புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
5 Posts - 2%
i6appar
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
443 Posts - 47%
heezulia
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
332 Posts - 35%
Dr.S.Soundarapandian
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
30 Posts - 3%
prajai
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
5 Posts - 1%
i6appar
வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_m10வள்ளுவரின் வன்சொற்கள் Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவரின் வன்சொற்கள்


   
   
CHENATHAMIZHAN
CHENATHAMIZHAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015

PostCHENATHAMIZHAN Sat Feb 14, 2015 7:46 pm

வள்ளுவரின் வன்சொற்கள்
   
கு.காமராஜ்   எம்.ஏ., எம்.ஏ., எம்.பில்,
      முனைவர் பட்ட ஆய்வாளர், பாரதியார் பல்கலைக்கழகம்.

“இன்சொல்பேசி  பணிவுடன் நடக்கும் ஒருவருக்கு வேறெந்தச் சிறப்புகளும் தேவையில்லை, அவர்தம் இன்சொல்லும் பணிவுடைமையுமே எல்லாவற்றை விடவும் மேன்மையானவையாகும்” என்று அறிவுறுத்தியவர் வள்ளுவர். “நற்சொற்களைத் தவிர்த்து வன்சொற்களைப் பேசுவது, கனிகள் நிறைந்திருக்கும் மரத்தினில் காய்களைக் கவர்வதற்கு ஈடானது” என்று உவமை கூறியவர் வள்ளுவர். “துன்பம் இழைத்தவருக்கும் கூட இன்பம் வழங்கவேண்டும்” என்று மன்னிக்கும் பண்பை வலிறுத்திச் சொன்னவர்  வள்ளுவர். அத்தகைய மென்குணத்து தெய்வப்புலவரின் எழுத்தாணியும் சில சொற்களை சினத்துடன் வடித்துள்ளமையைக் குறள்தனில் காணமுடிகிறது. இன்சொற்களின் இன்றியமையாமையைப் பாடிய வள்ளுவபிரான் வன்சொற்களால் சாடியவற்றை உள்ளடக்கியுள்ளது இக்கட்டுரை.

பதர்கள்

      “மாந்தரிடையே அன்பும்,   அறமும் பெருகவேண்டும்,       இரக்கமும்-ஈகையும் ஓங்கவேண்டும், தீயொழுக்கங்கள் நீங்கி நல்லொழுக்கங்கள் நிறையவேண்டும், நல்லறிவாலும் நல்லறத்தாலும் வையகம் தழைக்கவேண்டும்” என்று முப்பாலிலும் எடுத்துரைக்கும் வள்ளுவர் வீண்பேச்சு வீணர்களை பெரும் அறப்பகைவராய்ப் பார்க்கிறார். நல்ல கருத்துக்களை சுருக்கமாய்ப் பேசும் ஆற்றல் அற்றவர்கள்தாம்   நீட்டிமுழங்கி நெடும்உரை நிகழ்த்துவர் என்பதனை
“பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்”        (649)
என்றுரைத்த வள்ளுவர், அங்ஙனம் பயனற்றப்பேச்சு பேசுவோரின் மீது பெரும் சினம் கொள்கிறார்.

வெற்றுச்செடிகள் வளர்ந்து புதராக உருவெடுத்துவிட்டால் அந்தப் புதரை அப்புறப்படுத்தும்வரை அந்நிலத்தால் பலன் ஒன்றும் ஏற்படப்போவதில்லை. பயிர் விளையும் நன்செய்நிலத்தினூடே களைகளாலும், வீண்செடிகளாலும் சூழப்பட்டிருக்கும் அத்தகைய புதர்நிலம் இருந்தால் எவ்வாறிருக்குமோ அதனைப்போல்தான் பயனற்ற சொற்களைப் பேசித்திரிவோர் நன்மக்களிடையே இருக்கும் பதர்கள் என்று கடுஞ்சொல் உதிர்க்கும் வண்ணம்
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்      (196)
என்ற குறள் அமைந்துள்ளது.

