புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
1 Post - 1%
mruthun
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
2 Posts - 1%
mruthun
தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_m10தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்காப்பியத்தில் உளவியல்கோட்பாடுகள்


   
   
CHENATHAMIZHAN
CHENATHAMIZHAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015

PostCHENATHAMIZHAN Sat Feb 14, 2015 7:35 pm

தொல்காப்பியத்தில் உளவியல் கோட்பாடுகள்
                                                                                  முனைவர்.ப.ஆனந்தநாயகி காமராஜ்., உதவிப்பேராசிரியர்.,
                                                                                   நா.க.இரா அரசு மகளிர் கலைக்கல்லூரி., நாமக்கல்.

               தமிழர்தம் பழைமையையும், பண்பாட்டு மேம்பாட்டையும் தெளிவாக விளக்கும் இலக்கணநூல் தொல்காப்பியம். தமிழ்மொழியின் மெல்லிய ஒலிநயத்தையும், சிறுசிறு சொற்குழுமத்தையும், தொன்மைக்கால சமுதாயமரபையும், வாழ்வியல் அறத்தையும் ஒருங்கே அதனுள் காண இயலும். நிலநூலாக, உயிர்நூலாக, உளநூலாக, உடல்நூலாக, ஒலிநூலாக, பொருள்நூலாக, அறிவை விரிக்கும் அருள்நூலாகச் சான்றோர் பெருமக்களால் பாராட்டப்படும் ஒப்பற்ற நூல். பண்டைத்தமிழ் மக்களின் உணர்ச்சி நிறைந்தவாழ்க்கை முறையை உலகிற்கு உணர்த்திய முதல்பெருமை தொல்காப்பியத்தையே சாரும். திருமால் உலகத்தை அளந்தார் எனில், தொல்காப்பியர் மாந்தரின் உள்ளத்தை அளந்தார் என்பது சாலப்பொருந்தும்.

உளவியல்(Psychology) -விளக்கம்.
 உளவியல் என்பது மனிதனின் நடத்தைகளை உற்றுநோக்குவது -                    ஜோஸ்வில்சன்.
 தனிமனிதனின் செயல்பாட்டிற்கும் சூழ்நிலைக்கும் உள்ளதொடர்பை ஆராய்வது-    வோர்ட்ஸ் ஒர்த்.
 உளவியல் என்பது மனிதனின் நடத்தை மற்றும் மனித உறவுமுறைகளைப்பற்றிய படிப்பு- அறிஞர் குரோ.
 ‘மனதின் ஆய்வு’ என்ற பொருளைத்தருவது உளவியல்-பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்(பாகம்-1)

   அந்தவகையில், தொல்காப்பியம் மனிதனின் நடத்தைகளை அகம், புறம் சார்ந்த இருநிலைகளிலும் எடுத்துரைக்கிறது. தனிமனிதனின் செயல்பாடு காதல், வீரம் என்னும் இருதன்மைகளில் உட்படுத்தப்படும்போது அவனது உள்ள உணர்வுகளின் வெளிப்பாடு எவ்வாறு அமையும் என்பதைத் தெளிவாக விரித்துரைக்கிறது. உறவுநிலைகளில் மாந்தர் எவ்வாறு செயல்படுவர் என்பதும், உளம் ஒத்தநிலையில் ஒருவருக்காக மற்றொருவர் விட்டுக்கொடுத்து வாழும் முறையினையும், உறவு அல்லாதாரோடும் உளம் ஒத்து வாழும்  பாங்கினையும் அதனுள் காணலாம்.

உளவியல் முறைகள் (Methods of Psychology)
 அகநோக்குமுறை (Introspection Method)
 உற்றுநோக்கல்முறை (Observation Method)

அகநோக்குமுறை
     
      தனக்கு ஏற்படும் அனுபவங்களை வைத்து தானே உள்ளத்தில் ஆய்ந்து பகுத்துணரும்முறை.

உற்றுநோக்கல் முறை
     
          ஒருவர் பிறரது நடத்தையினை அவர்கள் அறியாமலே தன்புலன் அனுபவத்தோடும் சூழ்நிலையோடும் கூர்ந்து கவனித்து அறிவது.

