்துச் செல்கின்றன.
- மனிதன் எதை ஆசைப்படுகிறானோ அதையே அடைகிறான்.
- உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது கண்டிப்பாகக் கிடைக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உறுதி செய்துகொண்டு, அதை அடைவதற்கு உடனே செயலில் இறங்குங்கள்.
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
தன்னம்பிக்கை சூப் 6 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வாய்ப்புக்கள் நிறைந்து கிடக்கின்றன.
- தனக்குப் பொருத்தமான நேரமோ, வாய்ப்போ கிடைக்கவில்லை என்று சோம்பேறிதான் சொல்லுவான். உழைப்பாளி ஒருநாளும் அப்படிச் சொல்லமாட்டான்.
- யாருமே தன்னுடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓர் அரிய வாய்ப்பை சந்திக்காமல் இருந்ததில்லை.
- பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் வாய்ப்புக்களைத் தவறவிட மாட்டார்கள்.
- நல்ல வாய்ப்பை எதிர்கொள்ளுங்கள்.
- எப்போதும் விழித்திருக்கும் கண்கள் வாய்ப்புக்கள் எங்கிருந்தாலும் கண்டுகொள்ளும்.
- தன்னுடைய வாய்ப்பைப் பயன்படுத்துபவர் பின்னாளில் பலன் பெறுவார்.
- கடுமையான உழைப்புக்கு முன்னால் மிகச்சிறிய வாய்ப்புக்கள்கூட விலைமதிப்புள்ளவை.
- மிகப்பெரிய வாய்ப்புக்காக உங்களைத் த யார்நிலையில் வைத்திருங்கள்.
- ஒவ்வொரு வாய்ப்பும் மிகப்பெரிய வாய்ப்பே என்று நினைத்து தொடர்ந்து செயல்படுங்கள்.
- உங்களால் தற்போது என்ன செய்ய முடிகிறதோ அதைவிட அதிகமாகச் செய்யுங்கள்.
- உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்.
- உங்கள் தனித்தன்மையை எப்போதும் இழக்காதீர்கள்.
- ஆசைப்பட்டால்தான் எதையும் அடைய முடியும்.
- தன்னுடைய உண்மையான பலம் தெரியாதவர்கள்தான் தகுதி குறைந்த இடத்தில் அடங்கிக் கிடப்பார்கள்.
- மனிதர்கள் ஆசைப்படுவதால்தான் இலக்கை அடைகிறார்கள்.
- பிறர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று கவலைப்படாதீர்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
- உங்கள் வாழ்வில் நிகழும் வெற்றி தோல்விகள் அனைத்திற்கும் நீங்களே காரணம்.
- உங்கள் வெற்றியைத் தடுப்பவை எவையென்று அலசி ஆராய்ந்து அவற்றை நீக்குங்கள். வெற்றி உங்களை வந்தடையும்.
- உங்களால் எதுவும் முடியும் என்று நம்புங்கள்.
- புதிதாக எதையாவது சாதிக்க ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக சாதிப்பார்கள்.
- விரும்பி உழைத்தால் விரும்புவது கிடைக்கும்.
- உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
- எந்தத் தோல்வியும் நிலையானதல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
- உறுதியான உள்ளத்துடன் விடாமுயற்சி செய்துகொண்டே இருங்கள்.
- வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வெறி உள்ளவர்களுக்குத்தான் வெற்றி கிட்டும்.
- தங்கள் கனவை நனவாக்க வேண்டும் என்ற வெறி உள்ளவர்கள்தான் அளப்பரிய சாதனைகள் புரிகின்றார்கள்.
- சோதனைகள் வரும்போது நம்பிக்கையை இழக்காமல் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுங்கள். உங்களுக்கு வெற்றி என்னும் விடிவெள்ளி தெரியும்.
- சாதிக்க நினைப்பவர்கள் சோதனைகளைக் கடந்துதான் ஆகவேண்டும்.
- சூழ்நிலையை எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்துதான் வெற்றி கிடைக்கிறது.
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
தன்னம்பிக்கை சூப் 7 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- உங்கள் இலக்கை அடையும்வரை தளராமல் போராடுங்கள். இலக்கை அடைந்தவுடன் புதிய இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
- நீங்கள் உங்கள் இலக்கை அடைந்தவுடன் எப்படியிருப்பீர்கள் என்பதை அடிக்கடி கற்பனை செய்து மனக்காட்சியாகப் பாருங்கள்.
- உங்கள் மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்து கொண்டீர்களென்றால் நீங்கள் அடைகின்ற வெற்றிக்கு வானம்கூட எல்லையாகாது.
- தியானம் உங்கள் மனதைக் கட்டுப்படுத்த உதவும். எனவே அடிக்கடி தியானம் செய்யுங்கள்.
- வாழ்க்கையில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். ஏனென்றால் அதை நீங்கள் அடைந்து விடுவீர்கள்.
- மனதை சரியான பாதையில் செலுத்தத் தெரிந்துகொண்டீர்கள் என்றால் உங்கள் வாழ்வில் வெற்றிப் பூக்கள் மலரும்.
- உங்களை உயர்வான நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த மனம் உங்களிடமேதான் உள்ளது.
- உங்கள்மீது நீங்களே நம்பிக்கை வைக்காவிட்டால் வேறு யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். எனவே முதலில் உங்களை நம்புங்கள்.
- நீங்கள் கனவு காண்பதைவிட பெரிய உயரங்களை உங்களால் அடையமுடியும்.
- பெரிதினும் பெரிது கேளுங்கள்.
- உறுதியான தெய்வ நம்பிக்கையும், அயராத உழைப்பும் எந்தக் காரியத்தையும் செய்து முடிக்கும்.
- உடல் வலிமையைவிட மன வலிமையே நமக்கு ஊக்கமளிக்கிறது.
- நம்பிக்கையுடன்கூடிய முயற்சியை செய்யாதவரையில் மனிதனின் வளர்ச்சியும், முன்னேற்றமும் முழுமை பெறாது.
- நல்ல ஆற்றலின்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வையுங்கள்.
- எதற்காகவும் கவலைப்படாதீர்கள். எந்தப் பிரச்சனையையும் துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்.
- கஷ்டங்கள் எத்தகைய அசாதாரணமான முறையில் இருந்தாலும், நம்மனமாற்றத்தால் அவைகளை எதிர்கொள்ள வேண்டும்.
- நல்ல இயல்புகளை பொறுமையுடன் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
- வாழ்வில் நம் எல்லா சாதனைகளும், வெற்றிகளும் மனதில் உதித்த எண்ணங்கள், சங்கல்பங்கள், கருத்துக்களை அனுசரித்ததன்மூலமே நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதை நினைவுகொள்ளுங்கள்.
- இன்றிலிருந்தே உங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் மாற்றிக் கொள்வதற்கு உண்மையாக முயற்சி செய்யுங்கள்.
- உங்கள் வாழ்வில் முக்கியமான நோக்கத்தை அடைவதற்கு ஏற்றாற்போல் எண்ணங்கள், கருத்துக்கள், கற்பனைகளை வடிவமைத்துக் கொள்ளும் பழக்கம் மிகவும் அவசியமானதாகும்.
- பொறுமை நன்மை செய்யும்.
- குறைவாகப் பேசுங்கள், அதிகமாகச் செயலாற்றுங்கள்.
- ஆற்றல் எத்தகைய முறையற்ற நிலையையும் சரிசெய்யும்.
- நாள்தோறும் செய்யும் முறையான பிரார்த்தனையால் உடலிற்கு எல்லாவகையிலும் நன்மைகள் விளைகின்றன.
- எல்லா ஆற்றல்களும் நிறைந்த கடவுளிடம் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் அடைக்கலம் ஆகிவிடுங்கள்.
- எந்தச் செயலிலும் உறுதியான நம்பிக்கை ஏற்பட்டால் முழுமையான மனதுடன் அதில் ஈடுபட முடியும்.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
தன்னம்பிக்கை சூப் 8 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- நிகழ்காலத்தில் உங்கள் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தீர்களானால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
- நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கையின்மூலமே வாழ்க்கை பயனுள்ளதாக அமைகிறது.
- நம்பிக்கையினால் எல்லாம் கிடைக்கும்.
- நம்பிக்கை இருக்கும் இடத்தில் இறைவன் இருக்கின்றான்.
- சிறிதளவு நம்பிக்கையிருந்தால் சிறிய செயல்களையே செய்ய இயலும். உறுதியான நம்பிக்கை இருந்தால் பெரிய செயல்களைச் செய்யலாம்.
- இலக்கினை அடையும்வரை ஓய்வின்றி முயற்சியில் ஈடுபடுங்கள்.
- தன்னம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை என்னும் இவைகளே புகழ் மற்றும் வெற்றிகளின், சாதனைகளின் திறவுகோல்களாக விளங்குகின்றன.
- மனிதனின் மனமே அவனுடைய முன்னேற்றத்திற்கும், துன்பங்களுக்கும் காரணம்.
- தீவிரமான எண்ண ஓட்டங்களுடன் கற்பித்துக் கொள்ளப்படும் உருவங்கள், அத்தகைய அனுபவங்களை நம் அருகில் இழுக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன.
- கடவுளிடம் முழுமையான நம்பிக்கையுடன் தஞ்சமடையுங்கள்.
- உறுதியான நிஷ்டையுடன் எதிர்த்தால் கஷ்டங்களும், துயரங்களும் நம்மை விட்டு அகலும்.
- உங்களால் இயலாதது என்பது எதுவும் இல்லை.
- எத்தகைய செயலையும், அதன் முறையினை அறிந்து, ஒழுங்குமுறையுடன் செய்துகொண்டு வந்தால் அது பழக்கமாகி விடுகிறது.
- நம் மனதில் எத்தகைய எண்ணங்களும், கருத்துக்களும் திரும்பத் திரும்ப வருகின்றனவோ, அத்தகைய இயல்புகளை நாம் பெற்றவர்களாவோம்.
- கடவுளிடமும், உங்களிடமும் உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள்.
- கடவுள் யாரையும், என்றும், எத்தகைய சூழ்நிலையிலும கைவிடுவதில்லை என்பதை நம்புங்கள்.
- நல்ல செயல்களை தொடர்ச்சியாக செய்துவாருங்கள். அதற்குரிய பலன் கண்டிப்பாகக் கிடைக்கும்.
- இடைவிடாமல் முறையாகச் செய்யும் முயற்சியால், கண்டிப்பாக மனதை கட்டுப்படுத்த இயலும்.
- முயற்சி, முயற்சி, விடாமுயற்சி, பிரார்த்தனை என்று தொடர்ந்து செய்தால் கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்படும்.
- வெற்றி என்னும் ஏணியில் ஏறுவதற்கு, நம் செயல் குறித்து முழுமையான ஞானம் இருக்கவேண்டும்.
- நான் வெற்றி பெறுவேன் என்று வார்த்தைகளில் கூறுவது தவிர மனக்கண்ணில் தொடர்ந்து காணுங்கள்.
உங்கள் மனதை ஆக்கப்பூர்வமான சிந்தனைகளால் நிரப்புங்கள்.
- மனதில் ஒரு லட்சியத்துடனும், துடிப்புடனும் செயல்படுங்கள்.
- வாழ்க்கையில் சாதனை புரியவும், வெற்றி அடையவும் மனம் அமைதியான நிலையில் இருக்கவேண்டும்.
- ஒரு கருத்தை உங்கள் மனதில் ஆழமாகப் பதித்துவிட்டால்அது தேவைப்படும் சமயத்தில் செயலில் ஈடுபட்டு வெற்றிகரமாக செயலை முடித்துவிடும்.
- நாம் எண்ணிய எண்ணத்தை கருத்தில் கொண்டு கடினமாக உழைக்க வேண்டும்.
- உங்கள் சிந்தனைகள் முழுவதும் உங்கள் இலட்சியத்தைச் சுற்றியே இருக்கட்டும்.
- உங்கள் உள்மனதின் ஆற்றலைப் பயன்படுத்தி முன்னேற்றமடைய முடியும், சாதனை படைக்க முடியும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு, நன்றி !
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
தன்னம்பிக்கை சூப் 9 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- உங்கள் உள்மனமானது உங்களுக்கு சேவைபுரிவதற்காக எப்போதும் தயார்நிலையில் உள்ளது.
- உள்மனம் எப்போதும் சோர்வடைவதில்லை.
- உங்களின் ஒவ்வொரு எண்ணமும் அலைகள்போல் வெளியேறி ஆற்றலாக மாறுகிறது.
- மன உறுதி படைத்தவன் நம்பிக்கையுடன் முன்னேறுகிறான்.
- ஒரு வேலையில் முழுமனதோடு ஈடுபட்டால் அந்த வேலை எளிதாக முடியும்.
- மனதை ஒருநிலைப்படுத்தி செயல்படுத்தினால் அந்தச் செயல் சிறப்பாக அமையும்.
- செய்யும் செயலில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டால் மனம் தானாகவே ஒருநிலைப்படுகின்றது.
- வேலை என்று எதைச் செய்தாலும், அதை முழு ஆர்வத்துடன் செய்யவேண்டும்.
- ஒரு வேலையைச் செய்ய முற்பட்டால் அதில் ஆர்வம் தரும் அம்சத்தை தேடிச் செயல்படுங்கள்.
- ஒரு வேலையைத் தொடங்கும்போதே ஆர்வத்தை உருவாக்கிக் கொண்டால் வேலை மிகவும் சுலபமாக முடியும்.
- மனதை தன்வயப்படுத்திய ஒருவன் அதன் சக்தியை தான் விரும்பும் எந்தச் செயலிலும் திருப்பிவிட முடியும்.
- மனதின் ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்துபவர் மற்றவர்களைவிட அதிக வருமானம் பெறுவார்.
- உள்ளுணர்வோடு கூடிய சக்தியைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் சாதனை படைக்க முடியும்.
- நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதைப் பெறுவதற்காக உழைக்க வேண்டும்.
- ஒரு மனிதன் தன்னைத்தானே உயர்த்திக் கொள்வதற்கு முன் தன்னுடைய சிந்தனைகளை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
- துடிப்புமிகுந்த முனைப்பும், செயல் திறனும் உடையவர்கள் கண்டிப்பாக வெல்வார்கள்.
- விருப்பம் நிறைந்த தனித்தன்மைக்கு எதுவும் தடையில்லை.
- எந்த ஒரு மனிதனும் உலகில் பிறக்கும்போதே தனக்கான ஒரு வேலையில்லாமல் பிறப்பதில்லை.
- அரிய செயல்களைச் செய்வதற்கான வாய்ப்பு வழங்காத நாளே இதுவரை தோன்றியதில்லை.
- உங்களுக்கு எதைப்பற்றி கனவு காண முடியுமோ அதை இப்போதே தொடங்குங்கள்.
- பெருமைக்குரிய வெற்றி வாய்ப்பையே எப்போதும் எதிர்பாருங்கள்.
- உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவற விட்டு விடாதீர்கள்.
- உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்.
- சரியான முடிவெடுத்தலும், முழுமையான செயல் திறனும் உடையவர்கள் மட்டுமே தங்களுக்கு முன் இருக்கும் இடர்களைக் களைந்து சாதனை புரிகின்றனர்.
- உங்களுக்குக் கிடைக்கும் சாதாரண வாய்ப்புகளைப் பற்றிக் கொண்டு அதையே மிகப்பெரிய வாய்ப்பாக மாற்றுங்கள்.
- வாய்ப்புகள் அடிக்கடி வருகின்றன. நீங்கள் விருப்பப்பட்டு செயலில் இறங்கும்போது மட்டுமே அவற்றை சரியானபடி பயன்படுத்தி உயர்வடைய முடியும்.
- ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வாய்ப்புகள் நிறைந்து கிடக்கின்றன.
- தனக்குப் பொருத்தமான நேரமோ, வாய்ப்போ கிடைக்கவில்லையென்று சோம்பேறிதான் சொல்லுவான். உழைப்பாளி ஒரு நாளும் அப்படிச் சொல்ல மாட்டான்.
- யாருமே தன்னுடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓர் அரிய வாய்ப்பை சந்திக்காமல் இருந்ததில்லை.
- பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் வாய்ப்புகளைத் தவறவிட மாட்டார்கள்.
- நல்ல வாய்ப்பை நல்லவிதமாக எதிர்கொள்ளுங்கள்.
- எப்போதும் விழித்திருக்கும் கண்கள் வாய்ப்புகள் எங்கிருந்தாலும் கண்டுகொள்ளும்.
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
தன்னம்பிக்கை சூப் 10 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- தன்னுடைய வாய்ப்பை செழுமைப்படுத்துபவர் பின்னாளில் பயன் பெறுவது நிச்சயம்.
- கடுமையான உழைப்புக்கு முன்னால் மிகச்சிறிய வாய்ப்புகள் கூட விலை மதிப்புள்ளவை.
- மனதை உறுதிப்படுத்திக் கொண்டால் எதுவுமே கடினமானதல்ல.
- உங்கள் விருப்பங்களையெல்லாம் வலிமை நிறைந்த உறுதியான மனநிலைக்கு இட்டுச் செல்லப் பழகுங்கள்.
- ஒரு தீர்மானமான முடிவோடு உங்கள் பயணத்தைத் தொடங்கினால் உங்கள் ஒவ்வொரு கருத்தும் மிகச் சரியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- தன் திறமையின்மீது கொண்ட நம்பிக்கையைவிட அதிக ஆற்றல் பெற்றது எதுவுமில்லை.
- உங்களை நம்புங்கள், உங்கள் ஆற்றலை நம்புங்கள்.
- ஒரு நாளில், நேரத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி வேலைகளை முடிப்பதால் சோர்வு ஏற்படுவதில்லை.
- யார் நேரத்தை மிச்சப்படுத்துகிறாரோ அவர் எல்லா நன்மைகளையும் அடைவார்.
- தடைகள் எதுவாக இருந்தாலும் அவை நீக்கப்படக்கூடியவையே என்பதை மறந்துவிடாதீர்கள்.
- செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைத்துச் செயல்படுங்கள்.
- எந்தப் பொறுப்பையும் தைரியமாகவும், உறுதியுடனும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
- ஒரு மனிதனுடைய அனைத்துச் சிறப்பியல்புகளுக்கும் ஆதாரமாக இருப்பது அவனுடைய ஆழ்மன ஆற்றலாகும்.
- எதற்கும் ஒரு வழி உண்டு. நாம் அதைத் தேடிக் கண்டுபிடித்துச் செயல்பட வேண்டும்.
- உங்கள் வாழ்வின் குறிக்கோளை அடைந்துவிட்டதாக அடிக்கடி கற்பனை செய்து பாருங்கள்.
- மனதை ஒருநிலைப்படுத்திவிட்டால் மனிதனின் ஆற்றலானது பல மடங்கு அதிகமாகி விடுகின்றது.
- மனதை ஒருநிலைப்படுத்திவிட்டால் ஆற்றலை நம் தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.
- முன்னேறுவது உறுதி என்பதில் முழு நம்பிக்கை வைத்துச் செயல்புரியுங்கள்.
- அற்புத சக்தியானது ஒவ்வொரு மனிதனிடமும் நிறைந்துள்ளது.
- எண்ணங்கள் மனித உடலில் ஆழமாகச் செயல்படுகின்றன.
- ஒரு வேலையை செய்து முடிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டாலே பாதி வேலை முடிந்துவிட்டதாக அர்த்தம்.
- நீ நீயாக இரு. உன் வழிமுறைகளால், உன் எண்ணங்களால் முடிந்ததைச் செய்.
- இந்த உலகத்திற்கு உன் இயலாமை தேவைப்படாது. ஆனால் உன்னிடமுள்ள அரிய திறமைகள் தேவைப்படும்.
- வேலை செய்வது என்பது ஒவ்வொரு மனிதனின் கடமை.
- உள்மனமே திறமைகளுக்கு ஆதாரமாக உள்ளது.
- சிறு காரியங்களையும் செம்மையாகச் செய்து வந்தீர்களேயானால் பெரிய சாதனைகள் தாமாகவே நடைபெறும்.
- வாழ்க்கையின் பொன்னான விதி “ஆர்வம் கொள்” என்பதுதான். எந்தக் காரியமாக இருந்தாலும் ஆர்வமுடன் செயல்படுங்கள்.
- முயற்சி திருவினையாக்கும்.
- செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும்.
- வாழ்க்கையில் வெற்றிபெறுவது, ஆர்வம் காட்டுதல் என்ற இரண்டு வார்த்தைகளில் அடங்கியுள்ளது.
- நிகழ்காலத்தைவிட வேறு நல்ல நேரம் கிடையாது.
- எந்தவொரு வேலையையும் கவனத்துடன், முழு ஈடுபாட்டுடன் செய்தால் விரைவாகச் செய்து முடித்து விடலாம்.
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
தன்னம்பிக்கை சூப் 11 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- நீங்கள் வெற்றிபெற ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது உங்களை நம்புவது.
- நம்பிக்கை வைத்து புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டலாம்.
- மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
- உங்களுடைய உண்மையான குறிக்கோள்களுக்கான கட்டளைகளுக்கு உள்மனமானது அடிபணியும்.
- இதற்குமேல் செல்லமுடியாது என்ற எல்லையை நீங்கள் அடைந்துவிட்டாலும் தொடர்ந்து பயணம் செய்ய முயற்சி செய்யுங்கள்.
- மனம் எதை வேண்டுமானாலும் உங்களை சாதிக்க வைக்கும்.
- நீங்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கிறது.
- திட்டவட்டமான குறிக்கோளுடன் உங்கள் எண்ண அலைகள் இயங்கிக் கொண்டிருந்தால் உங்கள் எண்ணம் நிறைவேறுவது நிச்சயம்.
- வெற்றி பெறும்வரை ஓயமாட்டேன் என்று உறுதிகொள்ளுங்கள்.
- நீங்கள் ஒரு செயலுக்காக நிஜமாகவே தயாராகும் சமயத்தில் அந்தச் செயல் நிகழ்கிறது.
- வெற்றியின் பாதை எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருங்கள்.
- வெற்றி, வெற்றி என்று எப்போதும் அதே சிந்தனையில் இருப்பவர்களை வெற்றி வந்தடைகிறது.
- அசைக்கமுடியாத மன உறுதியோடு உங்கள் இலட்சியத்தை அடைய கடுமையாக முயற்சி செய்யுங்கள்.
- உங்கள் கனவை யாரும் சிதைத்துவிட ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள்.
- உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு அதன்மூலம் பலனடைவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தருவது செயல்வேகம் மட்டுமே.
- நீங்கள் செய்யவிரும்புவது சரியானதாக இருந்தால் அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.
- ஒவ்வொரு தோல்வி வரும்போதும், அதனுடன் வெற்றிக்கான விதையைக் கொண்டு வருகிறது.
- இந்த உலகில் ஏராளமான வாய்ப்புக்கள் குவிந்துள்ளன.
- வாழ்வில் வெற்றியடைந்த 90 சதவிகிதம் பேர் தோல்வியில் ஆரம்பித்து மனதை ரணப்படுத்தும் போராட்டங்களுக்குப் பிறகே சாதித்திருக்கிறார்கள்.
- உங்கள் மனதில் நம்பிக்கையை நிரப்புங்கள்
- தகிக்கும் ஆசைக்குள்ளேயே, அதை நடைமுறை சாத்தியமாக்குவதற்கான பல்வேறு வழிவகைகள் அடங்கியுள்ளன.
- நம்பிக்கையும், கனவாகத் தகிக்கும் ஆசையும் சேர்ந்து நிஜமாக்க முடியாதது என்று எதுவுமே இல்லை.
- நம்பிக்கையும், எண்ணமும் ஒன்றாகக் கலக்கும்போது உருவாகும் அதிர்வலையை ஆழ்மனம் உடனே கிரகித்துக் கொள்கிறது.
- திரும்பத் திரும்ப ஆழ்மனதிற்கு அனுப்பப்படும் எந்த எண்ணத்தையும் அது ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்படும்.
- உங்களின் உறுதியான நம்பிக்கைதான் ஆழ்மனதை செயல்பட வைக்கும் அச்சாணி.
- ஆழ்மனதை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் அதனிடம் நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அது கிடைக்கும்.
- நம்பிக்கை என்பது ஒருவித மனநிலை. உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளும் சுய கட்டளையின்மூலம் அதை வளர்த்துக்கொள்ள முடியும்.
- எதிலும் வெற்றிபெறுவதற்கான முதல் கட்டம் நம்பிக்கை.
- உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்காக தினமும் ஒருமணி நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் நீங்கள் பெற்ற வெற்றிகளை திரும்பத் திரும்ப நினைத்து மகிழுங்கள்.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மிகவும் பயனுள்ள பகிர்வு........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
தன்னம்பிக்கை சூப் 12 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- உங்கள் மூளையில் முடங்கிக் கிடக்கும் அபாரமான சக்தியைத் தட்டியெழுப்பி நீங்கள் நினைப்பதை சாதிக்க முடியும்.
- முழு நம்பிக்கை உணர்வுடன் இடப்படும் எந்தக் கட்டளையையும் ஆழ்மனம் ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்படும்.
- நம்பிக்கை என்பது அதிக நன்மை தரக்கூடிய வலுவான உணர்ச்சி.
- தன்னுடை ய ஆழ்மனதை வசப்படுத்தும் சக்தி ஒவ்வொருவருக்கும் உண்டு.
- வெற்றி பெறுபவரைத்தான் உலகம் போற்றுகிறது.
- வெற்றியும், தோல்வியும் நமது பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.
- உங்களால் கற்பனை செய்ய முடிந்த எதையும் உங்களால் நிஜமாக்க முடியும்.
- கற்பனை வளத்தை எந்த அளவிற்கு வளர்த்துக் கொண்டு பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு அது பயன்கொடுக்கும்.
- உங்கள் ஆசையை நனவாக்கும் முயற்சியில் முதல்படி திட்டமிடுதல்.
- திட்டவட்டமான எந்தக் குறிக்கோளும் வெற்றியடையும்.
- திட்டவட்டமான குறிக்கோள், தெளிவான திட்டம் ஆகியவை வெற்றியை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும்.
- உங்கள் மனம் முழுவதும் வியாபித்து நிற்கும் ஆசையை நீங்கள் கண்டிப்பாக அடையமுடியும்.
- வெற்றியைக் கொடுக்கும் திட்டம் உங்கள் கைக்குக் கிடைக்கும்வரை மாற்றுத் திட்டத்தைப் பின்பற்றுவதில் நீங்கள் தளர்ந்து போய்விடக் கூடாது.
- உங்கள் வேலையைத் திட்டமிட்டுக் கொண்டு அந்தத் திட்டத்தின்படி வேலை செய்யுங்கள்.
- உங்களுக்கு எப்படிப்பட்ட வேலை தேவை என்பதை சரிவரத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
- உடனடியாக வேலையை ஆரம்பித்து விடுங்கள். போகப்போக உங்களுக்குத் தேவையானவையெல்லாம் வந்து சேரும்.
- விடாமுயற்சியை தாரகமந்திரமாகக் கொண்டவர்களை தோல்வி நெருங்காது.
- உங்களால் எந்தத் தொழிலில் முழு மனதோடு செயல்பட முடியுமோ அந்த மாதிரியான துறையைத் தேர்வுசெய்து கொள்ளுங்கள்.
- திட்டவட்டமான ஒரு தலையாய குறிக்கோளில் உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தப் பழகுங்கள்.
- உங்கள் வாயால், உங்கள் நோக்கம் என்ன என்று சொல்வதைவிட உங்கள் செயலால் செய்துகாட்டி விடுங்கள்.
- உங்களின் இலக்கு என்ன என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருங்கள். அப்போதுதான் அதை அடையமுடியும்.
- வாழ்வின் எல்லாத் துறைகளிலும் உள்ள தலைவர்கள் விரைவாகவும், உறுதியாகவும் முடிவெடுக்கிறார்கள். அவர்கள் தலைவர்களாக இருப்பதற்கு முக்கியக் காரணமே அதுதான்.
- தகிக்கும் ஆசைகள்தான் சாதனைகளின் ஆரம்பம்.
- எந்த விஷயத்திலும் விடாமுயற்சி என்ற பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
- விடாமுயற்சியை உங்கள் வாழ்வின் தாரக மந்திரமாக்கிக் கொள்ளுங்கள்.
- ஒரு வலுவான குறிக்கோள், எல்லாத் தடைகளையும் தகர்த்து வெற்றியை அடைய வழிகாட்டும்.
- அழுத்தம் திருத்தமாக ஆசைப்படுங்கள்.
- மனித மனம் சக்தியின் ஒரு வடிவம்.
- மன வலிமையின்மூலம் மனதில் ஓடும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும்.
- உங்களின் எந்த லட்சியத்தையும் உங்கள் ஆழ்மனதில் விதைத்துக் கொள்ளலாம்.
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள்
» சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4