பிணங்கள்
       காதலைப்  போற்றியது தமிழ்ச் சமுதாயம் என்பதற்குச் சான்றாகும் வகையில்  பெரும்பாலான பண்டைத்தமிழ் இலக்கியங்கள் அமைந்துள்ளன. வள்ளுவரும் தனது மூன்றாவது பாலாம்  காமத்துப்பாலில் காதலின் சிறப்பை உணர்வுபூர்வமாக வடித்துள்ளார்.  நெருங்கியவரைச் சுடும் தன்மையுடையது நெருப்பு, ஆனால் நெருங்கினால் குளிர்ச்சியாகவும் நீங்கினால் வெம்மையாகவும் இருக்கும் புதியவகை நெருப்பை என்னவள் எங்கிருந்து பெற்றாள்? என்று காதலன் வியப்புடன் வினவுவதாய் அமைந்துள்ளது,
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் (1104)
என்னும் குறள்.
சேர்ந்திருக்கும்போது தண்மைத்தீயாகவும் பிரிந்திருக்கும்போது வெம்மைத்தீயாகவும் தனது காதலி விளங்குவதாகக் கூறும்   இக்காதலன் கூற்று குறள் அக்கால புதுக்கவிஞராய் அடையாளப்படுத்துகிறது வள்ளுவரை. இங்ஙனம் களவொழுக்கத்தினைக்கூட நயமாய்ப்பாடிய வள்ளுவர் துரோகத்தின் தொடர்ச்சியாய் வெளிப்படும் தீய உறவினைக் கடுமையாய்ச் சாடுகிறார். நட்புக்கு பெருங்கேடு விளைவிக்கும்வண்ணம் தகாத உறவில் ஈடுபடுவோரை மனிதராக ஏற்கமறுத்து பிணங்களென்று அழைப்பதனை
“விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்”           (143)
என்னும் குறளால் அறியமுடிகிறது. நல்வினைகள் செய்வோரை இறைவனுக்கு ஒப்பாகப் போற்றும் வள்ளுவர் நம்பிக்கைத் தூரோகம் இழைப்போரை உயிருள்ள மனிதராகவே ஏற்கமறுப்பதனை இது உணர்த்துகின்றது.

மயிர்போன்றோர்
        ஒருவரை பழித்துக் கூறவேண்டுமெனில் மயிரே.. என்றும் ஒருபொருளைத் தாழ்வாகக் குறிப்பிட அது மயிருக்குச் சமமானது எனவும் கூறும் பழக்கம் தற்போதும் மக்களிடையே வழக்கத்திலுள்ளது. தலைமுடியானது தலையில் இருக்கும்போது அழகினை மிகுதியாக்கிக் காட்டும் உயர்ந்த நிலையிலிருக்கிறது. ஆனால் தலையிலிருந்து உதிர்ந்துவிட்டால் மீண்டும் உரிய இடத்தினில் அதனால் சேரமுடியாது, பிறரால் அதற்குரிய இடத்தினில் அதனை சேர்க்கவும் முடியாது. மேலிருந்த தலைமுடியானது உதிர்ந்துபோனால் கேட்பாரற்றுக்கிடக்கும் கீழ்நிலைக்கு  தள்ளப்பட்டுவிடுகிறது. அதனைப்போலத்தான் மாந்தரிடையே தலையாய இடத்தினில் வைத்துப் போற்றப்படும் நற்குணத்தார் தமது சிறந்த குணங்களைக் களைந்து  தன்நிலை தாழ்ந்துபோய்விட்டால் மீண்டும் அவர்களால் பழைய உயர்ந்த நிலைக்கு வரமுடியாது மற்றவராலும் அந்த உயரிய நிலையினை அவர்களுக்கு அளிக்கவும் முடியாது. பெரும் பதவிகளில் இருப்போர்கள் கூட தங்களுக்கு ஏற்பட்ட களங்கங்களால் மீண்டும் எழமுடியாத அளவிற்கு தரம்தாழ்ந்த இழிநிலைக்குத் தள்ளப்படுவது ஈண்டு நினையத்தக்கது.
“மேன்மக்கள் எப்பொழுதும் மேன்மக்களாகவே இருக்கவேண்டும் எந்நிலையிலும்  தங்களது சிறந்த குணங்களை அவர்கள் களைந்துவிடக்கூடாது” என்று அறிவுறுத்தவேண்டி   “நற்குணங்களைத் தொலைத்தவர்கள்  உதிர்ந்த மயிராய்ச் சமுதாயத்தில் புறக்கணிக்கபடுவர்” என்று கடுமையாய் வள்ளுவர் எச்சரிப்பதை
“தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை”     (964)
என்னும் குறளில் காணமுடிகிறது.