         இவ்விரு முறைகளையும் தொல்காப்பியத்தில் காணலாம். அதில் நிறைந்துள்ள உளவியல் கருத்துக்கள் தன்அனுபவ வெளிப்பாடாகவும், பிறமாந்தரின் வாழ்வியலை உற்றுநோக்கி உரைத்ததாகவும் இருக்கக் காணலாம்.

உளவியல் வகைகள்
          தற்காலத்தில் உளவியலை 10 பிரிவுகளாக வகைப்படுத்துகின்றனர்
அ) அசாதாரண உளவியல் (Abnormal Psychology )
ஆ) நடத்தை உளவியல் (Behavioural Psychology)
இ) நுண் உளவியல் (Bio-Psychology)
ஈ) ஒருங்கிணைப்பு உளவியல் (Cognitive Psychology)
உ) ஒப்புநோக்கு உளவியல் (Comparative Psychology)
ஊ) மாற்றுக்கலாச்சார உளவியல் (Cross-Cultural Psychology)
எ) மேம்பாட்டு உளவியல் (Development Psychology)
ஏ) கற்பிப்பு உளவியல்  (Educational Psychology)
ஐ) பரிசோதனை உளவியல் (Experimental Psychology)
ஒ) தடய உளவியல்  (Forensic Psychology)

        இவை ஒவ்வொன்றும் அவற்றுடன் தொடர்புடைய மாந்தரின் மனநிலை ஆய்வுகுறித்த செய்திகளைத்தருகின்றன. மனநலக்கோளாறுகளை நீக்கி மனித நலத்தினை நாடுவனவாக உள்ளன.

தொல்காப்பிய உளவியல்

        உளவியலின் தந்தையாக சிக்மண்ட்பிராய்ட், அமெரிக்க உளவியல் ஞானியாக ஜாண்பவுல்பி, உளவியல் வகைகளை உருவாக்கியவராக ஸ்கின்னர், உளவியல் பரிசோதனைக்கு வித்திட்டவராக இ.எச்.வெபர், உளவியலுக்கான ஆய்வுக்கூடத்தை முதன்முதலாக 1879-இலேயே நிறுவியவராக ஜெர்மனி அறிஞர் வில்ஹம் உண்டட் - எனத்தற்கால உளவியல் அறிஞர்களைப் பட்டியலிட்டாலும், மொழிஇலக்கணத்தின் ஊடே மாந்த உளவியலையும் திறம்பட கலந்துதுரைத்ததனால் உலகின் முதல் உளவியல் கூடத்தை நிறுவியவராக, உலகின் மூத்த உளவியல் தந்தையாக, ஞானியாக நம் தொல்காப்பியரைச் சுட்டலாம். ஆனால் பிற்கால உளவியல் அறிஞர்களால்தான் மாந்தரின் நடத்தைகள் உற்றுநோக்கப்பட்டு மனமாறுபாடுகளால் வெளிப்படும் மெய்ப்பாடுகளும்  கண்டறியப்பட்டு பொதுவான உளவியல் கோட்பாடுகள் வகுக்கப்பட்டன என்பதனை  “பேரன்தான் பாட்டனைப்பெற்றான்” - என்று கூறுவதற்கு ஒப்பானதாகக் கொள்ளலாம்.
தொல்காப்பிய உளவியல் கோட்பாட்டைப்பொறுத்தவரை அக உணர்வாயினும், புற உணர்வாயினும் எதிர்மறையான கொள்கையைக் கூறவில்லை. அஃதாவது அக உணர்வில் காதல்தோல்வியால் பெண் இறந்தாள் என்றோ, ஆண் இறந்தான் என்றோ குறிப்பிடவில்லை. அதன்மூலம் தற்காலத் தற்கொலைக்கு அப்பாற்பட்ட ஒரு சமுதாயம் கண்முன்னே காட்டப்படுகிறது. இல்லறத்தைக்குறிப்பிடும் போது ஊடலால் கணவன்-மனைவி பிரிந்துபோனார்கள்; அதனால் குடும்பம் சீர்குலைந்தது என்ற குறைபட்ட குடும்பச் சூழலைக் குறிப்பிடவில்லை. மக்களின் உணர்வு வெளிப்பாட்டை உள்ளது உள்ளவாறே உணர்த்தி ஒருபண்பட்ட குடும்பத்தை உலகிற்கு வழங்க முனைந்திருக்கிறது.
பொருளதிகாரத்தில் புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல் ஆகிய இயல்கள் மனித உளம்சார்ந்த சிந்தனைகளை முன்வைக்கின்றன. மன  உணர்வுகளை மையமாகக்கொண்டே இவ்வியல்கள் அமைந்துள்ளன.

புறம்சார்ந்த உளவியல்

          ஒவ்வொரு மனிதனும் தன்னை வீரனாக மதிப்பது இயல்பு. வீரயுகக் காலத்தில் படைக்கப்பட்ட தொல்காப்பியம் வீரத்தின் பெருமையையும், வீரனின் மேன்மையையும் பலதுறைகளில் விளக்குகிறது. இன்றைய திரைப்படத்தில் ஒருவன் பலரை அடித்து நொறுக்குவது போன்ற சாகசக்காட்சிகளைக்கண்டதும் வியப்பின் உச்சிக்குச்செல்கிறோம். ஆனால், அக்காலத்தில் தனி ஒருவனாக நின்று பலரை எதிர்த்து வெற்றிபெற்ற நிலையை “நூழில்” என்ற துறையால் குறிப்பிடும் தொல்காப்பியர் அதனை,

“பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசிய நூழில்” (புறத்திணையியல். நூ.எ:72)
என்று குறிப்பிடுகின்றார்.
உ.ம்- ஒருவனை ஒருவன்...பொருதுகளத்து அடலே (புறம்:76)
ஒருவன் தன்மேல் கொண்ட முழுநம்பிக்கையும், உள்ளத்தில் தன்னைத்தலைசிறந்த வீரனாக எண்ணிக்கொள்ளும் தன்னம்பிக்கை மனப்பாங்கும் ஆற்றல் மிக்க சாதனைக்கு வழிவகுக்கும் என்பதனை இதன்மூலம் பதிவுசெய்கிறார்.

களவியலில் உளவியல்

       ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பார் புத்தர். மனித வாழ்வு ஆசையற்றதாய் இருக்கமுடியாது. எனவே, துன்பம் பெறுவதும் இயல்பு ஆகிறது. இருபாலாருக்கும் ஆசைகள் பொதுவானவை. ஆயினும்,  தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தும் தன்மைகள் மாறுபடுகின்றன. எழுகின்ற ஆசைகளை உள்ளத்திற்குள்ளேயே அடக்குபவளாகப் பெண் இருக்கிறாள்; ஆண் மாறுபட்டவனாக இருக்கிறான்.
“தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்
எண்ணுங்காலைக் கிழத்திக்கில்லை
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப”
                                  (களவியல், நூ.எ:116)
“தலைவி தனது வேட்கையை அது ஏற்பட்ட உடன் தலைவனிடத்தில் சொல்லுவதில்லை. ஆயினும், புது மண்கலத்தினில் ஊற்றிய நீர் புறத்தினில் கசிந்து தனது இருப்பினைத் தெரிவித்துவிடுவதைப் போல அவளது வேட்கையும் வெளித்தெரியும் பாங்குடையது”- என இதற்கான விளக்கத்தைத்தரும் இளம்பூரணர் அச்சம், மடம், நாணம் பெண்ணுக்குரிய இயற்கை குணங்களாயிருப்பதே வார்த்தைகளால் இச்சையை வெளிப்படுத்த இயலாமைக்குக் காரணம் எனவும் மொழிகிறார். உள்ளம் “சொல்” என்றாலும் நாணம் ”நில்” எனத்தடுக்க தடுமாற்ற நிலையிலேயே பெண் நிற்பது இதன்வழி தெரிகிறது. எனினும், அவளது உள்ள உணர்வுகள் உடலிலும் செயலிலும் பலமாறுதல்களை ஏற்படுத்துகின்றன.
மெய்ப்பாட்டியல் முழுக்க முழுக்க உள்ளத்து உணர்வுகளால் உடலில் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கின்றது. உள்ளத்தில் தோன்றும் ஓர் உணர்வு பல உடல்மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்பது மெய்ப்பாட்டியல் முடிபு. எட்டுவகையான பொதுமெய்ப்பாடுகள், முப்பத்திரண்டு வகையான அகம் புறம் சார்ந்த மெய்ப்பாடுகள், களவொழுக்கக்காலத்தில் ஆறுபடி நிலைகளாகத் தலைவியிடம் தோன்றும் மெய்ப்பாடுகள், களவொழுக்கக்காலத்தில் தலைவியிடத்தில் பொதுவாகத்தோன்றும் இருபத்துநான்கு மெய்ப்பாடுகள், திருமணத்திற்கு வழிவகுக்கும் வகையில் தலைவியிடம் தோன்றும் எட்டு வகையான மெய்ப்பாடுகள், இல்லறக்காலத்தில் தலைவியிடம் தோன்றும் பத்து வகையான மெய்ப்பாடுகள் என பெண்மையைச் சுற்றியே மெய்ப்பாடுகள் அதிகமாகப்பின்னப்பட்டிருந்தாலும் இருபாலாருக்கும் பொதுவான மெய்ப்பாடுகளும் பெரும்பான்மையாக உள்ளன. இவையாவும் உளவியலை அடிப்படையாகக் கொண்டவை.

உதாரணமாக, தலைவி தலைவன் மீதுகொண்ட காதல் உணர்வின் உந்துதலால் களவொழுக்கத்தில் ஈடுபடுகிறாள். குறுந்தொகை கூற்றிற்கிணங்க “செம்புலப்பெயல் நீர்போல அன்புடை நெஞ்சங்கள் தாம்கலக்கும்” உள்ளப்புணர்ச்சி நிகழ்கின்றது. அவ்வுள்ளப்புணர்ச்சியின் காரணமாக 20 உடல் மாற்றங்கள் அவளிடம் நிகழ்கின்றன. அவற்றை, ‘அவத்தை’ என்று உரையாசிரியர் குறிப்பிடுகின்றனர். அவளது நெற்றி வியர்க்கின்றது; முடிந்து வைத்த கூந்தலை அவிழ்த்து விரிக்கின்றாள்; அணிந்திருக்கும் நகைகளை மீண்டும் மீண்டும் திருத்துகின்றாள்; தன் மனச்சிதைவை மற்றவர் அறியக்கூடாது என மறைக்கின்றாள்; ஊராரின் பழிச்சொற்களுக்கு நாணுகிறாள். இப்படித் தன்னை மறந்த நிலையில் பலசெயல்களுக்கு ஆட்படுகிறாள். காதல்உணர்வு வளர வளர அவளது செயல்களும் வேறுவேறாக வளர்கின்றன. பெண்ணின் உள்ளத்தை ஆராய்ந்துரைக்கும் தொல்காப்பியர், இதன்மூலம் முடிவாகச்சொல்லும் உளவியல்கோட்பாடு என்னவெனில் “‘காதல் உணர்வு பெண்ணின் உள்ளத்தை ஆட்கொண்டால் இன்னின்ன செயல்பாடுகள் அவளிடம் குடிபுகும்” என்பதாகும். சான்றாக,
‘புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு
தகுமுறை நான்கே ஒன்றென மொழிப’
                                    (மெய்ப்பாட்டியல், நூ.எ: 257)
எனும் நூற்பாவைக் கொள்ளலாம்.


உளவியல்நோக்கில் தூது

       காதல் உணர்வின் மிகுதியால் இருபாலாரும் அஃறிணை உயிர்களைத் தூது செல்வனவாகப் பாவிக்கின்றனர். தம் உள்ளத்து நிலைப்பாடு பறவை, விலங்குகளுக்கும் புரியும் என்ற தன்நினைவற்ற சிந்தனை அவர்களிடம் நிலைகொண்டிருக்கின்றது. நிலைபெயர்ந்து செல்வன மட்டுமன்றி ஒரே இடத்தில் நிலைகொண்ட மரம், கடல், கானல் கூட அவர்களுக்குத் துணை செய்வனவாகவும், தூது செல்வனவாகவும் தோற்றம்கொள்கின்றன. அவை தூது செல்லும் என்றநம்பிக்கையில் ஆறுதல்கொண்டு துயரைக்கடக்கலாம் என எண்ணுகின்றனர் தலைவன் தலைவியர். இதன்மூலம், ‘உலகின் உண்மைச் சூழலை உணரும் திறத்தினை மாற்றி, கற்பனை உணர்வினைக் உள்ளத்துள் குடிபுகச்செய்யும் தன்மையுடையது காதல் என்பது தெளிவாகிறது. இவ்வுணர்வு
“ சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச்
செய்யா மரபில் தொழிற் படுத்தடக்கியும்”
                                     (பொருளியல், நூ.எ:194)
என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


உளவியல் நோக்கில் கற்புநெறி
         களவொழுக்கத்தின் நிறைவு நிலை என்பது கற்பொழுக்கத்தின்கண் தலைவன் தலைவியரை ஆட்படுத்துவதாகும். கற்புநெறியில் இருவரிடத்தும் ஓர் உரிமைக்குணம் வளர்கிறது. அதன்மூலம் நான், நீ, உனது, எனது என்ற உணர்வுகள்  மாறி நாம், நமது என்ற நற்குணம் வளர்த்தெடுக்கப்படுகிறது. தியாகம், விட்டுக்கொடுத்தல், பொறுமை, அன்பு, அறம் போன்ற குணங்கள் இல்வாழ்க்கைக்கு முக்கியத்தேவைகளாகின்றன. பேதம்பாராட்டும் குணம் நீங்கினால் மட்டுமே இல்லறத்தை நல்லறமாக இயற்றமுடியும்.
உளவியல்ரீதியாகப் பெண்ணுக்கென்று இருக்கும் பலகுணங்களை
“ செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான”
                                   (பொருளியல் நூ.எ:206)
என்று பட்டியலிடும் தொல்காப்பியம் மணமானபெண்ணிற்கு ஆகாத ஒருகுணத்தைச் சுட்டுகிறது.
“தற்புகழ் கிளவி கிழவன்முற்கிளத்தல்
எத்திறத்தானும் கிழவிக்கில்லை”
                                   (கற்பியல் நூ.எ:178)
அஃதாவது, பிறந்த வீட்டுப்பெருமையைப் புகுந்தவீட்டில் புகழ்ந்துரைத்துக் கொண்டிருக்கும் குணம் எந்தச்சூழலிலும் பெண்ணுக்கு இருக்கக்கூடாது என்பதுவே அது. “உள்ளத்தில் தான்பெரியவள் என்னும் தற்பெருமை எண்ணம் பெண்ணிடம் இருந்தால் குடும்பம் என்ற அமைப்பு பொலிவு பெறாது” என்பது இதன்மூலம் பெறப்படும் கருத்து.


முடிவுரை
       கண்ணிற்குப் புலப்படாத காற்றும், கைக்கு அகப்படாத ஒளியும் இயற்கை மாற்றங்களுக்கு இன்றியமையாக் காரணிகளாக விளங்குகின்றன. அதைப்போலவே, உருவமற்ற உள்ளமும் மனித உணர்வுகளின் உற்பத்திக்கூடமாகத் திகழ்கிறது. அன்புடைமை, அன்பின்மை, வெகுளாமை, வெகுண்டெழுதல், நல்லவை செய்தல், அல்லவை கூறல், பண்புடைமை, பணிவின்மை- போன்ற பல்வேறு முரண்பட்ட மனித நடத்தைகளுக்கும் மூலகாரணமாக அமைவது உள்ளம். அந்த உள்ளத்து இயல்புகளை அறிவியல் முறையில் ஆய்வுசெய்து அதன் முடிவுகளை உளவியல் கோட்பாடுகள் என்று வகைப்படுத்தியுள்ளனர் இக்கால உளவியல் மேதைகள். ஆனால், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்துக்கும், சொல்லுக்கும், பொருளுக்கும் இலக்கணம் வகுக்க படைக்கப்பட்ட தொல்காப்பியவானில்   மனித ஒழுக்கத்தினைக் கருத்திற்கொண்டு படைக்கப்பட்டிருக்கும் உளவியல் கோட்பாடுகள் விண்மீன்களாய் மின்னிக்கொண்டிருக்கின்றன.
==========================

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக