புதிய பதிவுகள்
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
by ayyasamy ram Today at 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்ற பாகிஸ்தான் டிவியை உடைத்த ரசிகர்கள்
Page 1 of 1 •
உலக கோப்பை போட்டி: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்ற பாகிஸ்தான் டிவியை உடைத்த ரசிகர்கள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததும், பாகிஸ்தானில் போட்டியை கண்டுகளிக்க தெருக்களில் வைக்கப்பட்டு இருந்த டி.வி. செட்டை கிரிக்கெட் ரசிகர்கள் உடைத்தனர்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை பந்தாடியது. கோலி சதத்தால் உலக கோப்பையை இந்தியா வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது. கிரிக்கெட்டில், இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒட்டுமொத்த தேசத்திலும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அதிலும் உலக கோப்பையில் வெற்றி கிடைத்தால் சொல்லவே வேண்டாம். நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதும் நாடு முழுவதும் ரசிகர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வாகா எல்லையில், எல்லைபாதுகாப்பு படையினரும், ஜம்மு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவத்தினரும் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போதும் பணியாத இந்தியா, அந்த அணிக்கு எதிராக தொடர்ச்சியாக பெற்ற 6–வது வெற்றி இதுவாகும். விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வெற்றி பெறுவோம் என்று பாகிஸ்தான் வீரர்கள் மார்தட்டினார். இதனால் பாகிஸ்தான் எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் காலை எழுந்ததுமே பாகிஸ்தானில் டி.வி.யில் மூழ்கிவிட்டனர்.
கராச்சி நகரில் கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்க தெருக்களில் பெரிய அளவில் டி.வி.செட்களும் போடப்பட்டு இருந்தது. முதலில் இந்தியாவின் பேட்டிங்கை சற்று சலித்துக் கொண்டே பாகிஸ்தான் ரசிகர்கள் பார்த்தனர். பின்னர் பாகிஸ்தான் பட்டையை கிளப்பும் என்று ஆரவாரம் செய்தனர். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் ஜகா வாங்கி ஏமாற்றமே அளித்தனர். ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். தொடர்ந்து தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள், தெருவில் வைக்கப்பட்டு இருந்த டி.வி.செட்டை அடித்து நொறுக்கினர்.
உற்சாகமாக தொடங்கிய மேட்சை காட்டி கொண்டு இருந்த டி.வி.செட் இறுதியில் இரும்பு கடைக்கு செல்லுவிதமாக ஆகிவிட்டது. டி.வி.செட்டை கிரிக்கெட் ரசிகர்கள் இருந்த இடம்தெரியாமல் ஆக்கிவிட்டனர். சமூக வலைதளங்களிலும் பாகிஸ்தான் ரசிகர்கள் தங்களது வேதனைகளை பொறிந்து தள்ளி உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலக கோப்பை கிரிக்கெட்; இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே மோதல்; 4 பேர் காயம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. சிட்னியில் கிளப் ஒன்றில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே நடைபெற்ற மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர் என்று அந்நாட்டு செய்தி இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பரம எதிரிகளான இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் (பி பிரிவு) அடிலெய்டில் நேற்று அரங்கேறியது. மைதானத்தில் குழுமியிருந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களில் ஏறக்குறைய 25 ஆயிரம் பேர் இந்தியர்கள். இந்திய அணிக்குரிய புளூ நிற டி ஷர்ட்டுகளும் தேசிய கொடிகளுமே அதிகமாக ஆக்கிரமித்திருந்தன. ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் வெறும் 27 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அந்த சமயத்தில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. விக்கெட்களை பறிகொடுத்தபோது பாகிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சில் குதித்தனர். கடினமான இலக்கை நோக்கி அகமது ஷேசாத்தும், யூனிஸ்கானும் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆட வந்தனர். அனுபவ வீரர் யூனிஸ்கான் 6 ரன்னில் வெளியேற்றப்பட்டார். இறுதியில் பாகிஸ்தான் 47 ஓவர்களில் 224 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
கிரிக்கெட்டில், இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒட்டுமொத்த தேசத்திலும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடும். நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதும் நாடு முழுவதும் ரசிகர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். வாகா எல்லையில், எல்லைபாதுகாப்பு படையினரும், ஜம்மு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவத்தினரும் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களும் போட்டியை மிகவும் உற்சாகமாக கண்டு களித்தனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிலிட்டரி சாலையில் உள்ள கிளப் ஒன்றில் இரவுவரையில் ரசிகர்கள் போட்டியை பார்த்தனர். கிளப்பில் இருந்த பெரிய திரையில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு ஆனது. இதனையடுத்து இந்திய ரசிகர்கள் வெற்றியை உச்சாகமாக கொண்டாடினர். அப்போது அங்கு பதட்டம் ஏற்பட்டது. ரசிகர்கள் இடையே மோதல் வெடித்தது. கிளப்பில் இருந்த ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கிளப்பே போர்க்களம் ஆகியது. கிளப்பில் இருந்த பொருட்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
கிளப்பில் இருந்த இருக்கை மற்றும் மேஜையை கொண்டும் தாக்கிக் கொண்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு ரசிகர்கள் சண்டையை பார்த்த அப்பகுதிவாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் உடனடியாக வந்து காயம் அடைந்த 4 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே போலீசார் வன்முறைக்கான காரணம் தெரியவரவில்லை என்றும் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். போலீசார் கிளப்பில் உள்ள சி.சி.டி.வி.பதிவுகளை பெற்று விசாரணை நடத்த உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாகிஸ்தான் தோல்வி: 3-வது நடுவரே காரணம் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அஜ்மல் குற்றசாட்டு
உலக கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 301 என்ற இலக்கை துரத்திச் சென்ற பாகிஸ்தானில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வீழ்ந்ததால் இந்தியா எளிதாக வென்றது.
இதனால் பாகிஸ்தான் வீரர்கள் மீது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலவேறு குற்ராசாட்டுகளை கூறி வருகின்றனர்.
பாகிஸ்தான் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் ஜாகீர் அப்பாஸ் கூறும் போது
பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் ஏகப்பட்ட தவறுகளை செய்தனர். கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் பாடம் கற்கவில்லை. யூனிஸ் கானை ஓப்பனிங்கில் களமிறக்கியிருக்க கூடாது. சர்பாஸ் அகமதை பேட்டிங் வரிசையில் கீழே இறக்கியிருக்க கூடாது. அதேபோல உமர் அக்மலை விக்கெட் கீப்பராக்கியிருக்க கூடாது. பாகிஸ்தானிடம் எந்த ஒரு திட்டமிடலும் இல்லை. எனவே தப்புக்கு மேலே தப்பு செய்தோம்.
வழக்கத்திற்கு மாறாக உமர் அக்மலை கீப்பராக களமிறக்கியதால்தான் விராட் கோஹ்லி அளித்த கேட்ச் உள்ளிட்ட சில கேட்சுகளை அவர் தவறவிட்டார். நெருக்கடியான நேரத்திலும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மோசமாக ஷாட் அடித்து அவுட் ஆனார்கள். எப்போதுதான் நாம் பாடம் கற்கப்போகிறோம். ஆண்டு முழுக்க கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ஆனாலும் பாகிஸ்தான் வீரர்களை பாடம் கற்பதில் இருந்து யார் தடுத்தார்கள்? இவ்வாரூ அவர் கூறி உள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீரர் சக்லைன் முஷ்டாக் கூறும்போது:-
முழுமையாக பணியாற்றக் கூடிய விக்கெட் கீப்பர் இல்லாமல் பாகிஸ்தான் தடுமாறிவருகிறது. அணியின் நிலைமையை கருத்தில் கொண்டு யூனிஸ்கானை ஓப்பனிங்கில் இறக்கியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் முழுநேர தொடக்க ஆட்டக்காரரை உருவாக்குவதில் பாகிஸ்தான் தவறிவருகிறது என்பதையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயின் கான் கூறுகையில், "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான் இந்த தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அணியை முற்றிலுமாக அழித்துவிட்டது கிரிக்கெட் வாரியம்" என்று கோபத்தோடு கூறினார்.
இந்த நிலையில் போட்டியின் போது பாகிஸ்தான் பேட்ஸ்மேனான உமர் அக்மலுக்கு அவுட் கொடுக்கப்பட்ட விதம் அந்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உமர் அக்மல் ரன் ஏதும் எடுக்காமல் பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா ஆப் ஸ்டம்புக்கு வெளியே பந்தை சுழலும் வகையில் வீசினார். அதை தடுத்தாட முயன்றபோது பந்து பேட்டை தாண்டி விக்கெட் கீப்பர் டோணியிடம் தஞ்சம் அடைந்தது. டோணியும் அவுட் என்று நினைத்து விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார். ஆனால் கள நடுவர் அவுட் தரவில்லை.
3-வது நடுவர் ஆய்வு இதையடுத்து மூன்றாவது நடுவரிடம் மறு ஆய்வுக்கு செல்வதாக கேட்டுக் கொண்டார் டோணி. இதையடுத்து மூன்றாவது நடுவர் ஸ்டீவ் டேவிட் ரிப்ளே செய்து ஆய்வு செய்தார். ஸ்னிக்கோ மீட்டர் எனப்படும் நவீன கருவியை கொண்டும் பேட்டில் பந்து பட்டதா இல்லையா என்பது ஆய்வு செய்யப்பட்டது.
கிரிக்கெட்டை நேரடி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி சேனல் வழியாக, ஸ்னிக்கோ மீட்டர் செயல்பாட்டை உலகெங்கும் உள்ள ரசிகர்களும் பார்க்க முடிந்தது. பந்து பேட்டை தாண்டி சென்றபோது ஸ்னிக்கோ மீட்டர் எந்த வித அசைவுமின்றி அப்படியே காணப்பட்டது. எனவே தொலைக்காட்சி வர்ணனையாளர்களும்கூட அதை அவுட் இல்லை என்று கூறிவிட்டனர்.
ஆனால் ஸ்டீவ் டேவிட்டிடமிருந்து களநடுவருக்கு வந்த தகவலோ வேறுமாதிரி இருந்தது. அதாவது உமர் அக்மல் அவுட் என்று அறிவித்துவிட்டார். களநடுவரும் விரலை தூக்கி அவுட் என்பதை காட்டிவிட்டார். இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டமே ஏற்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ரசிகர்களிடம் இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் சுழற்பந்து வீர சையது அஜ்மல் கூறுகையில், ஸ்டீவ் டேவிஸ் களநடுவராக இருந்த போட்டிகளில் நான் பந்து வீசியுள்ளேன். எல்பிடபிள்யூ, விக்கெட் கீப்பர் கேட்ச் போன்ற சந்தர்ப்பங்களில் நான் எவ்வளவுதான் கேட்டுக் கொண்டாலும், ஸ்டீவ் டேவிஸ் கையை தூக்கியது கிடையாது. எனவே மறு ஆய்வுக்கு சென்றே விக்கெட்டை வீழ்த்த வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.
2009ல் லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது இதே ஸ்டீவ் டேவிட், பாகிஸ்தான் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதுமே குரோதம் கொண்டிருப்பவர் ஸ்டீவ் டேவிஸ். எங்களுடனான போட்டிகளின்போது ஸ்டீவ் டேவிஸ் நடுவராக இருக்க கூடாது என்ற கோரிக்கையை ஐசிசி ஏற்க மறுத்துவருகிறது. ஸ்னிக்கோ மீட்டர் அவுட் காட்டவில்லை, பேட்டில் பந்து பட்டதற்கான சத்தம் வரவில்லை. இருப்பினும் ஏன் மூன்றாம் நடுவர் அவுட் கொடுக்க வேண்டும்?
2011ம் ஆண்டு உலக கோப்பையின்போது, இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மோதியது. அப்போது எனது பந்து வீச்சில் சச்சினுக்கு களநடுவர் எல்பிடபிள்யூ கொடுத்தார். அதை எதிர்த்து மறு பரிசீலனை செய்ய சச்சின் கேட்டார். இத்தனைக்கும் அது சரியான அவுட்தான் என்று கம்பீர் சச்சினிடம் கூறினார். ஆனால் மூன்றாம் நடுவரோ அதை அவுட் இல்லை என்று கூறினார். தொழில்நுட்பங்களும் தவறிழைக்கவே செய்கின்றன. இவ்வாறு அஜ்மல் கூறினார்.
பந்தை எறிவதாக குற்றம்சாட்டப்பட்டு ஐசிசியால் தடை விதிக்கப்பட்ட அஜ்மல், உலக கோப்பை தொடருக்கு சில நாட்கள் முன்பு மீண்டும் தகுதி பெற்றார். ஆனால் பாகிஸ்தான் அணி நிர்வாகம் அவரை அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் ஐசிசி தரவரிசையில் நம்பர்1 இடத்தை பிடித்த பவுலர் அஜ்மல் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
”ஏன் இப்படி நிகழ்கிறதென்று எனக்குத் தெரியவில்லை” - தோல்வி குறித்து மிஸ்பா உல் ஹக்
ஏன் இப்படி நிகழ்கிறதென்று எனக்குத் தெரியவில்லை என்று உலகக்கோப்பையில் இந்தியாவுடனான போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது குறித்து மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் பாகிஸ்தான் அணி ஒருமுறை கூட இந்திய அணியை தோற்கடித்ததில்லை. இந்த சோக வரலாறு நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது. நேற்றையப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இது குறித்து கூறிய மிஸ்பா உல் ஹக், ”ஏன் இப்படி நிகழ்கிறதென்று எனக்குத் தெரியவில்லை. நீங்களும் இது குறித்து எதுவும் செய்ய முடியாது. அவர்கள் சிறந்த முறையில் விளையாடியதாக நான் நினைக்கிறேன். அவர்களிடமிருந்து தொழில் முறையிலான ஆட்டம் அவர்களிடமிருந்து வெளிப்பட்டது.
அவர்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவை நன்றாகவே இருந்தது. எனவே இந்த வெற்றிக்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.
இந்த ஆட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கிறேன். எனவே நாங்கள் அடுத்த போட்டியை குறித்து சிந்திப்பது அவசியம். ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் போராடித்தான் தோல்வியை தழுவுகிறோம். குறிப்பாக, உலகக்கோப்பையில். நாங்கள் இந்த தொடரில் வெற்றி பெற்றாக வேண்டும்”
மேலும் அவர் கூறுகையில், இந்திய அணியில் நல்ல பேட்ஸ்மேன்கள் உள்ளனர் என்பதும் உலக அளவில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருப்பதும் எல்லோருக்குமே தெரியும். அவர்கள் இன்று சிறந்த முறையில் விளையாடினார்கள். அவர்களிடம் நல்ல திறமை இருக்கிறது. அந்த திறமையை இன்று காண்பித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
ஏன் இப்படி நிகழ்கிறதென்று எனக்குத் தெரியவில்லை என்று உலகக்கோப்பையில் இந்தியாவுடனான போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது குறித்து மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் பாகிஸ்தான் அணி ஒருமுறை கூட இந்திய அணியை தோற்கடித்ததில்லை. இந்த சோக வரலாறு நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது. நேற்றையப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இது குறித்து கூறிய மிஸ்பா உல் ஹக், ”ஏன் இப்படி நிகழ்கிறதென்று எனக்குத் தெரியவில்லை. நீங்களும் இது குறித்து எதுவும் செய்ய முடியாது. அவர்கள் சிறந்த முறையில் விளையாடியதாக நான் நினைக்கிறேன். அவர்களிடமிருந்து தொழில் முறையிலான ஆட்டம் அவர்களிடமிருந்து வெளிப்பட்டது.
அவர்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவை நன்றாகவே இருந்தது. எனவே இந்த வெற்றிக்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.
இந்த ஆட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கிறேன். எனவே நாங்கள் அடுத்த போட்டியை குறித்து சிந்திப்பது அவசியம். ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் போராடித்தான் தோல்வியை தழுவுகிறோம். குறிப்பாக, உலகக்கோப்பையில். நாங்கள் இந்த தொடரில் வெற்றி பெற்றாக வேண்டும்”
மேலும் அவர் கூறுகையில், இந்திய அணியில் நல்ல பேட்ஸ்மேன்கள் உள்ளனர் என்பதும் உலக அளவில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருப்பதும் எல்லோருக்குமே தெரியும். அவர்கள் இன்று சிறந்த முறையில் விளையாடினார்கள். அவர்களிடம் நல்ல திறமை இருக்கிறது. அந்த திறமையை இன்று காண்பித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
தகவலுக்கு நன்றி.....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததும், பாகிஸ்தானில் போட்டியை கண்டுகளிக்க தெருக்களில் வைக்கப்பட்டு இருந்த டி.வி. செட்டை கிரிக்கெட் ரசிகர்கள் உடைத்தனர்.//
ஹா.......ஹா..........ஹா.............அவங்க அவங்க வீடு டிவியை உடைக்க வேண்டியது தானே?
ஹா.......ஹா..........ஹா.............அவங்க அவங்க வீடு டிவியை உடைக்க வேண்டியது தானே?
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பைத்திய காரத்தனம் என்றுதானே..................................
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
கடவுளே கடவுளே
Similar topics
» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 205 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இங்கிலாந்து அணி.
» இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி
» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
» இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை
» இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 205 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இங்கிலாந்து அணி.
» இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி
» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
» இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1