விலங்குகள்-களர்நிலங்கள்

       உணர்வுத்திறனையும், அறிவுத்திறனையும் ஒருங்கே பெற்றிருப்பதால் மாந்தரினம் அஃறிணை உயிர்களிலிருந்து வேறுபட்டு சிந்திக்கும் ஆற்றல்பெற்றதாகத் திகழ்கின்றது.  அச்சிந்தனைத் திறத்தினை வெளிக்கொணரும்  முக்கியக்காரணியாக இயற்கை அமைந்துள்ளது. அந்தவகையில் நன்நீர்நிலைகளைச் சார்ந்திருந்த இனங்களால் தன்னிறைவுபெற்ற வாழ்க்கையுடன்  சிந்திக்கும் ஆற்றலையும் மிகுதியாய்ப் பெறமுடிந்தது. தேவைகள் எளிதாய் நிறைவேறியதால் கலை, இலக்கியம், அறிவியல் என்று பண்பாட்டு வளர்ச்சிக்கு பாதை அமைக்கவும் அவ்வினங்களால் முடிந்தது.

அந்தவகையில் நதிகள், மலைகள், நன்செய் நிலப்பரப்புகள் மற்றும்  கடல்வெளிகள் போன்ற நல்லியற்கைச் சூழலில் வாழ்ந்ததால் தமிழினம் தன்னிறைவு பெற்றதாகவும், கலைகள் மற்றும் இலக்கியங்கள் படைப்பதில் உலகுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தது எனக்கொள்ளலாம். கற்களை ஆயுதங்களாக மட்டுமே பயன்படுத்தி வேட்டையாடிக்கொண்டிருந்த பல இனங்கள் உலகில் இருக்கையில் பெரும் கட்டடங்கள் அமைக்கும் திறனும் கற்சிலைகள் வடிக்கும் ஆற்றலும் பெற்றிருந்தது தமிழினம். விலகுகளைப்போல் ஓசையெழுப்பிக்கொண்டும், வளர்ச்சியுறா மொழிகளைப்பேசியபடி எண்ணங்களை மட்டும் பரிமாறிக்கொண்டு வாழ்ந்த பல இனங்கள் இருக்கையில் பண்பட்ட மொழியினைப் பேசியதோடு ஈடில்லா இலக்கியங்களை இலக்கணச்சிறப்போடு படைத்தது தமிழினம். பிறந்தோம் இறந்தோம் என்று அடையாளமே தெரியாத அளவிற்கு குறுகிய வட்டத்திற்குள் பலஇனங்கள் இருக்கையில் கடலில் கலம் ஓட்டி வாணிபம் செய்ததோடு, கப்பற்படையால் பகைமுடித்து பல்லாயிரம் தீவுகளில்  தனது பண்பாட்டினையும் பரவச்செய்தது தமிழினம். இத்தனைச்சிறப்புக்களும் தமிழினத்திற்கு வாய்க்கப்பெற்றது தமிழுலகில் சிறப்புற்றிருந்த கல்வியால்தான்.  கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இனமாக தமிழினம் இருந்துவந்துள்ளதை தமிழ் இலக்கியங்கள் மற்றும் அரசியல் வரலாற்றின் மூலம் அறியமுடிகிறது.
“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்னும் அவ்வையாரின் கூற்றும்,
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” ( புறம்-183)
என்னும் ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் புறநானூற்றுப் பாடலடிகளும் கல்வி கற்பது கட்டாயக் கடமையாய்த் தமிழ்ச்சமுதாயத்தில் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளதனை மெய்ப்பிக்கின்றன.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட்சிசெலுத்திய ஆட்சியாளர்கள்  தமிழினத்தால் உயரிய இடத்தில் வைத்துப் போற்றப்படுவதையும் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அந்தவகையில் தெருவில் இறங்கி பிச்சைகூட எடுத்து ஏறத்தாழ 30,000 பள்ளிகளை  நிறுவி தமிழகத்தில் பெரும் கல்விப்புரட்சியை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராசரை தற்காலத் தமிழருக்கு கல்விக்கொடையளித்த நல்லாட்சி வள்ளலாகக் கொள்ளலாம்.

“மூவேந்தர் காலத்திலும் நடக்காத கல்விப்புரட்சியை ஏற்படுத்தியவர் காமராசர்” என்றும், “பள்ளிகளில் கடவுள் வாழ்த்துக்குப்பதில் காமராசர் வாழ்த்துப்பாடினால் சரியாக இருக்கும்” என்றும் “இன்னும் பத்தாண்டுகள்  காமராசர் ஆட்சியில் இருந்தால் பேனா பிடிக்கத்தெரியாத கரங்களே தமிழ்நாட்டில் இல்லை என்னும் நிலை வந்துவிடும்” என்றும் பகுத்தறிவுப்பகலவன் பெரியார் அவர்களால் போற்றப்படும் அளவிற்கு கர்மவீரர் காமராசரின் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததைக் காணமுடிகிறது. ஆனால் கல்வி கற்பதை தலையாயக் கடமையாய் வலியுறுத்தும் தமிழ்க்குடியில்  கல்லாதவர்கள் மிகவும் இகழத்தக்கவராகவே இருந்துள்ளனர்.

“கஞ்சி குடிப்பதற்கிலர்- அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே- நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின்றாரே”
என்று நெஞ்சுபொறுக்காமல் பாரதியார் இடித்துரைத்ததும் கல்லாதவரையே.
 
வள்ளுவரும் பெரும் சினத்துடன் கல்லாதவர்களை வசைகின்றார். கல்வியறிவற்றவரை ஆறறிவு மாந்தராக ஏற்கமறுத்து ஐந்தறிவு விலங்குகள் என்றும், உயிரும்-பயனுமற்ற களர்நிலங்கள் என்றும் வெறுப்புடன் சாடுவதைக் கல்லாமை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையனர் கல்லா தவர்    (406)
மற்றும்

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்       (410)
ஆகிய குறட்பாக்களின் வாயிலாக அறியமுடிகிறது.

ஆக வீண்பேச்சு வீணர்கள், நம்பிக்கைத் துரோகிகள், நற்குணம் தொலைத்தோர்கள் மற்றும் கல்வியைப் புறக்கணிப்போர்கள் தாம்  இன்சொல் வள்ளுவர் கடுஞ்சொல் உதிர்க்க காரணம் ஆனவர்கள் எனக்கொள்ளலாம்.
   -----------------------------------------------------------------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 14, 2015 8:17 pm

வள்ளுவரின் வன்சொற்கள் 103459460
-
பட்டுக்கோட்டையார் ஒரு திரைப்பட பாடலில்
சொல்வார்...
-
இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு
கண்ணா யிருக்கணும் அண்ணாச்சி – நாம
ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி.

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Feb 15, 2015 6:09 am

வன்சொற்கள் இருந்தால்தான் மென் சொற்களுக்கு பெறுமை ......வன்மை என ஒன்று இருந்தால் தான் மென்மையை காணமுடியும் ......அன்பரே. பதிவிற்கு நன்றி.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 15, 2015 1:36 pm

செந்தமிழன் அவர்களுக்கு நன்றி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக